The Dark Knight – At war...


dark-knight-posters

Friends, this post marks the end of the batman post trilogy. I hope this ride would have been an enjoyable one.Needless to say,this is as bigger as the Killing joke post,as these two had been my dream posts.There are two views here on the story.The brief one and the complete one.Read whatever you may and go on to see the impact of killing joke on this movie.  Now, let us get on with the post.

**********************************************************************
whysoserious1 Batman Begins இன் தொடர்ச்சியான இந்தப் படம்,அந்தப் படத்தில் வரும் சம்பவங்களுக்கு சில காலம் பின்னே தொடங்குகிறது.என்னதான் பேட்மேன் தேடப்பட்டுக் கொண்டிருப்பவன் என்று சொல்லப்பட்டாலும்,குற்றம் மலிந்த கோதம் நகரை காக்க அவனது உதவியை ஏற்றுக் கொள்கிறார்கள் போலீசார்.

பேட்மேனின் தொடரும் அதிரடியால் கோதம் நகரில் குற்றங்கள் குறைகிறது.மக்கள் இரவு வெளியே செல்ல பயந்த காலம் சென்று,கிரிமினல்கள் இரவு செல்ல பயப்படத் தொடங்குகிறார்கள்.ஆனால்,இவை அனைத்தும் ஒரே ஒரு குற்றவாளியின் மூலம் சீர்குலையக் கூடிய அபாயம் ஏற்படுகிறது.அவன்… ஜோக்கர்!

எப்போதும் mob பேங்க்களை மட்டும் கொள்ளை அடிக்கும் ஜோக்கர்,போலீசாரால் எவ்வளவு தேடப்படுகிறானோ,அதே அளவு குற்றவாளிகளாலும் தேடப்படுகிறான்.அதே நேரம்,கோதம் நகருக்குப் புதிதாக வந்திருக்கும் District Attorney யான ஹார்வி டென்ட்,கலங்கா நெஞ்சத்துடனும்,யாருக்கும் தலைகுனியாத குணத்துடனும்,சட்டத்தை நிலைநிறுத்த பாடுபடுகிறான்.

கோதம் நகரின் கிரிமினல்களை மொத்தமாக வேரறுக்க பேட்மேனின் உதவியோடு ஒரு திட்டத்தை நிறைவேற்றுகிறான் கோர்டன்.இந்த முறை அவர்கள் குறிவைப்பது மாப்பின் பணத்தை.பணம் இல்லாத கிரிமினல்களை எளிதில் அடக்கமுடியும் என்பதாலேயே,அடையாளப்படுத்தப்பட்ட டாலர்களை கிரிமினல்களின் மத்தியில் புழக்கத்தில் விட்டு,அதனை trace செய்து கிரிமினல்கள் தங்கள் பணத்தை ஒளித்து வைக்கப் பயன்படுத்தும் ஐந்து mob பேங்க்குகளை கண்டுபிடிக்கிறான்.அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் ரெயிட் செய்து,அந்தப் பணம் அனைத்தையும் கைப்பற்றுவதே கோர்டனின் நோக்கம்.ஆனால்,கிரிமினல்களுக்கு உதவிசெய்யும் Lau எனப்படும் ஒருவன்,அந்தப் பணத்தை ஏற்கனவே அப்புறப்படுத்தி,கோதம் நகரின் போலீசாருக்கு எட்டாத வகையில்,தன்னோடு ஹாங் காங் கொண்டு சென்று விடுவான்.

அதேநேரத்தில்,கிரிமினல்களை தேடிச்செல்லும் ஜோக்கர்,அவர்களின் தீராத தொல்லைகளுக்கு காரணமான பேட்மேனை தான் கொல்வதாகவும்,அதற்கு சன்மானாக தனக்கு அவர்கள்,தங்களின் மொத்தப் பணத்தில் பாதியை தரவேண்டும் என்றும் கேட்பான்.மாப் தயங்கும்.

இந்நேரத்தில்,ஹாங் காங்கிற்கு Lau வை தேடிச் சென்று அவனைப் பிடிக்கும் பேட்மேன்,அவனை கோதம் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைப்பான்.Lau விடம் இருந்து பெற்ற தகவல்களின் மூலம்,டென்ட் 500 கிரிமினல்களை கைதுசெய்வான்.இதனால் டென்ட்டின் மேல் மக்களின் நம்பிக்கை கூடும்.இருள் நிரம்பிய கோதம் நகரின் சிறு வெளிச்சமாவான் டென்ட்.பேட்மேனுக்கும் டென்ட்டின் மீது நம்பிக்கை பிறக்கும்.டென்ட் இருக்கும்போது,இந்த நகரத்திற்க்கு  தான் கூட அவசியமில்லை என்பதையும்,தன்னால் தர முடியாத நம்பிக்கையை,டென்ட்டால் மக்களுக்குத் தர முடியும் என்றும் உணர்வான்.இதையே தனது காதலி ரேசெலிடம் சொல்லும் அவன்,முன்னரே முடிவு செய்து இருந்ததைப் போல,பேட்மேனுக்கு விடுதலை கொடுத்துவிட்டு,திருமணம் செய்துகொள்ள அவளை அழைப்பான்.ஆனால்,சமீப காலமாக டென்ட்டின் பழக்கதால் சஞ்சலத்தில் இருக்கும் ரேசெலிடம் அதற்கான பதில் இருக்காது.

Lau வின் துரோகத்தால் வெறி கொண்டிருக்கும் மாப்,ஜோக்கரை வேலைக்கு அமர்த்துவார்கள்.ஜோக்கரின் கொலைவெறிக்கு சாதாரண மக்கள் மட்டுமல்லாது,போலீஸ் கமிசனரும்,500 பேரை உள்ளே தள்ள உதவியாக இருந்த நீதிபதியும் கூட கொல்லப்படுவார்கள்.தன்னுடைய வெறி ஆட்டத்திற்கு ஈடாக அவன் கேட்பது ஒன்றே.

பேட்மேன், தான் யார் என்று உலகறியச் செய்ய வேண்டும்.

ஜோக்கேரை பிடிக்க வேறுவழி தெரியாத பேட்மேன்,தன்னைத் தேடி அவன் வரும்போது அவனைப் பிடிக்கும் எண்ணத்தோடு,தான் யார் என்பதை உலகுக்கு அறிவிக்க ஒப்புக்கொள்ளுவான்.ஆனால்,பேட்மேனை காவு கொடுக்க விரும்பாத டென்ட்,தானே பேட்மேன் என்று சொல்லி சரண் அடைவான்.டென்ட்டை தேடி வரும் ஜோக்கரை பிடித்த சில மணி நேரத்திலேயே, ரேசெலும்,டென்ட்டும் காணாமல் போவார்கள்.டென்ட்டை மீட்க முடிந்தாலும்,ரேசேல் இறந்துவிடுவாள்.தனது முகம் அகோரமானதின் கோபத்தை விட,ரேசேலின் இறப்பால்  அதிக கோபத்திலும்,வெறியிலும் இருக்கும் டென்ட்,பழிவாங்க ஆரம்பிப்பான்.

ஜோக்கரை பிடிக்க முடிந்ததா,டென்ட் என்னவானான்?இதற்கு விடை தருகிறது படத்தின் இறுதிப் பகுதி.
**********************************************************************

இந்தப் படத்தின் ஆரம்பமே ஒரு கெத்தான ஒன்று.ஸ்லோ டெம்போ மியூசிக் கேட்க,ஒரு பில்டிங்கை நோக்கிப் போகும் கேமரா.சடாரென ஒரு கண்ணாடி ஜன்னல் உடைய,அங்கே முகமூடி போட்டுக்கொண்டு ஒருவன் நிற்பான்.தொடரும் காட்சிகளில்,ஒரு பேங்க் கொள்ளை கண் முன்னே விரியும்.அந்த பேங்க் கொள்ளைக் காட்சி எவ்வளவு பரபரப்பனதோ அவ்வளவு சஸ்பென்ஸ் நிறைந்தது அந்த மியூசிக்.

தொடரும் காட்சிகளில் கண்முன்னே விரியும்,ஜோக்கரின் பிளான்படி நடக்கும்,ஆனால் அவன் கலந்து கொள்ளாத,அந்தக் கொள்ளையில் நமக்கு ஜோக்கரின் கேரக்டர் நன்றாக தெரிந்துவிடும்.
The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_00.04.34_[2010.08.27_10.03.02] 
மொத்தம் கொள்ளை அடிக்கப் போனது ஐந்து பேராக இருக்கும்.கொள்ளையின் போது pair ஆக செயல்படுவார்கள் இவர்கள்.கொள்ளை நடந்து கொண்டு இருக்க இருக்க,அந்த கொள்ளைக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாலேயே கொல்லப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.ஜோக்கேரின் பிளான்,ஆள் குறையக் குறைய ஷேர் குறையும் என்பதே.

