Unforgiven - An unforgettable peek into the wild west.....




சில படங்கள் பார்த்த பின் சிந்திக்க வைக்கும்,சில படங்கள் பிரமிக்க வைக்கும்,சில படங்கள் ஏண்டா பார்த்தோம் என்று ஆக்கிவிடும். சில படங்கள் மட்டும் பார்த்த உடன் மனதிலேயே நிலைத்து விடும். Unforgiven அப்பேற்பட்ட படங்களில் ஒன்று.


1992 இல் Clint Eastwood இன் இயக்கத்திலும்,நடிப்பிலும் வெளி வந்தது இந்தப்படம். Wild west என்றதும் நினைவுக்கு வருவது என்ன?துப்பாக்கியை வேகமாக கையாளும் ஒரு ஹீரோ,ஒரு மோசமான வில்லன்,அவனிடம் சிக்கிய ஒரு நகரம் அல்லது பெண்,அதைக் காப்பாற்றும் ஹீரோ.இல்லையென்றால் தங்கம் தேடி நடக்கும் சண்டைகள் இது தானே? Well,not here guys.......


ஹீரோவின் கம்பீரமான முகத்திற்கு பதில், Wild west இன் அசிங்கமான முகமே இதில் பதியப்பட்டு இருக்கிறது.அதுவும் wild west கேரக்டர்களில் நடித்து பெரும் பெயர் பெற்ற கிளின்ட் ஈஸ்ட்வுட்டினால்........


படத்தின் கதையே மிகவும் வித்தியாசமான ஒன்று.குடி போதையில் இருந்த இரண்டு கௌபாய்களினால் விலைமகள் ஒருத்தியின் முகம் விகாரப்படுத்தப்பட்ட,அவர்களைப் பழிவாங்க, அவர்களைக் கொல்பவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் பரிசு என்று அறிவிக்கிறார்கள் அவளுடைய சக தொழிலாளிகள்.


இதைக் கேள்விப்பட்ட Schofield Kid (Jaimz Woolvett) என்னும் இளைஞன்,முன் ஒரு காலத்தில் மிகப்பெரிய கிரிமினலாக இருந்து,பின்னர் ஒரு பெண்ணினால் மனம்மாறி திருந்தி வாழ்ந்து கொண்டு இருக்கும் William Munny (Clint Eastwood) ஐ பார்க்க வருகிறான்.இந்த வேட்டையில் தன்னோடு பங்கு கொள்ளுமாறு கேட்கிறான்.ஆரம்பத்தில் தயங்கினாலும்,தாயில்லாத தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணம் சேர்க்க ஆசைப்படும் முன்னி,இதற்கு ஒப்புக்கொள்கிறான்.தன்னுடைய நண்பனான Ned Logan (Morgan Freeman) ஐயும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான்.பரிசு அறிவித்து இருக்கும் பெண்களிடம் விவரங்களைத் தெரிந்து கொள்ள அவர்கள் இருக்கும் Big Whiskey நகரத்திற்கு போகிறார்கள்.


ஆனால் இவர்கள் போகும் நகரத்தின் ஷெரிப் Little Bill Daggett (Gene Hackman), முன்காலத்தில் gunfighter ஆக இருந்தவன்.தன்னுடைய நகரத்தில் யாரும் ஆயுதம் ஏந்தி வரக்கூடாது என்று சட்டம் இயற்றி அதை கடுமையாக நடைமுறைப்படுத்தியும் வருபவன்.மிகவும் கடுமையானவன்.ஈவு இரக்கமே அறியாதவன்.


இதற்கிடையே,தன்னுடைய பயணத்தின் போது முன்னி குற்ற உணர்ச்சியில் துடிக்கிறான்.தன்னுடைய பிள்ளைகளுக்காகவே இந்த ஈனச் செயலை செய்கிறோம் என்றும்,ஒரு பெண்ணை விகாரப்படுத்தியவனை கொல்லவே போகிறோம் என்றும் தன்னைத்தானே சமாதனப்படுத்திக் கொள்கிறான்.என்னதான் தான் மனித வேட்டைக்கு வந்தாலும் இன்னமும் தான் திருந்தியவனே என்று வலியுறுத்தி குடிக்க மறுக்கிறான்.
இப்படியாக,ஐம்பது அடிக்கு மேல் இருப்பதை சரியாக பார்க்க முடியாத கண்கோளாறு உடைய கிட்,குற்ற உணர்ச்சியில் இருக்கும் முன்னி,முன்நாளைய கிரிமினல் நெட் ஆகிய மூவரும் அந்தக் கௌபாய்களைத் தேடி செல்கிறார்கள்.



