XIII - தேடலே வாழ்கையாய்….



page00
மனிதனின் வாழ்க்கையில் விரவி இருப்பது தேடலே! ஆனால் தேடலே வாழ்கையாய் இருந்தால்...?
வாழ்கையை தொலைத்தவன் கடந்த காலத்தின் சுக நினைவுகளில் தஞ்சம் அடைந்து இன்புறலாம்!ஆனால் கடந்த காலத்தையே தொலைத்தவனது கதி?
புரட்டி எடுக்கும் கடலில் பற்றிக் கொள்ளக் கிடைத்த பலகையை தவற விட்டவனது மன நிலை எப்படி இருக்கும்?
சுடும் பாலைவனத்திலுள்ள ஒரே சோலைவனத்தின் பாதையை தொலைத்தவனது நிலைக்கும்,நினைவை தொலைத்தவனது நிலைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

page02
கண்ணைப் பறிக்கும் ஓவியத்தோடு,ஆரம்பக்கட்டமே நம்மைக் கவர்கிறது.ஒதுக்குப்புறமான ஒரு கடற்கரையில்,ஆர்ப்பரிக்கும் கடலுக்கும்,துள்ளிப் பறக்கும் பறவைகளுக்கும் நேர் மாறாக அமைதியாய் உள்ள ஒரு வீட்டின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை அவரது நாய் வற்புறுத்தி இழுத்துச் செல்கிறது.அந்த நாய் வழிநடத்தி செல்ல, தொடர்வது முதியவர் அபே மட்டுமல்ல, காலனும்!

சலனமே உருவாய் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் அருகிலேயே சலனமே இல்லாமல் கிடக்கிறது ஒரு உடல்.மனைவியின் உதவியோடு,அவனை வீட்டிற்கு தூக்கிச் செல்லும் முதியவர் அபே, அவனுக்கு சிகிச்சை செய்ய முன்னாள் டாக்டரும் இந்நாள் குடிகாரியுமான மார்த்தாவை அழைத்து வருகிறார்.சுற்று வட்டாரத்தில்,நாற்பது மைல் தூரத்திற்கு,குடிக்காக மருத்துவர் உரிமம் ரத்து செய்யப்பட்ட அவளை விட்டால் அவசர உதவிக்கு வேறு யாருமில்லை.அவசரமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையின் பலனாக உயிர் பிழைக்கிறான் அந்த மனிதன்.ஆனால்,தோட்டா மூளையில் ஏற்படுத்திய காயம் காரணமாக அவனுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிடுகிறது.அவனது அடையாளத்தை தெரிந்துகொள்ள,மிஞ்சி இருப்பது,அவனது தோளில் பச்சை குத்தப்பட்டு இருக்கும் XIII என்னும்  அடையாளம் மட்டுமே!
மார்த்தா அவனுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது,அவன் உயிர்page05 பிழைத்தான்  என்னும் சேதியை கேட்க ஆவலாய் காத்திருக்கும் அந்த இரு உயிர்களின் வாழ்க்கைக்கும்,சுற்றிலும் வெறும் மணலால் சூழப்பட்டு இருக்கும் அந்த வீட்டிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது தான்.மகனை இழந்த அந்த முதியவர்கள் ,நினைவை இழந்த அவனை, தங்கள் மகனாகவே பார்கிறார்கள்.
நாட்கள் சென்றாலும், அவனது நினைவு திரும்புவதாயில்லை.தொடரும் நாட்களில், உடல்நலனையும்,முதியவர்களின் அன்பையும்,அரவணைப்பையும் பெற்றாலும் அவனது மனதில் அமைதி இல்லை.கருமேகத்தின் பின்னே மறைந்து நிற்கும் சூரியன் போன்ற தன் நினைவை திரும்பப் பெற இயலாமல் தவிக்கிறான்.
ஒரு நாள்,மார்தாவோடு கடற்கரைக்கு செல்லும் போதும், அவனது மனக்குமுறல்கள் அடங்குவதாயில்லை.பாறையில் மோதித் தெறிக்கும் கடல் அலைகளின் இரைச்சல்கள்,அவனது மனக்குமுறல்களோடு மோதித் தோற்கின்றன.
மார்தாவின் மனமும் அமைதி நிறைந்ததாய் இல்லை.XIII ஐ குணப்படுத்த முயன்ற காலத்தில் அவளுக்குள் அரும்பிய காதலால் அவள் மனதில் இருப்பதும் சலனமே!
தனது மனது விரும்பும் ஒருவனோடு, அழகிய கடற்கரையில் இருந்தாலும்,அதிகக் குடியால் பெருத்திருக்கும் அவளது உடலும்,தாழ்வு மனப்பான்மையும்,கைகூட முடியாத  ஒருதலைக் காதலின் வலியும் அவளை வருத்துகின்றன.XIII ஐ கண்ட நாள் முதல்,தன்னை ஆட்கொண்டிருக்கும்;தனது வாழ்வே சிதையக் காரணமான குடிப் பழக்கத்தை மறக்கவும் உதவிய அவனது அண்மை,இப்போது அவளை ஊமையாகடிக்கும் ரகசியம் தான் என்ன?
page09 சலனமே உருவான கடற்கரை,மனச்சலனம் கொண்ட இருவருக்குமே அடைக்கலம் தருகிறது.அலையின் இரைச்சலோடு மனதின் இரைச்சலும் கலக்கிறது.மூளையை ஊடுருவிச் சென்ற தோட்டாவின் காரணமாக,தனது மூளையை தழுவி நிற்கும் ரத்தப்படலம் விலகவும்,தனது தொலைந்து போன நினைவுகளை மீட்டெடுக்கவும் வாய்ப்பு வராதே போகலாம் என அறியப்பெறும் அவனது மனது மேலும் வேதனையுறுகிறது.வீடு திரும்பும் அவனுக்கு,அங்கே நிலவும் அமைதி அன்னியாமாய் தெரிகிறது.மன அமைதி இல்லாதவனுக்கு நிம்மதி கிடைக்கும் இடம் தான் எது?
page11page12 ஆனால்,இறந்து கிடக்கும் நாய்,அவனது முன்னெச்சரிக்கையை தட்டி  எழுப்புகிறது.உதிர்ந்த இலைகள் ஊஞ்சலாடும் பின்னணியில் ,உயிர்களின் ஊசலாட்டமும் நடக்கிறது. தொடரும் போராட்டத்தில்,அவன் இரு நிலைகுலையச் செய்யும் உண்மைகளை அறிந்து கொள்கிறான்.
அவனைக் கொல்லும் வெறியோடு,ஒரு மிகப்பெரிய கும்பல்,மங்கூஸ் என்பவன் தலைமையில் அலைவதும்,
அவர்களையே வேட்டையாடும் அளவிற்கு தனக்கு திறமை இருப்பதும்…
இந்த உண்மை தட்டி எழுப்பும் கேள்விகள் அபாயகரமானவை!அவனைக் கொல்ல அலையும் கும்பல் யார்?எதற்காக?யார் அந்த மங்கூஸ்?அவனது நோக்கம் என்ன?இதையெல்லாம் விட ஒரு நிலைகுலையச் செய்யும் கேள்வி, “இவர்கள் தேடி வந்து கொல்லத் துடிக்கும் அளவிற்கு XIII செய்தது என்ன?அவன் யார்?”
page14 தன்னைத் தேடி வந்த கொலையாளிகளால் கொல்லப்பட்ட முதியவர்கள் அபே மற்றும் சாலியை கண்டு மனம் வருந்தும் அவன்,மார்தாவின் உயிரைக் காக்கவாவது தான் உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று உணர்கிறான்.
தன்னைக் கொல்ல வந்தவர்கள் அடையாளத்திற்காக கொண்டு வந்த படத்தில்,தன்னோடு நிற்கும்  பெண்ணைத் தேடி சென்று கண்டுபிடித்து ,அவள் மூலம் தன் தேடலை ஆரம்பிக்க நினைக்கிறான்.போடோவின் பின்னே இருக்கும் புகைப்பட நிபுணரின் விலாசத்தை காணும் XIII,அவர் மூலம் அப்பெண்ணின் விலாசம் அறிய,ஈஸ்ட் டவுன் நோக்கி கிளம்புகிறான்.
இறந்தவர்களை விட்டுவிட்டு,தன் இறந்த காலத்தைப் பற்றிய தேடலை ஆரம்பிக்கிறான் XIII.ஆனால்,அது என்னவாக இருந்தாலும்,அழகான ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி!
page16
இந்தக்கட்டம் ஓவியரின் திறமைக்கும்,இக்கதையின் கவித்துவத்திற்க்கும் ஒரு சான்று!பின்னே grim ஆகத் தெரியும் கடந்த காலத்தை விட்டுவிட்டு,எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன்(காரின் bright நிறத்தை கவனிக்க!) செல்லும் XIII இன் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு காட்சி! 

page17 - Copyவழி தொலைத்த  கப்பல்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்,தனக்கு முன்னே தெரியும், கலங்கரை விளக்கத்தை போன்றது,தான் நாடிச் செல்லும் தேடல் என்று XIII நினைப்பானாயின்,அது மிகப்பெரிய தவறு என்று சீக்கிரமே உணர்ந்து கொள்வான்.இனி வரும் நாட்களில், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள மட்டுமல்லாது,தனது நினைவை உயிர்ப்பித்துக் கொள்ளவும் அவன் போராட   வேண்டும்.தான் நிற்கும் கடற்கரைப் பாறையில் வந்து வெறி கொண்டு மோதும் அலைகளைப்போல , அவனது வாழ்வில் மரணங்களும், சோகமும், பழியும், வெறுப்பும், கோபமும், அபாயமும் மோதப்போவது அவனுக்கு தெரியாது.page17
வரப் போகும் நாட்களில் உளவாளி, கொலைகாரன், குற்றவாளி, பைத்தியம், புரட்சிக்காரன், அதிரடிக்காரன் எனப் பற்பல பெயர்களில் அழைக்கப்படப் போகிறான் என்றாலும், தனது சொந்தப் பெயர் தெரியாமல்,அதனைத் தேடியே அலையப் போகிறான்,வருந்தப் போகிறான்.

ஆனாலும்,இதனால் நம்பிக்கை இழந்து முயற்சியை நிறுத்தப் போவதில்லை அவன். கரையை முத்தமிடத் துடிக்கும் அலைகளைப் போன்றதே அவனது கடந்த காலத்தின் தேடலும்...

