MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

-->
வணக்கம் நண்பர்களே.இந்த ப்ளாக் ஆரம்பிச்சதே நல்ல காமிக்ஸ்,புத்தகங்கள்,படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் தான்.படங்கள் பத்தியும் காமிக்ஸ் பத்தியும் எழுதுன அளவுக்கு நான் புக்ஸ் பத்தி எழுதல......
So,here I am......
இந்த முறை த்ரில்லர் எழுத்தாளர் Stephen King எழுதிய Misery பத்தி பார்க்கலாம்.எனக்கு action,adventure genre நாவல்கள் தான் அதிகம் பிடிக்கும்.த்ரில்லர் டைப் நாவல்கள் அதிகம் படிச்சதில்ல.அதனாலேயே இவர் எழுதுன நாவல்கள நான் படிச்சது இல்ல.

ஒருமுறை இவரோட முதல் புக்கான Carrie படிக்க நேர்ந்தது.கதை கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால,இவரோட பேமஸ் புக்கான இத படிக்கலாம்னு நெனச்சேன்.அதுசரி,Carrie என்ன கதையா?

சின்ன வயசுல இருந்து எப்பயுமே கிண்டல் அடிக்கப்பட்டு,நண்பர்களே இல்லாம,கூட படிக்குறவங்களால அருவருப்போட வெறுத்து ஒதுக்கப்படற ஒரு பொண்ணு தான் Carrie.ஆனா,எந்தப் பொருளையும் மனசால நெனச்சே நகர்த்தக் கூடிய Telekinetic பவர் அந்தப் பொண்ணுக்கு இருக்கு.
ஸ்கூல்ல மட்டுமில்லாம வீட்டுலயும் பிரச்சனைகள் நிறைஞ்சவ தான் கேரி.அவளோட அம்மா ஒரு religious fanatic.பைபிள் சொல்ற ஒவ்வொரு வரியும் அட்சரம் பிசகாம கடைப்பிடிக்கப்படணும்னு நினைக்குற ஒரு ஆள்.எதையாவது தப்பா பண்ணிட்டா அதுக்காக பொண்ண தனி அறையில வச்சு ஒரு நாள் முழுக்க பூட்டிவைக்குற மாதிரியான ஒரு கேரக்டர்.
இப்படியான அவளுடைய வாழ்கையில ஒருநாள் அவ வாழ்கையில நடக்குற ஒரு சம்பவத்தால எப்படி அவ வெறி ஏறி,அவளோட பவரால அவள கொடும பண்ணுன அந்த ஊரையே அழிக்கணும்னு கெளம்புறா,அதுக்கப்புறம் என்ன ஆகுது அப்டிங்க்றது தான் கதை.
பிளஸ்:
*புது முயற்சி (கதை வெளியிடப்பட்டது 1974 ல).
*Telikinetic பத்தின விசயங்கள நல்லாவே விளக்கி இருப்பது.
*கதையோட பிளாட்.என்னதான் பூ சுத்துற மாதிரி இருந்தாலும்,சின்ன வயசுல நம்மள்ள எத்தன பேர் எத்தன விதமான கிண்டல்களையும்,கேலிகளையும் சந்திச்சு இருப்போம்?அதோட ரிலேட் ஆகி ஒரு வர்ற ஒரு கதைன்னதும் நம்ம அறியாமலே அந்தப் பொண்ணு மேல ஒரு இரக்கம் வந்துடுது.
ஆனா அதே அவ கடைசியல புத்தி பேதலிச்சு,வெறியாட்டம் ஆட்றப்ப ஒரு சங்கடம்மும்,அவளுக்காக வருத்தமும்,அதே நேரத்துல அவ பண்றது தப்புங்கிற எண்ணம்னு ஒரு கம்போசிட் ஆன ரியாக்சன்ஸ் வரும்.யோசிச்சு பாருங்க.நாம ஜாலியா இருக்கணும்கிறதுக்காக எத்தன முறை எத்தன பேர மனசு கஷ்டப்படுத்தி இருப்போம்?அத ஒரு தடவயாச்சும் யோசிக்க வைக்கும் இந்த புக்.
*கதைய ஒரே கோணத்துல சொல்லாம,பலவிதமான கோணங்களில்,பலரோட பார்வைகளில் சொன்னது.
மைனஸ்:
*இது அவரோட முதல் புக்.அதனால,அவ்வளவு விறுவிறுப்பு கெடையாது.வேகமான ப்ளோ இருக்காது.கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் படிக்கணும்.
*கொஞ்சம் vague ஆன நடை.
*அதிகமான gore சீன்ஸ்.இந்த ஒரு ரீசனுக்கு தான் எனக்கு ஸ்டீபன் கிங் பிடிக்கல.த்ரில்லர் அப்டின்னா gore ஆ இருக்கணும்னு ஸ்டீபன் கிங் நெனச்சுகிட்டு இருக்காரு போல.
சரி இப்போ Misery பத்தி........