கொள்ளை நடக்க நடக்க தான் தெரியும்,கொள்ளை அடிக்கப்படுவது ஒரு mob bank என்று.ஒருபக்கம் கொள்ளையும்,மறுபக்கம் கொலையும் நடந்து கொண்டே இருக்க,முடிவில் மிஞ்சி நிற்பது ஒரே ஒருவனாக இருக்கும்.அது ஜோக்கர்.பிளான் கொடுத்ததோடு நில்லாமல்,எல்லாப் பணத்தையும் தானே எடுத்துக் கொள்ளும் வகையில் பிளான் அமைத்துக் கொடுத்து,அவர்களுக்கே தெரியாமல் முகமூடி போட்டு கூடயே சென்று,கொன்று,மொத்தத்தில் அனைத்தையும் அள்ளிக் கொள்ளுவான் ஜோக்கர்.

அந்த பேங்க் கொள்ளைக் கட்சியிலேயே தெரிந்து விடும்,இந்தப் படம் சாதாரணமானது அல்ல என்று.நான் பார்த்த மிகச் சிறந்த காட்சிகளில் அதுவும் ஒன்று.

ஜோக்கேரின் அறிமுகக் காட்சிக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல பேட் மேனின் The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_00.09.48_[2010.08.27_10.05.23]அறிமுகம்.ஒரு போதைப் பொருள் டீலிங் நடந்துகொண்டு இருக்கும்போது பேட் மேன் தோன்றும் அந்தக் காட்சி அருமையானது.குறிப்பாக,மேலே இருந்து,கீழே சென்ற கொண்டு இருக்கும் வேனில் பேட் குதிக்கும் காட்சி.

மாப் மெம்பர்களை நிலைகுலையச் செய்ய ஒரு பிளான் போட்டு இருப்பார்கள் பேட்டும்,கோர்டனும்.கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் செய்யப்பட்ட டாலர்களை கிரிமினல்களின் மத்தியில் புழங்கவிட்டு,அதன் மூலம் mobsters பயன்படுத்தும்,அவர்களது கைப்பிடியில் இருக்கும் ஐந்து பேங்க்களை கண்டுபிடிக்கும் அவர்கள்,ஒரே நேரத்தில் அங்கே சென்று மாப் ஆட்களின் மொத்தப் பணத்தையும் கைப்பற்ற  நினைப்பார்கள்.இதற்கு உறுதுணையாக இருப்பான் ஹார்வி டென்ட் என்னும் புதிய District Attorney.

ப்ரூஸ் வெயின் ஆக செயல்பட்டு,சந்தேகத்துக்கு இடமான ஒரு சீன ஆளை கண்டுபிடிப்பான் பேட்.இந்தச் சீன ஆளே கோதம் நகரின் mobsters அனைவரின் பணத்தையும் கையாள்பவன்.

பேங்க் ரெயிட் திட்டமிட்டபடி நடக்கும்.ஆனால்,அவர்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட mobsters,தங்கள் பணத்தை அந்த பேங்க்களில் இருந்து நகர்த்தி இருப்பார்கள்.இதன் பின்னணியில் இருந்து,இதனை நடத்தியவன் அந்த சீனனே.
The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_00.22.18_[2010.08.27_10.08.37] 
அங்கே ரெயிட் நடந்துகொண்டு இருக்கும்போது,இன்னொரு இடத்தில் கிரிமினல்களின் கூட்டமும் நடந்து கொண்டு இருக்கும்.அதில் வெப்காம் மூலம் பேசும் அந்தச் சீனன்,கோதம் நகரின் போலீஸ் கையில் அந்தப்பணம் மாட்டாது இருக்க,தான் உடனே ஹாங் காங் செல்வதாகவும்,அவர்களது பணம் தன்னிடம் பத்திரமாக இருக்கும் என்றும் உறுதி கூறிக்கொண்டு இருக்கும்போது,அங்கே நுழைவான் ஜோக்கர்,நக்கலாக சிரித்துக்கொண்டே .அப்போது அவன் சொல்லும் punchline மகா நக்கல் பிடித்தது.

“And I thought my jokes were bad.”

என்று சொல்லிவிட்டு,திரையில் தெரியும் அந்த சீனனை பார்ப்பான் அவன்.ஒருவருடத்திற்கு முந்திய கோதமின் நிலைமையை நினைவு கூறச் சொல்லும் ஜோக்கர் ,அப்போது ஜனங்களுக்கும் போலீசுக்கும் மாப் மேல் இருந்த பயம் இப்போது போனது ஏன் என்று கேட்பான்.அந்தச் சீனன் Lau எங்கே சென்றாலும் அவனை பின்தொடர்ந்து சென்று அவனை பேச வைப்பான் பேட் மேன் என்றும் சொல்லுவான். மக்கள் இரவில் வெளியே செல்ல பயப்பட்ட காலம் சென்று,இப்போது கிரிமினல்கள் வெளிய செல்ல பயப்படும் காலம் உருவாக காரணமாக இருக்கும் பேட் மேனை கொல்வதாகக் கூறும் அவன்,அதற்கு சன்மானமாக அவர்களின் பணத்தில் பாதியைக் கேட்பான்.

It's simple. We, uh, kill the Batman.
If it's so simple, why haven't
you done it already?
If you're good at something,
never do it for free.
How much you want?
Uh, half.

டென்ட்டிடம் Lau வை கொண்டுவருவதாக சொல்லும் பேட், Lau வை தேடி ஹாங் காங் செல்வான்.சொன்னதை போலேயே அவனைக் கொண்டு வருவான் பேட்.அந்தக் காட்சி எனக்கு மிகப் பிடித்த ஒன்று.முக்கியமாக அதில் வரும் timing,the use of that cell phone and the escape plan.அது இங்கே.
Lau பிடிபட்டதைக் கண்ட mobsters,ஜோக்கரை வேலைக்கு அமர்துகிறார்கள்.கோதம் நகரில்,Lau வின் உதவியோடு டென்ட் அனைத்துக் குற்றவாளிகளை(500 பேர்) கைது செய்கிறார்.இதனைக் கண்டு இம்ப்ரெஸ் ஆகும் பேட்மேன்,ப்ரூஸ் ஆக டென்டிற்கு ஒரு நிதியுதவிக் கூட்டம்(Fundraiser Party) ஏற்பாடு செய்கிறார்.அங்கே தனது காதலியான ரேச்சலிடம், டென்ட் இருக்கும்போது இனி பேட்மேனிற்கு வேலை இருக்காது என்று சொல்லும் அவர்,தாங்கள் முன்னரே பேசிக்கொண்டது போல,பேட்மேனிற்கு விடைகொடுத்துவிட்டு,திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறார்.ஆனால் ரேச்சலிடம் எந்த பதிலும் இல்லை.

அதே நேரம்,குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு கொடுத்த ஜட்ஜும்,போலீஸ்The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_00.50.34_[2010.08.27_10.15.23] கமிசனரும் ஜோக்கரின் ஆட்களால் கொல்லப்பட,ஜோக்கர் டென்டை தேடி வருகிறான்.ஆனால் டென்டோ அங்கே ரேச்செலிடம் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளக் கேட்கிறான்.அந்நேரம் அங்கே நுழையும் ப்ரூஸ்,டென்டை மயக்கபடுத்தி பத்திரப்படுதுகிறான்.ரேச்செலை பிடித்துக்கொள்ளும் ஜோக்கரிடம் இருந்து அவளை மீட்கிறான் பேட்.

The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_00.51.39_[2010.08.27_10.19.42] 
ப்ரூஸுக்கும் ஆல்பிரெட்க்கும் ஜோக்கரைப் பற்றி நடக்கும் விவாதத்தில் ஒரு கதை சொல்லுவான் ஆல்பிரெட்.பல காலத்திற்கு முன்னர்,பர்மாவில் ஆல்பிரெட் பர்மா அரசுக்கு வேலை பார்த்தபோது,அந்நாட்டு தலைவர்களுக்கு (tribal leaders) லஞ்சமாகக் கொடுக்க இருந்த சில அரிய கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததாகவும்,அதனைத் தேடி அவர்கள் சென்றதாகவும் சொல்கிறான்.ஆறு மாதம் தேடியும் அந்த வைரங்கள் எந்த கள்ளச் சந்தையிலும் தென்படாததை கண்டு குழப்பம் அடையும் அவர்கள்,ஒரு நாள், ஒரு சிறு குழந்தை ஒரு ரூபி கல்லை வைத்து விளையாடிக்கொண்டு இருப்பதை காண்கிறார்கள்.அப்போதுதான் அவர்களுக்கு தெரிகிறது,அந்த கொள்ளைக்காரன் எல்லாக் கற்களையும் தூக்கி எறிந்துவிட்டுச் சென்று இருக்கிறான் என்று.அப்போது ப்ரூஸ் கேட்பார், ‘பின்னே எதற்கு அவன் கொள்ளையடித்தான்?’ என்று.அதற்க்கு ஆல்பிரெட் சொல்லுவார், “அவனுக்கு அது ஒரு நல்ல பொழுதுபோக்காக தோன்றியது.” என்று.மேலும்,அவர் சொல்லுவார் ‘சிலர் பணத்தை தேடுவதில்லை.அவர்களை தடுக்கவோ,பயமுறுத்தவோ,பயப்படவோ வைக்க முடியாது.அவர்களுக்கு தேவையானது நாசம்” என்று சொல்லிக் கொண்டு இருக்க பின்னணியில் கம்ப்யூட்டர் திரையில் தெரியும் ஜோக்கரின் உருவம்.

