மிட்நைட் அப்லோடர் மறைந்த மர்மம்! எட்டு மாஸ்டருடன் ஒரு கலர்ஃபுல் உற்சாக பேட்டி !


Disclaimer: Those who came here with expectations for a review can skip this post. However, if you want to have some fun, barge in. You will have some laughs at the least.

படம் அல்லது புத்தகம் பற்றிய விமர்சனம் படிக்கலாம் என்று வந்தவர்கள் இந்த போஸ்ட்டை ஸ்கிப் செய்து விடலாம்.







மிட்நைட் அப்லோடர் மறைந்த மர்மம்!!! எட்டு மாஸ்டருடன் ஒரு கலர்ஃபுல் உற்சாக பேட்டி !

  • Shankar Armand சார் வணக்கம், ஒரு ஞாயிற்றுகெழம வழமையா உங்க ஃபேன்ஸ்கூட அரட்டை அடிக்காம முக்காட போட்டுகிட்டு மூலைல உட்கார்ந்து முணுமுணுத்திட்டு இருக்கீங்கன்னு நம்ம காக்கா சொல்லிச்சு அதுதான் ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்.... மொதல்ல ஏதாவது குடிக்க தாங்க... சொம்புக நிறைய வெச்சிருக்கீங்க...
  • Illuminatiblog Tamil வாங்க தம்பி. பார்த்து எம்புட்டு நாளாச்சு? ஏலேய், அந்த பீங்கான நகத்தி வச்சுட்டு தம்பிக்கு ஒரு பாயப் போடுடா.
  • Sakrates Usha Sobiya எல்லாம் காலி சொம்புங்க 
  • Illuminatiblog Tamil ஏலேய் எவம்ல அவன் ஊடால வர்றது? இவன இழுத்துட்டுப் போய் கமெண்ட் எல்லாத்தையும் ஒண்ணு விடாம படிக்க விடுங்கல.
  • Shankar Armand அட நமக்கெதுக்கு பாய், நான் இப்படி ஓரமா இந்த சொம்புகளோடு குந்திகிறேன்... சார் இப்ப மொழிபேர்ப்பு பத்தி நிறைய பேச்சு வருது... நீங்க தமிழ்லேர்ந்து நிறையக் கதைகள பிறமொழிகளிற்கு கொண்டு போனவங்க, அதுபோல பிறமொழிக் கதைகளை தமிழில் எங்கேயோ கொண்டு போனவங்க... மொழிபேர்ப்புன்னா என்ன... உதார் விடும் உலக்கை பசங்களிற்கு உறைக்கிறாப்போல நீங்க சொல்லனும்... சொல்றீங்க....
  • Sakrates Usha Sobiya பாய் பக்கத்துல பள்ளம் எதுக்குங்க?
  • Shankar Armand யார் சார் இவரு.... குறுக்க குறுக்க கேள்வி கேட்காரு... இங்க நீங்க மட்டும்தான் பேசனும்னு இவரிற்கு தெரியாதா.... இவரு என்ன வித்தியாசமா இருக்காரு 
  • Illuminatiblog Tamil முக்காடு போட்டுட்டு முப்பது ரூபா கேக்குறது தான தம்பி மொழிபெயர்ப்பு...
  • Illuminatiblog Tamil அட விடுங்க தம்பி. அப்பப்ப அண்டங்காக்கா எதுனா வந்து அன்னக்காவடி எடுக்கும்.
  • Shankar Armand அது.... லேய் படிச்சிகிடுங்க...அப்புறமா ப்ளாக்கில கில்லிங் லுல்லிங் பதிவ போட்டீங்க,,, பிச்சிப்புடுவேன் நானு... நானு யாரு இரும்பு சொம்புலே... அய்யா நீங்க நல்லது கெட்டது தெரிஞ்சவங்க, நாப்பது வருசமா நாட்டிற்கும் நமக்கும் நல்லது பண்ணிக்கிட்டு இருக்கீங்க... இப்ப திடீர்னு சர்வதேச தரம் எட்டனும்னு துடியா துடிக்கீங்க.... அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க சாரே..
  • Illuminatiblog Tamil அதாவது தம்பி, வெளிநாடு போறப்பல்லாம் அங்கின வெள்ளக் காக்கா பார்க்குறப்ப ஒரே ஆதங்கமா இருக்கும். என்னடா நம்மூர்ல மட்டும் காக்கா கருப்பாவே இருக்குதே. கலர்ல இல்லையேன்னு கவலைப்படுவேன். அங்க முடிவு பண்ணினேன் தம்பி. காக்காவ கலர்ல காட்டாம விட மாட்டேன்னு.
  • Sakrates Usha Sobiya தலை சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் சொல்லி சொல்லி பழக்க தோஷங்க!
    நீங்க
    பேட்டிய கவனிங்க!
  • Illuminatiblog Tamil ஏலேய இவன இழுத்துட்டுப போய் இரும்பு ஜட்டிய மாட்டி விட்டு கொஞ்ச நேரம் மொட்ட மாடில விடுங்கல.
