The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….


Ashton_Kutcher_in_The_Butterfly_Effect_Wallpaper_2_1024

எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான்.
உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்?
இவான், பற்பல நிழல் நினைவுகளுக்கு சொந்தக்காரன். ஏதேனும் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் நடந்து முடிந்தபின் அவனால் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாது. இவானது தாய் அவனை மருத்துவரிடம் சென்று காண்பித்தாலும், அவனது மூளையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் ஒருவேளை தந்தை இல்லாமல் வாழுவதன் அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறிவிடுகிறார். இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது எவ்வளவு நினைவுக்கு வருகிறதோ அவ்வளவையும் உடனே குறித்து வைக்குமாறும், பின்னாட்களில் என்றாவது ஒரு நாள் அதன் உதவியுடன் அவனுக்கு நினைவு திரும்பலாம் என்று கூறுகிறார்.
butterfly வருடங்கள் செல்கிறது. இவான் வளர்ந்து பெரியவனாகிறான். கல்லூரியில் படிக்கும் இவானுக்கு இப்போது நினைவு தப்பும் பிரச்சனைகள் இல்லை. ஒரு நாள் தற்செயலாக தன்னுடைய குறிப்புகளை படிக்க ஆரம்பிக்கும் இவானுக்கு, மறந்துபோன சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆனால், அது முழுதாக நினைவுக்கு வராமல் போக, அதனைப் பற்றி தெரிந்துகொள்ள தான் சிறுவயதில் வாழ்ந்த இடம் நோக்கி செல்லும் இவான், தனது சிறுவயது காதலி கேலேய்யை(Kayleigh) சந்திக்கிறான்.
சிறுவயதில் இவானை உயிருக்குயிராக நேசித்த கேலேய்,அவன் பிரியும்போது “உனக்காக திரும்பி வருவேன்” என்று சொன்னதை நம்பி இன்னமும் அவனை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பவள். ஆனால் நேரில் வந்த இவான் தனது மறந்துபோன நினைவைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுப் பேசிக் கொண்டிருப்பதை காணும் அவள் மனம் உடைந்து போகிறாள். இவானின் மனதில் தனக்கு இடமில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். குற்ற உணர்ச்சியில் வாடும் இவான், சிறிது காலத்தில், தனக்கு தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மறுபடி வாழ்ந்து அதை மாற்றக் கூடிய சக்தி இருப்பதைக் கண்டுகொள்கிறான். தன்னுடைய வாழ்க்கையில் பின்னோக்கி சென்று கேலேய்யை காப்பாற்ற சென்று, அவளை காப்பாற்றவும் செய்கிறான். ஆனால், இந்த சிறுசம்பவம் அவனது வாழ்க்கையோட்டத்தையே மாற்றி விடுகிறது. நிகழ்ந்த தவறுகளை சரி செய்ய திரும்பவும் பின்னோக்கிப் போகிறான். பின்னர்  திரும்பவும், திரும்பவும்...
ஆனால் ஒவ்வொரு முறை சென்று எதையேனும் திருத்தும் போதும், வேறு ஒரு பிரச்சனை நேருகிறது. யாரோ இறக்கிறார்கள். யாரோ பாதிக்கப்படுகிறார்கள். இவானுக்கும் இத்தகைய பயணங்களின் காரணமாக மூளையின் ரத்த நாளங்களில் பலத்த சேதங்கள் ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி, அவன் ஆசைப்பட்ட வாழ்கையை அடைய அவனால் முடிந்ததா என்பதே கதை.
Chaos Theory இல் சொல்லப்பட்டிருக்கும் Butterfly Effect தான் படத்தின் ஒன் லைன் என்றே சொல்லலாம். ஏதாவது ஒரு சிறு சம்பவம் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதே அதன் சாராம்சம். அதற்கேற்ப, கதை முழுவதும் இவான் செய்யும் சிறு தவறுகளும், சின்னச் சின்ன முடிவுகளும் பெரும் விளைவுகளையே ஏற்படுத்தி அவனை பின்னோக்கி இழுக்கிறது. படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம், இழந்ததை திரும்பப் பெறத் துடிக்கும் மனிதன் செய்த தவறை திருத்த, புதிய தவறுகளை செய்வான் என்பதை அழகாக காண்பித்த விதம். ஒருவகையில் சொல்லப் போனால், கதையே அது தான். இதைப் போன்றே இவ்விசயத்தை மிக அழகாக சொன்ன கதை, ஸ்டீபன் கிங் எழுதிய Pet Sematary. ஆனால், பெட் கதையில் அழகோடு சேர்ந்து திகிலும் கலந்திருக்கும்.
