மகதீரா - ஒரு விமர்சனம்......

-->

--> -->

ஹாய் பிரெண்ட்ஸ்.போன முறை நாவல்களைப் பத்தி பாத்தோம்.இப்போ 

மறுபடியும் பேக் டு பிலிம்ஸ்.எப்பயுமே பீட்டரா இருக்கறதால இந்த முறை 

தெலுங்குப் படமான “மகதீரா” பத்தி பார்க்கலாம்.என் பிரெண்ட் ஒருத்தன் 

இந்தப் படத்த ரொம்ப நாளாவே பாக்க சொல்லி நொச்சுப் பண்ணிக்கிட்டு 

இருந்தான்.இப்பதான் பார்த்தேன்.ரொம்ப நல்லாவே இருக்கு.


2009 ல சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜா,காஜல் அகர்வால் நடிப்பில் 

வெளி வந்தது இந்தப்படம்.கதை ரொம்ப சிம்பிள் பாஸ்.ஹீரோயினுக்காக 

சண்டை போட்டுக்குறாங்க  ஹீரோவும்,வில்லனும்.யார் ஜெயிக்கிறாங்க 

அப்டிங்க்றது தான் கதை.LKG படிக்குற புள்ள கூட சொல்லிடும் கதையோட 

முடிவ.ஆனா,இதுல முன் ஜென்மக்காதலையும் சேத்து அவங்க கொடுத்து 

இருக்குற ட்ரீட்மென்ட் தான் சூப்பரா இருக்கு.ஹர்ஷா (ராம் சரண் தேஜா), பைக் ரேசிங் மற்றும் பெட்டிங் செய்யுற 

ஒருத்தன்.ஒரு முறை தெரியாம ஒரு பொண்ணு விரலைத் தொட,அந்த 

தொடுதல்லையே அவளுக்கும் அவனுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம உறவு 

இருக்குறதா உணர்றான்.ஆனா பிரச்சன என்னனா, விரலப் பாத்த 

விளக்கெண்ண அந்த பிகரு மூஞ்சப் பார்க்காதது தான்.ஆனா பயபுள்ள உஷாரா 

அந்தப் பொண்ணு டிரெஸ்ஸ நோட் பண்ணிட்டு தேடித் பார்க்கறதுக்குள்ள அவ 

எஸ்கேப் ஆகிடுவா.அவள ஒரு பக்கம் தேட ஆரம்பிப்பான் ஹர்ஷா.இதே நேரத்துல,ஹீரோயின் 

இந்து (காஜல் அகர்வால்) மேல காமம் கொண்டு அவளையே எப்படியாவது 

கல்யாணம் பண்ணிக்கனும்னு வில்லன் ரகு வீர் (தேவ் கில்) 

ஆசைப்படுவான்.ரகுவோட அப்பா, இந்துவோட அப்பாகிட்ட இருந்து பறிச்ச 

சொத்த எல்லாம்,தன்னோட அப்பாவோட சாவுக்கு பின்ன  திரும்பக் 

கொடுக்குற மாதிரி வந்து அவ அப்பாகிட்ட சிநேகம் பண்ணிக்குவான்.கொஞ்ச நாள்ல ஹர்ஷாவுக்கும்,இந்துவுக்கும் லவ் ஸ்டார்ட் 

ஆகிடும்(ஆகலைன்னா தான் அதிசயம்).இந்த சமயத்துல,ஒரு சாமியார் 

சொல்லி,போன பிறவிலயும் தான் இந்துவ காதலிச்சதையும்,போட்டியா 

ஹீரோ இருந்ததையும்,இந்தப் பிறவிலயும் அப்படியே தான்னும் 

தெரிஞ்சுக்குவான் ரகு.இந்துவுக்காக தன் அப்பாவையே கொன்ன 

ரகு,ஹர்ஷாவையும் கொல்லனும்னு தேடுவான்.ஆனா,அவனுக்கு ஹர்ஷா 

பத்தி எதுவுமே தெரியாது.இது இப்படியே போய்க்கிட்டு 

இருக்குறப்போ,இந்துவோட அப்பாவுக்கும் அவளோட லவ் மேட்டர் 

தெரிஞ்சுடும்.ஒரே பொண்ணு ஆச்சேன்னு அவ அப்பாவும் ஒத்துக்குவாறு.இத தடுக்கவும்,இந்துவோட லவ்வ கெடுக்கவும் அவ அப்பன கொன்னு,அந்தப் 