இதற்கிடையே நகர மேயரை இறந்துபோன கமிசனரின் இறுதி ஊர்வலத்தில் வைத்துக் கொல்லப்போவதாக தகவல் கொடுப்பான் ஜோக்கர்.மேயரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தாலும்,கோர்டனைக் காப்பாற்ற முடியாது போய்விடும்.ஜோக்கரின் பிடிபட்ட சகாக்களில் ஒருவனைப் பார்க்கும் டென்ட்,அவனது பெயர்ப்பட்டையில் ரேச்சேலின் பெயர் இருப்பதைக் காண்பான்.அடுத்த குறி அவள் என்பதை உணர்ந்து கொள்வான்.மேலும்,பேட்மேன் தான் யார் என்று உலகிற்கு வெளிப்படுத்தினால் தான் தன் வெறியாட்டம் குறையும் என்று சொல்வான்.
இதற்கிடையே ஜோக்கரை தேடியும்,அவனைப் பற்றிய தகவல்களை தேடியும் அலைவான் பேட்.ஆனால்,கிரிமினல்கள் அனைவரும் அவனைவிட ஜோக்கேரின் மேல் அதிக பயம் கொண்டு இருப்பதைப் பார்ப்பான்.டென்டை சந்திக்கும் பேட்,ஜோக்கேரை பிடிக்க ஒரேவழி, தான் யார் என உலகத்துக்கு வெளிப்படுத்தி சரண் அடைவதே என்று சொல்லுவான்.தன்னை கொல்ல ஜோக்கர் வரும்போது அவனைப் பிடித்து விடலாம் என்பது பேட்டின் கணக்கு.அதற்காக,அடுத்த நாள் ஒரு கூட்டத்தைக் கூட்ட சொல்லுவான் பேட்.அதில் தான் சரண் அடைவதாகவும் கூறுவான்,மேலும்,கோதம் நகரின் உண்மையான ஹீரோ டென்ட் தான் எனக் கூறும் பேட்,கோதம் நகரின் மக்களுக்கு டென்ட் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்றும் கூறுவான்.டென்ட் குற்றத்தை எதிர்த்து புரியும் போர்,பலரின் மனதில் நம்பிக்கையை விதைத்து இருப்பதாக கூறும் பேட்,தன்னால் தரமுடியாத நம்பிக்கையை டென்ட் மக்களுக்குக் தந்து உள்ளதாகக் கூறவும் செய்வான்.

பின்னர் தன் மறைவிடத்துக்குச் செல்லும் பேட்,தன்னை ரேச்சலோடோ,லூஸியசோடோ இணைக்கும் ஆதாரங்களை அழிப்பான்.அப்போது ஆல்பிரெடிடம் தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்பான் ப்ரூஸ்.அவனை சரண் அடையவேண்டாம் எனச் சொல்லும் ஆல்பிரெட்,பிறர் எடுக்கத் துணியாத முடிவுகளை எடுக்க பேட்மேனால் முடியும் என்றும் சொல்கிறார்.

B: People are dying, Alfred.
What would you have me do?
A: Endure, Master Wayne. Take it.
They'll hate you for it,
but that's the point of Batman.
He can be the outcast. He can make
the choice that no one else can make.
The right choice.
B: No, today I found out
what Batman can't do.
He can't endure this.
The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_01.09.11_[2010.08.27_10.22.11] 
ஆனால்,ஒப்புக்கொள்ள மறுக்கும் ப்ரூஸ்,அடுத்த நாள் அந்தக் கூட்டத்திற்கு செல்கிறான்.அங்கே டென்ட் தன் பேச்சினால்,மக்களை சமாதானப்படுத்த எவ்வளவோ போராடுகிறான்.ஆனால்,பேட்மேன் சரண் அடைந்தே ஆக வேண்டும் என மக்கள் கொதிக்க,தான் தான் பேட்மேன் என்று சொல்லி சரண் அடைகிறான் டென்ட்.டென்டை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது தாக்கும் ஜோக்கரை பிடிக்கிறான் பேட்,இறந்துபோனதாகக் கருதப்படும் கோர்டனின் உதவிகொண்டு.(இதில் மயிர்க்கூச்செறிய வைக்கும் action காட்சிகள் உண்டு.குறிப்பாக அந்த பைக்கை வைத்து பேட் ஒரு லாரியை கவிழ்த்தும் விதம்.)அது இங்கே...

ஜோக்கர் பிடிப்பட்ட சில நேரத்திலேயே டென்ட் காணாமல் போகிறார்.பிடிபட்ட ஜோக்கரிடம் விசாரணை நடத்த முயலும் கோர்டனிடம் ‘நான் இங்கே தானே இருந்தேன்.எனக்கு என்ன தெரியும்?’ என்று கெக்கலித்துச் சிரிக்கிறான் ஜோகர்.
G:Harvey Dent never made it home.joker-clap-dark-knight
J:Of course not.
G:What have you done with him?
J:Me?
I was right here.
G:Where is he?
J:What's the time?
G:What difference does that make?
J:Well, depending on the time,
he may be in one spot or several.

கோர்டன் ஜோக்கரை பேட்மேனிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்க,ஜோக்கேரை ‘விசாரிக்கிறான்’ பேட்.அப்போது,பேட் ஜோக்கேரிடம் “என்னை ஏன் கொல்ல நினைக்கிறாய்?” எனக்கேட்கும் கேள்விக்கு ஜோகர் சொல்லும் பதில்,பேட்மேனை அவன் துரத்துவதற்க்கான காரணத்தை சொல்லுகிறது.
-Then why do you wanna kill me?
-I don't wanna kill you.
What would I do without you? Go back
to ripping off Mob dealers? No, no.
No. No, you....
You complete me.
-You're garbage who kills for money.
-Don't talk like one of them. You're not.
Even if you'd like to be.
To them, you're just a freak...
...Like me.
They need you right now...
...but when they don't...
...they'll cast you out like a leper.
You see, their morals, their code...
...it's a bad joke. (கில்லிங் ஜோக்கின் inspiration.)
Dropped at the first sign of trouble.
They're only as good as the world
allows them to be. I'll show you.
When the chips are down, these--
These civilized people...
...they'll eat each other.
See, I'm not a monster.
I'm just ahead of the curve.

நான் கேட்டு அசந்த வசனம் ஜஸ்ட் மேலே கருப்பில் இருக்கும் இந்த வசனம்.கடத்தப்பட்ட டென்ட் எங்கே என பேட் கேட்க,’கடத்தப்பட்டவர்களில்’ ஒருவரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடியும் என்று கூறும் அவன்,தான் ரேசெலையும் கடத்தியதாக சொல்கிறான்.அவர்கள்,இருவரும் வெவ்வேறு இடத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருப்பதாகக்க் கூறும் ஜோக்கர்,அந்த இடங்களையும் கூறுகிறான்.ஆனால்,ஒருவர் மட்டுமே பிழைப்பார் என்று கெக்கலிக்கிறான்.

கடத்தப்பட்ட இருவரும் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்து இருக்கிறான் ஜோக்கர்.கட்டப்பட்ட நிலையில் உள்ள இருவருக்கும் அருகில்,ஸ்பீக்கர் போன் வைத்து இருக்கிறான்.அந்த சிக்கலான தருணத்தில்,டென்ட்டிடம் ரேசேல், தான் அவனைக் காதலிப்பதாகக் ஒப்புக்கொள்கிறாள்.

தன் காதலி ரேசெலை காப்பாற்ற அவள் இருக்கும் இடம் நோக்கி விரையும் பேட்,அங்கே ரேசெலுக்கு பதில் டென்ட் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.உண்மையை அறிந்து கொண்ட ஜோக்கர்,வேண்டும் என்றே விளையாடி இருப்பதை அறிகிறான்.அவனைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றாலும்,டென்ட்டின் ஒரு பகுதி முகம் சிதிலமடைந்து விடுகிறது.ஆனால்,ரேசெலுக்கு அந்த அதிர்ஷ்டம் கூட இல்லாமல் போகிறது.ரேசெலை தேடித் போகும் போலீஸ் அதிகாரிகள் தாமதமாப் போக,இறக்கிறாள் ரேசேல்.தான் ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி Lau வுடன் தப்பிக்கிறான் ஜோக்கர்.அவன் மாட்டிக்கொண்டதும் வேண்டுமென்றே என்று தெரிய வருகிறது.

தன் ‘முன்னாள்’ காதலி ரேசேல் இறந்த சோகத்தில் பேட்மேன் ஆழ்ந்து இருக்க,ரேசேல் ஏற்கனவே தன்னிடம் கொடுத்து விட்டுச் சென்ற கடிதத்தின் மூலம்,உண்மை தெரிந்த ஆல்பிரெட், இந்த உண்மை ப்ரூசை பாதித்துவிடுமோ என்று அதை அவனிடம் இருந்து மறைக்கிறார்.

