The A team - அதிரடி டீம்….


  A-Team Film Poster   
நண்பர்களே! இந்த முறை The A team என்ற படத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்.இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படமானது,எண்பதுகளின் மத்தியில் ஒளிபரப்பப் பட்ட, இதே பெயரைக் கொண்ட ஒரு டிவி சீரியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மெக்ஸிகோவில் உள்ள ஒரு ஜெனரலை உளவு பார்க்கச் சென்று,அங்கே மாட்டிக்கொண்ட, தன்னுடைய சகாவும், தனக்குக் கீழ் ரேஞ்சர் பிரிவில் வேலை பார்க்கும் Face எனப்படும் Templeton “Face” Peck ஐ விடுவிக்க செல்லும் Captain John “Hannibal” Smith உம்,மாட்டிக்கொள்வதில் ஆரம்பிக்கிறது படம்.
அதன் பின்னர் அங்கிருந்து தப்பும் ஹன்னிபல்,போகும் வழியில் தான் சந்திக்கும் Bosco B.A. Baracus எனப்படும் இன்னொரு ரேஞ்சரை சந்திப்பதும்,அவனை தன் படைப் பிரிவின் கீழ் சேர்த்துக் கொண்டு Face ஐ விடுவிப்பதும்,திறமையான அதே நேரம் அரைக் கிறுக்கான ஹெலிகோப்டர் பைலட்டான H.M. "Howling Mad" Murdock உதவி கொண்டு தப்புவதும் என்று விரிகிறது படம்.
பின்னர்,இந்த நால்வரும் சேர்ந்து அமைக்கும் கூட்டணியே The A team என்று சுருக்கமாக அழைக்கப்படும் The Alpha team.எட்டு வருடங்கள் கழித்து, பாக்தாத் நகரில் இவர்கள் நிலை கொண்டு இருக்கும் போது,CIA நிறுவனத்தின் ஏஜென்ட்டான,லிஞ்ச் எனப்படுபவன் ஒருவன், ஹன்னிபலை சந்தித்து,தனக்காக ஒரு பணியினை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறான்.
‘முன்னாள்’ சதாம்மின் ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து,முப்பதே மணி நேரத்தில் கடத்தப் போகும் பில்லியன் டாலர் மதிப்பிலான கள்ளப் பணத்தையும்,அதனை உருவாக்கப் பயன்பட்ட,அமெரிக்காவின் கைகளில் இருந்து போரில் திருடப்பட்ட, டாலர் தகடுகளையும் கைபற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான்.
இதனை தன்னுடைய நண்பனும்,தன்னுடைய உயர் அதிகாரியுமான ஜெனரல் மோரிசனிடம் விவாதிக்கிறார் ஹன்னிபல்.இந்தப் பணி ஏற்கனவே The Black Forest என்று அழைக்கப்படும் தனியார் கூலிப் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டதாக சொல்லும் ஜெனரல்,இந்தப் பணியினை ஏற்க வேண்டாம் என்று ஹன்னிபலிடம் கேட்டுக் கொள்ளவும் செய்கிறார்.
