Bastille Day


மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு போகும் நேரத்தில் அந்த கைப்பையில் இருந்த வெடிகுண்டு வெடித்து நான்கு பேர் இறக்க, மைக்கல் தான் குண்டு வைத்தவன் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அவனை தேட ஆரம்பிகிறது. இந்நிலையில்இதே மாதிரி இன்னும் சில வெடிகுண்டுகள் பாரிசின் பாஸ்டில் டே கொண்டாட்டத்தின் போது வெடிக்கும் என்று மிரட்டல் வர, பாரிசில் இருக்கும் சிஐஏ அமெரிக்கனான மைக்கலை முதலில் பிடிக்க சான் ப்ரயரை அனுப்புகிறது. மைக்கலிடம் இருந்து அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளும் சான், மைக்கலின் உதவியோடு அந்தப் பெண்ணை கண்டுபிடித்தாரா, குண்டு வைத்த கும்பலின் நோக்கம் என்ன, அதை ஏன் பஸ்டில் டே கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்பது மீதிக் கதை.

மைகேல் மேசனாக ரிச்சர்ட் மேடன். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ராப் ஸ்டார்க்காக பரிச்சயம் ஆனவர். சற்றே குறும்புத்தனமும், துடுக்குத்தனமும் நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். ஆரம்ப காட்சிகளில் நடிக்க கிடைத்த சில சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். சான் ப்ரயராக இட்ரிஸ் ஆல்பா. முதலில் அடித்துவிட்டு பின்னர் கேள்வி கேட்கும் கதாப்பாத்திரம் இவருடையது. ஆயிரத்தெட்டு buddy cop படம் பார்த்தவர்களுக்கு இதற்குள் அலுப்பு தட்டி இருக்கும். ஆனால் இட்ரிசின் நடிப்பில் எந்தக் குறையும் கிடையாது. வழக்கம் போலவே அருமையாக செய்திருக்கிறார். ஆனால் இது மாதிரியான படங்களில் இந்த இரு கதாப்பதிரங்களுக்கும் இடையே இருக்க வேண்டிய அந்த அன்னியோன்யம் இங்கே மிஸ்ஸிங். இது இந்த இரண்டு நடிகர்களின் தவறு என்று எளிதில் சொல்லி விட முடியாது. கதையிலும் ஒரு  மாதிரியான ரஷ்ஷை கவனிக்கலாம். கதை வேகமாக நகர்ந்தாலும் அதில் தெளிவான ஒரு பேசிங் இல்லாதது போன்ற ஒரு உணர்வு எழுவதை தடுக்க முடியாது.  சற்றே கவனம் எடுத்து எடிட் செய்திருந்தாலோ இன்னும் கொஞ்சம் விரிவாக பாக்க்ரவுண்ட் சேர்த்து இருந்தாலோ இன்னும் நன்றாக இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ஸோயியாக சார்லட் லெ பான். இவரை இதற்கு முன் நான் வேறெந்த படத்திலும் பார்த்தது கிடையாது என்றாலும், எனக்கு இவருடைய நடிப்பு பிடித்து இருந்தது.வெகுளித்தனமும், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட ஒரு idealistic கதாப்பாத்திரம் இவருடையது. கூண்டுக்குள் அடைபட்ட ஒரு புறாவைப் போன்ற ஒரு feminine vulnerabilityயை மிக நன்றாக செய்திருக்கிறார். வழக்கமாக ஆங்கிலப் படங்களில் பெமினிஸ திணிப்புகள் கதையையே கெடுக்கும் அளவுக்கு இருக்கும். இங்கே அந்த மாதிரி ஒரு தம்மாதுண்டு பெண் பத்து பேரை அடிப்பது போன்ற காமடிகள் இல்லாமல் மிகவும் நம்பக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.ஆனால் படத்தில் பாதி நேரம் ஓடுவதைத் தவிர இவருக்கு பெரிதாக எதுவும் வேலை கிடையாது. ஒருவேளை இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து இருந்தால் ஜொலித்திருப்பாரோ என்னவோ.

சரி கடைசியில் படத்தை பார்கலாமா என்றால்.... யெஸ். பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத, எளிதில் யூகிக்கக் கூடிய சில திருப்பங்கள் உள்ள ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்தப் படம் உங்களை நிச்சயம் ஏமாற்றப் போவதில்லை.  ஒரு பக்கா ஆக்சன் படம் பார்க்க வேண்டும் என்றால் Bourne ட்ரைலாகியையோ  அல்லது Edge of tomorrowவையோ பாருங்கள்.

Comments

  1. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
    Nice One...
    For Tamil News Visit..
    https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

The Dark Knight – At war...

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

Chicken with plums – அறுந்த நரம்புகள்....