ஹாஸ்பிடலில் டென்ட் மிகவும் கோபத்தில் இருக்கிறான்.தனது முகம் அகோரமானதை விட ரேசெல் இறந்ததாலேயே அவனுக்கு கோபம் அதிகமாயிருக்கிறது.பிறிதோர் இடத்திலோ,ஆல்பிரெட் சொன்னதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறான் ஜோக்கர்.Lau வை கடத்தி வந்ததற்கு சன்மானாக கொடுக்கப் பட்டப் பணத்தை தீயில் கொளுத்தி சிரிக்கிறான் ஜோக்கர்.

-Joker-man, what you do
with all your money?The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_01.39.48_[2010.08.27_10.34.49]
-You see, I'm a guy of simple taste.
I enjoy...
...dynamite...
...and gunpowder...
...and gasoline.
And you know the thing
that they have in common?
They're cheap.

அதே நேரத்தில்,ப்ரூசிடம் வேலை பார்த்த,அவன் தான் பேட்மேன் என்று சந்தேகிக்கிற ரீஸ் என்னும் ஒருவன் டிவியில் பேட் யாரென்று சொல்லப்போவதாக ஒளிபரப்பப்படுகிறது.அந்த ஷோவிற்கு கால் செய்யும் ஜோக்கர்,பேட்மேன் இல்லாத வாழ்கையை தான் யோசித்துப் பார்த்ததாகவும்,அது மிகவும் சுவாரஸ்யம் அற்றதாக இருப்பதாகவும் சொல்லும் அவன்,அது நடக்காமல் இருக்க ரீஸ் இன்னம் அறுபது நிமிடத்தில் சாக வேண்டும் என்றும்,அப்படி அவனை யாராவது கொல்லாவிட்டால்,தானொரு ஹோச்பிடலை பாம் வைத்து தகர்ப்பேன் என்றும் பயமுறுத்துகிறான்.
The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_01.45.28_[2010.08.27_10.38.01] 
தங்களின் சொந்தங்களை ஹாஸ்பிடலில் கொண்டிருக்கும் மக்கள் கொந்தளிப்படைகின்றனர். சிலர் ரீசை கொல்லவும் முனைகிறார்கள்.நடக்கும் களேபரத்தில் டென்ட் இருக்கும் ஹாஸ்பிடலை அடைந்து, உள்ளே நுழையும் ஜோக்கர் அவனிடம் நைச்சியமாகப் பேசி MINDWASH செய்கிறான்.ரேசெல் இறந்தபோது தான் ஜெயிலில் இருந்ததாகவும்,அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லுவான் ஜோக்கர்.

When you and Rachel were being abducted...
...I was sitting in Gordon's cage.
I didn't rig those charges.
-Your men, your plan.
-Do I really look like a guy with a plan?
You know what I am?
I'm a dog chasing cars.
I wouldn't know what to do with one
if I caught it.
You know? I just do things.
The Mob has plans. The cops have plans.
Gordon's got plans.
You know, they're schemers.
Schemers trying to control
their little worlds.
I'm not a schemer.

டென்ட்டிடம் பேசிவிட்டு வரும் ஜோக்கர்,வரும் வழியில் ஜஸ்ட் லைக் தட்,வெடிகுண்டை வெடிக்க வைப்பான்.அதுமட்டுமல்லாது,ஒரு பஸ் நிறைய ஆட்களை கடத்தியும் விடுவான்.அவர்களோடு சேர்த்து டென்ட்டும் காணாமல் போய் இருப்பான்.

டிவியில் தோன்றும் ஜோக்கர்,அன்று இரவுக்குள் நகரை காலி செய்து செல்லுமாறு மக்களை ‘அறிவுருத்துவான்’.அதே நேரத்தில்,டென்ட் தன்னையும் ரேச்சலயும் காட்டிக்கொடுதவர்களைத் தேடி பழிவாங்க அலைந்து கொண்டு இருப்பான்.

மக்களை படகுகளில் ஏற்றி வெளியே அனுப்பிக்கொண்டு இருப்பார்கள் போலீசார்.ஒரு படகில் மக்களையும்,இன்னொரு படகில் கிரிமினல்களையும் ஏற்றி அனுப்பி வைப்பார்கள்.பயணித்துக்கொண்டு இருக்கும் போது,இரு படகுகளையும் தொர்டபுகொள்ளும் ஜோக்கர்,இரண்டு படகுகளிலும் தான் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாகவும்,ஒருவர் தப்பிக்க,நடு இரவுக்குள் மற்றொரு படகில் உள்ளவர்களைக் கொல்லவேண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவரையும் தான் கொல்வதாகவும் கூறுவான்.ஜோக்கரை பிடிக்க ஆயத்தம் நடந்து கொண்டிருக்கும் போது,ஜிம்மின் குடும்பத்தை கடத்தும் டென்ட்,ஜிம்மை ரேசேல் இறந்த இடத்திற்கு வரச்சொல்வான்.

-Huh? You won't kill me...
...out of some misplaced sense The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_02.07.27_[2010.08.27_10.40.27]
of self-righteousness. And I won't kill you... 
...because you're just too much fun.
I think you and I are destined
to do this forever.
-You'll be in a padded cell forever. 
-Maybe we could share one.

படகில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லாமல் விட்டதைக் கண்டு, தானே அவர்களைக் கொல்ல முயலும் ஜோக்கரை முறியடிக்கும் பேட்மேன்,அவனிடம் இருந்து டென்ட்டை அவன் mindwash செய்து,டென்ட்டை கொல்லத் தூண்டியதையும் அறிந்துகொள்ளுவான்.டென்ட் கொலை செய்வது வெளியில் தெரிந்தால் மக்களுக்கு அவனால் ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கை போய்விடும் என் உணரும் பேட்மேன்,டென்ட்டை தேடி விரைவான்.

I took Gotham's white knight...
...and I brought him down to our level.
It wasn't hard.
See, madness, as you know...
...is like gravity.
All it takes is a little push.

டென்ட் கோர்டனின் பையனை கொல்லப் போவதை பார்க்கும் பேட்,தடுக்க ஊடே பாய்கையில் இருவரும் சேர்ந்து மேலே இருந்து விழுவார்கள்.அதில் பேட் தப்பினாலும் கழுத்து முறிந்து இறப்பான் டென்ட்.டென்ட்டின் செய்கை தெரிய வந்தால்,குற்றம் மலிந்த அந்நகரத்து மக்களுக்கு நீதியின் மேல் ஏற்பட்டு இருக்கும் புதிய நம்பிக்கை சின்னாபின்னமாகி விடும் என உணரும் பேட்மேன்,ஆல்பிரெட் அன்றொரு நாள் தன்னிடம் சொன்னதை நினைவு கூருவான்.ஹார்வி செய்த கொலைகளுக்கான பழியினை தன்மேல் போடுமாறு,மறுக்கும் கோர்டனிடம் கூறிவிட்டு தப்பித்துப் போவான்.

BATMAN:Gotham needs its true hero.
You either die a hero...
...or you live long enough
to see yourself become the villain.

I can do those things...
...because I'm not a hero, not like Dent.
I killed those people.
That's what I can be.
GORDAN:No, no, you can't. You're not.
BATMAN:I'm whatever Gotham needs me to be.
GORDON:
They'll hunt you.
BATMAN:
You'll hunt me. You'll condemn me.Set the dogs on me.
Because that's what needs to happen.
Because sometimes...
…the truth isn’t good enough.Sometimes people deserve more.
Sometimes people deserve
to have their faith rewarded.

பேட்மேனை போலீஸ் துரத்துவதாக முடியும் படம்.கடைசியில் கோர்டன் பேசும் வசனம் இந்த படத்தின் டைட்டிலை justify செய்வதாகவும்,பேட்மேனின் கேரக்டரை சொல்லுவதாகவும் இருக்கும்.

JAMES:Why's he running, Dad?
GORDAN:Because we have to chase him. The.Dark.Knight[2008]DvDrip-aXXo.avi_snapshot_02.18.13_[2010.08.27_10.46.10]
JAMES:He didn't do anything wrong.
GORDAN:Because he's the hero Gotham deserves,
but not the one it needs right now.
So we'll hunt him...
...because he can take it.
Because he's not our Hero.
He's a silent Guardian...
...a watchful Protector.
The Dark Knight.
**********************************************************************
கோர்டன் ஆக Gary Oldman. பேட்மேனிற்கு உதவும் உற்ற நண்பன் வேடம்.நிறைவாகச் செய்திருக்கிறார்.

லூசியஸ் பாக்ஸ் ஆக Morgan Freeman.பேட்மேனிற்கு தேவையான scientific gadgets தயாரித்துக் கொடுக்கும் வேடம்.மனிதரின் நடிப்பு எவ்வகையானது என்று உலகறியும்.மகா நடிகன்.

