Sunday, February 22, 2015

Massimo Carlotto–The Dark Horse of Mediterranean Noir….

 

hasta-nunca-mi-amor-de-massimo-carlotto

நுவார் கதைகளை பற்றி பலர் அறிந்திருக்கலாம். Dashiel Hammett, Raymond Chandler, Michael Cain, James Ellroy என்று பல எழுத்தாளர்கள் முத்திரை பதித்த களம் அது. சமீப காலத்தில் அதற்கு இணையாக (அல்லது வன்முறையில் அதற்கும் மேலான) ஒரு புதிய களமாக Mediterranean Noir உருப்பெற்று வருகிறது. கொலை, கொள்ளை, வஞ்சகம், ஊழல், வன்முறை, சமூகத்தின் மீதான கோபம், cynicism இவற்றின் பண்புகள்.

இவ்வகையான கதை ஆசிரியர்களில் பிரபலமான ஒருவர் மாசிமோ கார்லோட்டோ. அமெரிக்க நுவார் கதைகள், கிரைம் கதைகள் போல் இல்லாது வன்முறை இவருடைய கதையில் ஒரு சராசரி அங்கம். அதற்கான ஞாயப்படுத்துதல்களோ, காரண காரியமோ, சரித்திரமோ இவருடைய கதையில் இருக்காது. பொளேர் என்று கன்னத்தில் அறைந்து விட்டு 'த்தா என்ன பாக்குற' என்பதே இவருடைய எழுத்து நடை. அமெரிக்க கதைகளை போல 'அவன் சின்ன பையனா இருக்கயில.....' என்பது மாதிரியான எந்தக் கருமமும் இவர் கதைகளில் இருக்காது. இவர் கதைகளில் ஹீரோக்கள் கிடையாது. நல்லவர்கள் அறவே கிடையாது. கதாநாயகர்கள் மேல் இரக்கமோ, பரிதாபமோ, நட்புணர்ச்சியோ சுத்தமாக ஏற்படாது. இவர்களுடைய வாழ்க்கையில் வன்முறை ஒரு சராசரியான விஷயம். அதற்கு காரணம் கிடையாது, விளைவுகள் கிடையாது. It just is. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதை, வன்முறை, அடிதடி எல்லாம் சர்வ சாதாரணம். எந்த அளவுக்கு என்றால் கதையில் வரும் Bondage கட்டத்திற்கு Grace Slick பாட்டை பேக்கிரௌண்டாக வைக்கும் அளவுக்கு. அதிலும் "பெல்லக்ரிணி (Pellegrini)" என்ற ஹீரோ(வில்லன்) கதை என்றால் இதெல்லாம் ஒரு படி தூக்கலாகவே இருக்கும்.

கார்லோட்டோவின் கதைகளில் இத்தாலிய சமூகம், இத்தாலிய மாபியாவின் இன்றைய நிலை, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள், ஊழல், நீதித்துறையின் நீதியற்ற தன்மை போன்றவையே அதிகமாக காணப்படும். வன்முறை ஒரு பக்கத்துக்கு ஒரு முறை வரும். சும்மா வார்ன் பண்ண காலை உடைத்தேன் என்றெல்லாம் சர்வ சாதாரணமாக கதாநாயகர்கள் கதைப்பார்கள். செய்யாத குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு, தப்பித்து ஓடி, பிடிபட்டு, சித்திரவதை அனுபவித்து, பல வருடங்கள் ஜெயிலில் இருந்து, கோர்ட் கேசில் போராடி, வெளிவந்து எழுத்தாளர் ஆனவர் கர்லோட்டோ. சிறையில் கேட்ட கதைகள், பார்த்த விஷயங்கள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இவருடைய கதைகள் முழுக்கவும் இருக்கும் என்பதால் இதில் எந்தவிதமான பூச்சூற்றல்களோ, தத்துவங்களோ இருக்காது. இவருடைய கதைகள் எதுவும் இருநூறு பக்கத்திற்கு மேலாக இருந்து நான் பார்த்ததில்லை. ஒரு வார்த்தை கூட வீணடிக்கபட்டிருக்காது. கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் போன்ற moral justifications எல்லாம் அறவே இருக்காது. ஆனால் விறுவிறுப்பு இருக்கும். Grittiness இருக்கும். நுவார் ரசிகர்களும், வன்முறை விரும்பிகளும், எதற்கும் எளிதில் அசராதவர்களும் நிச்சயமாக படிக்க வேண்டிய எழுத்தாளர்.

