Batman Begins – The Revelation…
Friends, this post marks the start of the trilogy post on Batman. The journey begins….
பேட்மேன் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்களே.அட்லீஸ்ட் ஒரு முறையாவது இந்தப் பெயரையாவது நீங்கள் கேட்டு இருக்கக் கூடும்.என்னுடைய Favorite characters இல் பேட்மேன்க்கு மிக முக்கியமான ஒரு இடம் உண்டு.
2005 இல் வெளிவந்த Batman Begins, பேட்மேன் உருவான கதையை அலசுகிறது.
ஒரு சிறு விபத்தினால் வௌவால்கள் நிறைந்த ஒரு குகைக்குள் விழும் சிறுவன் Bruce Wayne க்கு, வௌவால்களின் மேல் அன்றில் இருந்தே பயம் உண்டாகிறது.ஒரு நாள்,பெற்றோரோடு நாடகத்திற்கு செல்லும் அவன்,அங்கே வௌவால்களைப் போல வேடமேற்ற சிலரைக் கண்டு பயந்து உடனே வெளியேற வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.இதனை ஏற்று வெளியே வரும் அவனின் பெற்றோர்கள்,வழிப்பறி ஒன்றில் சிக்க நேரிடுகிறது.அந்தத் திருடனின் பயத்திற்கு பலி ஆகிறார்கள் ப்ரூஸ்ஸின் பெற்றோர்கள்.கண் முன்னேயே தன்னுடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டதை காணும் அவன்,தன்னால் தான் அவர்கள் சாக நேரிட்டது என்று எண்ணி வெதும்புகிறான்.அவனுடைய குழந்தைப் பருவமும்,குதூகலமும் அவனுடைய பெற்றோரோடே மடிகின்றது.
வருடங்கள் செல்கின்றன.படித்துக் கொண்டு இருக்கும்,இளம் வயதினனான ப்ரூஸ், பல வருடங்களுக்குப் பின்னர் தன்னுடைய சொந்த நகரத்திற்கு வருகிறான்.அவனை பாசத்தோடு வரவேற்கிறான் அவர்களுடைய வீட்டு பட்லர் Alfred Pennyworth.அவனது வருகைக்கு காரணம்,ஒரு வழக்கு.தன்னுடைய பெற்றோர்களைக் கொன்ற Chill என்றவன்,Carmine Falcone என்ற குற்றச் சக்ரவர்த்தியைப் பற்றி போலீசாருக்கு அவன் கொடுத்த தகவல்களின் காரணமாக, வெளியேற்றப்படலாமா என்று விவாதிக்கும் ஒரு வழக்கைக் காண வருகிறான் ப்ரூஸ்.வழக்கை காண வர வேண்டாம் என அவனைத் தடுக்கிறாள் அவனது சிறு வயதுத் தோழியும்,Assistant District Attorney உம் ஆன Rachael Dawes.ஆனால் ப்ரூஸ் கேட்பதாயில்லை.
வழக்கின் பாதியிலேயே வெளியே வரும் ப்ரூஸ், சில் லின் வருகைக்காக வெளியில் காத்து இருக்கிறான்.வழக்கை காண வந்ததாக சொன்னாலும்,ப்ரூஸ்ஸின் உண்மையான குறிக்கோள் சில் லைக் கொல்வதே.ஆனால்,அவனுக்கு முன்னரே சில், ஃபல்கோனி யின் ஆட்களால் கொல்லப்படுகிறான்.உண்மையை அறியாத ரேச்சல் அவனை அங்கிருந்து கிளப்பிச் சென்று கோதம் நகரத்தின் கோரப் பக்கத்தை காண்பிக்கிறாள்.இவற்றிற்கு காரணம் ஃபல்கோனி தான் எனவும்,லஞ்சம் மற்றும் பயத்தின் மூலம் நகரத்தை அவன் குட்டிச்சுவராக்கி,அதனை மறைமுகமாக ஆள்வதையும் சுட்டிக் காட்டுகிறாள்.
இதைப் போன்ற தீயவர்கள் இருக்கும் இடத்தில் சில நல்லவர்கள் இருந்தாலும்,அவர்கள் எதுவும் செய்வதில்லை என் வேதனைப்படுகிறாள்.கோதம் நகரைக் காக்க ப்ரூஸ்ஸின் பெற்றோர்கள் எடுத்த முயற்சியை நினைவுகோரும் அவள்,அம்மாதிரி நல்லவர்கள் இப்போது ஏதும் செய்யாமல் பயந்து ஒதுங்கி இருப்பதை சுட்டிக்காட்டுகிறாள்.அப்போது ப்ரூஸ் தான் நல்லவன் இல்லை எனக் கூறி,தான் கோதம் வந்ததற்கான உண்மைக காரணத்தை சொல்கிறான்.மனம் உடைந்து போகும் ரேச்சல் அவனை அறைகிறாள்.
