Godfather – Powerplays….
தன்னுடைய மகளை மரண காயப்படுத்தியது மட்டுமல்லாது,அவளது முகத்தையும் சிதைத்த இரு இளைஞர்கள் ,அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகள் என்பதற்காகவே சிறிய தண்டனையோடு விடுவிக்கப்பட்டு, தன்னை ஆணவத்தோடு நோக்கி புன்னகைத்துவிட்டுச் செல்லும் போது, ”இங்கே நமக்கு நியாயம் கிடைக்காது.நியாயம் வேண்டுமானால் நாம் டானிடம் தான் செல்ல வேண்டும்.” என்கிறார் அமெரிகோ (Amerigo Bonasera).
பன்னிரண்டு வயதே ஆன விடோவிடம்(Vito), “நீ ஒரு நாட்டையே ஆட்டிப் படைக்கும் சக்தி கொண்ட மனிதனாவாய்.” என்று எவராவது சொல்லி இருந்தால்,கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான்.சிசிலியில்,தனது தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சிறுவனிடம் இத்தகைய பெரிய வார்த்தைகளை சொன்னால் நம்ப மாட்டான் தான்.ஆனால்,வாழ்க்கை விசித்திரமானது அல்லவா?
உள்ளூர் மாபியாவுடனான சண்டையில் தனது தந்தை கொல்லப்பட்டதும்,தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதும் சேர்ந்து அவனை அமெரிக்கா நோக்கித் துரத்துகின்றன.அமெரிக்கா ஒரு எளிய விவசாயியின் மகனை முகம்மலர வரவேற்கவில்லை.மாறாக,அமெரிக்காவில் ஒண்டி இருக்கும் இத்தாலியர்களே அவனுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.சட்டத்திற்கு பணிந்தே நடக்கும் விடோவைப் பார்த்து விதி சிரிக்கிறது.க்ளேமன்ஸா என்னும் உள்ளூர் போக்கிரியின் துணை கொண்டு விடோவை தன் வசம் இழுக்கிறது.வேலையின்மையால் பசியில் வாடும் தன் குடும்பத்தை காக்க சிறு திருட்டுக்களில் இறங்கும் விடோ,பின்னாளில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கிறான்.அடுத்தவரின் சட்டதிட்டங்களை ஏற்று நடக்கும் மந்தைக் கூட்டத்தில் ஒருவனாக தனக்கு விருப்பமில்லை என்று ஒரு நாள் உணரும் விடோ,தனது சொந்த சட்டங்களை உருவாக்குகிறான்.தனது சொந்த உலகத்தையும் உருவாக்குகிறான்.ஆனால்,டானின் உலகம் மாறுபட்டது.வெறிகொண்ட மிருங்கங்களை கொண்ட உலகமல்ல அது!புத்திசாலிகளையும்,திறமைசாலிகளையும் தன்னகத்தே கொண்டு உருவாக்கப்பட்டதொரு கோட்டை அது.அந்த கோட்டை உருவத்தில் சிறிதே எனினும்,வலிமையில் பெரிது.
டான் (Don Corleone) என்றும் Godfather (காட்பாதர்) என்றும் பயத்துடனும், மரியாதையுடனும் அழைக்கப் படுவதற்கு காரணம் இருக்கவே செய்கிறது.Luca Brazi(லூகா) போன்ற கொலை வெறியர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும்,நண்பன் என்று வந்து விட்டால் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து உதவும் மனம் கொண்டவர் தான் டான்.சட்டம் சரியான நியாயம் வழங்காத போது,நியாயத்தை வலிந்து பெற்றுத் தருபவர் அவரே.அதற்க்கு சன்மானமாக அவர் எதிர்ப்பார்ப்பது பணமல்ல.பாதிக்கப்பட்டவரின் நட்பு....
டானுக்கு அவர் தரக் கூடிய மரியாதை...
இதையெல்லாம் விட, எந்த நண்பனும் சக நண்பனிடம் எதிர்பார்க்கும், தக்க சமயத்தில் பதில் உதவி செய்வேன் என்ற வாக்குறுதி.
