The Classic- காதல் காவியம்.




ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட காதல் மரம் அடுத்த தலைமுறையிலும் பூக்கள் தருவது தான் The Classic.
2003 இல் வெளியான கொரியன் படமான இது, இரண்டு தலைமுறைகளின் காதலை கவித்துவமாகக் கூறுகிறது.வாழ்க்கை நதியில் இரண்டு தலைமுறைகளை இணைக்கும் பாலமாக காதல் உள்ளதை தெரியப்படுத்தும் விதமாக இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்தை காட்டி ஆரம்பமாகிறது இந்தப்படம்.


எனது முந்தய பதிவு ஒன்றில் சொன்னதைப் போல காதல் சார்ந்த கொரியன்படங்களுக்கு ஒரு பார்முலா உள்ளது.ஒரு cute ஹீரோயின்,ஒரு மிகச் சாதரணமான ஹீரோ,அவர்களுக்குள் நடக்கும் மோதல்,மோதல் கலந்த காதல் தான் அது.ஆனால்,கிளாசிக் அப்படியில்லை.சுடுவெயிலில் நதிக்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் போது வந்து வருடிச் செல்லும் மென்காற்றைப் போல,வாழ்க்கையில் சொல்லாமலே நுழைந்து, சொல்லவொண்ணா வேதனைகளையும்,நினைத்து ரசிக்கும் தருணங்களையும் தந்து மனதினுள் ஏக்கத்தையும்,பாசத்தையும் விதைக்கும் காதலைப் பற்றிய கவிதையே The Classic.

Soo Gyung என்ற தன்னுடைய தோழியின் காதலுக்கு உதவும் பொருட்டு அவளுடைய காதலன் Sang Minக்கு, Gyung கிற்கு பதிலாக காதல் கடிதங்களை எழுதி அதை ஈமெயிலில் அனுப்பும் Ji Hae,தனக்கே தெரியாமல் Sang min மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு வந்து விட்டதை உணர்கிறாள்.ஆனால் இந்த ஒரு தலைக் காதலை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் அவள், ஒரு நாள் தன்னுடைய அம்மாவின் காதலைப் பற்றி தன் வீட்டில் இருக்கும் டைரியைப் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.தன்னுடைய சிறு வயதில் தன் தந்தை இறந்த பிறகு தன் அம்மா தனிமரமாகவே இருந்ததை பற்றி அதுவரை வியந்து கொண்டு இருந்த அவளுக்கு அந்த டைரி அதற்கான காரணத்தை,அவளுடைய அம்மாவின் காதல் கதையின் வாயிலாகச் சொல்லுகிறது.மெல்ல மெல்ல தன்னுடைய அம்மாவின் கதையைப் படிக்கும் போது தன்னுடைய பிரச்சனை தன் அம்மாவின் காதலிலும் வியாபித்து இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறாள்.

முன் பின் தெரியாத Yoon Tae Soo விற்கும் Oh Joon Ha விற்குமான நட்பு,Tae soo வினுடைய வருங்கால(பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட) மனைவியாகவிருக்கும் Sung Joo Heeவிற்கு Joon காதல் கடிதம் எழுதித் தருவதன் மூலம் தொடங்குகிறது.

ஒரு நாள், நண்பர்களின் காதலுக்கு உதவும்பொருட்டு கடிதங்கள் எழுதித் தரும் Joon ஐத் தேடி வரும் Tae, தன்னுடைய பெற்றோர்கள் தனது வருங்கால மனைவியாக,அரசியல்வாதியின் மகளான Sung Joo Hee ஐ தேர்ந்தெடுத்து இருப்பதாகவும்,தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அவர்கள் செய்த இந்த செயலிலோ,அந்தப் பெண்ணிடமோ தனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறுகிறான்.தன்னை அந்தப் பெண்ணிற்கு கடிதம் எழுதுமாறு பெற்றோர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அலுத்துக் கொள்ளும் Tae,தனக்காக கடிதம் எழுதித் தருமாறு Joonஇடம் கேட்கிறான்.அதற்கு இசைகிறான் Joon.

