மல்லோரியும் , மதராசப்பட்டினமும் ....

-->
Guys,I have an announcement to make. Most of you might not know that I started writing this blog in English at first. Then, upon several advices and warnings ( :) ) , I started to write in Tamil. But, after that,from time to time there comes occasionally the urge to write again in English. So,now I have decided to write in both.

The posts on movies will be done in Tamil,as usual.But, the posts on comics and novels (Mind you,they are about English books,so why should not I write about them in English?) will be done in English henceforth. So, English posts will be quite less.

So instead of whining over it,just try and get on with it. Let this be a learning ground and a fun ride for us both...

 As this is the first time, I have written in English as well as in Tamil.



Mallory.....  




They came to London in search of a man. A man who is very smart, dangerous, cold, evasive and who is also a traitor.....

They were originally a French revolutionary group, consisting of nine. With a devoted and smart leader called Pierre at the lead, they wrecked havoc and gave serious trouble to the Germans, until the Gestapo caught three of the group.

The torture by Gestapo cost one of the three, Rayleigh, an arm and an eye......

It gave Jeanie, the lover of Pierre, a hell specially reserved for women.

But they did not reveal anything. They were inclined not to, when the third guy, Mallory stepped in and blurted out everything, voluntarily, resulting in the death of three of his own team, including their leader.

Now, what is rest of the group is out for vengeance. After readying the money necessary, the group comes to London in search of Mallory. But they are in for a nasty surprise. They thought that five of them can handle Mallory quite easily, until two dies on the chase.

They decide to get outside help, from an ex commando, Martin Corridon. But, Martin has plans of his own for he is a cheater. He plans to double cross them once he gets the advance money, which is half the amount he has agreed for. But, now Martin is bound for a nasty surprise too. It did not work out that way. He finds himself lured into a situation where there is no other alternative than to trail and find Mallory, with the help of the team containing......

Jan – A ruthless and cruel man who would stop at nothing because of the loss of his wife on the Gestapo attack and holds it on Mallory, whom he wants to murder.

Jeanie – Driven half crazy, trauma after trauma, she wants Mallory dead for his betrayal.  

Rayleigh – A noble comrade, who assists Jan and Jeanie.

Martin – Out of desperation to clear himself from the situation that will eventually lead to his death.

Entangled in a mesh of vengeance, blood, murder, hatred and love,  Corridon  has to find Mallory to save himself.

With everybody having an intention of  their own, a desperate search starts, for the elusive, cold hearted, traitorous Mallory who is also a ruthless murderer.

Written by James Hadley Chase, this is one seriously thrilling novel that gets better by the word and throws suspense after suspense every passing page.....
Rating: 4 / 5 .
 *************************************************************************
மதராசப்பட்டினம்...


 






 







ஒரு மாசத்துக்கு முன்னாடியே இதை facebook ல கிழிச்சப்ப, ’கழுத,இதைப் பத்தி ப்ளாக்ல எழுதக்கூடாது’ன்னு நினைச்சேன்.ஆனா,சும்மா சும்மா கடுப்பு ஏத்துராணுக.ஒரு படத்த காபி அடிக்குறவனே ஓவர் சவுண்ட் கொடுக்க மாட்டான்.இவனுக மானாவாரியா காபி அடிச்சிட்டு,ஓவரா பேசுராணுக....
கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு பேப்பர்ல பார்த்த இந்தப்படத்தோட ஒரு விளம்பரம் தான்,இப்ப ஏறி இருக்கும் கடுப்புக்கு காரணம். அதாவது மாவட்டவாரியா டிக்கெட் கிடைச்சவங்க இத்தனை,டிக்கெட் கிடைக்காம பார்காதவங்க இத்தனை னு ஒரு கணக்கு(??) காட்டி,ஓவர் சீன் போட்டு இருந்தாணுக.அதுல முடிவு பண்ணினேன் இதைக் கொஞ்சம் கிழிச்சாதான் சாந்தி அடையும்னு.
சரி,இப்ப கதைய பார்க்கலாம்.
அதாவது, வருஷம் 1958,அமெரிக்காவை சேர்ந்த கேட்,குடும்பத்தோட கியூபா வர்றா.அங்க ஒரு ஜாவியர்னு ஒரு ஏழை சர்வர் கூட பழகி,லவ் பண்ண ஆரம்பிக்கிறா.ஆனா, அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் அப்ப ஒரு பிரச்சனை எழுது.
அதனால,கியூபாவுல இருக்கிற அமெரிக்க மக்களை எல்லாம் வெளியேத்துராறு காஸ்ட்ரோ.இதனால கேட் கியூபாவை விட்டுப் போகவேண்டியதா இருக்கு.அது பனிப்போர்க் காலம்.எப்ப நிலைமை சரியாகும்னு தெரியாது.அதனால காதலர்கள் இருவரும் எப்ப பார்துப்பாங்க னு கூட தெரியாது.என்ன ஆச்சு?கேட் போனாளா?இல்லையா? இது தான் கதை.