XIII – தேடலே வாழ்கையாய்....
**********************************************************************
கட்டுக் கட்டாக பணம்,அதன் அருகிலேயே,அதனை ஒருவிதமான சோகத்துடன் பார்க்கும் ஒருவன்,என இருக்கும் இந்தப் பாகத்தின் அட்டைப்படத்தை கண்ட உடனேயே ரசிகனுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ளும் என்பது திண்ணம்.அதிலும்,இதனைப் பற்றி அதிகம் அறியாத,குறிப்பாக, பின்னாட்களில் இக்கதை தொடப் போகும் அசாத்திய உயரங்களை அறிந்திருக்க முடியாத,அந்நாளைய ரசிகன் ஒருவனின் ஆர்வம் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும்.இந்தக்கதையின் ஆசிரியர் Jean Van Hamme,ஓவியர்  William Vance. இருவருக்குமே காமிக்ஸ் பிரியர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை.
Robert Ludlum எழுதிய The Bourne Identity கதையின் ஒன் லைனை எடுத்து அதிலிருந்து பின்னப்பட்டதே இதன் கதை.தோட்டா பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப் படும் ஒருவன்,அந்த தோட்டா ஏற்படுத்திய காயம்,அதிர்ச்சி காரணமாக தனது பழைய நினைவுகளை இழந்து, தனது கடந்தகாலத்தை தேடிச் செல்வதே கதை.நாவலுக்கும்,இந்த காமிக்ஸ்க்கும் பல ஒற்றுமைகள் உண்டு.ஆனால்,அவை அடிப்படை அளவிலேயே முடிந்து,கதை படர ஆரம்பிக்கும் போது வெவ்வேறு பாதைகளில் முத்திரை பதிக்க ஆரம்பித்தன.
முதல் பாகத்தில் நல்ல கதை, பரபர ஆக்சன் என்று இருந்தாலும், அதில் விரவி இருக்கும் மென்சோகமே அதற்கு ஒரு கவித்துவமான நிலையை வழங்குகிறது; தாமரை தடாகத்தில் தனித்து தெரியும் நிலவைப் போல!இது பின்னர் வந்த கதைகளில் குறைந்தது துரதிர்ஷ்டமே!
12 ஆம் பாகம் வரையாவது எஞ்சி இருந்த பரபரப்பு, பின்னர் கொழகொழப்புக்கு இடம் கொடுத்தது.ஒரு நெடிய கதைத் தொடரை கடைசி வரை பரபரப்பாக கொண்டு போவது மிகக் கடினமே!அது கைகூடாத நிலை வரும் போது,அதற்கு முதற் காரணமாய் இருக்கக் கூடியவை, எழுத்தாளருக்கு ஏற்படும் அலுப்பு,கவனமின்மை,மமதை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றே! இவற்றில் முக்கிய காரணமாய் விளங்கக் கூடியது அலுப்பே! XIII இன் நிலையும் அப்படியே ஆனது.
அது பற்றியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்போம்.கூடிய சீக்கிரம் அடுத்த பாகத்தை பற்றிய பதிவு வரும்.
**********************************************************************
XIII பற்றி பேசும் இந்த நேரத்தில்,தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இதை அறிமுகப்படுத்திய திரு.விஜயனுக்கு நன்றிகளைத் தெரிவத்துக் கொள்கிறேன்.
காமிக்ஸ் ரசிகர்கள் பலர்,ஜம்போ ஸ்பெஷலைப் பற்றி புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கும் போது,அதனைப் பற்றி எழுதாமல்,ஏன் ஆங்கிலப் பதிப்பை பற்றி எழுதுகிறேன் என்று யாராவது ஆச்சர்யப்பட்டால்,ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விழைகிறேன்.நான் ஆங்கிலக் கதைகளை திரும்பவும் படிக்க உதவியது, தவறு…தூண்டியது, ஜம்போ ஸ்பெஷல் என்றால் அது மிகை ஆகாது.மட்டமான சாணி தாளையும், கருப்பு வெள்ளை படங்களையும் கண்ட உடனேயே ஆங்கில பதிப்பிடம் சென்று தஞ்சமடைந்து கொண்டேன்.சுமாரான மொழிபெயர்ப்பும் அதற்கு உதவி செய்தது.எல்லோரையும் போல,என்னையும் அந்த புத்தகத்தை விரும்பவும்,அதன் சாதனையை வியந்து பாராட்ட விடாமல் செய்த கசப்பான சில உண்மைகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மட்டமான சாணி தாள்,கருப்பு வெள்ளை படங்கள்,சுமாரான மொழிபெயர்ப்பு,எல்லாவற்றிற்கும் மேலாக,இப்புத்தகம் வெளியாவதற்கு முன்னர், லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரிடம் பற்பல முறை ஆர்வம் மேலிட வெளியீட்டைப் பற்றிய தகவல்களை நேரிலும்,தொலைபேசியிலும்,இணையம் மூலமும்,தபாலிலும் கேட்ட ரசிகர்களுக்கு அவர்கள் கொடுத்த மரியாதை!
திரு.விஜயனுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.புதைமணலில் சிக்கி இருப்பவன்,தன்னை நோக்கி வீசப்படும் கயிற்றை கண்டு பாராமுகமாய் இருந்தால்,இழப்பு அவனுக்கு தான்.லயன் காமிக்ஸின் நிலை இப்போது அதுவே. ரசிகர்களிடம் பாராமுகமாய் இருந்துவிட்டு,அவர்களின் கேள்விகளுக்கு சரியான தகவல்களைத் தராமல், உங்களுக்கு தேவை வரும் போது அல்லது சும்மாவேனும் சால்ஜாப்பு சொல்வதற்கு அவர்களது கருத்துக்களை  அடுத்த முறை கேட்கும் போது, இதை நினைவு கொள்ளுங்கள்…..
பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும்,நம்பிக்கைக்கும் ஒரு அளவு உண்டு!
XIII இன் மொத்த பாகத்தையும் ஒரே புத்தகமாய் போட்டு சாதனை செய்ததற்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில், வாசகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்று சொல்லி மட்டுமே கொள்ளும் திரு.விஜயனுக்கு,எனது கண்டனங்கள் மற்றும் அனுதாபங்கள்.

Comments

  1. XIII பற்றி பலர் ஏற்கனவே எழுதி இருக்கலாம்.இனியும் எழுதப் போவதாய் சொல்லலாம்.ஆனால்,இந்த பதிவு என்னைப் பொறுத்த வரை,one of my best.படித்த பின்பு உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

    ReplyDelete
  2. XIII பற்றி பலர் ஏற்கனவே எழுதி இருக்கலாம்.இனியும் எழுதப் போவதாய் சொல்லலாம்.ஆனால்,இந்த பதிவு என்னைப் பொறுத்த வரை,one of my best.படித்த பின்பு உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

    ReplyDelete
  3. ஒரு காமிக்ஸ் மனிதனுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா
    ஒரு காமிக்ஸ் மனிதனின் உணர்வை தூண்டி கிளர்ச்சியூட்டுமா
    முடியும் என்கிறது இந்த காமிக்ஸ்!

    உண்மைதான் இந்த பதிவு உங்களின் சிறந்த பதிவுகளில் ஒன்று! பல இடங்களில் அதன் வெளிப்பாடு தெரிகின்றது!

    /ஆனாலும்,இதனால் நம்பிக்கை இழந்து முயற்சியை நிறுத்தப் போவதில்லை அவன். கரையை முத்தமிடத் துடிக்கும் அலைகளைப் போன்றதே அவனது கடந்த காலத்தின் தேடலும்../ இந்த வரிகள் வெறும் காமிக்ஸை குறிப்பிடுவது போல மட்டும் அல்ல வேறு பல அர்த்தங்களை சொல்கின்றது!

    தேடலே வாழ்க்கையாய் சரியான தலைப்பு!

    ReplyDelete
  4. தமிழ் காமிக்ஸ் பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை! இது சில சமயங்களில் வாசகரின் மனதில் கசப்பை ஏற்படுத்தி விடுகிறது!

    ReplyDelete
  5. நண்பர் எஸ்.கே,

    காமிக்ஸ் என்பது வெறும் சிறு குழந்தை விஷயம் மட்டுமல்ல என்பது இது போன்ற கதையை படித்தவர்களுக்கு தெரியும்.மிச்சவர்கள் என்ன சொன்னாலும்,அது அறியாதவனின் பிதற்றலே!

    தலைப்பு எனக்கும் பிடித்தது. :)

    தமிழ் காமிக்ஸின் உண்மை நிலையை எந்த வித பொய்யும்,அடிவருடுதலும் இல்லாது சொல்லி இருக்கிறேன்.அது ஒரு வாசகனின் குமுறல்.அவ்வளவே! அதில் சொல்ல வேறு ஏதும் இல்லை.

    ReplyDelete
  6. எழுத்து நடை கடுமையானதாய் இருக்கலாம்.ஆனால்,இக்கதையின் கவித்துவத்தை காட்ட அது தேவைப் பட்டது.இது ஆக்சன் கதையாய் தான் பிரபலம் என்றாலும்,இதன் மென்சோகம் அவ்வளவாக வெளிபட்டதில்லை.அதை சொல்வதே இப்பதிவு!

    ReplyDelete
  7. இலுமி, எப்படி இப்படி... 13 முதல் பாகத்தை பிண்ணி பெடலெடுத்திருக்கிறீர்கள்.... முழுவதும் படிக்க இந்த வார இறுதி பத்தாது என்பதால், நான் ஸ்பெஷல் லீவ் அப்ளை பண்ணி வந்து வச்சுக்குறேன் கச்சேரியை.

    ஆங்கில இதழ் பற்றி நீங்கள் நெகிழ்ந்து கூறியிருக்கும் அனைத்து விஷயங்களிற்கும் நானும் எனது ஆதரவை நல்கிறேன். அதே நேரம், தமிழில் வெளிவந்த ஜம்போ ஸ்பெஷல் கலெக்ஷன் பற்றிய உங்கள் கருத்தையும் கனத்த மனதுடன் ஆமோதிக்க தான் வேண்டும்.

    என் பதிவில் ஜம்போ ஸ்பெஷல் பற்றி நான் உருகி இருந்தாலும், அடிப்படையில் அதற்காக வருடங்கள் பல காத்திருந்து பின்பு ஏங்கி போய், அதற்காக பல முறை லயன் ஆபிஸை தொடர்பு கொண்டு வெறுத்து போய், தமிழ் காமிக்ஸ் என்றாலே ஒருவித அருவருப்பை உண்டு பண்ணிய புண்ணியம், பிரகாஷ் நிருவனத்திற்கு கட்டாயம் சாறும். அதன் வெளிப்பாடை பதிவின் சில கட்டங்களில் நான் தாரளமாகவே வெளிகாட்டியிருக்கிறேன்.

    தமிழ் காமிக்ஸ் என்றாலே அது பொய் புகழ்ச்சிக்கும், தனி மனித ஆராதனைக்கும், கும்பல் கும்மிகளுக்கும், என்று ஒதுங்கி போய் இருப்பதும், அப்படிபட்ட குழு அரசியலுக்கு சாதகமாக கேள்வி கேட்க வேண்டியவர்களே உதவிகள் புரிவதும் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் காய் நகர்த்தி கொண்டிருக்கும் அவர்களிடம் இதை விட ப்ரொபஷனல் நிர்வாகத்தை எதிர்பார்ப்பது தவறு தான் போலும்.

    விஜயன் மற்றும் அவர் நிறுவனம், தமிழ் காமிக்ஸை இம்முறையில் தான் நடத்த வேண்டும் என்று விரும்பினால், அதை தடுக்க நாம் யார். போட்டியில்லாத உலகத்தில் மோனோபலி ஆட்சியம் இவ்வகையில் இருப்பதும் இயல்பான நெறிமுறைதானே. குறுகிய வட்டம் கொண்ட ரசிகர்கள் அடங்கிய தமிழ் காமிக்ஸில், இத்தகைய நடவடிக்கைகள் ரசிகர்களை வேறு ரசனை பக்கம் திரும்ப வைக்கும் என்பதை நான் ஒவ்வொரு முறையும் சுட்டி காட்ட தவறியதில்லை. அதே அடிப்படையில், நான் படிக்கும் ஏனைய காமிக்ஸ்கள் இடையே, ஒரு ரசிகனாக தமிழ் காமிக்ஸும் வெளிவரும் போது அதை படிப்பதும், அதற்கு நேரம் கிடைப்பின் விமர்சனம் எழுதுவதும் என்ற என் நிலைபாடை தொடர்வேன்.

    எது எப்படியாயினும், நான் தமிழ் காமிக்ஸ் மூலம் அடைந்த ஒரே நன்மை. என் இளமை காலங்களை சந்தோஷமான கட்டங்களுடன் நகர வைத்தது, கூடவே பல நாடுகளை சேர்ந்த பல காமிக்ஸ்களின் அறிமுகத்தை சிறுவயதிலேயே கிரகிக்க வைத்து, இன்று நான் படிக்கும் பல ஆங்கில காமிக்ஸ்களுக்கு என் ரசிப்புத்தன்மையை அதன் மூலம் தான் கூட்டி கொண்டேன் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் பழைய தமிழ் காமிக்ஸ் பக்களிங்கடையே தன்னை தொலைத்து கொண்டு, உலகம் இருட்டு என்று இருக்கும் கும்பலில் ஒருவனாக நானும் இருக்க போவதில்லை.

    ஒவ்வொரு கட்டத்திலும் நாம் பழகிய பல விஷயங்களை விட்டு நாம் விலகி வந்து புதிய பழக்க வழக்கங்களை பயின்று கொள்வது இயல்புதான். இளமை காலங்களில் ரசித்த பல காமிக்ஸ் மற்றும் இதர புத்தகங்கள் தங்கள் தரங்களை இழந்திருந்தாலும், அவற்றின் மூலம் கிடைத்த அடுத்த கட்ட புத்தகங்களுக்கு எம்மை தயார்படுத்தி கொண்டாயிற்று. என் காமிக்ஸ் ரசனை அதன் மூலம் என்றும் தொடரும்.

    மனம் திறந்து கருத்துகள் பதிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி இலுமி.

    ReplyDelete
  8. நண்பரே,

    உங்கள் பதிவைப் பற்றிய என் கருத்துக்கள் உங்கள் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என குத்து ரம்யாவிடம் பிரார்திக்கிறேன்.

    ஆரம்ப பராக்களைப் படித்தபோது இது காண்டேகர் நாவலிலிருந்த காப்பி அடிக்கப்பட்ட வரிகளோ என்ற எண்ணம் மனதில் எழுந்தது :) ஆனால் தொடர்ந்தது காலனும்தான் எனும் வரிகளில் இந்தப் பதிவை படிக்கும் வாசகர்களின் நிலையை குறியீடாக நீங்கள் காட்டியிருக்கும் விதம் ஹாட்ஸ் ஆஃப் டு யூ :)

    ரத்தப்படலம் விலகி எனும் சொற்றொடர் வழி அக்கதை வரிசையின் தலைப்பிற்கே புதியதொரு நோக்கை நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள்.

