Maltese Falcon - காலமெனும் கொடியோன்….

the-maltese-falcon-book-cover


பணவெறியும், பதவிவெறியும் நிறைந்த சந்தர்ப்பவாதிகளைக் கொண்ட அறமில்லாத சமூகம் தான் hard boiled கதைகளின் அடிநாதம் எனலாம். Hardboiled டிடக்டிவ் கதைகளின் தந்தை என அழைக்கப்படும் டஷியல் ஹாமெட்டின் கதைகளில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். கதாநாயகன் முதற்கொண்டு கதையில் அனைவருமே பச்சை சந்தர்ப்பவாதிகளாகவும், சுயலாபத்திற்காக எந்தவிதமான செயலிலும் ஈடுபடத் தயங்காத நெறியற்றவர்களாகவும் தான் இருப்பார்கள். கதையின் ஹீரோ பாத்திரத்தில் உங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் ஆசை உங்களுக்கு இருந்தால், அதை விட மிகக்கசப்பான ஏமாற்றம் இருக்காது. பிங்கர்டன் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, பிரான்க் லிட்டில் எனப்படும் ஒரு தொழிலாளர் தலைவனைக் கொல்ல ஹாம்மெட்டிடம் விலை பேசப்பட்டது. அவர் மறுத்த பின்னர், சில நாட்கள் கழித்து, பிரான்க் லிட்டில் ஒரு கும்பலால் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் ஹாம்மெட்டை பாதித்தது மட்டுமல்லாது, பின்னர் அவர் எழுதப்போகும்  கதைகள் அனைத்திலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

மால்டீஸ் பால்கன் கதையும் இதில் இருந்து வேறுபட்டதல்ல. ஒரு சிறு கும்பல் அதிகாரத்திற்க்காகவோ, பணத்திற்காகவோ கொலை, கொள்ளை, வஞ்சகம், ப்ளாக்மெயில் போன்றவற்றின் வழியாகப் போராடுவது இதிலும் உண்டு. இக்கதையைப் பொறுத்தவரை, அது மால்டீஸ் பால்கன் எனும் சிலையைக் கைப்பற்ற நடக்கும் போராட்டம்.
தனியார் துப்பறிவாளர் சாம் ஸ்பேட் தர்ஸ்பி எனும் மனிதனைக் கண்காணிக்க வொண்டர்லி எனும் பெண்ணால்  அமர்த்தப்படுகிறான். கண்காணிப்பின் போது ஸ்பேடின் சகாவான மைல்ஸ் கொல்லப்படுகிறான். சிறிது நேரத்தில் தர்ஸ்பியும் கொல்லப்படுகிறான். இரண்டு கொலைகளின் பழியும் ஸ்பேடின் மீதே விழுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக தன்னை அமர்த்திய பெண்ணின் உண்மையான பெயரோ, நோக்கமோ அவள் சொன்னதற்கு சம்பந்தமேயில்லாதது என்பதையும் அறியவருகிறான். தெரிந்தோ தெரியாமலோ மிகச் சூழ்ச்சி மிக்க ஒரு போராட்டத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து கொள்ளும் ஸ்பேட், விளைவுகள் எப்படியிருந்தாலும் அதில் தனக்கும் ஒரு முக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தையும், வஞ்சகத்தையும் இணைத்து அதிலிருந்து வெளிவரத் துடிக்கும் பணவெறி பிடித்தவனாகவே ஸ்பேட் காட்டப்படுகிறான். சட்டத்திற்கோ, சமூகத்திற்கோ அவன் எந்த வகையிலும் கட்டுப்பட்டவன் அல்ல, பயந்தவனும் அல்ல. கூட்டமாக அமர்ந்து பொறுமையாக யாரைக் காவு கொடுக்கலாம் என விவாதிக்கும் கட்டத்திலேயே ஸ்பேட் மேல் இருந்த மிச்சசொச்ச நம்பிக்கையும் பொடியாகிவிடும். பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மற்றொரு கதாப்பாத்திரமாகவே அவன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான்.

