Invictus -ஆட்கொள்ளப்பட்ட தேசத்தின் ஆட்கொள்ளப்படாத ஆன்மா…
2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை.
1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான்.
எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.உள்நாட்டு யுத்தம் நடக்கக் கூடிய நிலையில் உள்ள நாட்டை கஷ்டப்பட்டு மீட்டு, ஆப்ரிக்க மக்களுக்கும் வோட்டுரிமை பெற்றுத் தருகிறார் மண்டேலா.மேலும்,நிகழும் தேர்தலில் ஜெயிக்கிறார் மண்டேலா.
நிறவெறி பிடித்த வெள்ளையனின் கூற்றுக்கு மாறாக,காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கிறது மண்டேலா ஆட்சியில்.ஆப்ரிக்க மக்களின் பிரதிநிதியாக மண்டேலா பிரெசிடென்டாக தேர்ந்தெடுக்கப்பட்டதும்,அவரது அலுவலகத்தில் இருந்து விலக எத்தனிக்கிறார்கள் அங்கே ஏற்கனவே வேலை செய்யும் வெள்ளையர்கள்.இது எங்கே நாம் போட்ட வெறியாட்டம் நமக்கே திரும்பிப் படிக்கப்படுமோ என்ற பயத்தின் வெளிப்பாடே! ஆனால்,குணத்தில் பெரியவர் யார் என்று காட்டுகிறார் மண்டேலா.
அலுவலகத்தை விட்டுப்போக எத்தனிக்கும் வெள்ளையர்களிடம், ”உங்களுக்கு போக ஆசை இருந்தால் நீங்கள் போகலாம்.ஆனால்,உங்கள் நிறத்தின் காரணமாக நீங்கள் போக நினைத்து இருந்தால்,அதனை நிறுத்திவிட்டு, நிறவெறி இல்லாத ஒற்றுமை உள்ள நாடாக ஆப்ரிக்காவை உருவாக்க உதவுங்கள்.ஆப்ரிக்க நாட்டின் குடிமக்கள் தான் நீங்களும்.” என்கிறார். பழிவாங்கத் துடிக்கும் மக்களை சமாதானப்படுத்த முனைகிறார்.மாற்றத்தை தன் மூலமே ஆரம்பிக்கிறார்.தன்னுடைய மெய்க்காப்பாளர் படையில் இரு நிற மக்களையும் வேலைக்கு அமர்த்துகிறார்.ஏற்கனவே பசி,கொள்ளை,கொலை,நிறவெறி ஆகியவற்றால் அல்லல்படும் நாட்டில் பழிவாங்கும் வெறி தலை தூக்கி விடாமல் இருக்க பாடுபடுகிறார்.
இது இப்படியாக போய்க்கொண்டு இருக்கும் போது,ஒருநாள் ஆப்ரிக்க ரக்பி அணியினர் பங்கேற்கும் ஒரு போட்டிக்கு செல்கிறார்.Springboks என்றும், செல்லமாக bokke என்றும் அழைக்கப்படும் இந்த ரக்பி அணியினை ஆப்ரிக்க மக்கள் நிறவெறித் தனத்தின் அடையாளமாகவே பார்கிறார்கள்.இதன் காரணமாக,எப்போது இந்த அணி விளையாண்டலும்,இவர்களின் எதிர் அணிக்கே உற்சாகம் கொடுப்பது ஆப்ரிக்க மக்களின் வழக்கம்.
சிறு வயதில் தானும் இதையே செய்து இருந்தாலும், ஒன்றிய ஆப்ரிக்காவுக்கு இது பெரும் ஆபத்து என உணரும் மண்டேலா,மக்களிடம் இருக்கும் இந்த துவேசத்தை நீக்க யோசிக்கிறார். மக்களின் நிற துவேசத்தை நீக்க தான் எடுக்கும் முயற்சிகளில் போக்கே அணியினரை மக்களை ஏற்க வைப்பதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார். மக்களை இணைக்க விளையாட்டை பயன்படுத்த நினைக்கிறார்.மிக மோசமான நிலையில் இருக்கும் ரக்பி அணியின் கேப்டன் Francois Piennar ஐ அழைத்து, அடுத்த வருடத்தில் நடக்க இருக்கும் ரக்பி உலகக்கோப்பை போட்டியை ஜெயிக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறார்.ஒற்றுமையின் முதல் படி,விளையாட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட முயற்சிக்கிறார்.ஆனால் இந்த முடிவு சந்தேகங்களையும்,எதிர்ப்புகளையும் எழுப்பும் அளவு,ஆதரவை பெற்றுத் தருவதாயில்லை.
ஆனால் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் மண்டேலா,தன்னைப் போலவே ஒற்றுமையை விரும்பும் ப்ரான்ஸ்வாவின் உதவியுடன் செயல்படுகிறார். ஆனால் அவர்களது பாதை எளிதானது அல்ல!மிக மோசமான நிலையில் உள்ள அணி,மோசமான நிலையில் உள்ள நாடு இரண்டையும் அவர்கள் சீர்படுத்த வேண்டும்.மிகப்பெரும் சவால்களை விளையாட்டிலும்,நாட்டிலும் சந்திக்க வேண்டும்.எப்படி அதை சாதித்தார்கள் என்பதே கதை.