    முதியவர்களின் வாழ்க்கையும், வீட்டை சுற்றியிருக்கும் சலிப்பான வெறுமையையும் குறித்த உருவகம்.

    பெண்ணின் மனதின் சொல்லாத காதல், ஆர்ப்பரிக்கும் அலைகளாக அவள் மனதின் கரைகளில் தெறிப்பதை நீங்கள் சொன்ன அழகு.

    காரின் வண்ணம், மற்றும் அந்த சித்திரக் கட்டம் குறித்த உங்கள் பார்வை.

    அனுபவித்து படித்து எழுதி இருக்கிறீர்கள். நுண்ணிய பார்வை மூலம் பல அர்த்தங்களை ஒரு சித்திரம் தரலாம் என்பதை தெளிவாக்கி இருக்கிறீர்கள். சிறப்பான பார்வை. சிறப்பான பதிவு.

    ReplyDelete
  9. தமிழ் காமிக்ஸ் குறித்த உங்கள் அனுபவம் எனக்கு புதிதானதல்ல. உங்கள்
    உணர்வுகள் நியாயமானதே. நானே அப்படித்தான் உணர்கிறேன். ஆசிரியர் தன் வழி தனி வழி எனச் செல்பவர். அவ்வழியில் செல்லாவிடில் வாசகனிற்கு தமிழ் காமிக்ஸ் கிடைக்காது. ஆனால் தமிழ் காமிக்ஸ் இல்லாவிடில்கூட இன்று காமிக்ஸ்களை படிக்க முடியும். தமிழில்தான் வேண்டும் என்றால் தனி வழியே, எறியப்படும் இறைச்சி துண்டங்களை தேடிச்செல்லும் ஒரு பசி கொண்ட விலங்கு போல் நடக்க வேண்டியதுதான். எஜமானனின் கைகள் செயற்படாவிடில் தனி வழியே செல்லும் விலங்கு எலும்பைக் கடித்து உயிர் வாழவேண்டியதுதான். வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்க வேண்டும். அன்பு பேச்சில் மட்டும் இருந்தால் அதனை கேட்க மட்டுமே முடியும். செயலில் காமிக்ஸ் குறித்த அன்பை செயற்படுத்தும் போது மட்டுமே அது உணரப்படும். விருட்சமாகும்.

    ReplyDelete
  10. காலனின் வரவை நாய்கள் போன்ற பிராணிகள் உணரும் தன்மை கொண்டவையாக தமிழ் சமூகத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. அந்தக் காலனிற்கே வழிகாட்டும் ஒரு நாயை உங்கள் பதிவில் படைத்து குறியீட்டு பார்வையில் புல்லரிக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  11. //காமிக்ஸ் ரசிகர்கள் பலர்,ஜம்போ ஸ்பெஷலைப் பற்றி புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கும் போது,//

    இங்கு பலர் என்பது குறிக்கும் எண்ணிக்கை என்ன என்பதை தயைகூர்ந்து விளக்கவும்!

    ReplyDelete
  12. //Robert Ludlum எழுதிய The Bourne Identity கதையின் ஒன் லைனை எடுத்து அதிலிருந்து //

    எனக்கும் கதையை படிக்கும்போது இது தோன்றியது :)
    ஆங்காங்கே உங்கள் ஒப்பீடு, உவமை அருமை..

    ReplyDelete
  13. //அதற்காக வருடங்கள் பல காத்திருந்து பின்பு ஏங்கி போய், அதற்காக பல முறை லயன் ஆபிஸை தொடர்பு கொண்டு வெறுத்து போய், தமிழ் காமிக்ஸ் என்றாலே ஒருவித அருவருப்பை உண்டு பண்ணிய புண்ணியம், பிரகாஷ் நிருவனத்திற்கு கட்டாயம் சாறும்.//

    ரபிஃக் நண்பரே,
    சத்தியமான உண்மை.தமிழ் காமிக்ஸின் நிலை இப்போது அருவருப்பில் தான் நிற்கிறது.

    ஆங்கில பதிப்பை பற்றிய கருத்துக்கள், நம் போன்ற காமிக்ஸ் ரசிகர்கள் பலர் வசம் ஒன்றே!ஆனாலும், praising for the sake of praising எல்லாம் செய்து 'சொம்பு' தூக்க என்னால் முடியாது.அது தான் எனது எண்ணத்தை சொல்லியே விட்டேன்.யாருக்கு சங்கடம் கொடுத்தாலும்,கோபம் கொடுத்தாலும் எனக்கு தெரிந்த உண்மையை சொல்லியாகி விட்டது.

    //தமிழ் காமிக்ஸ் என்றாலே அது பொய் புகழ்ச்சிக்கும், தனி மனித ஆராதனைக்கும், கும்பல் கும்மிகளுக்கும், என்று ஒதுங்கி போய் இருப்பதும், அப்படிபட்ட குழு அரசியலுக்கு சாதகமாக கேள்வி கேட்க வேண்டியவர்களே உதவிகள் புரிவதும் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் காய் நகர்த்தி கொண்டிருக்கும் அவர்களிடம் இதை விட ப்ரொபஷனல் நிர்வாகத்தை எதிர்பார்ப்பது தவறு தான் போலும்.
    //

    நிர்வாகம் எவ்வழி,ரசிகர்கள் அவ்வழி!
    இணையத்தில் நடக்கும் கும்மிகள் முகத்தை சுளிக்க வைக்கும் ரகம் என்று ரசிகர்கள் அறிவார்கள்.சொல்வார் தான் யாருமில்லை.

    புதிய ரசிகர்களை கவர்ந்து இழுப்பதே காமிக்ஸ் வளர சரியான வழி.அதை விடுத்து,பழைய ரசிகர்களையும் விலகிப் போகச் செய்வது அல்ல என்பதை இவர்களில் யாரும் உணரவே மாட்டார்களோ?ஒரு சிலருக்கு இதன் மூலம் லாபம் கிடைக்கும் என்னும் போது அவர்களது சுய நலத்தை புரிந்து கொள்ளவாவது முடிகிறது.ஆனால்,விஜயனுக்கும் புரியாது இருக்கும் மர்மம என்ன?
    வியாபர யுத்திகள் தான் இனி கை கொடுக்கும் என்ற சிறு குழந்தைப் பாடம் கூட அவருக்கு ஏன் விளங்கவில்லை?

    //குறுகிய வட்டம் கொண்ட ரசிகர்கள் அடங்கிய தமிழ் காமிக்ஸில், இத்தகைய நடவடிக்கைகள் ரசிகர்களை வேறு ரசனை பக்கம் திரும்ப வைக்கும் என்பதை நான் ஒவ்வொரு முறையும் சுட்டி காட்ட தவறியதில்லை//

    உண்மை.அதனால் தான் சொல்கிறேன்,நிலை புதைகுழி என்று.
    தமிழ் காமிக்சை நேசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் தான்.நல்ல காமிக்ஸ் வரும் போது கண்டிப்பாய் பாராட்டுவேன்.ஆனால்,இங்கே நடக்கும் கூத்துக்களை கண்டு சிலரைப் போல பாராமுகமாய் இருக்க என்னால் இயலாது.

    //நான் தமிழ் காமிக்ஸ் மூலம் அடைந்த ஒரே நன்மை. என் இளமை காலங்களை சந்தோஷமான கட்டங்களுடன் நகர வைத்தது, கூடவே பல நாடுகளை சேர்ந்த பல காமிக்ஸ்களின் அறிமுகத்தை சிறுவயதிலேயே கிரகிக்க வைத்து, இன்று நான் படிக்கும் பல ஆங்கில காமிக்ஸ்களுக்கு என் ரசிப்புத்தன்மையை அதன் மூலம் தான் கூட்டி கொண்டேன் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் பழைய தமிழ் காமிக்ஸ் பக்களிங்கடையே தன்னை தொலைத்து கொண்டு, உலகம் இருட்டு என்று இருக்கும் கும்பலில் ஒருவனாக நானும் இருக்க போவதில்லை.//

    சத்தியமான உண்மைகள்.பல காமிக்ஸ் ரசிகர்களின் இந்நாளைய உறுதிப்பாடு இதுவே!இதில் நீங்கள் ,நான் மட்டும் அல்ல பலரும் இருக்கிறார்கள்.

    தேடல் ஓயாதது நண்பரே.காமிக்ஸ் குறித்த தேடல் நம்மை போன்ற ரசிகர்களிடம் நிச்சயம் ஓயாது.

    நம்மை தமிழ் காமிக்சோடு இப்போதும் பிணைக்கும் காரணம் ஒன்றே! நமது சிறு வயது சந்தோசங்களும்,அதனை நினைவு கூற வழி வகுக்கும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களுமே.
    மற்றபடி,நாற்பது வருடத்துக்கு முந்தய காலத்திலேயே தொங்கிக் கொண்டு இருக்கும் தமிழ் காமிக்ஸ் குறித்த பெரிய சந்தோசம் எனக்கு பெரிதாய் ஏதும் இல்லை. நமது ரசனைகள் வளர்ந்து விட்டன.நமக்கு இங்கே தீனி கிடைக்காது போனால், பல இடங்கள் உள்ளன.நமது ரசனைக்கு நல்ல தீனி அங்கே கிடைக்கும்.

    ReplyDelete
  14. //ஆரம்ப பராக்களைப் படித்தபோது இது காண்டேகர் நாவலிலிருந்த காப்பி அடிக்கப்பட்ட வரிகளோ என்ற எண்ணம் மனதில் எழுந்தது :)//

    அதற்க்கு வேறு சிலர் இருக்கிறார்கள் தல. ;)

    //அனுபவித்து படித்து எழுதி இருக்கிறீர்கள். நுண்ணிய பார்வை மூலம் பல அர்த்தங்களை ஒரு சித்திரம் தரலாம் என்பதை தெளிவாக்கி இருக்கிறீர்கள். //

    உண்மை.ஆனால்,என்ன பிரயோஜனம்?இப்படியான வாய்ப்பு கொண்டவர்கள் எத்தனை பேர்? தமிழகத்தில் இன்னும் பலருக்கு காமிக்ஸ் சிறு பிள்ளை விஷயம் தான்.தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் நடவடிக்கை,அதிலும் குறிப்பாக இணையத்தில் அவர்களது நடவடிக்கை அதனை உறுதி செய்வதாகவே இருக்கிறது.

    ReplyDelete
  15. ரசனை, தீனி, இடம்... குறியீட்டில் பின்னுகிறீர்களே :)

    ReplyDelete
  16. //அதற்க்கு வேறு சிலர் இருக்கிறார்கள் தல.// இதற்கும் குறியீடுதானா :) யார் என்று சொல்லுங்கள். ப்ளீஸ்.

    ReplyDelete
  17. //தமிழகத்தில் இன்னும் பலருக்கு காமிக்ஸ் சிறு பிள்ளை விஷயம் தான்.// மரம் வெச்சா தண்ணி ஊத்தனும்.

    ReplyDelete
  18. //இணையத்தில் அவர்களது நடவடிக்கை அதனை உறுதி செய்வதாகவே இருக்கிறது // ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னால் அப்படித்தான் பதிவிட முடிகிறது என்ன செய்ய.

    ReplyDelete
  19. // ஆசிரியர் தன் வழி தனி வழி எனச் செல்பவர். அவ்வழியில் செல்லாவிடில் வாசகனிற்கு தமிழ் காமிக்ஸ் கிடைக்காது//

    இதில் நான் வேறுபடுகிறேன். தமிழ் காமிக்ஸ் இவ்வாறு இழி நிலையில் இருப்பதற்கு, அது நின்றே போகலாம்.

    //ஆனால் தமிழ் காமிக்ஸ் இல்லாவிடில்கூட இன்று காமிக்ஸ்களை படிக்க முடியும். //

    அது தான் நடந்து கொண்டு இருக்கிறது. பின்னர், ரெண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும் தமிழ் காமிக்சை பிடித்து தொங்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?
    ஏற்கனவே பலரும் வேறு கலங்களுக்கு சென்று விட்டார்கள்.மிஞ்சி இருப்பது, நம்மை போன்ற அதீத காதல் உள்ளவர்களும், சுய லாப முதலைகளும் தான்.
    ஆனால்,இதில் யார் எவர் என் அடையாளம் கண்டு பிடிப்பது தான் சிரமமான விஷயம்.

