தடுக்கிவிழுந்தான்பட்டியில் தேர்தல்......

Disclaimer: Those who came here with expectations for a review can skip this post. However, if you want to have some fun, barge in. You will have some laughs at the least.

படம் அல்லது புத்தகம் பற்றிய விமர்சனம் படிக்கலாம் என்று வந்தவர்கள் இந்த போஸ்ட்டை ஸ்கிப் செய்து விடலாம்.





தடுக்கி விழுந்தான் பட்டியில் தேர்தல்......



  • You, Srini Vasan, Keanu Rivaz and 2 others like this.
  • Illuminatiblog Tamil கர்ப்பம் தரித்த சர்ப்பம் போன்ற மேகம், வாய்க்காலில் இருந்து வரப்பில்லாமல் பாய்வதைப் போல வழிச்சு வழிச்சு என்று பெய்து கொண்டிருந்தது மழை.

    இடம்: டவுசர் டவுன்.

    தெருநாய்கள் துள்ளித் திரியும் ஒரு அபூர்வ நாளிரவு. ஓரத்தில் ஒருவன் ஓரஞ்சாரமாக வந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு டமாரம்.

    டமடமடம் டமடம டம்
    மட மட மட.....

    "இதனால அல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னான்னா, ஊரு பஞ்சாயத்துக்கு எதிரா பிராது கொடுத்திருக்கிறதால பக்கத்து ஊரான தடுக்கிவிழுந்தான்பட்டில தேர்தல் நடக்கப் போவுதுங்கோ. பொழுது போவாதங்க, பொரணி பேசுறவங்க, லவ்வுன்னா லபோதிபோனு அடிச்சுகிறவங்க அல்லாரும் அந்த ஊருக்குப் போய் மறக்காம கள்ள வோட்டாவது போடணும்னு வேண்டிகிறோம் சாமியோவ்......"

    டமடமடம் டமடம டம்
    மட மட மட....

    http://etc.usf.edu/clipart/67500/67531/67531_ball_box2_lg.gif


    6 hours ago · Edited · Like · 3 · Remove Preview
  • Illuminatiblog Tamil மறுநாள்.....

    பொழுது போவாத போதே கூடிச் சேர்ந்து குலவை பாடும் ஊரில் குதூகலம் கும்மியடிக்கத் தொடங்கியது. எட்டுப்பட்டியில் இருந்தும் ஆட்கள் வந்து குசலம் விசாரித்துப்போனார்கள். குறிப்பாக ஆண்டியசந்தாபட்டியில் திருவிழாக்கோலம். பழைய பொஸ்தகம் படிக்கும் பாவலர்கள் மனதிலோ பரவசம். பாடி விழுவதற்கு முன்னரே பாடை கட்டி தயாராக இருந்தார்கள் ஊர் வெட்டியான்கள்.

    இவ்வளவு களேபரத்திற்கும் நடுவில் இந்தத் தேர்தலை நேரடியாக கவர் செய்ய ஏட்டுச் சுரைக்காய் டிவி எனப்படும் ask tv நிருவர் ஒருவரை அனுப்புகிறது.

    சர்வதேச விவகாரகங்களில் அடிவாங்கினாலும் சப்ப விசயங்களை சல்லடை போட்டு அலசும் நிருபர் முக்காட் முன்சாமியை அனுப்பி வைக்கிறது.
    6 hours ago · Edited · Like · 3
  • Shankar Armand ஹாய் ஹாய் ஹாய் வணோக்கம் கால்ல விழுந்து கும்புடுறேனுங்க உங்க எங்க அவங்க ஆஸ்க் டிவியின் அடிவாங்கினாலும் அழாத நிருபர் முக்காட் முன்சாமி.... தடுக்கி விழுந்தான் பட்டில நீங்க தடுக்கி விழுந்தா ஆடுக கிட்ட தான் சாரி கேட்கனும்... ஆடுக தாங்க இந்த ஊரோட ஆத்மா... அதுங்க கூவினாதான் இங்க பொழுதே புலரும்... ஜீவனம் நடக்கும்... அமைதியா அசைபோட்டுகிட்டே இருந்த இந்த கிராமத்தில இன்னிக்கு எந்த திக்கில எங்க அடிவிழும்னு தெரியாத ஒரு டென்ஷனான நிலை..... இதற்கு காரணம் என்ன.... அதை அறிஞ்சிக்கிறதுக்காக இப்ப நாம சந்திக்கப்போற முக்கியமான நபர்தான் நாட்டாமை நடராசா..... ... வணக்கம் நாட்டாமை நடராசா சார்... வித்தியாசமான பேர் சார்... இந்தப் பேர் வந்ததுக்கு ஏதும் காரணம் இருக்கா...
    6 hours ago · Unlike · 3
  • Illuminatiblog Tamil ஆங், வாங்க வாங்க. வந்தப்ப நீங்க எதுத்த தெரு வழியா வரலியே?
    6 hours ago · Like · 2
  • Shankar Armand இப்பதாங்க ரெண்டு ஆடுககிட்டு முட்டு வாங்கிட்டு வந்தேனுங்க... ஏனுங்க அப்டி கேக்றீங்க...
    6 hours ago · Like · 2
  • Illuminatiblog Tamil ஒன்னுமில்லீங்க. அங்கிட்டுத் தான் ஒரு குடமுருட்டிக் கபோதி குடோவ்ன் வச்சு என் பொழப்ப கெடுத்துட்டு இருக்கான். அந்த பக்கமா வார யார் கூடையும் நான் மருவாதையா பேஸ் மாட்டேன்.
    6 hours ago · Like · 3
  • Shankar Armand அப்டியா... ஆனா எங்களிற்கு வந்த தகவல் அப்டி இல்லீன்களே சார்....அது ஏதோ கலையார்வ கடைன்னு சொன்னாங்களே
    6 hours ago · Like · 2
  • Illuminatiblog Tamil என்னது, கலையார்வக் கடையா? களவாணிப் பயலுக கடைய கலையார்வக்கடைனு என்கிட்டே கதை விடுறியா? ஏலேய், நீயும் அவன் கூட்டாளி தான? ஒழுங்கா பதில் சொல்லு இல்ல உம்பேர்லயும் பிராது கொடுத்துருவேன்.
    6 hours ago · Like · 3
  • Shankar Armand நான் கூட்டாளி இல்லீங்க... ஏனுங்க அது கலையார்வ கடைன்னதும் இப்டி டென்ஷன் ஆவுறீங்க.... வியாபாரத்தில போட்டி இருக்கலாம் ஆனா அதுக்காக இப்டியா... நீங்களும்தான் கடை வெச்சிருக்கீங்க.... வியாபாரம்னு வந்தா எல்லாருமே வியாபாரிங்கதானே சார்.... சரி அத்த விடுங்க ....கிராம முன்சீப் அஞ்சுபேர் ஆறுமொகத்திற்கு எதிரா நீங்கதான் பிராது தந்ததா சொல்றாங்க ஏனுங்க சார்..
    6 hours ago · Edited · Like · 2
  • Illuminatiblog Tamil ஏலேய், என்னல பேசுத? கோடோவ்ன் வச்சு கொள்ளயடிக்குறவனும் கொய்யாக்கா வியாபாரம் பண்றவனும் ஒண்ணால? இனிமே உனக்கு மருவாத கிடையாதுல. இதுக்கு மேல நீ இது பத்தி பேசுன உன் குதவளைய கடிச்சு துப்பிருவேன். ஊருப் பஞ்சாயத்தே வந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது பார்த்துக்க.
    6 hours ago · Like · 3
  • Shankar Armand ஏனுங்க இப்டி பாய்றீங்க... இப்ப பிராதுக்கு வாங்க... கோபப்பட்டு கேள்விக்கு பதில் சொல்லாம என்னமெல்லாமோ பேஸ்றீங்க... கேள்வி உங்களிற்கு எப்டி இந்தப் பேர் வந்திச்சு.... நீங்க ஏன் மூன்சீப் அஞ்சுபேர் ஆறுமொகத்திற்கு எதிரா பிராது தந்தீங்க... [ என்னாது ஆடு கமெரா குறுக்கால போதா... யோவ் கமெரா அப்பதான்யா ஒரு எதார்த்தமான ஃபீலிங்க் வரும் அதையும் சேத்தே பொட்டிக அமுக்கிக்க ஆங் ]
    6 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil அதுவா? எழவு, முன்னல்லாம் கட்டப் பஞ்சாயத்துக்கு போவனும்னா கட்ட வண்டி கட்டிக்கிட்டு போவேன். ஒரு கடன்காரக் கபோதி வந்து என் கட்ட வண்டிய தூக்கிட்டுப் போன பின்ன எங்ஙன போனாலும் நடந்தே போவ ஆரம்பிச்சேன். கட்டப் பஞ்சாயத்து கபாலினு பேர் வந்துருமோன்னு நானே நாட்டாமனு பேர் வச்சுகிட்டேன்.
    6 hours ago · Like · 2
  • Shankar Armand ஒ ... நைஸ் ஹிஸ்டரி சார்... இப்ப பிராது பத்தி சொல்லுங்க... [ லேய் கமெரா என்னலே ஜாக்கெட் இல்லா பிகர பாக்கிற..... பேட்டி இங்கல... வேலையப் பாருலே வெண்ணெய்.. ]
    6 hours ago · Edited · Like · 2
  • Illuminatiblog Tamil பிராது என்னல பிராது? பூரா பிராடுக்கார பயலுவ ஊருல இது. இதுல நீ வேற பேட்டின்னு புறப்பட்டு வந்துட்ட. ஏலேய் கேமிரா மானு, கேக்காம கொள்ளாம எதுத்த கடை எனிமிய கவர் பண்ணின கொன்னுருவேன்.
    6 hours ago · Edited · Like · 3
  • Shankar Armand லேய் கமெரா ஒழுங்கா இங்க நடக்கிறத புடி... அங்கின என்னத்துக்குடா கமெராவ திருப்புற ... சார் அடிச்சிடப் போறாரு.... சார் இங்க ஒன்னு பேசினா அங்க ஒன்னு பேஸ்ற யுனிவர்ஸ் சார் இது.... இப்ப நான் பேஸ்றது டிவில வேறயா வரும்... அதுக்காக டென்சன் ஆவலாமா... [ நடராசாவின் போன் ஒலிக்கிறது.... நடராசா போனை எடுத்து அழைப்பவர் பெயரை பார்த்து விட்டு காலில் விழப்போவர் போல உடல்மொழி தருகிறார் ] சார் போன் அடிக்குதுல்லே பேசுங்க... நான் அப்டியே ஒரு வாட்டி இந்த தெருவை கவர் பண்ணிக்குறேன்...
    6 hours ago · Like · 2
  • Illuminatiblog Tamil ஆ, அலோ. சொல்லுங்க தெய்வமே. ஆமா ஆண்டவரே. பிராது கொடுத்தேன். உங்க வூட்டுக்கு கடுதாசி அனுப்பிட்டேன் ஆண்டவரே. ஆமா ஆண்டவரே. கண்ணம்மாபேட்டல தான் கலவரம் ஆண்டவரே. கொஞ்சம் கோக்குமாக்கு பண்ணிக்கிட்டு திரியுதாணுவ. கள்ள நோட்டு அடிச்சீங்கனு எல்லாம் கப்பித்தனமா பேசுனாணுக. ச்சே ச்சே, நான் நம்பல ஆண்டவரே. ஆறுமுவத்த அரை முவமா ஆக்காம விட மாட்டேன் ஆண்டவரே. இனிமே கேள்வி கேக்கட்டும். குதவளைய கடிச்சுபுடுறேன்.