யூகிக்கக் கூடிய கதையைக் கொண்டிருந்தாலும்,கதை செல்லும் வேகம் பிரமிக்க வைக்கும்.அது மட்டுமில்லாமல்,ஆப்ரிக்க நாட்டின் மிகச் சிக்கலான பிரச்சனையைக் கூட சின்னச் சின்ன காட்சிகளால் எளிதாக உணர்த்த முடிகிறது Clint Eastwood க்கு.
படத்தின் ஆரம்ப காட்சியில், வெள்ளையர்கள் uniform அணிந்து பச்சைப் புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருக்க,எதிரே புழுதியில் கிழிந்த சட்டையுடன் விளையாடும் ஆப்ரிக்க மண்ணின் மைந்தர்களும்,அந்த இரு அணியினரின் பின்னால் தெரியும் கட்டடங்களும்,இந்த இருவேறு துருவங்களையும் இணைக்கும் பாதையில் செல்லும் மண்டேலா, ஒரு நல்ல உதாரணம்.
கதையில் சினிமா நகாசு இல்லாமல்,கதையை உண்மையான சம்பவங்களின் மூலமாக வைத்து எடுத்திருப்பது இன்னும் அழகு.எங்கேயும் ஆங்கில சினிமாவின் இலக்கணமான அதிகப்படி விவரனைகளோ,காட்சிகளோ இல்லாததும் சிறப்பு.
மண்டேலாவாக Morgan Freeman. நடிப்பு ராட்சசன் !
Usually,Morgan steals the whole show even if you give him just 10 mins.What if you give him an entire movie?
அது தான் இங்க நடந்து இருக்கிறது.வசன உச்சரிப்பு,நடை,செய்கைகள் என அனைத்திலும் மண்டேலா தான் தெரிகிறார்.மோர்கன் தெரியவேயில்லை. மண்டேலாவின் முகமே குழம்ப ஆரம்பித்து எனக்கு.பாத்திரத்தோடு இணைந்த பிரமாண்ட நடிப்பைத் தருகிறார் இந்த மகா நடிகன்!இனி எனக்கு மண்டேலா என்றால் இவர் முகமும் நினைவுக்கு வரும்.
“உங்கள் குடும்பம் எவ்வாறு இருக்கிறது? “ எனக் கேட்கப்படும் கேள்விக்கு, “என் குடும்பம் மிகப்பெரியது.43 மில்லியன் மக்களைக் கொண்டது.” என்று சொல்லி விட்டு,பிரித்து கிடக்கும் தன் குடும்பத்தை எண்ணியவாறே,ஆப்ரிக்காவையும் நினைத்துக் கவலைப்படும் கட்டத்தில் மோர்கனின் நடிப்பு,ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்.
ப்ரான்ஸ்வா ஆக Matt Damon. மோசமான நிலையில் பயிற்சி இல்லாத அணியினை பக்குவப்படுத்தி அதனை வெற்றிக்கு கொண்டு செல்ல முனைவது மட்டுமல்லாது,மண்டேலாவின் திட்டங்களுக்கு துணையாய் இருந்து நாட்டையும் வசீகரப்படுத்தும் வேடம். நன்றாக செய்து இருக்கிறார் என்றாலும்,அவருக்கு இதில் நடிக்க வாய்ப்பு கம்மி தான். மலையென திகழும் மோர்கன் முன் முடங்கிப் போகிறார் மேட்.
ஆப்ரிக்க மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் உள்ள வெறுப்பு மண்டேலாவின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமே வெளிப்படுகிறது.கதம்பக்கூட்டமான இது,அடுத்தவரை வெறுப்புடனே நோக்குவதும்,சண்டை போடுவதும்,பின்னர் சிறுது சிறிதாக நட்பு கொள்வதும்,கடைசியில் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதும் என்று மாற்றத்தை இந்தக் கூட்டத்தின் மூலமே வெளிப்படுத்துவது சிறப்பு.
இது மட்டுமில்லாது,போக்கே அணியின் வெற்றியின் மூலம் உற்சாகம் அடையும் மக்கள் அதனை நேசிக்க ஆரம்பிப்பதும்,ஒற்றுமையின் முதல் படி விரிவதும்,பின்னர் போக்கே அணியை நிறபேதமில்லாமல் ஆதரிப்பதும்,கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஆடிப் பாடுவதும் என்று, ஒற்றுமையை பேண சிறந்த வழிகளில் ஒன்று விளையாட்டு என்பது கண் முன் விரிகிறது.