என்னடா,மதராசப்பட்டினம் கதைய சொல்றேன்னு சொல்லிப்புட்டு,வேற எதையோ சொல்லிக்கிட்டு இருக்கானே னு பார்க்குறீங்களா?

அண்ணே,மதராசப்பட்டினம் கதையே இது தான்!

சரி,கதைய Dirty Dancing: Havana Nights (2004) ல இருந்து உருவியாச்சு.ஆனா,இப்படி சாதாரணமா சொல்ல முடியாதே! என்ன செய்யலாம்?பரபரப்பா காட்டனுமே! கழுத,இருக்கவே இருக்கு சுதந்திரப் போராட்டக் காலம்.அப்புடியே அங்கன ஷிப்ட் பண்ணுவோம் கதைய....

அப்புடியே அமெரிக்கப் பொண்ணுங்றதுக்கு பதிலா பிரிட்டிஷ் பொண்ணுனு மாத்துவோம்.அடடே,மொக்கையா ஒரு பிரிட்டிஷ் பொண்ணு,லவ் அப்டின்னா ஓடாதே!

ஆங்,எதுக்கு இருக்கு லகான்? அப்புடியே அமுக்கு...

 

அங்க கோட்டைத் தலைவன் தங்கச்சி,இங்க கவர்னர் மகள்!

 

அங்க லகான் வரி,இங்க கோல்ப்க்கு இடம் கையகப்படுத்துறது.

 

அங்க கிரிக்கெட்,இங்க மல்யுத்தம்.(அந்த சண்டை நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை.)

 

நல்லவேளை,அங்க முக்கோணக் காதல் மாதிரி,இங்கயும் முக்கோணக் காதல் வைக்காம இருந்தாணுக!இதுக்கே தாங்க முடியல.

 

இதெல்லாம் சரி,கதைய சுட்டாச்சு.

 

சீன் கூட கொஞ்சம் காபி அடிசுக்கலாம்.ஆனாலும்,ரெண்டாவது பாகத்துல எதுவோ குறையுதே!

 

ஆங்,எதுக்கு இருக்கு டைடானிக் ? அப்புடியே அதுல இருந்து பூராத்தையும் உருவு...

 

அங்க necklace , இங்க போட்டோ..

 

அங்க கப்பல்குள்ள சேசிங்..

இங்க சென்ட்ரல் சுத்தி சேசிங்..

 

அங்க கடல்ல ஹீரோவும் ஹீரோயினும் ஒரு மரப்பலகைல..

இங்க கூவத்துல...

 

அங்க ஹீரோ கைபிடிய தானே விடுறான்.

இங்க ஹீரோயின் விடுவிக்கிறா...

 

கொஞ்சம் லகான்,நிறைய titanic, நிறைய Dirty Dancing: Havana Nights (2004)
போட்டு குழப்பி அடிச்சா,மதராசபட்டினம் தயார்...

 

கதை Dirty Dancing: Havana Nights (2004),பல சீன்கள் அப்படியே titanic,கொஞ்சம் லகான் கான்செப்ட்.ரெடி ஆயிடுச்சு படம்... எப்புடி?

 

அடடா,அடடா! புல்லரிக்குது என் தங்கமே!தமிழ் சினிமா எங்கயோ போய்டும்.

 

இந்த மாதிரி மொக்கைப் படம் எல்லாம் ஹிட் ஆகி,களவாணி மாதிரி நல்ல படம் எல்லாம் சரியா ஓடாம போவுதே,அது தான் தமிழ் சினிமா ரசிகனின் ரசனை...

 

எதுவோ குறையுதே!  ஆங்,இந்தப் படத்த என்ன இழவுக்குடா பார்த்தனு ஒருத்தன் கிட்ட கேட்டப்ப சொன்னான், "மச்சி,பழைய மெட்ராஸ பார்க்கலாம்டா !" னு.

