The Chimpanzee complex -கனவுகள்,ஏக்கங்கள்,இழப்புகள்…


நெடுநாட்கள் கழித்து ஒரு காமிக்ஸ் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே!அடுத்ததும் காமிக்ஸ் பதிவே என்ற நற்செய்தியோடு(?!) பதிவிற்குள் செல்வோம்.
======================================================================

 The Chimpanzee Complex v01p003
2035....
இந்தியப் பெருங்கடலில் அமைதியாய் தன் வழியே சென்று கொண்டிருக்கும் ஒரு யு.எஸ் போர்க் கப்பலுக்கு வருகிறது ஒரு செய்தி.அவர்களின் பாதைக்கு அருகே விண்ணில் இருந்து விழ இருக்கும் ஏதோ ஒரு மர்மப் பொருளை தேடிச் சென்று அது என்னவென்று காணும் பணி தான் அது. தேடிச் செல்வது ஒரு ஏவுகனையாக இருக்கக் கூடாது என்று மனதில் பிரார்த்தனை செய்தவாறே  நெஞ்சில் கிலியுடன் செல்கிறார்கள் கப்பல் மாலுமிகள். சுற்றிலும் சலனமே இல்லாத கடல் சூழ்ந்து இருக்க, சலனமான மனதோடு முகம் தெரியாத ஆபத்தை நோக்கி செல்கிறார்கள் அவர்கள்.
ஆனால்,அவர்கள் பயந்தது போல அது ஒரு ஏவுகணை அல்ல.வீரர்களின் தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.ஆனால்,அவர்கள் கண்டெடுத்த கலம்,உலகத்திற்கும்,அதன் மக்களுக்கும்,அவர்களுக்கு தெரிந்ததாய் இருக்கும் அறிவிற்கும் பெரும் சவாலையும்,விடை காண முடியாத ஒரு கேள்வியையும் விடுக்கிறது.அதற்கான விடையை அடையக் கூடிய ஒரே இடம்,நிலவு!
பல வருடங்களாக பணபற்றாக்குறை,எதிர்க்கருத்துக்கள் ஆகியவற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விண்வெளிப் பயணத்தை மறுபடி தொடங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் நாசாவினர்.மார்ஸ் கண்டத்திற்கு முதலாக செல்லும் பெருமையை பெற இருந்த ஹெலன் பிரீமன் தலைமையில் ஒரு குழு நிலவிற்கு செல்ல தாயாராகிறது.ஆனால்,பயணத்தின் காரணமாக ஏற்படக்கூடிய தொல்லைகளின் எண்ணங்கள் மட்டுமே ஹெலனை வருத்தவில்லை.
விவாகரத்து பெற்றவளான ஹெலன்,தனது ஒரே மகளுடன் வசித்து வருகிறாள்.அவளுடைய பணியின் சுமை,இருவரின் வாழ்கையையும் சேர்த்தே நசுக்குகிறது.மார்ஸ் கண்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஹெலனின் ஆசையாகட்டும் , தனது தாய் தன்னுடனேயே எப்போதும் இருக்க வேண்டும் என்ற ஒரு இளம் மனதின் ஆசையாகட்டும் அதனை  நிறைவேற விடாமலே செய்கிறது ஹெலனின் பணி.நிறைவேறாத ஆசைகளுகும்,பாசத்திற்கும் இடையில் அகப்பட்டுக்கொண்ட இந்த இருவரின் வாழ்கையையும் இந்தப் பயணம் பாதிக்க விளைகிறது. நிறைவேறாத ஆசை,புரிந்துகொள்ளாத மகள் என கசப்பான வாழ்கையின் பிடியில் சிக்கி இருக்கும் ஹெலன் இப்போது இரண்டிற்கு நடுவில் ஒன்றை தீர்மானம் செய்ய வேண்டும்.
ஆபத்தான பாதையில் தன்னை அழைத்துச் செல்லவிருக்கும் தனது லட்சியமா? அல்லது, தனது மகளா? மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு இருக்கும் இந்தக் கதை,இரண்டு விஞ்ஞான தியரிக்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டு இருக்கிறது.Chimpanzee complex and Heisenberg principle.
நல்ல சயின்ஸ் பிக்சன் கதை படிக்க விரும்புபவர்களுக்கும்,emotional கதை விரும்புபவர்களுக்கும் இது இரட்டை விருந்து.