நியாயத்தின் வழியில் செல்லாமல்,பழிவாங்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை எண்ணி வருந்தும் ப்ரூஸ்,ஃபல்கோனியை சென்று பார்க்கிறான்.அவனுடைய ஆள் பலத்திற்கும்,அதிகார பலத்திற்கும் தான் பயப்படப் போவது இல்லை எனக் கூறும் அவன்,ஃபல்கோனியை எதிர்த்து நிற்கப் போவதாகக் கூறுகிறான்.அவனைக் கண்டு சிரிக்கும் ஃபல்கோனி, ‘வறுமையைப் பற்றியும்,குற்றவாளிகளைப் பற்றியும் தெரியாமல் வளர்ந்த ஆடம்பரச் சிறுவனான உன்னால்,குற்ற உலகைப் புரிந்து கொள்ள முடியாது’ எனச் சொல்லி அடித்துத் துரத்துகிறான்.
குற்றவாளிகளைப் பற்றியும் குற்றத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளவும்,தன்னுடைய போராட்டத்திற்கான தகுதிகளைப் பெறவும் தலைமறைவாகிறான் ப்ரூஸ்.
கரையும் வருடங்களில் ப்ரூஸ் தற்காப்புக் கலையில் சிறந்தவனாகிறான்.அவனை சந்திக்கும் Henri Ducard என்பவன்,நியாயத்தை நிலை நிறுத்தப் போராடும் குழுவான League of Shadows இன் தலைவன் Ra’s Al Ghul இன் சார்பாக அவனை வரவேற்க வந்து இருப்பதாகக் கூறி,அவனை தங்கள் இருப்பிடத்திற்கு வரச் சொல்கிறான்.
அங்கே,ப்ரூஸ்ஸிற்கு பல பயிற்சிகள் தரப்படுகிறது.அனைத்திலும் வல்லவனாகிறான் ப்ரூஸ்.நாட்கள் செல்லச் செல்ல,அந்தக் குழுவின் நோக்கம் அநீதியை எதிர்த்து நியாயத்தை நிலை நிறுத்துவது அல்ல என்றும்,அநீதி அதிகமாகும் காலங்களில்,அநீதி அதிகரிக்கும் இடங்களை அழிப்பதே என்றும் உணர்கிறான்.அவர்களின் அடுத்த குறி,கோதம்.தான் தேர்ந்து எடுக்கப்பட்டது எதற்கு என்று புரிந்து கொள்கிறான் ப்ரூஸ்.
ஆனால்,கோதம் நகரை அழிப்பது அல்ல அவன் நோக்கம்.அந்நகரத்தில் புரையோடிப் போய் இருக்கும் தீமையையே அவன் அழிக்க விரும்புகிறான்.அவர்களை முறியடித்து கோதம் வரும் ப்ரூஸ்,தான் சிறு வயதில் கண்டு பயந்த Bat ஐ கொண்டே கிரிமினல்களை பயப்பட வைக்க எண்ணி,Batman அவதாரம் எடுக்கிறான்.ப்ரூஸ்ஸின் பிரச்சனைகள் இத்தோடு முடியவில்லை.அவனுடைய கம்பெனியை அவனிடம் இருந்து பறிக்க நினைக்கிறான் ஒருவன்.
அவனால் ஃபல்கோணியை முறியடிக்க முடிந்ததா?தன் கம்பெனியை காப்பற்றிக்கொள்ள முடிந்ததா?முறியடிக்கப்பட்ட ரா’ஸ் ஸின் முறியடிக்கபடாத திட்டம் என்ன?கோதம் அழிவில் இருந்து காப்பாற்றப் பட்டதா? அறிந்து கொள்ள படத்தைப் பாருங்கள்.
Batman உருவான விதத்தை அருமையாகச் சொல்லுகிறது இந்தப் படம்,அருமையான கதை,இசை,நடிகர்கள் ஆகியவற்றின் துணையோடு.இதுல முக்கியமா குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்,வசனம்.பல அருமையான வசனங்கள் கொண்ட படம் இது.
பேட்மேன் ஆக Christian Bale.அருமையான நடிப்பு.பேட்மேன் கதாப்பாத்திரத்திற்கு ஒரு குரலும்,ப்ரூஸ்ஸின் கதாப்பாத்திரத்திற்கு ஒரு குரலும் கொடுத்து அசத்துவதொடு நில்லாமல், இரு கதாப்பாத்திரத்தையும் நன்றாக தன் நடிப்பின் மூலம் வித்தியாசப்படுத்துகிறார்.பழிவாங்கும் வெறியில் சுத்துவதும்,பின் கிரிமினல்களைப் பற்றி அறிய அலைவதும்,பேட்மேன் ஆகவும் ஒவ்வொரு கட்டத்திலும் உணர்ந்து நடித்து உள்ளார்.இதுவரை பேட்மேன் ஆக நடித்தவர்களில் எனக்குப் பிடித்தவர் இவர் தான்.ஜாடிகேற்ற மூடி (Like Hugh Jackman for Wolverine) .
ரேச்சல் ஆக,Katie Holmes.குழந்தைச் சிரிப்பு கொண்ட அழகி.குறைந்த நேரம் வந்தாலும் நன்றாக நடிக்கிறார்.முக்கியமாக ப்ரூஸ்ஸிடம் கோதம் பற்றி விளக்கும் காட்சி.