ரேசேல் ஆக Maggie Gyllenhaal. இந்தப் படத்தில் ரேசேலின் கேரக்டருக்கு கொஞ்சம் வெயிட் அதிகம்.முக்கோணக் காதலில் சிக்கி அல்லலுறும்,தன் மனதின் ஓட்டம் தெரியாத பெண்ணின் வேடம்.நன்றாகவே செய்திருக்கிறார்.

ஆல்பிரெட் ஆக Michael Caine.பேட்மேனிற்கு உதவி புரிவது மட்டுமல்லாது,ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து ப்ரூஸ்ஸுக்கு ஆலோசனை செய்வதும்,ப்ரூஸ்ஸின் உற்ற தோழனாக இருப்பதும் என்று மனிதர் பின்னி எடுக்கிறார்.இவரது accent,dialog delivery எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஹார்வி டென்ட் ஆக Aaron Eckhart.நல்லவனாக இருந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அதிரடிக்காரன்,பழி வேட்கையில் வெறி கொண்டு அலையும் பாத்திரம்.இரண்டுவிதமான நடிப்பிலும் பின்னி இருக்கிறார்.Two face ஆக இவரது நடிப்பு அசத்தல்.மிகச்சரியான தேர்வு.

பேட்மேன் ஆக Christian Bale. Hugh Jackman க்கு எப்படி wolverine வேடம் பொருந்திப் போகிறதோ,அதைப் போல் தான் bale க்கும்.இவரைத்தவிற பேட்மேன் வேடத்தில் வேறு யாரையும் நினைக்க முடியவில்லை.ப்ரூஸ் கேரக்டருக்கு ஒரு குரலும் பாவனையும்,பேட்மேனுக்கு raspy voice மற்றும் வேறு பாவனைகளும் என்று பின்னி இருக்கிறார்.ஜோக்கரின் திட்டங்களை அறியாமல் குழம்புவதும்,டென்ட்டை கண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆசைப்படுவதும்,ரேசேலின் இறப்புக்கு வருந்தி  ‘தன்னால் தான் அவள் இறந்தாள்' என்று மருகுவதும்,ஆல்பிரெட்டிடம் ‘அவள் எனக்காகக் காத்திருந்தாள்' என்று சொல்லி கலங்குவதும் என்று பின்னி இருக்கிறார்.

ஜோக்கர் ஆக Heath Ledger. Needless to say,stunning performance.ஜோக்கராக வாழ்ந்து இருக்கிறார்.இவரைத் தவிர இனிமேல் வேறு யாராலும் இந்த அளவுக்கு ஜோக்கர் பாத்திரத்தை அருமையாக செய்ய முடியுமா என்பது சந்தேகமே.அப்பேர்ப்பட்ட dedication.ஆரம்ப பேங்க் கொள்ளை,அந்த மாப் கூட்டத்தில் பேசுவது ,டென்ட்டை நைச்சியமாகப் பேசி மாற்றுவது,பேட்மேன் உக்கிரமாக விசாரணையில் அடிக்கும் போது, “Never start with the head.The man gets all fuzzy and can’t feel the next blow.” என்று கூலாக அட்வைஸ் செய்வது ,கடைசியில் எந்தப்படகும் வெடிக்காத போது, “You have to do all the work yourself.You can’t trust anybody these days” என்று சொல்வதும்,’magic trick’ செய்யும்போதும் ….ledger ஜோக்கராக வாழ்கிறார்.அதனால் தானோ என்னவோ,ledger இன் வாழ்க்கை முடிந்துவிட்டது.
இந்தப்படத்தைப் பற்றிப் பேசும் போது,மியூசிக் பற்றியும் பேசியாக வேண்டும்.படத்தோடு பின்னிப் பிணைந்த இசை.ஜோக்கர்,பேட்மேன்,டென்ட் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இசை.

இந்தப் படத்தில் வரும் ஜோக்கர் பாத்திரம்,காமிக்ஸ்களில் வரும் பாத்திரத்தில் இருந்து வேறுபட்டதே.

காமிக்ஸில் maniacal ஆக காட்டப்படும் ஜோக்கர் இந்தப் படத்தில் dark genius ஆக காட்டப்படுகிறான்.இந்தப் படத்தில்,ஜோக்கர் அவனுடைய கிறுக்குத்தனம் குறைக்கப்பட்டு,புத்திசாலித்தனம் கூட்டப்பட்டு காட்டப்படுகிறான்.இதன் விளைவாக,மகா பயங்கரமான,எப்போதும் ஒரு அடி முன்னேயே இருக்கும் ஜோக்கரைப் பார்க்கிறோம்.Heath இன் நடிப்பு,இந்தப் பாத்திரத்தை மேலும் menacing ஆக காட்டுகிறது.எப்போதுமே ஜோக்கர்,பேட்மேன் மோதும் போதும்,அது ஒரு psycological war ஆகத்தான் இருக்கும்.இந்தப் படத்தில் அதனையே டார்கெட் செய்து இருப்பதால் நன்றாக இருக்கிறது.எப்பொழுது பார்த்தாலும் இந்தப் படம் என்னை அசத்தத் தவறுவதில்லை.

நான் ஏற்கனவே சொன்னதுபோல,தன் வாய் கிழிந்தது பற்றி ,ஒவ்வொருவருக்கும் அந்தந்த நிலைமைக்கு ஏற்ப,கேட்பவர்களை பயமுறுத்தும் வகையில் ,ஒவ்வொரு கதையை சொல்லுவான் ஜோக்கர்.அது மட்டுமல்லாது சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, ‘Why so serious?’  என்று கேட்டு கையில் கத்தி எடுக்கும்போது,முதுகுத்தண்டு ஜில்லிட்டுப் போகும்.

கதையைப் பொறுத்த வரை,பல விஷயங்கள் கில்லிங் ஜோக்கில் இருந்து எடுக்கப்பட்டவையே.இந்தப் படத்தின் கதையை சிறப்பாகக அவை பெரிதும் உதவி இருக்கின்றன.K.J யில்,பார்பராவை காயப்படுத்தி கோர்டனை பைத்தியமாக்க முயன்றதைப் போல,இங்கே ரேசெலைக் கொன்று,டென்ட்டையும் பேட்மேனையும் நிலைகுலையச் செய்ய நினைப்பான்.டென்ட் தோற்றாலும்,பேட்மேன் தோற்க மாட்டான்.

அதைப்போலவே,அடுத்தவரைக் கொல்ல வாய்ப்பு கொடுத்து,மக்களையும் வைத்து கண்ணாமூச்சி ஆடுவான்.இதையெல்லாம் விட,டென்ட்டினால் ஏற்பட்ட நம்பிக்கை அழிய வேண்டும் என்று,அவனையே கொலைகாரன் ஆக்குவான்.

K.J யின் கடைசிக் கட்டமும்,இதில் ஜோக்கரும்,பேட்டும் பேசும் கட்டமும் பெரும் ஒற்றுமைகளைக் கொண்டது.இரண்டிலுமே,பேட்மேன் தன்னைப் போல கிறுக்கனே என்பான் ஜோக்கர்.இங்கே,’Maybe we can share a padded cell.’ என்பான் படத்தில்.

அதைபோல,K.J யில் கோர்டனை பைத்தியமாக்க அவன் செய்யும் சிறு சொற்பொழிவைப் போலேயே, இதிலே டென்ட்டை கொலைகாரன் ஆக்கவும் சொற்பொழிவு செய்வான்.

K.J யில் தன்னுடைய ‘சித்தாந்தத்தை' நிலைநிறுத்த கோர்டனை உபயோகப்படுத்துவது போல,இங்கே டென்ட் மற்றும் அந்த இரு படகுளில் உள்ள மக்களை உபயோகிப்பான்.K.J யில் கடைசியில் அவனது சிரிப்பு சமூகத்தை நோக்கியதாக இருக்கும்.இங்கும் அதே.

ஆனால்,கதை என்னதான் தழுவப்பட்டு இருந்தாலும்,இத்தகைய ஒரு படத்தை கொடுக்க மிகப் பெரிய திறமை வேண்டும்.அது நோலனுக்கு இருந்ததாலேயே,இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்தது.ஏற்கனவே சொன்னதுபோல,திரைக்கதை மன்னன் நோலனின் திரைக்கதை அமைப்பும்,கேரக்டர் development உமே இந்தப் படத்தின் சிறப்புக்குக் காரணம்.ஆயிரம் படங்களை நோலன் இதற்குமேல் இயக்கலாம்.ஆனால் கதை,வசனம்,நடிப்பு என்று அனைத்திலும் சிறந்த இந்தப் படமே அவருடைய படங்களில் சிறந்ததாக இருக்கும் எனக்கு.

Dark knight- Larger than life….. 

********************************************************************************
ஆங்! எனக்கென்னவோ இங்கிலீஷ் டைட்டில் வச்சதால இன்டலி வழக்கம்போல இம்சை பண்ணும்னு தோணுது.வோட்டுப் போட நினைக்குறவங்க இங்க போய் வோட்டு போடுங்க.

http://ta.indli.com/search/dark%20knight%20-%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...