  • Shankar Armand சார் நீங்க தெய்வம் சார்... உங்க கால தொட்டு கும்பிட்டுகிடுறேன்..... அப்புறமா இப்ப சித்த நாளிக்கி மின்னாடி ஒரு பயபுள்ள... உம்ம காமிக்ஸ் பக்க அளவு சரியா இல்ல... கட்டம் சுருங்கி இருக்கு, சித்திரங்க நைய்ஞ்சுபோன பனியன் கணக்கா இழுபட்டு இருக்குன்னு காமிக்ஸ் கொத்தனார் போல உதார் விட்டுகினு இருந்தாரே... அட வீடீயோகூட எடுத்து உங்க விமர்சைய குறைப்பேன்னு வீராப்பா சொல்லிகிட்டு இருந்தாராமே .... அந்தப் பயபுள்ள பத்தி சித்த நாளா பேச்சக் காணோம்... ஆள் இந்த உலகத்திலயே இல்லை என்கிற மாதிரி ஊருக்க பேச்சிருக்கு.. உங்களிற்கு இது பத்தி தெரிஞ்சா நீங்க சொல்லனும்.... மத்தவங்களிற்கும் தெரியனும் இல்ல சாரே....
  • Illuminatiblog Tamil ஆங், அந்த பீசா? ரெண்டு வாரத்துக்கு முன்ன கூட ஒரு கால் வந்தது. அட்டன்ட் பண்ணினா ஒரே அழுகை. நான் கூட புக் படிச்ச பய தான் எவனோ சந்தாவ கேக்க கூப்பிட்டுருக்கானு நினைச்சுகிட்டு கூச்சத்த விட்டு கொரியர் பணத்த குறைச்சுட்டோம் தம்பின்னு சொல்ல, அழுகை படக்குன்னு அதிமாயிருச்சு. 
    அட என்னடா இதுன்னு கேட்டா 'சார், மிட்நைட் அப்லோடர் பேசுறேன் சார். மிட் நைட் மசாலா பாக்க முடியாத பாவி ஆயிட்டேன் சார். என்ன மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார்' னு ஒரே கதறல்.
  • Shankar Armand அச்சச்சோ நெலம அவ்ளோ மோசமா, கதறி விம்மி விம்மி அழுதாரா... அடடா ரொம்பதான் பாதிக்கப்பட்டு இருக்காரு போல... உங்க மொகத்த பாத்தா இன்னும் விஷயம் இருக்க மாதிரி இருக்கு.... ஆமா தம்பி இப்ப எங்க இருக்கார்... என்ன செய்ஞ்சிட்டு இருக்கார்.... சொல்லுங்க சார்
  • Illuminatiblog Tamil எனக்கு அப்ப தான் உடனே இது காமிக்ஸ குச்சி வச்சு அளந்துகிட்டு திரிஞ்ச பீசுல்லனு ஞாபகத்துக்கு வந்தது. என்ன தம்பி ஆச்சுனு கேட்டேன். அதுக்கு அவரு மறுபடியும் கேவிக் கேவி அழ ஆரம்பிச்சுட்டாரு. எழவு, ஒருவேள மொழிபெயர்ப்பு போட்டிக்கு கைக்காசப் போட்டு கொரியர் அனுப்புறப்ப கைநாட்டு போட மறந்துட்டாரோன்னு ஒரு சந்தேகம்.
  • Shankar Armand அடடா ! ஆனாப் பாருங்க உங்கள தகிரியமா கேள்வி கேக்க பயலுக எல்லாருக்கும் இப்படி ஒரு நெலதான் காத்திருக்குன்னு என் இரும்புக்கை அரிக்குது... அப்புறம் தம்பி அழுதுகிட்டே என்ன சார் பேசினார்.... சொல்லுங்க சார்... உங்கள கேள்வி கேட்க எவனா இருந்தாலும் அவன் போன் நம்பர், மெய்ல் ஐடி , ப்ளாக் அட்ரஸ் என்கிட்ட சொல்லுங்க ..... பயபுள்ளைகள கமெண்டு போட்டே கொன்னுருவேன்....
  • Illuminatiblog Tamil அட விடுங்க தம்பி. கேள்வி கேக்குறவன எல்லாம் அப்டியே விட்டுறனும். எதுனா தப்பித் தவறி பதில் போட்டா பேரகன் பிய்யுற வரை பதறாம அடிப்பாணுக. மூவ் போடுங்க, முட்டி போடுங்கன்னு எதுனா உளறிட்டு மூடிகிட்டு போறது தான் நமக்கு நல்லது. அதையும் மீறி எதுனா அடி விழுந்தா நம்ம ப்ளாக் வந்து நாலு கமெண்ட் போட்டுபுட்டு நாலு வருஷ சந்தாவ செக் எடுத்து அனுப்பிடுங்க. சரியாப் போயிரும்.
  • Shankar Armand சரி சார் நீங்க தந்திரத்தில வல்லவரேன்னு எனக்கு தெரியும் சார்... சந்தா தொகையில கழிவு அதே சமயத்தில பக்க எண்ணிக்கையிலும் கழிவு அப்டின்னு சூமூத்தா நகர்த்துவீங்க இல்ல.... யாரும் கண்டுக்க மாட்டாங்க... கண்டாலும் யாசகம் கேட்பது போல கேட்பாங்க.... உரிமையா யாருமே உங்ககிட்ட எதியுமே கேட்கப்பிடாது , லேய் கேட்டுக்குங்க சந்தா கட்டினமா கொஞ்சினமான்னு இருக்கனும்... புர்ச்சி கிர்ச்சி ஆரம்பிச்சீங்க.... மக்கா என் கமெண்டு பவர் என்னான்னு காட்ட வேண்டி இருக்கும்... சார் இப்ப நீங்க அந்த குச்சி பையன் பத்தி சொல்லுங்க...
  • Illuminatiblog Tamil கழிவு என்ன தம்பி கழிவு...
    கலரு போக மொழிபெயர்ப்பே கழிவு தான். ரொம்ப பேசினா கம்பி கருத்துரும்னு சும்மா உல்லுலாயி காட்டுவேன். உடனே கத்திகிட்டு வந்து கவர் பண்ணிக்குவாணுக. பாசக்கார பயலுக.