Paul Sheldon ஒரு பிரபல எழுத்தாளர்.அவர் எழுதுற Misery அப்டிங்கற தொடர் நாவல்கள் பெண்கள் மத்தியில ரொம்ப பேமஸ்.அவரு கதை எழுத ஒரு ஒதுக்குப்புறமான ஊருக்கு போறாரு.ஒருநாள் இவர் ஒரு ஆக்சிடென்ட்ல சிக்கிக்குறாரு.அப்ப இவர காப்பாத்தி,ஒதுக்குப்புறமான தன் வீட்டுக்கே கொண்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்குறா Annie அப்டிங்கற ஒரு முன்னாள் நர்ஸ்.சுயநினைவுக்கு வந்த பின்ன தான் தெரியுது இவருக்கு கால்ல பயங்கரமான பிராக்சர் ஆகி இருக்குன்னு.ஆனா விஷயம் இத்தொட முடியல.பால் முக்கியமான சில விஷயங்கள தெரிஞ்சுக்கிராறு...
*அவரோட பிராக்சர் காம்பவுண்ட் பிராக்சர்.
*துணை இல்லாம அவரால பெட்ட விட்டு கீழ கூட எறங்க முடியாது.
*வலியக் குறைக்க ஆன்னி கொடுத்துட்டு இருந்த Novrel அப்டின்ற மாத்திர போதைப் பொருள் நிறைஞ்சது.
*பாலோட தீவிர ரசிகைகல்ல ஆன்னியும் ஒருத்தி.
*ஆன்னிக்கு மிசெரி நாவல் ரொம்ப பிடிக்கும்.முக்கியமா அந்த முக்கிய பாத்திரமான மிசெரிங்கற பொண்ண.
*ஓவர் டோசிங்னால தான் நோவ்றேலுக்கு அடிக்ட் ஆகி இருப்பது.
*ஆன்னிக்கு பிடிச்ச மிசெரி கேரக்டர தான் தன்னுடைய ரீசென்ட் ஆன நாவல்ல கொன்னது,அவளுக்கு தெரியாதது.
*இத எல்லாம் விட முக்கியமா,ஆன்னி ஒரு சாடிஸ்ட்,கொஞ்சம் கொஞ்சமா அறிவை இழந்துகிட்டு இருக்குற சைக்கோ அப்டின்னு.
மிசெரி கேரக்டர் சாகடிக்கப்பட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே ஆன்னி தன்னோட சுய ரூபத்த காட்ட ஆரம்பிச்சுடுவா.அவளுக்காக மட்டுமேன்னு அடுத்த மிசெரி நாவல எழுதனும்னு அவன கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுடுவா. முதல்ல என்ன மாதிரி ஒரு எழுத்தாளன கட்டாயப்படுத்தி எழுத வைக்க முடியாதுன்னு மறுக்குற பால்,பின்ன தன்னோட உயிரைக் காப்பாத்திக்க சம்மதிப்பான்.
ஆனா,பிரச்சனை முடியல,அப்பதான் ஆரம்பிக்குதுன்னு அவனுக்கு பின்னாடி தான் தெரியும்.ஆன்னி கொஞ்சம் கொஞ்சமா தன் அறிவ இழந்துகிட்டு இருக்கா அப்டிங்க்ரத அவளுக்கு அவளே ஏற்படுத்திக்கிற காயத்தின் மூலமா பால் தெரிஞ்சுக்க ஆரம்பிப்பான்.என்னதான் தான் நாவல் எழுதி முடிச்சாலும் தன்னோட உயிருக்கு எந்த உத்திரவாதமும் கிடையாதுன்னு அவனுக்கு புரியும்.இப்ப அவனுக்கு ரெண்டு பிரச்சனை.
ஒண்ணு,அவன் தன்னோட உயிருக்காக போராடணும்.
இத விட முக்கியமா அவன் தானும் கொஞ்சம் கொஞ்சமா பைத்தியம் ஆகாம இருக்கப் போராடணும்.
எப்படியாவது எஸ்கேப் ஆயிடணும்னு அவன் ஒரு தரம் முயற்சி செய்யுறப்ப தான் ஆன்னி வீட்ல போன் கெடயாதுன்னும்,அவ இருக்குற ஏரியால பல மைல்களுக்கு வேற வீடுங்களே கெடயாதுன்னும்,வேணுக்கும்னே தான் ஆன்னி அவன வீட்லயே சிறை பிடிச்சு வச்சு இருக்காங்கறதும் தெரிய வரும்.இதையும் மீறி தப்பிக்கணும்னு அவன் ஆசைபட்றான்,அவசரப்பட்றான்.ஆனா,அது அவ்ளோ சுலபம் இல்ல.ஏன்னா,அவன வழிக்கு கொண்டு வர அவ கிட்ட Novrel இருக்கு,ஊசி இருக்கு,இதுக்கெல்லாம் மேல கோடாலி ஒண்ணும் இருக்கு.......
நண்பர்களே,இந்த நாவல திட மனசு உள்ளவங்க மட்டுமே படிங்க.அவ்வளவு கொடூரம்.இது இதே பேர்ல ஹாலிவுட்ல படமா வந்தது.அது மட்டும் இல்லாம தமிழ்லயும் வந்துருக்கு.அது என்ன படம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல.ஆனா,இந்த புக்கோட கம்பர் பண்ணுனா அது பூனை,இது ரத்த வெறி பிடிச்ச புலி.தீம் என்னமோ psychological thrillerன்னாலும் புக் ரொம்ப gore ஆ தான் இருக்கு.
