மனதில் உறுதி வேண்டும்......



-->
மக்கா....தலைப்ப பாத்துட்டு இது ஏதோ சுய முன்னேற்ற கட்டுரைன்னு தப்பா நெனச்சுட வேண்டாம். அந்த அளவுக்கு எனக்கு மொக்க போடுற தெறமையோ,பீலா விடற புத்திசாலித்தனமோ கெடயாது.இது தமிழ்ல வந்த LUCKY LUKE ஓட The Curing of the Daltons அப்டிங்ர ஒரு காமிக்ஸ் பத்தின பதிவு. இந்த கதை Lion Comicsல 14 வது ஆண்டு மலரா வந்தது.


(லக்கி பத்தி தெரியாத பயபுள்ளைக இங்க போங்க.
Written by: Goscinny .
Illustrated by: Morris .
ஒரு கிறுக்கு professor,
4 பக்கா கிரிமினலுங்க,
1 ஹீரோ (அட,நம்ம லக்கி தாங்க).
இவங்க எல்லாம் சேந்தா என்ன ஆகும்ங்கறது தான் கதை.


Otto von Himbeergeist அப்டின்னு ஒரு professor.இவர் “குற்றவாளிகளின் மனநிலை” பத்தி ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு அரும் பெரும் உண்மைய கண்டுபிடிக்கிறார்.
அதாவது “எல்லா குற்றவாளிகளுமே அடிப்படையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் இன்றைக்கு இப்படி இருக்க காரணம் சின்ன வயசுல நடந்த ஏதோ ஒரு சம்பவம் தான். “ அப்டிங்கரது தான் அந்த மாபெரும் உண்மை.Infact, ஒவ்வொரு மனிதனோட தற்போதைய நிலைமைக்கு சின்ன வயசுல நடந்த ஏதோ ஒரு விஷயம் தான் உந்துகோல் அப்டிங்கறது அவரோட வாதம். இது எல்லாம் போதாதுன்னு, இது எல்லாத்தையுமே சிகிச்சை மூலமா குணப்படுத்திடலாம்னும் அவர் சொல்றாரு.


ஆனா,இவரு சொல்றதுக்கு பயங்கர எதிர்ப்பு கெளம்புது(பின்ன,எல்லா குற்றவாளியும் மனநோயாளின்னு சொன்னா...). இவரோட ஆராய்ச்சிய நிரூபிக்க இவர் உலகத்தின் மோசமான திருடர்கள் நிறைந்த அமெரிக்காவிற்கு, (!!! யப்பா,இதுல என்னோட உள்குத்து எதுவும் கெடயாதுப்பா.) அதிலும் குறிப்பாக கொள்ளையர்கள் நிறைந்த Texas மாநிலத்துக்கு இவர் போறாரு. இவருக்கு உதவியா நம்ம லக்கிய நியமிக்கிராங்க.


இவங்க ரெண்டு பேருமா சேந்து Otto வோட ‘லட்சிய குற்றவாளிய’ தேடி உள்ளூர் ஜெயிலுக்கு போறாங்க. அங்க டால்டன் ப்ரதர்ஸ சந்திக்குறாங்க. பாத்த உடனே நம்ம ஜோ டால்டன ஒட்டோவுக்கு ரொம்ப பிடிச்சுப் போய்,நான் தேடுன லட்சிய குற்றவாளி இவன் தான்னு சந்தோசப்படுராறு(தேவுடா!!!). ஜெயில் சூழ்நிலைல இவனுங்களுக்கு சிகிச்சை கொடுத்தா சரிப்பட்டு வராதுன்னுட்டு (கொடும!) ஊருக்கு வெளிய ஒரு வீடு பிடிச்சு, துணைக்கு லக்கியையும் கூட்டிக்கிட்டு போய்டுறாரு ஓட்டோ.


ஏதோ இவரு புண்ணியத்துல நம்ம டால்டன் பசங்க வரலாற்றுலயே முதல் முறையா வெடிகுண்டு இன்றி, துப்பாக்கி இன்றி (கத்தி இன்றி,ரத்தம் இன்றி மாதிரி படிக்கவும்) ஜெயில விட்டு வெளிய வர்றாங்க. ஆனா,இவங்கள எப்பயும் தன் கண்காணிப்புலேயே வச்சு இருக்காரு லக்கி.