இப்படம் வெளிவந்த போது, சரியாக புரிந்து கொள்ளப்படமால், பட விமர்சகர்களால் தீவிரமான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது. ஆனால், மக்களின் ரசனை விமர்சகர்களின் ‘மேலான’ விருப்பத்திற்கு ஆட்பட்டதில்லையே! நல்ல கதையும் திறமையான கதை சொல்லலும் இருந்தால், எத்தகைய எதிர்ப்பையும் மீறி ஒரு நல்ல படம் ஜெயிக்கும் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு theotrical, director cut என்று இரண்டு versions, நாலைந்து முடிவுகள் (உண்மை தான்) என்று இருந்தாலும், எனக்கு மிகப் பிடித்த முடிவு, theotrical version இன் ஒரிஜினல் முடிவு தான். சில நேரங்களில் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி கொண்டு, இருப்பதை கெடுக்காமல் இருப்பதே சிறப்பானது. சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அருமையான படங்களில் ஒன்று இந்தப் படம்.
சில படங்களைப் பார்த்தபின், எத்தனை வருடமானாலும் அதை மறக்க முடியாது. அத்தகைய படங்களில் ஒன்று The Butterfly Effect. ஒரு நல்ல psychological thriller படம், படம் முடிவதற்குள் பல்வேறு அடுக்குகளில்(different layers) விரிவது எப்போதும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும், குழப்பமான கதையை  தெளிவான திரைக்கதையின் மூலம் புரியவைப்பது இன்னும் அபூர்வம். நிகழ்காலம், கடந்தகாலம், மாற்றப் பட்ட நிகழ்காலம், மறுபடி கடந்தகாலம் என்று விரியும் இப்படம் Inception படத்திற்கு ஒரு முன்னோடி என்று சொன்னால் அதில் எந்த விதமான மிகையும் கிடையாது.
The Butterfly Effect – Takes your breath away...
**********************************************************************
ஏற்கனவே மேல உள்ளத எல்லாம் படிச்சு மண்ட காஞ்சு போயிருக்குறவங்க அப்படியே போறது நலம். ஏன்னா, இதுல இன்னும் குழப்ப போறேன். யாருக்காவது கொலை வெறி வந்தா, என்னையும் நம்பி, Butterfly Effect and Time Travel பத்தி எழுத சொன்ன குழந்த மற்றும் கீனுவ கவனிங்க. ;)
Butterfly Effect இன் கோட்பாடு என்ன என்றால், ஏதாவது ஒரு சிறு சம்பவம் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமா சொல்லப்படுவதே இந்த Butterfly example.
Something as small as a flutter of the butterfly’s wings can ultimately cause a typhoon halfway around the world.
அதாவது, சிம்பிளா சொல்லணும்னா, இப்போ நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பின்னாளில் ஏதோ ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, ஒரு நாள் நீங்கள் வண்டியில் போகும்போது பெரிய ஆக்ஸிடன்ட் நடந்து உங்களுக்கு கை, கால் போய் விடுகிறது. அன்றைக்கு நீங்கள் போகாமல் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்க கூடுமா? நீங்களோ வேறு யாரோ டைம் ட்ராவல் செய்து அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினால், அந்த நிகழ்ச்சி நடக்காமலே போகுமா? முடியலாம்.
காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்வது குறித்து இதுவரை எல்லாமே தியரி ரீதியில் தான் இருக்கிறது.
1.காலப் பயணத்தில் முன்னே செல்வது கூட சாத்தியம், பின்னே செல்ல முடியாது என்று ஒரு தியரி.