பழிய அந்நேரம் வீட்டுக்கு வந்த ஹர்ஷா மேல போட்டுடுவான்.இந்து 

ஹர்ஷாவ வெறுக்க ஆரம்பிச்சுடுவா.இந்நேரத்துல தான்,ஹர்ஷாவும் தன்னோட முற்பிறவி பத்தி 

தெரிஞ்சுப்பான்.காலபைரவன் அப்டிங்கிற பேர்ல அவனும், இளவரசி மித்ரா 

தேவியா இந்துவும், இளவரசிய கைப்பிடிக்கப் போற சேனாதிபதி ரணதேவ் 

பில்லாவா ரகுவும் வாழ்ந்தத் தெரிஞ்சுக்குவான்.


மித்ராவும்,பைரவனும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணாலும்,அரசனோட 

வேண்டுகோளுக்காக தன்னோட லவ்வ கடைசி வர சொல்ல மாட்டான் 

பைரவன்.கடைசியில இந்தக் காதல் இவங்க மூணு பேரோட சாவுல போய் 

தான் நிக்கும்.போன ஜென்மத்துல நடந்த காதல் போர் இந்த ஜென்மத்துலையும் 

தொடர்றத தெரிஞ்சுக்குற அவன்,இதுக்கு ஒரே வழி இந்துவுக்கு 

எல்லாத்தையும் நினைவுப் படுத்துறது தான்னு முடிவு செய்வான்.ஆனா,இந்து 

ரகுவோட பாதுகாப்புல இருப்பா.இதுக்கப்புறம் என்ன ஆகும்னு நான் 

சொல்லவே வேண்டாம் மக்களே.காலம் காலமா லவ் படத்துல நடக்குறதே 

நடந்து,சுபம்.கதை கொஞ்சம் மொக்கையா தெரிஞ்சாலும் ஸ்க்ரீன்ப்ளே 

அதகளம்.முக்கியமா அந்த முன்ஜென்ம சீன்ஸ்.நல்ல Direction.கதையோட மொத சீன்,மித்ரா பைரவ்கிட்ட சாகுற நிலையுல,’இப்பயாவது உன் 

காதல சொல்ல மாட்டியா?சாகுறப்பயாவது ஒண்ணா கையப் புடிச்சுகிட்டு 

செத்துடுவோம்’னு சொல்லி கெஞ்சுதுறதுல ஆரம்பிக்கும்.அவ விரலைக் கூட 

தொடுறதுக்கு முன்னாடியே அவ பள்ளத்துல விழுந்துடுவா.ஹீரோவும் 

பின்னாடியே குதிச்சாலும்,அவ கைய எட்டிப் பிடிக்கவே முடியாது.இந்த விட்ட 

குறை,தொடாத குறைதான் அடுத்த ஜென்மத்துல ஹர்ஷாவுக்கு அவ விரல 

தெரியாம தொடுறப்போ நினைவுக்கு வரும்.இந்த சீன்ல நிமிர்ந்து உக்காந்த 

என்ன அடுத்து வந்த ஹீரோ இன்ட்ரோ சீன்ல (ஹர்ஷாவுக்கு) 

கடுப்பேத்திட்டானுங்க.ஒண்ணுமில்ல,பைக் ஸ்டுன்ட்  பண்ணி பெட்ல ஹீரோ 

ஜெயிக்குறது தான் சீன்.அந்த ரெண்டு நிமிசக் கொடுமைய 

தாங்கிடீங்கன்னா,அதுக்கப்புறம் மிச்சம் இருக்குற ரெண்டரை மணி நேரமும் 

சத்தியமா போர் அடிக்காது.ஆனா,ஒரு விசயத்த பாராட்டணும்.தமிழ் சினிமா 

அளவுக்கு இன்றோல சீன் ஓட்டல. உண்மைய சொல்லணும்னா படம் 

முழுக்கவே ஓவர் அலும்பு எங்கயும் கெடயாது. கொஞ்சம் அடக்கியே வாசிச்சு 

இருக்கானுங்க.கதையுல ஹர்ஷாவுக்கும்,இந்துவுக்கும் வர்ற ரொமான்ஸ் 

சீக்வன்ஸும்,இண்டர்வலுக்கு அப்புறம் வர்ற முன் ஜென்மத்து சீக்வன்ஸும் 

சூப்பர்.முன்னது குறும்பு நிரஞ்சதுன்னா,பின்னது பிரம்மாண்டம்.படத்த பாத்த 

பின்ன நாப்பது நிமிசமே வர்ற பைரவன்,மித்ரா,பில்லா கேரக்டருங்க மனசுல 

நிக்குற அளவுக்கு அதுல செம டெப்த்.அப்புறம்,ஆயிரத்தில் ஒருவன் நல்லா இருந்தது.இன்னும் கொஞ்சம் காசு 