ஆனா, ‘ஒண்ட வந்த பிடாரிய ஊர் பிடாரி ஓட்டுச்சாம்’ன்ற மாதிரி அந்த டாக்டரோடயே கம்பி நீட்டிட்ரானுங்க நம்ம டால்டனுங்க. இவங்கள தேடி லக்கி தன்னோட குதிர ஜாலி ஜம்பர் மற்றும் அந்த கிறுக்கு நாய் Rin Tin Can னோட போறாரு லக்கி.கடைசியில தேடி தேடி இவனுங்கள கண்டு பிடிச்சுடுவாறு லக்கி.ஆனா அங்க போய் பாத்தா தான் தெரியும்,ஒட்டோவையே தங்களோட வழிக்கு மாத்தி வச்சுருக்கானுங்க டல்டனுங்கன்னு. அப்புறம் என்ன, லக்கிய பிடிச்சு வச்சுக்குவானுங்க. இவனுங்க புது முறையுல கொள்ளை அடிக்கிற அழக காட்டிட்டு லக்கிய போட்டு தள்ளறதா முடிவு பண்ணிட்டு அன்னைக்கு நைட்டே லக்கிய கூட்டிட்டு போவானுங்க.அங்க போய் பாத்தா, ஓட்டோ பேசிப் பேசியே பேங்க் மேனேஜர்களுக்கு எல்லாம் பணத்து மேல வெறுப்பு வர்ற மாதிரி பண்ணிடுவான்.(இந்த மாதிரி ஒரு ஆளு தமிழ்நாட்டுல இருந்தா நல்லா தான் இருக்கும்.ஹூம்....)


அதுக்கு பின்ன, மேனேஜரே போய் லாக்கர்ல இருக்குற பணத்த எல்லாம் சத்தமில்லாம எடுத்துக் கொடுத்துடுவான்(பணத்து மேல அவ்ள வெறுப்பு உண்டாக்குரனுங்கலாம்).இவனுங்கள எப்டி லக்கி கம்பி எண்ண வக்குராருங்க்றது தான் மிச்ச கதை.


கதையுல பல கட்டங்கள் உங்கள விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.அதுல கொஞ்சம் இங்க பாப்போம்.


கத ஆரம்பிச்ச எடத்துல இருந்து ஓட்டோ, தான் சந்திக்குற ஒவ்வொரு மனுஷனையும் அவனோட குழந்தைப் பருவத்தோட பாதிப்புல இருந்து பேசி பேசியே ‘சரி’ பண்ணுறார். இதுல,ஜெயில் வார்டன்,ரயில் கொள்ளையர்கள்,மொடாக்குடிகாரன்ன்னு ஒரு பெரிய லிஸ்டே வரும். ஆனா, இவர பேச விட்டு தங்களோட வழிக்கு டால்டனுங்க ‘சரி’ பண்ணுவானுங்க பாருங்க.செம கூத்தா இருக்கும்.


ஆரம்பத்துல ஒட்டோவுக்கும்,professor ஜாக்க்கும் நடக்குற அந்த arguement, பேசி பேசியே ஜெயில் வார்டனுக்கு எல்லோரையும் உள்ள போடறதுல வெறுப்ப உண்டாக்குரது, டால்டனுங்கள திருத்திட்டேன் பேர்வழிங்ர பேர்ல அவங்கள நம்பி துப்பாக்கிய கொடுத்துட்டு,பின்ன தன்னைய வச்சே அவனுங்க எஸ்கேப் ஆகுறத பாத்துட்டு ஓட்டோ முழிக்கிற முழி,லக்கிய யார் கொல்றதுங்ரதுக்காக டால்ட்டனுங்க, தங்களுக்குள்ள சீட்டு விளையாண்டு ஜெயிக்கிறவன் தான் கொல்லனும்னு முடிவு பண்ணி சீட்டு விளையாடுற எடம், பேசிப் பேசியே பேங்க் மேனேஜர் கிட்ட இருந்தே பூரா பணத்தையும் புடுங்குற இடம்னு கதை பூரா ஒரே காமெடி கலாட்டா தான் போங்க.