    //அன்பு பேச்சில் மட்டும் இருந்தால் அதனை கேட்க மட்டுமே முடியும். //

    துரதிர்ஷ்ட வசமாக, இங்கே நிலை அது தான்.

    ReplyDelete
  20. //அதீத காதல்// யார் எனக்கா, தமிழ் காமிக்ஸிலா... நண்பரே ஜோக் ஆஃப் த இயர்.

    ReplyDelete
  21. // மனிதனின் வாழ்க்கையில் விரவி இருப்பது தேடலே! ஆனால் தேடலே வாழ்கையாய் இருந்தால்...? //

    ரொம்ப கஷ்டம் தான்

    நினைத்து பார்க்கவே மன்னிக்கணும் இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று தான் நினைப்பேன் :(
    .

    ReplyDelete
  22. // அமைதி இல்லாதவனுக்கு நிம்மதி கிடைக்கும் இடம் தான் எது?
    அவனது வாழ்வில் மரணங்களும், சோகமும், பழியும், வெறுப்பும், கோபமும், அபாயமும் மோதப்போவது அவனுக்கு தெரியாது.
    கரையை முத்தமிடத் துடிக்கும் அலைகளைப் போன்றதே அவனது கடந்த காலத்தின் தேடலும்... //

    குருஜி குத்தானந்தா விடம் பாடம் படித்து வந்தது போல இருக்கிறதே :))
    .

    ReplyDelete
  23. ஏரியா ரொம்ப சூடா இருக்குதே ;-)

    அப்புடியே லார்கோ வின்ச் பற்றியும் எழுதலாமே :))
    .

    ReplyDelete
  24. ரத்தப் படலம் ஜம்போ சிறப்பிதழ் சமீப காலங்களில் ஏற்படுத்தியிருக்கும் புத்துணர்ச்சியின் ஒரு வடிவமாக அல்லது குறியீடாகவே உங்களின் இப்பதிவை என்னால் காண முடிகிறது. இல்லை எனில் சமாளிக்காமல் பதில் தரவும்.

    ReplyDelete
  25. ** //அதீத காதல்// யார் எனக்கா, தமிழ் காமிக்ஸிலா... நண்பரே ஜோக் ஆஃப் த இயர். **

    அதானே... காதலருக்கு எதில் அதீத காதல் என்று கூட தெரியாத அப்பாவியாக இருக்கிறாயே இலுமி... இப்போதே உன்னை பெண்கள் இல்லாத நாட்டிற்கு நாடுகடத்த நாட்டாம தீர்ப்ப சொல்ல வேண்டியதுதான்.

    ஆமா... அந்த டெரர்ரு கருத்த இப்ப காணோமே.... ஆள் எஸ்கேப்பா....

    ReplyDelete
  26. யார் எனக்கா, தமிழ் காமிக்ஸிலா... நண்பரே ஜோக் ஆஃப் த இயர்//

    ஹாஹா...இருக்கும் நிலையில், ஆர்வம் வற்றாது இருந்தால் மட்டுமே, ஆச்சர்யம்.
    சில வருடங்களுக்கு முன், சக தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை சந்திக்க நேரும் போது,கிடைத்த சந்தோசம், பின்னர் அவர்களது டீல்கள், விற்பனைகள் பற்றி தெரிய வந்த போது, வெறுப்பிற்கே வழி வகுத்தது.சும்மாவா சொன்னார்கள், ignorance is bliss என்று.இது தெரியாத நம் ரசிகர்களில் சிலர்(சிலரே), கொடுத்து வைத்தவர்கள்.

    பழைய காமிக்ஸ் பிரதிகளுக்காக நடக்கும் டீல்கள், காமிக்ஸ் மேல் காதல்
    கொண்ட எனக்கு கசப்பை தான் கொடுத்தன.அதிலும்,இதில் விளையாடும் பணம் எனக்கு அருவருப்பை தான் கொடுத்தது.இதை தடுக்க வேண்டியவர்கள் சில நேரங்கள் தவிர்த்து, கை கட்டி வேடிக்கை பார்ப்பது ஆதிலும் கேவலம்.
    இனி re print செய்தால் கூட,ஒரிஜினல் புக் வேண்டும் என்று திரும்பவும் செலவு செய்ய இங்கே ஆட்கள் பலர் உண்டு.அந்த அளவுக்கு இங்கே நிலையை மோசமாக்கி விட்டார்கள்.

    ReplyDelete
  27. // இனி re print செய்தால் கூட,ஒரிஜினல் புக் வேண்டும் என்று திரும்பவும் செலவு செய்ய இங்கே ஆட்கள் பலர் உண்டு.அந்த அளவுக்கு இங்கே நிலையை மோசமாக்கி விட்டார்கள். //

    ஒரிஜினல் புக்கா எங்கே எங்கே... இப்பவே 10000 ரூபாய் குடுக்க நான் ரெடி... ஏற்கனவே மார்கெட்டில் 15000 ரூபாய் விலை என்று பிரபல கசமுசா இதழில் பிரபல ஆடை பேச்சாளர் கூறியிருக்கிறாரே....

    எனக்கு உடனே வேணும்... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்......

    ReplyDelete
  28. //re print செய்தால் கூட// காமிக்ஸ் கிளாசிக்கை அப்படி சொல்வது தவறாகும்.

    ReplyDelete
  29. //ஏரியா ரொம்ப சூடா இருக்குதே ;-).
    அப்புடியே லார்கோ வின்ச் பற்றியும் எழுதலாமே :))//

    பல நாள் பொருமிய எரிமலை வெடிக்கிறது.அவ்வளவே!
    தோன்றும் போது எழுதுகிறேன். :)

    //ரத்தப் படலம் ஜம்போ சிறப்பிதழ் சமீப காலங்களில் ஏற்படுத்தியிருக்கும் புத்துணர்ச்சியின் ஒரு வடிவமாக அல்லது குறியீடாகவே உங்களின் இப்பதிவை என்னால் காண முடிகிறது. //

    ஆமா,இல்லாம பின்ன? 'உற்சாகம் ' தான் காரணம். ;)

    //அதானே... காதலருக்கு எதில் அதீத காதல் என்று கூட தெரியாத அப்பாவியாக இருக்கிறாயே இலுமி... //

    ஆமா,அபச்சாரம் அபச்சாரம்.. ;)
    பிராயச்சித்தமா இதை facebook இல் அப்டேட் செய்வது என் கடமை! 'பார்க்கிறவர்கள்' பார்க்கட்டும்.. ;)

    ReplyDelete
  30. //காமிக்ஸ் கிளாசிக்கை அப்படி சொல்வது தவறாகும்.//

    அதன் 'தரத்தை' பற்றி தவறாய் கூறியதற்கு மன்னிக்கவும்.. ;)

    ReplyDelete
  31. பிரசன்னா, முடிந்தால் லிங்க் எடுத்து படித்து பாருங்கள்.நன்றி. :)

    ReplyDelete
  32. என்னிடம் ஆசை இருக்கிறது. காதல் இருக்கிறது. பத்தாயிரம் என்ன ஒரு லட்சம் தர நான் ரெடி. விற்க நீங்கள் ரெடியா.

    நாங்க படுத்தா எலி... பாய்ஞ்சா புலி.

    இந்தக் கமெண்ட சீரியஸாக எடுத்துக் கொண்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பு ஏற்காது.

    விளம்பரங்களிற்கு நிர்வாகம் தார்மீக பொறுப்பு ஏற்காது.

    ReplyDelete
  33. //நாங்க படுத்தா எலி... பாய்ஞ்சா புலி.//

    சொரிஞ்சா சொறி..
    பேசுனா மொக்க..
    தூக்கினா சொம்பு.. ;)

    இதை சீரியஸ் ஆக எடுத்தாலும் நிர்வாகம் பொறுப்பாகாது. ;)

    ReplyDelete
  34. உங்கள் உள்ளே உறங்கி இருந்த விஜயகந்தை இன்று எம்மால் கண்டு கொள்ள முடிந்தது, இன்றுமுதல் நீங்கள் கேப்டன் இலுமி என வழங்கப்படுவீர்கள்....

    இது ஒரு சுடப்பட்ட கருத்தாகும்.

    ReplyDelete
  35. //சொரிஞ்சா சொறி// அது நீங்கள் சொறியும் இடத்தைப் பொறுத்தது.

    தூக்கினா சொம்பு.... தூக்காட்டி வம்பு..

    இப்படிக்கு சிம்பு

    ReplyDelete
  36. எரிமலை எப்படி பொறுக்கும்......

    ReplyDelete
  37. //அது நீங்கள் சொறியும் இடத்தைப் பொறுத்தது.//

    ஆமா,சுகமா இருக்குன்னு சொரிஞ்சுகிட்டே இருந்தா,பின்ன ரத்தம் தான் மிஞ்சும். இது நான் சொன்னது இல்ல.படத்தில வந்தது. ;)

    ReplyDelete
  38. இப்படி நிர்வாகமே கமெண்டு போட்டுகிட்டு இருந்தா காமிக்ஸின் நிலைமை என்ன ஆகும்.

    அலோ... வாசகர்களே...கமெண்ட்ஸ் ப்ளீஸ்...

    ReplyDelete
  39. நண்பரே,

    ரசிகர்களின் ஆதரவு இப்பதிவிற்கு இல்லை என்பதால் இது ஒரு உலகப் பதிவு அல்லது புதிய அலையை ஏற்படுத்தும் முயற்ச்சி என வகைப்படுத்தலாமா.

    ReplyDelete
  40. //ரசிகர்களின் ஆதரவு இப்பதிவிற்கு இல்லை என்பதால் இது ஒரு உலகப் பதிவு அல்லது புதிய அலையை ஏற்படுத்தும் முயற்ச்சி என வகைப்படுத்தலாமா.//

    ஏன்யா,உறங்கிக் கிடந்த காமிக்ஸ் உலகிற்கு இது ஒரு 'புத்துணர்ச்சி' தரும் னு நீர் நினைக்குறீர்? 'அடக்கம்' தான் பண்ணனும் னு நீர் சொல்றது கேக்குது. ;) கவலைய விடும்.

    அரசு கேபிள் சம்பந்தமா தாத்தா சொன்ன டயலாக்க நாமளும் யூஸ் செய்வோம். ;)

    'அடக்கத்துடன்' செயல்படுகிறது தமிழ் காமிக்ஸ். ;)

    ReplyDelete
  41. என்ன இருந்தாலும் இவ்வளவு அடக்கம் ஆகாது.

    ReplyDelete
  42. கேப்டன் இலுமிக்கு,

    பொங்கி இருக்கிறீர்கள். காமிக்ஸ் மீது தீவிர காதல் இருந்ததால் தான் இவ்வளவு கோபம் வரும். என்ன செய்வது போட்டியிருந்தால்தான் எதுவும் மேம்படும்.

    XIII முதல் பாகம் குறித்த பதிவு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து மற்ற பாகங்களையும் பதிவிடுங்கள். அடுத்த பதிவு புரட்சித் தீ ஆகதான் இருக்கும் என நினைக்கிறேன்.

    சித்திர கதை ரசிகர்கள் பழைய லயன் முத்து காமிக்ஸை தேடி அலைவதற்கு அப்போது அதில் காணப்பட்ட தொழில்முறை நேர்த்தி காரணமாக கூட இருக்கலாம்.

    நல்ல பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  43. இங்கு பதிவிட்டிருக்கும் ஜோஸ் எனும் அன்பரிற்கு நீங்கள் மெயில் அனுப்பி, மிரட்டி கருத்திட வைத்துள்ளதாக வந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன.

    ReplyDelete
  44. //என்ன செய்வது போட்டியிருந்தால்தான் எதுவும் மேம்படும்//

    சத்தியமான உண்மை.ராணி காமிக்ஸ்,சினி புக் என்று ஏதாவது இருந்தால் தான் புத்தகம் வெளி வரும் என்ற நிலை.வெட்கக்கேடு!

    //அடுத்த பதிவு புரட்சித் தீ ஆகதான் இருக்கும் என நினைக்கிறேன்//

    தெரியாது நண்பரே!ஆனால்,அடுத்த காமிக்ஸ் பதிவு அது தான்.

    மேலும்,காமிக்ஸ் தேடி அலைவதற்கு முக்கிய காரணம்,அது கொண்டு வந்து நினைவுபடுத்தும் சிறு வயது நினைவுகள் தான்.
    நீங்கள் சொன்னது போல் தொழில் முறை நேர்த்தி என்றால்,எனக்கு பல காலம் உள்ள சந்தேகத்தை இப்போது கேட்கிறேன்.

    ஒரு கதையின் ஒரிஜினல் சில நூறு ரூபாய்களில் கிடைக்கும் போது,தமிழ் ஒரிஜினல் தான் வேண்டும் என்பது எதனால்?
    simply, there is no logic here.it has went up to the state of status and fanatic zeal.