    ஆங், எங்க விட்டேன்... குச்சி தம்பி. நானு ஏன் தம்பி அழுறீங்கனு கேட்டேன். அதுக்கு அவரு 'சார். உங்க கூட கோச்சுகிட்டது தான் இப்ப கோவணம் கூட இல்லாம கத்தார்ல அலையுறேன்'னு கவலையோட சொன்னாரு.
  • Shankar Armand ச்ச்ச்ச்ச்ச்.... வெரி சேட்.... குச்சி பாய் உங்ககூட அப்டி நடந்திருக்காம இருந்திருந்தா அவர் நிலை இப்படி ஓட்டகங்க கூடி நின்னு கும்மி அடிக்க நிலைக்கு வந்திருக்காது.... கலர், கழிவு எதையுமே நாம கண்டுக்க மாட்டோம்.... அப்டி யாராவது ஏதாவது சொன்னாக்கூட நீங்க இதைப்படிக்காதீங்கன்னு சொல்லி அடிப்போம்... நம்ம அறிவு வளர்ச்சி அப்படி... அது அந்த மக்கான்களிற்கு புரியாது... ஆமா இப்ப குச்சி பாய் கோவணம் இல்லாம சுத்துறார்னு சஸ்பென்ஸ் வெச்சீங்க... மீதியையும் சொல்லுங்க சாரே....
  • Illuminatiblog Tamil நானும் குஜாலாகி ஆனா குரல குறைச்சுகிட்டு 'என்ன தம்பி ஆச்சு? ஒட்டகத்துக்கு உரம் போடப் போனீங்களா'ன்னு பதமாக் கேட்டேன். அவரு விசும்பிகிட்டே ' சார். பறக்குற கம்பளத்த பாக்கலாம்னு பரதேசம் வந்தேன் சார். இப்படி பாவாடை கட்டிக்கிட்டு சுத்துற மாதிரி ஆயிருச்சு சார். உங்க கூட சண்டை போட்டதால தான் எனக்கு இப்டி ஆகிருச்சு. தயவு செய்து என்ன மன்னிசுட்டேன்னு சொல்லுங்க சார். என்ன வேணும்னாலும் சொல்லுங்க சார். செய்வேன் சார் 'னு சொன்னாரு. நானும் படக்குன்னு அயல் நாட்டு சந்தா அஞ்சு அனுப்புங்கனு அசராம சொன்னேன்.
  • Shankar Armand நிறுத்தக்கூடாது சார்... சூப்பரா இல்ல இருக்கு... மன்னிச்சிக்ககிட சொல்லி கேட்டாரா... மன்னிக்கப்படாது சார்.... நீங்க அவர மன்னிக்கப்படது... குச்சிய வெச்சுகிட்டு சைஸ் பெரிசா இல்லன்னு போட்டோ போட்டப்பவே இந்தப் பையன் அலிபாபா ட்ரெஸ்ல அலையுறமாதிரி ஒரு கனாக் கண்டேன் சார்... நம்புங்க சார். என் கை மேல சத்தியமா.... இப்ப என்ன மன்னிப்பு, அழுவ.... நாக்க புடுங்கிற மாதிரி நாலு வார்த்தய கேட்டிருக்கனும் ஆனா நீங்க் சந்தாவா கேட்டு இருக்கீங்க... பின்னீட்டிங்க சாரே... அப்புறம் அப்புறம்....
  • Illuminatiblog Tamil தம்பி, நமக்கு கேள்வியா முக்கியம்? கடுதாசி வந்தாலே கபக்குனு கவ்வி குப்பைல போட்டுருவேன். என்கிட்டே போய் இப்படி பேசிட்டீங்களே? உடனே மன்னிப்புக் கேளுங்க. இல்லாட்டி காக்கா இனிமே கருப்பாத் தான் வரும். அதுவுமில்லாம எங்க பல்லாங்குழி பாய்ஸ் வந்து பல்லேலக்கா ஆடிருவாணுக.
    23 hours ago · Edited · 2
  • Shankar Armand அய்யோ என் தெய்வமே உணர்ச்சி வசப்பட்டு அப்டி சொல்லிட்டேன்... மன்னிச்சிகிடுங்க மன்னிச்சிகிடுங்க.... காக்காவா கருப்பா அனுப்பாதீங்க கலர்லேதான் அனுப்புங்க... என் இரும்புக் கையால என் மூஞ்சிய நானே குத்திக்கிடுதேன்... கோட்டான கோட்டி மன்னிப்பு சாரே.... நீங்க மொழிபேர்ப்பய தூக்கி குப்பைல போடுவீங்க அப்டி என்னையும் செய்ஞ்சிடாதீங்க... இத விட்டா நான் எங்க போய் முட்டிக்கிறது.... உங்கள விட்டா எனக்கு படிக்க தரவன் எவன் இருக்கான்... சார் மன்னிச்சிடுங்க .... இனி இப்டி பேஸ் மாட்டேன்... அந்த குச்சிப்பய அரேபியாவில அடங்கிப்போன பரிதாபக் கதைய சொல்லுங்க சாரே....
    23 hours ago · Edited · 2
  • Illuminatiblog Tamil ஆங், லெட் அஸ் மூவு ஆனு. அதுக்கு அவரு கதறிகிட்டு ' அதெல்லாம் போதாது சார். இந்த பாவிக்கு அதெல்லாம் போதாது சார். வேணும்னா எதுனா ஸ்கேன் வேலை, மொழிபெயர்ப்பு வேலை இருந்தா சொல்லுங்க சார். செய்றேன் சார். வேணும்னா அதுக்கும் சேர்த்து கூட சந்தாக் காசு அனுப்புறேன் சார்' னு சொன்னாரு. 