ஆனால்,ஒரு உண்மையை நாம் மறந்து விடலாகாது.சுற்றியும் பனி விரிந்து கிடக்கும் ஆர்டிக் கண்டத்தில் பயணம் செல்பவன்,அங்கங்கே,தனக்கு வரும் வழியிலோ,பின்னரோ,வழி மாறினாலோ உபயோகப்படட்டும் என்று உணவுப் பொட்டலங்களை தூவி செல்வது போலே தான் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் டானும்.(இது நாவலில் இருந்தே எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது.மரியோவின் எழுத்தாள்மையை சொல்ல இதுவே போதும்).
வாழ்க்கையில் குறைகள் அதிகமில்லாத மனிதானக இருக்கும் விடோ,குழந்தைகள் விசயத்தில் மனக்குறை கொண்டிருக்கிறார்.
முதல் மகனான சன்னி (Sonny),நல்ல இதயத்தைக் கொண்டவனாய் இருந்தாலும், புத்திசாலித்தனதுக்கு பதில் கோபத்தைக் கொண்டவனாய் இருக்கிறான்.எதையும் ஆராய்ந்து முடிவெடுக்காமல் கோப வெறியில் அவசர முடிவெடுக்கும் ஆத்திரக்காரன் இவன்.A man who puts his brawn before his brain.
இரண்டாவது மகனான ப்ரெட்டி (Freddie), தந்தையின் வார்த்தையை வழிபற்றி நடப்பவனாய் இருந்தாலும்,சொந்த எண்ணவோட்டம் இல்லாதவனாக இருக்கிறான்.
மூன்றாவது மகனான மைகேல்(Michael),தந்தைக்கு இணையான மகா கூர்மயுடைய புத்தியைக் கொண்டிருந்தாலும்,தனது வாழ்கையை தானே வகுத்துக்கொள்ள விழைகிறான்.தந்தையின் செயல்களில் ஈடுபட ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் காட்டாத மைக்,தனது வாழ்கை, தன்னைத் தவிர வேறு யாராலும் மாற்றப் படக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறான்,அவனது தந்தையைப் போலவே...
தனக்குப் பின்னான தனது சாம்ராஜ்ஜியத்தை பற்றி கவலை கொள்ளும் டானின் கவலையை அதிகரிக்கவே வருகிறான் Sollozzo(சொலோசோ).போதைப் பொருள் கடத்தலில்,அதிகார பலம் பொருந்திய விடோவின் உதவியை நாடி வரும் அவன்,விடோவின் அரசியல் தொடர்புகளின் மூலம் அமெரிக்காவினுள் வெகு சுலபமாக போதைப் பொருட்களை விற்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான்.ஆனால்,விடோ அவ்வாறு எண்ணவில்லை.போதை மருந்து கடத்தலை வெறுக்கும் அவர் மறுக்கிறார்.இது கிழ சிங்கத்துக்கும்,தந்திரமான ஓநாய்க்கும் இடையே யுத்தத்தை தூண்டி விடுகிறது.
விடோ சுடப்படுகிறார்.சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்கோபக்கார சன்னி பொறுப்பேற்கிறான்.ஆனால்,சொலோசோவின் குறி விடோ மட்டுமல்ல!பின்னால் ஏற்படப் போகும் ரத்தக்களரியை அறியாத அவன்,நியூ யார்க் நகரின் பிற மாபியா குடும்பங்களின் உதவியோடு ரத்தக் கம்பளத்தை விரிக்க,அது ரத்த ஆறாக மாறும் வாய்ப்பை பெறுகிறது.நடந்தது என்ன?விடோ உயிர் பிழைத்தாரா?ப்ரெட்டி, மைக் என்ன ஆனார்கள்? முன்கோபக்கார சன்னியால் விளைந்தது என்ன? என்பதற்கு பர பரப்போடும் எழுத்தாளுமையோடும் விவரிக்கிறது காட்பாதர் புத்தகம்.