    ReplyDelete
  45. நேரிலேயே சென்று மிரட்டினேன் என்று தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ;)

    ReplyDelete
  46. //ஒரு கதையின் ஒரிஜினல் சில நூறு ரூபாய்களில் கிடைக்கும் போது,தமிழ் ஒரிஜினல் தான் வேண்டும் என்பது எதனால்?// ஏன்னா ஒரிஜினல் தமிழ்ல இல்ல அதனால்..

    ReplyDelete
  47. ஆம். நான் மிரட்டப் பட்டேன். தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட நிலையில்தான் இந்த பதிவு நன்றாக இருக்கிறது என எழுதினேன்.

    தொழில் நேர்த்தி என்பது முன்னர் வெளிவந்த ஒரு ரூபாய் புத்தகங்களையும், தற்போது வரும் காமிக்ஸ் க்ளாஸிக் ரீ பிரிண்ட்களையும் ஒப்பிட்டாலே தெரியும்.

    ReplyDelete
  48. //ஏன்னா ஒரிஜினல் தமிழ்ல இல்ல அதனால்.. //

    தப்பு! எல்லாம் சாணித் தாள் மகிமை. ;)

    ReplyDelete
  49. //தொழில் நேர்த்தி என்பது முன்னர் வெளிவந்த ஒரு ரூபாய் புத்தகங்களையும், தற்போது வரும் காமிக்ஸ் க்ளாஸிக் ரீ பிரிண்ட்களையும் ஒப்பிட்டாலே தெரியும்//

    அப்ப,விஜயனுக்கு ஒழுங்கா தொழில் வராது னு சொல்றீர்.அய்யயோ,இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஆளே இல்லையா? யாராவது வந்து தொலைங்கடா டேய்.. ;)

    ReplyDelete
  50. அப் அப் 50 அப்... இந்த உலக மா பதிவில் ஐம்பதாவது பதிவை இட்ட இந்த பதிவின் உரிமையாளரிற்கு இந்தக் கமெண்டை கள்ளி மாலையாக அணிவிக்கிறேன்.

    கள்ளி ஒரு குறியீடாகும்.

    ReplyDelete
  51. அடப்பாவிகளா அப்ப தமிழ்ப் படங்கள்ல வர்ற எல்லாக் கதையுமே சுட்டது தானா..? வெற்றிவிழா படத்தில் பேர் போடும்போது, அலைகள் மிரட்டும் கரையில் கமல் கிடப்பார்.. அவருக்கும் முன் நியாபகம் மறந்து போய் இருக்கும்.கிழவனையும் கிழவியையும் காட்டினால் படம் ஓடாது என்பதால் ஒரு கிழவியையும், அப்புறம் தமிழ்ப் படம்ங்கரதால அழகான ஒரு ஹீரோயினையும் போட்டு.. அடடடா.. என்னமா அடிச்சிருக்காங்க..

    நான் அழகான படைப்புகள் என்று நினைத்த பல படங்கள் காப்பியாக சாயம் வெளுத்து என்னை ஏமாற்றின என்றால் வெற்றிவிழா இத்தனை வருடம் கழித்து என்னை ஏமாற்றி இருக்கிறது..

    இப்பக கூட தெலுங்கில் தான் இயக்குனர்கள் சிந்திப்பார்களோ..? தமிழில் வெறும் அவற்றின் காப்பிகள் தானோ என நினைக்கத் தோன்றுகிறது...

    ReplyDelete
  52. என்ன நேர்த்தியான வர்ணனை...

    எனக்கு படங்கள் வரையப் பிடிக்கும்.. அந்தப் படத்தைப் பற்றிய உமது நுண்ணிய பார்வை.. தல (விசில் சத்தத்துடன்) பின்னீட்டிங்க.....

    ReplyDelete
  53. //அடப்பாவிகளா அப்ப தமிழ்ப் படங்கள்ல வர்ற எல்லாக் கதையுமே சுட்டது தானா..? //

    ஹாஹா,இந்த காமிக்ஸ் கூட ஒரிஜினல் இல்ல.அந்த நாவல் தான் ஒரிஜினல். :)

    ReplyDelete
  54. இலுமி, முழுக்க நனஞ்ச பின்பு முக்காடு எதுக்கு... அதனாலே மொத்ததையும் படிச்சுபுடலாம்னு, காப்பி போட்டுகிட்டு நைட் அவுட் பண்ணி முடிச்சே புட்டேன்...

    சும்மா சொல்ல கூடாதுயா... சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கே....

    .**** சலனமே உருவாய் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் அருகிலேயே சலனமே இல்லாமல் கிடக்கிறது ஒரு உடல் .****

    .**** பாறையில் மோதித் தெறிக்கும் கடல் அலைகளின் இரைச்சல்கள்,அவனது மனக்குமுறல்களோடு மோதித் தோற்கின்றன.

    .**** சலனமே உருவான கடற்கரை,மனச்சலனம் கொண்ட இருவருக்குமே அடைக்கலம் தருகிறது. .****

    .**** மூளையை தழுவி நிற்கும் ரத்தப்படலம் விலகவும், .****

    ஒவ்வொன்றும் மனதை வருடும் வரிகள்.... கதையை வாழ்ந்திருக்கிறாய் நீ.... நானும் நினைவுகளை மீள் கொணர வைத்த உணர்வை எட்டி பிடிக்க உதவிற்று....

    ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படி ஓவியத்தின் ஏபிசிடி யை பிய்த்து கொத்து பரோட்டோ போட்டது டாப்....

    .**** எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன்(காரின் bright நிறத்தை கவனிக்க!) செல்லும் XIII இன் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு காட்சி! .****
    .**** வழி தொலைத்த கப்பல்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்,தனக்கு முன்னே தெரியும், கலங்கரை விளக்கத்தை போன்றது,தான் நாடிச் செல்லும் தேடல் என்று XIII நினைப்பானாயின் .****

    அந்த இரு ஓவியங்களையும் முதலில் பார்த்த போது, மனதில் தோன்றிய பல எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கும் வரிகள். ரசனையாளனப்பா நீ.... கருப்பு வெள்ளை கிளாசிக் என்றால், அவற்றில் வண்ணம் தீட்டி அதை மிகைபடுத்துவது மாடர்ன் ஆர்ட்... ஓவியர் ஹாம்மே பின்னியிருக்கிறார்.


    கரையை முத்தமிடத் துடிக்கும் அலைகளைப் போன்றதே அவனது கடந்த காலத்தின் தேடலும். என்று நீர் எழுதியிருந்தாலும்.... கடல் அலை கூட கரையை அவ்வப்போது தொட்டு விட்டுதான் போகின்றது... ஆனால் நெருங்கி வரும் ஒவ்வொரு வேளையிலும் பாதாளத்தில் விழுந்து பின்பு ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு சேர்க்கும் பல சாகசங்களை இனி வரும் பாகங்களில் XIII யுடன் சேர்ந்து நாமும் பயனிக்கும் பாகங்கள் மனதை பிசையும் திருப்பங்கள்.

    ஆர்பரிக்கும் கடலில் ஆரம்பித்த தொடக்கம்.... அமைதியான கலங்கரை விளக்கம் தாண்டி தொடங்கும் அமைதி பயணம்,,,, முதல் பாகம் என்றும் நினைவில் இருக்கும் திண்ணம்.

    ReplyDelete
  55. கரையை தொடத் துடிக்கும் அலைகள்,எப்போதும் அதனை முழுமையாய் தொடுவதில்லை.XIII இன் நிலையும் அது தானே! :)

    ReplyDelete
  56. .**** என்னிடம் ஆசை இருக்கிறது. காதல் இருக்கிறது. பத்தாயிரம் என்ன ஒரு லட்சம் தர நான் ரெடி. விற்க நீங்கள் ரெடியா. .****

    ஆ ஹா... உம்மை போன்ற ஆட்களைதான் காணத்தான் தமிழ் காமிக்ஸ் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.... காதலரே வாரும்... உம் பணத்தை தாரும்.... வாங்கி செல்லும்....

    .**** ரசிகர்களின் ஆதரவு இப்பதிவிற்கு இல்லை என்பதால் இது ஒரு உலகப் பதிவு அல்லது புதிய அலையை ஏற்படுத்தும் முயற்ச்சி என வகைப்படுத்தலாமா. .****

    அட ஆதரவுதானே,.... இப்பவே இலு, கம்மு, நாட்டி, ஜோ, ச்சுசூ, கனுவு, வினுவு, என்று பல ஐடிகளை உருவாக்கி இங்கு ஒரு கும்மி நடத்த ஆட்களை ஏற்பாடு செய்தாயிற்று... பார்த்து கொண்டே இரும்... தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இப்பதிவை நகர்த்தி காட்டுகிறோம்... இது நைட் சாப்பிட்ட கொத்து பரோட்டா மேல் ஆணை.

    இலுமி: பேசியபடி பொட்டி அனுப்பிச்சுபுடுமய்யா.......

    .**** என்ன இருந்தாலும் இவ்வளவு அடக்கம் ஆகாது. .****
    அடக்கம் அமரருள் உயிக்கும் என்ற சொல்வடம் உங்களுக்கு மறந்து விட்டதா என்ன.... தமிழ் காமிக்ஸ் இப்போது கல்லறையில் அடங்கி போய் இருப்பதே அதற்கு சான்று தானே ??? :)

    .**** //ஒரு கதையின் ஒரிஜினல் சில நூறு ரூபாய்களில் கிடைக்கும் போது,தமிழ் ஒரிஜினல் தான் வேண்டும் என்பது எதனால்?// ஏன்னா ஒரிஜினல் தமிழ்ல இல்ல அதனால்.. தப்பு! எல்லாம் சாணித் தாள் மகிமை. ;) .****

    உங்களுக்கெல்லாம் ரசனையே கிடையாதா.....? சாணி பேப்பரின் மகிமை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.... புதிதாக அச்சடிக்கும் பக்கங்களின் வாசனையில் பாலர்கள் மோகம் கொண்டு அடிமை ஆகிறார்கள், என்று எதை தேய்த்தாலும் வாசனையே வராமல் அதை அப்படியே உள்வாங்கி கொள்ளும் அத்தரமான பக்கத்திற்கு இப்படியா களங்கம் கற்பிப்பது... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

    .**** தொழில் நேர்த்தி என்பது முன்னர் வெளிவந்த ஒரு ரூபாய் புத்தகங்களையும், தற்போது வரும் காமிக்ஸ் க்ளாஸிக் ரீ பிரிண்ட்களையும் ஒப்பிட்டாலே தெரியும். .****
    தொழில் நேர்த்தியா.... அப்படினா..... நீர் எந்த உலகத்தில இருந்து வரீறய்யயா..... ????

    ReplyDelete
  57. //இப்பவே இலு, கம்மு, நாட்டி, ஜோ, ச்சுசூ, கனுவு, வினுவு, என்று பல ஐடிகளை உருவாக்கி இங்கு ஒரு கும்மி நடத்த ஆட்களை ஏற்பாடு செய்தாயிற்று... பார்த்து கொண்டே இரும்... தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இப்பதிவை நகர்த்தி காட்டுகிறோம்... //

    ஹா ஹா..
    'வாழ்க வாழ்க' வை மறக்க கூடாது தங்கங்களே! :)

    //பேசியபடி பொட்டி அனுப்பிச்சுபுடுமய்யா.......//

    அதற்க்கு பதிலாக ஸ்கேன்களாக பெற்றுக் கொள் என் தங்கமே! ;)

    //கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.//

    இந்த கழுத மேட்டர் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. நீர் சொன்னா கேட்டுக்கிறேன். ;)

    //தொழில் நேர்த்தியா.... அப்படினா..... நீர் எந்த உலகத்தில இருந்து வரீறய்யயா..... ????//

    ஹாஹா..அது பீசு பாண்டிங்ரதால கொஞ்சம் 'குழம்பி' இருக்கு.'தெளிவான' பின்ன பேசிக்கலாம். :P

    ReplyDelete
  58. இலுமி,
    எனக்கு கிடைத்த புத்தகத்தில் குழப்பமான கதையில் குழப்பமான பக்கங்கள்.பக்கங்கள் மாறி மாறி இருந்ததால் நானே ஒரு XIII ஆக மாறி போனேன்.

    ReplyDelete
  59. ஏதோ உலகப்படம் விமர்சனம் என்று எண்ணினேன்... காமிக்ஸ் விமர்சனம் படிப்பது இதுவே முதல்முறை...