 

An interview of Massimo Carlotto.
http://www.theguardian.com/.../jan/30/crimebooks.features

 

That song.
https://www.youtube.com/watch?v=rnyMaD9oT7k

 

His Bibliography.

http://www.europaeditions.com/search-result.php?search-action=books&IdAutore=4

Tuesday, January 13, 2015

Punisher Max in Tamil.... (18+)

Marvel Comics வெளியிட்ட 18+ சீரிஸ் Max Imprint. Max Imprint denotes the maximum violence and the abundance of swear words. இது வயது வந்தவர்களுக்கு மட்டுமேயான  18+ வரிசையில் விற்கப்பட்டது. சில நேரங்களில் Direct Sales இல் மட்டுமே விற்கப்பட்டது. நிச்சயம் சிறுவர்களுக்கானது அல்ல.

பனிஷர் மேக்ஸ் கதைத்தொடரில் மொத்தம் 75 கதைகள் வெளியாயின. அவற்றில் முதல் 60 கதைகள் Preacher புகழ் கதாசிரியர் Garth Ennis எழுதியவை. இந்த பனிஷர் மேக்ஸ் தொடரின் quality அவருடைய கதைகளில் மட்டுமே உண்டு. இந்த max imprint இல் வெளிவந்த பிற கதைகள் பனிஷர் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதைப் பற்றி ஆதிகாலத்தில் இங்கே வெளியான பதிவு நினைவில் இருக்கலாம்.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

இத்தொடரின் முதல் ஆறு கதைகள் சேர்ந்த முதல் கதைத்தொடரை சமீபத்தில் Facebook இல் தமிழில் வாசகர் மொழிபெயர்ப்பில்(scanlation) காண முடிந்தது. அவற்றிற்கான லிங்க் இங்கே.

எச்சரிக்கை: அதிகபட்ச வன்முறை காட்சிகளும், வன்வார்த்தைகளும் நிறைந்த கதை. சிறுவர்களுக்கானது அல்ல.

Remove the space and the replace * with .

லிங்க்கில் இருக்கும் ஸ்பேசை எடுத்துவிட்டு, * க்கு பதிலாக புள்ளி வைத்துக் கொள்ளவும்.

Links:

PMax – Tamil 1 – CBR
Link – http://www* mediafire *com/download/mczv852678v6vnv/PMax_-_Tamil_1.cbr

PMax – Tamil 1 – PDF


Link – http://www* mediafire *com/view/kf1fvydmadrr517/PMax_-_Tamil_1.pdf


PMax – Tamil 2 – CBR


Link – http://www* mediafire *com/download/xn79s0tnss4ibmd/PMax_-_Tamil_2.cbr


PMax – Tamil 2 – PDF


Link – http://www* mediafire *com/view/a1cx5exof8i1958/PMax_-_Tamil_2.pdf


PMax – Tamil 3 – CBR


Link – http://www* mediafire *com/download/g5tw35juib2wrbj/PMax_-_Tamil__3.cbr


PMax – Tamil 3 – PDF


Link – http://www* mediafire *com/view/247a38u4xk3vvh2/PMax_-_Tamil__3.pdf


PMax – Tamil 4 – CBR


Link – http://www* mediafire *com/download/11k6haa1tf7798r/PMAX_-_Tamil_4.cbr


PMax – Tamil 4 – PDF


Link – http://www* mediafire *com/view/tgc23c9yoci18yi/PMax_-_Tamil_4.pdf


PMax – Tamil 5 – CBR


Link – http://www* mediafire *com/download/bru609uez0w1cu8/PMAX_-_Tamil_5.cbr


PMax – Tamil 5 – PDF


Link – http://www* mediafire *com/view/uqitxdiz6jj4k1r/PMax_-_Tamil_5.pdf


PMax – Tamil 6 – CBR


Link – http://www* mediafire *com/download/1ztjbu6k0j821bc/PMax_-_Tamil_6.cbr


PMax – Tamil 6 – PDF Link –

http://www* mediafire *com/view/giqd6w1nv4g6b61/PMax_-_Tamil_6.pdf

இது போக வெளியிடப்பட்ட மற்ற கதைகள்:


http://www* mediafire* com/download/b5sq5zqtit53p9e/Dylan_Dog__-_Johnny_Freak_(2001)_(Tamil).cbr