இந்த நாவல அவர் எழுதுனதுக்கு பின்னாடி ஒரு சின்ன கதை இருக்கு.இதுல பால் அவரு தான்.ஆன்னி,இவர் எழுத்து மேல வெறி பிடிச்சு இவர தொல்லையும்,அட்வைசும் கொடுத்து,இவர் தாங்க எதிர்பார்குற மாதிரி தான் எழுதனும்னு ஆர்டர் பண்ற ரசிகர்கள்.ஒரு கட்டத்துல தன்னோட வெறுப்ப பதிவு பண்ணவே இந்த புக்க எழுதுனார்.அதனாலேயே இது ரொம்ப fierce and raw.எழுத்து நடை அப்டியே அனல் தெறிக்கும்.அந்த பெட்ல கெடக்குற பால் நீங்கதான்னு நீங்க பீல் பண்ணவே ஆரம்பிச்சு,கதை போக போக ஆன்னி மேல வெறியும்,இந்த மாதிரி ஒரு நெலம எனக்கு வந்துரக்கூடாதுன்னும் வேண்டிக்கவே ஆரம்பிச்சுடுவீங்க.அங்க தான் அவரோட வெற்றியே இருக்குது.
என்னால இதோட இம்பாக்ட தமிழ்ல சரியா கொண்டு வர முடியல.இத விட இன்னும் டீப் இம்பாக்ட் வேணும்னு நெனக்குறவங்க இங்கிலீஷ்ல நான் முன்னாடியே எழுதுனத படியுங்க.
Paul sheldon,after getting caught up in an accident finds himself in the crutches of Annie,who is an ex nurse who takes him up to her isolated home and treats him.But that is not all about her.She is his die hard fan,likes very much his best selling Misery novel series and its heroine and also she is a lunatic.
Paul soon finds out that his leg fractures are worse and he is too weak.He also finds out that he is addicted to the painkiller Novrel which Annie has intentionally or unintentionally been feeding him.When Annie finds out that paul has killed up her much adored Misery character,she becomes enraged and all hell breaks loose.
She demands him to write a new novel just for her.At first,he declines.But,when he gets subjected to vivid and unsettling ‘punishments’ he decides better to accept to save himself.
He is not driven by hope but by fear. When he tries to escape once,she amputates one of his feet from his leg to ensure that he will not try to escape again.Paul soon finds out that Annie is on the verge of sanity who is ready to kill herself and him.Only thing stopping her from doing so is the novel.Paul has to fight for his life and for his own sanity.When he finds out that Annie has killed in her past so many times,he realises that she is not just a lunatic,but a psycho on the verge of slipping out .
Paul suffers five months of misery writing and true misery.He is no longer sure of his demise or his escape.He understands that to escape,he has to kill her.But this is not easy as she is very strong and he is too weak.
With just three characters in this novel,the author gives you the chilling creeps.Paul,Annie and terror.You try to cajole yourself that it is just a book.But,it claws and gnaws inside you.You might feel that the book is sick.In rising this feeling,author succeeds.You would like to put down the novel,but you could hardly do so.Your eyes will widen with horror,while your hands will grip the book harder with expectation.
Misery – Like a nail being banged to your head........hard,vulgar and excruciatingly vivid.