அப்புறம்,இன்ட்லி எப்பயும் போல இம்சை பண்ணினா,கில்லிங் ஜோக் மாதிரி facebook ல பகிருங்க.அப்புறம்,தமிழ்மணத்துளையும் இணைச்சு இருக்கேன். :)

Comments

  1. மீ த பர்ஸ்ட்..

    ReplyDelete
  2. அய்!வடை எனக்கு தான்..

    ReplyDelete
  3. தோசை எனக்குத்தான்...

    ReplyDelete
  4. சட்னி எனக்குத்தான்..

    ReplyDelete
  5. பீ.....ரியாணியும் தான்...

    ReplyDelete
  6. தக்காளி,ஆடுவெட்டும் எனக்குத்தான்..
    ஏலேய்,இன்னைக்கு எவனாவது template கமெண்ட் போடுங்கல..இருக்குது..

    ReplyDelete
  7. அப்புறம்,போன பதிவே பெருசா இருக்குன்னு சொன்ன ஜெய்லானி மேடைக்கு வரவும்.. ;)

    ReplyDelete
  8. கண்ணுகளா!அல்லாரும் பொறுமையா ரெண்டு நாளு லீவ்ல உக்காந்து படிச்சு முடிங்க.என்னா?

    ReplyDelete
  9. ஆங்! எனக்கென்னவோ இங்கிலீஷ் டைட்டில் வச்சதால இன்டலி வழக்கம்போல இம்சை பண்ணும்னு தோணுது.வோட்டுப் போடா நினைக்குறவங்க இங்க போய் வோட்டு போடுங்க.

    http://ta.indli.com/search/dark%20knight%20-%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...

    ReplyDelete
  10. அப்புறம்,இன்ட்லி எப்பயும் போல இம்சை பண்ணினா,கில்லிங் ஜோக் மாதிரி facebook ல பகிருங்க.அப்புறம்,தமிழ்மணத்துளையும் இணைச்சு இருக்கேன். :)

    ReplyDelete
  11. உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  12. படத்தில் வரும் கவர்ச்சிக்கன்னி சிலுக்கின் ஆட்டம் பிரமாதம் ;-)

    ReplyDelete
  13. தார்க்காடு சூராசாமி said...

    இரவே இருட்டு தானே? அப்புறம் என்ன டார்க் நைட்டு?

    ReplyDelete
  14. //சிலுக்கின் ஆட்டம் பிரமாதம்//

    சிலுக்கின் 'ஆட்டம்' தான? ;)

    ReplyDelete
  15. நடிகர் பாண்டியன் said...

    எலே! அது நைட்டு இல்லலே... அத, கினைட்டுன்னு படிக்கணும்.. எங்கூரு பிசிக்ஸ் வாத்தி சொல்லிக்குடுத்துருக்கு !

    ReplyDelete
  16. குருணாநிதி said...

    கழக உடன்பிறப்பு இலுமியே.. உன் தமிழ், மலைக்க வைக்கிறதடா கண்மணி.. எனது அடுத்த படமான ‘சளியின் ஆசை’ க்கு வஜனம் எழுதித் தரவேண்டும் என்று உன்னைக் கேட்டுக்கொள்கிறேனடா வெண்மணி.. கலைமாமணி காத்திருக்கிறது உனக்கு.. யாரங்கே

    ReplyDelete
  17. கோலிவுட் கூலா said...

    தல.. சமீபத்திய படமான சிடிஸன் கேன் விமர்சனம் போடலியா தல?

    ReplyDelete
  18. சொம்பழகன்:

    தலைவரின் ஆசி பெற்ற உனக்கு,அடுத்த 'குடி' ஆட்சியின் போது பல சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதப்பா.அதாவது,மானாட மயிலாட வை 'எழுச்சித்' தலைவனோடு குஜாலாக உக்கார்ந்து பார்க்கலாம் என் தங்கமே!

    ReplyDelete
  19. நடிகர் பாண்டியன்August 28, 2010 at 11:04 AM

    எலே.. இதுல வர்ர ஈரோ கேரக்குடர்ரு பேரு கந்தசாமி தானே லே?

    ReplyDelete
  20. தல,இன்ட்லி ஒழுங்கா இருக்குதா?இல்ல,வழக்கம் போல இங்கிலீஷ் டைட்டில்ன்னு இம்சை பண்ணுதா? :)

    ReplyDelete
  21. //எலே.. இதுல வர்ர ஈரோ கேரக்குடர்ரு பேரு கந்தசாமி தானே லே? //

    இல்லீங்கோ.இருட்டுக்கே மொத்த authority யான இருட்டுசாமி என அன்போடு அழைக்கப்படும், ஆற்காடு விளக்கு சாமி ச்சே விளக்கெண்ண சாமி ச்சே வீராசாமி தாங்க.

    ReplyDelete
  22. //கோலிவுட் கூலா said...

    தல.. சமீபத்திய படமான சிடிஸன் கேன் விமர்சனம் போடலியா தல?//

    இல்ல தல,அதை வெரும்தேள் வெங்காயம் ஏற்கனவே எழுதிட்டதால,நானு டீல்ல விட்டுட்டேன். :)

    ReplyDelete
  23. மச்சி இலுமி...கலக்கிட்டபோ, சூப்பர், அருமை, எப்படி உன்னால மட்டும் இப்படி...அய்யோ நம்பவே முடியலை....


    இரு படிச்சிட்டு வந்து கமென்ஸ் போடுரேன்...

    ReplyDelete
  24. மச்சி இலுமி...கலக்கிட்டபோ, சூப்பர், அருமை, எப்படி உன்னால மட்டும் இப்படி...அய்யோ நம்பவே முடியலை....


    இரு படிச்சிட்டு வந்து கமென்ஸ் போடுரேன்...

    ReplyDelete
  25. //கலக்கிட்டபோ //

    ஆமாமா,கலக்கத்தான்யா போவுது.;)
    போய் ரெண்டு நாளுக்குள்ள படிச்சிட்டு வாரும்.கில்லிங் ஜோக் பதிவையே மூணு மணிநேரம் படிச்ச பீசாச்சே நீரு?இதுக்கு ரெண்டு நாளோ,மூணு நாளோ?

    ReplyDelete
  26. //அய்யோ நம்பவே முடியலை....//

    நம்ப முடியலையா?மொட்ட மாடில இருந்து கீழ குதிச்சுப் பாரு மச்சி.கனவா இல்லையான்னு தெரிஞ்சுரும்.. ;)

    ReplyDelete
  27. http://tamilmanam.net/tamil/blogger/ILLUMINATI

    தமிழ்மணம்...

    ReplyDelete
  28. //ILLUMINATI said...
    //கலக்கிட்டபோ //

    ஆமாமா,கலக்கத்தான்யா போவுது.;)
    போய் ரெண்டு நாளுக்குள்ள படிச்சிட்டு வாரும்.கில்லிங் ஜோக் பதிவையே மூணு மணிநேரம் படிச்ச பீசாச்சே நீரு?இதுக்கு ரெண்டு நாளோ,மூணு நாளோ?//

    இந்த பதிவ ஸ்குரோல் படிக்காம பண்ணி முடிக்கிறதுக்கே 4 மணி நேரமாயிருச்சி..., பன்னாடை எங்களை உசுரோட கொல்ரதுன்னு முடிவோடதான் இருக்கியா...

    ReplyDelete
  29. /எங்களை உசுரோட கொல்ரதுன்னு முடிவோடதான் இருக்கியா.../

    நீரு suicide பண்ணிகிட்டா கூட எனக்கு ஓகே தான். :)

    ReplyDelete
  30. //ILLUMINATI said...
    /எங்களை உசுரோட கொல்ரதுன்னு முடிவோடதான் இருக்கியா.../

    நீரு suicide பண்ணிகிட்டா கூட எனக்கு ஓகே தான். ://

    அதுக்கு முன்னாடி உன்னை துங்க விட்டுதான் போகனும்...ஏன்னா பலபேர் சந்தோசப் படுவாங்கள்ல

    ReplyDelete
  31. //உன்னை துங்க விட்டுதான் போகனும்.//

    துங்க? அப்டின்னா? ஓஹோ,தூங்க வைக்கப் போறீரா?அது ரொம்பக் கஷ்டமாச்சே!சரி,சரி...ரெண்டு பாட்டிலு,ஒரு ஜிகுடி இதெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கொடுத்துட்டு,ஒரு விளக்க எடுத்துட்டு....
    ஒரு ஓரமா வச்சுட்டு போரும்.. :)

    ReplyDelete
  32. என்னது பாட்டில்,ஜிகுடி எல்லாம் எதுக்கா?பாட்டில் தண்ணி குடிக்கய்யா.ஜிகுடி தாலாட்டுப் பாட.எப்ப பார்த்தாலும் தப்பு தப்பாவே நினையும்.