கதைக்கு மிகப்பெரிய பலமே dialogs தான்.அதுலயும் தமிழ்ல விஜயன் சார் translationல பின்னி எடுத்து இருப்பாரு.அதுல கொஞ்சம் samples....


ஆரம்ப விவாதத்தில்:
Prof Jack: எல்லா குற்றவளிங்களும் மன நோயாளிங்கன்னு சொல்ற.சுத்த குடாக்கு தனமா இல்ல இருக்கு.
ஓட்டோ:உங்க மொழியின் நுணுக்கங்கள் எனக்கு இன்னும் புரியல.கொஞ்சம் புரியற மாதிரி செப்பரிங்களா சாமி?
ஜாக்:திருடன் திருடன் தான்.கேப்மாரி கேப்மாரி தான்.இவனுங்கள குணப்படுத்த ஒரே மருந்து தான் உண்டு.அது துப்பாக்கி தோட்டா.


லக்கி ரயில்வே ஸ்டேஷன் இல் ஒட்டோவுக்கு காத்து இருக்கும் போது:
லக்கி:நியூயார்க் ட்ரைன் லேட்டா ?
ஸ்டேஷன் மாஸ்டர்:சேச்சே,3-07 க்கு வர வேண்டிய train வழிப்பறி முடிஞ்சு டான்னு 4-35 க்கு வந்துடும்.


ஜெயிலில் கைதிகளின் அணிவகுப்பின் போது:
வார்டன்: இவன் காட்டான் கென்னடி.கவர்னரோட மாமியார கழுத்தறுத்து கொன்னுட்டான்.முதல்ல தூக்கு தண்டன கொடுத்தாங்க.பின்ன,கவர்னரோட தலையீட்டால ஆறு மாசமா மாற்றப்பட்டது.


டால்ட்டன்கள் தப்பிக்கும் போது:
ஓட்டோ:இதுல துப்பாக்கி இருக்கு.வெளியில குதிரைங்க இருக்கு.டால்டன்களுக்கு தப்பிக்க எல்லா வசதியும் கொடுக்கப்போறேன்.ஆனா,அவங்க அத யூஸ் பண்ண மாட்டாங்க.ஏன்னா,அவங்கள நான் குணப்படுதிட்டேன்.
லக்கி: வேணாம் டாக்டர்.திட்டம் சொதப்புச்சின்னா?
ஓட்டோ:அதெல்லாம் சொதப்பாது.
லக்கி:டாக்டர்,இது சுத்த பைத்தியகாரதனமா இருக்கு.சொன்ன கேளுங்க.
ஓட்டோ:இத பாருப்பா.யார் பைத்தியம்,யார் பைத்தியம் இல்லைங்கறத தீர்மானிக்க வேண்டியவன் நான்.புரிஞ்சதா?
துப்பாக்கிய வச்சு வித்த காட்டுறவனுங்க எல்லாம் பேச வந்துட்டானுங்க.
(கதவை சாத்தி விட்டு உள்ளே செல்கிறார்.)
லக்கி: #@***
(கொஞ்ச நேரம் கழித்து கதவு திறக்கப்படுகிறது.ஓட்டோ வெளியே வருகிறார்.)
லக்கி:டாக்டர் என்னாச்சு?
ஓட்டோ:திட்டம் சொதப்பிடிச்சு.
ஜோ டால்டன்:அதுவும் எப்படியாம்?டேய்,குதிரைகாரா.துப்பாக்கிய கீழ போடு இல்ல டாக்டர பரலோகத்துக்கு அனுப்பிடுவேன்.