2.காலப் பயணத்தில் பின்னே செல்லலாம், முன்னே செல்வது கஷ்டம் என்று இன்னொரு தியரி.
3.காலப் பயணத்தில் முன்னேயும், பின்னேயும் செல்லலாம் என்று இன்னொரு தியரி.
4.ஆட்டைய கலைக்கவே வேணாம். நீங்கள் காலத்தில் பயணமே செய்ய முடியாது என்று இன்னொரு தியரி.
காலப் பயணம் செய்வது குறித்த விவாதங்கள் நிறைய. போகவே முடியாது, கொஞ்சூண்டு போகலாம், இஷ்டத்துக்கு போகலாம் என்று. போகவே முடியாது என்று சொல்பவர்கள் சொல்வது என்னவென்றால், கடந்த காலம் என்பது ஏற்கனவே முடிந்து போன ஒரு விஷயம். அதில் நுழைவது சாத்தியமில்லை,உங்களுக்கு அங்கே இடமும் இல்லை என்பது. அதே மாதிரி, எதிர்காலம் என்பது இன்னும் முடிவே எடுக்கப்படாத காலம். அதில் நுழையவே முடியாது என்பது இவர்கள் வாதம்.
சரி, அது என்ன கொஞ்சூண்டு போகலாம்? அதாவது இந்த தியரிபடி நீங்கள் ஒரு டைம் மிசின் கண்டுபிடித்து விடுகிறீர்கள். உங்களால் அதை உபயோகப்படுத்தி கடந்த காலத்தில் போக முடியும்.ஆனால் எதுவரை கடந்த காலத்தில் என்றால், அந்த மிசின் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அது வரை மட்டுமே! அதற்கு முன்னால் போக முடியாது.ஏனென்றால், அதற்கு முன் அப்படி ஒரு மிசினே கிடையாதே!
அதே மாதிரி, எதிர் காலத்தில் கொஞ்சூண்டு போகலாம் என்பதற்கு துணையாக, பிரபலமான Twin Paradox தியரியை சொல்கிறார்கள். அதாவது, ஒரே விதமான ரெட்டயர்கள் இருவர். ஒரே வயது. ஒருவரை பூமியிலும், மற்றொருவரை ஒளியை விட வேகமாக போகும் ஏதோ ஒரு கலத்திலும் வைத்து விடுகிறீர்கள். ஒளியை விட வேகமாக போகும் கலத்தில் உள்ள நேரமும், பூமியின் நேரமும் வேறுபடும். Different time perceptions. பத்து வருடம் கழித்து அந்த ஆளை பூமியில் இறக்கினால், அவருக்கு பத்து வயது கூடியிருக்காது. ஏன் என்றால், அவர் டைம் வேற. பூமியில் இருந்த ரெட்டயரை compare செய்தால்,அவரை விட இவர் சற்றே இளமையாக இருப்பார். சரி, அதை ஏன் கொஞ்சம் செல்ல முடியும் என்று சொல்கிறீர்கள்? எந்த விதமான நேர வித்தியாசமாக இருந்தாலும், மரணம் நிகழத் தானே செய்யும்.
சரி, அப்படியே என்றாலும்,நீங்கள் போகும் எதிர்காலம் multi-universe சிந்தாந்தப்படி வேறொரு universe இன் பூமியாக இருக்கும் என்று ஒரு தியரி உள்ளது.
அதாவது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஏற்ற மாதிரி ஒரு காலம் பிரியும். அதுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விதமான எதிர்காலம். அந்த ஒவ்வொரு எதிர்காலமும் நடப்பது வெவ்வேறு universe இல் என்பது தியரி. அப்படி பார்த்தா, நீங்க எந்த எதிர்காலத்திற்கு போவீங்கன்னு உங்களாலேயே சொல்ல முடியாது. ஏன்னா,நீங்க எடுக்கும் முடிவு என்ன விதமான விசயங்களுக்கு வித்திடும்னு உங்களுக்கே தெரியாது. :)
அதுவும்போக, நீங்கள் கடந்த காலத்திற்கு சென்று வந்தால், உங்கள் உலகம் உங்களுக்கு தெரிந்த மாதிரி அப்படியே இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி. அதாவது, காலத்தை கடந்து முன்னும் பின்னும் நீங்கள் போனால், உங்களுக்கு தெரிந்த உங்கள் உலகம் கண்டிப்பாக அப்படியே இருக்காது. நிச்சயம் மாறிவிடும். அப்படி மாறிய உலகத்தில் ஒருவேளை நீங்களே இல்லாமல் போனால், எப்படி பின்னாலோ,முன்னாலோ செல்வீர்கள்? இது ஒரு paradox.
அதே போல, பின்னே செல்லும் நீங்கள் உங்கள் தந்தையை கொன்றால் என்ன ஆகும்? இது இன்னொரு paradox.
சரி, இத்தனைக்கும் பதில் கிடைப்பது எப்போது? The key is in finding a machine or a particle which can travel faster than light and employing it in time travel. அதுவரை, அனுமானம் தான்.