இருந்திருந்தா இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு சொன்ன 

அண்ணனுங்களா.........தயவு செய்து இந்தப் படத்தப் பாருங்க.அத விட,இதுக்கு 8 

கோடி தான் அதிக பட்ஜெட்(40 கோடி).ஆனா,அந்தப் பழங்காலத்து 

 பில்டிங்கும்,ட்ரெஸ்சும்,ஆயுதங்களும் கண்ணுக்குள்ளேயே இன்னமும் 

நிக்குது.இதுல கிராபிக்ஸ அதிகம் நம்பாம செட்டிங்க்ஸ் எல்லாம் பட்டய 

கெளப்பி இருக்காங்க.அதனால, அந்தப் பழங்காலத்து செட்டிங்க்ஸ் எல்லாம் 


பிரமாண்டமா இருக்கு.இத விட முக்கியமான விசயத்த சொல்லிக்க 

ஆசைப்படுறேன் அண்ணனுங்களா.படத்துல சாதாரண கதை 

தான்னாலும்,ஸ்க்ரீன்ப்ளே சொல்லி அடிக்குது.(படத்துக்கு மட்டும் Collection 130 

கோடிக்கு மேலயாம்).டைரக்டர் செல்வா அண்ணனுக்கு,பாஸ் அடுத்த முறையாவது படத்துக்கு 

ஸ்க்ரீன் ப்ளே எழுத வருசங்கள செலவு பண்ணுங்க.
 காலபைரவனாவும்,ஹர்ஷாவாகவும் ராம் சரண் தேஜா.காதலிய 

தேடுறது,உருகுறதுன்னு இருக்குற ஹர்ஷாவ விட, ஆக்ரோஷம் காட்டுற 

காலபைரவனே மனசுல நிக்குறான்.அதுலயும், பழங்காலத்துல வர்ற ஒரு 

மெகா பைட் சீன்ல அவர் காட்டுற ஆக்ரோஷம்,யப்பா......முதல்  படத்துலையே 

நடிப்புக்கு அவார்ட் வாங்குன பயபுள்ளயாம் இது.அதே நேரம் ரொமான்ஸ்லையும்,டான்ஸ்லயும் மனுஷன் பின்றாரு.


காஜல் அகர்வால் இவ்ளோ அழகா?சோ க்யூட். நடிப்புலயும் சோடை போகல 

காஜல்.அங்கங்க இவங்க கொடுக்குற ரியாக்ஷன் ஜெனீலியா மாதிரி 

இருந்தாலும்,ஜெனீலியாவோட ஓவர் ஆக்டிங் இல்லாததால இன்னும் 

க்யூட்.பாடல்கள்ல இன்னும் அழகு.ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே இருக்கு.முக்கியமா,பாடல்கள்ல.

மியூசிக் படத்தோட தேவை தெரிஞ்சு பக்கவா கொடுக்கப்பட்டு 

இருக்கு,கத்திக்கு ஏற்ற உறை மாதிரி.முத  பாதிக்கு  

 துள்ளலாகவும்,பெப்பியாவும்,ரெண்டாவது பாதிக்கு ராயலாவும்......... 

கலக்கல்.பாட்டுக்கள் எல்லாமே நல்லா இருந்துச்சு(எனக்கு புரிஞ்சுக்குற 

அளவுக்கு தெலுகு தெரியும் மக்கா).முக்கியமா, தீர தீரா பாட்டும்,நாகோசம் 

 பாட்டும் .......படம் டவுன்லோட் பண்ண ஆசைபடுறவங்க,majaa.net ல போய் subtitle ஓட உள்ள 

torrent அ எடுத்துக்கலாம்.இல்ல,எனக்கு மெயில் அனுப்புங்க.நான் அனுப்புறேன்.
மகதீரா – சரியாக தயாரிக்கப்பட்ட மசாலா. தாராளமா பாக்கலாம்.