Dylan Dog – PDF File
Link – http://www* mediafire
*com/view/266pvuxoy5y0iub/Dylan_Dog__-_Johnny_Freak_2001_-_Tamil.pdf

Chicken with plums.

http://www* mediafire* com/download/qcrv6a4jqq6fhwp/Chicken_With_Plums_-_Tamil.cbr

PDF File Link – http://www* mediafire
*com/view/gfp74rui24kcurc/Chicken_With_Plums_-_Tamil.pdf
Chicken with Plums பற்றிய விமர்சனங்களை இங்கே படிக்கலாம்.


Disclaimer: No copyright infringement intended. This post is only intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if you like it.

Sunday, December 7, 2014

Feminism and societal dichotomy of sexes....

There was a discussion in the facebook group "Reflections" about the previous post. Here is the link for it. The group is an open group. So you need not be a member to read the comments. I am thinking of writing an article later. But in the meantime, this is just an update. If do write it, I'll remove this post and replace it with the new one. You can post your opinions in the comments below or in the actual discussion in fb. Have fun fellas.


https://www.facebook.com/groups/113739122115070/permalink/407007279454918/

Wednesday, December 3, 2014

The Narcissism Epidemic….

 

confidence-cat-mirror-lion-self-image

சில மாதங்களுக்கு முன்னர் “Reflections” ஃபேஸ்புக் க்ரூப்பில் ஒரு நீயா நானா வீடியோ பற்றிய விவாதம் நடந்தது. அந்த வீடியோ “நீங்கள் எப்படியெல்லாம் propose செய்யப்பட விரும்புகிறீர்கள்” என்று இளம் பெண்களிடம் கேட்டு அதற்கான அவர்களின் பதில் பற்றியது. அதற்கு வந்த பதில்கள் விசித்திரமானதாக மட்டுமல்லாமல் கவலைக்குரியதாகவும் இருந்தது. பெரும்பாலான பெண்களின் பதில், “சென்னையின் மொட்டை வெயிலில் கோட் சூட் போட்டுக் கொண்டு, ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டில் வைத்து, ஆயிரம் பேருக்கு மத்தியில், பேக்கிரௌண்ட் மியூசிக்குடன், ரோஸ் சாக்கலேட் உடன், முட்டி போட்டு, ப்ரோபோசல் ரிங் கொடுத்து, காதலிப்பாயா என்று கேட்காமல் என்னை கல்யாணம் செய்து கொள்வாயா” என்று கேட்க வேண்டும் என்பதாக இருந்தது. வெட்டியாக இருக்கும் போதெல்லாம் யூட்யூபில் ப்ரோபோசல் வீடியோஸ் பார்த்து கெட்டுப் போன கும்பல் இது என்று எளிதில் புறந்தள்ளி விட முடியாத அளவுக்கு இருத்தது  மிச்சப் பெண்களின் பதில். இந்த அளவுக்கு ரெஸ்டாரன்ட் செட்டிங் கேட்காத பிற பெண்கள் கூட இரண்டு விசயங்களில் ரொம்பவே தெளிவாக இருந்தார்கள். “ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் வைத்து” மற்றும் “நான், நான், நான், நான் மட்டுமே!”

மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் “எங்களை மகாராணி போல நடத்து” என்பதாக இருந்தது இவர்கள் பதில். வெஸ்டர்ன் கலாசாரத்தின் ஆதிக்கமும் அதைப் பற்றிய அரைகுறைப் புரிதலுமே இதற்கெல்லாம் காரணம் என்ற எண்ணம் முதலில்  தோன்றினாலும், இதற்கான காரணம் அது மட்டுமே அல்ல. விவாதத்தில் பற்பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. “யூட்யூப் பார்த்து நாசமா போன கும்பல்” என்பதில் ஆரம்பித்து, “மட்டமான சினிமா பார்த்து கெட்டுப் போன கும்பல்” என்பதில் இருந்து, “வெஸ்டர்ன் கலாசாரம், சாப்ட்வேர் கல்ச்சர்” என்பது வரை நிறையக் காரணங்கள். ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியமாக முன்வைக்கப்பட்ட காரணங்கள் “பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லை”, “over-indulgence”, “entitlement”, “maturity இன்மை”, “கண்டிப்பின்மை மற்றும் over-protection” என்பதாக இருந்தது. As it turns out, this is a classic narcissistic behavior.