Comments

  1. The next post will be a review on the book "The Lost Symbol". As it has already been written, it will only be a couple of days. :)

    ReplyDelete
  2. படம் பார்த்தாச்சு பார்த்தாச்சு... படம்தான் மண்டைய பிச்சுக்க வச்சுன்னா விமர்சனம் முளைளையும் சேர்த்து பிச்சுக்க வைக்குது :))

    The time machineனு ஒரு படம்கூட எடுத்தானுங்க....பெரிய போரிங்...தெலுங்குல கூட எடுத்தானுங்க...:) காலத்தின் முன், பின் செல்லும் சக்தி மனுசனுக்கு இருந்தா அதன்விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்.நாம் நிகழ்காலத்திலேயே இருப்போம்:)

    ReplyDelete
  3. டைம் மெஷின் ஒரு பழைய நாவல் தல. அதை படமா எடுத்து கெடுத்துட்டாணுகனு அந்த நாவல படிச்சவன் ஒருத்தன் சொன்னான்.ஆனா,படம் பார்த்ததால சொல்றேன், அந்த படம் மொக்கை தான்.

    ReplyDelete
  4. மூளையையும் ஏன் பிச்சுகிட்டீங்க? கீழ உள்ளத அவ்ளோ சொல்லியும் படிச்சுட்டீங்களா? :)

    ReplyDelete
  5. படிக்கவே இவ்வளவு கஷ்டமாயிருக்கே...
    இதுல ஆராய்ச்சி பண்றவன் கதி???
    நீங்க எச்சரிச்சும் தெரியாம படிச்சுட்டேன்.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
    எஸ்கேப்.

    ReplyDelete
  6. @ " இப்படம் Inception படத்திற்கு ஒரு முன்னோடி என்று சொன்னால் அதில் எந்த விதமான மிகையும் கிடையாது."

    உண்மையா Inception படத்துக்கு முன்னோடி எங்க புர்சி கலைஞர் [நன்றி: கொழந்தை] நடிச்சி விக் ரமன் இயக்கிய மரியாதை படம்தான் முன்னோடி, இந்த படத்துல நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் கதை பயனிக்குரத இவ்வளவு சுலபமா யாரும் சொன்னது இல்ல

    ReplyDelete
  7. Twin Paradox தியரியை இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லுங்க இல்லுமி

    ReplyDelete
  8. @ படிக்கவே இவ்வளவு கஷ்டமாயிருக்கே...
    இதுல ஆராய்ச்சி பண்றவன் கதி???


    நம்ம இல்லுமியோட கதிதான்...,

    ReplyDelete
  9. உதாரணத்துக்கு, ஒரு நாள் நீங்கள் வண்டியில் போகும்போது பெரிய ஆக்ஸிடன்ட் நடந்து உங்களுக்கு கை, கால் போய் விடுகிறது. அன்றைக்கு நீங்கள் போகாமல் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்க கூடுமா?
    **********************************************************************
    மகாஜனங்களே...இப்போ தெரியுதா....உதாரணத்தில கூட படிக்கிறவன் கையை காலை எடுக்கிறவன் இந்த இலுமி...!
    ம்..பட்டாபட்டி...உனக்கு எதாவது புரிஞ்சது,,,,

    ReplyDelete
  10. அட வாங்க நம்ம ஆளு தான் நீங்க... எனக்கு டைம் டிராவல் படங்கள் என்றாலே அலாதி பிரியம்.

    எல்லாம் சிறுவயதில் பார்த்த BACK TO THE FUTURE படத்தில் இருந்து தான் ஆரம்பம்...என்ன தான் படங்கள் வந்தாலும் BACK TO THE FUTURE கொடுத்த ஆர்வத்தை எதுவும் கொடுக்க வில்லை.குறிப்பாக இரண்டாம் பாகம்

    மிகவும் ஆவலோடு நான் டவுன்லோட் செய்து பார்த்த படம் BUTTERFLY EFFECT . ஆனால் என்னவோ படம் நிறைவாக இல்லை.

    LOST TV SERIES பாருங்க சும்மா கலக்குவாங்க...

    ReplyDelete
  11. Vasanth Sri NarayanApril 30, 2011 at 8:45 AM

    கலக்கிட்டிங்க தல....என்ன கொஞ்சம் வருத்தம் இந்த பதிவில குறிபிட்ட தியரியை கொஞ்சம் விளக்கி (with equation) இருந்த நல்ல இருக்கு.....

    //உங்களால் அதை உபயோகப்படுத்தி கடந்த காலத்தில் போக முடியும்.ஆனால் எதுவரை கடந்த காலத்தில் என்றால், அந்த மிசின் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அது வரை மட்டுமே! அதற்கு முன்னால் போக முடியாது.ஏனென்றால், அதற்கு முன் அப்படி ஒரு மிசினே கிடையாதே//

    அப்போ எதிர்காலத்திற்க்கு போக தான் வாய்ப்பு இருக்கும் ...அது கூட கொஞ்சம் தான் சாத்தியம்....

    நாம பூமியில் இருக்கும் வரை தான் இந்த 24 மணி நேர காலம் எல்லாம்.....இரவு பகல் எல்லாம்.....

    நம் ஆயுசை குறைக்கும் நாள் எண்ணிக்கையும் இந்த பூமியின் தொடர்பு இருக்கும் வரை தான்....இப்படி இதை விடுத்து பிரபஞ்ச வெளியில் நாம் பயணிக்கும் போது நமது ஆயுளை கணக்கிடும் முறையில் மாற்றம் வரும்....இது ஒரு paradox state....மரணமே இல்லை என்று சொல்லலாம்....