கதை எழுதப்பட்டது 1930களில் என்பதாகக் கேள்வி. கதையின் சில இடங்கள் அதை தெளிவாகக் காட்டும். குறிப்பாக, சிகரெட் ஒன்றை அவன் மடிக்க ஆரம்பித்தான் என்று வரும் கட்டங்களில். தற்காலங்களில் எந்த வித லஜ்ஜையும் இன்றி உபயோகிக்கப் படும் “F*ck you” எனும் சொற்றொடரை உபயோகிக்க ஹாம்மெட் சுற்றிவளைத்துப்  படும் பாடு சிரிப்பையே வரவழைப்பது மட்டுமல்லாது, கதையின் வயதிற்க்கும் சான்றாகவே நிற்கிறது.
காலத்தின் ஓட்டம் கதையை மட்டுமல்லாது ஹாமெட்டின் எழுத்தையும் பாதித்திருக்கிறது. தெளிவான, எந்த வித தேவையற்ற விவரணைகளும் இல்லாத, சுருக்கமான, அழகான எழுத்தாற்றல் கொண்டவர் ஹாம்மெட் என்பதே அவர் குறித்து சொல்லப்படும் பொதுக்கருத்து. ஆனால் கதையில் இதை நிரூபிக்க சான்றுகள் அதிகமில்லை. ஹாமெட்டின் எழுத்து மிகச் சுலபமான நறுக்குத் தெரித்த முறையில் இருக்கவேண்டிய எண்ணத்தில் எழுதப்பட்டது. இவ்வகையான எழுத்தில் பிரச்சனை என்னவெனில், தவறாக கையாளப்படும் போது, இதுவே தொடர்பற்ற எழுத்துநடையாக தோன்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்தக் கதையில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் அனேகம். இது மட்டுமல்லாது, பத்து பக்கத்திற்கு ஒரு முறை ஒரு கதாப்பாத்திரத்தின் முக அமைப்பு பற்றி திரும்பத் திரும்ப சொல்வது அலுப்பையே தரும். எழுதப்பட்ட காலத்தில் வேண்டுமென்றால் இது மிகவும் போற்றப்பட்டவொரு கதையாக இருந்திருக்கலாம்.  ஆனால் இப்போது இதை விட ஆயிரம் மடங்கு சிறப்பான கதைகள் மலிந்து கிடக்கிறது. ஹாம்மெட்டின் எழுத்து பிற்காலத்தில் எந்த வகையில் பிற எழுத்தாளர்களின் எழுத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால் Hard-boiled ரசிகர்கள் இக்கதையைப் படிக்கலாமேயொழிய இக்கதையைப் படிக்க வேறு காரணங்கள் ஏதுமில்லை.
***********************************************************************************************************
The concept of a corrupt society filled with power hungry individuals is a constant underlying theme in Hammett’s work. Dashiell Hammett, while working as a detective for Pinkerton detective agency was offered a huge sum of money to kill off union leader Frank Little to suppress a labor strike (which he was working on at that time). Hammett refused and a short while later, Frank Little was lynched. This had a profound impact on Dashiell Hammett and would prove to be the central theme in most of his stories and there are no heroes, even if there is a central character. And if you want to identity with him, you are up for a sore disappointment.
Maltese falcon is another perfect example of the same theme where a group of people struggle within themselves through course of murder, blackmail and double-cross to get ahold of something of monetary value or power, which in this case, is a statuette: Maltese Falcon.
When detective Sam Spade is employed by a Miss. Wonderly to spy on a man called Thursby, Spade’s partner Miles Archer dies in the stakeout and shortly thereafter, so does Thursby. Spade finds himself accused of both the murders and Miss. Wonderly is not quite who she claims to be. Spade is soon caught in a desperate struggle for power and money where he has a key role to play whatever the outcome is going to be. Spade is portrayed as a ruthless, power hungry opportunist, no different from the rest of the villains. He is willing to use his intelligence and cunning to come out of the struggle on top, even if it takes to stand on someone’s crushed head. He has no regard for morale or law. Nor is he fearful of it. The point where he sits down comfortably and discusses calmly who is to be sacrificed would shatter any of your hopes for him being remotely likeable.
The story was written in 1930’s and it shows in most places, especially upon reading that Spade sat down to roll a cigarette. It is funny to see Hammett taking pains to indicate the usage of the “F*ck you” sentence that is being used without any shame or restraint these days. The story is not the only thing that has been affected by the flow of time. Hammett’s writing suffers a lot too. Hammett has always been praised for his concise and elegant writing, but having read Red harvest, I can assure you that this is neither his most elegant nor the most concise. Here, the prose is slightly inarticulate, not very concise, bit rambled up and a bit cumbersome. Hammett distinctive style is noted for its simplicity and its snappy prose, but there are times, when handled wrong, it just feels messy rather than snappy and Maltese falcon has a lot of those moments. Case in point, the descriptions of facial features that you’ll find often in the story. No one needs to be told how V a certain face looks every ten pages. Maybe Maltese falcon was a towering triumph when it was written, but there are tons of better stories around these days. If you are a hard-boiled fan and would like to check out how Hammett’s writing influenced the later writers, do check this out. I found no other reasons.
 