Narcissism எனும் சுயமோகத்திற்கு இவர்களுடைய அத்தனை எதிர்பார்புகளுமே தெளிவான அடையாளங்கள் என்கிறது Jean Twenge, Keith Campbell எழுதிய “The Narcissism epidemic” புத்தகம். காதல் என்றால் என் மீது பாச மழை பொழிவது, கல்யாணம் அதன் நீட்சி என்று இவர்கள் கேட்கக் காரணங்கள் என்ன? இதற்கு மோசமான வளர்ப்பு மட்டுமே காரணமாக இருந்து விட முடியுமா என்ன? இல்லை, ஆனால் இது மோசமான, கண்டிப்பில்லாத வளர்ப்பில் ஆரம்பிக்கிறது என்கிறது இந்தப் புத்தகம்.

தற்கால தனிக்குடித்தனப் பெற்றோர்களுக்கு உலகமே அவர்கள் குழந்தை தான். உலகத்தை எடுத்து என் உள்ளங்கையில் வை என்று கேட்டாலும் பட்டினி கிடந்தாவது அதை செயல்படுத்தும் பெற்றோர்களே இந்தத் தலைமுறையில் அதிகம். அதிலும் இந்த சுயமோகம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் சொல்லவே வேண்டாம்.  கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதில் ஆரம்பித்து, நினைத்தை எல்லாம் நடத்திக் கொடுப்பதில் இருந்து, பணக் கஷ்டமே தெரியாமல் இழைத்து இழைத்து வளர்ப்பது இப்போது அதிகரித்து வரும் ஒரு விஷயம்.  கலர் கலராக டிரெஸ் வாங்கிக் கொடுப்பது, கேட்ட இடத்திற்கெல்லாம் கூட்டிப் போவது, கேட்டதெல்லாம் சமைத்துக் கொடுப்பது என பொத்திப்  பொத்தி வளர்ப்பதற்கான காரணம் “எனக்குத் தான் கிடைக்கல, என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே” என்பதாகவே இருக்கிறது.  பாசமும் தியாக மனப்பான்மையும் கூடிய நியாயமான ஆசை தான். ஆனால் இது எந்த அளவுக்கு பிள்ளைகளை பாதிக்கும் என்றும் தெரிந்திருக்க வேண்டாமா? வளரும் போது எதுவுமே மறுக்கப்படாமல் வளரும் குழந்தை வாலிப வயதில் அத்தனையும் தனக்கு கிடைக்கவேண்டும் என்றே எதிர்பார்கிறது.   வலி தெரியாமல் தான் வளரக் காரணம் வலியோடு வாழ தன் பெற்றோர்கள் பழகிக் கொண்டதால்  தான் என்பது  பற்றி அதற்கென்ன தெரியும்.

ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்கள் இதை இன்னும் மோசமாக்குகின்றன. தெரிந்தவனோ தெரியாதவனோ ஆயிரம் பிரென்ட் உள்ளவன் அரை பிரபலம் என்பதில் ஆரம்பிக்கும் சுயமோகம், நாய்குட்டி போட்டோ போட்டாலே “ சோ ஸ்வீட்" என்று வழியும் பேர்வகழிகளின் கவனத்தால் மேலும் வலுப்பெறுகிறது. பெண்களுக்கு சூப்பர் மாடல் ரோல் என்பது போல ஆண்களுக்கு சமூகப் போராளி அல்லது எழுத்தாளர் ரோல். நாளொரு போட்டோ,  நொடிக்கொரு கமென்ட் என்று போகப் போக “ஐ, நம்மகிட்ட ஏதோ இருக்குது" என்ற மிதப்பு வலுப்பெறுகிறது.  ஆளுக்கொரு வீடு இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் ஒரு ப்ளாக், ஒரு பேஸ்புக் ப்ரோபைல், ஒரு ட்விட்டர் அக்கவுன்ட், இதிலெல்லாம் சில followers இருக்கவே இருக்கிறது.  பல் தேய்ததில் இருந்து பிரியாணிக்கு பக்கோடா நல்லாயிருக்கும் என்பது வரை சமூகம், அரசியல் என்று எது பற்றியும் கருத்து சொல்லித் தீர்க்கலாம் என்றவுடன்   பெற்றோர்களிடம் கூட  சொல்லத் தயங்கும் விசயங்களை  ஊர் பார்க்க ஒளிபரப்பும் குணம் தானாகவே வந்து சேருகிறது. 