Comments

 1. //அப்புறம்,ஆயிரத்தில் ஒருவன் நல்லா இருந்தது.இன்னும் கொஞ்சம் காசு
  இருந்திருந்தா இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு சொன்ன
  அண்ணனுங்களா......//


  யோவ்.. செல்வா அண்ணன் என்ன, கொஞ்ச காசு கிடைச்சிருந்தா, நல்லா எடுக்கிறேனா சொன்னாரு.. ?இன்னும் நாளு ஊரப்பார்த்திருப்பேனு சொன்னாருயா..

  ஆமா மச்சி.. 2009ல இருந்து இன்னும் கோமாவுல தான் இருக்கியா.. அதுக்கப்புறம் ரொம்ப படம் வந்திடுச்சு.. அப்புறம்..சொல்ல மறந்துட்டேனே.. அ.இ.அ.தி.மு க்கு அம்மாதான் இன்னும் தலைவியா இருக்காங்க..இல்ல சும்மா ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு சொன்னேன்..

  ReplyDelete
 2. நல்ல எழுதிருக்க இல்லு
  ஆமா உனக்கு எத்துன லாங்குவேஜ் தெரியும் ?

  ReplyDelete
 3. இலுமி, மகதீரா படத்தை பற்றி தெலுங்கு அன்பர்கள் பெருமையாக விவரிப்பதை கேட்டு கேட்டு அந்த படத்தை பார்க்கும் ஆவல் அதிகமாகி வருகிறது. உங்கள் விமர்சனம் அதை இன்னும் பலபடுத்தி விட்டது. உங்கள் நடையில் அருமையான விமர்சனம்.

  சமீப காலமாக சரித்திரத்தை பிண்ணி, கிராபிக்ஸ் காட்சிகள் படைப்பதில் தெலுங்கர்கள் நம்மை மிஞ்சி காரியமாற்றுகிறார்கள். நம்மூர் ஆசாமிகள் இன்னும் தள தல என்று கூவி கொண்டே அலைய வேண்டியது தான்.

  மகதீரா படத்தை தமிழுக்கு டப் பண்ணி வெளியிட போவதாக பேச்சுகள் அடிபடுகிறது. நல்ல வேளை இந்த படத்தை நமது தளபதி கூட்டங்கள் ரைட்ஸ் வாங்கிட்டேன் பேர்வழி என்று குதறி நம்மை சிரமபடுத்துவதில் இருந்து தப்பித்தோம்.

  உங்கள் தளத்தில் பல தரபட்ட மொழிகளில் வெளியிடபடும் படைப்புகளை படையல் போட்டு கலக்கி கொண்டிருக்கிறீர்கள். நமக்கு தெரிந்த 2,3 மொழிகளை வைத்து நான் ஓட்டை போட் ஓட்டி காலம் தள்ளி கொண்டிருக்கிறேன். சமுதாயத்தில் தான் எத்தனை அநீதி :)

  ReplyDelete
 4. திரு ரபிக் அவர்களே.....

  நீங்க சொன்னது சரி தான் பாஸ்.இந்தப் படத்த தளபதிய வச்சு என்னால கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.ஏன் உமக்கு இந்தக் கொலை வெறி?ஒரு படம் நல்லா இருந்துடக்கூடாதே?
  அப்புறம்,ஏதாவது நக்கல் பண்ணனும்னா ஜிமெயில்ல வந்து நக்கல் பண்ணிட்டு போய்டுங்க.இப்டி பப்ளிக்ல வந்து நக்கல் பண்ணாதிங்க ப்ளீஸ்.
  எப்பா,எப்படி எல்லாம் கெளம்பி இருக்கானுங்க......ரூம் போட்டு யோசிச்சு நக்கல் பண்ணுவானுங்களோ? :)

  ReplyDelete
 5. நல்லா எழுதுனீங்க...

  ReplyDelete
 6. Thanks for coming annamalai sir....

  ReplyDelete
 7. ஒரே நாளில் மூன்று முறை நான் பார்த்து ரசித்த படம் இது.

  மே மாத முதல்வாரத்தில் இந்த படத்தை நாம் தமிழில் காணலாம். அல்லது ஏப்ரல் இறுதி வாரத்திலும் வரலாம். டப்பிங் முடிந்துவிட்டது.

  இன்னும் சற்று விரிவாகவே எழுதி இருக்கலாமோ? மேலும் பதிவின் பத்திகளை அலைன் செய்ய முயலுங்களேன், இன்னும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்குமே?