Alfred ஆக Michael Caine.The best Alfred ever.இவருடைய பிரிட்டிஷ் அக்சென்ட்டில் அவர் பேசுவதே தனி அழகு.
Lucius Fox ஆக Morgan Freeman.அறிமுகமே தேவை இல்லாத அற்புதமான நடிகன்.வழக்கம் போலவே பின்னுகிறார்.
முக்கியமாக Henri Ducard ஆக Liam Neeson.மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர்.திரையில் இவர் வருவது ரெண்டு மணி நேரமானாலும் சரி,ரெண்டு நிமிசமானாலும் சரி,he steals the show…ப்ரூஸ்ஸிற்கு தற்காப்புக் கலை சொல்லித்தரும் போது அவர் நடிப்பு,அபாரம்.
Christopher Nolan-இயக்குனர்.இவரின் மிகப் பெரிய பலமே இவருடைய திரைக்கதை தான்.திரைகதை மன்னன்.என்னுடைய favorite இயக்குனர்களில் ஒருவர்.
படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள்:
ப்ரூஸ்ஸின் ட்ரைனிங் காட்சிகள்,அதில் வரும் வசனம்,லியம் நீசன் நடிப்பு…
அந்த கார் சேசிங்..அதில் வரும் வசனங்கள்.முக்கியமாக ஒரு போலீஸ் பேட்மேனின் காரை பற்றி சொல்லும் அந்த வார்த்தை…
Officer 1: He’s in a vehicle.
On Radio: Make and colour?
Officer 1: It’s a black……
…tank.
ப்ரூஸ் தன் கம்பனியை காப்பாற்றும் விதம்…
Batman Begins – Would have been the best batman film ever if not for it’s successor....
======================================================================
படத்த பத்தி இப்ப சில விஷயங்கள் பார்ப்போம்.இந்தப் படம் எடுக்கப்பட்டது Batman & Robin படத்துக்கு பின்ன.B & R படம் செம பிளாப்.பெரிய பட்ஜெட்,star cast எல்லாம் இருந்தும் இப்படி மொக்கையா போச்சே னு யோசிச்சு,இனிமே பேட்மேன் படங்கள காமிக்ஸ மட்டும் ஒட்டி எடுக்காம கொஞ்சம் நாமளே அடிச்சு விட்டு தான் எடுக்கணும் னு முடிவு பண்ணி எடுத்தது தான் இந்தப் படம்.Batman காமிக்ஸ்க்கும் இதுக்கும் பல வித்தியாசங்கள்.அதுக்குப் பல காரணங்கள்.கொஞ்சம் பார்ப்போம்.
காமிக்ஸ பொறுத்த வரை,ப்ரூஸ் தன்னோட பெற்றோர்களோட Mask of Zorro படத்துக்கு போயிட்டு,படம் முடிஞ்சு திரும்ப வர்றப்ப,வழிப்பறித் திருடன் ஒருத்தன், அவன் கண் முன்னாடி அவங்களை கொல்றான்.இதனால மனசு உடைஞ்சு போகும் ப்ரூஸ்,இனிமே தனக்கு வந்த நிலைமை கோதம் ல யாருக்கும் வரக்கூடாதுனும்,அப்படி நடக்க விடாம தடுக்கணும்னு முடிவு பண்றான்.
ப்ரூஸ்ஸோட தேடல் சின்ன வயசுலயே தொடங்குது.படத்துல வர்ற மாதிரி இல்ல.பல விசயங்களை தெரிஞ்சுக்குறான்.பல சண்டைக் கலைகளை கற்கிறான்.உலகமெங்கும் போய் குற்றவாளிகளைப் பற்றி ஆராயுறான்.காமிக்ஸ்படி,ப்ரூஸ் பெரிய genius.ஒரு விஞ்ஞானி.சண்டைக் கலைகளில் வல்லவன்.
குற்றவாளிகளைப் பற்றி அவன் தெரிஞ்சுகிட்டத வச்சு அவன் ஒரு முடிவுக்கு வர்றான்.கிரிமினல்கள் என்னதான் கொடூரமா தெரிஞ்சாலும்,உள்ளுக்குள்ள ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க.அதிலயும் அவங்களுக்கு மூட நம்பிக்கை அதிகம்.அதனால அவங்கள psychological ஆகவும் பயமுறுத்தணும்.அதை எப்படி செய்யலாம் னு யோசிச்சுகிட்டு இருக்குறப்ப,ஒரு நாள் இரவு,அவன் கண்ணுல ஒரு வௌவால் படும்.அதையே ஒரு inspiration ஆ வச்சு,Batman ஆவான்.கோதம் ல குற்றங்களை ஒழிக்கப் போராடுவான்.அதே நேரம்,தான் தான் Batman அப்டிங்கறது தெரியக் கூடாதுங்றதுக்காக முட்டாள் வேஷம் போட்டு,தான் ஒரு விளையாட்டுப் பிள்ளை,முட்டாள்,பெண்கள் பின்னாடி அலையுரவன்னு நம்ப வைப்பான்.