 

அட எழவெடுத்தவனே ,அதுக்கு நெட்ல தேடிப் பார்த்தாலே போதுமேடா!!

 

என்னய மாதிரி ஏமிய சைட் அடிக்கனு சொல்லி இருந்தாலாவது மன்னிச்சு இருக்கலாம். ;)

 

கீழ,ஒரு reference க்கு, Havana nights கதை.


Dirty Dancing: Havana Nights (2004)
 
In November 1958, the American teenager Katey Miller moves with her parents and her younger sister to Havana. Her father is an executive of Ford expatriated to Cuba, and Katey is an excellent high school senior student that misses her friends. The family is lodged in a fancy hotel, where Katey accidentally meets the local teenage waiter Javier Suarez. Later she sees Javier dancing in a public square and they become friends, but he is fired from the hotel because her acquaintances have seen them together. Katey invites Javier to participate of a Latin Ballroom Contest in the local Palace club to help him to raise some money, and she secretly meets him in the La Rosa Negra nightclub for rehearsals. Later they fall in love for each other in times of revolution.
An American girl (Garai) and her parents arrive in Cuba right before the Revolution breaks out. She meets a local boy (Luna) who instantly notices her dancing abilities and romances her. But as Castro's forces are forcing Americans to leave the country, will she stay or will she go?


A small note:

The Indli  button on the left is for the English articles and the one on the right is for Tamil.

Comments

  1. ஆங்கில மொழிப் பிரியர் பிரபல பதிவர் திரு இலுமினாட்டி அவர்களை புறக்கணிப்போம் :)

    ReplyDelete
  2. புதிய தலைமுறையையும் சேஸ் கவர்ந்திழுப்பது வியப்பை தருகிறது.

    ReplyDelete
  3. //புறக்கணிப்போம்//

    நீங்க புறக்கணிங்க இல்ல ஒருக்களிங்க..

    நான் அப்புடித் தான் பண்ணுவேன்.இனிமே யாரும் தப்ப முடியாது. :)

    ReplyDelete
  4. //புதிய தலைமுறையையும் சேஸ் கவர்ந்திழுப்பது வியப்பை தருகிறது.//

    அட,அவர் எழுத்து அப்படி! சேஸ் னா வேகம்,வேகம்,பரபர வேகம்!

    எப்புடி பிடிக்காமப் போகும்? :)

    ReplyDelete
  5. //தமிழ் சினிமா எங்கயோ போய்டும்// இப்படி படம் வந்து ஒரு வருடத்திற்கு பின்பாக பதிவிட்டால் போகாதா என்ன :)

    ReplyDelete
  6. //இப்படி படம் வந்து ஒரு வருடத்திற்கு பின்பாக பதிவிட்டால் போகாதா என்ன :)//

    அட,இதுல ஒரு நல்ல விசயமும் இருக்கு.நம்மளால படம் பாக்குறவங்க குறையப் போறது இல்லைல? :)

    படத்த பார்தவங்களுக்கு இப்ப தெளிவா புரியும் இல்ல,இது எம்புட்டு காபின்னு?

    அடங்கொன்னியா,எப்புடி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு? ;)

    ReplyDelete
  7. நமக்கு மல்லோரி வேணாமுங்கோ
    மதராசப்பட்டினம் தான் வேணுமுங்கோ :))
    .

    ReplyDelete
  8. மறந்துட்டேன்

    me the 2nd
    .

    ReplyDelete
  9. என்னய மாதிரி ஏமிய சைட் அடிக்கனு சொல்லி இருந்தாலாவது மன்னிச்சு இருக்கலாம். ;)

    அங்க தான் அண்ணாத்தே நீங்க நிக்குறீங்க

    ச்சே புரட்சி கவி ரபிக்குக்கு பதிலாக உங்கள போட்டிருக்கலாம் ( உங்களுக்கு சான்ஸ் குடுத்திருக்கலாம் )
    நம்ம காதலர் :))
    .

    ReplyDelete
  10. //அங்க தான் அண்ணாத்தே நீங்க நிக்குறீங்க //

    ஏன்,நிக்க மட்டும் தான் செய்யனுமா என்ன? ;)

    ReplyDelete
  11. அண்ணே உங்களுக்கு என்ன பிரச்சனை மதராசப்பட்டிணத்தில்? சரி காப்பி தான் அடிச்சிருக்காக...விடுங்க சாமிகளா?

