She’s Out Of My League - பொருந்தாக் காதல்…




எப்போதாவது ஒரு படத்தை எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து,அது எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்திருக்கிறதா?அப்பேர்ப்பட்ட படம் தான் இந்த She’s Out of My League....

கதை என்னன்னா,well, the title says it all !

அதாவது,ஒரு சுமாரான இளைஞன்,ஒரு மிக அழகான பெண்...

இந்த இருவருக்கும் இடையில தற்செயலா ஏற்படும் காதல்,மோதல்,பிரிவு,ஒன்று சேருதல்... அவ்ளோ தான்.அட,அமெரிக்க காதல் படங்கள்ல வேற என்ன பெருசா எதிர்பார்க்க முடியும்? ;)

கிர்க் (Kirk Kettner) Pittsburg இல் வாழும், அங்கே உள்ள ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி ஆபீசராக பணிபுரியும்,inferiority complex கொண்ட, மகா ஈகோ பிடித்த self centred ஆன தன்னுடைய முன்னாள் காதலியை திரும்ப பெற துடிக்கும் (அவ்ளோ பிடிக்கும்னு இல்ல,அவனுக்கு வேற எதுவும் மடியாததால..),ஒரு மிகச் சுமாரான இளைஞன்.அவனது நண்பர்களின் கணக்குப்படி அவனுக்கு ஒரு 5 மார்க் தரலாம்.

ஒருநாள் தற்செயலா மோலி(Molly McCleish) அப்டிங்கற ஒரு பொண்ணை ஏர்போர்ட்ல   சந்திக்கிறான்.அவளோட ஐ போன ஏர்போர்ட் செக்யூரிட்டி ஏரியால மறந்து வச்சுட்டுப் shes_out_of_my_league_001போய்ட,அந்த ஐ போனை எடுத்துக் கொண்டு போய் அவகிட்ட கொடுக்குறான்.அங்க மெல்ல நட்பு தொடங்குது ரெண்டு பேருக்கும்.போகப் போக,அவனோட கேரக்டர் பிடிச்சுப் போயிடுற மோலி அவனை காதலிக்க ஆரம்பிக்கிறா.ஆனா கிர்க்கோட நண்பர்கள் அதிர்சியாகுறாங்க.அஞ்சு மார்க் ஆளான இவனை பத்து மார்க் பிகரு எப்படி லவ் பண்ணுதுனு மண்டைய உடைச்சுக்குறாங்க.இப்படியே போய்க்கிட்டு இருக்கறப்ப தான் தெரியவருது,மோலியின் பழைய காதலன் அழகானவனா இருந்தாலும்,ஈகோ பிடிச்ச கேரக்டர் உடையவனா இருந்து அவனால அவ ரொம்ப கஷ்டப்பட்டது.ஒரு வேளை,அதனால தான், for a safer side, ஒரு சாதாரண ஆளை லவ் பண்றான்னு இவங்க நினைச்சுகுறாங்க.இந்தப் பிரச்சனையும், கிர்க்க்கு இருக்குற inferiority complex உம் சேர்ந்து ஒரு சண்டைக்கு வழிவகுக்க,ரெண்டு பேரும் பிரியுறாங்க.தன்னோட பழைய காதலியோடயே சேர நினைக்குறான் கிர்க்.ஆனா ஈகோ பிடிச்ச அவளோட இவன் சேர்றத இவன் பிரண்ட்ஸ் விரும்பலை.என்ன நடந்தது?காதலர்கள் எப்படி சேர்ந்தாங்கனு மிச்சக் கதை சொல்லுது.Shes Out Of My League movie image (3)shes-out-of-my-league-20091222011443637_640w

படத்தோட பலமே கேரக்டர்கள் தான். 

எப்பயுமே அவனை கிண்டல் செய்துகிட்டு,ஆனா அவனோட லவ்வுக்கு எல்லா உதவியும் பண்ணுற கிர்க்கின் நண்பர்கள்,

முதல்ல கிர்க்கை வேணாம்னு சொல்லிட்டு,பின்ன தன்னை விட ஒரு நல்ல பொண்னு அவனை விரும்புறது தெரிஞ்சதும் அவனை அடைய நினைக்குற அவனோட self centred காதலி,

எப்பப் பார்த்தாலும் சண்டைக்கோழியா திரியும் மோலியின் காதலி Paddy,

எப்பயும் paddy கூட சண்டை போட்டுக்கிட்டு,தன்னுடைய மார்க் சிஸ்டம்ல மகா நம்பிக்கை வச்சுக்கிட்டு, ’உன் காதல் வேலைக்கு ஆவாது’ னு சொல்லிக்கிட்டு,அதே நேரம் உதவியும் செய்யுற stainer,

ஒரே ஒரு தடவ பார்த்த ஒருத்தி ‘நல்லா இருக்கே’ சொன்னத பிடிச்சுகிட்டு,அவளைப் பத்தியே விசாரிச்சுகிட்டு, சின்னப்பிள்ளை மாதிரி சுத்துற இன்னொரு நண்பன்னு படம் முழுக்க எல்லா கேரக்டரயும் ரொம்ப கலர்புல்லா உருவாக்கி இருக்காங்க.காமெடி கலந்த கதை படத்தை இன்னும் ரசிக்கச்செய்யுது.

