“என்ன......”
-->
ரொம்ப நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடிக்கு வந்திருந்தேன்.உறவினர்களை எல்லாம் சந்தித்து விட்டு,ஊருக்குத் திரும்பலாம் என்று அந்த பஸ்ஸில் ஏறினேன்.
பத்து நிமிடம் போயிருக்காது.ஒரு அம்மாள் முன்னால் அமர்ந்து இருந்த அனைவரிடமும் எதோ கெஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது.
பிச்சை......!
ஒடிங்கிப் போன தேகத்தில்,கிழிசல் சேலையைக் கட்டிக்கொண்டு,கண்களில் கெஞ்சலும்,ஏந்திய கையுமாக அந்த நடுவயதுப் பெண்மணி.....
முகத்தை திருப்பிக் கொண்டேன்....
சீக்கிரமே என் முறையும் வந்தது.அனைவராலும் விரட்டி அடிக்கப்பட்ட அந்தப் பெண்மணி என் சீட்டருகிலும் வந்தாள்......
‘’தம்பி......’’
நிமிர்ந்து பார்த்தேன்.பின்பு வேறுபக்கம் திரும்பிக் கொண்டே,’’போங்க.....’’ என்றேன்.
‘’தம்பி ‘’,மறுபடியும்.....
‘’என்ன?’’ என்றேன் எரிச்சலுடன்.வரப்போவது தான் என்ன என்று தெரியுமே......
‘’திருச்செந்தூருக்கு கோவில்பட்டியில இருந்து கூட்டத்தோட வந்துருந்தேன்.அவங்கள தவற விட்டுட்டேன்.....’’
Ah,here it comes...... என்றெண்ணி எரிச்சலோடு உக்கார்ந்திருந்தேன்.
‘’தயவு செய்து எனக்கு ஒரு டிக்கெட்.....’’
‘’ச்சே,இது புது டெக்னிக்கா.....?ஒரு ரூபா ரெண்டு ரூபா போய் இப்போ இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களா ?”
‘’........கோவில்பட்டி போறதுக்கு வாங்கிக் கொடுங்களேன்.’’
சடாரென திரும்பினேன் நான்.
‘’என்ன ? ‘’
‘’கோவில்பட்டி போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுங்க எசமான்.....”
அவர் கண்களில் கெஞ்சலும்,பரிதவிப்பும்,அதை மீறிய வெட்கமும்.....
சாட்டையால் அடித்தது போலிருந்தது எனக்கு.
‘’நீங்க உக்காருங்கம்மா.நான் எடுக்குறேன்.’’
மருண்ட விழிகளில் லேசான நிம்மதி.
‘’ரொம்ப நன்றிங்க எசமான்.....’’
முன்னால் அமர்ந்து இருந்தவர்களைப் பார்த்தேன்.
‘’என்ன மனிதர்கள் இவர்கள்?அந்தப் பெண்ணை விரட்டி அடித்த மனிதர்கள்? அவள் சொன்னதை யாராவது முழுதாகவாவது கேட்டிருப்பார்களா? ‘’
சக மனிதனுக்காக ஒரு நிமிடம் கூட செலவழிக்காமல்,தோற்றத்தில் மயங்கி......
இதையே டிப் டாப் ஆக உடை அணிந்த யாராவது கேட்டிருந்தால்?
யோசித்துப் பார்க்கையில் நான் கூட அப்படி தான் நடந்து கொண்டேன் என்பதை நினைத்தால்....
இதற்கு,ஸ்கூல் படிக்கும் போது பிச்சை எடுப்பவர்களைக் கண்டால் மனம் வெம்பிய, ‘’கிறுக்கன்’’ என்று வீட்டிலும் வெளியிலும் வசவு வாங்கிய அந்த சிறுவன் எவ்வளவோ மேல்....
திரும்பிப் பார்த்தேன் அவரை....
‘’ரொம்ப நன்றிங்க எஜமான்.....’’
எஜமானா?இந்த பஸ்ல இருக்குற எல்லோரும் மூளை இல்லாத,பணத்தை தேடி அலையும்,மனிதாபிமானம் தொலைத்த பிச்சைகாரர்கள்மா...
என்னையும் சேத்து.......
பின்குறிப்பு: இது எனக்கும் கதை எழுதத் தெரியும் என்று காட்ட எழுதப்பட்ட பதிவல்ல.இதை கதை என்று சொன்னால் என்னை விட கயவன் யாரும் இருக்க முடியாது.இதில் வார்த்தைக்கு வார்த்தை எனக்கு நடந்தது.