Comments

  1. - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......//

    ஏம்பா.. இப்படி பயமுறுத்தரே?..படிச்சுட்டு வந்து சொல்றேன்..

    ReplyDelete
  2. படிச்சே பயப்படுறவங்க இருக்காங்களா? அப்ப சரி

    ReplyDelete
  3. நான் பயப்படல பாஸ்...
    ஆனா சிலருக்கு இதுல வர்ற சில விஷயங்கள் ஒத்துக்க முடியாத மாதிரி இருக்கும்.நான் சொன்ன மாதிரியே இது ரொம்ப raw.
    உங்கள கதையோட சீக்கிரமே ஒன்ற வச்சுடுவாறு கிங்....
    அதனாலேயே இதோட இம்பக்ட் அதிகமா இருக்கும்.......

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க நண்பா,இது போல இன்னும் எங்களுக்கு அறிமுகம் செய்யவும்,ஸ்டீபன் கிங்கின் கதைகள் ஹாலிவுட்டில் படமாக எடுக்க ஆகச்சிறந்த மெடீரியல்.உதாரணம்:-
    ஷஷாங்க் ,த க்ரீன் மைல்.த ஷைனிங்,மேக்ஸிமம் ஓவர்டரைவ்,ஸ்லீப் வாக்கர்ஸ்.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. ஆகா துரை கொரிய படம் எல்லாம் பாக்குது, இங்கிலீசு புஸ்த்தகம் எல்லாம் படிக்குதுங்கே.

    நல்ல விமர்சனங்கள். முதல் நாவலில் அந்த ஒதுக்கப்படும் பாத்திரப்படைபும்,அதுனால எல்லாரையும் பழிவாங்குவது என்பதையும் ஊருக்குள்ள சொல்லியிராதீங்க. காப்பி படம் போட்டுருவாங்க.

    எழுத்தாளர் கதையும் மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நண்பரே,

    மிஸரி திரைப்படம் பார்த்திருக்கிறேன் படு கலக்கலான படம். பின்பு அதை தமிழில் ஒளி ஓவியர் இயக்கினார் என்று எண்ணுகிறேன். மிஸரி கதை, நகங்களுடன் சேர்த்து விரல்களையும் கடித்து துப்ப வைக்கும் ரகம். கிங்கின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது Pet Sematary, அதேபோல் Salems Lotம் விறுவிறுப்பும் திகிலும் கலந்து கட்டி அடிக்கும் வகை. துரதிர்ஷ்டவசமாக Insomnia நாவலிற்குப் பின்பாக அவர் நாவல்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் உங்களிற்கே தெரிந்திருக்கும். உங்களால் தமிழில் ஆங்கிலத்தை விட சிறப்பாக எழுத முடியும் என்றே எண்ணுகிறேன், நிதானமாக முயற்சியுங்கள் வெற்றி உங்களதே. சிறப்பான பதிவு.

    ReplyDelete
  7. பய ஒரு டைப்பாத்தான்யா இருக்கான்...

    ReplyDelete
  8. அட.. நம்ம ஜூலி கணபதி இத வச்சுதான் எடுத்தாங்களா??!!
    நல்ல பகிர்வு.. படிச்சுடறேன்.. ஆனா நீங்க சொல்றத பாத்தா, நைட்டு தனியா உக்காந்து படிக்க முடியாது போலவே..