சிறையில் இருந்து வந்ததும் வன்முறையை அடக்குவது,பொதுத் தேர்தலை கொண்டுவருவது, மக்களை ஒன்றுபடுத்த பாடுபடுவது, வெள்ளையர்களை பழிவாங்க எத்தனிக்காமல் மேன்மை காட்டுவது,தன் சம்பளம் மிக அதிகம் எனக்கூறி மூன்றில் ஒரு பங்கை தானத்துக்கு கொடுப்பது,போட்டியின் முதல் நாள் நேரே சென்று வாழ்த்துக் கூறுவது என்று நாம் பார்ப்பது, ஒரு மஹா மனிதனின் வாழ்க்கையில் சிறியதொரு பங்கே!ஆனால்,இதுவே நம்மை மலைக்கவும் ஏங்கவும் வைக்கிறது.இவரையும்,நமது நாட்டில் இருக்கும் சில ஈனப் பிறவிகளையும் ஒப்பீடு செய்து, கோபப்படாமல் இருக்க முடியவில்லை.தன் புகழ் கெட்டாலும் நாட்டு ஒற்றுமையை நிலைநாட்ட முடிவுகள் எடுத்த மண்டேலா எங்கே?தினம் தினம் பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் சில மனிதர்கள் எங்கே?
மேலும்,பணியின் முதல் நாள் காலை,மண்டேலா வாக்கிங் போகும்போது பேப்பர் ஒன்றின் தலையங்கம் தென்படுகிறது.அதில்,” தேர்தலில் ஜெயிக்க முடிந்த மண்டேலாவுக்கு,நாட்டை வழிநடத்த முடியுமா?” என்ற வாசகம் இருக்க,கூட இருக்கும் மெய்க்காப்பாளர்,
Not even one day on the job and they are after you.
என்பார்.அதற்கு மண்டேலா,It's just a legitimate question. என்று சொல்லும் போது ஆரம்பிக்கிறது இந்த மாமனிதனின் ராஜாங்கம்.
இங்கே INVICTUS என்பது ஒரு லத்தின் வார்த்தை.அதற்கு Undefeatable ,Unconquerable என்று அர்த்தம்.
இருபத்தியேழு வருடங்கள் சிறையில் இருந்தாலும்,தன்னை அங்கே வைத்து கொடுமைப்படுத்திய வெள்ளையர்களை தன் நாட்டின் குடிமக்களாக ஏற்று,ஒற்றுமைக்கு போராடிய ஒரு மனிதனை குறிக்க இதை விட சிறந்த வார்த்தை இருக்காது.
இதே பெயரைக் கொண்ட ஒரு பாடலும் படத்தில் அடிக்கடி வரும்.தான் ஒவ்வொரு முறை சோர்ந்து போகும் போதும்,தனக்கு அந்தப் பாடல் தான் மேலே செல்ல உற்சாகம் தரும் என்பது மண்டேலாவே சொல்லியது.அந்தப் பாடல் இங்கே...
Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.
Invictus – Indeed....
Rating: 10/10.
நண்பரே,
ReplyDeleteஇப்பதிவின் தலைப்பு ஆட்கொல்லப்படா என் மனதை ஆட்கொன்று விட்டது :)
ஐந்தாவது பரா, கண்ணீரை வரவழைக்கிறது :)
ReplyDeleteஐந்தாவது பராவின் கீழ் ஐந்தாவது பராவில் உங்கள் போட்டோ ஒப்பீட்டுப் பார்வை கலங்கடிக்கிறது.
ReplyDeleteமேலே உள்ள இரண்டு கமெண்ட்டுகளும் கண்ணீரை வரவழைக்கின்றன :-)
ReplyDeleteகண்கள் பனித்தன; உதடுகள் இனித்தது..
இரண்டை, மூன்று என்று திருத்திக்கொள்ளவும் :-)
ReplyDeleteஉங்கள் பதிவு, (ஏற்கெனவே எழுதப்பட்ட காதலரின் மற்றும் ஆலிவுட்டு பாலாவின்) பதிவுகளைப் படிக்கத் தூண்டுகிறது :-)
ReplyDeleteஇந்தப் பதிவின் தலைப்பை வேகமாகப் படிக்க முயன்ற நபர், மூச்சடைத்து அகால மரணம் :-)
ReplyDeleteமனிதர்களில் மண்டேலா விசித்திரமானவர்தான். அவர் எவ்வளவு கொடுமைப்படுத்தப் பட்டிருந்தாலும் எவ்வாறு அவரால் மன்னிக்க முடிந்தது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியதா ஒன்று.
ReplyDeleteமூச்சடைத்து அகால மரணமடைந்த ஆன்மாவிற்கு எம் இதய அஞ்சலிகள் :)
ReplyDeleteநண்பர் கருந்தேளின் நான்கு கமெண்டுகளும் உங்கள் பதிவை மீண்டும் முழுதாய் படித்திட தூண்டில் போடுகின்றன.