இதை எழுதியதற்கு காரணம்,நான் நல்லவன் என்று காட்டுவதற்கு அல்ல.இப்படி பொதுவில் என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான்.
நான் செய்த முட்டாள்த்தனத்தை நீங்கள் யாரும் செய்து விடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கவே.
ஒரு காலத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த போது ,உதவி கேட்டு வந்தவருக்கு,உடனே இடது கையில் இருந்த பொற்க் கின்னத்தை கொடுத்த, ‘இடது கையால் கொடுத்தது ஏன்?’ என்று கேட்கப்பட்ட போது, ‘என் மனம் மாறுவதற்கு முன்னரே கொடுத்தேன்’ என்று சொன்ன கர்ணன் வழி வந்தவர்கள் நாம்.
இந்தப் பதிவை அப்பேர்ப்பட்ட நல்லவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
தமிழர்களின் முக்கிய குணாதிசயங்கள் நான் அறிந்தவரை.....
வீரம்,அன்பு,மானம்,கொடை..
வீரம் – காணாம போன வஸ்து.எங்க போனாலும் நம்ம தமிழன் அடி வாங்குவான்.Australia,srilanka,malaysia......you name it.....
ஏன்?தட்டிக் கேட்க மாட்டானுங்க. Pub புக்கு போற பயலுகள போராட்டத்துக்கு போக சொல்லுங்க...ஊஹும்....
மானம் –இந்த எழவெடுத்த கழக அரசியல் காரணமா இல்ல வேற ஏதாவது காரணமான்னு தெரியல.....இதுவும் காணாம போச்சு.....
கொடை-சொல்லவே வேணாம் நம்ம ஆளுங்க கொடை பத்தி.ஒரு ட்யூப் லைட் கொடுத்திட்டு அத ஏழு எடத்துல எழுதுற வள்ளலுங்க நாம....முக்கியமா,ஆட்சியில இருக்குரவனுங்க தொல்ல....கடமைய செய்யுறதுக்கு இவனுங்களுக்கு விளம்பரம் ஒரு கேடு....
அன்பு – தொலைஞ்சுகிட்டு வருது.....
தமிழனாக வாழ்வோம்னு இந்தப் புத்தாண்டில் சபதம் போடுங்கள்.......
அப்புறம்,entertainment blog அ சீரியஸ் ஆக்குனதுக்கு சாரி.அடுத்த பதிவுல இருந்து வழக்கம் போல புக்ஸ்,காமிக்ஸ் அண்ட் மூவீஸ்........ ஓகே?
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்......
//entertainment blog அ சீரியஸ் ஆக்குனதுக்கு சாரி //
ReplyDeleteநல்ல விஷயம் எழுதறீங்க.. அப்பறம் எதுக்கு சாரியெல்லாம்..
// வீரம்,அன்பு,மானம்,கொடை. //
விருந்தோம்பலை விட்டுட்டீங்க.. அதுவும் காணாம போச்சு..
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாத்திங்களா..விருந்தோம்பல் நெனவுக்கே வரல....அப்படி ஆயிட்டோம்....மாறணும்,முக்கியமா நான்...
ReplyDeleteஇலுமினாட்டி ரொம்ப நல்ல பதிவு. உதவி செய்தமைக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅய்யா சாமி . . தமிழனா வாழ்வத விட, ஒரு மனிதனா மொதல்ல வாழப்பார்ப்போமே . . தமிழனா வாழ்ந்தா, அப்பறம் கன்னடன், தெலுங்கன் கூட மல்லுக்கட்ட வேண்டி வரும் . . ;-)
ReplyDeleteரைட்டு.. வாழ்த்துக்கள்.. நல்ல விஷயம்
ReplyDeleteமனிதனாய் நடந்ததற்கு நன்றி..
ReplyDeleteஇன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆமாமா.. புத்தாண்டு வாழ்த்துக்கள தான் சொன்னேன்..
ReplyDeleteஇங்க கொஞ்சம் சின்னல் வீக்கு.. திரும்பவும் நாளைக்கு வாரேன்
ReplyDeleteநல்ல பதிவு...நல்ல விஷயம் இல்லுமினாட்டி....
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்..
//தமிழனா வாழ்ந்தா, அப்பறம் கன்னடன், தெலுங்கன் கூட மல்லுக்கட்ட வேண்டி வரும் . . ;-) //
ReplyDeleteதப்பே இல்ல பாஸ்.பணிஞ்சு போறது நல்ல விஷயம் தான்.ஆனா,மரியாத இருக்குற,நியாயமான இடத்துல மட்டும் தான் பணிஞ்சு போகணும்.சண்டைக்கு பயந்து இல்ல...