    (கேமிரா மேன் கலவரத்துடன் கழுத்தை கவர் செய்கிறார்.)

    கொடௌன் கோவிந்தன வரச் சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா ஆண்டவரே, அவன கண்டாலே எனக்கு ஆவாதுன்னு? என்னாது அவன க்வாட்டர் கோழி பிரியாணி கொண்டு வர சொல்லணுமா? 
    சரி ஆண்டவரே. சாயங்காலம் சவுக்குத் தோப்புக்கு வந்துர்றேன் ஆண்டவரே. எள்ளு உருண்ட கொண்டாறனுமா? எடுத்துட்டு வாரேன் ஆண்டவரே. வச்சுர்றேன் ஆண்டவரே.
    5 hours ago · Like · 2
  • Shankar Armand [ தொலைபேசியை எதிர்த்த கடையில் நிற்கும் அழகான பெரிய மனிதர் ஒருவரை நோக்கி ஆவேசமாக லக்கு வைத்து எறிந்து விட்டு நாட்டாமை நடராசா நம் பக்கம் வருகிறார்.... எதிர்த்த கடையில் நிற்கும் பெரிய மனிதர் எம் கமெராவை காட்டி தன் கடைக்கும் வரச்சொல்லி டெய்லி மிரர் முன்பக்க போஸ் தருகிறார்.... ] ஒ சாரி சார்... எக்ஸ்ட்ராவா சில ஷாட்ஸ் எடுத்துகிட்டு இருந்தேன்... யார் சார் அந்த ஆண்டவர்... ஆல் இன் ஆல் அமுக்கு ராசா தானே.... [ பளார்.... இது நடராசா என்னை அறைந்த சத்தம் .... அழமாட்டேன் என முன்னமே சொல்லியிருக்கேன் பேட்டி முக்கியமில்ல...]
    5 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil ஏலேய் சவத்து மூதேவி....பேரு சொல்லிக் கூப்பிட உனக்கு எம்புட்டுத் தைரியம்? அவன் என்னடானா எதுத்து கேள்வி கேக்குறான். நீ என்னடான்னா பேர சொல்லிக் கூப்பிடுற. பிராது கொடுத்த மாதிரி உன் ப்யூஸயும் புடுங்கி விட்டுருவேன். ஒழுங்கு மருவாதையா இருந்துக்க. ஊர விட்டு போறப்ப உன்ன ஊற வச்சு கொண்டு போற மாதிரி நடந்துக்காத.

    (வாய்க்குள்ளேயே : ஆண்டவரு என்னன்னா அவன கோழி பிரியாணி கொண்டார சொல்றாரு. என்கிட்ட எள்ளுருண்ட தான் கேக்குதாரு. எல்லோருக்கும் என்னப் பார்த்தா எளப்பமா போச்சு. இருங்கல எல்லாப் பயலையும் எட்டி மிதிக்குதேன்)
    5 hours ago · Edited · Like · 2
  • Shankar Armand இப்டி அடிச்சிப் போட்டீங்களே சார்.... சரி சார் தொழில்ல இது எல்லாம் வழக்கமாகி போச்சு... இப்ப ஏன் பிராது கொடுத்தீங்கன்னு சொல்லுங்க... நான் கெளம்பிடுறேன்... இன்னிக்கு எத்தனைபேர் என்ன அடிக்கப் போறானுகளோ...
    5 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil ஏலேய், சொல்லுதன் கேட்டுக்கல. அஞ்சுபேரு ஆறுமுவம் என் ஆண்டவரயே எதுத்து கேள்வி கேட்டுப்புட்டான். டவுசர் போடத் தெரியாத காலத்திலேயே டவுன சுத்திக் காட்டின தெய்வமா என் ஆண்டவரு. தனியா போனா தெய்வக் குத்தம் ஆயிடும்னு, இன்னைக்கு கூட மருவாத கொடுத்து எங்கிட்டுப் போனாலும் அவரு கைய பிடிசுக்கிட்டுத் தான் போவுறேன். ஆனா இந்த எடுபட்ட பய....

    பேசிக்கொண்டே கொலைவெறியோடு எதிரே போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போஸ்டர் பாண்டியை கவனிக்கிறார்.

