Posts

Showing posts from March, 2010

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Image
--> வணக்கம் நண்பர்களே.இந்த ப்ளாக் ஆரம்பிச்சதே நல்ல காமிக்ஸ்,புத்தகங்கள்,படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் தான்.படங்கள் பத்தியும் காமிக்ஸ் பத்தியும் எழுதுன அளவுக்கு நான் புக்ஸ் பத்தி எழுதல...... So,here I am...... இந்த முறை த்ரில்லர் எழுத்தாளர் Stephen King எழுதிய Misery பத்தி பார்க்கலாம்.எனக்கு action,adventure genre நாவல்கள் தான் அதிகம் பிடிக்கும்.த்ரில்லர் டைப் நாவல்கள் அதிகம் படிச்சதில்ல.அதனாலேயே இவர் எழுதுன நாவல்கள நான் படிச்சது இல்ல.
ஒருமுறை இவரோட முதல் புக்கான Carrie படிக்க நேர்ந்தது.கதை கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால,இவரோட பேமஸ் புக்கான இத படிக்கலாம்னு நெனச்சேன்.அதுசரி,Carrie என்ன கதையா?
சின்ன வயசுல இருந்து எப்பயுமே கிண்டல் அடிக்கப்பட்டு,நண்பர்களே இல்லாம,கூட படிக்குறவங்களால அருவருப்போட வெறுத்து ஒதுக்கப்படற ஒரு பொண்ணு தான் Carrie.ஆனா,எந்தப் பொருளையும் மனசால நெனச்சே நகர்த்தக் கூடிய Telekinetic பவர் அந்தப் பொண்ணுக்கு இருக்கு. ஸ்கூல்ல மட்டுமில்லாம வீட்டுலயும் பிரச்சனைகள் நிறைஞ்சவ தான் கேரி.அவளோட அம்மா ஒரு religious fanatic.பைபிள் சொல்ற ஒவ்வொரு வரியும் அட்சரம் பி…

The Classic- காதல் காவியம்.

Image
ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட காதல் மரம் அடுத்த தலைமுறையிலும் பூக்கள் தருவது தான் The Classic.
2003 இல் வெளியான கொரியன் படமான இது, இரண்டு தலைமுறைகளின் காதலை கவித்துவமாகக் கூறுகிறது.வாழ்க்கை நதியில் இரண்டு தலைமுறைகளை இணைக்கும் பாலமாக காதல் உள்ளதை தெரியப்படுத்தும் விதமாக இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்தை காட்டி ஆரம்பமாகிறது இந்தப்படம்.


எனது முந்தய பதிவு ஒன்றில் சொன்னதைப் போல காதல் சார்ந்த கொரியன்படங்களுக்கு ஒரு பார்முலா உள்ளது.ஒரு cute ஹீரோயின்,ஒரு மிகச் சாதரணமான ஹீரோ,அவர்களுக்குள் நடக்கும் மோதல்,மோதல் கலந்த காதல் தான் அது.ஆனால்,கிளாசிக் அப்படியில்லை.சுடுவெயிலில் நதிக்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் போது வந்து வருடிச் செல்லும் மென்காற்றைப் போல,வாழ்க்கையில் சொல்லாமலே நுழைந்து, சொல்லவொண்ணா வேதனைகளையும்,நினைத்து ரசிக்கும் தருணங்களையும் தந்து மனதினுள் ஏக்கத்தையும்,பாசத்தையும் விதைக்கும் காதலைப் பற்றிய கவிதையே The Classic.

Soo Gyung என்ற தன்னுடைய தோழியின் காதலுக்கு உதவும் பொருட்டு அவளுடைய காதலன் Sang Minக்கு, Gyung கிற்கு பதிலாக காதல் கடிதங்களை எழுதி அதை ஈமெயிலில் அனுப்பும் Ji Hae,தனக்கே தெரிய…

My Little Bride - A Review.

