My Little Bride - A Review.



-->
My little bride 2004 இல் வெளிவந்த ஒரு கொரியன் படம்.பொதுவாவே கொரியன் படங்கள்
romantic comedy டைப் தான் நெறைய வரும்.இதுவும் அதே.
பொதுவா கொரியன் ரொமாண்டிக் படங்கள்ல மொக்கையா ஒரு ஹீரோ,படு சூப்பரான
ஒரு ஹீரோயின்,அவங்களுக்கு உள்ள நடக்குற மோதல்,மோதல் கலந்த காதல்
அப்டின்னு ஒரு formula இருக்கு.ஆனா,கதையே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்
இதுல.


சுருக்கமா சொல்லனும்னா,ஒரு வயசுப்பையனுக்கும் ஒரு 15 வயசுப் பொண்ணுக்கும்
கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சா என்ன ஆகும்க்றது தான் கதை.ஆனா இத
விரசமில்லாம humor கலந்து சொல்லி இருக்காங்க.


கதையோட நாயகன் ஒரு playboy.அவனோட இன்ட்ரோவே அவன் ஏர்போர்ட்ல ஒரு
பொண்ண மடக்க ட்ரை பண்ணி அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு தெரிய
வந்து,மொக்க வாங்குறதுல தான் ஆரம்பிக்குது.ஒரே சீன்ல நமக்கு ஹீரோ பத்தி
தெரிஞ்சும் போயிடுது.இவனுக்கு இன்ட்ரோ இப்டின்னா ஹீரோயினுக்கு இன்னும்
அழகு.ஹீரோயின் திரும்பி நிக்கிறப்போ வேனுக்கும்னே செல்ல கீழ போட்டுட்டு
போவான் ஹீரோ(எதுக்கா?இன்னும் ரொம்ப வளரணும் தம்பி நீயி).அவ அத எட்டி
உதச்சுட்டு,ஹீரோவ பேரு சொல்லி கூப்பிட்டு ‘நீ இன்னும் திருந்தவே இல்லையா’ன்னு
பரேடு விடுரதுல ஆரம்பிக்கும்.இதுல ஆரம்பிச்சு ரெண்டு பேரும் சண்டை போடுறதும்
கலாட்டா பண்றதும் நிக்கவே நிக்காது.


சரி கதைக்குள்ள போவோம்.ஹீரோயினோட(San Boeun) தாத்தாவுக்கு உடம்பு சீரியசா
இருக்குன்னு அவசரமா ஹீரோ(Sang Min) கொரியா வந்து இறங்குரதுல ஆரம்பிக்கிது
படம். ஹீரோவோட பாமிலியும்,ஹீரோயின்னோட பாமிலியும் ஒண்ணுக்குள்ள
ஒண்ணா,ரெண்டு தலைமுறையா சேந்து வாழுற குடும்பம்.அதனால, ஏர்போர்ட்ல
பிக்-அப் பண்ண ஹீரோயின அனுப்பி இருப்பாங்க.


வீட்டுக்கு போய் தாத்தாவ பாத்தா அவரு பெரிய குண்ட தூக்கி ஹீரோ,ஹீரோயின்
ரெண்டு பேரு தலையிலயும் போடுவாரு.அதாவது,அவரும் அவரு பிரண்டும்(Sang Min
ஓட தாத்தா) ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தங்களுக்கு பிறக்குற குழந்தைங்களுக்கு
கல்யாணம் பண்ணி வக்குறதா முடிவு பண்ணிகிட்டதாகவும்,ரெண்டுமே ஆம்பளயா
போனதால முடியாம போனதாவும் சொல்லிட்டு,sang and boeun அ கல்யாணம் பண்ணி
பாத்தா தான்,தன்னோட பிரண்டுக்கு தான் கொடுத்த வாக்குறுதி நிறைவேரும்னும்
சொல்லுவாரு.தன்னோட உடல் நிலை மோசமா இருக்குறதுனால உடனே அத
நடத்தனும்னும் சொல்வாரு.