    ஏலேய், எவம்ல அவன், போஸ்டர் ஓட்டுற பரதேசி? பக்கத்து தெருவுக்கு போயிட்டு என் தெருவுக்கும் வர்ற அளவுக்கு உனக்கு எகத்தாளம் ஆயிப் போச்சா? ஒழுங்கா சொல்லுல சனியனே, நீ அவன் ஆளு தான்? ஏலேய், என்னல ஓணான் மாதிரி முளிக்குத? நீ அவன் ஆளு தான? நேத்து கூட உன்ன என் ஆண்டவர் வீட்டுப் பக்கமா பார்த்தனே? என்ன உளவு பாக்குதியா? ஒரண்ட பண்ண வந்தியா? ஒண்டிக்கு ஒண்டி வால பாப்போம். ஏலேய், பயலுவலா, அவனப் பிடிங்கல. ஏலேய், ஓடாதல. நில்லுல. அவன் எதுத்த தெருவுகுள்ள நுழையுரதுக்குள்ள பிடிங்கல. 

    (துரத்திக்கொண்டே ஓடுகிறார்)
    5 hours ago · Edited · Like · 1
  • Shankar Armand கமெரா , ஓடிக்கிட்டே பேட்டி எடுக்கலாம்... ரன்னிங் கமெண்ட்ரி.... எல்லாத்தையும் பொட்டிக்க அமுக்குலே.... போஸ்டர் பாண்டிய அடிக்கிறத சுத்தி சுத்தி எடு.... ஏனுங்க அவர இப்டி அடிக்கிறீங்க... அவர் என்ன அப்டி தப்பா செய்திட்டாரு... சாரு... சாரு.... நில்லுங்க... நாட்டாமை நடராசா போஸ்டர் ஒட்டிய பாண்டியை ஆவேசமாக துரத்திக் கொண்டு ஓடுகிறார்... ஓடும் வேகத்திலும் கலையார்வக் கடைமீது ஒரு கல்லை வீசிட அவர் தவறவில்லை..... ஆடுகள் இதுகுறித்த எந்த சலனமும் இன்றி சூரிய ஒளிதரும் சுகத்தை அனுபவித்தபடி நகர்ந்தன... நாமும் பிராது தரப்பட்ட முன்சீப் அஞ்சுபேர் ஆறுமுகம் அவர்களை தேடிச் செல்கிறோம்.... அவர் வீட்டிற்கு முன்பாக நான் இனி பேஸ்மாட்டேன் என பெரிய பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது....
    5 hours ago · Unlike · 2
  • Shankar Armand பேஸ்மாட்டேன் என பேனர் பார்த்ததும் என் அடிவயிற்றில் ஒரு திகில்... மெல்லதாய் ஒரு ஜீனியர் பயம்... முத்தாய் நெற்றி வியர்வை... முத்து மினி இழையாய் வழிந்தது... இருந்தாலும் உள்ளே நுழைந்து லயனை பார்த்து விடுவது என் தொழில் பற்று ஆகவே என் இனிய ரசிகர்களே.... அஞ்சுபேர் ஆறுமுகம் அவர்களின் வீட்டிற்குள் நுழைவோம்.... சார்.... சார்... முன்சீப் சார்.... நாங்க ஆஸ்க் டிவில இருந்து வந்திருக்கோம் சார்... சில கேள்விக கேட்கனும்.... உங்ககூட பேசலாமா சார்... ஒரு சின்ன பேட்டி சார்.... அடைபட்டிருந்த ஜன்னல் ஒன்று இரு சிமி திறக்க.... கூர்மையான இருவிழிகள் எம்மை பார்ப்பது முதுகுத்தண்டில் டைஜெஸ்டாக ஊர்ந்தது.... ஆ இது நடராசா இல்லன்னு ஒரு குரல் கதவு திறக்கிறது.... முன்சீப் அஞ்சுபேர் ஆறுமுகம் கைகளை கமெராவிற்கு கூப்பியவாறே வருகிறார்..... வாங்க வாங்க.... வருவீங்கன்னு தெரியும்.... ஆனா இவ்ளோ சீக்கிரமா வருவீங்கன்னு தெரியாது என எம்மை வரவேற்கிறார்.... முன்சீப் சார் உங்க பேர் ரகசியத்த சொல்லுங்க....
    5 hours ago · Unlike · 2
  • Illuminatiblog Tamil என்ன தம்பி, எதுனா எள்ளுருண்ட சாப்புடுறீங்களா? எளநி எடுத்தார சொல்லவா? 

    (எழவு இங்கயும் எள்ளுரண்டயா என்ற முணுமுணுப்பைக் கேட்டு கபக்கென வாயை மூடிக் கொள்கிறார்)
    4 hours ago · Edited · Like · 1
  • Shankar Armand இந்த ஊர்ல பதில் வரணும்னா எந்தக் கேள்வியயும் பல தடவ கேக்கனும் போல ... சார் , உங்க பெயர்ல அஞ்சு ஆறுன்னு இரண்டு நெம்பர் இருக்கு.... பேர் முகம்னு ரெண்டு சொல்லு இருக்கு என்ன ஒரு ஆச்சர்யம்... இப்டி பேர் எப்டி வெச்சாங்க.... இப்பதான் நாட்டாம நடராசவை பாத்திட்டு வர்றோம் ஆவேசமா ஓடிக்கிட்டு இருக்காரு.... இங்கிட்டு வந்தாலும் ஆச்சர்யம் இல்ல.... அவர்தான் உங்களிற்கு எதிரா பிராது தந்திருக்காரு.... ஏன் சார்.... சொல்லுங்க,,,, டமார் [ நடராசா பெயரைக் கேட்டதும் புலிபோல பாய்ந்து முன்சீப் வீட்டிற்குள் போய் கதவை கபால் என அடித்து சாத்திக் கொள்கிறார்.....] சார் ... நாட்டாமை அங்கின ஓடிட்டு இருக்காரு... நீங்க வாங்க சார்.... ரெண்டு இளநீ தாங்க... சார் .... வாங்க சார்....என்ன இப்டி பயந்துகிட்டு வாங்க சார் வெளியே.... பதில சொல்லுங்க சார்....
    4 hours ago · Edited · Like · 1
  • Illuminatiblog Tamil தம்பி, என்னையும் என் கூட்டாளிகளையும் சேர்த்து அஞ்சு பேரு தம்பி. எப்பயும் ஒன்னாவே திரிவோம். குறிப்பா எதுனா எசகுபிசகா ஆகிப் போச்சுனா அவனுக பின்னாடி பம்மிக்குவேன். அதான் ஊரு மக்கள் அஞ்சுபேரு ஆறுமுகம்னு பாசத்தோட பேர் வச்சுட்டாணுக.

    (சரி கதவ திறங்க என்ற சத்
    தத்தைக் கேட்டு கலவரம் ஆகிறார்)

    முடியாது. நான் செஞ்சது தப்பில்ல. பேஸ் மாட்டேன். இனிமே ஆர் கூடையும் பேஸ் மாட்டேன். வேணும்னா ஊர விட்டு ஓடிப் போயிடுறேன். கதவை கண்ணீர் நனைக்கிறது.

    பேஸ் மாட்டேன் என்பதை கேட்டு கலவரமாகும் முனுசாமி மூஞ்சில் அடித்துக் கொள்கிறார்.
    4 hours ago · Like · 2
  • Shankar Armand அய்யய்யோ ஓடிப் போகுமுன்னாடி என் கேள்விக்கு பதில சொல்லுங்க.... ஏன் சார் இந்த பிராது பத்தி கொஞ்சம் சொல்லுங்க.... [ கதவின் பின் இருந்து கேவிக் கேவி அழும் ஒலி கமெராவின் கண்களை கரைக்கிறது.... கோடை மழைபோல முன்சீப் கண்ணீர் இறுக மூடிய கதவுகளின் உடலை நனைக்கிறது.... ]
    4 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil பேஸ் மாட்டேன், போங்கடா. பேச வச்சு என்ன பொணமாக்கலாம்னு தான் உங்க பிளானு? நானு ஊரை விட்டே போறேன். போறதுக்கு முன்ன எலெக்சன் வச்சுட்டு போறேன். வூட்டுக்குள்ள வந்து அடிச்சா மட்டும் எதுனா செய்வேன்னு நினைச்சீங்களா? வெளிய போங்கடா, இல்ல அழுதுருவேன்.