    ReplyDelete
  60. @Rafiq Raja

    //ஆமா... அந்த டெரர்ரு கருத்த இப்ப காணோமே.... ஆள் எஸ்கேப்பா....//

    எஸ்கேப்ப எல்லாம் இல்லிங்க சார். எங்க டீம்குள்ள எவ்வளவு தான் நல்ல பதிவு எழுதினாலும் நாங்க நக்கல் மட்டும்தான் அடிப்போம். கொஞ்சம் சீரியஸ் பிரச்சனை சொன்னதால இங்க மொக்க போட்டு Main core dilute பண்ணாம கமெண்ட் டெலிட் பண்ணிட்டேன்.

    ReplyDelete
  61. Terror buddy,

    Thanks for the understanding.And sorry again. :)

    ReplyDelete
  62. லக்கி நண்பரே,

    ஹாஹா,ஜம்போவின் குழப்பங்கள் தீராத கன்னித் தீவு போல.. :)

    பிரபாகரன் நண்பரே,

    முதல் முறையோடு நிறுத்த வேண்டாம்.படிக்க முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  63. இலுமி, ரபிஃக், காதலர்...
    நீங்களெல்லாம் நல்லவர்களா கெட்டவர்களா, உங்களுக்கு தமிழ் காமிக்ஸ் பிடிக்குமா பிடிக்காதா, நீங்கள் அடிப்பது கும்மியா இல்லை சீரியஸா..............

    ஒன்னுமே புரியலயே......

    ReplyDelete
  64. தமிழ் காமிக்ஸை விட ஆங்கில பதிப்பு காகித தரத்தில் சிறப்பானது தான். ஆனால்.....
    எனக்கு ஆங்கில பதிப்பு எங்கு கிடைக்கும் என தெரியாது..
    தெரிந்தாலும் அதன் விலை எனக்கு கட்டுபடியாகாது..
    கட்டுபிடியாகாத விலை கொடுத்து வாங்கினாலும் ஆங்கிலத்தில் 70% கதை தான் எனக்கு புரியும்..
    அப்படியே புரிந்தாலும் தமிழில் படிப்பது தான் அலாதி சுகம்...
    என்னை போன்ற வாசகர்களுக்கு விஜயன் அவர்கள் வெளியிடும் காமிக்ஸ் தான் காமிக்ஸ் ஆவர்த்திற்கு வடிகால். அப்படி காமிக்ஸ் ஏதும் வரவில்லை எனில் வருத்தப்பட போவதில்லை. ஏனெனில்..

    லயன்/முத்து காமிக்ஸ்கள் வருவதாகவே நான் நினைக்கவில்லை.... பல வருடங்களுக்கு முன் நின்று போய்விட்டது ....இந்த நிலையில் வெளிவரும் ஒவ்வொரு காமிக்ஸும் எனது காமிக்ஸ் ஆர்வத்திற்கு லாபம் என்று எண்ணிக்கொள்கிறேன்.

    தினறி கொண்டிருக்கும் தமிழ் காமிக்ஸை கட்டி இழுத்துக்கொண்டிருக்கும் விஜயன் அவர்களை வம்புக்கு இழுப்பது தேவையில்லை என எண்ணுகிறேன்

    ReplyDelete
  65. சிவ் நண்பரே,

    நாங்க யாருன்னும் உங்களுக்கு தெரியும்,மத்தவங்க எப்படின்னும் உங்களுக்கு தெரியும்.எங்க சின்ன வயசில ஒரு அழியாத தடம் பதித்த தமிழ் காமிக்ஸ் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இப்போதைய காமிக்ஸ் அல்ல.
    குறிப்பாக, அப்போ இருந்த எடிட்டர் இப்ப இல்ல.எங்களுக்கு வேண்டியது துடிப்பான,ரசிகர்களுக்கு மதிப்பு கொடுத்த அந்த ஆசிரியர்.சும்மா சால்ஜாப்பு சொல்லிக்கிட்டு,ஈடுபாடு இல்லாம, பொழுது போகாதப்ப மட்டும் புக் வெளியிட்டுகிட்டு, ரசிகர்களுக்கு மதிப்பே கொடுக்காத இந்த ஆசிரியர் இல்லை.

    ஆங்கில பதிப்பில் தாளின் தரம் பற்றி மட்டும் அல்ல நாங்கள் பேசுவது! தொலைந்து போன ஈடுபாடு, மொழிபெயர்ப்பு தரம், ரசிகர்கள் நடத்தப்படும் விதம்,பெருகி வரும் தெளிவின்மை,நிச்சயமற்ற நிலை இவற்றை குறித்தும் பேசுகிறோம்.

    ஆங்கில காமிக்ஸ் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை.எத்தனையோ வழிகள் உள்ளன. நூலகங்கள் இருக்கின்றன, நெட் இருக்கிறது.இதில் ஏதாவது வழியில் படித்துவிட்டு முடிந்த போது, உங்களுக்கு மிகவும் பிடித்தால் புத்தகத்தை வாங்குங்கள்.

    //லயன்/முத்து காமிக்ஸ்கள் வருவதாகவே நான் நினைக்கவில்லை.... பல வருடங்களுக்கு முன் நின்று போய்விட்டது ....//

    பலரின் மனநிலை இப்போது அது தான்.இதுவே கேவலமான ஒன்றல்லவா? ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிய நமது லயன் இப்போது மண்ணைக் கவ்வ காரணம் என்ன? நிச்சயம் குறைந்து வரும் வாசிப்பு மட்டும் அல்ல. குறைந்து வரும் ஆர்வமும் தான். அது யாருக்கு என்று சொல்லத் தேவையில்லை. சிறு வயதில் ரெண்டு ருபாய் கொடுத்த நாம்,இப்போது எவ்வளவு பணமும் கொடுக்க ரெடி தான்.

    ஆனால், நான் படித்த ஒரு விஷயத்தை இங்க சொல்ல விரும்புகிறேன். "To make money, you have to spend money."

    செய்தாரா விஜயன்? விளம்பரம் மருந்துக்காவது உண்டா? எத்தனை பேருக்கு இன்னும் காமிக்ஸ் வருவது தெரியும்? பலருக்கு ராணி காமிக்சோடு தமிழகத்தில் காமிக்ஸ் மரித்து விட்டது. நமக்கு இவர் செய்யும் கூத்தை பார்த்து மரத்து விட்டது.

    //தினறி கொண்டிருக்கும் தமிழ் காமிக்ஸை கட்டி இழுத்துக்கொண்டிருக்கும் விஜயன் அவர்களை வம்புக்கு இழுப்பது தேவையில்லை என எண்ணுகிறேன் //

    வீணாக என்னை சிரிக்க வைக்க முயல வேணாம். அவரை வம்புக்கு இழுத்து எனக்கு ஆகப் போவது? "அடப் போங்கய்யா " என்று சொல்லிவிட்டு என் பாட்டில் பிறரை போல போக என்னால் முடியும். இணையத்தில் நடக்கும் கூத்துக்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியும்.

    ஆனால், தமிழ் காமிக்ஸ் என்னில் ஏற்படுத்திய தாக்கமும், ஆர்வமும், அது எனக்கு அறிமுகப்படுத்திய விசயங்களும் கொஞ்சம் அல்ல.அதற்காகவாவது நான் உண்மை என்று எனக்கு தோன்றியதை சொல்லவே செய்வேன்,பிறரை போல சுய லாபத்திற்காக 'சொம்பு' தூக்க மாட்டேன்.

    ReplyDelete
  66. thalaivare, what is this? ..................yow ! unaku vijayanai pathi ennaiya yheriyum. avar comics ulagin pithamagan .......... ippadi yellam solla aasaithan , but, SOMPUGAL EPPADI PORUKKUM........... r.s.k. phone-la sonnatha vida hot machi.

    ReplyDelete
  67. நண்பர் சிவ், இலுமி ஏற்கனவே உங்களுக்கு பதில் அளித்து விட்டார். ஆனாலும், நீங்கள் என்னிடமும் கேள்வி கேட்டிருக்கும்படியால், பதிலளிக்க நான் கடமைபட்டிருக்கிறேன் என்பதால்....

    நல்லவரா கெட்டவரா, தமிழ் காமிக்ஸ் பிடிக்குமா பிடிக்காதா: கும்மியா சீரியஸா... என்று பல கேள்விகளை தொடுத்துள்ளீர்கள்..... அதற்கு முன்பு ஒன்று சொல்லுங்களேன். இதுவரை நீங்கள் காமிக்ஸ் உலகத்தில் கும்மிகளை பார்க்காமல் இருந்திருக்கிறீர்களா... இல்லை கும்மிகள் என்றாலே அது அளவுக்கு அதிகமாக புகழ்ந்து ஐஸ் வைத்து செய்தால் மட்டும் தான் அவ்வகை படுமா....

    தனி மனித தாக்குதல் இல்லாமல், நம் மனதில் படும் விஷயங்களை நையாண்டித்தனமாக கூறுவதற்கும் கும்மிகள் உதவலாம் இல்லையா... அதே வேளையில் அவ்விஷயங்கள் எந்தவித பிரதிபலனையும் பாராது, நம மனதில் நீங்கா இடம்பெற்ற தமிழ் காமிக்ஸின் தற்போதைய நிலையை எண்ணிய எங்கள் ஆதாங்கத்தின் வெளிப்பாடாக இருக்க கூடாதா....

    நண்பரே, ஒன்று மட்டும் உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் காமிக்ஸின் எழுச்சிக்கு ஆசைபடும் பல பேரில் நானும் ஒருவன் தான்... ஆனால், அதே வேளையில் சந்தர்ப்பவாத கூட்டணிகளுடன் கைகோர்த்து கொண்டு கோடி கும்பிடு போட்டு நடக்காத ஒரு விஷயத்திற்கு முன்கூட்டியே விளம்பரம் செய்து, அதற்கு கும்மி அடித்து, ஒரு பொய்யான மாய உலகத்தில் வாழ விரும்பவில்லை.

    புத்தகங்கள் வெளிவரும் போது, ஒரு சராசரி வாசகனாக அதன் நிறை குறைகளை சுட்டி காட்டி எனது விமர்சனங்கள் தொடரும். கூட்டம் கூட்டி கொடி பிடிக்க இது ஒன்றும் அரசியல் மேடை இல்லையே. :)

    ReplyDelete
  68. ரபிக், பிய்த்து விட்டீர்கள்.வரிக்கு வரி உடன்படுகிறேன். :)

    ReplyDelete
  69. நண்பர் சிவ்,

    நான் கெட்டவன்...ஆனால் நல்லவன் :)

    ReplyDelete
  70. தங்கள் reply க்கு நன்றி நண்பர்களே. உங்கள் point of view புரிகிறது.

    ReplyDelete
  71. //நண்பர் சிவ்,

    நான் கெட்டவன்...ஆனால் நல்லவன் :)///

    எல்லாரும் இப்படி தெள்ளத் தெளிவா கமெண்ட் போட்டா எவ்வளவு நல்லா இருக்கும்...

    ReplyDelete
  72. ithanal therivippathu yathenil, mika thelivaka vilakkam alippathal , indril irunthu
    "kanavukalin
    kathalaruku nan kathalan" yenpathai mika thalmaiyudan therivithu kolkiren................. mr.R.S.K.

    ReplyDelete
  73. பேசாம,”உளியின் ஓசை”க்கு நீயே கதை வசனம் எழுதியிருக்காலாம் போல...

    அப்படித்தான் இருக்கு..

    :-)

    ReplyDelete
  74. நானும் வர்ரேன் நானும் வர்ரேன்... சாணி பேப்பர், கறுப்பு வெள்ளைப் படங்கள், சில படங்களை இருட்டடிப்பு செய்திருப்பது (???!!), சரியான communication இல்லாமை இத்யாதி இத்யாதி ஆகியவைக்கு எனது மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவனவன் ஜாலியா ஸ்கேன்லேஷன்லயே ஃபுல் காமிக்ஸும் படிக்கும் இந்தக் காலத்தில், லயன் குழுமம், இன்னமும் மார்க்கெட்டிங் வகைகளைப் பயன்படுத்தி, ஃபுல் கலரில், அருமையாக இவைகளை வெளியிட்டிருந்தால், எப்படி இருந்திருக்கும் :-( ..

    ஹூம்ம்ம்... சட்டி சுட்டதடா.... கை விட்டதடா...

    ReplyDelete
  75. நான் ரொம்பக் கெட்டவன்... ஆனால் ரொம்ப ரொம்ப நல்லவன் :-)

    ReplyDelete
  76. புரட்சித்தீ புரட்சித்தீன்னு ஒரு பதிவு வருவதாக போன யுகத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. இந்த வகையில், லயனையே தூக்கி சாப்பிட்டு சாதனைகள் பல படைக்கும் இலுமிக்கு ஒரு சுள்ளி மாலை..