ReplyDeleteஇந்தப் பதிவை வேகமாக படிக்க முயன்ற நபர் இன்னமும் வீடு போய் சேரவில்லை :)
ReplyDeleteஇப்படத்தை தமிழில் எடுக்க இயலுமா :)
ReplyDeleteஆனால் படத்தின் தலைப்பை சுருக்கமாக வைக்கவும் :)
ReplyDeleteஇந்தியாவின் நெல்சன் மண்டேலா இலுமினாட்டி வாழ்க,, வாழ்க,,
ReplyDeleteஅருமையான படம்! மிக அருமையான விமர்சனம்! வித்தியாசமான பதிவு தலைப்பு! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete//இப்பதிவின் தலைப்பு ஆட்கொல்லப்படா என் மனதை ஆட்கொன்று விட்டது //
ReplyDeleteஆட் கொல்லுவதே ச்சே கொள்ளுவதே என் குறிக்கோள்! ;)
//ஐந்தாவது பரா, கண்ணீரை வரவழைக்கிறது //
இதை படித்ததும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது! (ஆமா,புள்ளி கிடையாது இல்ல? ;) )
//கண்கள் பனித்தன; உதடுகள் இனித்தது..//
;)
//உங்கள் பதிவு, (ஏற்கெனவே எழுதப்பட்ட காதலரின் மற்றும் ஆலிவுட்டு பாலாவின்) பதிவுகளைப் படிக்கத் தூண்டுகிறது :-)//
உங்கள் பதில் அந்தப் பதிவுகளைப் படிக்க தூண்டுகிறது. ;)
//இந்தப் பதிவின் தலைப்பை வேகமாகப் படிக்க முயன்ற நபர், மூச்சடைத்து அகால மரணம் :-)//
அபார வேகம்,அகால மரணம்.. ;)
//மனிதர்களில் மண்டேலா விசித்திரமானவர்தான். அவர் எவ்வளவு கொடுமைப்படுத்தப் பட்டிருந்தாலும் எவ்வாறு அவரால் மன்னிக்க முடிந்தது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியதா ஒன்று.//
உண்மை...
//எம் இதய அஞ்சலிகள் :)//
ஆமா,இதய அஞ்சலி,அஞ்சலி.. ;)
//இந்தப் பதிவை வேகமாக படிக்க முயன்ற நபர் இன்னமும் வீடு போய் சேரவில்லை :)//
போய்ச் சேராதது குறித்து மகிழ்ச்சி! ;)
//இப்படத்தை தமிழில் எடுக்க இயலுமா :)//
ஏமாளி தயாரிப்பாளர் கிடைத்தால் முடியும். தமிழ்ப் பட ரசிகன் ஏற்கனவே ஏமாளி என்பதால் பிரச்சினையே இல்லை...
//ஆனால் படத்தின் தலைப்பை சுருக்கமாக வைக்கவும் :)//
ஹிஹி.. :)
//இந்தியாவின் நெல்சன் மண்டேலா இலுமினாட்டி வாழ்க,, வாழ்க,,//
ஆஹா,உள்ள தூக்கிப் போட முடிவே பண்ணிட்டீங்களா அய்யா? :)
//வித்தியாசமான பதிவு தலைப்பு! //
ReplyDeleteஇவனுக நக்கல் பன்றானுகளா இல்லையான்னே தெரியலையே! :)
தமிழில் இப்படத்திற்கு ஆள்கொல்லல் என பெயர் வைக்கலாமா :) [ பதிவிற்கும் பொருந்த வாய்ப்பிருக்கிறது]
ReplyDelete//இந்தப் பதிவை வேகமாக படிக்க முயன்ற நபர் இன்னமும் வீடு போய் சேரவில்லை :)//
ReplyDeleteசீக்கிரமே போய்ச சேருவார் என நம்புகிறேன் . ;)
//தமிழில் இப்படத்திற்கு ஆள்கொல்லல் என பெயர் வைக்கலாமா :) [ பதிவிற்கும் பொருந்த வாய்ப்பிருக்கிறது]//
ReplyDeleteஷங்கர் எடுத்தால் தாராளமாக வைக்கலாம். ;)
பதிவிற்கு முதலிலேயே வைத்தாகி விட்டது. :)
தல...
ReplyDeleteclint Eastwood பத்தி ஒண்ணும் காணோமே...அப்பறம் "Nelson Mandela"ங்கிற பேருலயே ஒரு படம் வந்ததே பார்த்திருக்கீங்களா...
//நமது நாட்டில் இருக்கும் சில ஈனப் பிறவிகளையும் ஒப்பீடு செய்து, கோபப்படாமல் இருக்க முடியவில்லை.தன் புகழ் கெட்டாலும் நாட்டு ஒற்றுமையை நிலைநாட்ட முடிவுகள் எடுத்த மண்டேலா எங்கே?தினம் தினம் பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் சில மனிதர்கள் எங்கே?//
கடுமையான கண்டனங்கள்...எப்படி ஒப்பீடு செய்ய தோணியது...இதெல்லாத்தையும் யோசிச்சா b.p தான் ஏறும். கேள்விகேட்டா மாவோயிஸ்ட்,நக்சல்னு உள்ள போட்டிடுருவாங்க..