    பேசிக்கொண்
    டு இருக்கும்போதே ரத்தவாந்தி எடுக்கிறார்.

    எங்கே கொலைக் கேஸ் ஆகிவிடுமோ என்று முன்சாமி முகத்தில் கலவரம் கூத்தாடுகிறது. எழவு, ஊராடா இது? ஊறுகா வித்தா கூட ஒரண்ட பண்ணுவாணுக போலயே என்று அலுத்துக் கொள்கிறார்.

    விற்பனை என்ற வார்த்தையை கேட்ட உடனேயே உள்ளே இருந்து, இல்ல நானு வாங்கல என்ற அலறல் காதைக் கிழிக்கிறது.
    4 hours ago · Like · 1
  • Shankar Armand கதவிற்கு அப்பால் இருந்து வந்த அந்த குரலின் வேதனைகளை என்னால் படம் பிடிக்கவோ அல்லது தடம் பிடிக்கவோ முடியவில்லை.... பிராது பத்தி எவனுமே சொல்லமாட்டானா இந்த ஊரில் எனும் விரக்தியான ஒரு எண்ணம் சென்சார் செய்யப்பட்ட பக்கத்தை பார்த்த பூனையாக என்னில்.... சார் முன்சீப் சார் நாம கெளம்புறோம்... எப்டியோ தேர்தலிற்கு அப்புறமா உங்க கண்ணீர் தீரும்னு நம்புறோம் நு சொல்லி அங்கிருந்து கெளம்பி வேட்பாளர் பட்டியலில் உள்ள பழங்கஞ்சி பலவேஷம் அவர்களை சந்திக்க அவரிருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தோம்.... பழங்கஞ்சி பலவேஷமா .... யார் சார் அவரு கேள்விப்பட்டதே இல்லியே... எங்களயும் டிவில காட்டுங்க.... சார் பழங்கஞ்சி பலவேசம்னு யாரும் இல்லீங்க... ஆனா ஊரே மெச்சிக்கற மாதிரியா ஒரு வேட்பாளர் இருக்கார் பேரு நல்லபேரு நாத்தமுத்து... பார்த்து பேசுங்க சார் ... ஸ்கூல்ல இருப்பாரு... அட என் பேரா டவுன்லோட் டவுசர் பாண்டி.... நல்லபேருக்கு ஆபிசியலா ஜால்ரா தூக்கினு இருக்கேன்.... ஒரு ஒப்பந்தம் தான்.... நாம் ஸ்கூலிற்கு சென்று தேட ஆரம்பித்த போது க்ளாஸில் பசங்களுடன் அமர்ந்திருந்த ஒரு பெரியவர்... வாத்தியாராக இருக்கலாம் என எண்ணி அவரிடம் கேட்கலாம் என அவரை அணுகினோம்.... வணக்கம் சார்.... நீங்கதான் வகுப்பு ஆசிரியரா சார்... நாங்க இங்க பழங்கஞ்சி,,,, இல்ல இல்ல நல்லபேரு நாத்தமுத்துன்னு ஒரு நல்லவரை தேடி வந்திருக்கோம் சார்.... டிவி சார்... பேட்டி சார்....வெளம்பரம் சார்...
    4 hours ago · Unlike · 2
  • Illuminatiblog Tamil ஆஹா, விளம்பரமா? தம்பி, ஓடிப்போய் அண்ணனுகளுக்கு ஆளுக்கு டபுள் டீ வாங்கியா.

    சொல்லுங்க சார். நல்லவன் தான சார்? நான் தான் சார். நான் மட்டும் தான் சார். டீச்சர் வெளிய போயிருக்கார். நான் தான் சார் கிளாஸ் மானிட்டரு.
    4 hours ago · Like · 2
  • Shankar Armand என்னாது மானிட்டரா.... .... நீங்க நினைக்குற மாதிரி என்று ஏதோ சொல்ல நல்லபேர் நாத்தமுத்து வாய் எடுக்கும் போதே பொத் என்று ஒரு சத்தம் கேட்கிறது......பெரியவர் நல்லபேர் நாத்தமுத்து க்ளாஸ் மானிட்டர் எனும் தகவல் அதிர்ச்சியை தாங்க இயலாது கமெராவும் கமெராமேனும் மண்ணில் சரிகிறார்கள்.... நல்லபேர் நாத்தமுத்து தன் ஸ்கூல் பையிலிருந்த ட்ரிங் பாட்டில் தண்ணீரை கமெராமேன் முகத்தில் அடித்து மயக்கம் கலைக்கிறார்... கமெராமேன் கண்களில் கண்ணீரா தண்ணீரா என எனக்கு தெரியவில்லை.... டேய் கண்ட்ரோல் பண்ணிக்கிடா.... தளபதி ஸ்டூடண்டா நடிக்கல... அது எல்லாம் இதப்பாத்துதாண்டா ... தொழில் முக்கியம் எந்திரிச்சு கமெராவ தூக்குடா... என்று கிசுகிசுத்தேன் ....... பேட்டி தொடர்கிறது.... அய்யா சத்தியமா இவ்ளோ பொறுமையா படிக்கிற ஆள நான் கண்டது இல்ல ... நீங்க வாழும் அதிசயம்யா..... இப்ப இந்த பிராது பத்தி.... நீங்க வேட்பாளாரா நிக்கிறது பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்....
    4 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil நானு பேர் கொடுக்கல சார். என் கூடப் படிக்கிற பய தான் எவனோ என் பேர போய் கொடுத்திருக்கான். 

    கேமிரா கிறுகிறுவென்று சுத்துகிறது. 

    அப்பால நடராசா நன்றி சொல்ல வந்தப்ப நான் நின்னே ஆவனும்னு அடம் பிடிச்சார். நானு இப்பயே எழுத்துக் கூட்டி ராஜினாமா எழுதி வச்சுட்டே
    ன். ஒருவேளை நான் ஜெயிச்சுபுட்டா எழுதிக் கொடுத்துட்டு வந்துருவேன். வேலை மிச்சம் பாருங்க. அதுக்கு அப்பால ஆண்டவனுக்கு அருள் பாடிகிட்டே என் மிச்ச பொழுதையும் கழிச்சுருவேன். எனக்கு என்ன சார், நாலு பேரு நம்ம பத்தி நல்லதா சொன்னாலே போதும். அதுக்கு தான சார் இவ்ளோ கஷ்டம், விளம்பரம், இவ்ளோ விளையாட்டு. இதுக்கு மேல காசு பணத்தை வச்சு நான் என்ன பண்ணப் போறேன்? நல்லவன்னு பேரு எடுத்தா என் கட்ட கப்புசிப்புன்னு எரியும்.
    4 hours ago · Edited · Like · 2
  • Shankar Armand ஒ வெரி இண்ட்ரெஸ்டிங்... சொல்லுங்க சார்... ஏன் தயங்குறீங்க....
  • Illuminatiblog Tamil குஜாலாக தொடர்கிறார்...