சமூகமும் தன் பங்கை செவ்வனே செய்யாமல் இல்லை.  பெண்கள் எங்கே போனாலும் லேடிஸ் ஃபர்ஸ்ட் என்பதில் இருந்து, “அய்யயோ" என்று குரல் கொடுத்தவுடனேயே என்ன ஏதென்று கேட்காமல் அடிக்க ஆரம்பிப்பது வரை பாதுகாத்துத் தள்ளுகிறது.  பின்னே ஏன் வராது சுயமோகம்? 

அப்படியும் வராமல் இருந்தால் இருக்கவே இருக்கிறது டிவி, பத்திரிகைகள் மற்றும் இன்னபிற மீடியா.  மீடியாவில் வரும் விளம்பரங்கள் என்ன சொல்லுகிறதோ இல்லையோ வாழ்க்கையில் ஜெயிக்க, தன்னம்பிக்கை வளர சென்ட், மேக்கப்  போட்டு  உடலை பராமரித்தால் போதும் என்று தெளிவாகச் சொல்லுகிறது. இதெல்லாம் வேலைக்காகவில்லை என்றால் சினிமா நடிக நடிகைகளை முன்னிறுத்தி அவர்களைப் போல வாழுங்கள் என்று உசுப்பி விடுகிறது. தமிழ் சீரியல்கள் செய்யும் சீரிய வேலைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  இது மட்டுமல்லாமல் உங்களுக்கு ஆமாம் போடாதவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருக்கக் கூடாது என்று தற்கால பத்திரிகைகள் சொல்லாமல் சொல்ல ஆரம்பித்து இருக்கின்றன. கேட்டால் சுய முன்னேற்றமாம்.

பெண்களுக்கு சுயமோகத்தை வளர்க்க வழி வகுக்கும் அதே  மீடியா ஆண்களுக்கு வேறு விதமான சேதி சொல்லுகிறது. அவர்களுக்கான சேதி இம்மாதிரியான பெண்களை கவர்வது எப்படி என்பதாக இருக்கிறது. இந்த பைக் ஓட்டினால் உன் ஆண்மையை பார்த்து எல்லோரும் பொறாமைபடுவார்கள்  , இந்த சென்ட் போட்டால் அவள் விழுவாள், இந்த கோட் சூட் போட்டால் இவள் விழுவாள், இந்த ஜட்டி போட்டால் எவள் எவளோ விழுவாள் என்பது வரை வந்து விட்டது நிலைமை. Vanity ஐ கவர materialism. நல்ல கான்செப்ட். 

பொருட்களை வாங்கினால் தான் சந்தோசம் என்று ஒரு சாராருக்கும், பொருட்களை வாங்கிக் கொடுத்து சந்தோசப்படுத்தினால் தான் உனக்கு சந்தோசம் என்று இன்னொரு சாராருக்கும் விளம்பரப்படுத்துவதில் கடைசியில் லாபம் என்னவோ விற்பனையாளர்களுக்கு தான். 