//தல...
ReplyDeleteclint Eastwood பத்தி ஒண்ணும் காணோமே...//
எனக்கு படத்தில் கிளிண்ட் தெரியவில்லை.மோர்கன் தான் படம் முழுக்க வியாபித்து இருந்தார்.இது மாஸ்.இது ஸ்க்ரீன் presence.இது குறித்து இங்கே எப்போது உணர்வார்களோ?
//அப்பறம் "Nelson Mandela"ங்கிற பேருலயே ஒரு படம் வந்ததே பார்த்திருக்கீங்களா...//
இல்லை.
//கடுமையான கண்டனங்கள்...எப்படி ஒப்பீடு செய்ய தோணியது...//
கண்ணுக்கினிய சோலைவனத்தை விட,கண்ணை உறுத்தும் துரும்பை நன்றாகவே உணரலாம்.
//கேள்விகேட்டா மாவோயிஸ்ட்,நக்சல்னு உள்ள போட்டிடுருவாங்க..//
ஆடும் வரை ஆட்டம்...அதற்குப் பின்?ஆட்சி மாறினால் காட்சி மாறும்.
//கண்ணுக்கினிய சோலைவனத்தை விட,கண்ணை உறுத்தும் துரும்பை நன்றாகவே உணரலாம்
ReplyDeleteஆடும் வரை ஆட்டம்...அதற்குப் பின்?ஆட்சி மாறினால் காட்சி மாறும்//
சத்தியமா முடியல...கனவுகளின் காதலரோடு சேர்ந்து ரொம்ப கேட்டுப் போய்டீங்க
//ரொம்ப கேட்டுப் போய்டீங்க//
ReplyDeleteகேட்டு போய்ட்டனா?எதை? ;)
//ஆனால் படத்தின் தலைப்பை சுருக்கமாக வைக்கவும் :) //
ReplyDeleteநொந்திரன்...
எப்படி இருக்கிறது தலைப்பு?
இல்லாத கதை,தலைவலி விளம்பரம்,கடுப்படிக்கும் நடிப்பு,ஜல்லியடிக்கும் குழு,செருப்பால் அடிக்கும் மக்கள், சேர்ந்து ஆடும் கிழவி..
இதுவே வெற்றி ரகசியம்!
இழவெடுத்த இயக்கம், சிக்கன் பிரியாணி காசில் குச்சி மிட்டாய் கிராபிக்ஸ்,செலவே இல்லாமல் சொம்பு என்பதையும் சேர்த்துக்கொள்ள மறக்க வேணாம். ;)
ReplyDeleteநொந்திரன், தமிழ் விஞ்சாணப் படங்களின் முழுமுகவரி.
ReplyDeleteபசு ஒன்றிற்கு பிரசவம் பார்க்கும் காட்சி கிராபிக்ஸில் வருகிறது. பைத்திய மாக்ஸ் நிறுவனம் புகுந்து விளையாடி இருக்கிறது.
ReplyDeleteசங்கரின் விஞ்சாணம் வாழ்க!
ReplyDeleteமேலும் ஒரு தருணத்தில் தொழில்நுட்ப குளறுபடியால் நொந்திரன் ஆடுபோல் கத்தும் காட்சி ரசிகர்களை சீட்டில் இருந்து பாய்ந்து சென்று திரையைக்கிழிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteஅடுத்து குரங்கு ஒன்றிற்கு பேன் பார்க்கும் கிராபிக்ஸ் மூவாயிரம் கோடி செலவில் வர இருக்கறது.அதில் பேன் பாஷையில் பேசுவது தனிச்சிறப்பு!
ReplyDeleteமுதலாம் உலக அழிவின் முன் உலக அழகியாக இருந்த ஒரு அம்மணியை ஒரு அடி மேக் அப் செய்து சாதனை புரிந்து சரித்திரம் படைத்திருக்கிறது நொந்திரன்.
ReplyDeleteபோண்டா, மசால்வடை, ஜாங்கிரி வடிவங்களில் நொந்திரன்கள் உருளும் க்ளைமேக்ஸ் காட்சி மண்டையை அதிர வைக்கும்.
ReplyDeleteஇதற்காக இயக்குனர் பத்து வருடங்கள் பேன் பார்த்து அவற்றின் பாசையைக் கற்றுத் தேர்ந்தார்.
ReplyDeleteமனிதனின் வழக்கொழிந்து போன படைப்புகளில் ஒன்று இந்தக் கதை,இன்னொன்று நீ என்ற டயலாக்கின் போது தியேட்டர் கிழிகிறது!
ReplyDeleteஎந்திரங்கள் எல்லாம் குச்சி குச்சியாக நின்று பிரம்மாண்டமான குச்சி ஐஸ் உருவாக்கும் காட்சி உருக வைத்தது(தயாரிப்பாளரின் பணத்தை அல்ல).