இந்தப் படம் ஒண்ணும் பெரிய காதல் காவியம் கிடையாது.ஆனா,கண்டிப்பா நல்ல படம்.டிவிடி கிடைச்சா கண்டிப்பா பார்க்கலாம்.

She’s out of my league – Will not be out of your league....

Rating: 7/10.


ஒரு சின்னப் பின்குறிப்பு: அந்த ஹீரோயின்க்கு பத்து மார்க் எல்லாம் ரொம்ப ஓவர்.என்னைக்கேட்டா ஒரு 7 மார்க் கொடுப்பேன். ;)

Comments

  1. தல கதை கொஞ்சம் சுமார்தான் .. நீங்க சொல்லிடீங்க நல்லா இருக்கும்னு... அதான் நம்பி download பண்ணி பாக்க போறேன் ... பின்விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு சொல்லிட்டேன் ...

    ReplyDelete
  2. "my sassy girl" review எப்ப எழுத போறீங்க தல ..

    ReplyDelete
  3. ஹாஹா, நான் தான் சொன்னேனே,இது ஒரு ஜாலி என்டர்டைனர் அவ்ளோ தான். :)
    படம் தாராளமா பார்க்கலாம்.

    ReplyDelete
  4. //"my sassy girl" review எப்ப எழுத போறீங்க தல ..//

    தெர்ல தல. நான் எழுத பயப்படுற பதிவுகள்ல அதுவும் ஒண்ணு. :)

    ReplyDelete
  5. //இந்தப் படம் ஒண்ணும் பெரிய காதல் காவியம் கிடையாது.ஆனா,கண்டிப்பா நல்ல படம்.டிவிடி கிடைச்சா கண்டிப்பா பார்க்கலாம்///

    அப்படின்னா முயற்சிக்கலாம் ..!!

    ReplyDelete
  6. //ஒரு சின்னப் பின்குறிப்பு: அந்த ஹீரோயின்க்கு பத்து மார்க் எல்லாம் ரொம்ப ஓவர்.என்னைக்கேட்டா ஒரு 7 மார்க் கொடுப்பேன்//

    நீங்க போட்டிருக்குற படத்தப் பார்த்தா 7யே அதிகம் மாதிரி தெரியுதே.. நீங்க சொன்னது + or - ?

    ReplyDelete
  7. //நீங்க போட்டிருக்குற படத்தப் பார்த்தா 7யே அதிகம் மாதிரி தெரியுதே.. நீங்க சொன்னது + or - ?//

    எப்டி வேணும்னா எடுத்துக்கலாம். :)
    நானு மகா தாராளமா மார்க் கொடுத்து இருக்கேன்.
    ஆனா ஒண்ணு,ஹீரோயின் சப்ப பிகர் மச்சி! ;)

    ReplyDelete
  8. நண்பரே,

    அடுத்த பதிவும் காதல் என்றால் உம்மை ரவுடிக் காதலர்களை வைத்து அடிக்க ஏற்பாடு செய்வேன் என எச்சரிக்கிறேன் :) நீங்க மார்க்ஸ் போடுங்க விடுங்க அந்தக் குட்டிக உங்களிற்கு என்ன மார்க் போடுவாங்க அப்டின்னு கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க அய்யா :)

    ReplyDelete
  9. இந்த படம் கொஞ்சம் போர் படம்தான். ஒரு தடவை பார்க்கலாம். (இது என் கருத்து மட்டுமே)!