ரெண்டு பேருக்கும் ஷாக் ஆயிடும்.பின்ன,பொறந்ததுல இருந்தே எலியும் பூனையுமா
சண்டை போட்டுக்கிட்டு,கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தவங்கள போயிட்டு
கல்யாணம் பண்ணிக்கங்கடான்னா,மெர்சல் ஆக மாட்டாங்களா என்ன.ஹீரோ,எனக்கு
இப்ப, அதுவும் இவளோட கல்யாணம் வேணாம்னுட்டு ஓடிடுவான்.Boeun இந்த சின்ன
வயசுல கல்யாணம் பண்ண மட்டேன்னு சொல்லிடுவா.இவங்க ரெண்டு பேரையும்
வழிக்கு கொண்டு வர அந்த fraud தாத்தா,ஹாஸ்பிடல்ல போய்
படுத்துகிட்டு,மரணப்படுக்கை நாடகம் எல்லாம் போடுவாரு.


கடைசியா ரெண்டு பேரும் ஒத்துக்குவாங்க.ரெண்டு பேருக்கும் கல்யாணமும்
நடந்து,ஹனிமூனுக்கும் அனுப்பிடுவானுங்க(ஒண்ணுமே நடக்கப்படாதுங்கற
கண்டிஷனோட). ஆனா,flightலேயே ஹீரோவுக்கு கடுக்கா கொடுத்துட்டு ஹீரோயின்
நைசா எஸ்கேப் ஆயிடுவா.ஹனிமூன தனியா ஹீரோ ‘கொண்டாடிகிட்டு’
இருக்குறப்போ,வீட்டுக்கு தெரியாம தன்னோட புது boyfriend ஓட சுத்திகிட்டு இருப்பா

Boeun.


கொஞ்ச நாள்ல தான் தெரிய வரும்,ஹீரோவும் ரொம்ப வருசத்துக்கு முந்தி இருந்தே
ஒரு பொண்ணு மேல கண்ணா இருக்கான்ங்க்றது.இதெல்லாம் விட கொடும
என்னன்னா,இவனுங்களுக்கு நடந்த கல்யாணத்த இவனுகளே மதிக்க
மாட்டானுங்க.ஆனா,இவனுங்க ஆத்தா அப்பனுங்க கர்ம சிரத்தையா தனி வீடு பிடுச்சு
கொடுப்பானுங்க(ஹீரோயின் டிகிரி வாங்குற வரைக்கும் சுத்த பத்தமா இருக்கனும்க்ர
கண்டிஷனோட).இந்த கூத்துக்கு நடுவுல ஹீரோயின் ஸ்கூலுக்கும் போகனும்க்றது
தான் செட்அப்பே.(யோவ்!டபுள் மீனிங் எல்லாம் இல்லைய்யா.இது வரைக்குமே சந்தி
சிரிச்சு கெடக்கு).


இந்த கூத்து எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சதா,யாரு யாரு கூட சேந்தாங்க அப்டிங்க்றது
தான் மிச்ச கதை.


முத பாதியில ரெண்டு பேரும் சண்டை போட்டுகுறது,கல்யாணத்த பத்தி பெஸ்ட்
பிரிண்ட்ஸ் கிட்ட புலம்புரதுன்னு காமெடியா போன படம்,ரெண்டாவது பாதியில
இவங்க ரெண்டு பேரும் தனி வீட்ல அடிக்குற ஜாலி கூத்துனு (டீசண்டா) குஜாலா
போகும்.


பின் குறிப்பு: மக்கா,இது மேட்டர் படம்னு நெனச்சு ஏமாந்துராதிங்க.ஒரு பிட்டு கூட
கெடயாது.


ஹீரோவா Kim Rae Won.ஆளு செம ஸ்மார்ட்.அசால்டான playboy கேரக்டர்ல
அசால்டாவே பின்னி இருக்காரு.பொண்ணுங்க பின்னாடி அலையறதும்
,வலியுறதும்,சலம்புறதும்,beounகிட்ட லொள்ளு பண்றதும்,உருகறதும் மனுஷன்
கெத்து.


ஹீரோயினான Moon Geun Young .பயங்கர cute.நொடிக்கு ஒரு expression காட்டி நம்மள
அசரடிக்குரதுல இருந்து அந்த குழைந்தைத்தனமான நடிப்புலயும்,அழகுலயும் நம்மள
கிறங்க அடிக்குற வரைக்கும்னு இந்த பொண்ணு பாக்குறப்போ எல்லாம் நம்மகிட்ட
உள்ள எதையோ எழுப்புதுங்க.(யோவ்!நான் ஆசைய சொன்னேன்).