======================================================================

This is for my sake.. :)
2035….
Chimpanzee-Complex1A space module falls into the Indian Ocean. When the two survivors are rescued and identified, the authorities realize that what was once thought dead and buried is out in the open, to haunt everybody and to change history as was known to humans.
Now, Earth has to revive its long since abandoned space travels, due to lack of funds and pessimistic opinions, and try to face and understand the mystery that will change history and pose newer threats.
Helen Freeman, the woman who was supposed to be the first woman to set foot on Mars and a woman haunted by personal sorrow,frustration and an insatiable goal, must now choose between….
The love of her girl, who lives with her single mother and who, though yearns for the love of her mother ,hates her for her long departures, apathy and unkept promises.
Her lifelong dream which might set her off on a voyage which could be lethal, destructive, forced and from which there could be no return….
The Chimpanzee Complex v01
The comic has three books. The first book talks about the threat, the preparations for the arduous and daring adventure.
The second talks about the journey itself and the implications it might cause on the lives of those daring astronauts, their loved ones and on the history of the earth itself.
The third is about the voyage back or more aptly put, the probe for a way back to earth.
The principle concepts that mould this comic are two…
The Chimpanzee complex is phenomenon observed in chimpanzees used as test subjects for space flights. Being a part of an experiment, in which they have no control over and where they can just watch helplessly as they are toyed around by the whim of others, they get crazy, torn between the ability to understand the situation and the inability to control it.
The Heisenberg principle according to which, “It is impossible to determine simultaneously both the position and momentum of an electron or any other sub-atomic particle with any great degree of accuracy or certainty.”
That is to say, you cannot determine the position and the speed of a sub-atomic particle at the same time. You can get either, but not both.
Having these both at hand, the author Richard Marazano has tried to spice up the story of a mother torn between her passion and her daughter’s love. The story is good, grim and emotional. The artwork by Jean-Michel Ponzio is good. A definitely entertaining read for comic fans , especially the ones who love science fiction.

The Chimpanzee complex - A great science fiction combined with emotional drama…

======================================================================
Next…..
For the bang comes the….
33687_117439404980158_100001422966362_130539_2035606_n

Comments

  1. The book can is available in India,published by cinebook.Guys interested can either check out for the books or google for the scans. :)

    ReplyDelete
  2. By the by,the indli button at the left is for the english indli and the one at the right is for the tamil one.

    ReplyDelete
  3. // நெடுநாட்கள் கழித்து ஒரு காமிக்ஸ் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே!அடுத்ததும் காமிக்ஸ் பதிவே என்ற நற்செய்தியோடு(?!) பதிவிற்குள் செல்வோம். //

    வாவ் சூப்பர் நியூஸ்

    ReplyDelete
  4. அடுத்து வருபவர் நம்ம லக்கி லுக் என்பதை நினைக்கும் போதே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது :))

    .

    ReplyDelete
  5. எனக்கு english அவ்வளவா தெரியாது அதனால தமிழ் இன்ட்லியிலேயே வோட்ட போட்டுறேன் ..

    காமிக்ஸ் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி இதையும் ட்ரை பண்ணி பாத்திடுவோம் ...

    ReplyDelete
  6. //அடுத்து வருபவர் நம்ம லக்கி லுக் என்பதை நினைக்கும் போதே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது//

    For me too friend.. :)

    //காமிக்ஸ் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி இதையும் ட்ரை பண்ணி பாத்திடுவோம் ...//

    try பண்ணுங்க தல.அது ஒரு தனி உலகம்.குழைந்தைகளுக்கு மட்டுமானது அல்ல. :)

    ReplyDelete
  7. //அது ஒரு தனி உலகம்.குழைந்தைகளுக்கு மட்டுமானது அல்ல

    yes ... அதுல வர்ற ட்விஸ்ட் எல்லாம் பயங்கரமா இருக்கும் ... அதுக்காகவே நான் காமிக்ஸ் விரும்பி படிப்பேன் ... அதே போல் பெரும்பாலும் எதிர்காலத்தில் நடப்பது போலவே கதை அமைப்பு இருக்கும் .. படிக்கும் போது ரொம்ப சுவாரஷ்யமாக இருக்கும் .. நான் இதை நிறைய முறை அனுபவித்து உள்ளேன் .... கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வேண்டியதுதான்....