ஒரு சுயதொழில் பத்திரிக்கையாளனாக(freelancer) இருந்த காலத்தில் மரியோ ப்யூசோவின் வருத்தம், குறைந்த சம்பளத்தைப் பற்றியோ,சுகத்தைப் பற்றியோ இருக்கவில்லை.தான் எழுதிய இரு நாவல்கள் விமர்சகர்களின் நல்மதிப்பை சம்பாதித்தாலும்,ரசிகர்களையும் பணத்தையும் சம்பாதிக்காதது குறித்ததானது அவர் வருத்தம்.வருத்தம் கோபமாக மாறுகிறது.ஒரு Bestseller நாவல் எழுதுவேன் என்று சூளுரைத்த மரியோ, எழுதியது தான் The Godfather.இன்றளவிலும் மாபியா என்றால் நினைவுக்கு வரும் பெயர்.இதன் மூலக்கதையை சுட்டு படம் எடுத்தவர் அனேகம்.
பரபர எழுத்து இரு வகைப்படும்.டமால்,டுமீல் என்று வெறும் சத்தத்தால் நிரப்புவது முதல் வகை.தன் எழுத்தினால் ரசிகனை கதைக்குள் இழுத்து,சம்பவங்களின் மூலமும்,புத்திசாலித்தனமான கதையின் மூலமும்,அருமையான காதாபாத்திரங்களின் மூலமும் கவர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவது ரெண்டாவது வகை.மரியோ எந்த வகை என்பதை சொல்லத் தேவை இல்லை.தற்சமயத்தில் நான் படித்த ஒரு அற்புதமான எழுத்திற்கு சொந்தக்காரர் மரியோ.தீர்க்கமான,தேவை இல்லாத விவரணைகள் இல்லாத ஒரு எழுத்து இவருடையது.In short,a no nonsense writing.
பல காலமாக(சுமார் மூன்று வருடங்கள்) படிக்க ஆசைப்பட்டு ஒத்திப் போட்டு வந்த புத்தகம் இது.மரியோ பழைய எழுத்தாளர் ஆயிற்றே,அவர் நடை மெதுவாக இருக்குமோ என்ற எண்ணமே காரணம்.ஆனால்,இனி அவர் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.I’ll have to accept that old is indeed gold!
இனி மேல் காட்பாதர் படம் பார்த்தாலும் இந்த புத்தகம் தந்த நெருக்கமும்,under the skin view வும் நிச்சயம் கிடைக்காது.(என்னது,புத்தகம் படித்துவிட்டு பின் தான் படம் பார்பீரா என்பவர் இங்கே புதிது என எளிதாக தெரிந்து கொள்ளலாம் :) ).
Godfather – Mind blowing…(No gangster terms and no pun intended,of course… ;) )
இந்தப் பதிவால் தான் நான் அவனைக் கொன்றேன் - ஜோஸ் கப்போன்
ReplyDeleteமாஃபியா மாமி
இந்தப் பதிவின் தலைப்பு, சுருங்கியதாகவும், விதேசி மொழியிலும் இருக்கிறது - ஜோஸ் கப்போன்
ReplyDeleteமாஃபியா மாமி
// வாழ்க்கை விசித்திரமானது// நிச்சயமாக... இல்லாவிடில் இன்று காலை இப்பதிவில் கண்விழித்திருக்க முடியுமா.
ReplyDeleteபராக்கள்கூட ஒழுங்காக வடிவம் பெற வேண்டும் என எண்ணியிருக்கும் இந்தக் கொலைஞனின் கச்சிதம் எனக்கு பிடித்திருக்கிறது- டான் கருந்தேள்
ReplyDeleteமாஃபியா மாமி
Some Favorite quotes :
ReplyDelete"Every man measures his own greed."
"Every man has his own destiny."
"Time erodes gratitude more quickly than it erodes beauty."
"I'll reason with him", Vito Corleone said.It was to become a famous phrase in the years to come.It was to become the warning rattle before the deadly strike.
" Freddie's face was anxious."Mike,you sure about Moe Greene selling?He never mentioned it me and he loves the business.I really don't think that he'll sell."
Michael said quietly,"I'll make him an offer he can't refuse."
The words were said casually yet the effect was chilling. "
The gunman said, "Fabrizzio,Michael Corleone sends you his regards."