ஹீரோ ஹீரோயினுக்கு நடுவுல இருக்குற கலக்கல்,கலாய்த்தல் chemistry
அதகளம்.ஜாலியான கவித மாதிரியான படத்துக்கு,emotional கவித மாதிரி பிட்டிங்
கிளைமாக்ஸ்.அப்புறம்,நம்ம தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு....


யோவ்!அவனவன் லவ்வ எப்டி எல்லாம் சொல்றான்.நீங்க இன்னும் குண்டு
சட்டிக்குள்ளேயே குதுரய ஓட்டிகிட்டு.... கொஞ்சம் திருந்துங்க அய்யா....

My little Bride – So very cute.

Comments

  1. எல்லாமே ஃபார்முலாதானா..,

    ReplyDelete
  2. நல்லா எழுதிருக்க மச்சி..எடைல எடைல வர்ற ஆங்கில வார்த்தைகள் விமர்சனத்தோட வேகத்த கொஞ்சம் குறைக்கற மாதிரி ஒரு பீல் வருது..அத மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோ...!!

    ReplyDelete
  3. Suresh @:

    அட,நம்ம ஊருல 4 பைட்டு , 2 குத்து பாட்டுன்னு இவனுங்க பண்ற அட்டகாசத்துக்கு இந்த காமெடி பார்முலா எவ்வளவோ பரவாஇல்ல தல...

    ReplyDelete
  4. Veli @:

    என்ன பண்றது மக்கா,இங்கிலிஸ்ல எழுதிகிட்டு இருந்த பயல தமிழ்ல எழுத விட்டா கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள் இருக்கத்தான் செய்யும்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.போக போக சரி பண்ணிடலாம்.

    ReplyDelete
  5. ரொம்ப எழுச்சியான படமா இருக்கும்போல இருக்கே.. (யோவ் நான் ஃபீலிங்ஸ சொன்னேன்) :))

    ReplyDelete
  6. நண்பரே,

    ஜாலியான விமர்சனம். தொடருங்கள்.

    ReplyDelete
  7. சா நி ரேஜ்ஜில உலக படமா? ம்ம்ம்ம்ம்ம்ம்.

    ReplyDelete
  8. தமிழ் நாடு உருப்பட்டுரும் ... வாழ்க உம் கலை சேவை...

    ReplyDelete
  9. மக்கா,சும்மா குசும்புக்கு அப்டி சொல்லி இருக்கேன்.படம் உண்மையிலேயே நல்ல படம் தான்.காமெடி ட்ரீட்.முன்னயே சொன்ன மாதிரி படத்துல ஆபாசம் கிடையவே கெடயாது.படம் கொஞ்சம் செக்ஸியா இருக்கும் அவ்ளோ தான்.அட என்ன பாஸ்,மானாட மயிலாட பாக்குறிங்க இல்ல,அத விட எல்லாம் இது மோசமா இருக்காது.Emotional romantic comedy தான் சார் படமே.தாராளமா ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.டாப் மோஸ்ட் பேமஸ் கொரியன் படங்கள்ல இதுவும் ஒண்ணு.torrent தாராளமா கிடைக்குது.

    ReplyDelete
  10. நண்பரே,

    ஏற்கனவே நானும் நம்ம லக்கியும் (யுவ கிருஷ்ணா) கொரியன் மொக்கை பட பரம விசிறி கிளப் ஒன்று ஆரம்பித்து உள்ளோம். நீங்களும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. நண்பரே,

    மொக்கை படங்களை தவிர நான் ரசித்த பல திரைப்படங்கள் கொரிய மொழியில் தான் வந்தவை. உதாரணமாக நம்ம ஓல்ட் பாய் என்று ஒரு படம். பாத்து இருக்கீங்களா? மிஸ் பண்ணவே கூடாத ஒரு படம் அது.

    ReplyDelete
  12. இந்த படம் யார் கொடுத்து பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால் படம் நினைவிருக்கிறது.

    நல்ல விமர்சனம். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  13. //அப்புறம்,நம்ம தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு....