    பி.கு - சுள்ளியுமே ஒரு குறியீடு ஆகும் :-)

    ReplyDelete
  77. //எஸ்கேப்ப எல்லாம் இல்லிங்க சார். எங்க டீம்குள்ள எவ்வளவு தான் நல்ல பதிவு எழுதினாலும் நாங்க நக்கல் மட்டும்தான் அடிப்போம். கொஞ்சம் சீரியஸ் பிரச்சனை சொன்னதால இங்க மொக்க போட்டு Main core dilute பண்ணாம கமெண்ட் டெலிட் பண்ணிட்டேன்.
    //

    நானும் அதனாலாதான் பயந்து ஓடிட்டேன் அண்ணா ..!!

    ReplyDelete
  78. //சுள்ளியுமே ஒரு குறியீடு ஆகும் :-)//

    சுள்ளில என்னங்கய்யா குறியீடு? :)

    //புரட்சித்தீ புரட்சித்தீன்னு ஒரு பதிவு வருவதாக போன யுகத்தில் ஒரு அறிவிப்பு வந்தது.//

    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  79. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்!
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html

    ReplyDelete
  80. அய்யய்யோ,யோவ் என்ன காரியம்யா பண்ணி இருக்க?சாதா போஸ்ட்க்கு இன்ட்ரோ கொடுத்தா கூட பரவாயில்ல.அது கொலைவெறியோட எழுதின போஸ்ட்.எத்தன தல உருள போகுதோ? :)

    ReplyDelete
  81. Dear Illuminati,

    I have read your all the posts. I never expect this kind of post from you.

    Your comments about the book quality is not fair. for 200 Rs. 850 pages in big size is already too much in current paper rate and salary for the workers. You cant publish 850 pages for 200 Rs. Don't discourage the efforts of the Lion Staffs and Also Mr. Vijayan. I am from sivakasi. so i know the book publishing cost very well. I also worked in book publishing in my school holidays. Don't say any words like this with out the knowledge of publishing.

    ReplyDelete
  82. ஆகா பெரிய ரணக்கலமே நடந்திருக்கு போல சின்ன பையன் நான் ... அப்பறமா வாறேன்

    ReplyDelete
  83. Dear friend,

    Thanks for taking the effort on making a comment on this issue.The quality of the paper kept aside,what bothers me most is the response, we,the ardent fans got from the lion office.That is what is much emphasized here.

    About the quality of paper,I know well that for that fixed amount,that is what we can get now.That is one thing that bothers me maybe because of the over familiarity with the english publications.That is just my thought.but think of this...

    What if the book was released some 2 years ago or maybe even earlier than that?

    We could at least have got some reasonably better looking paper.But due to the late publishing of the book and possible price hikes during that time,the quality of paper is not note worthy.

    //XIII இன் மொத்த பாகத்தையும் ஒரே புத்தகமாய் போட்டு சாதனை செய்ததற்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில்//

    I have indeed applauded their efforts on this effort.But,the soul of my question in something else...

    The way we,comic fans, were treated when we were eagerly inquiring about the publishing of the book and the near possible release.

    You tell me friend,

    When you were treated without the least bit of interest for more than two years and is being asked to fawn suggestions, when the great vijayan so pleases to ask us, what should we do?

    How should we react in return?

    Should we just send suggestions to please vijayan or should we voice our displeasure?

    That is what I intended to convey primarily in this post.That can be noted from the lines quoted below.

    //வாசகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்று சொல்லி மட்டுமே கொள்ளும் திரு.விஜயனுக்கு,எனது கண்டனங்கள் மற்றும் அனுதாபங்கள்.


    ரசிகர்களிடம் பாராமுகமாய் இருந்துவிட்டு,அவர்களின் கேள்விகளுக்கு சரியான தகவல்களைத் தராமல், உங்களுக்கு தேவை வரும் போது அல்லது சும்மாவேனும் சால்ஜாப்பு சொல்வதற்கு அவர்களது கருத்துக்களை அடுத்த முறை கேட்கும் போது, இதை நினைவு கொள்ளுங்கள்…..

    பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும்,நம்பிக்கைக்கும் ஒரு அளவு உண்டு! //

    Thanks for your time on voicing your opinion.But,the paper quality issue apart,if you are indeed angry with the treatment you received,join arms friend.Let us voice the truth boldly. It is time to get past the eulogies on vijayan and voice our displeasure.

    ReplyDelete
  84. தமிழ்ல காமிக்ஸ் படிச்சுகிட்டு இருந்த காலத்துல நமக்கு இரும்பு கை மாயாவியும், ஸ்பைடரும் நமது கற்பனை உலக நாயகர்கள், கால போக்கில் ”அட என்னப்பா, எப்ப பார்த்தாலும் இங்கலாந்து, அமெரிக்காவ காப்பாத்திக்கிட்டுனு” ஒரு சலிப்பு வந்த நேரத்தில் கை கொடுத்தது டெக்ஸ்,டைகர், ரிப்போர்டர் ஜானி, லக்கிலூக் போன்ற கதாபாத்திரங்கள். அதன் பிறகு வரிசையாக ஸ்பானிய அமெரிக்க மக்களின் கதைகளம், துப்பறியும் கதைகள் என்று நன்றாக இருந்தது. பிறகு மீண்டும் ஒரு தொய்வு. அதன்பின் வந்த மர்மமனிதன் மார்டின் கதைகள் நம்மை வரலாற்று சம்பவங்களை இனையத்தில் தேட வைத்தன. பல காமிக்ஸ் நண்பர்களின் அட்டகாசமான பதிவுகள் எழுதியும், அந்த கதைகளில் சொல்லபட்ட விஷயங்களை, கதாசிரியரை பற்றியும் விபரமாக எழுதி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்கள். அப்படி இணையம் வழியாக பல காமிக்ஸ் தகவல்களை எழுதி என்னைப்போன்ற தமிழ் காமிக்ஸ் படிக்கும் பல காமிக்ஸ் நண்பர்களின் ஆர்வத்தை இன்றுவரை குறைக்காமல் இருக்கும் உங்களை போன்ற நண்பர்களுக்கு நன்றிகள் பல! ஆங்கிலபுலமை உள்ள உங்களை போன்ற நண்பர்களுக்கு காமிக்ஸ் வேறுவகையில் படிக்க முடியும், ஆனால் எங்களைபோன்றவர்கள்? முடிந்தவரை காமிக்ஸ் பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே எழுதுங்கள். அது எங்களை இன்னும் அதே நம்பிக்கையுடன் வைத்திருக்கும், அந்த நம்பிக்கையே நமது தமிழ்காமிக்ஸின் அடுத்தகட்ட பொற்காலமாக இருக்க ஒரு வாய்ப்பாக அமையுமே? நான் கூறியதில் ஏதேனும் மனவருத்தம் இருப்பின் மன்னியுங்கள் நண்பா!

    ReplyDelete
  85. Dear Illuminati,

    Thanks for your reply.

    நீங்கள் சொல்வது சரிதான் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புக் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தால் புத்தகத்தின் தரம் நன்றாக இருந்திருக்கும். மற்றும் உங்களுக்கு சரியான response lion ஆபீசில் பணிபுரிபவர்கள் தரவில்லை எனில் உங்கள் கண்டனம் சரியானதே.

    நாம் தற்போதைய நிலைமையில் lion நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பது முக்கியம். ஏன் எனில் காமிக்ஸ் விற்பனை தற்போது எப்படி என்பது நான் சொல்லித்தான் தங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. தமிழ் காமிக்ஸ் கம்பனிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. விடா முயற்சியோடு கம்பெனி நடத்தி வருவது lion காமிக்ஸ் மட்டுமே. நாம் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு அளித்தால் மீண்டும் பழைய நிலைமை திரும்ப வாய்ப்புள்ளது. இல்லையெனில் இன்னும் சில வருடங்களில் காமிக்ஸ் என்பதே தமிழில் காணமல் போய்விடும்.

    போன வாரம் கூட நான் பழைய புத்தகங்களை lion ஆபீசிற்கு சென்று வாங்கிய பொழுது அவர்களிடம் பேசினேன். இன்னும் XIII ஜம்போ ஸ்பெஷல் ஸ்டாக் உள்ளது. அதோடு அடுத்த வெளியீட்டிற்கு பணிகள் நடந்து வருகின்றன.

    Let us joint together and help the Comics alive forever.

    Once again Thanks for your response.

    ReplyDelete
  86. நீங்கள் சொன்னதில் ஒரு விஷயம் கவனித்தீர்களா? நீங்கள் சொன்ன தொய்வு எல்லாம் நம் ரசனையின் வளர்ச்சியால் ஏற்பட்ட தொய்வு.

    அடுத்த கட்டத்துக்கு நாம் செல்லும் போது, நமக்கு முந்தய கட்ட விஷயம், சிறு பிள்ளைத்தனமாய் பட்டது. ஆனால், தமிழில் காமிக்ஸ் இப்போதும் அறுபதுகளிலேயே தொங்குகிறதே, இது சிறு பிள்ளைத் தனமாய் எனக்கு தெரிவது தவறா?

    இதற்கு ஆங்கில காமிக்ஸ் படித்தது தான் காரணம் என்று சொல்ல முடியாது.வளர்ந்து வரும் ரசனை முக்கிய காரணம். ஆனால்,டெக்ஸ்,ப்ளுபெர்ரி,modesty போன்ற பல நன்முத்துக்களின் காலம் அது தான் என்பதில் சந்தேகமே இல்லை.ஆனால், mandrake போன்ற கதைகள் இன்னமும் தேவையா?இது எனது கருத்துக்கள் மட்டுமே.

    மேலும்,இந்த ரசனையால் ஏற்படும் தொய்வு எப்போதும் இருக்கும்.ஆனால், விற்பனையில் முன் எப்போதாவது இந்த அளவு தொய்வு உண்டா? இவன் யார் விற்பனை பற்றி பேச என்று கேட்க வேண்டாம். ஒரு ரசிகனாக அதற்கு எனக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன்.

    சமீப காலத்தில் வெளிவந்த(தமிழ் காமிக்சை பொறுத்த வரை இது நகைப்பிற்கிடமான ஒரு வார்த்தை..),modesty கதை ஒன்று சென்னைக்கு அனுப்பப் பட்ட போது,மொத்த பிரதிகளில் தொண்ணூறு சதவிகிதம் திருப்பி அனுப்பப்பட்டது என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்.ஆனால், நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட அனைத்தும் விற்று தீர்ந்தது....அந்த திருப்பி அனுப்ப பட்ட modesty கதைகளின் காமிக்சும் சேர்த்து...இத்தனைக்கும் அங்கே எந்த தள்ளுபடியும் தரப் படவில்லை.இதில் இருந்து நான் தெரிந்து கொண்ட விஷயம்....

    ஈடுபாடு, வியாபார யுக்தி, விளம்பரங்கள் இவை இருந்தால் நிச்சயம் காமிக்ஸ் நன்றாக விற்கும்.ஆனால், நிலை என்ன? ஒரு சாதாரணன் எனக்கு புரியும் விஷயம்,விஜயனுக்கு புரியாதது ஆச்சர்யமே..
    சென்னை புக் ஃபேரில் ஒரு முறையாவது தமிழ் காமிக்ஸ் கடை விரித்து இருக்கிறார்களா?அது எப்பேர்பட்ட ஒரு சந்தர்ப்பம்?
    எனக்கு தெரிந்து,காமிக்ஸின் தற்போதைய பின்னடைவின் முக்கிய காரணம் ஈடுபாடு இன்மை தான்.இல்லை, விஜயன் ஆர்வமாகவே இருக்கிறார். நாம் தான் ஆர்வம் இல்லாது அவர் புத்தகத்தை வாங்குவது இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்?காமிக்ஸ் படிப்பவர் வட்டம் சிறிதே.ஆனால்,எந்த காமிக்ஸ் வந்தாலும் வாங்கும் ஆர்வதோடே அதில் பலர் இருக்கிறார்கள்.ஆனால்,இவர் செய்யும் காரியத்தால்,பலர் வேறு பல கலங்களுக்கு சென்றுவிட்டார்கள்.உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பதே இப்போதைய நிலை.

    சொல்லுங்கள்,இதற்கு காரணமாய் யாரை அல்லது,எதை சொல்லலாம்?விடை எல்லோருக்கும் தெரியும்.