ஆனால்,அந்தக் கும்பலின் தலைவன் Pike இன் மேல் நல் அபிப்ராயம் இல்லாத ஹன்னிபல்,இந்தப் பணியினை தன்னால் திறமையாகச் செய்ய முடியும் என்று வாதிடுகிறார்.வேறு வழியில்லாமல்,அரை மனதோடு ஒப்புக் கொள்கிறார் ஜெனரல்.இந்த Film Review The A-Teamவேலை எந்தத் தடயமும் இல்லாத வகையில், “Un offical “ ஆக செய்யப்பட வேண்டும் என்று முடிவும் செய்யப்படுகிறது.
வழக்கமாக,அதிரடித் திட்டங்களைத் தீட்டி அதனை நைச்சியமாக செயல்படுத்தும் ஹன்னிபல்,இதற்கும் ஒரு அதிரடித் திட்டத்தை தயார் செய்வது மட்டுமல்லாது,அதனை வெற்றியோடு நிறைவேற்றவும் செய்கிறார்.
ஆனால்,அதற்குப் பிறகு நிகழும் சம்பவங்களால், ஜெனரல் கொல்லப்படுவதும்,அந்தThe-A-Team டாலர் தகடுகளை pike அபகரிப்பதும் நடக்கிறது.இவற்றிற்கான பழி இந்நால்வரின் மேல் விழுந்து,இவர்கள் தனித் தனி சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.
ஆறு மாதங்கள் கழித்து லிஞ்ச் உதவியோடு சிறையில் இருந்து தப்பும் இவர்கள்,தங்கள் பெயருக்கு ஏற்படும் களங்கத்தை துடைத்து,அந்த டாலர் தகடுகளை மீட்பதே மீதிப் படம்.
கதை சாதரணமான “அவப்பெயரை நீக்கும்” கதை தான் என்றாலும்,கதை சொல்லப்பட்ட விதத்தில் சொல்லி அடிக்கிறது இந்த A team.
சாதரணமான action படங்களைப் போல வெறும் ஆக்சன் காட்சிகளை மட்டும் நம்பாது, ஹுமர்  கலந்து படத்தை மேலும் விறுவிறுப்பாக தந்து இருப்பது சிறப்பு.இதற்குப் பெரிதும் துணை புரிவது,வசனங்களே !
அதிர வைக்கும் ஆக்சன் காட்சிகள்,வெடிச் சிரிப்பு டயலாக் என்று படத்தை விறுவிறுப்பாக்கி இருந்தாலும்,அது மட்டுமே இப்படத்தின் சிறப்பு அல்ல.அருமையான நடிப்பும்,அதனை விட அருமையான character development உம், படத்தின் ஆகச் சிறப்பு.
அதிரடித் திட்டங்களைத் தீட்டி அதனை நைச்சியமாக செயல்படுத்தும் தலைவன்  ஹன்னிபல்,ஸ்திரீலோலன் பேஸ் ,முரடன் பாஸ்கோ,அரைக் கிறுக்கு முர்டோக் என்று கட்டம் கட்டி அடித்து இருக்கிறார்கள்.
ஆரம்ப இன்ட்ரோ காட்சியின் மூலமே ஒவ்வொருவரின் இயல்புகளை காட்டி இருப்பது அழகு.வேண்டும் என்றே பிடிபட்டு ,அதன் மூலம் பேஸின் இருப்பிடத்தை ஹன்னிபல்  கண்டுபிடிக்கும் போது ஆரம்பிக்கும் பரபர ஆக்சன்,கதையின் இறுதி வரை நீடிக்கிறது.முக்கியமாக,அந்த tank காட்சியும்,அதில் வரும் வசனங்களும் pepper கலந்த babycorn  சுவை.கடைசி சண்டையில் லாஜிக் கிடையாது என்றாலும்,பிரம்மாண்டம் அள்ளுகிறது.அந்த tank சண்டைக் காட்சி காதில் பூ சுற்றும் வேலையே என்றாலும்,விறுவிறுப்பு .

