Ice station – அதிரடி ஸ்டேஷன்…


Ice Station
2000த்துல Matthew Reilly எழுதின புக் இந்த Ice station.கதை என்னன்னா,அண்டார்டிகாவின் அமெரிக்க ஆராய்ச்சி மையத்துல(Ice station) இருக்குற ஒரு விஞ்ஞானி,ஒரு அதிசயமான விசயத்தை கண்டுபிடிக்குறாரு.அதாகப்பட்டது,அடியிலேயே இருக்கிற பனிக் கடல்ல, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் அடில இருக்குற ஒரு பெரிய குகைல, விமானம் மாதிரியான ஒரு கலம் இருக்கிறதை கண்டுபிடிக்குறார். அந்த கலத்தை சுத்தி இருக்கிற பனிக்கு மட்டுமே வயசு,400 மில்லியன் ஆண்டுகள்!
இதை உடனே ரேடியோல transmit பண்ண,விறைக்க வைக்கிற குளிர்லையும் பரபரனு பத்திக்குது அண்டார்டிகா.அமெரிக்கா உடனே பன்னிரண்டு பேர் கொண்ட ஒரு அதிரடி டீம (Marines) அனுப்புது , இடத்தை பாதுகாப்பா வச்சுக்கவும்,வேற யாரும் அந்த கலத்தை கடத்திட்டு போயிடாம இருக்கவும்.
இந்த டீமோட தலைவன் ஷேன் ஷோபீல்ட்க்கு(ஹீரோனு சொல்லவும் செய்யனுமா? J ) சனியன் overtimeல ரிவிட் அடிக்குது.அந்த மையத்தை கைபற்ற வரும் எதிரி மற்றும் தோழமை நாடுகளின் வீரர்கள்,அந்த ஸ்டேஷன்லேயே இருக்கிற உள் சண்டைகள்,கொலைகள்,கடல்ல இருக்கிற சுறா மீன்கள்,தன்னுடைய டீம்லேயே இருக்கிற புல்லுருவிகள்னு எங்க திரும்பினாலும் அபாயம்.
கதை ஆரம்பத்துல இருந்து ஆக்சன் அதிரடி.ஆனா என்ன,பூ முழம் முழமா இல்ல,கிலோமீட்டர் கிலோமீட்டரா சுத்துறாணுக.ஆனா,pace வாய்ப்பே இல்ல.குரங்கு வாலுல பெட்ரோல் ஊத்தி கொளுத்தினா என்ன ஆவுமோ (வெளியூர்க்காரன் ஞாபகம் வந்தால் இலுமி பொறுப்பல்ல) அப்டி ஒரு வேகம்.
அப்புறம்,கதைல லாஜிக் பத்தி கேக்குறவனுகளுக்கு, ‘அண்ணே!கொஞ்சம் உங்க மூஞ்சக் காட்டுங்க அண்ணே.அது வேற ஒண்ணும் இல்ல...ஆக்சன் கதைல விறுவிறுப்புக்கு பதிலா லாஜிக் கேக்குறவனையும், ராமதாஸ் கட்சியோட கொள்கைய கேக்குறவனையும் நான் ஒரு category ல வச்சுருக்கேன்.அது சரி தானானு பார்க்க தான் கேட்டேன். ;)
ஆட்கொல்லி சுறா(எந்த உள்குத்தும் கிடையாது.) கிட்ட சண்டை போடுறது,பனில ஓடுற வண்டில இருந்து இன்னொன்னுக்கு குதிக்குறது,பனிவண்டில சண்டை போடுறது,கடலுக்கு அடியில சண்டை,ஜெட் பைட்னு விதவிதமா இருக்குது.ஆக்சன் ரசிகர்கள் மிஸ் செய்யக் கூடாத புத்தகம்.ஆனா,புக்க எடுக்குறப்ப மூளைய கழட்டி வச்சுடுறது உத்தமம்.மாப்ள வெளி,உனக்கு பிரச்சனை இல்லைய்யா. ;)
அட,நீ நிறைய புக் படிக்க மாட்டே இல்ல,அதனால சொன்னேன். :)
**********************************************************************
Antarctica.....117968_ice_station_by_matthew_reilly
......also known as the ice continent ,often misjudged to be a dead and frozen place due to its unbearable coldness, becomes all hustled up when an unusual discovery is made.
When one of the scientists of the (American) Wilkes Ice station stumbles across a stupendous discovery, life and action bustles into the monotonous ice station standing astride in the frozen land. But, as life charges in, so does death!
The discovery is this! About a kilometre down the ice filled sea beneath the ice station, resides an enigmatic yet magnificent shuttle of unknown origin, surrounded by ice which upon research dates to 400 million years!
Suddenly, the snow filled desolate continent grows too hot to be handled, as to be mercuric. Now, with every major developed nation, friend and foe alike, wanting the shuttle to know of its weaponry and potential warfare technologies, is ready to pound on each other and America has to secure what it has discovered.
Immediately, a 12 man MARINE team is dispatched under Shane Schofield for securing the station and the shuttle. But, the discovery is not the only reason which invoked the presence of the marine team .It also includes the mysterious death of the scientists by enigmatic sea creatures in the sea cave that encompasses the shuttle and impending death alike.
Apart from combating with the enemy soldiers, Shane also has to struggle with killer sharks, enigmatic sea creatures and also the betrayal of the double agents in his own team! In this impasse situation, where death seems the only way out, Shane has to defy everything, including death, to win.
With not much of a writing style, an outrageous story and even obscene action sequences which even Hollywood can not afford, what makes this book fun to read and ensured it to be a bestseller?
The answer, people, is the pace of the novel entwined with outrageous action sequences.
It is true that Matthew Reilly does not have much of a stylish writing. But, when it comes to fast paced writing, there really is no one currently to beat the Australian author better known for fast pace, twisting plots and intense action. Believe me, the reader does not get any time to notice his ‘not-so-stylish’ writing as the story paces with the speed of a mach 10 jet. For all those who like fast paced stories with plenty of action with logic down the toilet( :) ), do check in.