    பெரும்பான்மையான தியரி (Time) (Speed) (object) இந்த மூன்றை மட்டுமே கணக்கில் கொண்டு விளக்கபடுகிறது...அப்படி பார்க்கும் போது டைம் என்ற தேவை universal timing என்ற விசயத்தை கொண்டே கணக்கிட படவேண்டும்....அதற்க்கான standard எதை வைத்து நிர்னைப்பது அது எந்த universe கட்டுபாட்டுக்கு வரும்....பொதுவாக எல்லாம் டைம் வைத்து travel

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறும் கூற்று சரியே .....ஆனால் //உங்களால் அதை உபயோகப்படுத்தி கடந்த காலத்தில் போக முடியும்.ஆனால் எதுவரை கடந்த காலத்தில் என்றால், அந்த மிசின் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அது வரை மட்டுமே! அதற்கு முன்னால் போக முடியாது.ஏனென்றால், அதற்கு முன் அப்படி ஒரு மிசினே கிடையாதே///// டைம் மசின் கிடையாது எனக்கு என்ன தோணுகிறது என்றால் மசின் கண்டுபுடிபதற்கு முன்பு வரை போகலாம்....திரும்ப முடியாது...அதற்குதான் மசின் கண்டுபுடிபதற்கு காலம் வரை அங்கேயே காத்திருக்க வேண்டியதுதான்....

      I think you can open portal anywhere in past...but the portal only going to be present there not machine...so i think its possible...if any wrong means sorry

      Delete
  12. Vasanth Sri NarayanApril 30, 2011 at 8:49 AM

    செய்யமுடியாது....

    Michio Kaku In "Physics of the Impossible," Kaku divides the "seemingly impossible" into three classes: Class I consists of technologies that "might be possible in this century," including "teleportation, antimatter engines, certain forms of telepathy, psychokinesis, and invisibility." Class II awaits the wisdom we will have acquired in "millennia to millions of years in the future" and includes time machines, hyperspace travel and popping through wormholes in space into another universe. Class III is the "perpetual motion machine" and precognition. Kaku concludes that if "they do turn out to be possible, they would represent a fundamental shift in our understanding of physics." இப்படி இவரும் ஒரே paradox பதில் தான் சொல்கிறார் ....

    எது நடக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்வது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்...இறந்த காலத்தை நோக்கி செய்யும் பயணம் கொஞ்சம் சந்தேகம் தான் ....

    ReplyDelete
  13. //அதே போல, பின்னே செல்லும் நீங்கள் உங்கள் தந்தையை கொன்றால் என்ன ஆகும்? இது இன்னொரு paradox//

    இது நாம் சிந்திக்க வேண்டிய அடுத்த விசியம்....தந்தையை கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லை....இவனது பிறப்பை தடுக்க முடியுமா என்றால் இதுவே பெரியா
    paradox....ஒருவேளை இவனே இவனை எதிர்காலத்திலோ இல்லை இறந்தகாலத்திலோ சந்திக்கும் வாய்ப்பு இருந்தால் என்னவாகும்...shared universal energy
    பெரிய குழப்பத்தில் கொண்டு போய் விடும்....குளோனிங்ள் கூட இதே தொல்லை இருக்கிறது....

    நமக்கான பிரபஞ்ச சக்தி நமக்கு மட்டுமே ஆனது...இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளமுடியாது...நம்மில் இருந்து வாரிசுகளுக்கு வழி வழியாக போய் சேர வாய்ப்பு இருக்கிறது....


    இறந்த கால பயணம் நமது மனதிலும் அதன் பதிவிலும் செய்யலாம்
    எதிர்கால பயணம் நமது கற்பனையிலும் கனவிலும் செய்யலாம்....

    ReplyDelete
  14. படம் பாக்கணும் ... டைம் டிராவல் பத்தி படிச்சாலே மண்ட கொழம்புது ....

    ReplyDelete
  15. //நாம பூமியில் இருக்கும் வரை தான் இந்த 24 மணி நேர காலம் எல்லாம்.....இரவு பகல் எல்லாம்.....//

    //மரணமே இல்லை என்று சொல்லலாம்....//

    நீங்க டைம் கணக்கு வச்சு பார்க்குறீங்க. விண்வெளி போனா அது space time ஆகிடும்னு எனக்கும் தெரியும். ஆனா, என்ன தான் இருந்தாலும், என்ன டைமா இருந்தாலும், நம்ம உடம்பு organic தான?அதனால, ultimately நாம இறக்கிறது நிச்சயம். நான் அதை வச்சு சொன்னேன்.எப்போ இறப்போம்ங்கறதுல வேணுமானா வித்தியாசம் வரலாம். ஆனா, இறப்பு நிச்சயம்.
    மேலும், ஒளியை விட வேகமா போகிற கலம் ஒண்ணு கிடைச்சாலும், அதுக்கு வேண்டிய சக்தி கணக்கிடவே முடியாத அளவுக்கு இருக்கும் னு நம்புறாங்க. அவ்ளோ சக்திய நீங்க maintain பண்ணனும், பயணத்தில வரும் மிச்ச radiations அந்த power ஐ affect பண்ணாம பார்த்துக்கணும்.நிறைய பிரச்சனைகள் இருக்குது.