முதல் பேங்க் கொள்ளையடிக்கப்பட்ட பின்பு:
ஷேரிப்: வாப்பா லக்கி.இங்க வந்து பாரேன்.
ஒரு கீறல் இல்ல.
ஒரு சத்தம் இல்ல.
லக்கி:பாத்தா டால்டனுங்க பண்ண மாதிரி தெரியலையே.
ஷெரிப்:ச்சே ச்சே.அவனுங்க உள்ளூர் பசங்கப்பா.எப்பயும் வெடிகுண்டும் ,துப்பாக்கியும் தான் யூஸ் பண்ணுவானுங்க.இது யாரோ வெளியூர்காரனோட கைவரிசை.


லக்கிய பிடித்த பிறகு:
ஓட்டோ:லக்கிய என்ன பன்றதுன்னு இப்போ முடிவு பண்ணலாம்.
ஜோ:அதை பற்றி அவனை தீர்துக்கட்டிய பிறகு பேசிக்கொள்ளலாம் டாக்டர்.
ஓட்டோ:முட்டாப்பசங்களா.உங்கள வெளிய விட்டது நான்.நான் சொல்றது தான் இங்க சட்டம்.
#1:ஓ.கே டாக்டர்.டென்ஷன் ஆகாதிங்க.
#2:ஆத்திரபடாதிங்க டாக்டர்.
#3:டேக் இட் ஈஸி டாக்டர்.
லக்கி: பேசாம நீங்க ஒரு நல்ல டாக்டரைப் போய் பாரத்தால் என்ன டாக்டர்?
ஓட்டோ:கஸ்மாலம்.உன்ன இப்பவே தீர்த்துக்கட்ட போறேன்.
ஜோ:டாக்டர்,இதெல்லாம் கள்ளாட்டை.வேணும்ணா ரம்மி ஒரு கை போட்டு பாத்து இவன யாரு தீர்த்துகட்டுரதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.


Friends,இதுல ஏதாவது மொக்கையா தோன்றி இருந்தாலோ,போர் அடிச்சு இருந்தாலோ அந்த தப்பு என்னுதா தான் இருக்கும்.ஏன்னா,இந்த அருமையான கதைல எத எழுதுறது எத விட்ரதுன்னு தெரியாம நான் முழித்ததனால இருக்கலாம்.Adios amigos.



போறதுக்கு முந்தி கமெண்ட் போட்டுட்டு,இது நல்லா இருக்குதுன்னோ ,இது நெறைய பேர போய் சேரணும்னும்னோ நீங்க நெனச்சா வோட்டு போட்டுட்டு போங்க. வரவுக்கு நன்றி.

Comments

  1. இந்த கொள்ளைக்காரர்களை தனியே கொண்டு போய் திருத்தற மாதிரி கதை எம். ஜி. ஆர் படம் மாதிரி இருக்கே.., அதில் அண்ணா மேல் சத்தியம் வேறு செய்வார்கள். அதுவும் இந்தியில் இருந்து ரீமேக்கியது..,

    ReplyDelete
  2. //ஓட்டோ பேசிப் பேசியே பேங்க் மேனேஜர்களுக்கு எல்லாம் பணத்து மேல வெறுப்பு வர்ற மாதிரி பண்ணிடுவான்.(இந்த மாதிரி ஒரு ஆளு தமிழ்நாட்டுல இருந்தா நல்லா தான் இருக்கும்.ஹூம்....)



    அதுக்கு பின்ன, மேனேஜரே போய் லாக்கர்ல இருக்குற பணத்த எல்லாம் சத்தமில்லாம எடுத்துக் கொடுத்துடுவான்//


    சூப்பர் நாட் அண்ணாச்சி, இத வைச்சே சூப்பரா ஒரு கதை பண்ணிடலாம்..,

    ReplyDelete
  3. //எல்லா குற்றவளிங்களும் மன நோயாளிங்கன்னு சொல்ற.சுத்த குடாக்கு தனமா இல்ல இருக்கு.