    உங்கள மாதிரி ஒலகப் படம் பாக்கிறவிங்களுக்கு, ஹிந்தி படம் பாக்குறவிங்களுக்கு தான இதெல்லாம் பிரியும்.. என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு இது ஜூப்பர் படம் தானே..நல்ல முயற்சி தானே. டைட்டில்ல நன்றி போடோனுமா அந்தப் பட இயக்குனர்களுக்கு? சொல்லுங்க செஞ்சிருவோம்.

    ReplyDelete
  12. இது இரும்பு அடிக்கிற இடம் போல !!!
    ஒரே இங்கிலிபிஷு இருக்குதே!!




    1

    ReplyDelete
  13. பின்னிட்டே இலுமி, நெறைய பேரு இப்பிடித்தான் நம்மாளுகள ஏமாத்துறானுங்க!

    ReplyDelete
  14. நண்பா,
    இது படம் பார்த்தேன்.
    மீண்டும் லகான்,டைட்டானிக்,1942லவ்ஸ்டோரி,இன்னும் ஏகப்பட்ட படங்களின் கலவை,ஒரே கூவத்தையும்,படகையும்,சென்ட்ரலையும் காட்டி போரடித்துவிட்டனர்.படத்தின் ஆரம்ப காட்சி ரங் தே பசன்ந்தியை,ஒத்திருக்கும்,நம்ம மக்கள் இதை புரிஞ்சிக்காம கருன்ந்தேளை போட்டு தாளித்துவிட்டன்ர்.பின்னூட்டத்தில் அனானியாக.இதற்கு சேரனின் பொக்கிஷம் மிக அருமையான ஆர்ட் டைரக்ஷனுக்கு உதாரணம்.மக்கள் ராமநாராயணன் க்ராபிக்ஸையே ஆகா என்கிறார்கள்.இதில் உள்ள குறை எல்லாம் சொன்னால் கல் எடுத்து அடிப்பார்கள்.

    ReplyDelete
  15. ஊரோடு ஒத்துவாழ்வோம்.
    மதராஸபட்டினம் மிக அருமையான படம்.நாடோடிகள் மிக அருமையான படம்.கல்வெட்டில் வடிக்கப்படவேண்டிய படங்களை ஆவணகாப்பு செய்வோம்

    ReplyDelete
  16. மதராச பட்டிணத்தை போட்டுக் கொடுத்த இலுமினாட்டி வாழ்க அல்லது ஒழிக.

    ReplyDelete
  17. //(Mind you,they are about English books,so why should not I write about them in English?) //

    சரிங்க... அப்ப அப்பப்ப கொரியன் படத்துக்கு உருகி.. உருகி.. எழுதுவீங்கல்ல?!

    அப்ப அதையும் கொரியன்ல எழுதிடுங்க.

    ReplyDelete
  18. இப்பத்தான் காப்பி பாடங்கள் பற்றி கருந்தேள் சார் பதிவில் படிச்சேன் இங்கேயும் அதே மாதிரி! என்னே! தமிழ் சினிமா!

    ReplyDelete
  19. இலுமி இந்த வாரம் கும்மி அடிக்கும் வாரம் போல அங்க கமல பத்தி நம்ம கருந்தேள் இங்க நீங்க,
    வானத்தை போல படத்துல நம்ம செந்தில்ட ஒருதவர் வந்து " அண்ணா போன வாரம் போட்ட போண்டா மாதிரியே ஒண்ணு கொடுங்கன அப்படின்குரப்ப செந்தில் சொல்லுவார் அந்த மாதிரி என்னா அந்த போண்டாவே தரேன் அப்படின்னு,
    அது மாதிரிதான் இலுமி பழைய மதராசபட்டினத்த பார்க்க படத்துக்கோ இன்டெர்நெட்கோ போக வேணாம், தாம்பரத்துல மின்சார தொடர் வண்டி ஏறி கடற்கரை வரைக்கும் போனாலே பார்க்கலாம்,

    ReplyDelete
  20. "சரிங்க... அப்ப அப்பப்ப கொரியன் படத்துக்கு உருகி.. உருகி.. எழுதுவீங்கல்ல?!

    அப்ப அதையும் கொரியன்ல எழுதிடுங்க."

    எங்க தல ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம் தான்.

    ReplyDelete
  21. //அண்ணே உங்களுக்கு என்ன பிரச்சனை மதராசப்பட்டிணத்தில்? சரி காப்பி தான் அடிச்சிருக்காக...விடுங்க சாமிகளா?//

    அண்ணே,காபி மட்டும் அடிச்சிட்டு வாய மூடிக்கிட்டு போயிருந்தா விட்டு இருக்கலாம்.ஆனா,இந்தப்படம்னு இல்ல,காபி அடிக்குறவணுக எவனுமே அதை செய்யுறது இல்ல.