    //தந்தையை கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லை....இவனது பிறப்பை தடுக்க முடியுமா என்றால் இதுவே பெரியா
    parado...x....//

    exactly. அது சும்மா ஒரு example.

    //ஒருவேளை இவனே இவனை எதிர்காலத்திலோ இல்லை இறந்தகாலத்திலோ சந்திக்கும் வாய்ப்பு இருந்தால் என்னவாகும்..//

    ஒண்ணுமே ஆகாது என்றும் சிலர் சொல்றாங்க. அதுக்கு அவங்க சொல்றது மேட்டர்- ஆன்டி மேட்டர் தொடர்புகளை...
    அதாவது, இப்போ உங்க பிரபஞ்சத்தில நீங்க மேட்டரால உருவாக்கப் பட்டு இருக்கீங்க. ஒரு தியரி என்னன்னு சொன்னா, முழுசா ஆன்டி மேட்டர்ல உருவான universe எங்கயோ இருக்கு. ஆன்டி மேட்டர் இருக்குறத கண்டும் பிடிச்சுட்டாங்க. ஆனா, நம்ம மேட்டர் உலகத்தில அது stable கிடையாது. உடனே கரைஞ்சுரும். அந்த நேரத்தில மிகப் பெரிய அளவுக்கு energy release ஆகும்.

    அதாவது கடந்த காலத்துக்கு போறீங்க, ரெண்டு பேருமே matter. பிரச்சனை இல்ல. ஒண்ணும் ஆகாது.
    ஆனா நீங்க time travel மூலம், multi verse சிந்தாந்தப்படி ஆன்டி மேட்டர் பிரபஞ்சம் போய்ட்டா நீங்க என்ன ஆவீங்க?
    இது இன்னொரு paradox...


    Black Hole பத்தி நான் படிச்சு பல காலம் ஆச்சு.அவ்ளோ ஞாபகம் இல்ல. :)
    ஆனா அதுவுமே prove பண்ணாத கான்செப்ட் தான்.
    ப்ளாக் ஹோல்ல இருக்கிற க்ராவிட்டி ரொம்ப அதிகம். நீங்க அது மூலமா ஏதோ ஒரு கலத்துல ட்ராவல் செய்தா முதல்ல நீங்க நசுங்காம இருக்கணும். :)

    நானு முன்னயே சொன்ன மாதிரி, இது எல்லாமே இது வரை அனுமானம் தான்.

    ReplyDelete
  16. கதைய பொறுத்த வரை, இவ்ளோ பிரச்சனைகளை தெரிஞ்சுகிட்டு தான் அவனுக அது பத்தியே பேசல. நீங்களும் ரொம்ப யோசிக்காதீங்க. :)

    ReplyDelete
  17. lost symbol பத்தி ஏற்கனவே எழுதி வச்சுட்டேன். டிங்கரிங் பார்த்துட்டு ரெண்டு மூணு நாள்ல போட்டுடுறேன். :)
    ஆனா இங்கிலீஷ்ல இல்ல எழுதி வச்சுருக்கேன். ஓகே தான? ;)

    ReplyDelete
  18. @ உலக சினிமா ரசிகன், @ராஜா :

    அட, ப்ரீயா உடுங்க பாஸு,
    இதெல்லாம் இன்னும் அனுமானம் தான். ரொம்ப படிச்சு குழம்பிக்காதீங்க. :)

    //உதாரணத்தில கூட படிக்கிறவன் கையை காலை எடுக்கிறவன் இந்த இலுமி...!//

    ஹா ஹா...

    // ம்..பட்டாபட்டி...உனக்கு எதாவது புரிஞ்சது,,,, //

    யாரு, அவனையா கேக்குற? அவன் காலை அகட்டி வைக்காமல் நடப்பது எப்படின்னே இப்பதான் யோசிச்சுகிட்டு இருக்கான். நீ வேற? ;)

    @லக்கி ...

    லாஸ்ட் தான? பார்த்துடுவோம். :)

    ReplyDelete
  19. இன்னைக்கு காலையில தான் ஊருக்கு வந்தேன்...

    இத படிச்சதிலயிருந்து எங்கம்மாகிட்ட சுக்கு காபியா போடச் சொல்லி குடிச்சிகிட்டிருக்கேன்....

    ReplyDelete
  20. Well'sன் Time Machineனை எப்படி தவற விட்டீர்கள்....என் அறிவிற்கு எட்டிய வரையில் அது ஒரு Breath taking story.....