    ஓட்டோ:உங்க மொழியின் நுணுக்கங்கள் எனக்கு இன்னும் புரியல.கொஞ்சம் புரியற மாதிரி செப்பரிங்களா சாமி?//

    இப்ப செப்புங்கறதே தமிழ் இல்லைண்ணு பேசிக்கறாங்க கவனிச்சீங்களா..,

    ReplyDelete
  4. //சேச்சே,3-07 க்கு வர வேண்டிய train வழிப்பறி முடிஞ்சு டான்னு 4-35 க்கு வந்துடும்.//

    வழிப்பறிங்கறது அமெரிக்காவில் அவ்வளவு இயல்பான விஷயமா அண்ணாச்சி..,

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  6. யோவ்.. நல்லாயிருக்கையா..

    என்ன? கொஞ்சம் அலைன் பண்ணி அழகுப்படுத்தியுருக்கலாம்..

    இனியாவது, ஏதாவது சொல்லனுமுனா , பண்ணிட்டு சொல்லு..
    சொல்லிட்டு , அப்புறம் மெதுவா , பண்ணாதே..
    ஏன்னா.. நாங்க டெரரு...

    ReplyDelete
  7. கோசினி மற்றும் மோரிஸின் வெற்றி கூட்டணியில் உருவான லக்கிலூக் அட்டகாசங்களில் இதுவும் ஒன்று. டாக்டர் மற்றும் அவரின் பேஷன்டுகள் என்று கதையை அருமையாக நகர்த்தியிருப்பார்கள்.

    பதிவோடு, சில டயலாக்குகளையும் தெளித்திருக்கீங்க.. படங்களுடன் அதை பார்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    கொஞ்சம் பதிவை சீராக அமைத்திடுங்கள், படிக்க எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  8. You are right Mr.Rafiq. Indeed,this is one of the best of lucky luke.
    I wanted to include pics.But, as I don't have a scanner,I wasn't able to upload the pics.

    ReplyDelete
  9. நண்பரே,

    சிறப்பான பதிவு. அடுத்த முறை பதிவிடும்போது ஸ்கான்கள் வேண்டுமெனில் தயங்காது மெயில் செய்யவும். என்னிடம் இருந்தால் கட்டாயம் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  10. நண்பரே,
    எனக்கு மிகவும் பிடித்த கதை இது.

    இந்த கதை லயன் காமிக்ஸில் விளம்பரம் படுத்தப்படாமல் வந்த ஒரு கதையாகும். ஆமாம், ஆண்டுமலராக ரத்தப் படலம் கதை வர வேண்டிய நேரத்தில் ஒரிஜினல் கதை பிரான்சில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அவசரத்திற்கு இந்த கதையை இரு வண்ணத்தில் வெளியிட்டார் ஆசிரியர்.

    இருந்தாலும் இந்த கதையின் சிறப்பு காரணமாக அந்த வண்ண குறைபாடு தெரியவே தெரியாது. அந்த அளவுக்கு சிறப்பான ஒன்றாகும். மேலும் புரட்சி தீ கதைக்கு பிறகு லக்கியின் இரண்டாவது சிறந்த கதை இது என்பது என்னுடைய கருத்து.

    என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  11. நண்பரே,
    எனக்கு மிகவும் பிடித்த கதை இது.

    இந்த கதை லயன் காமிக்ஸில் விளம்பரம் படுத்தப்படாமல் வந்த ஒரு கதையாகும். ஆமாம், ஆண்டுமலராக ரத்தப் படலம் கதை வர வேண்டிய நேரத்தில் ஒரிஜினல் கதை பிரான்சில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அவசரத்திற்கு இந்த கதையை இரு வண்ணத்தில் வெளியிட்டார் ஆசிரியர்.

    இருந்தாலும் இந்த கதையின் சிறப்பு காரணமாக அந்த வண்ண குறைபாடு தெரியவே தெரியாது. அந்த அளவுக்கு சிறப்பான ஒன்றாகும். மேலும் புரட்சி தீ கதைக்கு பிறகு லக்கியின் இரண்டாவது சிறந்த கதை இது என்பது என்னுடைய கருத்து.

    என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  12. sure friend. i will mail you next time.and you were right about the fast moving of this story.By far,this is my personal favorite.

    P.S:I haven't read puratchi thee story yet.