தமிழன்னு சொல்லிகிறதோ,மனிதன்னோ சொல்லிகிறதோ ஒரு பெரிய விசயமே கெடையாது.அத சொல்லிக்கிட்டு நீங்க என்ன செய்றிங்க அப்டிங்க்ரதுல தான் விசயமும்,அந்த வார்த்தைக்கு உரிய பெருமையும் இருக்கு.....
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteசிறப்பான ஆக்கம். அந்த அம்மாவின் மனதில் உங்கள் முகம் என்றும் மறையாது நண்பரே. தொடர்ந்தும் அவ்வப்போது சீரியஸாக எழுதுங்கள். சீரியஸான எழுத்துக்கள் உங்களிற்கு நன்றாகவே கைவருகிறது.
அழைக்காமலே வந்திருக்க வேண்டும்.. அழைத்த பின் தான் வந்தேன்.. மன்னிக்கவும்..
ReplyDeleteஎன் கண்களைத் திறந்து விட்டீர்கள்..
ஆம்.. பிச்சைக் காரர்களுக்கு ஒரு ரூபாய் கொடுக்க கை எடுக்கு முன், மனம் நூறு கணக்குப் போடுகிறது.. என் செல்போன் பில் இரண்டு நாள் தாமதமாகி விட்டது.. நாற்பது ரூபாய் அபராதம்.. நாற்பது பிச்சைக்காரர்களுக்கு பயன்பட்டிருக்கும்..வாழும் கொஞ்ச நாளில் பிறருக்கு பயன்படும்படியும் வாழ சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்.. எனக்கு நிச்சயம் பயன்படும். நீங்கள் மனிதரிடம் நேயம் காட்டுகிறீர்.. என் தாயும் அதே போல் தான். வீட்டைச் சுற்றி வரும் நாய், பூனைகள், ஆடுகள், மாடுகள், அனைவரின் வருத்தங்களையும்,தேவைகளையும் சொல்லாமலேயே புரிந்து கொண்டு, உதவி செய்பவர். எனக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்..பரிவு என்பது மனிதனிடம் மட்டுமே இல்லாது, நம்மை சுற்றி உள்ள மிருகங்கள், பறவைகள், இதர ஜீவ ராசிகள், ஏன், மரம் செடி கோடிகளுக்கும் நீள வேண்டும் என்பதே என் கனவு..
சிறந்த ஒரு பதிவு..
ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழம் அதிகமாக உள்ளது..
நன்றி
எழுத்து நடை அருமை நண்பரே!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//////பின்குறிப்பு: இது எனக்கும் கதை எழுதத் தெரியும் என்று காட்ட எழுதப்பட்ட பதிவல்ல.இதை கதை என்று சொன்னால் என்னை விட கயவன் யாரும் இருக்க முடியாது.இதில் வார்த்தைக்கு வார்த்தை எனக்கு நடந்தது./////////
ReplyDeleteஅதுதான் பதிவில் இருந்தே தெரிகிறதே .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
இல்லு, உங்களுக்கு தாராள மனசு
ReplyDeleteஒரு கவிதை ' கண்ணில்லாதவர் கையேந்துகிற போது நாமெல்லாம் குருடர்கள்' - கண்களை திறந்துபார்க்கும் மனோபாவம் நம்மிடையே வளர்த்துக்கொள்வதுதான், மனிதம் அருகிவிடவில்லை என்பதற்கான அடையாளம். வாழ்த்துக்கள். தொடர்கள் தங்கள் எழுத்துப்பயணம்.
ReplyDelete- சென்னைத்தமிழன்
எனது வலைதளத்தை வாசித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை கூறவும்.
ReplyDeletehttp://vijayarmstrongcinematographer.blogspot.com
இலுமி, நிதர்சனமான ஒரு உண்மையை பரைசாற்றியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு, தொடருங்கள்.
ReplyDeleteஉமக்கும் உங்கள் குடும்பத்துக்கும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பொதுவா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய்க்கு கணக்கு பாக்குற நாம தேவையில்லாத பொருள்களில் காசை கரியாக்குறோம். சின்ன வயசிலேந்தே அடுத்த வங்களுக்கு உதவி செய்ய பழக்கி வரனும் . அப்பதான் கருனைன்னா என்னன்னு மனசுல வரும்.
ReplyDeleteமனிதனாக நடந்து கொண்டதில் மகிழ்ச்சி. சிலருக்கேனும் இப்பதிவு உந்துதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்...