நண்பரே,
ReplyDeleteநல்ல எழுத்து என்பது காலம் சென்றாலும் தன் சுவையை இழப்பதில்லை [ உம்- மாஃபியா மாமி]
நான் இன்னமும் காட் ஃபாதரை படிக்கவில்லை. ஆனால் படிப்பேன். நீங்கள் கூறியிருப்பதுபோல புத்தகங்கள் அளிக்கும் உணர்வே தனிதான். சிறப்பான, மனதை கொள்ளை அடிக்கும் ஆக்கம் நண்பரே- இதில் கிண்டலோ, குண்டர் சொற்பிரயோகமோ கிடையாது.
//இந்தப் பதிவின் தலைப்பு, சுருங்கியதாகவும், விதேசி மொழியிலும் இருக்கிறது //
ReplyDeleteநன்றி ஜோஷ் 'கப்'போன்! ;)
//// வாழ்க்கை விசித்திரமானது// நிச்சயமாக... இல்லாவிடில் இன்று காலை இப்பதிவில் கண்விழித்திருக்க முடியுமா.//
சத்தியமாக!இல்லாவிடில் ஒரு நல்ல புத்தகத்தை பற்றிய பதிவு முதலாவதாக உமது கண்ணில் பட்டுத் தொலயுமா?
//நீங்கள் கூறியிருப்பதுபோல புத்தகங்கள் அளிக்கும் உணர்வே தனிதான்.//
சத்தியமான உண்மை. :)
இதே கதையில் பலநாடுகளில் பல படங்கள் வெளிவந்ததே இந்த நாவலின் மிக பெரிய வெற்றிதான் ... நாவலை நீங்கள் மிக ரசித்து படித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன் .. quotes are super
ReplyDelete//நாவலை நீங்கள் மிக ரசித்து படித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன் .. //
ReplyDeleteஉண்மை தான் நண்பா!இது கண்டிப்பாக ஒரு classic and a trendsetter!பல வகைகளில் காப்பி அடிக்கப்பட்டு விட்டது.ஆனாலும்,இந்த எழுத்தின் வசீகரம் அனைத்தையும் தூக்கி சாப்பிடுகிறது.அந்த quotes எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான்.அப்ப புக் எப்படி இருக்கும் னு யோசிச்சு பாருங்க.முடிஞ்சா படிச்சு பாருங்க. :)
One of your best post :)
ReplyDeleteஎங்கள் ஊரில் இந்த மாதிரியான புத்தகங்கள் தேடினாலும் கிடைக்காது ... ரொம்ப rural areaவில் இருப்பதால் நான் இழக்கும் நல்ல நல்ல விசயங்களில் புத்தகங்களுக்குதான் முதல் இடம் ... நெட்டில் download செய்ய முடிந்தால் செய்து படிக்கிறேன் நண்பா ... இல்லை என்றால் அடுத்த முறை சென்னை வரும்பொழுதுதான் வாங்கி படிக்க முடியும்
ReplyDelete//Never hate your enemies. It affects your judgment//
ReplyDeleteதல..இந்த quote நாவல்லயும் இருக்கா?
இங்லிபீசுனால படிக்க நாளாகும்னு தள்ளி போட்டுக்கிட்டு வந்தேன்....
உங்க சினிமா பற்றி பதிவுகளை விட புத்தகங்கள் பற்றிய பதிவு ரொம்ப....என்ன சொல்ல...ஒரு இதுவாக இருக்க என்ன காரணம்....
ReplyDeleteமற்ற பாகங்களை படிச்சாச்சா?
The Godfather Revenge தான் கடைசியா வந்ததுன்னு நினைக்கிறேன்..சீக்கிரம் அவைகளையும் படிச்சிட்டு ஒரு தொடர்போல எழுத வேண்டும்.