    ReplyDelete
  33. ங்கொய்யாலே அது தூங்க இல்லைய்யா, ”தொங்க”, தூக்குல துங்கவிடுறது, அதுக்குள்ள ’பாட்டிலு’ ‘ ஜிகுடி’ கனவா?..

    ஒருவேளை இத கடைசி ஆசையா கீட்டியோ...அப்பவும் அதெல்லாம் கிடையாது...ரெட்டகிட்டேர்ந்து ஒரு மஞ்சள் பாட்டில் திரவம் வாங்கித்தரேன் அத வேணா குடிச்சுக்க.

    :)

    ReplyDelete
  34. புத்திசாலித்தனம் கூடுதலாக இருந்தால் அது கிறுக்கு இல்லையா :)

    ReplyDelete
  35. பிரியாணி பிளேட் கமெண்டு 1- கொன்னுட்டீங்க.. நிசமாலுமே...

    ReplyDelete
  36. பிரியாணி பிளேட் கமெண்ட் 2- கில்லிங் ஜோக் சித்திரக்கதைக்கும் டார்க் நைட்டிற்குமிடையில் இருக்ககூடிய சில நுண்ணிய ஒற்றுமைகளை நீங்கள் நுண்காட்டி மனதால் அலசி வரைந்திருக்கும் வண்ணக்கோலம் உங்களை பிக்காஸோவோடு சேர்த்து நிற்க வைக்க முயல்கிறது.

    ReplyDelete
  37. பிரியாணி பிளேட் கமெண்ட் 3- பதிவெனும் எண்ண நிலத்தில் நீங்கள் அங்காங்கே விதைத்திருக்கும் சப்டைட்டில்கள் அல்லது வசனங்கள் தாகம் கொண்டு அலைந்த கிழட்டுச் சிங்கம், தாய்லாந்தின் ஆகாயம் பார்த்து நீளும் காரமிளகாய் சாற்றைக் குடித்து விட்டு கர்ஜிப்பது போல் அதிர்கிறது

    ReplyDelete
  38. பிரியாணி பிளேட் கமெண்ட் 4- வசனங்களை பதிவுகளிடையே பாத்தி கட்டி நாற்று நட்டதுமல்லாமல் வானின் இருளில் வரியாக எழுதிய மென் ஒளிக் கவிதைபோல் நிழற்படங்களின் மீது ஒளி ஊடுருவ எழுதியுள்ளமை கண்களினுள்ளே ஹைக்கூவாக அர்த்தம் சமைக்கிறது.

    ReplyDelete
  39. //கனவுகளின் காதலன் said...
    பிரியாணி பிளேட் கமெண்ட் 4- வசனங்களை பதிவுகளிடையே பாத்தி கட்டி நாற்று நட்டதுமல்லாமல் வானின் இருளில் வரியாக எழுதிய மென் ஒளிக் கவிதைபோல் நிழற்படங்களின் மீது ஒளி ஊடுருவ எழுதியுள்ளமை கண்களினுள்ளே ஹைக்கூவாக அர்த்தம் சமைக்கிறது.//

    நல்லா ஏத்தி விடுங்க...அடுத்த பதிவு 15 பக்கத்துல எழுதப் போரேனு எற்கனவே மிரட்டிகிட்டு இருக்கான்...,

    சரி விடுங்க இந்த நாதாரி இலுமி என் பதிவுக்கு ஓட்டு போடலைனாலும் நீங்க வந்து ஓட்டு போடுரீங்கலே அது வரைக்கு சந்தோசம்.

    ReplyDelete
  40. இன்று கிடா வெட்டு, நாட்டுச் சாராயம் மற்றும் ரத்த வறுவல் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, ஒரு இளைஞனின், ஒரு அப்பாவி மாணவனின் வாழ்வை மோசம் பண்ணிய பிரபல பதிவர் திரு. இலுமினாட்டி அவர்களே, அண்ணன் ஜே அவர்களின் கேள்விகளிற்கு விடையளிக்கவும்.

    ReplyDelete
  41. கனவுகளின் காதலன் said...
    இன்று கிடா வெட்டு, நாட்டுச் சாராயம் மற்றும் ரத்த வறுவல் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, ஒரு இளைஞனின், ஒரு அப்பாவி மாணவனின் வாழ்வை மோசம் பண்ணிய பிரபல பதிவர் திரு. இலுமினாட்டி அவர்களே, அண்ணன் ஜே அவர்களின் கேள்விகளிற்கு விடையளிக்கவும்.///


    கனவுகளின் காதலன் அவர்களே, இந்த இலுமி ரோசம் , மானம், வெட்கம், வேலாயுதம் அனைத்தயும் இழந்த ஊதாரிபயல் இவனிடம் கேள்விக்கு பதிலா????!!!.

    இவனை குப்புறப் படுக்க போட்டுதான் குமுற வேண்டும்..., அப்போதும் திமிறுவான்... இந்த இலுமி மொள்ளமாறி...,

    யோவ் வெண்னை, வெளக்கெண்ணை வெளியூரு இவனை என்னானு கேக்க மாட்டியா.., ஏதோ எழுதுரேன்னு கொலையா கொல்றான்யா...
    வந்து இலுமிக்கி பயந்து ஏதாவது... கத்திரிக்கா மாதிரி பேசினே தக்காளி உசுரோட பூக்கிழில போட்டு புதைச்சிருவேண்டி மாப்ள..., தெரிஞ்சிக்க...

    ReplyDelete
  42. மறுபடியும் படம் பார்க்கணும் போல இருக்கு இல்லுமி,
    வார்த்தைகள் இல்ல,
    எல்லா வார்த்தைகளையும் நீங்களே எழுதிடிங்க,

    ReplyDelete
  43. இல்லுமி.. உங்களை நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு.. உங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்கள மத்தவங்க கூட முழுசா பகிரனும்னு நெனைக்கிற உங்க மனசுக்கு என்னோட சல்யூட்...

    இந்த படத்த நாலு தடவ பாத்துட்டேன்.. ஆனா வசனங்கள் எனக்கு சரியா புரியல.. இதுக்குள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கான்னு வியப்பா இருக்கு.. இதுக்கு உங்களுக்கு இன்னொரு சல்யூட்..

    இப்போ இந்த விமர்சனத்த வெச்சிகிட்டு இன்னொரு தடவ படம் பாக்கணும்..

    மத்த சூப்பர் ஹீரோக்களுக்கும் பேட்மேன்கும் உள்ள வித்தியாசம், கார்ட்டூனில் உள்ள அதே சாகசங்களைக் கொண்டு வர, நம்ப முடியாத காரியங்களைச் செய்ய, கற்பனைகளைத் திணிக்கின்றனர் மற்ற சூப்பர் ஹீரோக்களின் கர்த்தாக்கள்.. ஆனால் பேட்மேன்ல வரும் அனைத்துக் காட்சிகளும் சாத்தியம் தான் என்று நம்மை என்ன வைக்கின்றது.. அதுவும் அவனின் பெருந்தன்மை குணம் நமக்கு நல்ல அறிவுரையும் தருகிறது.. நமக்கெல்லாம் ஆண்டவன் ஒரு இறக்கை கொடுத்தால் என்னவெல்லாம் ஆடுவோம்..? அனால் பேட்மேன் பாத்திரம் தியாகம் செய்வதாகவே படைக்கப் பட்டுள்ளது... பகுதி மூன்று எப்போது வரும்...?

    ReplyDelete
  44. படத்தை எடுத்த நோலனை விட நீங்கள் புகழ்ந்த விதம் மிக அருமை... உங்கள் எழுத்து பல பேரை சென்றடைய........................................ நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்... அதை உங்கள் எழுத்தே பார்த்துக் கொள்ளும்... உங்களின் திறமை அசாத்தியமானது.. துல்லியமான விஷயங்களை எளிய தமிழில் அலசி நீங்கள் எங்கோ பொய் விட்டீர்.. உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.. இந்த விமர்சனம் போல பேட்மேன்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விமர்சனம் வேறெந்த மொழிகளிலும், வேறெந்த ப்லாகுகளிலும், வேறெந்த வலையிலும் வந்திருக்காது என்று கண்மூடித்தனமாக நம்புகிறேன். உங்களால் பேட்மேன் (என் சிறுவயது ஹீரோ..)மேல் உள்ள மரியாதை கூடுகிறது. தொடருங்கள்..

    ReplyDelete
  45. பேட்மேனின் கார் ரிப்பேர் ஆனதும் அதிலிருந்து பைக்கோடு சீறிப் பாய்ந்து வெளிவரும் காட்சி எழுந்து கை தட்டத் தோன்றும்... யாரும் எதிர்பாராத காட்சி.. குச்சி மிட்டாயைப் பார்த்த குழந்தையின் சந்தோஷம்.. அந்த வண்டி வேறு யாருக்கும் அகப பட்டு விடக் கூடாது என செல்ப் டெஸ்ட்ரக்ட் செய்யப் படும் இடத்தில் நோலன் படத்தில் எந்த இடத்திலும் எந்தக் குறையும் வைத்து விடக் கூடாது எனப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்று சொல்கிறது.. அருமை.. இவர்களின் தொழில் பக்தி வியப்பை அளிக்கிறது..