    எனக்கு குசியாயிருச்சு. 'ஜில் ஜோர்டான்னு ஒரு கத இருக்குது தம்பி. ஆனா அது பிரெஞ்சு கதை. மொழி தெரியாம முக்குறது தெரியாம நாங்க நடிக்கிற மாதிரி உங்களால நடிக்க முடியுமா'னு கேட்டேன். அதுக்கு அவரு ' அட இதென்னங்க இப்டி சொல்லிட்டீங்க? நீங்க இங்கிலீஷ்ல இருந்து கூட இடையிடையே எதையாவது எதுக மோன மொக்கையா சொருகிட்டு தான தரீங்க. உங்க ஆசி இருந்தா போதும். நான் பிழைச்சுப்பேன்'னு சொன்னாரு. 
    இருந்தாலும் எனக்கு சந்தேகம் போவல. 'ஏந்தம்பி, மொழிபெயர்ப்பு சரியில்லன்னு அடிச்சா என்ன செய்வீங்க'னு கேட்டேன். அதுக்கு அவரு ' அட விடுங்க சார். இங்க மொழி புரியாம அடி வாங்குற மாதிரி அங்க மொழி தெரியாம அடி வாங்கிட்டு போறேன்' னு படக்குன்னு சொன்னாரு. ஆனா எனக்கு அந்த இன்வால்வ்மென்ட் புடிச்சிருந்துச்சு.
  • Shankar Armand சூப்பரோ சூப்பர் சார்... உப்ப திங்கவன் தண்ணி குடிப்பான், உங்கிட்ட வெச்சுகிட்டவன் நெட்டிலாக்காட்டில் நெக்கி துடிப்பான்கிற தர்மத்திற்கு இது ஒரு சாம்பிள் சாரே... அப்புறமா ஜில் ஜோர்டான் கதைய குச்சி பாய்கிட்ட மொழிபேர்க்க தந்தீங்களா.... எட்டு பக்க பரீட்சை... டைட்டில் வெய்க்கும் போட்டி, நீங்களும் ஆகலாம் குப்பைக்கூடை மொழிபெயர்ப்பாளர்னு ரீதியில போட்டி அதாவது அந்தப் பையன் தெறமைய டெஸ்ட் பண்ணீங்களா... சொல்லுங்க சாரே...
  • Illuminatiblog Tamil அட பதறாதீங்க தம்பி. எனக்கு உடனே பெருமையா போய்டுச்சு. நம்ம நாப்பது வருஷ பாரம்பரியமே இவர மாதிரி ஆளுங்க கிட்ட தான ஊசலாடிகிட்டு இருக்குது. இவருக்கு போய் போட்டில கலந்துக்க சொல்றது பொறுப்பான காரியமா இருக்காதுன்னு ரெண்டே ரெண்டு பொட்டி மட்டும் கேட்டேன்.
  • Shankar Armand நாப்பது வருச பராம்பரியம் ஒரு ஆலமர விழுது சார்.... அத இந்த குச்சி பாய் ரேஞ்சில அறிவ மொட்டையடிச்சிகிட்டு சுத்துற பயபுள்ளைக பாய்ஞ்சு பிடிச்சு தொங்கி ஆட்டத்தான் செய்வானுக... அதனான ஆலமரம் சரிஞ்சிடுமா சார்... அய்யோ என் முகரய என் இரும்புக்கையாலயே குத்திக்கிறேன் சார்... சார் இப்ப நீங்க அந்த ஓட்டக சீமான்கிட்ட ரெண்டு பொட்டி கேட்டீங்கன்னு சொன்னீங்க... அது என்ன பொட்டின்னு எங்ககிட்ட சொல்வீங்களா... ப்ளீஸ் சார்....
  • Illuminatiblog Tamil பொட்டி பத்தி சொல்லனும்னா போட்டி வைப்பேன். கொரியர் அனுப்பனும். வெள்ளிகிழம வெள்ளாமைக்கு முன்ன அனுப்பணும். நீங்க ரெடியா? பேசாம கதைய கேளுங்க.