//நெட்டில் download செய்ய முடிந்தால் செய்து படிக்கிறேன் நண்பா ... இல்லை என்றால் அடுத்த முறை சென்னை வரும்பொழுதுதான் வாங்கி படிக்க முடியும்//
ReplyDeleteநெட்டில் எடுப்பது வெட்டி வேலை நண்பா!வேளைக்கு ஆகாது.ஒரு புத்தகம் தரும் அன்னியோன்யம் நிச்சயம் ebook தராது.சென்னை வரும் போது மூர் மார்கெட்டில் வாங்குங்கள்.சல்லிசாக கிடைக்கும். :)
//Never hate your enemies. It affects your judgment//
ReplyDeleteஇது புத்தகத்தில் கிடையாது.படத்தை எழுதியதும் மரியோ தான்.அதனால் அங்கேயும் பல நல்முத்துக்கள் இருக்கவே செய்யும். :)
நாள் ஆனா ஆகட்டும்.ஆனா,நல்ல விஷத்தை மிஸ் செய்யக் கூடாது.
//உங்க சினிமா பற்றி பதிவுகளை விட புத்தகங்கள் பற்றிய பதிவு ரொம்ப....என்ன சொல்ல...ஒரு இதுவாக இருக்க என்ன காரணம்....//
ReplyDeleteயாரங்கே!இந்த பயலை இழுத்துக் கொண்டு போய் என் கொரிய பட பதிவுகளை படிக்க வை! ;)
Jokes apart,உண்மை என்னன்னா,எனக்கு படத்தை விட புத்தகத்தின் மேல் தான் ஆர்வம் அதிகம்.அது தான் ரீசன்.
மற்ற பாகங்கள் படிக்கல.படிக்க ஆசையும் கிடையாது.மரியோவின் எழுத்தை படிச்சிட்டு அதை எல்லாம் படிக்க இஷ்டம் வராதுங்கறது ஒரு காரணம். :)
ஆனா,சில தொடர் புத்தக பதிவுகள் எழுத ஆசை இருக்கு.
Jurassic park,lost world.
Silence of the lambs,Red dragon,hannibal.
Kadalpura,
Yavana rani... :)
சாண்டில்யன் படிச்சது தான்.மிச்சது இனிமே தான்.படிச்சிட்டு எழுதுறேன்.
//One of your best post :)//
ReplyDeleteவந்த உடனே நக்கல ஆரம்பிச்சுடுச்சு பாரு பக்கி! இருலே,ஒரு நாள் உன் ப்ளாக் பக்கம் வந்து புல்டோசர் விட்டு நிரவுறேன். ;)
ஏம்பா.. என் படத்தை விட இந்தக் கதை நல்லா இருக்கா, இப்படிப்போய் புகழ்ந்திருக்கே... ரோபோ சட்டி
ReplyDeleteநொந்திரன்.
Jurassic park,lost world.
ReplyDeleteSilence of the lambs,Red dragon,hannibal.
Kadalpura,
Yavana rani... :)
இதெல்லாம் என் கதைக்கு முன்னாடி... ரிக்ரிக்ரிக் சான்ஸே இல்லை- ரோபோ சட்டி
//ஏம்பா.. என் படத்தை விட இந்தக் கதை நல்லா இருக்கா, இப்படிப்போய் புகழ்ந்திருக்கே... ரோபோ சட்டி
ReplyDeleteநொந்திரன்.//
தாங்கள் படத்தில் காட்டிய சோக்குப் படத்திற்கு இணையாக எதுவும் வராது என்பதை ஒப்புகொள்கிறேன். ;)
அப்படி வாரும் வழிக்கு. மருவாதியா ரோபோ சட்டி என் குட்டி, வெல்லக் கட்டி அப்டின்னு ஒரு போஸ்டு போடும்... தலைப்பை தயவுசெய்து டமில்ல வையும் என்ன நான் சொல்றது..
ReplyDelete//மருவாதியா ரோபோ சட்டி என் குட்டி, வெல்லக் கட்டி அப்டின்னு ஒரு போஸ்டு போடும்... //
ReplyDeleteரோபோ சட்டியும் இரும்பு ஜட்டியும் என்ற தலைப்பு தங்களுக்கு ஏற்றதா என்று அறிய அவா. ;)
//ரோபோ சட்டியும் இரும்பு ஜட்டியும்//
ReplyDeleteசட்டியின் இரும்பு ஜட்டிக்குள் வெல்லக்கட்டி என்று வைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.. ரோபோ சட்டி அல்லது சட்டி த ரோபோ
இந்த புத்தகம் படித்ததில்லை. படமும் பார்த்ததில்லை. ஆனால் பல விமர்சனங்கள், பார்வைகள் படித்து அதன் மீது மிகுந்த மதிப்பு உருவாகி விட்டது, சாதாரண கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அதில் உள்ள சில விசயங்கள் அதன் மீது ஈர்ப்பை ஏற்படுத்து விடுகிறது. உங்களின் புத்தக விமர்சன பதிவுகள் தனி ரகம்தான்! அது நிச்சயம் உணர்வு தாக்கத்தை அளிக்கிறது!