ReplyDeleteஅதேபோல் சலூன் ஒன்றை ஆரம்பிக்கும் மெஷின்கள் மசாஜ் செய்து முடித்தபின் பில் கேட்கும் காட்சி அதைவிட அட்டகாசம். டீக்கடை மெசின், பீடா போடுவது வாவ், அமேஸிங்.
ReplyDeleteகடவுள் இருக்கிறாரா எனும் கேள்விக்கு, இன்னமும் படிக்கவில்லை படித்தபின் சொல்கிறேன் என நொந்திரன் பதில் தரும் காட்சியில் கண்கள் கலங்கி விடுகிறது.
ReplyDeleteமூவாயிரம் ரோபோக்கள் எதிரியைக் கண்டுபிடிக்க ஒரே நேரத்தில் விக்கை கழற்றி மாட்டும் இடம் மயிர்க்கூச்செரிய வைத்தது.
ReplyDeleteநக்கலா என்று கேட்கும் கேள்விக்கு நிக்கல் என்று சொல்லும் போது ஏற்படும் இன்ப விக்கல் நிற்கவே இல்லை.
ReplyDeleteகுத்து ரத்து செய்வது எனில் கட்டிலை திருப்பி தர வேண்டும் எனும் காட்சியில் விஞ்சாணி ரிசீபன் உணர்ச்சிவசப்பட்டு கட்டிலில் புரண்டு அழுவது மனதை பிசைகிறது.
ReplyDeleteவிஞ்சாணியின் உதவியாளர்கள் விஞ்சாணத்தைப் பற்றி எந்திரனுக்கு எடுத்துரைக்கும் காட்சி நறுமணம் வீசுகிறது.
ReplyDeleteநாயகி தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளைக் கடிக்கும் கொசு காட்சியில் கிராபிக்ஸ் கலக்கல்(கொசுவிற்க்குத் தான்).
ReplyDeleteமுக்கியமான ஒரு காட்சியில் ரிசீபன் மெஷின்களிற்கு மத்தியில் கலந்து நிற்பார் அப்போது அவரைக் கண்டுபிடிக்க முடியாது திணறும் நொந்திரன் வேர் இஸ் ரீசிபன் எனக் கேட்க ரிசீபன் தன் கையை தூக்கி காட்டும் காட்சி... சான்ஸே இல்லை
ReplyDeleteபின் ஒரு பேட்டியில் இப்படியாக ஒன்றை நான் என் வாழ்க்கையில் கடித்ததே இல்லை என்று அக்கொசு மனம் திறந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteபின் அதே பத்திரிகையில் அக்கொசுவின் மரண அறிவித்தல் வெளியாகியது அனைவரையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு தள்ளியிருக்கிறது.
ReplyDeleteவகமுத தளத்தில் நொந்திரனிற்கு 10 நட்சத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. தமிழின் முன்னோக்கு விஞ்சாணக் காவியம் எனும் பட்டத்தையும் அதற்கு அவர்கள் வழங்கி கவுரவித்திருக்கிறார்கள்.
ReplyDeleteதாயையும் சேயையும் காப்பாற்ற நாயகி லிப்ஸ்டிக் அழியாமல் டாக்டரிடம் கெஞ்சும் காட்சி கள் ச்சே கல் மனதையும் உருக வைக்கும்.
ReplyDeleteஅந்த மருத்துவரைப் பார்த்து நொந்திரன் நான் புத்தகம் படித்திருக்கிறேன் எனக்கூறி அசத்த வைக்கும் காட்சி கைதட்டல்கள் பெறுகிறது.
ReplyDeleteஎந்திரன் ஒரு உலகத்தரம் வாய்ந்த திரைப்படம். தமிழர்களின் துரதிஷ்டம் இது தமிழில் வெளியானது.
ReplyDeleteஇதே ஹாலிவூட்டில் ஈஸ்ட் கிளின்ட்வூட் நடித்து வெளிவந்திருந்தால் நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பீர்கள்.
தியரி மட்டும் படித்து ப்ராக்டிகலை அல்லு சில்லாக்கும் (கவனிக்க ப்ராக்டிகலை )எந்திரனை மொத்த உலகமும் பாராட்டுவது கண்கொள்ளாக் காட்சி..
ReplyDeleteதீயணைப்பு வீரராக மாறும் நொந்திரன் சுவரிற்கு சுவர் பாய்ந்து மனிதர்களை காப்பாற்றும் வரையில் மனிதர்கள் குளிர் தண்ணீரில் குளித்துக் கொண்டிருப்பது விஞ்சாணத்தின் உச்சம்
ReplyDelete//எந்திரன் ஒரு உலகத்தரம் வாய்ந்த திரைப்படம். தமிழர்களின் துரதிஷ்டம் இது தமிழில் வெளியானது.//
ReplyDeleteஉண்மையே.இது மட்டும் ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தால்...
நினைக்கவே உடம்பு நடுங்குகிறது சந்தோஷத்தில் !
ரிசீபனிடம் எதிரி விஞ்சாணி எந்திரனையும் நாயகியையும் காட்டி இனி தான் உனக்கு தொல்லை எனும் போது அவரது விஞ்சாண அறிவை எண்ணி வியக்கிறோம்!