    யோவ்!அவனவன் லவ்வ எப்டி எல்லாம் சொல்றான்.நீங்க இன்னும் குண்டு

    சட்டிக்குள்ளேயே குதுரய ஓட்டிகிட்டு.... கொஞ்சம் திருந்துங்க அய்யா....//

    நண்பரே, இதனை மட்டும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நம்ம மொக்கை படங்களை தான் அவங்க இப்ப கமர்ஷியல் படங்களாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் நாம் பதினஞ்சு இருவது வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மொக்கை படங்களை இப்போதுதான் அவர்கள் கொரிய மொழியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதனால் இந்த கமெண்ட்டை கொஞ்சம் கவனிக்கவும்.

    ReplyDelete
  14. தமிலிஷ்'ல வோட்டு போட்டாச்சு தல.

    ReplyDelete
  15. இது ரொம்ப தப்புங்க

    ReplyDelete
  16. //இந்த கூத்து எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சதா,யாரு யாரு கூட சேந்தாங்க அப்டிங்க்றது

    தான் மிச்ச கதை.//

    இந்தக் கூத்து உங்க வீட்டுக்குத் தெரியுமா..? பாத்து தம்பி பத்திரம்...

    சுவராஸ்யமான பதிவு... ரொம்ப நல்லா வருவீங்க.. டௌன்லோட் பண்ண ட்ரை பண்றேன்..

    நன்றி..

    ReplyDelete
  17. நல்ல படம்..
    எனக்கு கொரியன் தெரியும் என்பது உமக்கு தெரியுமா?

    좋은 영화 .. 당신은 DVD를 .. Pls 속도 우편으로 보내 주셔서 감사합니다 .. 친구가 있나

    ReplyDelete
  18. King viswa sir,ungalukku munnadiye naan orkutla ellam fan clubla join panniyachu.

    ReplyDelete
  19. விஸ்வா சொல்வது முற்றிலும் சரி.

    முதல் சந்திப்பு, சத்தியம் வாங்கி உயிரை வாங்கும் தாத்தாகள், சண்டை காதலாக மாறுவது, ஒப்பந்தம் போட்டுகிட்டு கல்யாண வாழ்க்கை வாழ்வது என இதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு புதுசா என்ன?
    அட நம்ம தமிழ் படங்களை கூட கொரியன் மொழியில் டப் செய்து கொரியாவில் ஓட்டலாம் போல...

    ஆனாலும் கொரிய பெண்கள் இழுத்து இழுத்து பேசும் அழகே தனி

    ReplyDelete
  20. and regarding old boy,i've downloaded it.I am yet to watch it.It's sleeping in my lap for about 4 months. :)

    I'll watch it soon.

    ReplyDelete
  21. அடச்சே...my lap-பா... இல்ல லேப்டாப்பா..
    சரியா சொல்லுமையா...

    ReplyDelete
  22. I agree SIV....
    But there has not been a story like Oldboy or my sassy girl or Tae Guk Gi or 3 iron or spring,summer,autumn and winter in tamil. :)
    Whatever said, we've got to give koreans the credit they deserve.
    I like the way in which they approach love in a comedic manner.And you are right about korean girls too.He He He... :)

    ReplyDelete
  23. Thiya said...@

    ethu thappu boss..... :)

    ReplyDelete
  24. Boss,Laptop a thaan lap nu surukki solli irukkom...puriyuthaa?

    ReplyDelete
  25. பட்டாபட்டிக்கேவா?..
    நாங்க புரிஞ்சதானு கேக்க மாட்டோம்..
    ஏன்னா.. நாங்க சுருக்கறது அப்படி..
    பரவாயில்லை..

    கீழ.. விரிவான விளக்கம்... படிச்சுக்க அப்பு..

    அட. அப்டடியா?..
    அப்படீனா சரி.
    ஆனாலும் பதிவு சூப்பர்...

    ReplyDelete
  26. தமிழ்ல எழுதி .. எழுதி .. சுத்தமா இங்கிலீஸ் மறந்துடுச்சு..
    திரும்பவும்.. 26 எழுத்தையும் படிச்சனும் இலுமி சார்

    ReplyDelete
  27. அட்டைக்கத்திய வெச்சு சண்ட போடற மாறியிருக்கையா..
    மூனு கமென்ஸ் போட்டுட்டேன்..
    பதிலைக் காணோம்..