தன்னுடைய தாத்தாவை காண கிராமத்திற்கு வரும் Sungகிற்கும்,தன்னுடைய உறவினர்களைக் காண வரும் Joonஇற்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் காதல் மலர்கிறது.தான் அணிந்திருக்கும் சங்கிலியை கிளம்புவதற்கு முன் அன்புப்பரிசாக கொடுத்து விட்டு செல்கிறாள் Sung. Sung மனதில் இருப்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாத குழப்பத்தில் இருந்தாலும்,அவளை நினைத்து உருகவும்,நண்பன் Taeவிற்கு குற்ற உணர்வோடும்,வலியுடனும் கடிதம் எழுதிக் கொடுக்கவும் முடிகிறது Joonஇற்கு.

மனதிற்குள் ஆயிரம் ஆசைகளை ஒளித்து வைத்திருந்தாலும்,இரண்டாம் முறை அவளை காணும்போது பேச்சடைத்து நிற்க மட்டுமே முடிகிறது Joonஇற்கு.ஆனாலும் காதல் அவர்களை விடுவதாயில்லை.மூன்றாம் முறை அவர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது,காதல் கரைகளை உடைத்துப் பொங்குகிறது.இதற்கிடையே Taeவின் மனதிலும் காதல் பூக்கிறது.இதை அறிந்து கொள்ளும் Sung குழப்பமும்,வேதனையும் அடைகிறாள்.நிலைமை மோசமாவதைக் கண்ட Joon,Taeவிடம் உண்மையை சொல்லுகிறான்.
பெருந்தன்மையுடன் தன்னுடைய ஆசையை மனதிற்குள் புதைத்து விட்டு விலகிக் கொள்ளும் Tae,அவர்களுடைய காதலுக்கு உதவும் தூதுவன் ஆகிறான்.Joon எழுதும் கடிதங்களை Sungகிடம் நேரிலேயே கொடுக்கிறான்.இரு மனங்கள் மகிழ,ஒரு மனம் வருந்துகிறது.இது இப்படி இருக்க,இந்த உண்மை Taeவின் அப்பாவிற்கு தெரிய வர,அரசியல் ஆதாயத்திற்காக எப்படியாவது அவன் Sungஇன் மனதை மாற்றி அவனைக் காதலிக்குமாறு பண்ண வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறார்.

இரு காதலர்களுக்கும் இடையூறாக இருப்பதாலும்,தன்னுடைய வருத்தத்தை போக்கிக் கொள்ள முடியாததாலும்,Tae தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான்.இதனைக் கண்டு அவனைக் காப்பாற்றும் Joon மனம் உடைந்து,Sungஇடம் இருந்து விலகும் பொருட்டு திடீர் என்று காணமல் போகிறான்.

அதன் பின்னர்,இந்த சிக்கல் மிகுந்த இந்த இரண்டு காதல்களிலும் யார் யாரோடு இணைந்தார்கள் என்பதை மென்சோகத்தோடு எடுத்துரைக்கிறது classic.இந்தப்படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் மனதைப் பிசைந்தாலும்,கடைசிக் காட்சியில் ஒரு சிலிர்ப்பு பரவுவதை தடுக்க முடியாது.கதையின் கிளைமாக்ஸ் அருமை.எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
படத்தில், மகளின் காதல் கதையும்,அம்மாவின் காதல் கதையும் parallel ஆக வருகின்றன.ஆனால்,மகளின் காதலை விட அம்மாவின் காதலுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருக்குறது.

மெதுவாகவே செல்லும் படத்தின் இயல்பிற்கு ஏற்ப மெல்லிய இசையும்,mild ஆன கேமரா கலரும் படத்துடன் ஒன்றி நம்மையும் ஒன்ற வைக்கிறது.
Ji Hae அந்த டைரியில் இருந்த புகைப்படத்தை வெளியே வைக்கும்போது காமெராவின் போகஸ் கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படத்தை நோக்கி பயணிப்பதும்,கொஞ்ச நேரத்தில் திரை முழுக்க அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் வியாபிப்பதும்,அந்த புகைப்படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் சேர்ந்து அது காலத்தின் பின்னே சென்று,போன தலைமுறைக் காதலைப் பற்றிய கதை ஆரம்பிப்பது கவிதை.

படத்தில் இரட்டை வேடத்தில் அம்மாவாகவும்,பின்னர் மகளாகவும் Son Ye-jin .நிறைவான நடிப்பு.காதலுக்கு ஏங்குவதும்,குழம்புவதும்,மகிழ்வதும்,படம் முழுக்க மென் சோகத்தோடு வருவதும் என்று கதாப்பாத்திரங்களாகவே வாழ்த்து இருக்கிறார்.அதிலும் குறிப்பாக முன் தலைமுறைப் பெண்ணாக அவரது நடிப்பு சிறப்பு.