சரி, இது சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சி என்ன தான் சொல்கிறது?  இத்தகைய மனப்பான்மை கடந்த தலைமுறையை விட இந்தக் காலத்து தலைமுறையிடம் தான் அதிகமாக இருக்கிறது.  இது போதாது என்று ஒவ்வொரு  தலைமுறைக்கும் narcissism கூடிக் கொண்டே செல்கிறது என்றும், 1970 களில் அமெரிக்காவில் பதினாறில் ஒருவருக்கு என்று இருந்த இந்த சுயமோகம், 2003 இல் நாலு பெயரில் ஒருவருக்கு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறது.  சரி, இது இந்த அளவுக்கு எப்படி வளர்ந்தது? அதற்கு முக்கியக்க் காரணம் அமெரிக்காவில் 1970களில் நடந்த Self Esteem Movement என்கிறது இப்புத்தகம்.  இதன் மிகமுக்கிய கொள்கை: “Every child is special.” 1960களில் அமெரிக்காவில் நடந்த  ஹிப்பி மூவ்மென்ட் பற்றி தெரிந்திருக்கலாம். கஞ்சா புகைப்பது, casual sex, கும்பலாக ஒற்றுமையுடன் பணத்தை பற்றிய கவலை  இல்லாமல் வாழ்வது போன்றவற்றை தூக்கிப் பிடித்த கலாச்சாரம் அது.  அதன் முடிவில் அதுவரை தங்கள் சுயநலத்தில் ஆர்வமாயிருந்தவர்கள் பெற்றோர் ஆன பின் தங்கள் பிள்ளைகளை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்தார்கள். தலைமுறைகள் செல்லச் செல்ல, இன்டர்நெட்  பேஸ்புக் போன்ற வசதிகள்  பெருக, மீடியாவில் ஹாலிவுட் நடிக நடிகைகளின் கொடிபிடிக்கும் கலாச்சாரம் 90களில் அதிகரிக்க, இன்று இந்த நிலைமையில் அமெரிக்கா நிற்கிறது. 

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்க ப்ரீகேஜி குழந்தை ஒன்று “I am special/ I am special/ Look at me” என்று anthem பாடிக்கொண்டிருக்கும் (நிஜமாவே). நெற்றி சுருக்கங்களைப் போக்க botox போடுவது, பல் வெண்மை வர அடிக்கடி டென்டிஸ்ட்டிடம் போவது, மார்பகம் எடுப்பாக தெரிய பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவது என்பது மட்டுமல்லாமல் 2005இல் 79 சதவிகித அமெரிக்கர்கள் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இதில் பலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த/ செய்யப் போகிறவர்கள்.  பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பேன்க் வட்டி கிடையாது, வரிவிலக்கு உண்டு என்ற நிலை ஏற்கனவே அங்கே வந்துவிட்டது.  இதன் பலனாக, தற்போது டாக்டருக்கு படிக்கும் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது டென்டிஸ்ட்ரி.  போகிற போக்கில் சில வருடங்களில் எமெர்ஜென்சி சிகிச்சை செய்ய ஆள் இருக்காது என்கிறது இப்புத்தகம்.

ஆனால் பிரச்சனை இது மட்டுமல்ல. Hook up culture பற்றியும் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். அதாவது வெஸ்டர்ன் கல்ச்சர்ரின் படி, முதலில் டேட்டிங், அப்புறம் செக்ஸ், அப்புறம் மூவிங் இன்/ லிவிங் டூகெதர், அப்புறம் சில வருடங்கள் கழித்து ப்ரோபோசல், அப்புறம் கல்யாணம் (ப்ரோபோசல் வீடியோ பார்த்து ஆர்பாட்டம் பண்ணும் பெண்கள் இதையெல்லாம் கவனிக்கவும்). ஆனால் இப்போது எனக்கு நான் மட்டும் தான் முக்கியம் என்ற நிலை வந்துவிட்ட பிறகு, இப்போதைய ட்ரெண்ட், casual sex மட்டுமே. பிடிச்ச வரை செக்ஸ், பிடிக்கலன்னா பிரிஞ்சுறலாம் என்ற வகையில் கமிட்மென்ட்டே இல்லாத கல்ச்சர் தான் hook up culture.  இது  வேகமாக அதிகரித்து வருகிறது என்பது அமெரிக்க ந்யூஸ் சேனல்களில் இப்போது பரபரப்பாக  பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். ஏன் வராது? தன்னை மட்டுமே காதலிக்கும் போது அடுத்தவரைக் காதலிக்க நேரம் இருக்குமா என்ன?

பேமிலி லைஃப் இப்படியென்றால் வொர்க் கல்ச்சர் இன்னொரு ரகம்.  கஷ்டப்படாமலேயே அத்தனையும் கிடைத்த பின்னர் வாழ்க்கையில முன்னேற கஷ்டப்பட வேண்டும் என்றால் இனிக்கவா செய்யும்? இது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்ட் வாங்கி (பேன்க்) காசு செலவு பண்ணி,  பிறரை விட ஆடம்பரமாக வாழ்வதாக காட்டிக்கொண்டு பின்னர் வட்டி கட்ட முடியாமல் நாசமாய்ப் போவதும் அதிகரித்து வருகிறதாம்.