    //ஆங்கிலபுலமை உள்ள உங்களை போன்ற நண்பர்களுக்கு காமிக்ஸ் வேறுவகையில் படிக்க முடியும், ஆனால் எங்களைபோன்றவர்கள்? //

    ஆங்கிலப் புலமை என்னோடு பிறந்து வரவில்லை.ஆற்றை கடக்க ஆற்றில் இறங்க தான் வேண்டும்.ஆங்கிலம் அறிந்து கொள்ள அதை படித்துப் பாருங்கள்.நாள் பட நாள் பட புரியும்.ஆனால்,தமிழே சிறந்தது, ஆங்கிலம் எனக்கு புரியாது என்று சொல்லிக் கொண்டு திரிவது பூனை கண்ணை மூடிக் கொண்டார் போலத் தான்.ஆங்கிலம் என்ன கம்ப சூத்திரமா?

    //முடிந்தவரை காமிக்ஸ் பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே எழுதுங்கள்.//

    இதை நான் ஆட்சேபிக்கிறேன். நல்லதும் கெட்டதும் கலந்ததே எதுவும்.இப்போது லயன் காமிக்ஸை பொறுத்த வரை, நல்லதை விட சுட்டிக் காட்ட வேண்டிய குறைகளே அதிகம்.நல்ல காமிக்சை புகழும் நான், இந்த மாதிரியான சமயத்தில் சுட்டிக்காட்டவும் செய்வேன்.


    நம்பிக்கை மட்டுமே விடிவுகாலத்தை கொடுத்து விடாது நண்பரே! உங்களை விட ஒரு காலத்தில் நம்பிக்கையும், மரியாதையும்,ஆர்வமும் கொண்டு இருந்தவன் நான்.ஆனால் இப்போது மிஞ்சி இருப்பது கசப்பே..
    தமிழ் காமிக்ஸில் முன்னேற்றம் வேண்டுமானால் , பழங்காலத்தின் கனவுகளில் திரிவது அர்த்தமற்றது. உண்மைகளை உரத்து சொல்லி,குறைகளை கண்டறிந்து , மாற்றங்கள் செய்து வியாபாரம் செய்வதே சரியான வழி.நான் எனக்கு உண்மை என்று தெரிந்ததை சொல்கிறேன்.அவ்வளவே...
    ஒரு காமிக்ஸ் ரசிகனாக அது எனது கடமை.இதில் சுய நலமும் உண்டு. காமிக்ஸ் கோலோச்சிய அந்தக் காலம் மறுபடி வருமா ,அதை பார்க்கலாமா என்ற ஒரு நப்பாசை.அது நப்பாசையாய் போவதும் , உண்மை ஆவதும் விஜயன் கையில்...
    ஆனால்,அவர் செய்வாரா?

    ReplyDelete
  87. //மற்றும் உங்களுக்கு சரியான response lion ஆபீசில் பணிபுரிபவர்கள் தரவில்லை எனில் உங்கள் கண்டனம் சரியானதே.//

    நண்பரே,தவறாய் எடுத்துக்கொள்ள வேண்டாம்.எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?நீங்கள் ஒரு தடவை கூட அவர்களை தொடர்பு கொள்ளவில்லையா?உண்மை அது தான் என்றால்,இந்த பதிவும்,என் கோபமும் உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.

    நீங்கள் சிவகாசியில் இருக்கிறீர்கள்,ஒரு எட்டு சென்று பார்த்து விட்டே வரலாம்.ஆனால்,பிற இடங்களில் இருக்கும் ஆட்கள்,குறிப்பாக,வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்து ஒவ்வொரு மாதமும் போன் செய்து,ஒவ்வொரு முறையும் அதே புளித்துப் போன பதிலைக் கேட்க நேரும் ஒரு வாசகரின் மனநிலை எப்படி இருக்கும்?எனது நண்பர் ஒருவருக்கு நேர்ந்த இன்னல் இது.அவர் மனதில் என்ன மாதிரியான உணர்வு இருக்கும்?நம்பிக்கையா?கண்டிப்பாய் இல்லை.


    //நாம் தற்போதைய நிலைமையில் lion நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பது முக்கியம்.//

    கால் ஒடிந்தவனை நடக்க வைக்கலாம்.ஆனால்,கால் இல்லாதவனை?புரியாமல் பேசாதீர்கள்.ஆர்வம் அவர்களுக்கே இல்லாத போது,நாம் செய்யக் கூடியது என்ன? இல்லை,அவர்கள் ஆர்வத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல விழைந்தால், "சாரி,அவர்கள் செயல் அதைக் காட்டவில்லை."

    மேலும், ஜம்போவின் தரம்,விலை குறித்து...

    புத்தகம் 200 ரூபாய் என்றும், இத்தனை பிரதிகள் என்றும்,இப்போது ரிலீஸ் என்றும் சொன்னது விஜயன் தானே.
    இந்த மாதிரி ஒரு அறிவிப்பை வெளியிடும் போது,அதற்கான எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாது,அசட்டு துணிச்சலில் எல்லாம் செய்தது அவர்.நாம் செய்த தவறு ஒன்றே!அவரை நம்பி புக் ஆர்டர் செய்தது தான்.உங்களைப் பற்றி எனக்கு தெரியாது.ஆனால், நான் இனி இது போன்ற அறிவிப்புகள் வந்தால், பெரிதாய் கண்டுகொள்ளப் போவதில்லை.பலரது மனநிலை இப்போது அதுவே.

    நண்பர் ரஃபிக்கின் போஸ்டில் சொன்னது இது...

    It is the habit of lion comics to promise herculean announcements , only to see it shunned by the odds, no preparatory work, poor business skills, no advertisements and of course, delays..


    மீந்து போன பிரதிகள் குறித்து...

    சரி, அதனை விற்க இவர்கள் செய்ய முனைந்தது என்ன? விளம்பரம் செய்தார்களா?சென்னை புத்தக கண்காட்சியில் விற்கப் போகிறார்களா?இல்லை,வேறு என்ன தான் செய்யப் போகிறார்கள்?கொஞ்சம் சொல்ல முடியுமா?பதிப்பகத்தார் வெளியிடும் புத்தகத்தை விற்றுத் தரும் கடமை வாசகனுக்கு இல்லை.அது பதிப்பகத்தார்க்கு உரியது.ஆனாலும்,இணையத்தில் நண்பர்கள் பலர் widget மூலம் விளம்பரம் வைத்தார்கள்.அதனை பிரபலப்படுத்த முனைந்தார்கள்.அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் கூட விஜயனுக்கு இல்லையே?

    என்ன செய்து வருகிறார்கள் பிரகாஷ் பதிப்பகதார்கள்?இவர்களது ஆர்வத்தின் லட்சணம்,இதில் தெரியவில்லை?

    //Let us joint together and help the Comics alive forever.//

    அது நம் கைகளில் இல்லை நண்பரே.புத்தகங்களை வாங்க மட்டுமே நம்மால் முடியும்.இது இரு வழி முயற்சியாய் இருக்க வேண்டும். நம்மால் மட்டும் எதுவும் செய்ய முடியாது.ஒரு மாறுதலுக்கு லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரை ஏதேனும் செய்ய சொல்லுங்களேன்.நடக்கிறதா பார்ப்போம்.

    ReplyDelete
  88. //ஆனால்,தமிழே சிறந்தது, ஆங்கிலம் எனக்கு புரியாது என்று சொல்லிக் கொண்டு திரிவது பூனை கண்ணை மூடிக் கொண்டார் போலத் தான்.ஆங்கிலம் என்ன கம்ப சூத்திரமா?//
    தாய்மொழியில் படிக்கும்போது கிடைக்கும் அந்த நகைச்சுவை உணர்வு, மற்ற பிற விஷயங்கள் பிறமொழியில் கிடைக்காது நண்பரே! என்னதான் ஆங்கிலமொழியில் படித்தாலும் அதை அர்த்தம் கொள்வது நமது தமிழில்தானே? அதை தமிழிலேயே படிக்கும்போது இன்னும் உற்சாகமாகுமே என்றுதான் அப்படி சொன்னேன், அதுவும் ப்ரெஞ்ச் காமிக்ஸ்களை தமிழில் நமக்கே உரிய நகைச்சுவை உரையாடலாக படிக்கும்போது நன்றாக மனதில் பதிகிறது :) எ.டு:லக்கிலூக், கிட்கார்ஸன்,மதியில்லா மந்திரி :) நம்ம டெபுடிகமிஷ்னர்(கவுண்டமணி ஸ்டைல்) இந்த கதாபாத்திரங்களின் நகைச்சுவை ஆங்கிலபுத்தகம் மூலமாக நமக்கு முழுமையாக கிடைக்காது என்பேன்!

    ReplyDelete
  89. //தாய்மொழியில் படிக்கும்போது கிடைக்கும் அந்த நகைச்சுவை உணர்வு, மற்ற பிற விஷயங்கள் பிறமொழியில் கிடைக்காது நண்பரே! //

    நண்பரே,தவறாய் எண்ண வேண்டாம்.உங்களைப் பார்த்து பரிதாப்படுகிறேன்.நீங்கள் பிற மொழிப் புத்தங்கள்,காமிக்ஸ்கள் அதிகம் படித்ததில்லை என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.படித்துப் பாருங்கள். குறிப்பாய் modesty, blueberry, xiii போன்றவைகளை..

    லயன் காமிக்ஸின் தரத்தை குறை கூறுவது என் நோக்கமல்ல.பல கதைகள்,தமிழிலும் அருமையாய் இருந்தன தான்.ஆனால், simply said, தமிழை விட சில விஷயங்கள் ஆங்கிலதில் அசத்தலாய் இருக்கும்.குறிப்பாக,modesty...
    ஆங்கில மூலக் கதையின் நடையில் பாதி கூட தமிழில் எவராலும் கொண்டு வர முடியவில்லை.
    சில விசயங்களை சொல்ல தமிழை விட ஆங்கிலம் சிறந்தது.

    லக்கி கூட சினிபுக்கில் அருமையாய் இருக்கும். ஆனால் என்ன, அதை புரிந்து கொள்ள கொஞ்சம் ஆங்கில அறிவு தேவை அவ்வளவே! அதுவும் ரெண்டு புக் படித்தால் பழகிவிடும்.மேலும்,இவ்வாறு படிக்கும்போது உங்கள் ஆங்கில அறிவும் வளரும்.
    இல்லை,எனக்கு தேடல் வேண்டாம், நான் தமிழ் மட்டுமே படித்துவிட்டு ,பிற மொழிக் கதைகளை விட தமிழே பெஸ்ட் என்று சொல்லுவேன் என்று சொன்னால், be my guest! ஆனால் ஒன்று, நீங்கள் பல விசயங்களை மிஸ் செய்கிறீர்கள் என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.தமிழ் எனக்கும் தாய் மொழி தான்.ஆனால்,தமிழின் மீது எனக்கு இருக்கும் பிரியம் ஒன்றிற்காக மட்டுமே,மொழிபெயர்ப்பு அருமை என்று சொல்லிவிட முடியாது.சில விசயங்களை தமிழில் மொழிபெயர்ப்பில் சொல்லவும் முடியாது.ரெண்டு வார்த்தையில் வரும் ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை விளக்க,நமக்கு ரெண்டு வரி தேவைப்படும்.கொஞ்சம் originality வேண்டும் என்றால் நாம் தமிழை தாண்டி போகத்தான் வேண்டும்.

    ReplyDelete
  90. உங்களுக்கும் மற்றும்

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    ReplyDelete
  91. என்ன செய்ய ? என் சிறு வயது நினைவுகள் என்பதை தவிர்த்து எனக்கு சினிமாவை விட அதிக ஆர்வத்தை தந்த தமிழ் காமிக்ஸ் உலகம் ஒரு இருண்ட , எதிர்கடை இல்லாத நிலையில் இருப்பதால் நான் அடுத்த வெளியீடு வந்தால் வாசிப்பது அது வரை காமிக்ஸை மறந்து இருப்பது என்பது போன்ற ஒரு நிலையில் உள்ளேன், என் தமிழ் நாட்டு நண்பர்கள் அனைவரிடமும் கேட்டாயிட்டு , ஒன்றும் பயன் இல்லை , கொழும்பிற்கு செல்லும் ஒவ்வெரு முறையும் பழைய புத்தக கடைகளில் தான் என் அநேக மணித்துணிகளை களித்திருக்கின்றேன் அதுவும் இந்த காமிக்ச்களுக்காக, இந்த திருட்டு VCD மாதிரி திருட்டு காமிக்ஸ்களையும் யாராவது ஸ்கான் பண்ணி வெளியிடுங்கப்பா , வேற வழியில்லை

    ReplyDelete
    Replies
    1. இப்போது தமிழ் காமிக்ஸ்கள் புதிய வெளியீடுகள் இலங்கையிலும் கிடைக்கின்றன நண்பரே!

      Delete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........