  ReplyDelete
 8. அடுத்து கவ்பாய் காவியமா?

  அசத்துங்கள்.

  ReplyDelete
 9. நண்பரே,

  நல்லதொரு பகிர்வு. விரல்களைத் தொட்டால் முன் ஜென்ம அனுபவம் வருமா. இன்று மாலையே ட்ரை பண்ணப் போகிறேன். துணிவே துணை :))

  ReplyDelete
 10. //மே மாத முதல்வாரத்தில் இந்த படத்தை நாம் தமிழில் காணலாம்//

  நல்ல விஷயம் தான் நண்பரே.இதைப் படித்த பின் சிலராவது பார்ப்பார்கள் இல்லையா?ஆனால்,personally எனக்கு அந்தந்த மொழிப் படங்களை அந்தந்த மொழியில் பார்ப்பதே பிடிக்கும்(ஹீ ஹீ சப்டைட்டிலோடு தான்).
  இந்தப் படம் எத்தனை முறை பார்த்து விட்டேன் என்று எனக்கே மறந்து விட்டது எனக்கு.Just about everything was perfect.

  அப்புறம்,அவசரத்துல எழுதி அவசரமா போஸ்ட் பண்ணினது இது.சோ,நோ alignment.சாரி கய்ஸ்.

  அப்புறம்,விஸ்வா தல,கற்பூரம் மாதிரி கப்புன்னு புடுச்சிட்டிங்க.அடுத்து unforgivin விமர்சனமே தான்.
  :)

  ReplyDelete
 11. காதலரே,
  அட விடுங்க பாஸ்,திராட்ச சாபுட்ற அழகப் பாத்து லவ் வர்ற காலம் பாஸ் இது.இது எல்லாம் சப்ப மேட்டரு.......
  இந்த மாதிரி கண்டதும் காதல் departmentல நம்ம கோலிவுட் எங்கயோ போயுடுச்சு.இவனுங்க இப்ப தான் ஆரம்பிச்சே இருக்கானுங்க சின்னப் பசங்க.படம் பார்த்துட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க. :)

  ReplyDelete
 12. அப்புறம் பிரண்ட்ஸ்,நான் எப்பயாவது நல்ல படம் பார்த்தா உடனே போஸ்ட் பண்ணிடுவேன்.அது நேத்து வந்ததா இருந்தாலும் சரி,நூறு வருசத்துக்கு முன்னாடி வந்ததா இருந்தாலும் சரி.தமிழ்படங்கள அழகா விமர்சிக்க ஆயிரம் பேரு இருக்காங்க.(Please note:அழகாக)
  அதனால தான் நான் பிற மொழிப்படங்கள மட்டும் விமர்சனம் பண்றேன்.நான் எழுதுறது கொஞ்சம் இல்ல ரொம்பவே மொக்கையா தான் இருக்கும்.கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கங்க ப்ளீஸ்.
  :)

  ReplyDelete
 13. அப்புறம் காதலரே,விரலைத் தொட்ட பின் விழுந்தது செருப்படியா இல்லை விளக்குமாத்து அடியா,இல்ல இன்னபிறவா என்று மெயில் அனுப்பவும்.நாளைப் பின்ன நான் உசாரா இருந்துக்கலாம்ல .....அதுக்கு தான்,ஹீ ஹீ ஹீ......

  ReplyDelete
 14. நண்பரே இலுமி,
  தமிழ்ல வந்த பிறகு பாத்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
 15. என்னடா இவன் திடீர்னு தெலுகு பக்கம் போய்ட்டான்...

  பாபு நீக்கு தெலுகு வச்சா? எலா அர்த்தமாயிந்தி நீக்கு??

  ReplyDelete
 16. தளபதிகள் பற்றி கூறினால் உமக்கு நக்கல் மாறியா தெரிகிறது... சரி சரி ஊர் வம்பு நமக்கு எதுக்கு... ஹி ஹி ஹி

  ReplyDelete
 17. ஓரேய்,நாகு அர்த்தம் ஆயிந்திரா .பாபு,நாகு தெலுகு கொச்ச கொச்ச தெலுசு.

  ReplyDelete
 18. மிகவும் அருமை நண்பரே .ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 19. பட்டாபட்டி.. said...

  யோவ்.. செல்வா அண்ணன் என்ன, கொஞ்ச காசு கிடைச்சிருந்தா, நல்லா எடுக்கிறேனா சொன்னாரு.. ?இன்னும் நாளு ஊரப்பார்த்திருப்பேனு சொன்னாருயா..