    பார்த்தீங்களா, நீங்களே நல்லவன்னு நம்பிட்டீங்க. அதான் தம்பி முக்கியம். சில பேரு இருக்காங்க. முந்தா நாள் ஒண்ணு பேசுவாங்க. இன்னைக்கு ஒண்ணு பேசுவாங்க. கேட்டா ஒரே விசயத்த எப்டிறா தினமும் பேச முடியும் மடப்பயலேனு பொடேர் பொடேர் னு அடிப்
    பாங்க. மனுசன்னா நாக்கு சுத்தி வேணும்ங்க. ச்சே ச்சே... சுத்தத்தை சுத்தினு தான் சொல்லுவேன். இது மட்டுமில்லாம செக்கு மாடு மாதிரி இருக்காதடானு கூட சொல்லுவாங்க. 
    அயோக்கியனுங்க....கண்டுக்கமாட்டனே. ஒரு விசயத்தை டேப் ரிக்கார்டர் கணக்கா ஒப்பிக்கனும்ங்க. வார்த்தை தவறக்கூடாதுங்க. எதுனா எசகு பிசகா படிச்சா சாமி கண்ணக் குத்திரும் இல்லீங்களா?

    டீச்சர்கிட்ட, பிரின்ஸிகிட்ட, ஆல் இன் ஆல்கிட்ட, ஊரு மக்கள் கிட்ட, கூடப் படிக்கிற கோலீக்ஸ் கிட்ட எல்லோருகிட்டையும் நான் நல்லபேரு வாங்கனும்ங்க. 
    இந்த ஊரே என்ன நல்லவன்னு சொல்லனும்.

    எல்லாரும் என்ன மெச்சனும்.

    எல்லாரும் என்ன மெச்சனும்.

    எல்லோரும் என்ன மெச்சனும்.

    நடுவீதில வச்சு என்ன உச்சி முகரனும். அதாங்க என் ஆசை. இது ஒரு பேராசையாங்க ? இத சொன்னா ஊருக்கு வெளியால சில பேரு செருப்ப எடுத்துட்டு வர்றாணுக. அதாங்க ஸ்கூல் விட்டே வெளியே போறதில்ல...

    ஒரு பெரிய பெருமூச்சு
    3 hours ago · Like · 2
  • Shankar Armand நல்லவர்கள் இருந்தால் மழை பொழியும் என் கண்கள் பொழியும் மேகங்களாகின.... சார் உங்கள பார்த்தாலே நல்லவருன்னு தெரியுது ... உங்ககிட்டு இருக்கப்ப நானே நல்லவனா உணர்றேன்.... உங்கபோல பலபேர பாத்திருக்கேன் ஆனா உங்கபோல நல்லவர பார்த்தது இல்ல.... உங்கமாதிரி நல்லவங்களஎதிர்க்கிறவங்கதான் அதிகமா இருப்பாங்க.... நல்லது நடக்கிறது சகிக்காத சண்டாளப் பசங்க... கூமுட்டைக... ஆனா இட்லிக்கு ஊசிப்போன சட்னிபோல உங்களிற்கும் ஆதரவா சிலபேர் இருப்பாங்க இல்ல.... இருக்காங்களா சார்.... கண்ணீரை நான் துடைத்துக் கொள்கிறேன்... வாழ்க்கையில் ஒரு நல்லவரை கண்ட திருப்தி....
    3 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil காலம் முன்ன மாதிரி இல்லீங்க. சந்தைக்கு போறப்ப சிலரு சப்பு சப்புன்னு அடிப்பாங்க. ஊருக்குள்ள போறப்ப சில பேரு உருட்டுக் கட்டய உருவிட்டு வருவாங்க. அசந்துற மாட்டேனே. கபக்குனு கால்ல விழுந்து கதறி அழுதுருவேனே. அதுவும் முடியலன்னா பக்கத்து ஸ்கூல் போய் கத்திய உருவி கல்ல எடுத்துப் போட்டுட்டு அப்பால கோவம் தணிஞ்ச பின்ன போய் கால்ல விழுந்துருவேன்.
    ஆனாலும் எப்பயுமே எம்பின்னாடியே சுத்துற நாலு பேரு இருக்காங்க. குறிப்பா சொல்லனும்னா சந்துமுனை சபரின்னு ஒருத்தர். இந்த தேர்தலுக்கு கூட எனக்கு வெளிய இருந்து ஆதரவு தர்றார்.

    திடீரென்று வெளியே ஒரு குரல் கேட்கிறது.

    "ஏலேய், போஸ்டர் அடிக்க சொன்னவன் நீ தானல?"

    படக்கென்று பாய்ந்து போய் மொபைல அமுக்குறார்
    பரபரவென்று பொத்தான்களை அமுக்குகிறார்.

    "அலோ, டீச்சரா?
    நான் தானுங்க.
    எவனோ எடுபட்ட பய நான் தான் உங்கள அசிங்கப்படுத்தி போஸ்டர் ஒட்ட வச்சேன்னு சொல்லிக்கிட்டு திரியுராணுக.அப்டில்லாம் எதுவுமில்லீங்க.
    நானு என்னைக்காவது சுயமா எதுனா செய்திருக்கேனா
    நீங்க என் மேல சந்தேகப்படாதீங்க சாமி."

    பேசிக்கொண்டு இருக்கும் போதே கபாலென தரையில் விழுகிறார்.

    உடனே எழுந்து போய் நோட்டு புக் எடுத்து அதில் உள்ளதை ப்ளாக் போர்டில் கிறுக்குகிறார்.

    "ஏலேய் பசங்களா எல்லாப் பயலும் உடனே இத அவங்கவங்க நோட்டுல வழக்கம் போல காப்பி பண்ணுங்கல."

    "கேமிரா அங்கிள், நீங்களும் படக்குன்னு ஒரு புக்கு எடுத்து காப்பி பண்ணுங்க ப்ளீஸ்."

    கேமிரா கொலை வெறியோடு பார்க்கிறது. நிலவரம் கலவரம் ஆவதை உணர்ந்த முக்காடு படக்கென சந்துமுனை சபரியை சந்திக்கக் கிளம்புகிறார்.
    3 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil வெளியே போகும் போதே டவுசர்பாண்டி நாலு பேரோடு நல்ல பேர் நாத்தமுத்து வாழ்க என்று கூவிக்கொண்டே டயர் உருட்டிக் கொண்டு எதிரில் வருகிறார்.
    3 hours ago · Like · 2
  • Shankar Armand டவுசர் பாண்டியின் வாழ்க கோசம் ஒரு மதயானையாக என்பின்னே.... வெளியே இருந்து ஆதரவு தரும் அந்த மனிதரைக் காண நாம் எம் பயணத்தை ஆரம்பித்தோம்.... நல்லபேரு நாத்தமுத்து நல்லவர் என்பதை நீங்கள் இப்போது தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்.... இல்ல டீச்சர் இல்ல டீச்சர்... இவந்தான் என்ன கிள்ளினான்... இவந்தான் புக்குக்கில வெச்சு காமிக்ஸ் படிச்சான்.... என ஸ்கூல் பக்கம் இருந்து வந்த குரலையும் நாம் தாண்டி செல்கிறோம்.... சந்து சந்தாக போகும் நான், சண்டை நடக்கும் ஒரு சந்து முனையில் ஒருவர் நின்று கொண்டு கத்திக்கொண்டு இருப்பதைக் காண்கிறேன்.

    நல்லா வக்குறானுகய்யா பேரு இந்த ஊர்ல என்று அலுத்துக்கொண்டே அவரை நெருங்குகிறேன். எம் அருகில் நெருங்கும் சந்தில் நின்று வேகமாக ஒலிக்கிறது ஒரு குரல்.... மொத்தமாதாண்டா விப்பேன்... சில்லறை இல்லடா.... ஒத்தல... குரல் வந்த பக்கமாக நானும் கமெராவும் திரும்பிட சந்து முனையை தாண்டிவிடா தவத்தில் எம்மை பார்த்து இன்ஸ்டெண்ட் காப்பியாக புன்னைக்கிறார் சந்துமுனை சபரி.... சார் ஏன் சார் இப்படி முனைல நிக்கிறீங்க என கேட்கிறேன்...
    3 hours ago · Edited · Unlike · 2
  • Illuminatiblog Tamil "ஆங், வாங்க வாங்க....

