Posts

Showing posts with the label சாண்டில்யன்

கடல்புறா 3 – புயல் விடு தூது....

Image
      ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான். அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்...

கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….

Image
                                                                                      தழுவி நழுவும் கடல் அலையோ                                                          தூரத் தெரியும் கல் மலையோ?     அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷ...

கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...

Image
    “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ”                                 -கலிங்கத்துப்பரணி. பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட.. மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்.. காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை. தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, த...