  ஆமா மச்சி.. 2009ல இருந்து இன்னும் கோமாவுல தான் இருக்கியா.. அதுக்கப்புறம் ரொம்ப படம் வந்திடுச்சு.. அப்புறம்..சொல்ல மறந்துட்டேனே.. அ.இ.அ.தி.மு க்கு அம்மாதான் இன்னும் தலைவியா இருக்காங்க..இல்ல சும்மா ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு சொன்னேன்..

  **********************************

  பட்டு...கமென்ட் போடறது எப்படின்னு எல்லாப்பயலுக்கும் ( எனக்கும் சேத்து தான்) கொஞ்சம் கத்துக் கொடுய்யா!

  ReplyDelete
 20. பட்டாபட்டி.. said...


  யோவ்.. செல்வா அண்ணன் என்ன, கொஞ்ச காசு கிடைச்சிருந்தா, நல்லா எடுக்கிறேனா சொன்னாரு.. ?இன்னும் நாளு ஊரப்பார்த்திருப்பேனு சொன்னாருயா..

  ஆமா மச்சி.. 2009ல இருந்து இன்னும் கோமாவுல தான் இருக்கியா.. அதுக்கப்புறம் ரொம்ப படம் வந்திடுச்சு.. அப்புறம்..சொல்ல மறந்துட்டேனே.. அ.இ.அ.தி.மு க்கு அம்மாதான் இன்னும் தலைவியா இருக்காங்க..இல்ல சும்மா ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு சொன்னேன்..
  ***********************************

  பட்டு...கமென்ட் போடறது எப்படின்னு எல்லாப்பயலுக்கும் ( எனக்கும் சேத்து தான்) கொஞ்சம் கத்துக் கொடுய்யா!

  ReplyDelete
 21. @@@@பட்டாபட்டி.. said...
  ஆமா மச்சி.. 2009ல இருந்து இன்னும் கோமாவுல தான் இருக்கியா.. அதுக்கப்புறம் ரொம்ப படம் வந்திடுச்சு.. அப்புறம்..சொல்ல மறந்துட்டேனே.. அ.இ.அ.தி.மு க்கு அம்மாதான் இன்னும் தலைவியா இருக்காங்க..இல்ல சும்மா ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு சொன்னேன்..////


  ஹா...ஹா...மரண கலாய்...!! :)

  ReplyDelete
 22. பட்டாபட்டி.. said...

  ஆமா மச்சி.. 2009ல இருந்து இன்னும் கோமாவுல தான் இருக்கியா.. அதுக்கப்புறம் ரொம்ப படம் வந்திடுச்சு.. அப்புறம்..சொல்ல மறந்துட்டேனே.. அ.இ.அ.தி.மு க்கு அம்மாதான் இன்னும் தலைவியா இருக்காங்க..இல்ல சும்மா ஒரு ஜென்ரல் நாலேட்ஸ்க்கு சொன்னேன்../////////  முழிச்சிக்கோ புரு குடிச்சிக்கோ

  ReplyDelete
 23. இலுமி படத்தை நல்லா இரசிச்சு பார்த்து எழுதியிருக்கே. ஒரு தமிழ்ப் படம் இருக்கு, படத்தின் பெயர் நினைவு வரவில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஒரு காலத்தால் அழியாத பாடல் ஒன்னு இருக்கு. நெஞ்சம் மறப்பது இல்லை,அது நினைவை இழப்பது இல்லை என்ற பாடல்.
  அதில் கல்யாண் குமாரும் தேவிகாவும்(கனகா அம்மா). லவ் பண்ணூவார்கள். நம்பியார் வில்லன், அப்படியே பூர்வ ஜென்மமும் வரும். அதில் கல்யாண் குமாரின் அப்பா நம்பியார். ஏழைப் பெண் தேவிகா என்று பண்ணையார் கதை வரும். மகாதீரா ஒரு ரீமேக். நன்றி. முடிந்தால் இந்தப் படத்தைப் பார்.

  ReplyDelete
 24. ஏங்க.. உங்களுக்கு கமெண்ட் போடுறவங்களுக்கு மட்டும்.. வித்தியாசம் வித்தியாசமா பேர் இருக்கே.. எப்படி?

  பட்டாபட்டி,
  மங்குனி அமைச்சர்
  ரெட்டை வால்ஸ்
  பித்தனின் வாக்கு...