    அவரும் சரின்னு ஒத்துகிட்டாரு. நானும் பத்து ரூவா கழிவு கொடுக்குறேன்னு சொன்னதும் அவருக்கும் குஜாலாயிருச்சு. சிவகாசி சின்னாத்தா வாழ்க, பங்களூரு பம்மாத்தா வாழ்கனு குலவை போட ஆரம்பிச்சுட்டாரு.
    23 hours ago · Edited · 2
  • Shankar Armand ஹைய் போட்டியா போட்டியா.... சார் நானும் கலந்துக்கிறேன் சார்.... என் பேர் வரனும் சார்... நான் ஒரு வெளம்பரம் சார்... உங்க கையால என்பேர நீங்க எழுதினாலே எனக்கு உச்சில துருவக்கரடி கிஸ்ஸு கொடுத்த மாதிரியாயிடும் சாரே... நீங்க கதைய நிறுத்தாதீங்க... ம் சொல்லுங்க..
  • Illuminatiblog Tamil என்ன தம்பி போட்டின்னா அவ்ளோ சுலபமா போயிருச்சா? 
    மொழிபெயர்ப்புக்கு எம்புட்டு கஷ்டப்படுறோம் தெரியுமா? அத விடுங்க. குப்ப அள்ள எவ்ளோ கஷ்டப்படுறோம் தெரியுமா? உங்க பேர் வரணும்னா சும்மா இல்ல. குரங்கு மாதிரி குதிக்கனும், குரளிவித்தை எல்லாம் காட்டணும், கோவிந்தா கோவிந்தானு கோசம் போடணும். அதுவும் குசியோட போடணும். அதுக்கு அப்புறம் குச்சி மேல நடக்கணும். அதுக்கும் மேல கரண்டு கம்பில ஒத்தைக் கால்ல உக்காந்து காட்டணும். அப்பயும் பேரு வருமான்னு சொல்ல முடியாது. எம்பேரோட சேர்த்து வரணும்னா என்ன அவ்ளோ எளப்பமா போச்சா?
    22 hours ago · Edited · 3
  • Illuminatiblog Tamil உங்களுக்கு விளம்பரம் வேணும்னா உச்சி வெயில்ல ஊருக்குள்ள இரும்பு ஜட்டி போட்டுட்டு ஓடுங்க. நமக்கு விளம்பரம் கொடுத்த மாதிரியும் ஆச்சு, ஊருல யாருடா இந்த ஒண்ணாங்கிளாஸுப் பயனு பேர் எடுத்த மாதிரியும் ஆச்சு. அதவிட்டுட்டு கப்பித்தனமா காமிக்ஸ்ல தான் பேர் வரணும்னு அடம் பிடிச்சுகிட்டு....
    22 hours ago · Edited · 1
  • Shankar Armand சாரே நான் என்ன செய்ஞ்சாலும் அதில என்னப் பத்திய வெளம்பரத்த பதுக்கி வெச்சுத்தான் செய்வேன் சாரே... மாத்தி செய்யவே முடியல சாரே... என் பேரு வரும்னு நம்பிக்கையோடு இருக்கப்ப... காலர ஃபுல்லா தூக்கி விட்டுட்டு உள்ளுக்க ஒரு வெளம்பர சிரிப்பும் வெளியே ஒரு அடக்கமான போர்வையும் செட் பண்ணிட்டு இருக்கையில போட்டிங்களே சார் நீங்க ஒரு குண்டு.... திணறிப் போய்ட்டேன் சாரே... ஆனா அனுகுண்டு வெடிச்சாலும் அட்ஜெஸ்டு பண்ணிகிட்டு வர்றா மாதிரி வந்து கண்ணியமா பேர சொல்லுங்க சாரேன்னு கேட்டு எவ்ளோ கதறினேன்... என் இரும்புக்கை எப்டி துடிச்சுது தெரியுமா ஆனா சார் இதயும் கடந்து நான் போயிருவேன்... எனக்கு தேவை சுயவிளம்பரம் என்கிறதில நான் உங்க பராம்பரியம் போல ஸ்ட்ராங்கா இருக்கேன்... எவன் என்ன செய்தாலும் நான் வெளம்பரம் செய்றத நிறுத்த மாட்டேன்.... இப்ப என்ன நான் வெளம்பரம் செய்யனும் செய்றேன்... இரும்பு ஜட்டி என்ன இல்லாமலே ஓடுவேன்.... ஆனா என் ஃபோட்டோ பேர் வரணும் டீல்னா... செய்திடுறேன் சார்.... இப்ப நீங்க குச்சி பாய் கதைய சொல்லுங்க.... இப்டி சொல்றது போல சொன்னா யாரும் எதிரியாக மாட்டான் சாரே... நமக்கும் லைஃபு ஜாலியாக இருக்கும்.... ஹைய்யா வெளம்பரம் வெளம்பரம்.... சார் கமிங் சூனில என் போட்டோ போடுவீங்களா... என் இரும்புக்கைய என் மூஞ்சில வெச்சுக்கிறது போல போஸ்.... கதைய சொல்லுங்க... நான் எனக்கு வெளம்பரம் செய்வதில குறியா இருக்கேன் இல்ல...
  • Illuminatiblog Tamil அந்தக் கால் கொஞ்சம் அரிக்குது. அப்படியே கொஞ்சம் சொறிஞ்சு விடுங்க பாப்போம். 