    Dejavu - Terminator இந்த ரெண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் மீண்டும் இப்போது அதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்...

    ReplyDelete
  21. @ரெட்டை

    //ம்..பட்டாபட்டி...உனக்கு எதாவது புரிஞ்சது,,,,
    //

    அந்த கண்ராவிதான் புரியமாட்டீங்குது?..
    :-)

    ReplyDelete
  22. @இலுமி..

    எப்ப்டியா.. உண்மைத்தமிழன் அண்ணாச்சி மாறி..இம்பூட்டு பெரிய பதிவை போட்டிருக்கே?..

    ReplyDelete
  23. //finding a machine or a particle which can travel faster than light//

    Of course u must be knowing about Tachyons.

    இருக்கு என்று String Theory படி ஒரு தரப்பினரும், சாத்தியமேயில்லை - co'z to travel in such a speed the particle must possess infinite energy என்று இன்னொரு தரப்பினரும் கூறி வரைவது குறித்து உங்கள் எண்ணம் என்ன....

    ReplyDelete
  24. தல..நீங்க இந்த பதிவ இங்கிலிபீச்சுலயே எழுதி இருக்கலாம்....

    சீக்கிரமே Star Trek கதையை குறித்தும் எழுதவும்....

    ReplyDelete
  25. Tachyons பத்தி சொல்லணும்னா வரும் ஆனா வராது கதை தான். :)
    எனக்கு தெரிஞ்ச வரை, எந்த particle லைட் ஸ்பீட தாண்டினாலும், ஒரு விதமான light radiation நடக்குமாம். அது இதுவரை எவனும் பார்த்ததில்ல.அப்படி எவனாவது பார்த்துட்டா, சோலி முடிஞ்சது.
    ஒளி வேகத்தை தாண்டவே முடியாதுனு சொல்றத தூக்கி தூர போட்டுருவாணுக.

    ReplyDelete
  26. ஸ்டார் ட்ரெக் நானு பார்த்ததே இல்லையே மச்சி.. :)

    ReplyDelete
  27. ரைட் விடும். Tachyon பத்தி பார்த்துருவோம்.

    அதாவது tachyon அப்டிங்கறது ஒரு கற்பனையான ஒரு விஷயம்.இதுக்கு ஒளியை விட வேகமா போகக் கூடிய சக்தி உண்டுன்னு சொல்றாங்க.

    ஆனா,இது சாத்தியமே இல்லைன்னு தான் பல பேர் சொல்றாங்க.

    ஏன்னா,நார்மல் விதிகளின்படி, ஒளி பயணமாகும் போதும், எதுனா radiations வெளிவந்தா, அதோட வேகம் குறையும்.ஏன்னா energy லாஸ் ஆகி இருக்கு.

    ஆனா,tachyon அப்படி கிடையாது. இதுக்கு வேகம் இன்னும் கூடும்.அதாவது, இதால ஒளியின் வேகத்துக்கு கீழேயே வர முடியாது.
    அப்டின்னா, energy குறைய குறைய வேகம் கூடும். இது சாத்தியமா?

    நம்மளோட matter universe ல கிடையாதுனு சிலர் சொல்றாங்க.அவங்க சொல்றது என்னன்னா, anti matter universe ல எல்லாமே நம்ம விசயங்களுக்கு அப்புடியே நேரெதிர். இங்க ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாதுன்னா அங்க ஒளியின் வேகம் தான் குறைந்த வேகம்.கீழ வர முடியாது. அங்க tachyon சாத்தியம்.

    ஸ்ஸ்ஸ்ப்பா,எனக்கே முடியலையே சாமி... :)

    ReplyDelete
  28. Tachyon பத்தி ஒண்ணே ஒண்ணு சொல்லி முடிச்சுக்கிறேன். இத்த யூஸ் பண்ணி நீங்க எப்படியோ ஏதோ ஒரு செய்தி அனுப்பிடுறீங்க. அப்டி செய்தா, நீங்க இன்னைக்கு அனுப்பின செய்தி நேத்தே போயிருக்கும். :)
    தமாசா இல்ல? அப்புறம் ஏன் நீங்க அனுப்பனும்? :)

    ReplyDelete
  29. சின்ன வயசில சக்திமான் நாடகம் வந்த காலத்துல இன்னொரு டைம் மிசின் சீரியல் ஓடுச்சு.. அதோட பேரு நியாபகம் இல்ல. அதுல ஒரு மெசினுக்குள்ள போவாணுக, எதையோ அமுக்குவாணுக, ஒடனே இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மாறி மாறி போவாங்க..அதுலயே நான் மண்ட கொழம்பிப் போய் கிடந்தேன்.. நீங்க சொன்னதுக்கு அப்புறம் இந்தப் படம் பாக்கவே யோசனையா இருக்கு..