  இந்த மஞ்ச ஜட்டி எங்க போனாரு? :)

  ReplyDelete
 25. இலுமினாட்டி என்கிற பெயர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஜில்லாவில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

  ReplyDelete
 26. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
  http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
  ###########

  ReplyDelete
 27. @பித்தனின் வாக்கு said...
  இலுமி படத்தை நல்லா இரசிச்சு பார்த்து எழுதியிருக்கே. ஒரு தமிழ்ப் படம் இருக்கு, படத்தின் பெயர் நினைவு வரவில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஒரு காலத்தால் அழியாத பாடல் ஒன்னு இருக்கு. நெஞ்சம் மறப்பது இல்லை,அது நினைவை இழப்பது இல்லை என்ற பாடல்.
  //

  நீங்க சொல்வதைப் பார்த்தால்.....
  . ஒருவேளை, அது ராமாயணமோ, இல்ல மகாபாரதத்திலோ இருக்கப் போகுது..எதுக்கும் ஓலைச்சுவடிய புரட்டிப்பாருங்க..

  ReplyDelete
 28. @ஹாலிவுட் பாலா said...
  ஏங்க.. உங்களுக்கு கமெண்ட் போடுறவங்களுக்கு மட்டும்.. வித்தியாசம் வித்தியாசமா பேர் இருக்கே.. எப்படி?
  பட்டாபட்டி,
  மங்குனி அமைச்சர்
  ரெட்டை வால்ஸ்
  பித்தனின் வாக்கு...
  //
  பட்டாபட்டி,
  இது உண்மையா வாங்கினதில்லை.. உழைத்து வாங்கினது சார்..

  பித்தனின் வாக்கு,
  பித்தன் சார் பத்தி நான் சொன்னா, ஆரஞ்சுதோல் பச்சிடிய அனுப்பிவெச்சுடுவார்..அதனால
  ஸ்கிப்..

  ரெட்டை வால்ஸ்
  இன்னொரு வால் சிங்கையில, வெளியூருங்கிற பேர்ல, குப்பை கொட்டிகிட்டு இருக்கு..ஆகவே இது காரணப் பெயர்..

  மங்குனி அமைச்சர்
  இது மட்டும் நிசம் சார்..

  ReplyDelete
 29. சூப்பரப்பு..
  தூள் கௌப்பு மாமே!
  நல்ல நல்ல பதிவுகளை நம்பி நாங்க இருக்கோம் இலுமி..

  ReplyDelete
 30. @@@ரெட்டைவால் ' ஸ் said...
  இலுமினாட்டி என்கிற பெயர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஜில்லாவில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.///

  ஹாலிவுட் பாலான்னு கத்துனா மன்னார்குடில முக்குக்கு முக்கு ரெண்டு தல எட்டி பார்க்கும்..அம்புட்டு பேமஸான பேரு..!! (டேய் ரெட்டை யார்ரா இந்த பீசு..புதுசா இருக்கு..!!)

  ReplyDelete
 31. அடங்கொக்க மக்கா...

  நான் கொஞ்ச லேட்டா.. இல்ல இவிங்க எல்லாம் ரொம்ப பாஸ்டா...?

  மகாதீரா படத்த நானும் மூணு தடவ பாத்திட்டேன்.. என்ன பாட்டுகள், என்ன படம்.. என்ன ஹீரோ... உண்மையைச் சொல்லனும்னா, தமிழ் நாட்டுல அந்த கேரக்டர எடுத்து நடிக்க யாருக்குமே தகுதி இல்ல... தில்லு இருந்தா நடிக்கச் சொல்லுங்க பாப்போம்.. மொதல் பாட்டுல ராம்சரண் ஆடுற டான்ஸ்.. வாய்ப்பே இல்ல... அப்பாவுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்கு... அப்புறம் ஹீரோயின்.. சூப்பர் நடிப்பு.. ராஜா காலத்துக் காட்சிகள் அப்பா... அந்த மணல் புதைக் காட்சிகள்... நீங்கள் கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு எழுதி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.. பாஷா தெரியாமலேயே இந்த படத்தப் பாக்கலாம்.. எதுக்கு டப்பிங்...டான்ஸ், ரேசிங், குதிரை சவாரி, பைட்டிங் என்று அனைத்துக்கும் தனி சிரத்தை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை ஒரு தவம் போல் செய்து இருக்கிறார் ஹீரோ..யோசிக்காம போய் பாருங்க எல்லாரும்.. இதுதான் என்னுடைய கருத்து...