பேசின் முன்னாள் காதலியாக Jessica Biel.பெரிய வேலை ஒன்றும் இல்லை.

ateam-poster-1
ஹன்னிபல் ஆக Liam Neeson.சிறந்த நடிகரான இவர்,தன்னுடைய அலட்டல் இல்லாத,அதே நேரம் ஸ்டைலான நடிப்பால் கவர்கிறார்.சுருட்டை வாயில் வைத்து இவர் சிரிக்கும் பாங்கும்,இவருடைய பஞ்ச் டயலாக்கும் அருமை.
பேஸ் ஆக Bradley Cooper.இவருக்கும் ,இவருடைய முன்னாள் காதலிக்கும் இடையே நடக்கும் உரையாடல் satrie கலாட்டா.பின்னர்,tank சீனில் “what do you got….. “ என்று டாங்கின் machine gun ஐ வைத்து சுட்டுக் கொண்டு செய்யும் அலும்பு,அருமை.
B.A Bosco வாக Quinton Jackson.அதிரடி முரடனாக மட்டுமல்லாது காமெடியிலும் பின்னி இருக்கிறார்.நடுவானில் பல சாகசங்கள் செய்த ரேஞ்சராக இருந்தாலும்,முதல் முறையே முர்டோக் ஹெலிகோப்டர்  ஓட்டும் ‘அழகில்’ பயந்து,அதில் இருந்து முர்டோக்குடனான ஆகாய பயணங்களை தவிர்க்க தவிப்பதும்,ஆகாயப் பயணத்தில் ஒவ்வொரு முறையும்,இவரை மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து  மயக்க மருந்து கொடுத்து ‘அழைத்துச்’ செல்வதும் கலாட்டா.
முரடனாக இருந்து ,சிறைவாசத்தில் திருந்த முற்பட்டு பின் பாதியில் வன்முறையை தவிர்க்க நினைக்கும் போதும்,ஆகாயப் பயணங்களின் போதும் (குறிப்பாக,அந்த tank காட்சிகளில் இவரது நடிப்பு…) இவரது நடிப்பு அருமை.கோபத்தில் இவர் உதிர்க்கும் டயலாக்கள் அருமை.
பியேவும்,முர்டோக்கும் சேரும் இடங்களில் எல்லாம் பற்றிக் கொள்கிறது பரபர காமெடி பட்டாசு.
முர்டோக் ஆக Sharlto Copley. The man who steals the show..
அரைக் கிறுக்கு கதாப்பாத்திரத்தில் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார்.லியம் நீசனின் இன்ட்ரோவிற்கு இருக்கும் அதே கெத்து,இவருடைய இன்ட்ரோவிற்கும் இருக்கிறது.அந்த ஆரம்ப காட்சிகளில் இவர் அடிக்கும் கூத்தும்,அதனைத் தொடரும்
Mur:“I am a ranger ,baby.”
Face:“I am worried.”
டயலாக்கும் அறுசுவை விருந்து.இவருடைய அருமையான காமெடி நடிப்பிற்கு கை கொடுக்கிறது இவரது டயலாக் டெலிவரி.முக்கியமாக,இவரது ஸ்லாங்.
ஆகாயப் பயணங்களில் வேண்டும் என்றே பாஸ்கோவை சீண்டுவதும்,பின்னர் அவனுக்குப் பிடித்த சாப்பாட்டை செய்து கொடுத்து தாஜா செய்வதும்,ஆரம்ப மற்றும் tank காட்சிகளில் அவர் அடிக்கும் கூத்தும்…. awesome.

நல்ல திரைக்கதை,பரபர ஆக்சன்,அருமையான நடிப்பு,அருமையான ஹுமர்,சிறந்த character development,பக்காவான இயக்கம் என்று இந்தப் படத்தை பார்க்க வேண்டிய காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.
A team – Awesome team….
I love it when a good film comes along… :)

Comments

  1. The end part of the Batman trilogy post - Dark knight will be next. :)

    ReplyDelete
  2. நண்பரே,

    உங்களைப்போலவே நானும் ஜாலியாக இத்திரைப்படத்தை ரசித்தேன். படத்தின் சிறப்பம்சங்களை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். ஏ டீமின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் தம்தம்பாணியில் ரசிக்க வைத்தார்கள். பஞ்ச் டயலாக்குளும் அருமைதான்.