படத்தில் 3 ஹீரோக்கள் இருந்தாலும் மனதில் நிலைப்பது Yoon Tae Sooவாக நடித்த Lee Ki-woo மற்றும் Oh Joon Haவாக நடித்த Jo Seung-woo தான்.
காதலில் கரைவதும்,ஏங்குவதும்,காதலியைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் உளறுவதும்,பின் நண்பனின் துயரம் கண்டு துடிப்பதும் என நிறைவாக செய்திருக்கிறார் (See up ).அதிலும் அந்த கடைசி இருபது நிமிடங்களில் கதாப்பாத்திரத்தோடு ஒன்றி அவர் நடத்தும் ராஜாங்கம்,பிரம்மாண்டம்.
காதல் என்றாலே ஏளனம் செய்து திரியும் நான்,சிறந்த காதல் கதையாக நினைத்தது ‘அலைபாயுதே’ படத்தை தான்.அதாவது இந்தப் படத்தைப் பார்க்கும் முன் வரை.இப்பொழுது அதனைப் புறம் தள்ளிவிட்டு,என் மனதில் ஏறி அமர்ந்துள்ளது இந்தப் படம்.It is truly a classic.

மேலும்,நக்கலும் குசும்பும் நிறைந்த என்னையும் கவித்துவமாக எழுத வைத்து விட்டது இந்தப் படம்.ஆனால்,இந்த எழுத்து நடை நன்றாக இருக்கிறதா என்று நீங்கள் தான் நண்பர்களே சொல்ல வேண்டும்.

Classic – பொக்கிஷம்.  (இந்த hint ஐ யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்க்கலாம். )


Comments

  1. என்னாடா.. அண்ணாத்த.. திடீர்ன்னு.. கவித மாதிரி எழுதறாரேன்னு பார்த்தேன். :)

    ஆனா.. நம்பினா நம்புங்க.. ஒவ்வொரு பாராவையும் ரெண்டு முறை படிச்சும்... எந்த கேரக்டர் பேரும் மனசில் பதியலை.

    எதோ.. கராத்தே க்ளாஸுக்கு போய்ட்டு வந்த மாதிரி.. ஜுங்.. ஜிங்.. ஜக்-ன்னு. இத்தனை கேரக்டர்கள் வரும்போது.. நம்மூர் பெயரை கொடுத்திருந்தா மனசில் பதிஞ்சிருந்திருக்கும்.

    எழுத்து நடை.........., ம்ம்ம்ம்ம்ம்ம்... நல்லாயிருக்குங்க. ஆனா.. இப்படி ரெண்டு பதிவெழுதினீங்கன்னா.. அப்புறம் நீங்களும் கவிதை எழுத ஆரம்பிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்கு.

    அதெல்லாம் பண்ண மாட்டீங்கதானே?? :)

    ReplyDelete
  2. ஏங்க.. இவ்வளவு அழகா தமிழ்ல எழுதறவங்க எல்லாம்.. ஏன் ஆங்கிலத்தில் எழுதனும்னு அடம் பிடிக்கறீங்க?? :)

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  4. பாஸ்,10 நிமிஷம் பாத்ததுக்கே உங்களுக்கு கண்ணக்கட்டுதே,படம் முழுக்க பாத்த எனக்கு? :)

    ஆனா,இந்த வாய் சுளுக்க வைக்குற பேரெல்லாம் மறந்து,அந்த கேரக்டரோட உங்கள ஒன்ற வக்குரதுல தான் தல படம் பின்னி இருக்கு.

    அப்புறம்,கவித எழுதுறதா?குசும்பு பாஸ் உங்களுக்கு.எனக்கு எழுத்தே ஒழுங்கா வரல.ஏதோ மொக்க போட்டுக்கிட்டு இருக்கேன்.இதுல கவித வேறயா?இப்பயே கண்ணக் கட்டுதே(எனக்கே).... :)

    ReplyDelete
  5. // இவ்வளவு அழகா தமிழ்ல எழுதறவங்க எல்லாம்.. ஏன் ஆங்கிலத்தில் எழுதனும்னு அடம் பிடிக்கறீங்க?? :) //

    அடப்போங்க தல,சும்மா சும்மா நக்கல் பண்ணிக்கிட்டு......