    ஆங், எங்ஙன விட்டேன்? பொட்டி. அவருக்கு நானு பிடிஎப்பு பதறாம அனுப்புவேன்னும் அவரு கொரியர்ல மூணு நாளுக்குள்ள முக்கி முனகியாவது அனுப்பிரனும்னு கண்டிசன் சொன்னேன். பயபுள்ள பயப்படாம ஒத்துகிச்சு.
  • Shankar Armand சார் நான் உங்க வீட்டு கால்மிதி சார்... என் மேல தூக்கி உங்க காலப் போடுங்க பதமா சொரிஞ்சு விடுதேன்... குச்சிப் பாய்க்கு பயப்படாம ஒத்துக்கிற அளவிற்கு தகிரியம் வந்திடுச்சா... ஒட்டகங்க சேர்க்கை சரியில்ல சாரே.... அப்புறம் என்ன சார் ஆச்சு .... ஏன் சார் இப்டி சச்பென்ஸ் வெச்சு என்ன அதிகமா வெளம்பரம் செய்ய வைக்கீக.... நீங்க இல்லாட்டி நானில்லன்னு ஒங்களிற்கு தெரியாதா சாரே.... எவனாவது எதையாவது எப்பவாவது சொல்வான் அத நானே சொன்ன மாதிரி உங்ககிட்ட சொல்லியே விளம்பரம் தேடிக்குவேன் சாரே... நீங்க கதைய சொல்லுங்க சாரே....
  • Illuminatiblog Tamil அட விடுங்க தம்பி. அடுத்தவன் சொல்றத அமுக்கி அல்பத்தனமா அலும்பு பண்ணினா தான தம்பி சீக்கிரம் பேர் எடுக்க முடியும். நீங்க பண்ணினது சரி தான். செண்டிமெண்ட்டா சண்டை போடாம பின்ன எப்படி தம்பி பேர் எடுக்குறது? முதுகுக்கு பின்ன நின்னிகிட்டு மூச்சு முட்ட கத்தலாம். கேட்டா கம்ப்யூட்டர் இல்லன்னு காமடி பண்ணலாம். சரி அத விடுங்க. நாலு நாள் கழிச்சு மெதுவா பிடிஎப்ப பூப் போல அனுப்பினேன் தம்பி. கொரியர்ல ரெண்டே நாள்ல திரும்பி வந்துருச்சு. எனக்குன்னா ஒரே ஆச்சர்யம். என்னடா இது நம்மள மாதிரியே கூகிள பார்த்து கொதறி இருப்பாரோனு. பழக்க தொசத்துல படக்குன்னு எடுத்து பக்கத்துல இருக்குற சாக்கடைல போடப் பார்த்தேன். அப்பால கைய கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு பிரிச்சு பார்த்தேன்.
  • Shankar Armand சார்.. முதுகு பின்னாடி நின்னு ஹீரோ போல வாய்ஸ் தர்றவர் ஒருவர நானும் வெய்ச்சிருக்கேன் ஆனா அவர் வாய்ஸ் எப்பவும் என் வெளம்பரத்திற்குதான் யூஸ் ஆவனும்கிறதில நான் தவறமாட்டேன்... இது சகஜம் சார்... இத்த விடுங்க.... குச்சி பையன் குதறி அனுப்பின டெக்ஸ்டை என்ன சார் செய்ஞ்சீங்க... அவர் அனுப்பினா குப்பைல போட மாட்டீங்க அப்ப நான் அனுப்பினா போடுவீங்களா... நியாயமில்ல ... என் பேர் வர்ற மாதிரி உடனே ஒரு போட்டி வைங்க.... அச்சச்சோ என் இரும்புக்கையால என் மூஞ்சிய நானே குத்திக்கிறேன்... மன்னிச்சிடுங்க சாரே... கொஞ்சம் டென்ஷன் ஆவிட்டேன்.... நீங்க கதைய சொல்லுங்க....
  • Illuminatiblog Tamil எப்படி தம்பி உங்க பேர போட முடியும்? நீங்க என்ன தண்டவாளத்துக்கு நடுவால உக்காந்துகிட்டு நடுநிலைனு 
    நாட்டியம் ஆடுனீங்களா? இல்ல சோக்கேசுக்குள்ள உக்காந்துகிட்டு கேசு போடுவேன்னு சொன்னீங்களா? எதுக்கு தம்பி உங்க பேரப் போடணும் நானு? என்ன செஞ்சீங்க நீங்க? ஆரம்பத்துல அஞ்சு பக்கத்துக்கு அம்பது லிங்க் கொடுத்தீங்க. அதுக்கு பதிலா வாங்கின அஞ்சு சந்தாவுக்கும் அதுக்கும் சரியாப் போச்சு.
  • Shankar Armand சாரே இப்டி பப்ளிக்கில பட்னு போட்டு உடைக்கீக ஆனாலும் இது எனக்கு வெளம்பரம்கிறாதாலே ஜாலியா ஏத்துகிடுதேன்... சார் என்ன சார் பெரிய நடுநிலை... உசிரோட பிணமா இருந்தா அது நடுநிலை... உண்மைய சொல்லயில நடுநிலையே இல்ல... ஆனா செய்ய முடியுமா, வெளம்பரம் கிடைக்குமா... ஒரு பய கண்டுக்குவானா..... அங்கயும் இங்கயும் தலையக் காட்டி கண்ணியமா காட்டிகிட்டா நீங்க ஒரு நாயகன் ஆயிடலாம் சார்... இப்ப என்ன சார் புதுசா சந்தா கட்டுறேன்... சின்னதா ஒரு வெளம்பரம் செய்ஞ்சுக்கிறேன்... அதுக்கு இது சரியா இருக்கும்.... ஆனா இப்ப நீங்க குச்சி பையன் கதைய சொல்லுங்க.... உங்க வழக்கம்போலவே சொல்ல வேண்டியதை விட்டுட்டு காத்தோடா குச்சி சுத்திகிட்டு இருக்கீங்க சாரே.... குச்சி பாய் குதறிய டெக்ஸ்ட் என்னாச்சு எங்கிறது என் வழியா உலகிற்கு தெரியனும் அதனால எனக்கு நிறைய விளம்பரம் வேணும் .... ஸோ லெட்ஸ் மூவ் ஆன் சார்...
  • Illuminatiblog Tamil யோவ், அப்படித்தான்யா குச்சி சுத்துவேன். புக்ல போட்டா மட்டும் பொத்திகிட்டு படிக்குறீங்க, இப்ப மட்டும் எதுக்குய்யா கதறுறீங்க? ரொம்ப பேசினா குலவை பாய்ஸ கூப்பிட்டு குரவளைய கடிக்க சொல்லிருவேன்.
  • Shankar Armand சார் வேணாம் சார் , அவனுக ரொம்ப பேட் பாய்ஸ் சார்... தினுசு தினுசா பேர்ல வந்து திகைச்சு நிக்க அடிப்பானுக கண்டுக்காம கடந்து போங்கன்னு ஆளாளிற்கு அட்வைஸ் சொல்ல வைப்பானுக ... அவனுகளால எனக்கு பேட் பப்ளிசிட்டி ஆமா... ஏதாவது தப்பா சொல்லி இருந்தா அதுக்கும் எக்ஸ்ட்ராவா சந்தா கட்டிக்கிடுதேன்... நீங்க கதைய சொல்லுங்க சார்....உங்ககிட்ட இருந்து ஒரு பதில் வேணுமின்னா உலகத்த சுத்தி வரணும் போல....
  • Illuminatiblog Tamil சுத்தி சுத்தி அடி வாங்கிறதுக்கு நீங்க உலகத்த சுத்தி வர்றது பெட்டர் தம்பி. குலவை கொடுக்கீங்களா இல்ல குரலை உசத்தவா?