    பின்னிட்டீங்க. எப்படி உங்களால் இப்படி இதயபூர்வமான வரிகளை உருவாக்க முடிகிறது. இதனை நீங்கள் தமிழ்மணத்திலும் இணைக்கவேண்டும். உங்கள் பதிவுகள் பலரை சென்றடைந்து அவர்கள் அறிவுக்கண்கள் திறக்க வேண்டும். உங்கள் சேவைக்கு இந்த வரிகளையே ரோசா மாலையாக அணிவிக்கிறேன். வாழ்த்துக்கள். பாராட்டுகள். ஹாட்ஸ் ஆஃப். கண்ணியமான பதிவு :))

    ReplyDelete
  3. உன்னோட அக்கப்போர் ஆரம்பிச்சாச்சா..நான் எழுதுனத நீரு படிக்கலைனாலும்... படிச்சி தொலைக்கிறேன்...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மீ த தேர்ட் .....:(

    ReplyDelete
  6. நண்பரே,

    இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் ஸ்தீரிலோலன் எனும் சொல் என் மனதை புண்படுத்தி விட்டது. இதற்காக உலக ஸ்த்ரீலோலர்கள் சங்கத்திடம் மன்னிப்பு வேண்டி ஒரு மன்னிப்பு போஸ்டை உடனடியாக இடும்படி உங்களை எச்சரிக்கிறேன் :))

    ReplyDelete
  7. //ஆனால்,அதற்குப் பிறகு நிகழும் சம்பவங்களால், ஜெனரல் கொல்லப்படுவதும்,அந்தThe-A-Team டாலர் தகடுகளை pike அபகரிப்பதும் நடக்கிறது.இவற்றிற்கான பழி இந்நால்வரின் மேல் விழுந்து,இவர்கள் தனித் தனி சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.//




    பில்லா........................,

    ReplyDelete
  8. நண்பரே,
    படம் நன்றாகவே இருந்தது,காதலரும் இதை எழுதியிருந்தார் என நினைக்கிறேன்,நல்ல விமர்சனம் நண்பா

    ReplyDelete
  9. //இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் ஸ்தீரிலோலன் எனும் சொல் என் மனதை புண்படுத்தி விட்டது. இதற்காக உலக ஸ்த்ரீலோலர்கள் சங்கத்திடம் மன்னிப்பு வேண்டி ஒரு மன்னிப்பு போஸ்டை உடனடியாக இடும்படி உங்களை எச்சரிக்கிறேன் :))//
    நானும் இதை வழிமொழிந்து எச்சரிக்கிறேன்

    ReplyDelete
  10. // கதை சாதரணமான “அவப்பெயரை நீக்கும்” கதை தான் என்றாலும்,கதை சொல்லப்பட்ட விதத்தில் சொல்லி அடிக்கிறது இந்த A team //

    நீங்க இவ்வளவு அழகா சொன்னத படிச்சதுக்கு பிறகு கண்டிப்பா பார்த்துடுறேன்

    Download starts.......:))

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. பதிவை படிக்காமலேயே படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
  13. இந்த படத்தை வைச்சு ஒரு வீடியோ கேம் கூட வந்துருக்குங்க!

    ReplyDelete
  14. பாஸ்... எப்ப இன்செப்ஷன் பதிவு போடுவீங்க? (நீங்களும் அடுத்து ஒரு 18+ படத்த தட்டிவிட்டுறாதீங்க)

    ReplyDelete
  15. மீ த பர்ஸ்ட் னு சொல்லலாம்னு நெனச்சேன்.. மார்பிள் வாங்கப் போன கேப்புல எல்லாரும் பூந்துட்டாங்க.. இந்த தடவையும் வட போச்சு...

    இருங்க படிச்சிட்டு வர்றேன்...

    ReplyDelete
  16. பாசு.. நீங்க சொன்னதெல்லாம் நல்லா இருக்கு... ஆனா நா இன்னும் படம் பாக்கல ... படத்தப் பாத்துட்டு நீங்க சொன்ன விஷயங்கள் இல்லைன்னா அப்புறம் இருக்கு பாருங்க...

    ReplyDelete
  17. பாஸ் எப்பவும் கொஞ்சமா எழுத பழகுங்க அதான் எங்க உடம்புக்கு நல்லது ..முடியல..