    ReplyDelete
  6. படமும் நல்லா இருக்கும் தியா நண்பரே....முடிஞ்சா பாருங்க.

    ReplyDelete
  7. பொக்கிஷம் = சேர (நாட்டு) சுட்டபழம்..:)

    --
    @பாலா - அவ்வ்வ்வ்வ்வ் முடியல :)

    ReplyDelete
  8. இல்லு உங்க நடை நல்லாத்தான் இருக்கு, ஒரு பாராக்கு ப்ரு பாரா ரெண்டு வேற நடையில கூட கலந்து எழுதலாம்..:)

    ReplyDelete
  9. சாரி ப்ரு இல்ல ஒரு ..:)

    ReplyDelete
  10. // பொக்கிஷம் = சேர (நாட்டு) சுட்டபழம்..:) //
    Exactly பாஸ்.....
    ஆனா,அத விட இது எவ்வளவோ பெட்டர்.

    ReplyDelete
  11. //ஆனா.. நம்பினா நம்புங்க.. ஒவ்வொரு பாராவையும் ரெண்டு முறை படிச்சும்... எந்த கேரக்டர் பேரும் மனசில் பதியலை.

    எதோ.. கராத்தே க்ளாஸுக்கு போய்ட்டு வந்த மாதிரி.. ஜுங்.. ஜிங்.. ஜக்-ன்னு. //

    யாம் பெற்ற இன்பம்,பெருக இவ்வையகம். :)

    ReplyDelete
  12. எம்ப இந்த இல்லுமிநாட்டி லாங் டெர்ம் மெமரி லாஸ் வர்றமாதிரி நங்குன்னு தலைல ஒன்னு வைங்கப்பா

    ReplyDelete
  13. சரி சரி ஓட்டு போட்டேன் வழக்கம் போல அமௌண்ட என் அக்கவுண்ட்ல கிரடிட் பண்ணிடு

    ReplyDelete
  14. நண்பரே,

    பதிவைப் படிக்கும்போதே உங்கள் நடை மாறியிருப்பதை உணர்ந்தேன். எல்லாம் காதல் செய்யும் மந்திரம். அழகான வரிகளால் பதிவை உருவாக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. உண்மை தான் நண்பரே.இதையும் ஹுமரோடு அணுகி இருக்கலாம்.ஆனால்,இந்தப் படத்திற்கு சரியான அணுகுமுறை வேண்டும் என்று நினைத்ததாலேயே இந்த மாற்றம்.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  16. நல்லா எழுதி இருக்கீங்க....
    ஏன் கொரியா படத்தின் மேல் உங்களுக்கு
    இப்படி ஒரு காதல்??.....
    தரவிறக்கம் செய்ய லிங்க் அனுப்பவும்....

    ReplyDelete
  17. //Classic – பொக்கிஷம்.(இந்த hint ஐ யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்க்கலா//

    i have got the info about the movie from a friend of mine who is in the film industry and he said (that was in 2007) it could be what Dir cheran is directing now. So, we watched the film then itself.

    And cheran's film got released only in 2009 and by the time i began to love this film so much that i didn't wanted the good memories of the film to be tarnished and hence am yet to watch the cheran's film pokkisham.

    Because there are so many movies which will be in my personal top list and they will be made into tamil/hindhi films and the essence of that original film is lost forever.

    One classic example is that of Dead Poet's society is killed as a film with shah rukh khan's mohabbatein.

    ReplyDelete
  18. ILLUMINATI said...

    // இவ்வளவு அழகா தமிழ்ல எழுதறவங்க எல்லாம்.. ஏன் ஆங்கிலத்தில் எழுதனும்னு அடம் பிடிக்கறீங்க?? :) //

    அடப்போங்க தல,சும்மா சும்மா நக்கல் பண்ணிக்கிட்டு......///////////



    உண்மையை கண்டு பிடித்த இலுமி அவர்களுக்கு ஒரு பட்டம் ஒன்னு பார்சல்

    ReplyDelete
  19. ஜெட்லி said...