ஆனா,இதை அப்புடியே கொடுக்க இஷ்டம் இல்லாம,சின்ன வயசு பயம்னு கொடுத்தாங்க.அதுவும் போக,ரேச்சல் கதாப்பாத்திரம் காமிக்ஸ் ல கிடையாது.பேட்மேன் எப்பயுமே ஒரு loner.பெண்களை எப்பயுமே ஒதுக்கியே தான் வைப்பான்.ஆனா அப்புடி வச்சா பின்ன ஹீரோயினுக்கு என்ன வேலை?
அப்புறம்,முன்னயே சொன்ன மாதிரி,ப்ரூஸ் பல இடங்களுக்கு போய்,பலரிடம் இருந்து பல சண்டைக்கலைகளை கத்துப்பான்.ரா'ஸ் அல் குல் கத்துகொடுத்து இல்ல.
அப்புறம்,இவங்க underplay பண்ணின இன்னொரு விஷயம்,பேட்மேனோட genius..காமிக்ஸ்படி,பேட்மேன் ஒரு விஞ்ஞானி.வித விதமான கருவிகளை கண்டுபிடிச்சு அதை வச்சு சண்டை போடுவான்.ஆனால்,இங்க அதை மாத்தி,Lucius Fox எல்லாத்தையும் செய்து கொடுக்குறதா வச்சு இருக்காங்க.காமிக்ஸ்ல பாக்ஸ்க்கு வேலை ஒண்ணு தான்.நல்ல,நம்பகமான நண்பனான பாக்ஸ்,கம்பெனி நிர்வாகத்தை சரியா பார்த்துப்பார்.
இங்கயும் அதே தான்.ஆனா அந்த விஞ்ஞானி விசயத்த பாக்ஸ் பக்கம் தள்ளிட்டானுங்க.இதுவும்,பேட்மேன் ஒரு சாதாரண ஆள் னு காட்ட செய்யப்பட்ட ஒரு விஷயம்.
ஆனா,இவ்வளவையும் தாண்டி,ஒரு காமிக்ஸ் ரசிகனான எனக்கு இந்தப் படம் பிடிச்சதுன்னா அது தான் இந்தப் படத்தோட வெற்றி.
Next….
2
ReplyDelete3
ReplyDeletecomment testing...
ReplyDeleteஉன்னோட கமெண்ட் டெஸ்டிங்க் கணக்குல வ்ராது, அதனா மீ த ஃபர்ஸ்ட்டு.
ReplyDelete5
ReplyDelete6
ReplyDelete7
ReplyDeleteஇரு படிச்சி முடிக்க 4 மனி நேரம் ஆகும்னு நெனக்கிறேன், வந்து கமெண்ட் போடுறேன்:)
ReplyDeleteஅடுத்தது யாராவது கண்டினியூ பண்ணுங்கப்பு ;-)
ReplyDeleteயோவ் படிச்சிட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்கய்யா.அத்த விட்டுட்டு சின்னப் பசங்க மாதிரி என் கூட சேர்ந்து விளையாண்டுகிட்டு..
ReplyDeleteவந்துட்டோம்ல :)
ReplyDelete14
ReplyDeleteஇந்தப் படம், அப்புறம் Batman - the gotham knight, அப்புறம் டார்க் நைட் ஆகிய மூன்று படங்களையும் போன மாசம் ஒரே நாள்ல (மறுபடி) கண்டின்யூவா பார்த்தோம் . . அது ஒரு பிரம்மாண்ட எக்ஸ்பீரியன்ஸ் ;-)
ReplyDeleteபழைய காலத்துல வந்த பேட்மேன் படங்களில், முதல் படம் - பேட்மேன் (1989) கொஞ்சம் பரவாயில்லை ரகம்.. ஜாக் நிகல்ஸன் ஒரு காரணம்.. ஆனா அது இப்ப பார்த்தா காமெடியா இருக்கும்.. ;-)
அதுக்கப்புறம் வந்த மத்த படங்களான பேட்மேன் ரிடர்ன்ஸ், பேட்மேன் ஃபாரெவர், பேட்மேன் அண்ட் ராபின் ஆகிய படங்களையும் அந்தக் காலகட்டத்தில் வெறித்தனமா பார்த்திருக்கேன்.. பட் நம்ம நோலன் ஸ்டெப் இன் பண்ணினப்புறம், பேட்மேன் கேரக்டரைத் தூக்கி ஒசரத்துல உக்கார வெச்சிட்டாரு ;-)
பேட்மேன் - My Most favorite Hero ! (எனக்கு சுத்தமா புடிக்காத ஹீரோ ஒண்ணு உண்டு - அதான் சூப்பர்மேன்...காமெடி பீசு)..