    ReplyDelete
  8. படிக்கும்போதே நல்லாயிருக்கு.. நாம ஏன் இப்படி ஒரு காமிக்ஸ எழுத கூடாது? (ஹீ ஹீ)

    ReplyDelete
  9. //கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வேண்டியதுதான்....//

    Mail me,if interested, friend.I'll give you some lists and links. :)

    ReplyDelete
  10. //படிக்கும்போதே நல்லாயிருக்கு.. நாம ஏன் இப்படி ஒரு காமிக்ஸ எழுத கூடாது? //

    பதிவே மொக்கையாக எழுதுவதால்,இந்த மாதிரி விசப் பரிட்சை செய்வது உசிதமல்ல என்பது இலுமி முடிவு. :)

    ReplyDelete
  11. நண்பர் ராஜாவுக்கு,

    இதைப் படியுங்கள். :)

    http://www.comicology.in/2010/10/lion-comics-208-xiii-collector-special.html

    ReplyDelete
  12. நன்றி நண்பா... பார்த்து விடுகிறேன் ...

    ReplyDelete
  13. "ராஜா" said... கொஞ்ச வருசமா விட்டு போச்சி ... மறுபடியும் தொடர வேண்டியதுதான்....
    **************************************************************************

    நீ என்ன ராஜா பண்ணுவே.... சைத்தான்கிட்ட வந்து நாசமாப் போறதுக்கு ஐடியா கேட்டுகிட்டு இருக்க...உன் விதி இப்படிதான்னா..யார் என்ன பண்ண முடியும்...

    ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக்கிடுறானுங்கலே...

    ReplyDelete
  14. //சைத்தான்கிட்ட வந்து நாசமாப் போறதுக்கு ஐடியா கேட்டுகிட்டு இருக்க...உன் விதி இப்படிதான்னா..யார் என்ன பண்ண முடியும்...//

    ஹிஹி... :)

    //ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக்கிடுறானுங்கலே...//

    பலி ஆடு பிடிக்கறதுன்னா இப்படி இருக்கணும்.நீங்களும் தான் இருக்கீங்களே வென்னைகளா.. ;)

    ReplyDelete
  15. //ஆனா எலேய் இலுமினாட்டி ...உனக்குன்னு எப்படியோ சிக்கிடுறானுங்கலே...//

    பலி ஆடு பிடிக்கறதுன்னா இப்படி இருக்கணும்.நீங்களும் தான் இருக்கீங்களே வென்னைகளா..
    ஒரு கிழட்டு ஆட்டை பிடிச்சுகிட்டு,மொட்டை கத்திய வச்சுக்கிட்டு மொக்கையா அறுத்துகிட்டு.. ;)

    ReplyDelete
  16. அப்போ பட்டாபட்டியை கிழட்டு ஆடுன்னு சொல்றியா...? (நாராயண..நாராயண...)

    ReplyDelete
  17. சிம்பான்சி காம்ப்ளெக்ஸ் ஒரு அருமையான தொடர். முதல் பாகத்தில் ஆரம்பிக்கும் மர்ம முடிச்சை, ஒவ்வொரு பாகத்திலும் அருமையாக நகர்த்தி கொண்டு போய் கடைசி பாகத்தில் மனித இனத்தின் மீது பல கேள்விகளுடன் சென்று முடிக்கும் கட்டம் அபாரம்.

    நடு நடுவே பாச போராட்டம், மற்றும் தனிமையின் சோகம் என்று இழையோடும் உறவுகளின் கதை, அதை ஓவியபாணியில் சித்திரங்களாக தீட்டும் வண்ணம் என்று துணைகூறுகள் வேறு.

    சினிபுக் வெளியுட்டுள்ள இந்த 3 புத்தகங்களின் ஆங்கில மொழியாக்கம், முன்பு கிடைத்த ஸ்கான்லேஷன் காப்பிகளை விட அதிக தரம் என்பதில் வியப்பில்லை.

    இலுமி, சரியான படிப்பு ரசனையயா, உமக்கு. :)

    ReplyDelete
  18. நண்பரே,

    சயின்ஸுபிக்‌ஷனு என்றால் எப்படி நம்ப எந்திரன்போல் இருக்குமா ?!!

    ReplyDelete
  19. 3 அட்டைப்படங்களுமே கவிதையாக இருக்கின்றன. தமிழில் இக்கதை வெளிவந்தால் அதற்கு சிம்பன்ஸி படலம் என்று அருமையான ஒரு தலைப்பை வைக்கலாம் என கருதுகிறேன். தங்கள் காமிக்ஸ் காதல் வழி நல்ல கதைகள் குறித்து இரு மொழிகளிலும் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது. இருப்பினும் தமிழில் பிரின்ஸிபல்களை லகுவாக ஓரம் கட்டிவிட்டு ஆங்கிலத்தில் அதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் :)) காமிக்ஸ் பதிவுகள் களைகட்டட்டும்.