ReplyDeleteநான் என்னுடைய வாழ்வில் (சிறிதளவே ஆனாலும் கூட) பலரின் வீழ்ச்சியை கண்டிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிக, நடிகையர் பிச்சை எடுக்க கண்டிருக்கிறேன். பெரிய பெரிய இயக்குனர்களும், தயாரிப்பளர்களும் கடும் பஞ்சத்தில் இருக்க கண்டிருக்கிறேன்.
ReplyDeleteஇவ்வளவு ஏன், மிகப்பெரிய வெற்றிப்படதினை கொடுத்த ஒரு இயக்குனர் (அவர் இரண்டாவது படம் எடுக்கவே இல்லை) வேறு ஒரு பாட்டில் மதுவுக்காக அலைவதை கண்டிருக்கிறேன். ஆனால் அவர்களை மக்கள் உபயோகப்படுத்தவே நினைக்கின்றனர். யாரும் உதவ முன்வரவில்லை.
சினிமா என்றில்லாமல், பொது வாழ்க்கையில் கூட யாருமே விரும்பி பிச்சை எடுப்பதை விரும்புவதில்லை. அவர்களின் கஷ்ட காலம் அவ்வாறு செய்ய வைக்கிறது. எஸ்.ரா ஒருமுறை ஒரு கட்டுரையில் இதனை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.
சிறுவயதில் இருந்து (என்னுடய தந்தையின் பழக்கம்) எப்போதுமே என்னுடன் சில பல ருபாய் நோட்டுக்களை பகிர்வதர்க்காகவே வைத்திருப்பேன். அதனை ஒருபோதும் கொடுப்பதோ, பிச்சை அளிப்பதோ என்று கூறுவது கிடையாது. பகிர்வதே சரியான வார்த்தை.
எப்போதாவது ஒரு இரவு வேளையில் ஒரு வயதான மனிதர் உங்களிடம் யாசகம் கேட்கும்போது அவரிடம் ஒரு இருவது ருபாய் நோட்டை கொடுத்து இருக்கிறீர்களா? அட்லீஸ்ட் பத்து ருபாய்? தயவு செய்து ட்ரை செய்து பாருங்கள். அவர்கள் முகத்தில் தோன்றும் அந்த சந்தோஷம் வேறு எதிலும் காண இயலாது. கோடி ருபாய் கொடுத்தாலும் நம்மால் அவ்வாறு மகிழ முடியாது.
நான் காமிக்ஸ் ரசிகன் என்பதால் அந்த மொழியிலேயே ஒரு உதாரணத்தினை அளிக்கிறேன்: மினி லயன் காமிக்ஸில் "சொர்கத்தின் சாவி" என்று ஒரு கதை. அதில் அலிபாபா முஸ்தாபா தான் ஹீரோக்கள். அதில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதனை ஒரு பெட்டியில் வைத்து கடவுள் இவர்களிடம் கொடுப்பார். அதனை திறக்க இவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். கடைசியில் ஒரு சிறுவன் மகிழ்ச்சியோடு இவர்களை முத்தமிடும்போது அந்த பெட்டி திறந்துக் கொள்ளும். அதில் கூறப்பட்டு இருக்கும்" அடுத்தவரை சந்தோஷப்படுத்துங்கள் - அதுவே மகிழ்ச்சியின் மந்திரம்" என்று. உண்மைதானே?
கிங் விஸ்வா
ReplyDelete//
சிறுவயதில் இருந்து (என்னுடய தந்தையின் பழக்கம்) எப்போதுமே என்னுடன் சில பல ருபாய் நோட்டுக்களை பகிர்வதர்க்காகவே வைத்திருப்பேன். அதனை ஒருபோதும் கொடுப்பதோ, பிச்சை அளிப்பதோ என்று கூறுவது கிடையாது. பகிர்வதே சரியான வார்த்தை.//
நன்றி விஸ்வா சார்.... நல்லதொரு தமிழ் வார்த்தை..
//அந்த அம்மாவின் மனதில் உங்கள் முகம் என்றும் மறையாது நண்பரே.//
ReplyDeleteஅவங்களுக்கு நினைவு இருக்குமோ இல்லையோ,இந்த நிகழ்வு எனக்கு மறக்காது.