ReplyDelete//உங்களின் புத்தக விமர்சன பதிவுகள் தனி ரகம்தான்! அது நிச்சயம் உணர்வு தாக்கத்தை அளிக்கிறது!//
ReplyDeleteஹிஹி..
புத்தகத்தை படிங்க.மிஸ் செய்யக் கூடாத புத்தகம் இது.
புத்தகம் படிக்கும் அளவுக்கு ஆங்கில வல்லமை கிடையாது.படம் பார்த்திருக்கிறேன்.மூலம் கெடாமல் படமாக்கியிருந்தார் கொப்பல்லா என்று என் நண்பர் சொன்னார்
ReplyDeleteசிட்டி...இரும்பு ஜட்டி...ஐஸ்குட்டி இந்தப்பெயர் வைத்திருந்தால் இன்னும் பாக்ஸாபிஸ் அள்ளியிருக்கும்.
ReplyDelete//புத்தகம் படிக்கும் அளவுக்கு ஆங்கில வல்லமை கிடையாது.//
ReplyDeleteஅட,இதுக்குன்னு என்ன தனி ஆங்கில வல்லமை வேண்டி இருக்கு?சும்மா படிக்க ஆரம்பிங்க தல.நானே படிக்கல? :)
//சிட்டி...இரும்பு ஜட்டி...ஐஸ்குட்டி இந்தப்பெயர் வைத்திருந்தால் இன்னும் பாக்ஸாபிஸ் அள்ளியிருக்கும்.//
அய்!மொத்தக் கதையையுமே டைட்டிலா வைக்க சங்கர் ஒத்துப்பாரா என்ன? ;)
//வந்த உடனே நக்கல ஆரம்பிச்சுடுச்சு பாரு பக்கி! இருலே,ஒரு நாள் உன் ப்ளாக் பக்கம் வந்து புல்டோசர் விட்டு நிரவுறேன்//
ReplyDeleteநம்ப மாட்டீங்களே? நெஜமாத்தான்யா.. உடனே அந்த புக்க படிக்கணும்னு தூண்டற மாதிரிலா இர்க்கு :)
//நம்ப மாட்டீங்களே? நெஜமாத்தான்யா.. உடனே அந்த புக்க படிக்கணும்னு தூண்டற மாதிரிலா இர்க்கு :)//
ReplyDeleteஅக்காங்! அப்படி தான் தூண்டற மாதிரி தெரியும்.அதுக்காக வாங்கிப் படிச்சிடக் கூடாது,ஆமா.தெய்வக் குத்தம் ஆகிடும்யா. :)
Godfather Game விளையாடிருக்கீங்களா? அதில் story, gameplay நல்லாயிருக்கும்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்னி.ஹி..ஹி
ReplyDelete.நன்றி...
( நல்லாத்தான் சொல்றே.. .......உம்....படிக்கனும்..)
உங்க பதிவு புக் படிக்க வைக்கிறாது. நல்ல எழுத்து.
ReplyDelete//Godfather Game விளையாடிருக்கீங்களா? அதில் story, gameplay நல்லாயிருக்கும்!//
ReplyDeleteட்ரை பண்ணிப் பார்த்துடலாம். :)
// ( நல்லாத்தான் சொல்றே.. .......உம்....படிக்கனும்..) //
முதல்ல பழைய புக்க படிச்சு முடிய்யா.ஆனா ஊன்னா போஸ்ட் போட்டு கும்மி அடிச்சிட்டு நேரம் இல்லைன்னு புலம்புறது... :)
//உங்க பதிவு புக் படிக்க வைக்கிறாது. நல்ல எழுத்து.//
தங்கள் கருத்துக்கு நன்றி. ;)
"I’ll Have To Accept That Old Is Indeed Gold!"