2008 இல்  அமெரிக்காவில் நடந்த economic meltdown ரொம்பவே பிரசித்தம்.  இதற்கு முக்கியக் காரணம் mortgage எனப்படும் வீட்டுவசதி வட்டி.  அதாவது வீட்டு விலையில் ஒரு பங்கை நீங்கள் பேன்க்கில் கட்டினால், மிச்சத்தை பேன்க் கட்டும். அந்தப் பணத்தை நீங்கள் பத்து வருடதிற்கோ இருபது வருடதிற்கோ வட்டியோடு கட்டி அடைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். முந்தய காலகட்டத்தில் எல்லாம் வீடு வாங்க வேண்டுமென்றால் ஒன்று காசு சேர்த்து விட்டு பின்னர் வாங்குவது ஒரு ஆப்சன்.  அல்லது அதிகமான வட்டியுடன் வருக்கணக்கில் கட்ட வேண்டும்.  ஆனால் 2000 க்கு பின்னர்,  பேன்க் வட்டியை குறைக்க, மக்கள்  மானாவாரியாக வீடு வாங்கித் தள்ளினார்கள்.  அதில் பெரும்பாலோனோர் தகுதிக்கு மீறி வாங்கினார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? கொஞ்ச காலத்திலேயே காசு கட்ட முடியாமல் போக, வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. ஆனால் அத்தனை வீட்டை உடனே விற்பது நடக்கிற காரியமா? மக்கள் வீட்டை இழந்து பெனால்டி கட்டிய பின்னரும் பேன்க்கிற்கு மோசமான லாஸ்.  Bankruptcy பதிவு செய்து இந்த வங்கிகள் போய் அமெரிக்க அரசாங்கத்திடம் கையேந்தி நிற்க, அரசாங்கம் இவர்களுக்கு கடன் தந்து காப்பாற்றியது. ஆனால் அந்தக் கடனுக்கான பின்விளைவுகள் கடைசியில் விடிந்தது அமெரிக்க மக்களின் தலையின் மீது தான். இன்னும் கட்டுகிகிறார்கள்/ கட்டுவார்கள் அதற்கான வரியை.  பல வீடுகள் இன்னும் சீந்துவார் இல்லாமல் கிடக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம் narcissism தான் என்பது இப்புத்தகத்தின் கருத்து.  பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மக்கள் ஒருபுறம் என்றால், பணம் வசூலித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை கொண்ட வங்கியாட்கள் இன்னொரு புறம். இவர்கள் இருவருமே தகுதி தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு நாசாய்ப் போனவர்கள்.  இதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தமா?  நாம் கர்ம சிரத்தையாக அமெரிக்க கலாசாரத்தை கேள்வியே இல்லாமல் காப்பி அடித்தால் சீக்கிரமே நாமாக நாசமாப் போய்விட மாட்டோமா என்ன?

 

P.S: Neeya naana video.


http://www.youtube.com/watch?v=JIoQEUYnJKU

Sunday, June 15, 2014

Modesty Blaise–Green Cobra by Titan publishers….

blaise green cobra2

 

Modesty Blaise: Green Cobra by Titan Publishers collects three stories: Green cobra, Eve and Adam and Brethren of Blaise, which are story numbers 42,43 and 44 respectively of the total of 92 stories of Modesty.

 

Modesty Blaise strip has had several artists over the course of its decades, the most famous of them being Jim Holdaway, Romero and Neville Colvin. This volume collects the works of two much lesser known (for modesty fans) artists, John Burns and Pat Wright. As explained in the foreword, after Romero left, these artists were employed one after the other and neither lasted long and to this day, no one knows why. However different their styles might have been, these two had one thing in common, they were booted even before they got well adjusted to the strip. While John Burns illustrated two and a half stories, Pat Wright wasn’t even around that long. Having had read Modesty stories which had been illustrated by either Holdaway or Romero, this volume was quite interesting to me. The fact that the stories weren’t as bad as the “The girl in the Iron mask” volume was helpful too.

