Posts

Showing posts from July, 2010

Killing joke(r).... (18+)

Image
நண்பர்களே!இந்தப் பதிவு,batman trilogy post இல் இரண்டாவது.இதுவும் எனது அடுத்த பதிவும் எனது கனவு பதிவுகள் என்றே சொல்லலாம்.இந்தப் பதிவு பல வகைகளில் முக்கியமானது. முதலாவதாக இது காமிக்ஸ் பற்றியது. இரண்டாவது,இது batman காமிக்ஸ் கதைகளில் சிறந்தது. மூன்றாவதாக,ஜோக்கரின் கேரக்டர் மற்றும் அவனுக்கும் பேட்மேன்க்கும் உள்ள உறவை இதை விட தெளிவாக ஒரு கதை உணர்த்த முடியாது.ஜோக்கர் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக்கதை பற்றி தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். நாலாவது,இதனை எழுதியது ஆலன் மூர். ஐந்தாவது,இது ஒரு மொக்க ரீசன். :) அதை விட்டுதள்ளுங்க. டிஸ்கி: பதிவு மகா பெருசு.அதான் இன்னிக்கு போடுறேன்.லீவு நாளுல உக்காந்து படிச்சுபுட்டு உங்க எண்ணங்களை கண்டிப்பா சொல்லுங்க. அப்புறம் முதல்லேயே சொல்றேன்.இது எழுதப்பட்டதுக்கு நான் எவ்வளவு பொறுப்போ,அவ்வளவு பொறுப்பு கனவுகளின் காதலருக்கும் உண்டு.சோ,கொடுக்குற அடிய அவருக்கும் சேத்தே கொடுங்க… :) பதிவ படிக்கிறதோட நிக்காம புக்கயும் படிங்க.அதுல உள்ளதுல பாதிய கூட நானு சொல்லல. ************************************************************************* Killing joke

Batman Begins – The Revelation…

Image
Friends, this post marks the start of the trilogy post on Batman. The journey begins….   பேட்மேன் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்களே.அட்லீஸ்ட் ஒரு முறையாவது இந்தப் பெயரையாவது நீங்கள் கேட்டு இருக்கக் கூடும்.என்னுடைய Favorite characters இல் பேட்மேன்க்கு மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. 2005 இல் வெளிவந்த Batman Begins, பேட்மேன் உருவான கதையை அலசுகிறது. ஒரு சிறு விபத்தினால் வௌவால்கள் நிறைந்த ஒரு குகைக்குள் விழும் சிறுவன் Bruce  Wayne க்கு, வௌவால்களின் மேல் அன்றில் இருந்தே பயம் உண்டாகிறது.ஒரு நாள்,பெற்றோரோடு நாடகத்திற்கு செல்லும் அவன்,அங்கே வௌவால்களைப் போல வேடமேற்ற சிலரைக் கண்டு பயந்து உடனே வெளியேற வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.இதனை ஏற்று வெளியே வரும் அவனின் பெற்றோர்கள்,வழிப்பறி ஒன்றில் சிக்க நேரிடுகிறது.அந்தத் திருடனின் பயத்திற்கு பலி ஆகிறார்கள் ப்ரூஸ்ஸின் பெற்றோர்கள்.கண் முன்னேயே தன்னுடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டதை காணும் அவன்,தன்னால் தான் அவர்கள் சாக நேரிட்டது என்று எண்ணி வெதும்புகிறான்.அவனுடைய குழந்தைப் பருவமும்,குதூகலமும் அவனுடைய பெற்றோரோடே மடிகின்றது. வருட

Prey – The Hunted and the Hunter….

Image
Michael Crichton. Sci-fi நாவல்கள் படிக்கும் வாசகர்கள் நிச்சயமாக கடந்து செல்லும் ஒரு பெயர்.இவர் பெயர் உலகம் முழுக்க பிரபலம். இவர் யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம்.உங்களில் Spielberg இயக்கிய Jurassic Park பார்க்காதவரோ அல்லது கேள்விப்படாதவரோ இல்லை என்றே கூறலாம்.அந்த படத்தை நாவலாக எழுதியவர் தான் இந்த Crichton. இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்.இவர் எழுதியது ஏறக்குறைய அனைத்துமே technical thrillers.இவரது formula ஒன்றே. “நல்ல முயற்சிக்காக செய்யப்படும் ஒரு ஆராய்ச்சி,எப்படி கெட்டவர்களின் தலையீடால் அல்லது அஜாக்கிரதையால் பேரழிவு ஏற்படுத்துகிறது “ என்பதே அது.Jurassic Park கதை கூட இவ்வகையிலானதே.ஆனால்,அவ்வப்போது வேறு பல அருமையான கதைக்கலன்களையும் உபயோகப்படுத்தி இருக்கார். படிப்பினால் டாக்டர் ஆன இவர்,தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எழுத்தாளர் ஆனார்.Crichton எழுதிய பல புத்தகங்கள் trend setters.பல படங்கள்,டிவி சீரியல்கள் எல்லாம் இவர் எழுத்தில் வெளி வந்து இருக்கிறது. Andromeda Strai