    நான் உங்ககிட்ட இருந்து திரில்லர்/ஹாரர் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. //அடுத்த பதிவும் காதல் என்றால் உம்மை ரவுடிக் காதலர்களை வைத்து அடிக்க ஏற்பாடு செய்வேன் என எச்சரிக்கிறேன் //

    இதுக்காகவே நானு அடுத்தும் காதல் பதிவு தான் ஓய் போடுவேன். ;)

    // நீங்க மார்க்ஸ் போடுங்க விடுங்க அந்தக் குட்டிக உங்களிற்கு என்ன மார்க் போடுவாங்க அப்டின்னு கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க அய்யா//

    பசங்க என்னைக்கு மார்க் பத்தி கவலைப்பட்டு இருக்காங்க அய்யா? பொண்ணுக தான்.. ;)

    ReplyDelete
  11. அய்யயோ!! இலுமி ப்ளாக் காணோம்... யாராவது பாத்திங்களா?? எந்த பாவி சூனியம் வச்சானோ. பக்கம் பக்கமா எழுதின புள்ள இப்படி பத்து வரில எழுதி இருக்கே....

    என்னா மச்சி உடம்பு எதாவது சரி இல்லையா இவ்வளவு சின்னதா பதிவு :)))

    ReplyDelete
  12. நண்பர் எஸ்.கே,

    this is just for a breather friend. :)

    இன்னும் நிறைய நல்ல படங்கள் இருக்கு தல எழுத.நான் தான் ஒரே மாதிரி இருக்க வேணாம்னு,கொஞ்சம் சாதாரண போஸ்ட் ஒண்ணு போட்டேன். :) banlieu 13 கூட இப்படி போட்ட போஸ்ட் தான். அடுத்து invictus,prince of persia னு நிறைய இருக்கு.:)

    ReplyDelete
  13. // பக்கம் பக்கமா எழுதின புள்ள இப்படி பத்து வரில எழுதி இருக்கே....

    என்னா மச்சி உடம்பு எதாவது சரி இல்லையா இவ்வளவு சின்னதா பதிவு :) //

    இப்படி தான் எப்பவுமே! :)

    ReplyDelete
  14. சூப்பர் தல.வாழ்க்கையில கூட நெறைய விசயம் இப்படித்தான். இன்விக்டஸ்லாம் வேணாம்.ஏற்கனவே தேளு எழுதிப்புட்டாரு.நீங்க நம்ம வூர் படமான கொரொய படங்கள எழுதுங்க ஜி.

    ReplyDelete
  15. யோவ் மரா.. இன்விக்டஸ நானு இன்னும் பாக்கவே இல்ல.. அப்புறம் எப்புடிய்யா எளுத முடியும் :-) ..

    பிச்சி புடுவேன் பிச்சி

    ReplyDelete
  16. இந்த மாதிரி ரோம்காம்ஸ் எங்களுக்கு ரொம்பப் புடிக்கும்.. வாரத்துக்கு அட்லீஸ்ட் 3-4 படம் பார்த்துருவோம், இந்த ஜெனர்ல.. நானும் சீக்கிரம் ஒரு ரோம்காம் பத்தி எழுதுறேன் ;-)

    ReplyDelete
  17. //இன்விக்டஸ்லாம் வேணாம்.//

    அப்டியெல்லாம் எஸ்கேப் ஆவ முடியாது.ஏற்கனவே எழுதியாச்சு. ;)

    //நீங்க நம்ம வூர் படமான கொரொய படங்கள எழுதுங்க ஜி.//

    யோவ்,சத்தமா சொல்லாதயா.நம்ம ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிடுவாணுக. :)

    ReplyDelete
  18. //நானும் சீக்கிரம் ஒரு ரோம்காம் பத்தி எழுதுறேன் ;-)//

    எழுதுங்க,எழுதுங்க..

    //நபநஇ :-)//

    நமநம ;)

    ReplyDelete
  19. //இன்விக்டஸ நானு இன்னும் பாக்கவே இல்ல.. அப்புறம் எப்புடிய்யா எளுத முடியும் :-) ..//

    அக்காங்!எழுதினது காதலர். பாலா எழுதினாரானு தெர்ல.

    போஸ்ட் எழுதியாச்சு.போட வேண்டியது தான் பாக்கி! ;)

    ReplyDelete
  20. எனக்கென்னவோ, ஹாரர் படங்களை விட, மெல்லிசை போல மென்மையான படங்கள் மட்டுமே பிடிக்கின்றன... அந்த வகையில் இதனைக் கட்டாயம் பார்க்கிறேன்.. அருமையான விமர்சனம்...

    ReplyDelete
  21. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_26.html

    ReplyDelete
  22. // பக்கம் பக்கமா எழுதின புள்ள இப்படி பத்து வரில எழுதி இருக்கே....

    என்னா மச்சி உடம்பு எதாவது சரி இல்லையா இவ்வளவு சின்னதா பதிவு :) //

    இப்படி தான் எப்பவுமே! :) //

    அப்புடி எல்லாம் சொல்லக்கூடாது ...........
    பக்கம் பக்கமா எழுதுனாதான் நாங்க ஒத்துக்குவோம் :))
    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…