  • Shankar Armand லுல்லுலுலுல்ல்லூஉல்ல்லூ லுல்லூல்லூஉ.... குலவை போதுமா... சாரே அனியாயம் பண்ணாதீக ... கதைய சொல்லுங்க... இழுத்து அடிக்கீகளே... நியாயமா இது...
  • Illuminatiblog Tamil யோவ், என்னய்யா குலவை இது? நாப்பது வருஷ பாரம்பரியத்தயே அசிங்கப் படுத்துற மாதிரி? குலவை தான் வரல. எதுனா பழைய பல்ப்பம், ஜாமெட்ரி பாக்ஸு, சாக்லேட்டு, கவரு, ஊறுகா இருக்குதா? என்னது இல்லையா? என்னதுக்குய்யா ஆவ நீ? சரி, நான் சொல்றத அப்டியே திருப்பி சொல்லுங்க பாப்போம். எட்டு மாஸ்டர் வாழ்க. எட்டாத சிகரம் வாழ்க. ஏழைகளின் ஏகாதிபதி வாழ்க. ஏர் ஜெட் வாங்கப்போகும் ஏழைப் பங்காளன் வாழ்க.
  • Shankar Armand இப்ப பாருங்க என் தெறமைய சாரே..... எட்டு மாஸ்டர் வாழ்க. எட்டாத சிகரம் வாழ்க. ஏழைகளின் ஏகாதிபதி வாழ்க. ஏர் ஜெட் வாங்கப்போகும் ஏழைப் பங்காளன் வாழ்க. வாழ்க வாழ்க வாழ்க....கொஞ்சம் தள்ளிக்கிடுங்க... கீழ விழுந்து தவழ்ந்து புரண்டு உருண்டு கிட்டே கூவுறேன்... எட்டு மாஸ்டர் வாழ்க்க... எள்ளுருண்டை மாஸ்டர் வாழ்க... அறிவுசார் இயக்க ஆலமரம் வாழ்க வாழ்க.... சார் கதைய சொல்லுங்க சார்... வேணுமின்னா கால்ல விழுந்து நம்ம பாய்ஸ சந்தா கட்ட வைக்கேன் கதைய சொல்லுங்க சார்... குச்சி பாய் மிஸ்டரி நீங்க சொன்னாதான் தெரியும்... சொல்லுங்க சார்....
  • Illuminatiblog Tamil யோவ், என்னய்யா நக்கல் அடிக்கியா? அறிவுசார் இயக்கமா? அதெல்லாம் விக்குமாயா? அதுக்கு நான் எங்ஙன போய் ஆள் தேடுவேன்? நீ தேடிக் கொடுப்பியா? புக்குன்னா புரட்டிப் பார்க்கணும். படிச்சுப் பார்க்கக்கூடாது. அடிப்படையே தெரியலையே உனக்கு? உன்னையெல்லாம் யாருய்யா உள்ளார விட்டது? ஏலேய் அந்த இரும்பு ஜட்டிய எடுத்துட்டு வாங்கல.
  • Illuminatiblog Tamil எட்டாங்கிளாசு பாட்டு புக்கு மாதிரி எதுனா எதுக மோனையா எடுத்து விட்டா தான்யா இங்கன விக்கும். அது தான்யா என் குலவை கண்மணிகளுக்கு புரியும். என்ன தைரியம் இருந்தா அவனுகள நீ யோசிச்சு பார்த்து படிக்க சொல்லுவ? ஏலேய், இரும்பு ஜட்டியோட சேர்த்து நாலு நள்ளி எரும்பையும் எடுத்துட்டு வாங்கல.
  • Shankar Armand அய்யயோ நக்கல் இல்ல சார்... நேத்துதான் ஒரு மொக்கபயகூட கட்டிப்பிடிச்சி உருண்டுகிட்டு வந்தேன்.... அறிவுசார் இயக்க அனாதைப்பயல என் கமெண்டாலே கதற வெச்சிருக்கேன் சார்... அத நீங்க தப்பா புரிஞ்சுகிடாதீங்க சார்... சார் நான் புக்க வாங்கினா மேய்வேன்... அப்புறம் என்ன சார்... நான் ஒரு உயிர் வாசகனிற்கு சாம்பிள் சார்.... ஏற்கனவே கைல இரும்புக்கை .... இப்ப இரும்பு ஜட்டியா.... மொத்தமா ஆர்ச்சியா என்ன மாத்தாமா அனுப்ப மாட்டீங்க போல... ஆர்ச்சி பாடிக்குள்ள ஆலங்குடி ஆண்ட்ஸ் நு என்ன வெச்சு கதைய ஆக்கிடுவீங்க போல... குச்சி பாய் கதைய சொல்லுங்க சாரே....
  • Illuminatiblog Tamil அதுவும் கரக்டு தான். உம் மூஞ்சில ஒரு முகமூடிய போட்டுட்டு மும்பை காமிக் கான்ல நிக்க வச்சா காமிக்சும் விக்கும், காக்காவும் கூடும். இது எப்படி எனக்கு தோணாம போச்சு?
  • Shankar Armand ஹை ஜாலி... சார் இதில எனக்கும் வெளம்பரம் கிடைக்கும்.... ச்சும்மா அள்ளிக்கும்... ஆர்ச்சியாகிய அண்ணல்... இரும்புடல் இளவல்னு பசங்க கட்டிப் பிடிச்சு அடிச்சு என்ன தூக்கி வெச்சிக்கிடுவாங்க... இதுக்கு எதுனா சந்தா கட்டனுமா... கழிவு தருவீங்களா.... ஆனா பாருங்க இந்த குச்சி பாய் கதையத்தான் சொல்ல மாட்டேங்குறீங்க
  • Illuminatiblog Tamil அட அது கிடக்குது தம்பி. நாலு நாளும் நாக்குல தண்ணி கூட படாம நிக்கணும். முடியுமா உங்களால? ச்சே என்ன கேள்வி இது? நிக்கல, அப்புறம் குலவை பாய்ஸ் தான். குரவளை தான்.
  • Shankar Armand எனக்கு வெளம்பரம் கிடைக்குமின்னா தண்ணி என்ன வெண்ணி என்ன எதுவுமே படாம நிப்பேன் சார்... வெளம்பரம்தான் சார் எனக்கு முக்கியம்... வெளம்பரம் என்ன விட முக்கியம்....சார் என்ன சொன்னாலும் வலிக்காம சொன்னா அது நல்லா இருக்கும்... இப்ப எறும்பு என் ஜட்டிக்க இருந்து கடிக்கப்ப வலிக்காம கடிக்கிறா மாதிரி... குரவளைய பாய்ஞ்சு கடிக்கானுக வலிக்குது சார்.... லேய் வலிக்காம அடிங்கடான்னா ... ஓ இது ஒனக்கு வலிக்குதாடான்னு கேட்டு இப்ப பார்ரா வலிக்கிற மாதிரி அடிக்கோமுன்னு அடிக்காங்க சார்... நீங்க இனி குச்சி பாய் கதைய சொல்ல போறதில்ல போல இருக்கே சார்... சார் உங்கள நம்பி வெளம்பரம் கிடைக்கும்னு வந்தேன் என்ன அம்போன்னு விட்டுடாதீங்க சார்..... நான் பாவம் சார்... சந்தா கட்டி இருக்கேன் சார்...
  • Illuminatiblog Tamil சந்தா கட்டினா போதாது தம்பி. சரியா குலவை கூட போடத் தெரியல. உங்க கிட்ட என்னத்த பேசிகிட்டு? ப்ளாக்லேயே எதுத்து கமெண்ட் போட்டா சுருக்குப் பைல போட்டு எச்சி துப்பி அழிச்சுருவோம். இங்கன மட்டும் என்ன முணுமுணுப்பு? 