    எப்படிங்க சண்டை நடக்குற இடத்துக்கு போறது? என்கிட்ட தான் செருப்பு இல்லையே!"

    என்று சொல்லிவிட்டு பச்சைக்குழந்தை போல கள்ளம் கபடமின்றி சிரிக்கிறார்.


    'ஆமா, ஆரு நீங்க?'
    3 hours ago · Edited · Like · 1
  • Shankar Armand ஆஸ்கு டிவில இருந்து வந்திருக்கோம் சார்.... ஏன் சார் இப்டி சந்துல நின்னு கத்தியே உங்க வாழ்கை ஒரு தேய்ஞ்ச குரலாகிடும்னு நீங்க எண்ணிக்காவது எண்ணிப் பாத்திருக்கீங்களா.... நீங்ககூட இந்த தேர்தல்ல நிக்கீங்க... இந்தக் கிராமம்மீது உங்களிற்கு அவ்ளோ அக்கறையா சார்....
    3 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil 'என்னங்க நீங்க? என்கிட்ட தான் செருப்பு இல்லையே!

    "நல்லபேரு நாத்தமுத்து வாழ்க!"

    ஆங், ஒன்னுமில்லீங்க. பழக்க தோசமுங்க. நேரா நிக்குற ஆசையெல்லாம் நமக்கு இல்லீங்க. நாத்தமுத்து அண்ணனுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேனுங்க.'
    3 hours ago · Like · 2
  • Shankar Armand நாத்தமுத்து அண்ணன்னா உங்களிற்கு அவ்ளோ ப்ரியமா சார்...
    3 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil ' அப்டில்லாம் ஒன்னுமில்லீங்க. பழக்க தோசமுங்க.

    பாய்சன் சாப்பிட்டாலும் பகிர்ந்து சாப்பிட்டே பழகிப் போச்சுங்க. மனுசனுக்கு மருவாத வேணும் இல்லீங்களா? மனுசன மதிக்கத் தெரியாதவன் இருந்து என்ன செத்து என்ன? அதாங்க எப்பயும் மருவாத கொடுத்து நான் முன்னாடி வர்றதே இல்லீங்க.'
    3 hours ago · Like · 1
  • Shankar Armand கமெராமான் உசாராகி பாஸ் இந்தாள் என்ன குடிக்க தந்தாலும் குடிச்சிடாதீங்கன்னு காதில் முனுமுனுத்துவிட்டு கமெராவை சந்திற்குள் நுழைக்கிறார்... சந்தில் அடுக்கடுக்காக புக்ஸ்..... சார் இது என்ன புக்ஸ் சார்....
    3 hours ago · Unlike · 2
  • Illuminatiblog Tamil 'இதுங்களா, எண்ணூறு வருசத்துக்கு முன்னாடி சித்தர் ஒருத்தர் எழுதின கதை புக்காம். புதினா இலையில கட்டி கலர் குறையாம வச்சுருக்கேன். '
    3 hours ago · Like · 2
  • Shankar Armand அதை ஏனுங்க புதினாவில சுத்தி வெச்சிருக்கீங்க.... பிளாஸ்டிக் கவர்லே போடக்கூடாதாங்க...இது என்னங்க இந்த புக்க போல ஒன்ன வித்தியாசமா எங்கோ பாத்த மாதிரி இருக்கு......
    3 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil "ஆங், அதயெல்லாம் தொடதீங்க. அது எதுத்த வீட்டு அங்கிள் எனக்கு சும்மா கொடுத்தது. நானும் சும்மானாச்சுக்கும் தள்ளி விட்டுறலாம்னு பார்க்கிறேன். ஆனா தனியா தர மாட்டேனுங்க. பல்க்கா தான் பழகுவேன்."
    3 hours ago · Edited · Like · 2
  • Shankar Armand அட சும்மா பாத்துக்கிறேன்.... இப்ப என்ன வாங்கிக்கவா போறேன் ... தொட்டுக்க விடுங்க சார்.... அப்போது என் தொலைபேசி ஒலிக்க.... உடனடியாக சபரியிடம் வணக்கம் வைத்துவிட்டு ஆல் இன் ஆல் அமுக்குராசா ஆபிசை நோக்கி நாம் வேகமாக நகர ஆரம்பிக்கிறோம்.... அதற்குமுன் சபரி சாரிடம் ஒரு கேள்வி.... நீங்க ஜெயிச்சா இந்தக் கிராமத்திற்கு என்ன சார் செய்வீங்க.... ஆடுக குளிக்க ஒரு குளம் கட்டித்தருவீங்கன்னு பேசிக்கிறாங்களே....
    3 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil "ஆமாங்க. ஹோல்சேலா குளிக்க குளம் ஒண்ணு கட்டலாம்னு இருக்கேன். ஆனா பக்கத்து ஊரு பயலுவ இங்கன வரக்கூடாதுன்னு கட்டுப்பாடு போடலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம, குளிக்குறப்ப கூட சட்ட பேன்ட் போட்டுக்கிட்டு தான் குளிக்கணும்னு சட்டம் போடலாம்னு இருக்கேன்"
    3 hours ago · Like · 2
  • Shankar Armand ஆடுகள் பேண்ட் சட்டையோடு நீராடும் காட்சியை என் மனக்கண்ணில் கண்டபடியே சபரியிடம் விடை பெற்றுக்கொண்டு மூஞ்சி கறுக்க வெயிலில் அலைந்தாலும் ஆல் இன் ஆல் ஆபிஸ் போகும் வழியை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். வெயில் சுட்டெரிக்கும் கந்தக மண்ணில் திக்கு அறியாத தினமாக மாறிடுமோ என நான் அஞ்சிடும் தருணம் மிகப்பெரிய ஒரு பேனர் சீத***தி பப்ளிகேஷன்ஸ் என மிரட்டுகிறது..... நிறைய சொம்புகள் ஓரமாக அடுக்கப்பட்டு சொம்புக்களை ஆபிசை நிரப்பியிருக்க உள்ளே நுழைந்து.... சார் வணக்கம் சார்.... நாங்க ஆஸ்க் டிவில இருந்து வந்திருக்கோம்.....
    2 hours ago · Unlike · 2
  • Illuminatiblog Tamil ஹிஹிஹி ,டிவில இருந்தா?

    யாரு குடோவ்ன் கோவிந்தன் அனுப்பிச்சாப்லயா?

    கொஞ்சம் இருங்க ,இப்பதான் யூ ரோப்பு போயிட்டு வந்தேன்.சட்டத் துணி மாத்திட்டு வாரேன். அதுவர ஆபிஸ்ல அஞ்சு வருஷம் உக்காந்திருங்க. சீ....அஞ்சு நிமிஷம் உக்காந்திருங்க.
    2 hours ago · Edited · Like · 2
  • Shankar Armand இல்லீங்க இதுவே நல்லாத்தான் இருக்கு... அப்புறமா உங்கள எடிட்ல கட் பண்ணினாலும் பண்ணிடுவோம் எதுக்கு உங்களிற்கு வீண் சிரமம்... அது என்ன சார் சீத*****தி பப்ளிகேஷன்.... புதுமையா இருக்கு....அப்புறமா உங்கள பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ தந்திருங்க.... சிரிச்சபடியே இருங்க ....
    2 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil ஓ, அதுங்களா? பழக்க தோசமுங்க. சீதக்காதி பப்ளிகேசன்ங்கறது நம்ம பப்ளிகேசன் பேருங்க. சென்சார் பண்ணிப் பண்ணி கலாச்சாரத்தை காப்பாத்தி பழகிப்போச்சுங்க.

    இதுவரை கதையே இல்லாமல் கதை எழுதுவது எப்படி, கதைய மாத்தி காமிக்ஸ் போடுவது எப்படி, கரண்ட்டே இல்லாமல்...

    என்ற
    ு சொல்லிக்கொண்டு இருக்கும் போதே குபீர் என ஒரு குரல் பாஸ் என்று கதறுகிறது.