//தொடர்ந்தும் அவ்வப்போது சீரியஸாக எழுதுங்கள். சீரியஸான எழுத்துக்கள் உங்களிற்கு நன்றாகவே கைவருகிறது.//
ஏன் தல,இந்த போஸ்ட்லயும் என்ன நக்கல் பண்ணியே ஆகணுமா? :)
//பிச்சைக் காரர்களுக்கு ஒரு ரூபாய் கொடுக்க கை எடுக்கு முன், மனம் நூறு கணக்குப் போடுகிறது..//
//எப்போதாவது ஒரு இரவு வேளையில் ஒரு வயதான மனிதர் உங்களிடம் யாசகம் கேட்கும்போது அவரிடம் ஒரு இருவது ருபாய் நோட்டை கொடுத்து இருக்கிறீர்களா? அட்லீஸ்ட் பத்து ருபாய்?//
அப்படித்தான் பாஸ் இருந்தேன்.
முன்ன எல்லாம் பிச்சைக்காரர்களைப் பார்த்தா என்னால முடிஞ்சத கொடுப்பேன்.பல நேரங்கள்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்ததும் உண்டு.அப்படி இருந்த நான் இப்படி சல்லித்தனமா ஆகிட்டனேன்னு வருத்தப்பட்டு போட்டது தான் இந்த போஸ்ட்.இனிமே பழைய மாதிரியே தான் இருப்பேன்.நீங்களும் ட்ரை பண்ணுங்க.
சாமு,அப்புறம்,உங்க அம்மாவ கேட்டதா சொல்லுங்க.மனுசனையே மதிக்காத ஆட்கள் மத்தியில மிருகங்களுக்கும் உதவி செய்யும் அவரைப் போன்ற சிலர் இன்னும் இருப்பது நல்ல விஷயம்.
//' கண்ணில்லாதவர் கையேந்துகிற போது நாமெல்லாம் குருடர்கள்' - கண்களை திறந்துபார்க்கும் மனோபாவம் நம்மிடையே வளர்த்துக்கொள்வதுதான், மனிதம் அருகிவிடவில்லை என்பதற்கான அடையாளம். வாழ்த்துக்கள்.//
எவ்வளவு உண்மை.அருமையான கவிதை நண்பரே.
//பொதுவா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய்க்கு கணக்கு பாக்குற நாம தேவையில்லாத பொருள்களில் காசை கரியாக்குறோம். சின்ன வயசிலேந்தே அடுத்த வங்களுக்கு உதவி செய்ய பழக்கி வரனும் . அப்பதான் கருனைன்னா என்னன்னு மனசுல வரும்.//
உண்மைதான் ஜெய்லானி.நாம தேவை இல்லாம குடிக்குற கூல்டிரிங்க்ஸ்க்கு பண்ற செலவ கூட தெனம் நாம தர்மம் பண்ண செலவு பண்றது இல்ல.
//சிலருக்கேனும் இப்பதிவு உந்துதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்...//
ஏற்படுத்தினா சந்தோசம் ரோசு....
நன்றி சிவன், அன்பரசன், சங்கர், ஜெய், ரபிக்....
நன்றி..! திக்கென்று இருந்தது..
ReplyDeleteதாமதமாகத்தான் படித்தேன். இன்றைய சூழ்நிலைக்கேற்ற நல்ல பதிவு. நாம் மீட்டெடுக்கவேண்டிய விடயங்களை சரியாய்ச்சொல்லியிருக்கிறீர்கள். சீரியஸ் பதிவு உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteமனதை தொட்டுவிட்டீர்கள் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்
ReplyDeleteநீங்கள் சொல்லியது சரி சொல்ல வருவதை காது கொடுத்து கவனித்தாலே
தீர்வுகள் கிடைக்கும்
நன்றி உங்களுக்கு.(உங்கள் பெயர் சரியாகப் புரியவில்லை.
ReplyDeleteமன்னிக்கவும்.)என் தளம் வந்திருந்தீர்கள்.
அரசியலில்தான் அன்பும் தமிழின் அக்கறையும் குறைந்திருக்கிறதே தவிர சாதாரண தமிழன் மனதில் அன்பும் தமிழ் உணர்வும் இருக்கத்தான் செய்கிறது.உங்களின் பதிவின் உங்கள் உணர்வைக் காண்கிறேன்.வாழ்த்துகள் நண்பரே.
//
ReplyDeleteகேட்க மாட்டானுங்க. Pub புக்கு போற பயலுகள போராட்டத்துக்கு போக சொல்லுங்க...
//
தார்மீக கோபமில்லாமல் நாம் இங்கே இருப்பதால் தான் நாமே அதன் பலனை அனுபவிக்கிறோம்.
நீங்கள் இப்படியும் எழுதவும். நேர்மையான எழுத்துக்கள்.