  ReplyDelete
 32. அப்புறம் இல்லுமி..

  உங்களுக்குத் தனியாக தாங்க்ஸ் சொல்லணும்.. ஏன்னா கிளாசிக் அப்பிடீங்கற ஒரு அருமையான காதல் காவியத்தை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு..அந்தக் கடைசி ரயில் நிலையக் காட்சியில், இந்தப் பெண் அழும்போது கூடவே நானும் அழுதேன்.. உண்மை...

  ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி..

  ReplyDelete
 33. நல்ல விமர்சனம்...!!!
  தல...நானும் இந்த படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு இருக்கேன்...
  படத்தை எப்பவோ டவுன்லோடு செய்தாச்சு...சப்- டைட்டில் அப்போது கிடைக்கவில்லை...
  நீங்க இந்த சப்டைட்டில்-ஐ மட்டும் deepanadhi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிடுங்க....!!!

  ReplyDelete
 34. //அப்புறம் ஹீரோயின்.. சூப்பர் நடிப்பு..//

  தல,காஜல் அகர்வால் எங்கயோ போயிகிட்டு இருக்கு.நிமிசத்துக்கு ஒரு ரியாக்க்ஷன் காட்டுரதுல அதுக்கு நிகர் அதே.....

  // ராஜா காலத்துக் காட்சிகள் அப்பா... அந்த மணல் புதைக் காட்சிகள்...//

  உண்மை தான் தல..... படம் என்னைப் பொறுத்த வரை நாப்பது நிமிஷம் தான்.

  //நீங்கள் கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு எழுதி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்..//

  யோவ்,இத எல்லாம் பப்ளிக்ல சொல்லாத சாமு.நான் எழுதுறது பூராமே டம்மியா தான் இருக்கும்.இதுல ஒரு பதிவப் பத்தி மட்டும் பேசுறீங்களே.நீங்க ரொம்ப நல்லவருங்க ....

  அப்புறம்,classic படத்தப் பத்தி......
  அட என்ன சாமு,தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு.பிரிண்ட்ஸ்குள்ள நோ தேங்க்ஸ்.ஓகே?
  ஓகேன்னா ஓகே சொல்லுங்க.
  அப்புறம்,இன்னம் கொள்ளப் படம் இருக்கு பாஸ்,சொல்றதுக்கு....
  கூடவே வாங்க.....புக்ஸ்,காமிக்ஸ்,படம் ஒண்ணு விடாம எனக்கு பிடிச்சது எல்லாத்தயும் காட்றேன்.

  ReplyDelete
 35. //உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்.//

  யோவ்,ஜெய்லானி நீ ரொம்ப நல்லவன்யா.நீ இன்னமுமாயா என்ன நம்புற?

  ReplyDelete
 36. //நல்ல நல்ல பதிவுகளை நம்பி நாங்க இருக்கோம் இலுமி..//

  யாருயா இந்த பீசு?இங்கன வந்து இந்த மாதிரி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுறது?

  ReplyDelete
 37. சால பாக ராஸ்துன்னாரு. அவ்னு இக்கட சென்னைல , ஏ தியேட்டர்ல ஈ படம், சூபிச்சாரு?. செப்புத்தாரா?.

  ReplyDelete
 38. நேனு ஈ film அ theater ல சூடலண்டி.டவுன்லோட் சேஸ்தே சூஸ்தாணு.மீறு கூட அதே செய்யண்டி..

  ReplyDelete
 39. யப்பா.. ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் இந்த படம் பாத்தேன்... அலுக்கவே மாட்டேங்குது.. தியேட்டருக்கே போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்.. பசங்க எல்லாம் இந்தப் படத்த பத்தி தான் பேச்சு.. செல்போன் ல கூட இந்தப் பட மியூசிக்க தான் ரிங் டோனா வெச்சிகிட்டு திரியராணுக...

  ReplyDelete


 40. //காஜல் அகர்வால் இவ்ளோ அழகா? சோ க்யூட். //

  இலுமியையே திரும்பி பார்க்க வைச்சுட்டாங்களே!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

Punisher Max in Tamil.... (18+)

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

La Belle – துன்பம் தரும் அழகு........

Chicken with plums – அறுந்த நரம்புகள்....

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…