Rating: 2/5.





Comments

  1. Yes, there is a film version starring Humprey Boggart and I do wonder if it is the only reason for the staggering acclaim this novel has.

    ReplyDelete
    Replies
    1. Joel Cairo: You always have a very smooth explanation ready.
      Sam Spade: What do you want me to do, learn to stutter?

      ― Dashiell Hammett, The Maltese Falcon

      “He looked rather pleasantly, like a blonde satan.”
      ― Dashiell Hammett, The Maltese Falcon.

      “Yes,' Spade growled. 'And when you're slapped you'll take it and like it.'

      Delete
  2. என்னய்யா ஆரம்பம் இது! குள்ள நரிகள் கூடிக் குலவி கும்மாளமிடும் குடிசை ஒன்றின் மீதான மெளன நிலவின் குருட்டுப்பார்வையை போர்த்திய சமூகமது.... இப்படி ஆரம்பிச்சிருந்தா சாணிப் பிள்ளையாரை கோலத்தின் மீது வைத்தது போல் பதிவு ஜெகஜ்ஜோதியாக ஆரம்பித்திருக்கும். முடியாது என்பதை ஒத்துக்கும்..... :))

    //சட்டத்திற்கோ, சமூகத்திற்கோ அவன் எந்த வகையிலும் கட்டுப்பட்டவன் அல்ல, பயந்தவனும் அல்ல. கூட்டமாக அமர்ந்து பொறுமையாக யாரைக் காவு கொடுக்கலாம் என விவாதிக்கும் கட்டத்திலேயே ஸ்பேட் மேல் இருந்த மிச்சசொச்ச நம்பிக்கையும் பொடியாகிவிடும்// ஹார்ட் பாய்ல்ட் நாயகர்களிற்குரிய குணாதிசயங்களை சுருக்கமாக சிறப்பாக வெளிப்படுத்திய வரிகள்.

    ஆம், ஹேமெட்டின் எழுத்துக்கள் தரும் அனுபவத்திற்காக வேண்டுமானால் படிக்கலாம் என்பது உண்மையே ஆனால் இன்றும் அவரை விட மோசமாக எழுதுபவர்கள் உள்ளார்கள் என்பதையும் மறந்து விடலாகாது :)

    ReplyDelete
    Replies
    1. சாணி பப்ளிக்குக்கு எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரலைங்க. :)

      Delete
    2. அதுக்கு பாட்டும்பீங்க, சாரீரம்பீங்க, சரீரம்பீங்க, சம்சாரம்பீங்க, சாராயம்பீங்க, ஈர வெங்காயம்பீங்க...
      எனக்கெதுக்கு இந்த இம்சை எல்லாம்? :)

      Delete
    3. சங்கத்தமிழ் வளக்க நம்ப க்ரூப்ப பார்த்தா சாணிப் பப்ளிக் என்கிறீர்... ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)

      Delete
  3. கனவுகளின் காதலன் பின்னூட்டமிடுவதை இப்போதுதான் முதலில் பார்க்கிறேன்.
    யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
    சற்று பொறாமையோடு வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாக்கியமா? அடப்போங்க பாஸு. தமாசு பண்ணிக்கிட்டு. பாரிஸ் சப்வேல பிகர சைட் அடிச்சுகிட்டு பீர ராவா அடிச்சிட்டு இருக்கும் இந்தப் பீசு. இதையெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டு. :)

      Delete
    2. ஆமா, என்ன பாஸ் ஆச்சு? அம்னீசியாவா? கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலன்னா எல்லாத்தையும் மறந்துட்டீங்களா என்ன? ;)

      Delete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........