Ice station – Rather very hot, despite the suggestive title.

Comments

  1. இருமொழிப்புலவர் இலுமினாட்டி அவர்களின் பதிவு படிக்காமலே இனிக்கிறது :)

    ReplyDelete
  2. தொன்மையான படைப்புக்களை நீங்கள் அறிமுகம் செய்து வைப்பதில் முன்னிற்கிறீர்கள்.

    ReplyDelete
  3. ஐஸ் ஸ்டேசன் - அதிரடி ஸ்டேசன் - ஆள் குளோஸ் ஸ்டேசன்

    ReplyDelete
  4. டான் பிரவுனின் Deception Point கூட இப்படி ஒரு கதைக்களன் கொண்டது என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  5. குஷி எழுத்துக்கு தமிழ் படிங்கோ!மண்ட காய இங்கிலீஷ் படிங்கோ! ;)

    ReplyDelete
  6. ஏன் ஆக்‌ஷன் கதைன்னா லாஜிக் கேட்டா தப்பா தோழரே!!

    ReplyDelete
  7. அருமையான பதிவு. அதுவும் ஆங்கில மொழியாக்கம் அட்டகாசம். நீங்கள் சமஸ்கிருதத்திலும் எழுதலாம். காய்ந்த மண்டைய நனைய வைக்க உதவுமல்லவா :)

    ReplyDelete
  8. படிக்கும்போதே பத்திக்கொண்டது பரபரப்பு.. குளிரில் ஒரு ஆக்ஷன்..நல்ல கதைதான் என்பது உங்களின் எழுத்தில் இருந்தே தெரிகிறது...

    நல்ல அழகான விமர்சனம்..

    எப்பவும் போல இதோ படிக்கறேன்னு டபாய்க்க விரும்ப வில்லை. கையில் கிடைத்தால் கட்டாயம் படிக்கிறேன்..

    ReplyDelete
  9. //ராமதாஸ் கட்சியோட கொள்கைய கேக்குறவனையும் நான் ஒரு category ல வச்சுருக்கேன்.அது சரி தானானு பார்க்க தான் கேட்டேன். ;)

    ஆட்கொல்லி சுறா(எந்த உள்குத்தும் கிடையாது.//

    hahaha...சிரிச்சு முடில பாஸ்....

    ReplyDelete
  10. @இலுமி

    அட நாதாரி பயல!!! அப்பொ இது சினிமா விமர்சனம் இல்லையா?? புக்கா?? PDF Download லிங்க் உங்க தாத்தாவ கொடுப்பாரு??

    ReplyDelete
  11. இதற்கு எனது கமெண்ட், நாளைக் காலையில் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் :-)

    ReplyDelete
  12. TERROR-PANDIYAN(VAS) said...

    @இலுமி

    அட நாதாரி பயல!!! அப்பொ இது சினிமா விமர்சனம் இல்லையா?? புக்கா?? PDF Download லிங்க் உங்க தாத்தாவ கொடுப்பாரு??

    //

    நீ மனுசன்யா..

    கேட்டியே ஒரு கேள்வி..நாக்க புடுங்கறமாறி...

    ReplyDelete
  13. இது ஒருவேளை கேமாக வந்தால், இன்னும் பின்னுமோ?