    ReplyDelete
  18. படம் ரொம்ப நல்லாவே இருந்தது, கூடவே விமர்சனமும்!

    (ரகசியம் ஒன்னு சொல்றேன்! ஜுராஸிக் பார்க்னு ஒரு படம் வந்திருக்கு. டைனோசரெல்லாம் வருதாம். கிராஃபிக்ஸ் அட்டகாசமா இருக்காம். யாராவது பார்த்துட்டு விமர்சனம் எழுதுறதுக்குள்ள சீக்கிரம் பதிவை போட்ரு...எப்பா டேய் வெளியூரு முடியலை! வந்து இவன் கடிகாரத்தை கொஞ்சம் சரி பண்ணிட்டு போ! ரொம்ப லேட்டா ஓடிட்டு இருக்குலே!)

    ReplyDelete
  19. படம் ரொம்ப நல்லாவே இருந்தது, கூடவே விமர்சனமும்!

    (ரகசியம் ஒன்னு சொல்றேன்! ஜுராஸிக் பார்க்னு ஒரு படம் வந்திருக்கு. டைனோசரெல்லாம் வருதாம். கிராஃபிக்ஸ் அட்டகாசமா இருக்காம். யாராவது பார்த்துட்டு விமர்சனம் எழுதுறதுக்குள்ள சீக்கிரம் பதிவை போட்ரு...எப்பா டேய் வெளியூரு முடியலை! வந்து இவன் கடிகாரத்தை கொஞ்சம் சரி பண்ணிட்டு போ! ரொம்ப லேட்டா ஓடிட்டு இருக்குலே!)

    ReplyDelete
  20. உங்களின் விமர்சனமும் , பதிவில் இணைத்திருக்கும் புகைப்படங்களும் படத்தை இன்றே பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது நண்பரே . சிறந்த படங்களை அறிமுகம் செய்யும் உங்களின் சிறந்தப் பணிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. @@@Rettaival's said...
    ரகசியம் ஒன்னு சொல்றேன்! ஜுராஸிக் பார்க்னு ஒரு படம் வந்திருக்கு. டைனோசரெல்லாம் வருதாம். கிராஃபிக்ஸ் அட்டகாசமா இருக்காம். யாராவது பார்த்துட்டு விமர்சனம் எழுதுறதுக்குள்ள சீக்கிரம் பதிவை போட்ரு...///

    ஹா ஹா டேய் தாங்க முடியலடா உன் ரோதனை...இந்த படம் சிங்கப்பூர்ல ரிலீஸ் ஆகி மூணு மாசம் ஆகுதுரா...ஏண்டா இவ்ளோ லேட்டா விமர்சனம் எழுதுற...அடுத்த மாசம் டைட்டானிக்னு ஒரு இங்க்லீஷ் படம் ரிலீஸ் ஆகுது...அதையாச்சும் உடனே பார்த்துட்டு விமர்சனம் எழுது..!

    ReplyDelete
  22. @@@கனவுகளின் காதலன் //
    பின்னிட்டீங்க. எப்படி உங்களால் இப்படி இதயபூர்வமான வரிகளை உருவாக்க முடிகிறது.///உங்கள் பதிவுகள் பலரை சென்றடைந்து அவர்கள் அறிவுக்கண்கள் திறக்க வேண்டும்./// உங்கள் சேவைக்கு இந்த வரிகளையே ரோசா மாலையாக அணிவிக்கிறேன்.///

    ஹா ஹா ஹா...டேய் ரெட்டை சிரிச்சு முடியலடா நாராயணா... டேய் இலுமி என்னடா இதெல்லாம்..அங்க வந்து சலம்புர...இங்க எல்லா கூத்தும் நடந்துகிட்டு இருக்கு போல...!