    ReplyDelete
  9. எலேய் இலுமி... இங்கிலீஷ்லயும் நல்லாத்தாம்லே எழுதுத... விட்றாதலே...சும்மா எங்களுக்கு புரியணுமேன்னுட்டு தமிழ்லயும் எழுத சொன்னோம்! உனக்கு எதுல சுவையா சொல்ல முடியும்னு தோனுதோ அதுலயே எழுது... கொண்டாட நாங்க இருக்கம்லே!

    ReplyDelete
  10. //கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...//

    நண்பரே,கண்டிப்பா செய்யுறேன்......

    //பித்தனின் வாக்கு said...//

    ஏன் பாஸ்,இதுக்கு மேல இவனுங்க காப்பி அடிக்க எதாவது இருக்கா என்ன?உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி பூராத்தையும் ரவுண்டு கட்டி இல்ல காப்பி அடிச்சி இருக்கானுங்க.....

    //கனவுகளின் காதலன் said...//

    நீங்கள் சொல்வது உண்மை தான் நண்பரே.....
    கிங்கிடம் இப்போது சரக்கு காலி ஆகி விட்டது என்று பலரும் சொல்கிறார்கள்..என்னை ஆர்வப்படுத்துவது அவரது ஆரம்ப காலப் படைப்புகளே.இவர் எழுதிய வேறு நல்ல புக்ஸ் இருந்தால் சொல்லவும்.அப்புறம்,மிசெரி பத்தி.......
    நீங்கள் சொன்னது ரொம்ப சரி......

    அப்புறம்,தமிழில் எழுதுவது குறித்து......
    ஒரு சில விசயங்களை தமிழில் விளக்குவதை விட ஆங்கிலத்தில் விளக்குவது எனக்கு எளிமையாக இருப்பதாக உணர்கிறேன்.தமிழில் எனக்கு நையாண்டி வரும் அளவுக்கு சீரியஸா explain பண்ண வரலங்க்றது தான் உண்மை.இத சொல்றதுல எனக்கு எந்த கூச்சமும் கெடயாது.போகப் போக அதுவும் வரும்னு நம்புறேன்.

    //பாலாஜி said...//

    தல,பகல்லயே தனியா படிக்க முடியாது.செம சஸ்பென்ஸ் ஆன நாவல்.கதை போகப் போக,சூழ்நிலையும் பயமும் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் உடைச்சுப் போடுதுன்னு பாத்து ஷாக் ஆயிடுவீங்க.

    //ரோஸ்விக் said...//

    ஹீ ஹீ ஹீ....
    பின்ன உம்ம மாதிரி புத்திசாலிங்க கூட பழகனும்னா இப்டி ஏதாவது தெரிஞ்சு இருக்கணும்ல ரோசு...

    //ரெட்டை said...//

    யோவ் உமக்கு குசும்புயா....
    சிவனேன்னு இங்கிலிஸ்ல எழுதிகிட்டு இருந்த பயல பயமுறுத்தி தமிழ்ல எழுத சொல்லிட்டு இப்ப என்ன நக்கல் பண்றீரா?
    ஆனா நீரு சொன்னது ஒரு வகையில சரிதான் ரெட்டை.நாம இங்கிலிஸ்ல எழுதுற அழகுக்கு ஒரு பய படிக்க மாட்டான்.புரியுற மாதிரி எழுதணும்னா தமிழ்ல தான் எழுதணும்.
    அப்புறம் பிரண்ட்ஸ்......இன்னும் நெறைய நாவல்ஸ்,காமிக்ஸ்,பிலிம்ஸ் எல்லாம் இருக்கு பகிர்ந்துக்க.அதாவது நீங்க விருப்பப்பட்டா....

    ReplyDelete
  11. யோவ்..இலுமி..

    கலக்கற.. ஆமா Misery நாவல .. யாராவது தமிழல எழுதியிருக்கானுகோ..?

    ReplyDelete
  12. நான் படிக்கிற இங்கிலீசு புத்தகத்துல.. எழுத்தெல்லாம் கிடையாதுங்க. ஒரே படம் மட்டும்தான்.