    //என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு இது ஜூப்பர் படம் தானே..நல்ல முயற்சி தானே.//

    அப்புறம்,"உலகப்படம் பார்க்க வாய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்." அப்டின்னு சொல்றவங்களுக்கு,'அண்ணே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே! நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் 'நல்ல' படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க.உங்களுக்கு இஷ்டம் இல்லாம இருக்கலாம்.அதுக்காக அவரை ஞாயப்படுத்தாதீங்க.'



    // டைட்டில்ல நன்றி போடோனுமா அந்தப் பட இயக்குனர்களுக்கு? சொல்லுங்க செஞ்சிருவோம்.//

    எங்க போடச் சொல்லுங்க பாப்போம்.சரி,இப்ப முடியாது.அது வேணாம்.ஒத்துக்கச் சொல்லுங்க.அது போதும்.ஒத்துப்பாங்க னு நீங்க நினைக்குறீங்க? மாட்டானுக.ஒத்துக்குறவன் டைட்டில நன்றி னு போட்டுருவான்.
    அப்புறம், இன்னொரு விஷயம்.
    காபி அடிக்கிறது தமிழ்ப் படத்துல பல காலமாவே இருக்கு.கழுத,அது இருந்துட்டுப் போகட்டும்னு இருந்தாக் கூட,இந்தக் காபி அடிச்சிட்டு படம் வந்த பின்ன இவனுக பண்ணுற அலும்பு இருக்கே..
    'இது நானு பல வருசமா மனசுக்குள்ள பூட்டியே வைச்சுருந்த கதை.ரொம்ப வருஷம் செதுக்குனேன்.'(யோகி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.)
    'memento பலருக்குப் புரியல.நான் அதை இன்னும் நல்லாக் கொடுத்தேன்.'(memento படம் பார்த்தவங்க இதுக்கு எப்படி சிரிச்சு இருப்பாங்க னு எனக்கு தெரியும்.)

    கொடுத்தது சரி,ஒரிஜினல கொடுத்த ஆளுக்கு தெரிய வச்சுக கொடுத்தியா? அது தான் கேள்வி. உங்க வேலைய ஒருத்தன் காபி அடிச்சு நல்ல பேரு வாங்கின நீங்க கோபப்படுவீங்களா,இல்ல 'அட,பரவாயில்லை.புதுசா யோசிச்சு(??) இருக்கானே' அப்டின்னு சொல்வீங்களா?

    //ஒரே இங்கிலிபிஷு இருக்குதே!!//

    எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு ராசா! எனக்கு அப்படியே புல்லரிச்சுப்போச்சு. ! ;)

    //1 //
    என்னய்யா ஒண்ணு? ஒருவேளை? ;)

    //பின்னிட்டே இலுமி, நெறைய பேரு இப்பிடித்தான் நம்மாளுகள ஏமாத்துறானுங்க!//

    அட,அவனுக ஏமாத்துறத கூட மன்னிக்கலாம்.ஆனா இவனுக பண்ணுற அலும்பு இருக்கே...

    @கீதப்ரியன் ,
    ஆமா,வாழ்க தமிழ் சினிமா.வளர்க அதான் ஈயடிச்சான் காபி இயக்குனர்கள்!

    //மதராச பட்டிணத்தை போட்டுக் கொடுத்த இலுமினாட்டி வாழ்க அல்லது ஒழிக.//

    இதனால தான்யா தமிழன கண்டா எல்லோரும் பயப்படுரானுக.எந்நேரம் என்ன செய்வான் னு எவனுக்கும் தெரியாது. :)

    //சரிங்க... அப்ப அப்பப்ப கொரியன் படத்துக்கு உருகி.. உருகி.. எழுதுவீங்கல்ல?!அப்ப அதையும் கொரியன்ல எழுதிடுங்க.//

    நான் ரெடி. இப்ப google translator இருக்குறப்ப அது பிரச்சனை இல்ல. ஆனா,ஏற்கனவே கொரிய படத்தைப் பத்தி நானு தமிழ்ல எழுதினாலே கொலை வெறியோட பலர் சுத்துவாங்க.இது மட்டும் நடந்தா,அப்புறம் எழுதினதுக்காக என்னையும்,ஐடியா கொடுத்த பாவத்துக்கு உங்களையும் குழி தோண்டிப் புதைச்சுடுவாணுக.பரவாயில்லையா? ;)

    அப்புறம்,அது என்னங்க உங்களுக்கு அப்படி ஒரு தற்கொலை ஆசை? ;)

    //என்னே! தமிழ் சினிமா!//
    :)

    //தாம்பரத்துல மின்சார தொடர் வண்டி ஏறி கடற்கரை வரைக்கும் போனாலே பார்க்கலாம்//

    என்னது? சாக்கடையா? அடப்போங்க,நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு. :)

    ReplyDelete
  22. இதோ நானும் வந்துவிட்டேன்.