15
ReplyDeleteஇப்பால போயிட்டு அப்பால வரோம்
ReplyDelete16
ReplyDelete17
ReplyDelete18
ReplyDeleteஅதே மாதிரி, இன்னொரு விஷயம்.. பேட்மேன் மிகின்ஸ், பேட்மேன் - கோதம் நைட், த டார்க் நைட் படங்களை இன்னமும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், The Long Halloween மற்றும் The Killing Joke ஆகிய க்ராஃபிக் நாவல்களைப் படிப்பது நன்மை பயக்கும் ;-)
ReplyDeleteகருந்தேள்,
ReplyDelete1989 ல வந்த பேட்மேன் பரவாயில்லாம இருக்கும்.ஆனா இப்ப பார்த்தா கொஞ்சம் மொக்க தான்.அதுக்கு அப்புறம் வந்த எதுவுமே தேருற கேஸ் இல்ல.இந்தப் படம் கூட spiderman படத்தோட formula தான்.செக் பண்ணிப் பாருங்க.சரியா இருக்கும்.
அப்புறம்,எனக்கு பேட்மேன் ரொம்பப் பிடிக்கும்.அடுத்ததா wolverine.
சூப்பர்மேன் அட்டு காமெடி பீசு பாஸு.அத்த அமெரிக்காகாரனை தவிர எவனும் சீந்த மாட்டான்..
வைட் பண்ணும் ஓய்.அடுத்த போஸ்ட்ல இருக்கு பட்டாசு.. :)
Joker பத்தி புரிஞ்சிக்கணும்னா கண்டிப்பா கில்லிங் ஜோக் படிக்கணும்.அதான் ஓய் அடுத்த போஸ்ட்.அப்புறம்,dark knight...
ReplyDeleteஇலுமி, நான் இந்த படம் பாத்துட்டென், பாகுரப்ப இருந்தத விட, நீ எழுதியிருக்கிரது சுவாரஸ்யமா இருக்கு. ஏதாவது ஸ்கிர்ப்ட் ரெடி பண்ணி , ஒரு படம் டைரெக்ட் பன்ணு ஓய்.:)
ReplyDeleteயோவ்,ஏதாவது கடுப்புன்னா நேரா சொல்லு.அத்த விட்டுட்டு இப்படி ஏத்தி விட்டு நாஸ்தி பண்ணப் பார்க்காத. :)
ReplyDelete// ILLUMINATI said...
ReplyDeleteயோவ்,ஏதாவது கடுப்புன்னா நேரா சொல்லு.அத்த விட்டுட்டு இப்படி ஏத்தி விட்டு நாஸ்தி பண்ணப் பார்க்காத. :)//
இந்த தன்னடக்கம் தான் ஒய் , உங்கிட்ட எனக்கு நொம்ப பிடிச்சது. அறிவுக்காரன் அறிவுரைய ஏத்துக்க மாட்டான்றது சரியாத்தான் இருக்கு ஒய்.
( தக்காளி எப்படியாவது ஏத்தி விடலாம்னா, அலர்ட்டா இருக்கானுகளே!!!)
இந்த விளையாட்டு நல்லா இருக்கே , ஏய் ஏய் என்னையும் ஆட்டத்துல சேதுகங்க
ReplyDeleteமங்குனி அமைசர் said...
ReplyDeleteஇந்த விளையாட்டு நல்லா இருக்கே , ஏய் ஏய் என்னையும் ஆட்டத்துல சேதுகங்க////////////
சின்ன பசங்களுக்கு இடம் இல்லை போயி குச்சி மிட்டாய் சப்பிடு போ
இருபத்தியொன்பதாவது கருத்துரை சேர்ப்பு பரிசோதனை ஒன்று..
ReplyDeleteஇருபத்திரெண்டாவது கருத்தடை சேர்ப்பு பரிசோதனை ரெண்டு...
ReplyDeleteஇருபத்தி மூன்றாவது கருக்கலைப்பு பரிசோதனை மூன்று...
ReplyDeleteநண்பரே, மிகவும் அழகாக கதையைக் கூறி, பின் காமிக்ஸிற்கும் திரைப்படத்திற்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்களை சுட்டிக்காட்டி, அழகான வடிவில் நீங்கள் வழங்கியிருக்கும் பதிவு அருமை.
ReplyDeleteபேட்மேன் எனக்கு மிகவும் நெருங்கிய ஹீரோ, நேற்றுக்கூட அவர் டீக்கடையில் அவர் போட்டுத்தந்த மசால் டீயை கடலை வடையுடன் சுவைத்து மகிழ்ந்தேன் :)) என்ன தலைகீழாக நின்று கொண்டுதான் "எல்லா" வேலைகளையும் கவனிக்கிறார்.
நோலன், பேட்மேனை உச்சத்திற்கு கொண்டு சென்றார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அடுத்த வருடம், அடுத்த பதிவில் சந்திக்கும் வரை வணக்கம் நண்பரே :)[கில்லிங் ஜோக் நல்ல கதை, உம் கையில் என்னவாகப் போகிறதோ என்பதே கிலியாக இருக்கிறது :)]
காதலரே! கவுன்ட் 23 வரை போயிடுச்சா?அதுக்கு தான் டேனி கூட பழக வேணாம் னு சொன்னது. :)
ReplyDelete//அடுத்த வருடம், அடுத்த பதிவில் சந்திக்கும் வரை வணக்கம் நண்பரே :)//
அவ்ளோ சீக்கிரமாவா ?கொஞ்சம் பொறுமையா போஸ்ட் போடுறேன் ஓய். :)
//கில்லிங் ஜோக் நல்ல கதை, உம் கையில் என்னவாகப் போகிறதோ என்பதே கிலியாக இருக்கிறது :)//
ஹீ ஹீ...