நகரத்தில் முன்னியின் நண்பர்கள் அந்தப்பெண்களை ‘சந்திக்கச்’ சென்று இருக்கும் போது,முன்னி மனைவியின் நினைவில் வர மறுத்து தனியே இருக்கிறான்.இவனிடம் ஆயுதம் இருப்பதைப் பார்த்த பில்,இவனை நையப்புடைக்கிறான்.


மூன்று நாட்கள் கழித்து,மூவரும் சேர்ந்து அந்த கௌபாய்கள் இருவரையும் கொல்லச் செல்கிறார்கள்.ஒருவன் கொல்லப்பட்ட பின்னர்,நெட் தன் பழைய வாழ்கையை மறுபடியும் வாழ்வதை ஜீரணிக்க முடியாமல் வீட்டை நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான்.


இரண்டாமவனையும் கொன்ற பின்னர்,தன் நண்பன் நெட்,ஷெரிப் பில்லினால் அடித்தே கொல்லப்பட்டதை அறிந்து பழி வாங்க புறப்படுகிறான் முன்னி.இறுதியில் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.




படத்தின் பலமே அதன் கதையும்,பாத்திரப்படைப்பும் தான்.

The world is neither white(good) nor black(bad),for it is grey என்பதற்கு ஏற்ப, கெட்டவனாக இருந்து,அன்பினால் நல்லவனாக மாறி,பின்னர் பரிசு வேட்டைக்கு செல்லும் போது குற்ற உணர்ச்சியிலும்,தயக்கத்திலும் வாடி,தான் அடிவாங்கிய போது சுண்டுவிரலைக் கூட உயர்த்தாமல் அடிவாங்கிவிட்டு,நண்பனின் மரணத்தை கேட்டு வெறிகொள்ளும் முன்னி, (இதை சிம்பிளாக ஒரே நொடியில் உணர்த்துவார் கிளின்ட்.அதுவரை குடிக்க மறுத்த முன்னி,தன் நண்பன் இறந்ததை அறிந்ததும்,அருகில் இருக்கும் விஸ்கியை பருகிக் கொண்டே ‘என்னைப்பற்றி தெரிந்துமா என் நண்பனைக் கொன்றான் பில்’ என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க.ஈஸ்த்வூடால தான் அவ்ளோ அசால்ட்டா,cold blooded ஆக ஒரு பார்வை பார்க்க முடியும்)


ஆரம்பத்தில் நண்பனுக்கு உதவ தயங்காமல் வந்து,பின்னர் ஒரு உயிரை பறிக்க முடியாமல் தயங்கித் தவிக்கும் நெட்,


கண்கோளாறு இருப்பதை மறைத்து,பல உயிர்களைக் கொன்றவன் என்று ஜம்பம் பேசி,கொல்வதில் ஆர்வம் கொண்டு,முதல்முறையாக ஒரு உயிரைப் பறித்த பின்னர் துப்பாக்கியை இனி தொடவே போவது இல்லை என்று முடிவெடுக்கும் கிட்,


கடுமையின் போர்வையில் கொடுமை புரியும் ஷெரிப் என்று......


இந்தக் கதை ஹீரோ காக்கா குருவி போல பிறரை சுடும் சாகசத்தை பற்றியது அல்ல நண்பர்களே......கௌபாய் உலகின் கவர்ச்சித் தோலை உரித்து,உள்ளிருந்த அசிங்கமான உண்மைகளை சொல்லும் படம்.


There were just two types of cowboys.
Not the good and bad.....
But the coward and the killer.......
என்று பொட்டில் அறைந்து சொல்லும் படம்.இது பிறரை சுட்டுத்தள்ளும் ஹீரோவைப் பற்றிய படமல்ல.உயிரின் மதிப்பை பற்றி வலியுறுத்தும் படம்.


Unforgiven – Unforgettable............

P.S: Unforgiven – About the black, white and grey side of a man............
To all my fellow comic fans and wild west lovers, guys, get ready for the murky reality of wild west.........