    ReplyDelete
  23. @@@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    உங்களின் விமர்சனமும் , பதிவில் இணைத்திருக்கும் புகைப்படங்களும் படத்தை இன்றே பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது நண்பரே . சிறந்த படங்களை அறிமுகம் செய்யும் உங்களின் சிறந்தப் பணிக்கு என் வாழ்த்துக்கள்.////

    ஆர்வம் குறையறதுக்கு முன்னாள் உடனே சென்று பாருங்கள் நண்பரே..இந்த படமும் உங்களை மிகவும் சிந்திக்க வைக்கும்....! :)

    ReplyDelete
  24. மச்சான் இந்த படத்துல ஜாக்சன் திருந்தறதுக்கு மகாத்மா காந்தி ஒரு முக்கிய காதாபாத்திரம் வகிக்கறாரே அத பத்தி ஒன்னும் எழுதலையே ஏன்...? (ங்கொய்யா..தேவை இல்லாததஎல்லாம் எழுதிருக்க..நம்ம ஊருகாரண பத்தி ஒரு வரி எழுதுனா என்னவாம்...?):)

    ReplyDelete
  25. இல்லுமினாட்டி...இம்புட்டு திறமையா எழுதியிருகீக...வாழ்த்துக்கள் ராசா :)

    ReplyDelete
  26. படத்த பாத்தாச்சு
    நம்ம காந்தி தாத்தா பத்தி அழகா சொல்லி இருக்குறத கண்டுக்காம உட்டுட்டீங்களே தல :))
    .

    ReplyDelete
  27. எ டீம்... எ ஒன்...!

    http://communicatorindia.blogspot.com/

    ReplyDelete
  28. அப்புறம்...

    இந்த "இலமிநாட்டி" அப்டீங்கற பெயர் ரொம்ப நல்லாருக்கு...!
    (உபயம், ஏஞ்செல்ஸ் அண்ட் டேமன்ஸ் தானோ...?)
    கொஞ்சம் லேட்டா தான் சொல்றேன்... ஆனா சிலாகிச்சு சொல்றேன்...!
    நைஸ்...!

    http://communicatorindia.blogspot.com/

    ReplyDelete
  29. //இந்த "இலமிநாட்டி" அப்டீங்கற பெயர் ரொம்ப நல்லாருக்கு...!//

    ஆமாங்க. இல்லு மீ 'நாட்டி' தான் இல்லுமினாட்டி னு மருவிருச்சு. :)

    ReplyDelete
  30. பதிவை படிக்காமலேயே படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்

    ReplyDelete
  31. மணி ரத்னம் said..

    WOW !! மயில்ராவணன் என்று ஒரு படம் எடுக்கப்போகிறேன். அதில் வந்து வசனம் எழுதிக் கொடுக்க முடியுமா அன்பரே..

    ReplyDelete
  32. துன்பரே.. இந்தப் படம், குணாளனே கொங்கையின் துர்ப்பாக்கியம்’ என்ற தமிழ்ப்படத்தின் அட்டை, பின்னட்டைக்காப்பி என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழ்ப்பதிவுலகிலேயே இப்படத்தைப் பார்த்திருப்பது நான் மட்டுமே !! ;-) போய் அதனைப் பார்த்துவிட்டு வாரும் ;-)

    ReplyDelete
  33. பயிறுமுத்து said...

    நீங்கள் விமர்சனம் எழுதியுள்ள இப்புத்தகம், எந்தக் கடையில் கிடைக்கும்? சொன்னால், போய் காப்பியடித்து, குலைஞருக்கு ஒரு இரங்கற்பா எழுதிவிடுவேன் ;-)

    ReplyDelete
  34. //மணி ரத்னம் said..

    WOW !! மயில்ராவணன் என்று ஒரு படம் எடுக்கப்போகிறேன். அதில் வந்து வசனம் எழுதிக் கொடுக்க முடியுமா அன்பரே..//

    athula me the hero.......:)

    ReplyDelete
  35. நண்பா
    அபாரமான உழைப்பு
    டார்க்நைட் எனக்கு மிகவும் பிடித்த படம்.
    காதலரின் பின்னூட்டமும் மிக அருமை,அதையே நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........