சிறப்பா எழுதி இருக்கீங்க.. இந்நேரம் நீங்க பாட்டுக்கு இங்க்ளிபீசுல எழுதி இருந்தா, இவ்வளவு அருமையான கட்டுரைய மிஸ் பண்ணி இருப்போம்ல?
ReplyDeleteநான் இன்னும் படத்த பாக்கல (வெட்கம்).. அதுனால முதல் வேலையா அடுத்த போஸ்டுகுள்ள Dark Knight பாத்துட்டு எழுதறேன்.. அப்புறம் இன்னிக்கி Inception ரிலீஸ் பாத்தீங்களா..
ReplyDeleteபிரசன்னா, ஏன்யா வயித்தெரிச்சல கிளப்புறீர்?உண்மைய சொல்லணும்னா,இங்கிலீஷ் ல அப்பப்பயாவது எழுதணும் னு ஒரு ஆசை இப்ப கூட இருக்கு.பார்க்கலாம். :)
ReplyDeleteஅப்புறம்,நீரு படத்த பொறுமையாவே பார்க்கலாம்.நானு அடுத்த போஸ்ட் போட ஒரு வாரம் ஆவும்.அதுக்கு அடுத்து தான் dark knight.
//இவ்வளவு அருமையான கட்டுரைய மிஸ் பண்ணி இருப்போம்ல?//
ReplyDeleteஹீ ஹீ,ஏன்யா பொதுவுல வந்து கிண்டல் பண்ற?
அப்புறம்,inception தான?போகணும்.
ஆனா எனக்கு ஒரு கெட்ட பழக்கம்.எப்பயுமே பொறுமையா,கூட்டம் குறைந்த பின்ன தான் எந்த ஒரு படத்துக்கும் போவேன்.இதுக்கும் அப்படிதான்.எப்புடியும் நம்ம ஆளுங்க review போடுவாங்க.
ஆனா,imdb ல rating 9.6..
இது ஆரம்ப rating தான்.கொஞ்ச நாள்ல குறைஞ்சுடும்.ஆனாலும்,ஒரு எதிர்பார்ப்ப உண்டாக்கி இருக்கு.
38
ReplyDelete39
ReplyDelete40
ReplyDeleteபடம் ஜூப்பரு..
ReplyDeleteபதிவு ஜூப்பரு...
கமெண்ட்ஸ் ஜூப்பரு....
வேற என்னத்தை சொல்ல?! அதான் எல்லாரும் கும்மி அடிச்சிட்டு போய்ட்டாங்களே.
======
நமக்கு பதிவுக்கு சம்பந்தமில்லாத கமெண்ட்ஸ் போட்டுத்தானே பழக்கம். இதோ.......
Prey புக் படிச்சிகிட்டு இருக்கேன். 33 பக்கம் வர்றதுக்குள்ள நுரை தள்ளுது. கதை இனிமேலாவது ஸ்டார்ட் ஆகும்னு நினைக்கிறேன்.
அடுத்து லாஸ்ட் வேர்ல்ட், இல்லீன்னா ஜுராஸிக் பார்க்.
அண்ணன் நல்லாதான் எழுதியிருக்காரு. நான் படிக்க ஆரம்பிச்ச நேரம் சரியில்லை.
பாலா அண்ணே!
ReplyDeleteஆரம்பத்துல அவரு அப்படித்தான் plot development செய்வாரு.ஹீரோ அந்த நெவேடா desert போன பின்ன தான் கதை சூடு பிடிக்கும்.அதுக்கு பின்ன சூடு குறையவே குறையாது.
அப்புறம்,வெறும் 33 பக்கம் படிச்சுபுட்டு இந்த அலும்பு பண்றீரே ஓய்? கதை 300 பக்கத்துக்கு மேல ஆச்சே. :)
சீக்கிரம் inception பத்தி எழுதுங்க.
ReplyDeleteஅப்புறம் jurassic park முதல்ல படிங்க.லாஸ்ட் வோர்ல்ட் அடுத்து படிசுக்கலாம்.இல்லன்னா continuity போய்டும்.
ReplyDeleteசூப்பரா எழுதி இருக்கீங்க..
ReplyDeleteபாட்மேன் படங்களில் நான் சின்ன வயதில் பார்த்தது கொஞ்சம்.. அப்புறம் மிகப் பெரிய இடைவெளி.. அப்புறம் பார்த்தது தி டார்க் நைட் தான்.. பேட்மேன் பெகின்ஸ் கண்டிப்பாக பார்க்கிறேன்... அப்புறம் அந்த ஒப்பீடு சூப்பர்.. நான் இன்னும் சிறிய உலகத்தில் தான் இருக்கேன்..