    ReplyDelete
  46. ந இவ்வளவு பரிச்சைக்கு கூட படிக்கல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  47. உன்னையெல்லாம் அமாவாசை நிலா வெளிச்சத்தில போட்டுத் தள்ளணும்லே!

    ReplyDelete
  48. உன்னையெல்லாம் அமாவாசை நிலா வெளிச்சத்தில போட்டுத் தள்ளணும்லே!

    ReplyDelete
  49. //தூக்குல துங்கவிடுறது//

    மச்சி ஜெய் ,நீ ஏதோ technical ஆ பேசுற னு தெரியுது.ஆனா பாரு எனக்குத் தான் புரிய மாட்டுது.
    நீ பெரிய ஆளுயா.இப்டியே போனா,அடுத்து

    தூரத்துல இருக்குறத பிராப்ப..
    தண்ணில நந்துவ...
    வானத்துல பொறப்ப...

    பெரிய மூளைக்காரன்யா நீ...

    //உங்களை பிக்காஸோவோடு சேர்த்து நிற்க வைக்க முயல்கிறது.//

    எங்க? அந்தாளு இப்ப இருக்கிறது கல்லறைல. ;)

    //ஒரு இளைஞனின், ஒரு அப்பாவி மாணவனின் வாழ்வை மோசம் பண்ணிய//

    யாருங்க? உங்க பிள்ளை வந்ததா என் போஸ்ட் படிக்க? சொல்லவே இல்ல? :)

    //பிரபல பதிவர் திரு. இலுமினாட்டி அவர்களே//

    ஆமா,இது வேற..
    எனக்கு பதிவர்ன்னாலே என்னன்னு இன்னைக்குவரை புரியல.
    பதிவர்ன்னா என்னங்க?
    பதியறதுனா என்ன?
    copy paste பண்றதா?

    //எல்லா வார்த்தைகளையும் நீங்களே எழுதிடிங்க,//

    நாசூக்காக நக்கல் பண்ணிய ரிவாசுக்கு நன்றிகள் .. :)

    //ஆனால் பேட்மேன்ல வரும் அனைத்துக் காட்சிகளும் சாத்தியம் தான் என்று நம்மை என்ன வைக்கின்றது..//

    உண்மை தான்.அதுக்குக் காரணம்,ரெண்டே ரெண்டு தான்.
    spiderman ஹிட் ஆன பின்ன,எல்லோருக்கும் ஒண்ணு புரிஞ்சது. ஒரு சூப்பர் ஹீரோவ, mystery ,awe மட்டும் கலந்து காட்டாம, சூப்பர் ஹீரோவா இருக்குறதுல என்ன பிரச்சனை இருக்குன்னும் சேர்த்து காட்டினா நல்லா ஹிட் ஆவும் னு.

    ரெண்டாவது,நோலன்...
    பேட்மேனை சாதாரண மனுசனாக்கி,அவனோட பிரச்சனைகளை showcase பண்ணினதால தான் இது இவ்ளோ ரீச் ஆச்சு.இல்ல,சும்மா பேட்மேன் பத்தி வெறுமனே hype மட்டும் கொடுத்து படத்தை எடுத்து இருந்தா,அதவாது பழைய பேட்மேன் படங்களைப் போல,இது கண்டிப்பா இவ்ளோ ஹிட் ஆயிருக்காது.

    //பகுதி மூன்று எப்போது வரும்...?//

    2011 ல ஷூட்டிங் ஆரம்பிச்சு, 2012 ல வரும் னு சொல்றாங்க.பொறுமையா வரட்டும்.ஒரு நல்ல படத்துக்கு வெயிட் பண்ணலாம்.தப்பில்ல.
    ஆனா,நாம அவசரப்படுற மாதிரி அவங்களும் அவசரப்பட்டு ஒரு மோசமான படத்தை கொடுக்காம,நல்லா பிளான் பண்ணி,ஒரு நல்ல படத்தை கொடுக்கணும்.

    பேட்மேன் எனக்குப் பிடிச்ச கதாப்பாத்திரம்.அதான் என்னால அதைப் பத்தி நல்லா எழுத முடிஞ்சது.அவ்ளோ தான்.

    அப்புறம் சாமு,பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.நானு அதுக்கு வொர்த் இல்ல.

    //ந இவ்வளவு பரிச்சைக்கு கூட படிக்கல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    யோவ் ஜெயில் ஆணி,முதல்ல நீரு என்னைக்குயா பரீட்சைக்கு படிச்சு இருக்கீர்? படிக்கவே படிக்காதப்ப அதை விட இது பெருசா தான் தெரியும். :)

    //உன்னையெல்லாம் அமாவாசை நிலா வெளிச்சத்தில போட்டுத் தள்ளணும்லே!//

    ஏன்,சாதா நாள்ல போட்டுத்தள்ளக் கூடாதோ?
    இந்தப் பயலுக்கு யாராவது பூச்சி மருந்து வாங்கிக் கொடுங்கய்யா.
    வர வர காதல்,அமாவாசை,நிலவு,ரயில்,கடிதம் னு பினாயில குடிச்ச மாதிரி ரொம்ப பினாத்துறான். ;)

    ReplyDelete
  50. இலுமி பேட்மென் கதாபாத்திரத்துக்கு நம்ம நரை முடி அழகன் ஜார்ஜ் குளோனியும் செமயா செட் ஆகிருப்பார் ஆனா அந்த படம் ஒரு சாதாரணமான சூப்பர் ஹீரோ படம் மாதிரி இருந்ததுனால எடுபடல,

    ReplyDelete
    Replies
    1. உண்மை அதே போல Riddler க்கு ஜிம காரியும் அழகு

      Delete
  51. உங்கள் ஒரு பதிவே பெரிய புக்கை படிச்சா மாதிரி இருக்கு. இந்த மாதிரி அனுபவிச்சு எழுதறதுக்கு ஒரு திறமை வேண்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  52. நண்பா
    அபாரமான உழைப்பு
    டார்க்நைட் எனக்கு மிகவும் பிடித்த படம்.
    காதலரின் பின்னூட்டமும் மிக அருமை,அதையே நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  53. உங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்கள மத்தவங்க கூட முழுசா பகிரனும்னு நெனைக்கிற உங்க மனசுக்கு என்னோட சல்யூட்டும் கூட சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  54. umma alavukku nammaaala dialoue gavanikka mudiayalainnu ninaikkurappo konjam varuththamaathaan irrukkupa


    konjam english innum ipmrove pannanum

    appuram unga post paathi naan enna solla athuthaan joker sollittarulla
    "a killing joke" aapudeenu

    ReplyDelete
  55. Sooopper Post

    கொஞ்ச நாள் கழிச்சு பதிவு போடுவதிலும் அர்த்தம் இருக்கிறது

    கலக்குங்க இலுமி அண்ணே

    .

    ReplyDelete
  56. இந்த விமர்சனம் போல பேட்மேன்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விமர்சனம் வேறெந்த மொழிகளிலும், வேறெந்த ப்லாகுகளிலும், வேறெந்த வலையிலும் வந்திருக்காது என்று கண்மூடித்தனமாக நம்புகிறேன். உங்களால் பேட்மேன் (என் சிறுவயது ஹீரோ..)மேல் உள்ள மரியாதை கூடுகிறது. தொடருங்கள்..





    just GREAT...

    ReplyDelete
  57. Nice... Actually i forget to check your blog past 3 months.. i will start it again....
    note: cleared inbox in KL. tnx for notification :)

    ReplyDelete
  58. Simply fantastic.. This guy Nolan never ceases to amaze :) Very good writing..

    ReplyDelete
  59. kalakitinga..... padam partha pothu irundha thrilla vida... intha vimarsanam padikum pothu athikama irunthathu... sila kavanikatha visayatha kuda azhka solli irukinga... Nalla vimarsanam. Super.............

    ReplyDelete
  60. யப்பா.. மறுபடியும் இந்த படத்த பாத்தேன்.. சூப்பரப்பு.. அடுத்த பகுதி எப்போது...???

    ReplyDelete
  61. இப்ப மறுபடியும் இந்தப் படத்தைப் பார்த்தேன்... எத்தனை துல்லியமாக இருக்கிறது...

    அந்தப் போலி "Whats the difference btw you and me" என்று கேட்பதற்கு பேட்மேன் சொல்லும் பதில் எனக்குப் புரியவில்லை நண்பா.. கொஞ்சம் விளக்கு...

    ReplyDelete
  62. நீங்கள் கூறிய கருத்துக்கள் அருமை. நான் படத்தை பார்த்தது போல இருந்தது. உங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  63. Why so sad....lets put a smile on that face

    ReplyDelete
  64. Christian Bale the great

    ReplyDelete
  65. "It's better to burn out than fade away"...this is what now Christoper Nolan's thought i think...buddy...his every film is like that...

    ReplyDelete
  66. Batman is freak like Joker!
    (This pic will tell you)
    https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1525259_499978896784405_379960668_n.jpg

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......