    நல்லா எழுதி இருக்கீங்க....
    ஏன் கொரியா படத்தின் மேல் உங்களுக்கு
    இப்படி ஒரு காதல்??.....
    தரவிறக்கம் செய்ய லிங்க் அனுப்பவும்....//////

    ஒன்னும் இல்லை இலுமிக்கு கொரில்லா குரங்கு என்றால் ரொம்ப பிடிக்கும் ஆனால் இதை தரவிறக்கம் பண்ண முடியாது வேண்டும்மானால் இனபெருக்கம் செய்யலாம்

    ReplyDelete
  20. //Jetli said...//

    அப்பு,ஏதோ வரிசையா ரெண்டு படம் கொரியன் படமா பாத்து விமர்சனம் எழுதிப் புட்டேன்ங்கற காரணத்துக்காக காதல் கீதல்னு சொல்லப்படாது.நாமல்லாம் ரசிகன் சார்.எந்த மொழியில நல்ல படம் இருந்தாலும் அதப் பாத்துபுட்டு அறிமுகப்படுத்துவான் இந்த இலுமு.லிங்க் தான,அனுப்பிடுவோம்...... :)

    //Viswa said....//

    நண்பர் விஸ்வா அவர்களே, Dead Poet's society படம் நன்றாக இருக்குமென்றால் சொல்லவும்.டவுன்லோட் செய்து விடலாம்.ஆனா என்ன,நல்லா மட்டும் இருந்துருச்சுன்னா அப்புறம் நான் அதுக்கு எழுதுற விமர்சனக் கொடுமைய வேற படிச்சு தொலைய வேண்டி வரும்.பரவாயில்லையா? :)

    ReplyDelete
  21. // ஏன் கொரியா படத்தின் மேல் உங்களுக்கு
    இப்படி ஒரு காதல்??.....//

    கொரிய படத்து மேல எல்லாம் காதல் இல்லைங்க,அதுல வர்ற மெழுகு பொம்மைங்க மாதிரியான பிகருங்க கிட்ட தான்,ஹீ ஹீ ஹீ..... :)

    ReplyDelete
  22. நண்பரே,
    எனக்கும் முதல் பாராவை பல தடவை படித்த பின் தான் எனக்கும் யார் யாரை லவ்வுகிறார்கள் என புரிந்தது. இந்த படத்தை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இருக்குமான்னு தெரியல.

    கொஞ்சம் டமால் டுமீல் படங்களை பற்றியும் பதிவிடுங்கள்

    ReplyDelete
  23. நண்பரே,முன்பே சொன்னது போல்,இந்த வாய் சுளுக்க வைக்குற பேரெல்லாம் மறந்து,அந்த கேரக்டரோட உங்கள ஒன்ற வக்குரதுல தான் தல படம் பின்னி இருக்கு.Don't miss a good film due to my amateurish writing. :)

    ReplyDelete
  24. மாப்பு.. இவ்ளோ சூப்பரா எழுதீட்டு அப்புறம் ஏன் ஓட்டுக்கு இந்த கெஞ்சு கெஞ்சுர..

    மோத பாரா படிச்ச உடனே ஓட்டு போட்டுட்டு வந்து தான் மீதிய படிக்கவே ஆரம்பிச்சேன் (சுமார் ஒரு மணி நேரம் முன்னாடி.)இப்பதான் படிச்சு முடிச்சேன்.. முதல்ல தல முடி எல்லாம் நட்டுகிட்டு நின்னா மாறி ஒரு பீல்..

    திரும்பி திரும்பி படிச்சு ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டேன்.. நீ ஒண்ணு பண்ணு.. நம்ம ஊர் பேர்கள வெச்சு வெளக்கினாய்ன்னு வெச்சுக்க,(வெளங்கிடும்) நல்லா புரிஞ்சுக்கலாம்..உதாரணத்துக்கு Sang min க்கு பதிலா பிரகாஷ்,Soo Gyung க்கு பதிலா ஐஸ்வர்யா,Ji Haeக்கு பதிலா அனிதா..(ஆஹா படிக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு). வேணுமுன்னா வில்லன் பேருக்கு பதிலா உன் பேர போட்டுக்க.. என்ன இந்த ஐடியா ஓகேவா..?

    அப்புறம் தமிழ்லேயே எழுது மாபி..

    உன்ன மாறி ஆளுங்க தான் இப்ப தமிழுக்கு தேவை..

    நன்றி..

    ReplyDelete
  25. சாமு மக்கா,போன பதிவுக்கு எல்லாம் வோட்டு கேட்டனா என்ன?எதெல்லாம் மக்கள்ட்ட போய் சேரணும்னு நெனப்பனோ அதுக்கெல்லாம் மட்டும் நான் வோட்டு கேப்பேன்.இது மாதிரி நல்ல படங்கள்,அப்புறம் முக்கியமா காமிக்ஸ்......