    ReplyDelete
  30. சாமு, படத்துல உஷாரா இத பத்தி எதுவும் சொல்லி குழப்பல. சோ, தைரியமா பாருங்க. இங்க நடக்கிற கூத்தெல்லாம் இந்த குழந்தயால வந்தது. :)

    ReplyDelete
  31. சிறுவயது காதலி //

    ஓ வெரி நைஸ்.... ஐ லைக் இட் யா :))

    ReplyDelete
  32. //சில நேரங்களில் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி கொண்டு, இருப்பதை கெடுக்காமல் இருப்பதே சிறப்பானது// ஏனப்பா... ஏன் :))

    ReplyDelete
  33. //ஏனப்பா... ஏன் :)//

    அது உம்ம மாதிரி கல்யாணம் ஆன கிழடுகளுக்கு பொருந்தாது. ;)
    நீர் வழக்கம் போல பெருமூச்சு விடும்.

    ReplyDelete
  34. புரபசர் இலுமி... நீங்க என்னை காலத்தில கடக்க, நடக்க, பறக்க வெச்சிட்டீங்க.. நான் பொண்ணு பார்க்கப் போன நாளில போயி நிக்கிற மாதிரி ஒரு கால எந்திரம் கண்டு பிடிங்க புரபசர்.. ப்ளீஸ் புரபசர்.

    ReplyDelete
  35. // நான் பொண்ணு பார்க்கப் போன நாளில போயி நிக்கிற மாதிரி ஒரு கால எந்திரம் கண்டு பிடிங்க புரபசர்.. ப்ளீஸ் புரபசர்.//

    வரலாற்றின் பேரழிவுகளை தடுத்து நிறுத்துவது மிகக் கடினம் என்றும் ஒரு தியரி இருக்கிறது ஓய். ;)

    ReplyDelete
  36. Keanu said...
    @ " இப்படம் Inception படத்திற்கு ஒரு முன்னோடி என்று சொன்னால் அதில் எந்த விதமான மிகையும் கிடையாது."

    உண்மையா Inception படத்துக்கு முன்னோடி எங்க புர்சி கலைஞர் [நன்றி: கொழந்தை] நடிச்சி விக் ரமன் இயக்கிய மரியாதை படம்தான் முன்னோடி, இந்த படத்துல நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் கதை பயனிக்குரத இவ்வளவு சுலபமா யாரும் சொன்னது இல்ல
    **********************************************************************
    நாற கமென்டுயா!
    இந்த கமெண்ட் அ படிச்சதிலருந்து சிரிச்சுட்டே இருக்கேன் மச்சி!

    ReplyDelete
  37. முதல் பாகம் பார்த்த பிரமிப்பில், இரண்டாம் மூன்றாம் பாகம் பார்த்து நொந்து போயிருந்தேன் :))

    மிகச்சிறந்த திரையாக்கதையாக்கத் திரைப்படங்களில் ஒன்று. மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி இலுமினாட்டி..

    ReplyDelete
  38. //மிகச்சிறந்த திரையாக்கதையாக்கத் திரைப்படங்களில் ஒன்று.//

    True friend.Thanks for coming.

    ReplyDelete
  39. டெர்மினேட்டர் கதைகளும் டைம் மெஷினை அடிப்படையாக கொண்ட கதைதள்தான்! அதுவும் டெர்மினேட்டர் 4ல் ஜான் கானர் இறந்தகாலத்தில் பயணித்து தன் தந்தை கெய்ல் ரீஸை காப்பாற்றி ரோபோக்களுக்கு எதிராக போரிட சொல்லும் காட்சிகள் சிந்திக்கவைத்தன. back to the future um" நல்லா இருக்கும்!

    ReplyDelete
  40. Something as small as a flutter of the butterfly’s wings can ultimately cause a typhoon halfway around the world....Yes in the end what the end result from God is always occur....hero try to stop the actions...but lastly he knows that occuring all are reactions of what action occur from him...climax superb...first time purila then watched again...superb story.

    ReplyDelete
    Replies
    1. I am glad you liked the film. By the way, which climax did you see? There are a lot of climaxes around.

      Delete
    2. The one which his son realize about him as his father....

      Delete
    3. The climax where he stops himself from entering into the world

      Delete
    4. I saw that climax version in you tube. I did not like it all. Seemes somewhat stupid to me. :)
      Have you seen all the climaxes? I liked the theatrical version climax.

      Delete
  41. No i didnt...watched it...

    ReplyDelete
  42. dont miss this movie fa meg pa for faen

    http://www.bonjourtristesse.net/2011/12/turn-me-on-goddammit-2011.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......