இன்னமும் பேட் மென் காமிக்ஸ் ( திகில் மற்றும் லயனில் வந்தவை ) என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்
ReplyDelete.
47........
ReplyDeleteதல மன்னிச்சுடுங்க
ReplyDelete.
இது 49 ;-)
ReplyDelete.
அப்பாடி கடைசியா Me the 50th
ReplyDeleteThanks
thala :)
.
இலுமி, வழக்கம் போல நான் தான் கடைசின்னு நினைக்கிறேன். இந்த இடம் எனக்கு மட்டும் தான் சொந்தம் :) கும்மிக்கும் நமக்கும் ரொம்ப தூரம்பா....
ReplyDeleteபேட்மன் படங்கள் சைஸ்வாரியாக வந்து திரைகளில் மிண்ணி கொண்டிருந்த நேரம் தான் நான் பள்ளிபருவத்தில் இருந்தேன். தியேட்டரில் படங்கள் பார்ப்பது அப்போது பெரிய விஷயம், அதனால் என்னுடைய பேட்மேன் அறிமுகம் மற்றும் பிரமிப்பு தொடங்கியது திகில் காமிக்ஸில் அவர் தோன்ற ஆரம்பித்த பின்பு தான். அதற்கு பிறகு, தொலைகாட்சியில் பேட்மேன் தொடரை போடும் போதெல்லாம் ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தேன். அந்த டிவி சீரிஸ் அபத்தமான அமைப்பு என்றாலும், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் விந்தை உபகரணங்கள் என்று அசத்தியிருப்பர்.
பின்பு கேபிள் மூலம் ஸ்டார் மூவிஸ் அறிமுகம் தான் பேட்மேனின் படங்களை அட்டகாசமாக ரசிக்க முடிந்தது. பேட்மேன் ராபின் என்ற மொக்கை படங்களில் பேட்மேனின் மூலகருத்தை இப்படி கொலை செய்கிறார்களே என்ற ஏக்கம் அதிகமாயிற்று. பிறகு ஒரிஜினல் பேட்மேன் கதைகளை படித்து அதில் லயிக்க தொடங்கி விட்டேன்.
பேட்மேன் பிகைன்ஸ் படம் வெளிவந்த பின், பேட்மேன் கதைக்கான அந்த டார்க் பீலை இவர்கள் திரும்ப ஆரம்பித்து வைத்தது எனக்கு மிகவும் பிடித்து போனது. படத்திற்காக கதையின் நீளத்தை சற்றே சுருக்கி, அதை வழங்கி இருந்தாலும், அந்த கதை சொல்லலும் பிடித்திருந்தது தான். ஆனால், இந்த படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட முறையில் அடுத்த பாகம் வர போகிறது, அதற்கு இது தான் அடித்தளம், என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.
இப்போது இரு படங்களையும் சேர்த்து பார்க்கும் போது பல அர்த்தங்கள் சொல்வது... நோலனின் திறமைக்கு சான்று. நினைவுகளை திரும்பவும் அசை போட உதவிய உங்கள் பதிவிற்கு நன்றி.
இப்பதான் பாத்து முடிச்சேன்...
ReplyDeleteஎன்னுடைய பேவரெட் ஹீரோ.. இந்தப் படத்துல பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.. பேட்மேன் உருவாகும் வித்ம் சூப்பர்..
எனக்கு பிடிச்ச ஒரு சீன்...
Villan :"I swear to God"
Batman :"Swear to me"
அப்பா நான் பயந்தே விட்டேன். என்ன ஒரு ஆக்ரோஷம்... நல்ல படத்தைத் தந்தமைக்கு ஒரு சிறப்பு நன்றி..
இந்த படத்த பாத்ததுக்கு அப்புறம் தி டார்க் நைட் பாக்கனும்னு தோணுது. ஆனா டெலிட் பண்ணீட்டேன்.. திரும்ப டவுன்லோடு பண்ணனும்..
ReplyDeleteஅப்புறம் ரபீக் சொன்ன மாதிரி அந்த இருட்டு தான் பேட்மேனின் தனித்துவம்.. அப்புறமா அவர் வீசும் அந்த வௌவால் தகடு... அப்புறம் சட்டுன்னு மறையுறது..
மூன்றாம் பாகம் வெளிவருமா..?
ஆரம்பத்திலிருந்தே பேட்மேன் சண்டை போடா ஆரம்பித்திருந்தால் படத்தின் முடிவு அலுத்துப் போயிருக்கும்.. அதனால் முதல் பாதி வரைக்கும் பேட்மேன் இதோ வந்து விடுவார் வந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டு பொய், அவரின் அறிமுகத்தைப் படு கலக்கலாய் கொடுத்து கிளப்பி விட்டார் நோலன்.. நல்ல ஒரு பேண்டஸி உலகம்...
ReplyDeleteஅன்பர் பிரகாஷ், மூன்றாம் பாகம் கட்டாயம் வெளிவந்தே தீரும் என்று எண்ணுகிறேன். பேட்மேன் 2 பண்ணிய வசூல் சாதனை அப்படிபட்டது இல்லையா...