    ReplyDelete
  13. தல கொஞ்சம் காமிக்ஸ் படம் போட்டு இருக்கலாம்ல
    லக்கி லுக் ஓட படம்தான் சூபரா இருக்கும்
    எனி வே ரொம்ப நாள் கழிச்சு காமிக்ஸ் , தேங்க்ஸ் இல்லூ

    ReplyDelete
  14. விஸ்வா சொல்வதைப் போல், அவசரமாக வெளிவந்த ஒரு கதை இது. ரசித்துப் படித்திருக்கிறேன். மிகவும் காமெடியான ஒரு கதை. படு சுவாரஸ்யமாக வேறு போகும் . .எனக்கு மிகவும் பிடித்த லக்கி லூக் கதைகளில் இதுவும் ஒன்று. சூப்பர் !!

    ReplyDelete
  15. நண்பரே,

    சிறப்பான பதிவு. கதையிலிருந்து நீங்கள் தந்திருக்கும் வசனங்கள் அருமை. உங்கள் எழுத்து நடையே கிச்சு கிச்சு மூட்டுகிறது,பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. விமர்சனம் சிறப்பாக உள்ளது.. வாங்கிப் படிக்க முயற்ச்சிக்கிறேன்.. நகைச்சுவை நல்ல விஷயமே..

    எனக்குப் பொதுவாக தமிழ் காமிக்ஸ்களான மாயாவி, காப்டன் கார்த் போன்ற புத்தகங்கள் தான் சிறு வயதில் கிடைத்தன.. அதனால் இந்த அனுபவம் எனக்கு இல்லை..

    //மக்கா....தலைப்ப பாத்துட்டு இது ஏதோ சுய முன்னேற்ற கட்டுரைன்னு தப்பா நெனச்சுட வேண்டாம். அந்த அளவுக்கு எனக்கு மொக்க போடுற தெறமையோ,பீலா விடற புத்திசாலித்தனமோ கெடயாது.//

    உள்குத்து எதுவும் இல்லையே..?

    ReplyDelete
  17. //வாங்கிப் படிக்க முயற்ச்சிக்கிறேன்..//

    Thanks prakash.this book is still available with lion comics office in sivakasi.you can get it from them by money order.you just missed all these comics in chennai fair.
    and this is their phone number.
    04562272649.

    the specialty of lion and muthu comics were to have a wide variety of heroes and stories.

    //உள்குத்து எதுவும் இல்லையே..?//

    :)

    ReplyDelete
  18. அருமையாக இருக்கு

    ReplyDelete
  19. நண்பரே,
    இந்த கதையை சமீபத்தில் தான் படித்தேன்.பழைய புத்தக கடையில் கிடைத்தது.அட்டகாசமாக இருந்தது .

    டாக்டரின் கோணங்கிதனத்தால் லக்கிலூக் கோவப்படும் இடங்களில் வசனங்கள் அருமையாக இருக்கும்.

    அப்புறம் பாஸ் ஒரு விஷயம் கொஞ்சம் பெரிய அட்டைப்படமா போடுங்க.டெம்ப்லேட் மத்தலாமே..

    அன்புடன்,
    லக்கி லிமட்

    ReplyDelete
  20. நல்ல பதிவு.. நல்லா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  21. இல்லுமி...

    இது என்னோட டர்ன்... நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்.. நீ வந்து பாரப்பு....

    ReplyDelete
  22. ஏன் இங்கிலீஷ் கமெண்ட்ஸ் போட்டு கொல்ற, பட்டு இதல்லாம் கேட்கறது இல்லையா

    ReplyDelete
  23. சீக்கிரம் படிக்கிறேன்

    ReplyDelete
  24. yela nalla pathivula.... next mulu neela kathaiya pathi yeluthu. yaravathu yen favorite''puratchi thee'' pathi yeluthngappa. mr.r.s.k.

    ReplyDelete
  25. Replies
    1. http://www.amazon.com/Cure-Daltons-Lucky-Luke-Adventures/dp/1849180342/ref=sr_1_1?ie=UTF8&qid=1352241578&sr=8-1&keywords=a+cure+for+daltons

      Delete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........