ReplyDeleteகடைசிக் காட்சியில் இரும்புக்கடையில் விற்கப்படும் நொந்திரன் ஏன் இங்கே வந்தார் என ஒரு நபர் கேட்கும்போது வசூல் அள்ளிட்டோம்ல அதுதான் தூக்கி எறிஞ்சிட்டோம்னு வரும் பதில் நெஞ்சை கனக்க செய்கிறது.
ReplyDeleteகடைசிக் காட்சியில் எந்திரன் ரிசீபனை காப்பாற்ற உள்ளே வெளியே விளையாடுவதும்,பின்னர் சோக்கு படம் காட்டுவதும்,அதன் மூலம் விஞ்சாணியை விடுவிப்பதும் நமக்கு 'மயிர்க்'கூச்செரிப்பை உண்டு பண்ணுகிறது!
ReplyDeleteஅதுவுமல்லாது,சோக்கு படம் பார்த்த நீதிபதிகள், எந்திரனின் 'உள்ளே வெளியே' ஆட்டத்தைப் பார்த்து,உடனடி தீர்ப்பு வழங்கும் இடம் அசத்தல்.
யாருப்பா அது உலக Sci-Fi திரைபடங்களுக்கே ஒரு உதாரணமாக எடுக்கப்பட்ட தமிழ் Sci-Fi திரைப்படத்த காலாய்குரது, வீட்டுக்கு ஆட்டோ விடனுமா.......!
ReplyDeleteகிளிண்ட் ஈஸ்ட்வுட் 85வயதிலும் கலக்குகிறார்.மோர்கன்...அந்த
ReplyDeleteகாந்தக்குரல் தனி வசீகரம
எஸ்.கே said...
ReplyDeleteஅருமையான படம்! மிக அருமையான விமர்சனம்! வித்தியாசமான பதிவு தலைப்பு! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
....Repeat!
இப்பதிவைப் படித்து விட்டு கலைஞர் அவர்கள் இலுமினாட்டிக்கு எழுதிய மடல் பேஸ்புக்கில் வெளியாகிவிட்டது. படிக்கத் தவறாதீர்கள்.
ReplyDelete//சத்தியமா முடியல...கனவுகளின் காதலரோடு சேர்ந்து ரொம்ப கேட்டுப் போய்டீங்க//
ReplyDeleteசாரி..ரொம்ப கெட்டுப் போய்டீங்கன்னு வரணும். அப்பறம் என் மனம்கவர்ந்த "குட்டிப் பிசாசு" என்ற Sci-Fi Classicகையும் விமர்சனம் செய்ய வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
(குட்டிப் பிசாசு போன்ற படங்களை பாரடினால்தான் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு தாவும்......)
மனிதனுக்கும் மாமனிதனுக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத படி தான் உள்ளது.. அதை அடைவது சுலபம்..
ReplyDeleteஆனால் முதலில் அதற்கு நாம் மனிதனாக வேண்டும்...
மண்டேலா ஒரு மாமனிதன்..
சாமக்கோடங்கி...
//யாருப்பா அது உலக Sci-Fi திரைபடங்களுக்கே ஒரு உதாரணமாக எடுக்கப்பட்ட தமிழ் Sci-Fi திரைப்படத்த காலாய்குரது, வீட்டுக்கு ஆட்டோ விடனுமா.......! //
ReplyDeleteயோவ்,குச்சி முட்டாய் வாங்கனும்னு கேட்டா ஒரு பெட்டிக்கடையே வைக்குற அளவுக்கு காசு(கஷ்டப்பட்டு உழைச்ச காசு இல்ல?)தர்ற தயாரிப்பாளர்கள் இருக்கும் போது,ஏன்யா தம்மாத்துண்டு ஆட்டோ அனுப்புறீங்க?இது scifi திரைப்படத்துக்கே அவமானம் இல்ல? ஒரு டேன்கர்,ஒரு ஹெலிகோப்ட்டர்,ஒரு ப்ளேன் இப்படி அனுப்புங்கய்யா. அப்ப தான் அது விஞ்சாணப் படம்!
//கிளிண்ட் ஈஸ்ட்வுட் 85வயதிலும் கலக்குகிறார்.மோர்கன்...அந்த
ReplyDeleteகாந்தக்குரல் தனி வசீகரம//
முற்றிலும் உண்மை நண்பரே!