    ஸ்டீபனாவது.. கிங்காவது?? :)

    ===

    மிஸரி பார்த்திருக்கேன். நம்ம பாலு சூடு போட்டுகிட்ட கதையாதான் இதை எடுத்திருப்பாரு. கூடவே ரம்யாவை.. நனைய விட்டு... கொடுமைடா சாமி.

    ==

    வழக்கமா... ஃபேமஸ் ரைட்டர்களின் முதல் கதை ரொம்ப நல்லாயிருக்கும். இவரு கொஞ்சம் வித்தியாசம் போல.

    சத்தியமா நேரம் கிடையாது. இருந்தாலும்... இவரு பேரையும்.. மனசுல போட்டு வைச்சிக்கிறேன்.

    ReplyDelete
  13. ★加入會員,立即享有點數回饋的優惠,讓您買的越多,省的越多எனக்கு இதான் புரிஞ்சது.

    ReplyDelete
  14. சுவாரஸ்யமான பதிவு !! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. Balu Mahendra made a movie "Julie Ganapathy" from this novel, misery.

    ReplyDelete
  16. நாவல்கள் படிக்கும் அளவிற்கு தற்போதைய வேலை நேரங்களில் பொருமை இருப்பதில்லை இலுமினாட்டி நண்பரே. ஆனால், ஸ்டீபன் கிங்கின் ஒரு சில நாவல்களை படித்திருக்கிறேன். கிலியை ஏற்படுத்தும் வகையில் கதையின் கட்டங்களை விளக்குவதில் கில்லாடி.

    மிஸ்ரி கதையை நான் மூல நாவலில் உணரவில்லை. பின்பு பாலுமகேந்திரா(?!) மொக்கைதனமாக இதை தான் ஒரு படமாக எடுத்தார் என்று கேள்விபட்டு விமர்சனங்கள் படித்திருக்கிறேன். நம் ஊர் மக்களுக்கு மூலத்துக்கு உரிமை கொடுக்காமல் காப்பி அடிப்பது ஒரு கெட்ட விவகாரம்.

    தமிழிலேயே தொடருங்கள்... ஆங்கிலத்தில் கூட அப்ப அப்ப பிட்டு ஓட்டலாமே :)

    ReplyDelete
  17. யோவ் இல்லு இந்த மாதிரி படம் எல்லாம் யாருப்பா உனக்கு ரெகமன்ட் பண்றா ? நல்லாத்தான் எழுதிருக்க

    ReplyDelete
  18. //ஹாலிவுட் பாலா said...//

    தல,இவரோட முதல் நாவல் carrie நல்லா தான் இருக்கும்.ஆனா அமெச்சூர் அப்டிங்க்ரதுனால அவ்ளோ நல்ல ப்ளோ இருக்காது.எழுத்து நடை கொஞ்சம் பரவா இல்லாம தான் இருக்கும்.ஆனா,அதுக்காக மொக்கைன்னு சொல்ல முடியாது.

    Rafiq Raja said...

    //கிலியை ஏற்படுத்தும் வகையில் கதையின் கட்டங்களை விளக்குவதில் கில்லாடி.//

    உண்மை தான் நண்பரே.

    //தமிழிலேயே தொடருங்கள்... ஆங்கிலத்தில் கூட அப்ப அப்ப பிட்டு ஓட்டலாமே :)//

    எங்க பாஸ்,அப்பப்போ பீட்டர் விடலாம்னு பாத்தா இந்தப் பசங்க எல்லாம் சேந்துகிட்டு என்ன வச்சு காமெடி பண்ணிடுரானுங்க.

    //யோவ் இல்லு இந்த மாதிரி படம் எல்லாம் யாருப்பா உனக்கு ரெகமன்ட் பண்றா ? நல்லாத்தான் எழுதிருக்க//

    யோவ் மங்குனி.நீரு மன்குனின்னு மறுபடியும் நிரூபிச்சிட்டீறுயா.யோவ்,நான் படத்தப் பத்தி எழுதலையா.நாவல பத்தி எழுதி இருக்கேன்.

    ReplyDelete
  19. படிச்சுப் பார்த்தாத் தான் தெரியும்..

    நன்றி..

    ReplyDelete
  20. இலுமி.. என்னாச்சு.. புது பதிவு?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........