குத்தணும் போல இருக்குமே.அதுக்கு தான இத வச்சுருக்கேன்.குத்துங்க.நல்லாக் குத்துங்க. :)

Comments

  1. திரு இல்லுமினாட்டி

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    ReplyDelete
  2. க்ளிண்ட்டின் திறமைக்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு . . அட்டகாசமான ஒரு நடிப்பு. .

    நல்ல பதிவு . . ரசித்துப் படித்தேன் . .

    நம்ம பதிவ கொஞ்ச நேரத்துல பாருங்க . . :-)

    ReplyDelete
  3. //க்ளிண்ட்டின் திறமைக்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு . . அட்டகாசமான ஒரு நடிப்பு. . //

    சந்தேகமே இல்லாமல்...

    ReplyDelete
  4. அடடா . . நான் பின்னூட்டம் எழுத ஆரம்பிக்கும்போது, எந்தப் பின்னூட்டமும் இல்லை . . எனவே, கொஞ்சம் மெதுவாக எழுத ஆரம்பித்தேன் . . அந்த மிதிவண்டி கேப்பில், ஒருவர் முந்திவிட்டார் :-) ..

    இப்படிக்கி - (இருந்தாலும்)பின்னூட்டப் புலி கருந்தேள் . .

    ReplyDelete
  5. அருமையான படத்தினை பற்றி அருமையான பதிவு. (Commentary Inspiration : Mike Coward).

    ReplyDelete
  6. நண்பரே,

    அருமையானதொரு திரைப்படம் குறித்த உங்கள் பதிவு அசத்தல். தொடருங்கள்..

    ReplyDelete
  7. இது பிறரை சுட்டுத்தள்ளும் ஹீரோவைப் பற்றிய படமல்ல.உயிரின் மதிப்பை பற்றி வலியுறுத்தும் படம்.
    //

    கண்டிப்பா பார்க்கனும்..
    நாளைக்கு வந்து விரிவா அலசுரேன் இலுமி...

    ReplyDelete
  8. நல்ல பதிவு.. ரசிக்கும்படி இருக்குது

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  10. அது சரி இலுமு இந்த படத்தை நம்மூரில எவனும் இன்னுமா சுடாம வச்சிருக்கானுவ .

    ReplyDelete
  11. படத்தை உடனே டவுன்லோட் செய்கிறேன்..

    நல்லா இருக்கும்போல இருக்கு..
    நீங்க ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...

    நன்றி...

    ReplyDelete
  12. சிறப்பான படங்களாக தெரிவு செய்து அதனை உங்கள் கைவரிசையில் பார்க்க தூண்டும் வகையில் அருமையாக தந்தமைக்கு நன்றி
    இந்த வலை தளத்திற்கு நான் புதிது நீங்கள் விரும்பிய அரிசோனா லவ் என்னிடம் உள்ளது லிங்க் நீண்ட நாட்களுக்கு முன்பு டவுன்லோட் செய்ததால் மறந்துவிட்டது
    பதினாறு மெகா பைஇட் எப்படி அப்லோஅது செய்வது
    மறந்தவிட்டேன் அது இங்கிலீஷ் மொழியில் அல்ல

    ReplyDelete
  13. // இது பிறரை சுட்டுத்தள்ளும் ஹீரோவைப் பற்றிய படமல்ல.உயிரின் மதிப்பை பற்றி வலியுறுத்தும் படம். // டச் பண்ணிட்டீங்க.. பார்த்துட வேண்டியதுதான்..

    ReplyDelete
  14. சாரிப்பா.. படத்தோட லிங்க் கிடைக்கல..கொடுக்கமுடியுமா?..

    வட்டியோட திருப்பிக்கொடுக்கிறேன்..

    ReplyDelete
  15. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படம் பார்த்தேன்.. அடடா.. என்ன ஒரு அசால்ட்டான நடிப்பு.. ஜூனியர் பின்னீட்டார் போங்க....

    ReplyDelete
  16. படம் பார்த்தேன்.. கிளின்ட் ஈஸ்ட்வூட்... அர்னால்ட் போல தோற்றம் அளிக்கிறார்..

    ஒரு வித்தியாசமான படத்தை அறிமுகப்படுத்தியதற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்..

    டௌன்லோட் பண்ணிப் பாத்துட்டோம்லா.....

    ReplyDelete
  17. //டௌன்லோட் பண்ணிப் பாத்துட்டோம்லா.....//

    :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........