blaise green cobra1

Image credits : http://lewstringer.blogspot.com/2008/08/classic-uk-reprints-hit-shelves-this.html

 

The first story in the volume, Green Cobra is drawn by John Burns and it is about a private espionage group (Salamander Four) that abducts British Secret Service Chief Sir Tarrant’s assistant Fraser and tries to turn him into a double agent. When Tarrant comes to know of the abduction, well after a month, he asks Modesty and Willie to save their mutual friend and they agree. Having identified the group, Modesty and Willie pursue and abduct one of its chief executives which only leads them into a con. The rest of the story is about them escaping the con and freeing Fraser. The story’s main antagonist is a woman, Pandora, a lethal fighter who is so spitefully jealous of Modesty’s fame, she wants to kill Modesty so that the world would notice her. Although Pandora is shown to be much faster, stronger and better in combat than Modesty, she never quite develops into a character at all. But the pace of the story is good enough for you to not notice any of that. The story picks up right from the beginning with Fraser being interrogated till its explosive end. The style of John Burns needed some getting used to, but only I was able to, I could notice it resembling Holdaway’s style to some extent.

Burn’s style gets better as the story goes on and I noticed that it was much better in the following “Eve and Adam”, in which Modesty and Garvin are tricked by a kooky billionaire, who is convinced that the world is gonna end, decides to make Modesty and Garvin to be the new Eve and Adam by placing them in an oasis in the middle of an African desert. Needless to say, Modesty and Garvin soon find friends and foes in the middle of the desert while trying to figure out getting out of the desert without  getting killed. The story has an interesting concept to it, considering the eccentric relationship of Willie and Modesty. They highly respect each other, love each other, rely on each other and would risk their lives for each other. But it never gets physical or romantic. Most of the times, it is shown to be a safe measure to not muddle the respectful relationship they have. The story would have been much more interesting if it had explored the psychology of this aspect more, but it doesn’t go into it more than a page which is immediately followed by trouble. The story then becomes a standard Modesty fare albeit being entertaining. This is also the story where John Burns gets fired midway and is replaced by Pat Wright and so, the story has the illustrations of the both and the transition isn’t smooth at all. They have very distinguishing styles and it might even be quite jarring when the sudden transition takes place. But just like Burns, you get used to the style of Wright and one thing I noticed about his style is that it does not resemble any style of the other Modesty artists and had a slight resemblance to William Vance’s XIII. As I got used to it, I found myself liking it more than Burns' style, especially his close-up shots.

As an aside, I noticed a peculiar thing about the illustrations of John Burns. In most of the illustrations of the other artists, even with the presence of a considerable amount of nude scenes, it is never really nude. Burns is not reluctant in showing nipple and “Eve and Adam” gives him some opportunity to do so too. This could have been a factor in him getting fired, especially considering that it was a daily strip in a British newspaper.

The last story in the volume is “Brethren of Blaise”, illustrated by Pat Wright. Just like Burns, I felt that Wright’s style was better in this story than it was in his previous one. The illustrations are more defined and the characters have a distinct look that was not just unique but also beautiful. Modesty and Willie find themselves in a small village to celebrate Christmas and come across a group calling themselves “The Brethren of Blaise” trying to revive Merlin (Blaise is Merlin’s tutor). When Willie is attacked, the couple sense something beneath the surface going on. Add in an old acquaintance under trouble and you can easily guess what Modesty and Willie ends up doing. “Brethren of Blaise” is the most Modesty-est story of the lot. It has every hallmarks of an intriguing and entertaining Modesty story even if it is predictable. All in all, this volume was much better than the “Girl with the iron mask” volume (maybe because all the stories in it were from the later run of Modesty) and can be quite entertaining if you are accustomed to Modesty stories.

Rating: 4/5.

 

blaise green cobra wrightblaise green cobra burns

 

A side by side comparison of Pat Wright and John Burns (respectively) as shown in the foreword of this volume. This strip marks the immediate switch of the artists. The right one was discarded and Pat Wright took on from there. It is to be noted that this isn’t a particularly flattering show of either artists’ talents. Wright gets much better in “Brethren of Blaise” and Burns has done better in the same story.

 

Disclaimer: All the images are taken from the net.