    தப்பித்தவறி இது ஹிட் ஆயிடுச்சுன்னா(நம்ம எழுத்துக்கு ஆவாது :)),எவனாவது வந்து பாத்து,நல்லா இருக்குன்னு ட்ரை பண்ணியாவது பார்ப்பான்ல.அதுக்கு தான். இந்த மாதிரி நல்ல படங்கள் ,புத்தங்கள்,காமிக்ஸ் எல்லாம் வெளிய தெரியணும் மக்கா.அதனாலதான் இது வெறும் entertainment ப்ளாகாவே வச்சு நல்ல படங்களையும்,புக்சையும்,காமிக்ஸையும் எல்லோருக்கும் அறிமுகப்படுதுறேன்.

    அப்புறம் அந்த பேரு பிரச்சனை பத்தி,ஏற்கனவே சொன்னது தான்.வாய் சுளுக்க வைக்குற பேர் தான்.அதை தமிழிலேயே அடிக்கலாம்னு பாத்தா tae வுக்கு தே ன்னு வருது.soo வுக்கு சூ இன்னு வருது.oh இன்னு அடிச்சா ஒத் னு வருது.என்ன மாதிரி நல்ல பையன் (சும்மா சொல்லிக்குறது தான்.உங்களுக்கு தெரியாததா?ஏற்கனவே போன பதிவுலையே என்ன நாறடிச்சுட்டானுங்க,உம்மையும் சேர்த்து ) இத எல்லாம் எப்டி போடுவான்? :)

    அதனாலதான்,இங்கிலிஷ்லையே விட்டுட்டேன்.

    அப்புறம்,படத்துக்கு வில்லனா என்ன போடச்சொல்லி இருக்குறீர்.படத்துல வில்லனே கேடயாதுய்யா...
    என்னத்த படிச்சீரோ.நீரு இன்னும் விஜய் படத்துல இருந்து வெளிய வரல போல.அதுல தான் மொக்க ரீசனுக்கு மூணு நாலு வில்லனுங்க இருப்பானுங்க......

    அப்புறம்,நீரு ஹீரோ ஆகணுமா,அதுலயும் கொரியன் படத்துல?அதுக்கெல்லாம் பெரிய கியூ இருக்கேப்பா.உமக்கெல்லாம் சீனியர்பா நானும் ரோஸ்விக்கும்........வந்து ஜோதியில ஐக்கியமாகிக்கோ.... :)

    ReplyDelete
  26. அப்புறம்,என்னதான் கஷ்டப்பட்டாலும் வேதாளம் முருங்க மரம் ஏறத்தான் செய்யும்.அதனால நீங்க எவ்வளவு நேக்கா கேட்டாலும்,அப்பப்போ இங்கிலிஸ்ல எழுத தான் செய்வேன்.பின்ன,நாங்களும் ரவுடி தான் பாஸ்.... :)
    என்ன பண்றது,விதி வலியது.....

    ReplyDelete
  27. இலுமி கொரிய படங்கள் ல டாக்டரேட் வாங்கப் போறயா என்ன...? நல்லா எழுதிருக்க லே!

    ReplyDelete
  28. அடுத்த முறை வேற மொழிப் படத்த பத்தி எழுதிடலாம் மக்கா.... :)

    ReplyDelete
  29. மாபி...

    ஏதோ தெரியாம சொல்லீட்டேன்.. அதுக்காக என் ப்லாகுக்கு வந்து குமுரீட்டியே..
    பரவால்ல...
    இனிமே உன் ப்லாகுக்கு கமன்ட் போடும்போது....

    பீ கேர்புள்... என்ன சொன்னேன்..

    அப்புறம் இந்த படத்துல வில்லன் இல்லைன்னு சொல்ற.. இத மொத வரியிலையே போட்டுட்டு பதிவ ஆரம்பிச்சிருந்தியின்னா நா இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேன்.. ஹி ஹி.. வில்லன் இல்லாத படமா.. ஐயையோ.. கற்பனை கூட பண்ண முடியல.. ஹி ஹி...

    ReplyDelete
  30. ஒரு சின்ன மொக்கை.. விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம்..
    .
    .
    .
    .
    ..
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .

    ..
    .