    சரி சரி. நானு உடனே சல்லிசா கொஞ்சம் சப்ப காமி
    க்ஸ் வாங்க பிரான்ஸு போறேன். சட்டுபுட்டுன்னு இடத்த காலி பண்ணிட்டு போங்க. அப்படியே அந்த கைல கேமிரா எடுத்துட்டு சுத்துமே அந்த கைபபுள்ள பீசு, அதை நாளைக்கு வர சொல்லுங்க. 

    என்னது பிரெஞ்சு தெரியாம எப்படி பிரான்ஸ் போவனா? தம்பி, உடனே எழுந்திருச்சு ஓடிருங்க. ஒடம்புக்கு நல்லது.. இல்லாட்டி...

    ஏலேய், அந்த வெள்ளைக் காக்காவ இங்க கொண்டு வால. அப்படியே...
    21 hours ago · Edited · 1
  • Shankar Armand நான் போக மாட்டேன் நானும் பிரான்ஸ் வர்றேன் அங்க இரும்பு ஜட்டியோட நிக்கேன் செமையா பப்ளிசிட்டி கிடைக்கும் நான் போவ் மாட்டேன்... என்னயும் கூட்டிகிட்டு போங்க... அய்யோ என்ன தள்ளாதீங்க... அய்யீ அய்யீ ஏண்டா என்ன அடிக்கீங்க .... வெளம்பரம் கிடைக்க மாதிரி அடிங்க...அடேய் வலிக்காம அடிங்கடா....அய்யீ என்ன வெளில தூக்கிப் போட்டாரே...ஆ அம்மா.... அட நீ யாருப்பா ,,, இங்க என்ன பண்ணுறே.... ஹெஹெஹெ...உன்னயும் தூக்கி போட்டாரா....ஹெஹெஹெ வாழ்க்கை ஒரு வட்டம்டா... வட்டம்னா அங்க உள்ள போனா ஒரு நா இங்கின வரனும் தொர.... ஹெஹெஹெ.....ஹெஹெஹெ
  • Illuminatiblog Tamil அஞ்சு மாசம் கழித்து பிரான்ஸ் போகும் ஏர் ஜெட்டில்...

    அன்புள்ள மிட்நைட் அப்புக்கு,

    ஆப்பு அங்கிள் எழுதிக் கொள்வது. சந்தா சந்தா அறிய அவா. 


    சுபயோக சுபதினத்தில் சப்ப காமிக்ஸ் வாங்க சர்பத் குடித்துக் கொண்டே போகும் ஒரு தருணத்திலே சங்கொலி கேட்ட சர்ப்பம் போல கரிய மேகங்களால் கர்ப்பம் தரித்த வானத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வான்வெளி வண்டியில் இருந்து வரையும் மடல். 

    தாங்கள் அனுப்பிய சந்தா நேற்றோடு முடிந்தது. மேற்கொண்டு நாலு சந்தா அனுப்பினால் இனி ரெண்டு மாதத்திற்கு சரியாக வரும் என்று பேரன்போடு பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஜில் ஜோர்டான் கதை பெரிய அளவில் ஹிட் ஆகிவிட்டது. அதற்கான சந்தா தொகையையும் சேர்த்து அனுப்ப நினைவுறுத்த இங்கே நான் கடமைப்பட்டுள்ளேன். 

    அறிவுசார் அறிவிலிகள் கழகம் என்ற புதிய குழுமம் ஒன்றை நிறுவி பேஸ்புக்கை நிரவி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்கு எத்தனையோ அன்பர்கள் ஆறு சந்தா கொடுக்க ரெடியாக இருந்தாலும் தாங்களே வந்து இந்த ஆதி காமிக்ஸ் க்ரூப்பை அச்சில் வராத வார்த்தைகளில் ஏச வேண்டுகிறேன். 

    மஞ்சு விரட்டு பார்த்துக் கொண்டிருக்கும் மாமனிதர்களிடம் மல்டி டாஸ்கிங் பற்றிய ஒரு கட்டுரையையும் படித்துக் காட்ட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான சந்தா விபரங்கள் விரைவில்.

    தங்கள் பதில் எதுவாக இருந்தாலும் அஞ்சே நிமிஷத்தில் கொரியரில் உடனே கிடைக்கும் வண்ணம் அனுப்பவும். அவ்வாறு செய்தால் உங்கள் பெயர் எங்க காமிக்ஸ் வரலாற்றில் வெள்ளைத் தாளில் வெண்ணையை வைத்து பதிவு செய்யப்படும். 

    ஒட்டகத்துக்கு ஒடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். மனசு மங்காத்தா ஆடுகிறது. மனிதனின் பாதையில் பணி எனும் பார்சல் சேராத போது அவனை ஏற்றிச் சென்ற எளிய வாகனத்தை கேட்டதாக சொல்லுங்கள். மனசு சரியில்லை எனில் பாஷையின் புலவராம் பாகவதரின் அமர காவியமான சில்லறை பொதி படத்தை மறுபடி மறுபடி பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். வருங்காலத்தில் வாலிபர்களை நம் சந்தா குடும்பத்தில் குலவை போட வைக்கும் வலிமை வாய்ந்த வசிய எழுத்துக்கள் உங்களுக்கு வாய்க்கும். ஜெய விஜயீ பவ. வெற்றி வேல் வீர வேல்.

    தங்கள் அன்புள்ள,

    சிவகாசி எட்டு மாஸ்டர், 
    ஆதி காமிக்ஸ் ஆபத்தாந்தவன்,
    RTO அருகில்,
    ஆண்டியசந்தாபபுரம்,
    சோக்கு டிஸ்ட்ரிக்ட்,
    சொம்பியா.
    20 hours ago · Edited · 3

   Posted on: Feb 24.

Comments

  1. Shankar's post on Gil Jordan....

    http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/02/1.html

    http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/02/2.html

    http://www.kanuvukalinkathalan.blogspot.com/2013/02/3.html

    ReplyDelete
  2. எல்லாவற்றையும் கடந்து போகலாம்... ஆனால் கறையோ அல்லது காவியமோ வரலாற்றில் பேசப்படும் நிலையில் கடந்தபுள்ளிக்கு பொறுப்பாளிகள் மீண்டும் அங்கு இருக்கவே செய்வார்கள்....

    இப்படிக்கு

    லகாமுக அறிவுசார் இயக்கம் :)

    ReplyDelete
  3. இது ஒரு அறிவுசார் அட்ராசிடி என்பதை ஆதி காமிக்ஸ் அன்பர்களுக்கு தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  4. உங்களிற்கு வேற வேலையே இல்லீயா.... தமிழ்ல காமிக்ஸ் வர்றது உங்களிற்கு பிடிக்கலியா... பளாபளா தாளு.... பலபல கலரு .... காமிக்ஸ் சூப்பரா இருக்கு... படிச்சிட்டு ஜாலியா சந்தா கட்டுங்க... ஆங் :)

    ReplyDelete
    Replies
    1. தாளுக்கும் கலருக்கும் தான் புக்குன்னா பிட்டுக் கத போட வேண்டியது தானனு எசகு பிசகா தோணுது அங்கிள். அபிராமி! அபிராமி! கன்னத்துல போட்டுக்கிட்டு உடனே கொரியர் சார்ஜ் அனுப்பி வைக்கிறேன் அங்கிள். ஆதி காமிக்ஸ் வட்டம் அன்போடு வரவேற்குமா அங்கிள்?

      Delete
  5. i like to create a post like this in my blog because it is new for me! i like it!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........