    ஏலே முந்திரிக்கொட்டை. கரண்டே இல்லாமல் கம்ப்யூட்டரில் கட்டுரை எழுதுவது எப்படினு ஒரு புக்கு போட்டமே அத பத்தி சொல்ல வந்தண்டா.

    இவனுக எப்பயுமே இப்படித்தாங்க. பெருசு பண்ணிக்காதீங்க. இதுமாதிரி பல அரிய புத்தகங்களை போட்டு ரொம்ப பேர் வாங்கி இந்த ஏரியாலேயே நம்பர் ஒண்ணா இருக்கோம்ங்க. சுத்து வட்டாரத்தில இருக்கிற ஒரே பத்திரிகை நம்முதுங்க்றது பெருமை எனக்கு எப்பயுமே உண்டுங்க.
    2 hours ago · Edited · Like · 2
  • Shankar Armand ஆமா சார் உங்க பெருமையை பத்தி நாட்டாமை நடராசா சொல்லியிருக்கார் ..... ஆனா ஊருக்குள்ளே நீங்க.... நீங்க... சார் கேட்கறதுன்னு தப்பா கேக்காதீங்க... உங்க தொழில, வாழ்க்கைய, வரலாற்ற கேள்வி கேட்ககூடாதுன்னு ஒரு எழுதப்படா சட்டம் இருக்குன்னு அறிஞ்சிருக்கேன் இருந்தாலும் கேட்டுப்புடுறேன்... நீங்க கள்ளநோட் அடிச்சு வித்தீங்கன்னு ஒரு பேச்சு ஊர்ல இருக்கு... அதுபத்தி....
    2 hours ago · Unlike · 2
  • Illuminatiblog Tamil கபக்கென ஆல் இன் ஆலின் முகம் மாறுகிறது...

    சமாளித்துக்கொண்டு கவலையை முகத்தில் கொண்டு வந்து, குரல் கம்ம 

    "என்ன தம்பி பண்றது? நான் பழங்காலத்து ஆளு. சூது வாது தெரியாதவன். எங்கப்பாரு காலத்தில டவுசர் போட்டுக்கிட்டு பல்ப்பத்த சப்பிகிட்டு சுத்தினப்ப என்ன படிச
    ்சனோ அதையே தான் இப்பயும் படிக்கேன். இந்த காலத்து கல்ச்சர் எனக்கு புரிபட மாட்டுது. இப்படித்தான் இருக்கும்ன்னா இனி கடுதாசி எழுதுற காலத்துக்கே போயிரலாம்னு இருக்கேன். அட்லீஸ்ட் கசக்கி வீசவாவது முடியும்.

    இதுல கூட பாருங்க, இந்த குடோவ்ன் கோவிந்தன் ஒரு நாளு கட்டுக்கட்டா நோட்டு எடுத்துட்டு வந்து இதெல்லாம் நல்ல நோட்டு, இதே மாதிரி இன்னும் ஒரு லட்சம் நோட்டு அடிச்சுக் கொடுங்கனு கேட்டான். 

    நானு நல்லா செக் பண்ணினேன். நோட்டுல காந்தி தாத்தா படம் இருந்துச்சு. இருந்தாலும் நான் விடலியே. ஏலேய், இது நல்ல நோட்டு தானன்னு உசாரா கேட்டேன். அவன் அதுக்கு, ஆமானு சொன்னான். இவ்ளோ சொன்ன பிறவும் எப்படி தம்பி நம்பாம இருக்க முடியும்? அதுவும் போவ அவன் என்கிட்ட இந்த ஆர்டர முடிச்சு தந்தா டிவில உங்க மூஞ்சி வரும். அதுக்கு நான் பொறுப்புனு சொன்னான். இதோ பாருங்க, நீங்களே வந்துட்டீங்க."

    முனுசாமிக்கு மூச்சு முட்டுகிறது. 

    'ஆனா பாருங்க, இது தெரியாத பொறாமைக்கார பயலுவ என்ன பத்தி தப்பா சொல்லிக்கிட்டு திரியுதாணுக. நீங்களே சொல்லுங்க தம்பி, நான் செஞ்சதுல என்ன தப்பு? எதுனா கோக்குமாக்கா சொன்னீங்கன்னா கும்மி பாய்ஸ விட்டு குரவளைய கடிக்க சொல்லிருவேன். ஏலேய், எள்ளுரண்ட எடுத்துட்டு நடராசா வந்துட்டாரானு கேளுல.'

    கேமிராமேன் பேக் அடிக்கிறார்.
    2 hours ago · Like · 2
  • Shankar Armand ஒகே சார் ஒகே சார்.... அழுதிடாதீங்க சார்... நீங்க அழுதா கும்மி பாய்ஸ் ஊர் குரவளைக்க டீசல் ஊத்திடுவானுக சார்.. எனக்கு இன்னம் கண்ணாலம் ஆகல சார்... இப்பதான் ஒரு போட்டோவ காட்டி இருக்காங்க... ஆனா சார் இந்த நடராசா, கோவிந்து, நாத்தமுத்து இவிங்க எல்லாம் உங்கள கடவுள் மாதிரி வணங்குறாங்க சார்... எப்டி சார் இப்டி... பதிலுக்கு நீங்க அவிங்கள பத்தி என்ன நெனைக்குறீங்கன்னு சொல்லுவீங்களா....
    2 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil அதாவது தம்பி, என் கொள்கைய நீங்க புரிஞ்சுக்கணும். வாழ்க்கைல எதயுமே பெருசா எடுதுக்ககூடாது. எல்லாமே ஹாபி தான். காசு கொடுத்து புக் வாங்கினாக் கூட கமுக்கமா போயிரணும். பிரச்சனை இல்ல பாருங்க. எடக்கு பிடிச்ச பயலுவ யாருக்குன்னு எல்லாம் கேப்பாணுக. அவனுகள எல்லாம் கண்டுக்க கூடாது. கண்ண கசக்கினா குரவளய கடிக்கிற அளவுக்கு பாசத்தை பொழியனும். கல்லு விட்டு அடிக்கிறவன் கூட கருணை மழை பொழியனும். அதுக்கேத்த மாதிரி அடிக்கடி செண்டிமெண்ட் பிட்டு போடணும். குடும்பம்னு கும்மி அடிக்கனும். அறிவ ஆப் பாயில் போட்டுரனும். எப்பயாவது எதுனா தோனுனா சுவத்தில போய் மொங்கு மொங்குனு முட்டனும். எவனா எதுத்து பேசுனா அவன சுவரா நினைச்சுகிட்டு அவன மொங்கு மொங்குனு முட்டனும். எவன் சொல்றதையும் கேக்கவேபடாது. கேட்டீங்க, வாழ்க்கையே கலவரம் ஆகிப் போவும்.
    2 hours ago · Like · 1
  • Shankar Armand ஆவ்சம் சார்.... [ நான் என்ன கேட்டேன்... இவர் என்ன சொல்றார்... யப்பா..]] இப்ப உலகதரத்திலன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க.....
    2 hours ago · Like · 1
  • Illuminatiblog Tamil நன்றிங்க. எதுனா எதுத்து கேட்டா எங்களுக்கு பதில் சொல்லிப் பழக்கமே இல்லீங்க. ஜெர்மன் மெசினு, இத்தாலி பேப்பரு, இங்கிலாந்து இங்க்கு, கப்சா கதைனு எங்க நிறுவனமே உளறல் ச்சே... உலகத்தரம் தாங்க.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே வெளியே ஆங்காரமாக குரல் ஒன்று கேட்கிற
    து. 

    யோவ், கெட்ட கேள்வி கருப்பன் வந்துருக்கேன்யா. யோவ், வெளிய வாயா. கேள்வி கேட்டதுக்கு பதில் என்னய்யா ஆச்சு? கள்ள நோட்டு அடிச்சது உனக்கு தெரியாது? கதை எழுதுறேன்னு ரெண்டு பேரு கைய கடிச்சது நீ தான? பதில் சொல்லுய்யா. யோவ்...