//"குட்டிப் பிசாசு" என்ற Sci-Fi Classicகையும் விமர்சனம் செய்ய வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.//
இந்திய சினிமாவிலேயே ஆகச் சிறந்த படமும்,மற்றும் ஆசிய கண்டத்திலேயே சிறந்த scientific fiction படமுமான எந்திரனை பற்றி விமர்சனம் செய்ததே போதுமானது என்றும், இனிமேல் வாழ்க்கையில் எந்த sci fi படத்தையும் பற்றி விமர்சனம் செய்ய தேவை இல்லாத அளவு நான் பாக்கியம் பெற்று விட்டேன் என்றும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
//(குட்டிப் பிசாசு போன்ற படங்களை பாரடினால்தான் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு தாவும்......)//
ஏற்கனவே தமிழ் சினிமா அயல் நாட்டுக்காரர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது.நாற்றம் தாங்காமல் விரல் வைப்பது அல்ல,ஆச்சர்யத்தில் விரல் வைப்பது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
//மனிதனுக்கும் மாமனிதனுக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத படி தான் உள்ளது.அதை அடைவது சுலபம்..
ReplyDeleteஆனால் முதலில் அதற்கு நாம் மனிதனாக வேண்டும்...
மண்டேலா ஒரு மாமனிதன்..//
சாமு,கலக்குங்க! :)
அப்புடியே ஒப்புக்குறேன்.
கலக்கிட்டீங்க போங்க :)
ReplyDeleteமண்டேலா பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது ... ஆனால் உங்கள் விமர்ச்சனம் எப்போலுதும் போல் கலக்கல் நண்பா.. பார்க்க வேண்டிய படங்களில் இதையும் சேர்த்து கொள்கிறேன் .. அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பா
ReplyDelete// Usually,Morgan steals the whole show even if you give him just 10 mins.What if you give him an entire movie?
ReplyDeleteவசன உச்சரிப்பு,நடை,செய்கைகள் என அனைத்திலும் மண்டேலா தான் தெரிகிறார்.மோர்கன் தெரியவேயில்லை. மண்டேலாவின் முகமே குழம்ப ஆரம்பித்து எனக்கு.பாத்திரத்தோடு இணைந்த பிரமாண்ட நடிப்பைத் தருகிறார் இந்த மகா நடிகன்!இனி எனக்கு மண்டேலா என்றால் இவர் முகமும் நினைவுக்கு வரும். //
மிகச் சரியாக சொன்னீர்கள்
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்
.
//கலக்கிட்டீங்க போங்க :)//
ReplyDeleteஅட,படத்துக்கு முந்தி இது ஜுஜுபிங்க..படத்தை பாருங்க. :)
//மண்டேலா பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது ... //
மண்டேலா பற்றி எனக்கும் அதிகம் தெரியாது நண்பா! படம் பார்த்துவிட்டு இதில் மண்டேலா பற்றி காட்டப்பட்டதில் எவ்வளவு உண்மை என்று தேடியபோது, அனைத்துமே உண்மைச் சம்பவங்களின் தொகுப்பே என்று தெரிந்து ஆச்சர்யப்பட்டேன்.மண்டேலா ஒரு மாமனிதன் தான்.
//கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் //
உண்மை நண்பர் சிபி..
"யோவ்,குச்சி முட்டாய் வாங்கனும்னு கேட்டா ஒரு பெட்டிக்கடையே வைக்குற அளவுக்கு காசு(கஷ்டப்பட்டு உழைச்ச காசு இல்ல?)தர்ற தயாரிப்பாளர்கள் இருக்கும் போது,ஏன்யா தம்மாத்துண்டு ஆட்டோ அனுப்புறீங்க?இது scifi திரைப்படத்துக்கே அவமானம் இல்ல? ஒரு டேன்கர்,ஒரு ஹெலிகோப்ட்டர்,ஒரு ப்ளேன் இப்படி அனுப்புங்கய்யா. அப்ப தான் அது விஞ்சாணப் படம்! "
ReplyDeleteஆயிரம்தான் நாங்க ரோபோவ ஐஸ்வர்யா ராய்கூட கனவு பாட்டுக்கு குருப் டான்ஸ் ஆட வச்சு உலக Sci-Fi திரை படங்களுக்கே ஒரு முன் ஊதாரணமா இருந்தாலும் நாங்கனா பக்கா லோகல்னு காமிக்கதான் ஆட்டோ விடுவோம்ன்னு சொன்னோம்,
கிளின்ட் ஈஸ்ட்வூட் பற்றி நிறைய எழுதாத குத்தத்துக்கு நீங்க எழுதுன இந்த பதிவினை நீங்களே ஆயிரம் முறை திரும்ப திரும்ப படிக்க வேணும்னு அகில உலக மேஜார்டி கிளின்ட் ஈஸ்ட்வூட் ரசிகர் மன்றம் சார்பாக உங்களுக்கு தண்டனை அறிவிக்கின்றோம்.
யோவ்.. இந்த எந்திரன் கமெண்ட்டெல்லாம், எந்திரனோட விமர்சன பதிவுல வரணும்யா... அங்க வாங்கய்யா மக்களே :-)
ReplyDelete- வம்பைப் படுலேட்டாக வளர்க்கும் சங்கம்
தனியா விமர்சனம் போட்டு அதை கலாய்க்கிற அளவுக்கு அந்த மொக்க வொர்த் இல்ல. அதான் இங்கயே நொங்கி எடுத்துட்டோம். ;)
ReplyDelete