    எதுக்கும் நாளைக்கு குமற வரேன்..
    வரட்டா?

    ReplyDelete
  28. யோவ்.. உங்கூட உட்கார்த்து செஸ் ஆடனும் போல இருக்கையா..

    ஒரு கமெண்டுக்கு .. பதில் கமெண்ட் போட இவ்வளவு நேரன் எடுக்கற?..
    சரி .. எப்பம் சொல்லுவயே.. வேற வேலை இருந்ததுனு..

    அதையே பதிலா எடுத்துக்கிறேன் வரட்டா?

    ReplyDelete
  29. வரட்டானு சொன்னேன்..கேக்குதா இலுமி

    ReplyDelete
  30. பேசாமா.. என்னைய உள்ள வரமுடியாதமாறி பண்ணிடு..
    எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே மருந்து..."அஞ்சால் அலுப்பு மருந்து"

    ReplyDelete
  31. சரி சரி.. கோவிச்சுக்காத..

    நீரு தான் வந்து குமறச்சொன்னீரு.. அதுக்குத்தான்..

    ஹி...ஹி

    ReplyDelete
  32. சாப்புட போயிட்டேன் மக்கா,அதான் reply பண்ணல...இப்ப பண்ணிடலாம்.

    ReplyDelete
  33. //தமிழ்ல எழுதி .. எழுதி .. சுத்தமா இங்கிலீஸ் மறந்துடுச்சு..
    திரும்பவும்.. 26 எழுத்தையும் படிச்சனும் இலுமி சார்//

    சும்மா இந்த காமெடி எல்லாம் வேண்டாம்.டீசண்டா இனிமே தான் இங்கிலீஷ் படிக்கப் போறேன்னு சொன்ன என்ன?அதுக்கு இப்டி ஒரு பில்ட் அப் பா?நீரு திருந்தவே மாட்டீரா ஓய்.....
    ஆங்,அப்புறம்,நீரு இங்கிலீஷ் படிக்குற ஆசைய எல்லாம் விட்டுடும்.பாவம்,இங்கிலீஷ் தெரிஞ்ச பயலுகளாவது பிழைச்சு போகட்டும்.நீரு தமிழ்நாட்டு மக்களை படா படுதினது போதாது?

    ReplyDelete
  34. //பேசாமா.. என்னைய உள்ள வரமுடியாதமாறி பண்ணிடு..
    எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே மருந்து..."அஞ்சால் அலுப்பு மருந்து"//

    பாஸ்,உமக்கு அதெல்லாம் போதாது.உமக்கு ஏத்த மருந்து ஏன் கிட்ட இருக்கு.அது தான், எலி மருந்து.நாள பின்ன நீரு வர்றப்ப அத உமக்கு நைசா கொடுத்துட வேண்டியது தான்.

    ReplyDelete
  35. //and regarding old boy,i've downloaded it.I am yet to watch it.It's sleeping in my lap for about 4 months. :)//

    Kindly watch it, You will not regret watching it and you will start searching for Park's movies, Esp. the vengeance trilogy.

    two things: 1. Old Boy is a Comic Book first and then was made into a movie later. So, a comic book lover like you will definitely love it. Mail me, if you want the English version download links.

    2. Old boy was made in Hindhi as well. Titled Zinda,with Sanjay Dutt being the hero.

    ReplyDelete
  36. //ஒரு வயசுப்பையனுக்கும் ஒரு 15 வயசுப் பொண்ணுக்கும்//

    ஏன்பா அந்த ஊர்ல 1 வயசு பையனுகெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்களா?
    அப்புறம் இந்த படம் ஏதோ தமிழ் படத்த பாத்து ரீமேக் பன்னிருக்கானுகோ!!!!!!!!!

    ReplyDelete
  37. படிக்க நல்லாத்தேன் இருக்கு . . பார்க்கவும் அப்புடி இருக்குமா? :-)

    ReplyDelete
  38. King Viswa said...

    //அப்புறம்,நம்ம தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு....