    ReplyDelete
  14. //நீங்கள் சமஸ்கிருதத்திலும் எழுதலாம். காய்ந்த மண்டைய நனைய வைக்க உதவுமல்லவா //

    இதனை நானும் வழிமொழிகிறேன் :-)

    ReplyDelete
  15. அடுத்த பதிவு லக்கி லூக் அப்புடீன்னு சொல்லிட்டு

    திடீர்ன்னு இப்புடி கவுத்துபுட்டீங்களே இலுமி இளவரசே ;-)
    .

    ReplyDelete
  16. இருமொழிப்புலவர் இலுமினாட்டி

    இளவரசர் இலுமி

    அடுத்தது என்ன காதலரே :))
    .

    ReplyDelete
  17. குஷி எழுத்துக்கு தமிழ் படிங்கோ!

    மண்ட காய இங்கிலீஷ் படிங்கோ!

    காய்ந்த மண்டை நனைய சமஸ்கிருதம் படிங்கோ!

    இதெல்லாம் வேண்டான்னா அதிரடி ஸ்டேஷன் படிங்கோ! ;-)

    ஹி ஹி ஹி
    ஏதோ என்னால முடிஞ்சது
    .

    ReplyDelete
  18. கதை நல்லா இருக்கு!
    //இது ஒருவேளை கேமாக வந்தால், இன்னும் பின்னுமோ// நல்லாயிருக்கும்னு நானும் நினைக்கிறேன்!

    ஆனா படமா வந்தா...

    ReplyDelete
  19. //இருமொழிப்புலவர் இலுமினாட்டி அவர்களின் பதிவு படிக்காமலே இனிக்கிறது :)//

    ஹிஹி..

    //டான் பிரவுனின் Deception Point கூட இப்படி ஒரு கதைக்களன் கொண்டது என்று எண்ணுகிறேன்.//

    உண்மை தான்.ஆனா இது வந்தது 1998.அது வந்தது 2001.அதுவும் போக,அதுல ஒரு விண்கல்லை ஆராய்வாங்க.அதில இருக்கிற தகிடுதத்தங்கள் பற்றியது தான் கதையே! இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல. :)

    //ஏன் ஆக்‌ஷன் கதைன்னா லாஜிக் கேட்டா தப்பா தோழரே!!//

    அக்காங் 'தோழரே' ! ;)
    அது எம்புட்டு தப்புன்னா, கேக்குற பயல உடனடியா ராமதாஸ் அண்ணன் கட்சிக்கு வேலைக்கு அனுப்பி வைக்குற அளவுக்கு தப்பு.வசதி எப்படி?என்னது என்ன வேலையா? கொபசெ...
    யோவ்,கொள்கை பரப்பு செயலாளர்! வேற எந்த மீனிங்கும் கிடையாது. ;)

    //நீங்கள் சமஸ்கிருதத்திலும் எழுதலாம். காய்ந்த மண்டைய நனைய வைக்க உதவுமல்லவா :)//

    அடுத்து கொரியனில் எழுதுவதாக உத்தேசம்.வசதி எப்படி? ;)

    ReplyDelete
  20. //எப்பவும் போல இதோ படிக்கறேன்னு டபாய்க்க விரும்ப வில்லை. கையில் கிடைத்தால் கட்டாயம் படிக்கிறேன்..//

    கண்டிப்பா படிச்சு பாருங்க தல..
    இது இலக்கிய இம்சை கிடையாது.பெரிய ஆங்கிலப் peter ஆவும் இருக்க வேணாம். நல்லாவே புரியும்.என்ன, கொஞ்சம் மூளைய கழட்டி வைக்கணும். :)

    //
    hahaha...சிரிச்சு முடில பாஸ்....//

    :)

    // அப்பொ இது சினிமா விமர்சனம் இல்லையா?? புக்கா?//

    அய்யயோ,என்ன ஒரு கண்டுபிடிப்பு? உன்ன அறிவ நினைச்சு எனக்கு அப்படியே புல்லரிசுடுச்சு சாமி!

    // PDF Download லிங்க் உங்க தாத்தாவ கொடுப்பாரு??//

    காசு கொடுத்து வாங்கி படி பக்கி.ஓசில... (கோடிட்ட இடத்தை கெட்ட வார்த்தையால் நிரப்புக ;) )

    //இதற்கு எனது கமெண்ட், நாளைக் காலையில் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் :-)//

    இதற்கான எனது விரிவான பதில், ரெண்டு நாளில் வரும் என் தாழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ;)

    //கேட்டியே ஒரு கேள்வி..நாக்க புடுங்கறமாறி...//

    அய்! பலூன் மாமா.. :)
    யோவ்,எவனையாவது கொடூரமா வெட்டி பல நாள் ஆச்சு.வா எதுனா ஆடு சிக்குதா னு பார்ப்போம்.
    என்னது?என்னமோ சொன்னியே? ஓ.வெக்கமா? என்னய்யா நீயி காமெடி பண்ணிக்கிட்டு? :)
    ஆங்,அந்த அருவாள எடு.. :)