    ReplyDelete
  20. //அப்போ பட்டாபட்டியை கிழட்டு ஆடுன்னு சொல்றியா...?//

    சேச்சே, அப்படி எல்லாம் சொல்லுவனா? (அதை விட மோசமா சொல்லுவியானு கேக்க கூடாது.உனக்கு தெரியாதா மச்சி என்ன பத்தி ;)
    )

    ReplyDelete
  21. நண்பர் ரபிக் ,

    இக்கதையின் மூன்றாம் பாகத்தை விட என்னை இரண்டாம் பாகம் மிகவும் கவர்ந்தது.குறிப்பாக குகையில் கேட்கப்படும் கேள்வி,அங்கே நடக்கும் காட்சிகள்,மார்ஸில் கூட மனிதனின் ஆதிக்க வெறி,நம்பகத்தன்மை இல்லாமை,பிறரையும் தன்னையும் அழித்துக் கொள்ள விளையும் வெறி என்று அது பிரமாதமாக இருந்தது.


    சினிபுக்கின் சில மொழியாக்கங்கள் கலக்கினாலும்,சிலது சொதப்பும்.Scorpion சில இடங்களில் மகா சொதப்பல்.அதை விட scanlation நன்றாக இருந்தது.
    இது நன்றாக இருந்தது. :)

    //இலுமி, சரியான படிப்பு ரசனையயா, உமக்கு. :) //

    ஹிஹி,என்ன பிரயோஜனம்? தமிழ் காமிக்ஸ் இன்னும் அறுபதுகளிலேயே தொங்குகிறதே! ;)

    ReplyDelete
  22. எந்திரன் சயின்ஸ் 'சக்' 'சன்' ஓய்.. ;)

    ReplyDelete
  23. //3 அட்டைப்படங்களுமே கவிதையாக இருக்கின்றன. //

    லட்சியமா,மகளா என்று கலங்கி நிற்கும் தாய்,

    தாயை பிரிந்த ஏக்கத்தில் இருக்கும் மகள்,

    மகளை அடைய தவிக்கும் தாய்

    என்று அட்டையே கதை சொல்லும்.
    You've got a great eye friend. :)


    //தமிழில் இக்கதை வெளிவந்தால் அதற்கு சிம்பன்ஸி படலம் என்று அருமையான ஒரு தலைப்பை வைக்கலாம் என கருதுகிறேன். //


    ஹாஹா,படலங்கள் ஓய்வதில்லை. :)
    குசும்பய்யா உமக்கு.

    //தமிழில் பிரின்ஸிபல்களை லகுவாக ஓரம் கட்டிவிட்டு ஆங்கிலத்தில் அதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்//

    உமக்கு தெரியாதல்ல.முதலில் ஆங்கிலத்தில் எழுதி,பின்னர் ஒரு சின்ன addition போல எழுதியதே தமிழ் பதிவு. :)
    அட்ஜஸ்ட் செய்து படியும் ஓய்... ;)

    ஆங்கில மொழிக் காதலன் இலுமி ஒழிக!
    விதேசிப் பிரியன் இலுமி ஒழிக!

    இது உம்ம சந்தோசதுக்காக... ;)

    ReplyDelete
  24. இப்ப எதுக்குயா என்னைய இழுதீங்க..

    இருயா.. நானும் காமிக்ஸ் பத்தி பதிவா எழுதி கிழிக்கிறேன்...

    ReplyDelete
  25. சயின்ஸ் ஃபிக்‌ஷன் காமிக்ஸ்கள் தனி ரகம்தான்! இதையும் ரசிப்போம்!
    (அடுத்து லக்கி லுக்! மிக்க மகிழ்ச்சி!)

    ReplyDelete
  26. நானும் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேங்க ..!!

    ReplyDelete
  27. படங்கள் மிக அருமையாக உள்ளன.. கதையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன...

    ReplyDelete
  28. நண்பா
    அட்டகாசம்
    படிக்க தூண்டும் எழுத்து

    ReplyDelete
  29. அடுத்து 'புரட்சி தீ' யா? சீக்கரம் சீக்கரம்......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........