    யோவ்!அவனவன் லவ்வ எப்டி எல்லாம் சொல்றான்.நீங்க இன்னும் குண்டு

    சட்டிக்குள்ளேயே குதுரய ஓட்டிகிட்டு.... கொஞ்சம் திருந்துங்க அய்யா....//

    நண்பரே, இதனை மட்டும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நம்ம மொக்கை படங்களை தான் அவங்க இப்ப கமர்ஷியல் படங்களாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் நாம் பதினஞ்சு இருவது வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மொக்கை படங்களை இப்போதுதான் அவர்கள் கொரிய மொழியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதனால் இந்த கமெண்ட்டை கொஞ்சம் கவனிக்கவும்.


    //

    தியாவின் பேனா said...

    இது ரொம்ப தப்புங்க


    ///

    இதைத்தான் சொன்னேன் தல
    நான்தான் அடுத்தடுத்து இருந்ததால கவனிக்காம விட்டுட்டேன்

    ReplyDelete
  39. //பட்டாபட்டி.. said...
    நல்ல படம்..
    எனக்கு கொரியன் தெரியும் என்பது உமக்கு தெரியுமா?

    좋은 영화 .. 당신은 DVD를 .. Pls 속도 우편으로 보내 주셔서 감사합니다 .. 친구가 있나//

    நீ சொன்னது மலையாளம்டா பன்னாட

    ReplyDelete
  40. @மங்குனி அமைச்சர் said...
    좋은 영화 .. 당신은 DVD를 .. Pls 속도 우편으로 보내 주셔서 감사합니다 .. 친구가 있나//
    நீ சொன்னது மலையாளம்டா பன்னாட
    //
    யோவ்.. மேல இருப்பது மலையாளம்னு எப்படியா கண்டுபிடிச்ச..?
    உன்னோட அறிவுக்கு.இந் நேரம்... நீ சீனியர் மங்குனியாயிருக்கனுமே..

    േന്ഹ്താ ന൤്രു.. വഹ്ന്താ സവട്ടി സവാട്ടി അടിക്കുമ..

    கண்ணாடியப் போட்டுட்டு படி..

    ReplyDelete
  41. Karundel said..... @

    you bet,my friend... :)

    ReplyDelete
  42. நீ இப்புடி தமிழ்-ல அழகா விமர்சனம் பண்ணினா நாங்க படிக்கப்போறம்... அதை விட்டுட்டு புடிக்காத மொழில போட்டு எனக்கு கிறுக்குப் புடிக்க வைக்கிறீயே ராசா...

    ReplyDelete
  43. //அந்த fraud தாத்தா,ஹாஸ்பிடல்ல போய்

    படுத்துகிட்டு,மரணப்படுக்கை நாடகம் எல்லாம் போடுவாரு//

    என்னையா... இந்த தாத்தா, நம்ம கருணையில்லா... நிதி தாத்தா போல ஆக்டு குடுப்பாரு போல...

    ReplyDelete
  44. அந்த பொண்ணு நல்லா இருக்குயா... கொரியன் படுத்துள நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா... (நானும் அந்த டொக்கு ஹீரோ மாதிரி இருப்பேன்)

    ReplyDelete
  45. //பட்டாபட்டி.. said...
    அட்டைக்கத்திய வெச்சு சண்ட போடற மாறியிருக்கையா..
    மூனு கமென்ஸ் போட்டுட்டேன்..
    பதிலைக் காணோம்..//

    இலுமு என்ன ஆளுயா நீ... நம்ம பட்டுவை இப்புடி தனியா பொலம்ப விட்டுபுட்டு போயிட்டே... வேற எதுவும் புரியா (கொரியா) மொழி படம் பாக்க போயிட்டியா??

    ReplyDelete
  46. //யோவ்.. மேல இருப்பது மலையாளம்னு எப்படியா கண்டுபிடிச்ச..?
    உன்னோட அறிவுக்கு.இந் நேரம்... நீ சீனியர் மங்குனியாயிருக்கனுமே..