    ஆல் இன் ஆல் முகம் லேசாக மாறுகிறது. ஜன்னல் பக்கம் திரும்பி லேசாக விசில் கொடுக்கிறார்.

    உருண்டு கிடந்த சொம்புகளில் இருந்து கூட்டம் கூட்டமாக காக்கா வெளியே வருகின்றன. கேமிரா மேன் முகம் கழிந்து போகிறது. கருப்பன் பேசிக்கொண்டே இருக்கும் போது காக்காகள் அவரை ரவுண்ட் அப் செய்து கொத்துகின்றன.

    அப்போது எங்கிருந்தோ 'ஏலேய் எழவு பிடிச்சவனே, எம்புட்டு கத்தினாலும் நீ கடேசில இங்கன தான்ல மறுபடி வந்தாகணும்' என்று ஒரு குரல் கேட்கிறது.

    முன்சாமிக்கு மூச்சா வருவது போல இருக்கிறது.

    அதே நேரத்தில் எங்கிருந்தோ ஓடி வருகிறார் ஜட்ஜ் சொகேசு சின்னக்கிளி. கருப்பனை கவனிக்காமலேயே ஓடி வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு மூச்சு வாங்குகிறார். உடனே திரும்பி ஆல் இன் ஆலுக்கு நடு ஹாலில் நின்று சலாம் வைக்கிறார்.

    பார்த்துக்கொண்டிருக்கும் கேமிராமேன் கண்ணுமன்னு தெரியாமல் ஓட ஆரம்பிக்கிறார்.
  • Illuminatiblog Tamil கால் மணி நேரம் ஓடிய கேமிரா மேன் ஊர் எல்லைக்கு வந்து சேருகிறார். அங்கே இரண்டு பேர் மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு கொஞ்சம் இளைப்பாறலாம் என்று அங்கே போகிறார்.

    ஒருவர் பார்க்க முனிவர் போல் இருக்கிறார். மேலே பெயர் பலகையில் பிரான்ஸ் பிகரானந்தா என்று எழு
    தி இருக்கிறது. இன்னொருவர் கொலைவெறியோடு அரிவாளை தீட்டிக் கொண்டு ஆடுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவரின் பேச்சில் இருந்து இருவரும் ஊரை விட்டு ஒதுங்கி வந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்கிறார் கேமிரா. மேலும், அரிவாள் வைத்திருப்பவர் பெயர் பூசாரி பொன்னம்பலம் என்றும் தெரிய வருகிறது.

    அந்நேரத்தில் அந்த இரண்டு பேரை நோக்கி குடும்பத்தோடு வருகிறது ஒரு உருவம். எட்ட நின்று ஒட்டுக் கேட்கிறார் கேமிரா.

    "ஏலேய், சில்வண்டு சின்ராசு...எங்கல போற?

    அதுங்களா பூசாரி, சினிமா கொட்டாயில புதுசா ஏதோ படம் வந்திருக்காம், குடும்பத்தோட பார்க்க போயிட்டு இருக்கேன்.

    ஓஹோ, என்ன படம்ல ஓடுது?

    அதுவா, அது ஏதோ ஷகீலாவாம். அந்தப் படம் ஓடுதாம்.

    ஏலே எழவெடுத்த எருமை, அது பெரியவங்க பாக்குற படம்ல. உம்பிள்ளய கூட கூட்டிட்டு போற? எதுனா எக்குதப்பா வந்தா என்னல செய்வ? அவன எங்கயாவது விட்டுட்டு நீங்க மட்டும் போய் பாருங்கல.

    அட அதொன்னும் பிரச்சனை இல்ல பூசாரி, கையோட போர்வை கொண்டு போறேன். எதுனா வந்தா கப்புன்னு என்மவன் மூஞ்சில போட்டு போத்திற மாட்டேன்? "

    என்று சொல்லிவிட்டு மகனைக் கொஞ்சிக் கொண்டே போகிறார் சில்வண்டு.

    பூசாரி கண் சிவக்கிறது. 

    "அட மானங்கெட்ட மடப்பயலே!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதே நேரம் அங்கே வந்த முனிவர் பாண்டிச்சேரி பரமசிவம் "எழவு இந்த பக்கிங்க என்ன சொன்னாலும் திருந்தாதுங்க" என்று அலுத்துக் கொண்டே போகிறார்.

    சிறிது நேரத்தில் தண்டோரா அடிப்பவன் ஆல் இன் ஆல் கலவரத்தை அடக்க கதை எழுதும் போட்டி வைத்து இருக்கிறார் என்றும் ஜெயிப்பவர் பேர் புத்தகத்தில் வந்தாலும் வரலாம் என்றும் முரசு கொட்டிக் கொண்டே செல்கிறான். சுற்றி இருந்த கூட்டம் குஜாலாக ஊரை நோக்கி நடை போடுகிறது.

    தூரத்தில், சில ஆடுகளை மேய்த்துக் கொண்டே சென்று கொண்டு இருக்கிறான் ஒருவன்.....

    முற்றும்.
  • Shankar Armand போஸ்டு ஸ்கிரிப்டம்..... பிரபல தொலைக்காட்சி நிருபர் முக்காடு முன்சாமியை மூன்று நாளாக காணவில்லை என ஆஸ்க் டிவி புகார்.... பொலீஸ் பாரிய தேடல்....
  • Shankar Armand கடந்தசில நாட்களாக தடுக்கி விழுந்தான் பட்டியில் இடம்பெற்ற கலவரத்தில் காணாமற்போனோர் பெயர் பட்டியல்..... 
    * அஞ்சுபேரு ஆறுமுகம்
    * முக்காடு முன்சாமி

    - நல்லபேர் நாத்தமுத்து கலவரத்தின்போது பதுங்குகுழியில் பதுங்கி இருந்துவிட்டு கலவரம் முடியும்போது கல்லெறிந்
    தபோது போலீசால் அரெஸ்டு செய்யப்பட்டார்.... ஊரிற்குள் நடுவில் நிமிர்ந்து நிற்கும் அவர் சிலை காக்காக்களின் ஹெஸ்ட் கவுசாக மாறிவிட்டது..
    - கலவரத்தின்போது நாட்டாமை நடராசா, கோடவ்ன் கோவிந்து கடைகள் பலத்த சேதமாகின... வியாபாரம் மட்டுமல்லாது நாய்களும் காலை நீட்டி படுத்து இருக்கின்றன
    - சந்துமுனை சபரி அடுத்து யாரை வெளியில் இருந்து ஆதரிப்பது என சந்துமுனையில் நின்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்
    - கெட்ட கேள்வி கருப்பன் கதை படிப்பதை நிறுத்திவிட்டு கம்மாய் பக்கம் ஒதுங்கிவிட்டார்
    - கலவரத்தின் போது காணாமல் போன டவுசர் பாண்டியின் டவுசர் இன்னம் கிடைக்கவில்லை... அவரும் டவுசர் இல்லாமல் அதை தேடுவதை நிறுத்தவில்லை..
    - ஆல் இன் ஆல்.... அய்ரோபாவிற்கு செல்ல சைக்கிள் ஒன்று வாங்கியிருக்கிறார்.
    - பிரான்ஸ் பிகாரானந்தா கிடைக்காத பிகரை இன்னம் தேடிக் கொண்டிருக்கிறார்
    - பூசாரி பொன்னம்பலம் கொலைவெறியுடன் பொறுமையாக கத்தியை தீட்டிக் கொண்டே இருக்கிறார்
    - போஸ்டர் பாண்டி தற்போது பக்கத்து ஊரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்

Comments

  1. Next post might be about "Norwegian wood".

    ReplyDelete
  2. Satire at its best......... It takes everything to a new level........... Let's hope everyone enjoys it....

    ReplyDelete
  3. Have sent you a mail ...! Check gmail!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......