    இந்தப் படத்துல காதல் தான் வில்லன்..

    ReplyDelete
  31. எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்லே வெளியூர்க்காரன்..நீ ரொம்ப டெம்ப்ட் பண்ற...!!

    ReplyDelete
  32. // எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்லே வெளியூர்க்காரன்..நீ ரொம்ப டெம்ப்ட் பண்ற...!!//

    சீக்கிரமா பாருங்க வெளி.உம்ம மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  33. நீங்க அடுத்த பதிவ எப்ப வேணா போடுங்க...

    ஆனா நான் போடும்போது நீங்க கரெக்டா வந்து பாருங்க..

    என்ன புரிஞ்சுதா..?

    ReplyDelete
  34. நீங்க அடுத்த பதிவ எப்ப வேணா போடுங்க...

    ஆனா நான் போடும்போது நீங்க கரெக்டா வந்து பாருங்க..

    என்ன புரிஞ்சுதா..?

    ReplyDelete
  35. // எலேய் கொரியா மொழி படத்த கூடிய சீக்கிரம் பார்கரான்லே வெளியூர்க்காரன்..நீ ரொம்ப டெம்ப்ட் பண்ற...!!//

    சீக்கிரமா பாருங்க வெளி.உம்ம மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்./

    அப்ப இது அந்த மாறி படமா...?

    ReplyDelete
  36. யோவ்.. எங்கேயா நான் போட்ட கமென்ஸ்சு..டெலிட் பண்ணிட்டியா?..
    தக்காளி.. இதுக்காகவே ஒரு கொரியன் படம் எடுக்கிறேன் ( வசனமே இல்லாம...)

    ReplyDelete
  37. சரி..சரி.. accidant-ஆ டெலிட் பண்ணீட்டேனு நினைச்சுக்கிறேன்..
    ( எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..)

    ReplyDelete
  38. ஓய்,நீரு எப்ப ஒய் கமெண்ட் போட்டீறு?லேட்டா வந்தத மறைக்க இப்படி ஒரு பில்ட் அப்பா?உம்ம அழிச்சாட்டியம் அடங்கவே அடங்காதா ஓய்....

    ReplyDelete
  39. சரி..சரி.. கோவிச்சுக்காதே அப்பு..
    எப்படி விட்டேனு தெரியலை..

    ஆங்.. இதுக்கெல்லாம் காரணம் ரோஸ்விக்கு..

    ReplyDelete
  40. யோவ்,நீரு லொள்ளு பண்ணிட்டு ஏன்யா அந்த அப்புராணி மேல பழி போட்ரீர்?

    ReplyDelete
  41. ஏன்யா இப்படி சொறியா மொழிப்படமாவே போடுறியே, எப்பத்தான் பதிவு போடுவீங்க.

    ReplyDelete
  42. பாஸு,இந்த சட்டி,குட்டி,புட்டி பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.நான் சின்னப்பையன்.அதான்,ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு மொக்க போடறேன்.நீங்க எல்லாம் ‘பெரியவங்க’. உங்க அளவுக்கு என்னால முடியாதுங்க.கொஞ்சம் பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.....

    ReplyDelete
  43. நல்லா இருக்குங்க உங்க விமர்சனம்.. ரொம்ப நியாபக சக்திங்க உங்களுக்கு.. எவ்ளோ பேர்? யப்பா.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..

    ReplyDelete
  44. thala nane..... ungakitta yevlo yharam sonnen. intha mathiri love picturee venam. uruppadiya yethavathu comics pathi yelhuthunga. oru mannum puriyala. illa touchinga yeluthiye theeruvennu adam pudiche...... namma nadana sooravali , vasana beerangi, j.k.rithish padatha pathi yeluthunga. intha padathoda story-i phone panni sollu. mr.r.s.k.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. சார்.. குட்டுமார்னிங்..
    இங்க இலுமினு ஒருத்தர் பதிவ போட்டுகீட்டு இருந்தாரு..

    இருக்காரா.. இல்ல வேற வீட்டுக்கு போயிட்டாரானு கேட்டு சொல்லுங்க சார்..

    ReplyDelete
  47. ஹீ ஹீ ஒன்னும் புரியல படத்தோட கத ... இருந்தாலும் இதுக்கெல்லாம் பயப்படாம படத்த பாத்துட்டு கூடிய சீக்கிரம் என்னோட விமர்சனம் போடுறேன் ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…