ReplyDeleteவயசு ஆக ஆக உங்க எழுத்தும் மெருகு ஏறிக்கிட்டே போகுது இல்லுமி,
அந்த புத்தகம் தமிழ்ல இருக்கும்மா இல்லுமி?
//வயசு ஆக ஆக உங்க எழுத்தும் மெருகு ஏறிக்கிட்டே போகுது இல்லுமி//
ReplyDeleteவிட்டா,இவனுக எனக்கு சீக்கிரம் கருமாதிய பண்ணிடுவாணுக போலயே!நடத்துங்க ராசா,நடத்துங்க! ;)
//அந்த புத்தகம் தமிழ்ல இருக்கும்மா இல்லுமி?//
ReplyDeleteபுக் கிடையாது.ஆனா,படம் உண்டு.. ;)
படமும் தமிழ்லயா பாஸ்?
ReplyDeleteநல்ல பகிர்வு..
ReplyDeleteநன்றி.
சாமக்கோடங்கி.,
நன்றி சாமு..
ReplyDeleteமிக அருமையான பதிவு நண்பா
ReplyDeleteஇதை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது,இதை லொல்லுசபா ரேஞ்சுக்கு காப்பியடித்து நம்மூர் இயக்குனர் எடுத்திருப்பார்.
அதில் இளையராஜா இசை ஒண்ணு தான் உலகத்தரம்
ReplyDeleteஇந்த படத்தின் காட்ஃபாதர் கதாபாத்திரத்தை Munich என்னும் ஸ்பீல்பெர்கின் படத்தில் கூட சுட்டிருப்பார்கள்
ReplyDeleteமரலன் ப்ராண்டோ மகா நடிகர்,அவரின் உடல்மொழியையும் முகபாவனையையும் இந்த அளவுக்கு கொலை செய்யக்கூடாது,அப்படி கொத்தியிருக்கின்றனர்
ReplyDelete//டான் கருந்தேள்//
ReplyDeleteஅடடா... ஆஹா.. அப்புடிப்போடு ! :-)
some favorite quotes:
ReplyDeleteசாபதாஸ் - இந்த ஊர்லயே .. ஏன்.. ஒலகத்துலயே காரு வெச்சிருக்குற கரகாட்டக்குழு நம்ம குழுதேன்..
வம்புமணி சாபதாஸ் - அதுவும் அம்பாசிடர் காரு..
சாபதாஸ் - என்னாது அம்பாசிடர் காரா இவ்வளவு நீளமா இருக்கு?
வ.சா - அப்ப லாரி..
சாபதாஸ் - என்னாது? டாய்.. புடிங்கடா அவனை...
ஆஆஆஆ.... நிறுத்தணும்.. எல்லாத்தையும் நிறுத்தணும்..
ReplyDeleteஉள்ளே பிட்டு.. வெளியே ரிவிட்டு.. விளங்கமுடியா கவிதை நான்
கம்மல் பாசன் - நாங்கள் கஷ்டப்பட்டு மூளையைக் கலக்கி எடுத்த வாயகன் திரைப்படத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு காசு பார்த்த மாரி சூசை என்ற எழுத்தாளரை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
ReplyDeleteகுந்தாணி பூரதி (ரகசியமாக) said.. தலைவா... அது மாரி சூசை இல்ல.. மாரியோ பூசை..
கம்மல் - அவரே தான்.. அவரது வீட்டு வாசலில் எமது காவியமான ஜே பாம் படத்தை திரையிட்டுப் போராடுவோம்..
யோவ்.. என்ன கீழ திருக்குறள் ஓடுது? மக்கா பிச்சிப்புடுவோம்ல :-) ரேப் டிராகன் லின்ன்கு குடுங்க அதுக்குப்பதிலு.. :-) காதலர் இதைத் தட்டிக் கேட்கவும்
ReplyDeleteவள்ளுகை பெருந்தகையின் ஒரே சிஷ்யன் - அல்லது மறு அவதாரம்- இலுமினாட்டி வாழ்க :)
ReplyDeleteதமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்
ReplyDelete