    //இது ஒருவேளை கேமாக வந்தால், இன்னும் பின்னுமோ?///

    கதையே வீடியோ கேம் போல தான் இருக்கும். இதற்கு காரணம், matthew நிறைய பரபர கேம் விளையாடி வளர்ந்ததே என்று தோன்றுகிறது! :)

    சிபி,

    ஹிஹி, போஸ்ட் இன்னும் எழுதவே இல்ல தல... :)
    அது வரை சும்மா இருக்கப் பிடிக்காம தான் இது. நீங்க கவலைப்படாதீங்க.அடுத்து லக்கி, xiii னு வரிசை காட்டி அடிக்குறோம்.. :)

    // ஆனா படமா வந்தா...//


    //இதில் விஜய் நடித்தால்., //

    யோவ் எஸ்.கே, உன்னால் அல்லவா நான் இப்படி ஒரு சொல் கேட்க நேர்ந்தது? யோவ்,உன்னைய... :)

    //இதில் விஜய் நடித்தால்., //

    பத்தாவது பிளாப்க்கு அடுத்து பதினோராவது பிளாப்பு... ;)

    ReplyDelete
  21. //ஆக்சன் கதைல விறுவிறுப்புக்கு பதிலா லாஜிக் கேக்குறவனையும், ராமதாஸ் கட்சியோட கொள்கைய கேக்குறவனையும் நான் ஒரு category ல வச்சுருக்கேன்


    லாஜிக்க இப்படி அசிங்கபடுத்திடீங்களே...

    ReplyDelete
  22. //ஆட்கொல்லி சுறா(எந்த உள்குத்தும் கிடையாது.)


    ஆளை கொள்ளும் சுறா ...
    அந்த சுறாவையே கொள்ளுவான் வேட்டைக்காரன் ...

    ReplyDelete
  23. ///கருந்தேள் கண்ணாயிரம் said...
    //நீங்கள் சமஸ்கிருதத்திலும் எழுதலாம். காய்ந்த மண்டைய நனைய வைக்க உதவுமல்லவா //

    இதனை நானும் வழிமொழிகிறேன் :-)////

    அப்போ இது கொரியமொழிப் படமில்லையா? என்னய்யா இது?

    ReplyDelete
  24. சரி சரி, மாப்பு, கண்ணத்தொடச்சிக்க, புக்கு எல்லாத்ததையும் லிஸ்ட்டு போட்டு வைய்யி, சென்னைக்குப் போவும் போது வாஙகிக்கிறேன், அப்பால வநது மறுக்கா படிக்கிறேன்!

    ReplyDelete
  25. நல்லா படிக்கரயா நீ :) ஆமா ஏன் ஆங்கிலம் தமிழ் ரெண்டையும் தனிதனியா போட கூடாது?
    அண்ணன் வழியில் நானும் ஒரு ஆங்கில தளம் ஒன்று ஆரம்பித்துள்ளேன்.. :)
    http://prasannakumarji.blogspot.com/

    ReplyDelete
  26. //ஆளை கொள்ளும் சுறா ...
    அந்த சுறாவையே கொள்ளுவான் வேட்டைக்காரன் ...//

    நோ கமெண்ட்ஸ்.. ;)

    //அப்போ இது கொரியமொழிப் படமில்லையா? என்னய்யா இது?//

    ஹாஹா, சும்மா இருக்குறவன ஏன்யா சீண்டி விடற? இரு,சீக்கிரம் எழுதுறேன். ;)

    //நல்லா படிக்கரயா நீ :) ஆமா ஏன் ஆங்கிலம் தமிழ் ரெண்டையும் தனிதனியா போட கூடாது?//

    அக்காங்,இவனுக லட்சணம் எனக்கு தெரியாது? ஆரம்பத்துல இங்கிலீஷ்ல எழுதுன பய நானு!
    ஒரு பய படிக்க மாட்டான்.ஆனா,அருமை னு கமெண்ட் வரும். :)
    அதுதான் double trouble! ;)
    தக்காளி,சாவுங்களே! :P

    ReplyDelete
  27. i just started to read this novel when i was waiting for my friend. it was kept there and i started to read it and then finished it in the same day, the pace was so good :)

    i read another novel of this author and i beleive he did quite some novels and all are based on military stories... and all are so fast just like hari movies without few logics

    ReplyDelete
  28. @dhans:

    Pace is a strong point of Reilly. But same could not be said for his writing. It is amateurish at best to childish at worse. But if you are into mindless fun, you will enjoy his books completely. :)

    P.S:Not all his books are military adventures.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........