    േന്ഹ്താ ന൤്രു.. വഹ്ന്താ സവട്ടി സവാട്ടി അടിക്കുമ..//

    பட்டு அண்ணே... என்ன இருந்தாலும் நீங்க மன்குனிய இப்புடி மலையாளத்துல கேட்ட கேட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டக்கூடாது... எனக்கு மலையாளம் புரிஞ்ச மாதிரி... அவருக்கும் புரிஞ்சிரிந்தா... இந்நேரம் என்ன ஆயிருக்கும்... அடேங்கப்பா... முடிவ யோசிச்சுப் பாக்குறப்பவே ரொம்ப பயங்கரமா இருக்குண்ணே...

    ReplyDelete
  47. பட்டு அண்ணே... என்ன இருந்தாலும் நீங்க //மன்குனிய இப்புடி மலையாளத்துல கேட்ட கேட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டக்கூடாது... எனக்கு மலையாளம் புரிஞ்ச மாதிரி... அவருக்கும் புரிஞ்சிரிந்தா... இந்நேரம் என்ன ஆயிருக்கும்... அடேங்கப்பா... முடிவ யோசிச்சுப் பாக்குறப்பவே ரொம்ப பயங்கரமா இருக்குண்ணே...//

    தக்காளி எல்லாம் ஒரு க்ரூபாதான்யா அலைறானுக
    थक्काली येल्लाम ओरु गुरूपा ठांय अलैरानुका

    ReplyDelete
  48. // நீ இப்புடி தமிழ்-ல அழகா விமர்சனம் பண்ணினா நாங்க படிக்கப்போறம்... அதை விட்டுட்டு புடிக்காத மொழில போட்டு எனக்கு கிறுக்குப் புடிக்க வைக்கிறீயே ராசா...//

    என்னது?அழகான விமர்சனமா?அடப் போங்க பாஸ்.....என்ன வச்சு காமெடி எல்லாம் பண்ணாதிங்க....:)

    // என்னையா... இந்த தாத்தா, நம்ம கருணையில்லா... நிதி தாத்தா போல ஆக்டு குடுப்பாரு போல...//

    பாஸ்,அந்த தாத்தாவாவது ஒரு நல்ல காரியத்துக்காக ஆக்ட் கொடுத்தாரு.ஆனா,இவரு........ எல்லாம் காலக் கெரகம்.....

    // அந்த பொண்ணு நல்லா இருக்குயா... கொரியன் படுத்துள நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா... (நானும் அந்த டொக்கு ஹீரோ மாதிரி இருப்பேன்)//

    பாஸ்,நானே நாக்க தொங்க போட்டுக்கிட்டு சான்ஸ் கிடைக்குமான்னு பாக்குறேன்,நீரெல்லாம் எனக்கு அடுத்து தான்.அப்புறம்,நீரு டொக்குன்னு நீரு சொல்லி தெரிய வேண்டியதில்ல.... :P

    ReplyDelete
  49. யோவ்,நானும் பாக்குறேன்,ஏதோ கொரியன் படத்த பத்தி பதிவு போட்ட ஒரே குத்தத்துக்கு ஆளாளுக்கு ஒரு மொழியில கமெண்ட் போட்ரிங்க...
    இது இப்படியே போச்சு,தக்காளி,அப்புறம் நான் பழையபடி இங்கிலிஷ்லையே எழுத ஆரம்பிச்சுடுவேன்.பின்ன ஒரு பய உயிரோட இருக்க முடியாது,ஆமா....... :)

    ReplyDelete
  50. ரொம்ப சூப்பர் இலுமி, படம் எப்படின்னு தெரியாது ஆனா உங்க விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு. காமெடிப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    பிடிச்சு இருக்கு....... அட அந்தப் பொண்ணு புச்சுருக்குன்னு சொன்னேன். நான் எல்லாம் அங்கிலப் படத்தை வசனம் இல்லாமல் தான் பார்க்கும் வழக்கம்.
    அதுக்கு இரண்டு காரணம். 1 எனக்கு ஆங்கிலம் புரியாது.2. அட அதுக்கு எதுக்கு வசனம் எல்லாம் படம் பார்த்தா போதுமே. அப்புறன் அங்கன வசனம் எல்லாம் கிடையாது சவுண்ட் எபேக்ட்தான். நன்றி.

    ReplyDelete
  51. gowthamraj
    கொரியன கொஞ்சம் பொரியல் பண்ணி இருக்கீங்க சுவையா தான் இருக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........