ReplyDelete2012 க்கு, தேதி குறிக்கபட்டதாக செய்திகளில் படித்தேன். இணையத்தில் இப்போதே மெயின் வில்லன் யாராக இருக்கும் என்று ஒரு கருத்து கணிப்பே நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை பேட்மேனை ஒரு வில்லனாக சித்தரிக்கபட்ட கதை களம், பார்க்க சுவாரசியமாக இருக்கும் :)
// கும்மிக்கும் நமக்கும் ரொம்ப தூரம்பா....//
ReplyDeleteஹிஹி....
கும்மிக்கு சரி,குந்தவிக்கு.. ;)
பேட்மேனின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததும் காமிக்ஸ் வாயிலாகவே.தமிழில் மட்டும் அல்லாது,அவ்வப்போது சொந்தக்காரகளின் பார்க்க சென்னை வரும்போது சிறு வயதில் பழைய புத்தகக் கடையில் ஆங்கிலக் கதைகளையும் படித்து இருக்கிறேன்.பின்னரும் அது தொடர்கிறது.
//பின்பு கேபிள் மூலம் ஸ்டார் மூவிஸ் அறிமுகம் தான் பேட்மேனின் படங்களை அட்டகாசமாக ரசிக்க முடிந்தது. //
ஆமாம்.அது எனக்கும் பிடிக்கும்.ஆனால் இப்போ பார்த்தால் காமெடியாக இருக்குமோ என்னவோ?
என்ன தான் படம் பார்த்தாலும்,ஒரு காமிக்ஸ் தரக் கூடிய பீல் எந்தப் படமும் தரவில்லை.இந்த இரு படங்களைத் தவிர. :)
// ஆனால், இந்த படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட முறையில் அடுத்த பாகம் வர போகிறது, அதற்கு இது தான் அடித்தளம், என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.//
உண்மை தான்.இது வந்த புதிதில் எனக்குப் பிடித்துப் போனாலும்,இதனை மிஞ்ச ஒரு கதை வரும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை தான்.இப்போது,அதே ஆவல் மூன்றாவது கதைக்கும்.இதில் riddler ஆம்.. :)
//இப்போது இரு படங்களையும் சேர்த்து பார்க்கும் போது பல அர்த்தங்கள் சொல்வது... நோலனின் திறமைக்கு சான்று. //
கண்டிப்பாக...
சாமு,மூன்றாம் பாகம் வருது.riddler என்ற வில்லன் உண்டு என்ற மட்டில் நிச்சயம்.கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கப்போவது,johny depp. :)
ReplyDeletehttp://img161.imageshack.us/img161/5743/batman3montagem2zk8.jpg
By the by,nolan says that this forthcoming film would mark the end of the trilogy.
ReplyDeletehttp://www.imdb.com/title/tt1345836/faq#.2.1.18
and see here guys,seems like catwoman is also in the ride along with riddler.
http://www.batmanytb.com/comics/news/batman3poster2.jpg
http://images.sonara.net/articles_img/corres2/batman/batman3_banner.jpg
http://img161.imageshack.us/img161/5743/batman3montagem2zk8.jpg
அஐரமயான படத்திற்கு அருமையான பதிவு
ReplyDeleteமவனே இவ்வளவு பெரிசா எழுதுனா படிக்கிறதுன்னு நினைச்சியா! இல்லையா?
ReplyDeleteஇருடா சாமி 5 நாள் லீவு போட்டுவந்து படிக்கிறேன்... :-)
ஒரு வழியா பார்த்தாச்சு :) எனக்கு பொதுவா Super Hero படங்கள் பிடிக்காது.. ஆனா, Batman Begins? Nolan is impressive.. Looking forward for Dark Knight :)
ReplyDelete// எனக்கு பொதுவா Super Hero படங்கள் பிடிக்காது.. //
ReplyDeleteஎனக்கும் தான்.நான் ரசித்த சூப்பர் ஹீரோ படங்கள் மிகச் சொற்பமே!அதிலும்,பேட்மேன் படத்தில் சரியாக,கெத்தாக காட்டப்படுவது நடக்கவே நடக்காது என்றே நினைத்து இருந்த காலத்தில் கலக்கியவர் நோலன்.ஆனாலும்,நான் மனதில் வைத்திருக்கும் பேட்மேன் திரையில் தெரிந்தாரா என்றால்,இதுவரை இல்லை தான்.அது ஒரு சில காமிக்ஸ் கதைகள்,அனிமேஷன் படங்களிலேயே முடிந்து விடுகிறது.பேட்மேனின் ஆற்றல் இன்னும் படத்தில் சரியாக காட்டப்படவில்லை.
டார்க் நைட் பாருங்க.
One of the mind blowing movies!
பார்த்துட்டு விமர்சனக் கொடுமையையும் பாருங்க.Killing Joke சேர்த்து படிங்க. :)
வாவ் செம விமர்சனம் :)
ReplyDelete50
ReplyDelete