Image
--> My little bride 2004 இல் வெளிவந்த ஒரு கொரியன் படம்.பொதுவாவே கொரியன் படங்கள் romantic comedy டைப் தான் நெறைய வரும்.இதுவும் அதே. பொதுவா கொரியன் ரொமாண்டிக் படங்கள்ல மொக்கையா ஒரு ஹீரோ,படு சூப்பரான ஒரு ஹீரோயின்,அவங்களுக்கு உள்ள நடக்குற மோதல்,மோதல் கலந்த காதல் அப்டின்னு ஒரு formula இருக்கு.ஆனா,கதையே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் இதுல.

சுருக்கமா சொல்லனும்னா,ஒரு வயசுப்பையனுக்கும் ஒரு 15 வயசுப் பொண்ணுக்கும் கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சா என்ன ஆகும்க்றது தான் கதை.ஆனா இத விரசமில்லாம humor கலந்து சொல்லி இருக்காங்க.

கதையோட நாயகன் ஒரு playboy.அவனோட இன்ட்ரோவே அவன் ஏர்போர்ட்ல ஒரு பொண்ண மடக்க ட்ரை பண்ணி அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு தெரிய வந்து,மொக்க வாங்குறதுல தான் ஆரம்பிக்குது.ஒரே சீன்ல நமக்கு ஹீரோ பத்தி தெரிஞ்சும் போயிடுது.இவனுக்கு இன்ட்ரோ இப்டின்னா ஹீரோயினுக்கு இன்னும் அழகு.ஹீரோயின் திரும்பி நிக்கிறப்போ வேனுக்கும்னே செல்ல கீழ போட்டுட்டு போவான் ஹீரோ(எதுக்கா?இன்னும் ரொம்ப வளரணும் தம்பி நீயி).அவ அத எட்டி உதச்சுட்டு,ஹீரோவ பேரு சொல்லி கூப்பிட்டு ‘நீ இன்னும் திருந்தவே இல்லையா’ன்னு பரேடு விடுரதுல ஆரம…

மனதில் உறுதி வேண்டும்......

Image
--> மக்கா....தலைப்ப பாத்துட்டு இது ஏதோ சுய முன்னேற்ற கட்டுரைன்னு தப்பா நெனச்சுட வேண்டாம். அந்த அளவுக்கு எனக்கு மொக்க போடுற தெறமையோ,பீலா விடற புத்திசாலித்தனமோ கெடயாது.இது தமிழ்ல வந்த LUCKY LUKE ஓட The Curing of the Daltons அப்டிங்ர ஒரு காமிக்ஸ் பத்தின பதிவு. இந்த கதை Lion Comicsல 14 வது ஆண்டு மலரா வந்தது.

(லக்கி பத்தி தெரியாத பயபுள்ளைக இங்க போங்க. http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html) Written by:Goscinny . Illustrated by:Morris. ஒரு கிறுக்கு professor, 4 பக்கா கிரிமினலுங்க, 1 ஹீரோ (அட,நம்ம லக்கி தாங்க). இவங்க எல்லாம் சேந்தா என்ன ஆகும்ங்கறது தான் கதை.

Otto von Himbeergeist அப்டின்னு ஒரு professor.இவர் “குற்றவாளிகளின் மனநிலை” பத்தி ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு அரும் பெரும் உண்மைய கண்டுபிடிக்கிறார். அதாவது “எல்லா குற்றவாளிகளுமே அடிப்படையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் இன்றைக்கு இப்படி இருக்க காரணம் சின்ன வயசுல நடந்த ஏதோ ஒரு சம்பவம் தான். “ அப்டிங்கரது தான் அந்த மாபெரும் உண்மை.Infact, ஒவ்வொரு மனிதனோட தற்போதைய நிலைமைக்கு சின்ன வயசுல நடந்த ஏதோ ஒரு விஷயம் தான் உந்துகோல் …