    நமது இயக்குநர்கள் செய்யும் திருட்டுத்தனம் இது. கண்டபடி காப்பியடித்துவிட்டு, இது என் சொந்தச்சரக்கு என்று பேசுவது..

    மதராசப்பட்டினம் என்னைக் கவர்ந்தது, ஒரே ஒரு பாடலில். மட்டுமல்லாது, பழைய சென்னை நாஸ்டால்ஜியா மட்டுமே.. மற்றும், யாமம் நாவல். அதனைப் படித்திருந்ததால், படத்தில் வரும் பழைய சென்னையைப் பார்க்க ஆவல் மேலிட்டது.

    தமிழ்த் திரையுலகில் இந்த plagiarism கொடிகட்டிப் பறக்கிறது. காப்பியே அடிக்காத ஒரிஜினல் இயக்குநர் என்று இனி வருங்காலத்தில் தான் வர வேண்டும் என நினைக்கிறேன்.

    இவர்கள் மட்டும் கண்டபடி காப்பியடிப்பார்கள். ஆனால், இவர்களது படங்களைத் திருட்டு விசிடியில் காப்பியடித்தால் மட்டும் பொங்கி எழுவார்கள்.. இப்படித்தானே இருக்கும் அந்த ஒரிஜினல் படங்களை எடுத்தவர்களுக்கு..

    தொடர்ந்து இப்படிப்பட்ட ஈயடிச்சாங்காப்பிகளைக் கிழிப்போம் ;-)

    ReplyDelete
  23. //புதிய தலைமுறையையும் சேஸ் கவர்ந்திழுப்பது வியப்பை தருகிறது//

    மீ ஆல்ஸோ !! பல கதைகள், எனது பள்ளிப்பருவத்தில் படித்திருக்கிறேன்.. இன்றுவரை மறக்க இயலாத எழுத்தாளர் இவர்..

    ReplyDelete
  24. //இப்பத்தான் காப்பி பாடங்கள் பற்றி கருந்தேள் சார் பதிவில் படிச்சேன் இங்கேயும் அதே மாதிரி! என்னே! தமிழ் சினிமா//

    நண்பர் எஸ்கே... தயவுசெஞ்சி ’சார்’ போடாதீங்க தல ;-).. எதை ஒத்துகினாலும், இதை ஒத்துக்க முடியல ;-) .. இனிமே சார் போட்டா, உங்களைத் திட்டி கவிதை எழுத ஆரம்பிச்சி, அதை நம்ம நண்பர்கள் அத்தனை பேருக்கும் அனுப்பி வைப்பேன் ;-)

    ReplyDelete
  25. //மக்கள் ராமநாராயணன் க்ராபிக்ஸையே ஆகா என்கிறார்கள்.இதில் உள்ள குறை எல்லாம் சொன்னால் கல் எடுத்து அடிப்பார்கள்//

    @ கீதப்ரியன் - நண்பா... இந்தப் பின்னூட்டத்தை முழுசா படிச்சி பயங்கர சிரிப்பு வந்திருச்சி... என்னா ரைமிக்ல எழுதிருக்கீங்க ;-) .. செம காமெடியா இருந்தது ;-)

    ReplyDelete
  26. கருந்தேள்
    //இவர்கள் மட்டும் கண்டபடி காப்பியடிப்பார்கள். ஆனால், இவர்களது படங்களைத் திருட்டு விசிடியில் காப்பியடித்தால் மட்டும் பொங்கி எழுவார்கள்//

    அதனாலதான் நான் தி.வி.சி.டி.ல மட்டும்தான் தமிழ் படங்களைப் பார்ப்பேன். ஹிஹிஹி

    ReplyDelete
  27. இதுக்குத்தான்யா இங்கிலீஷ் புத்தகம் ரொம்ப படிக்காதேன்னு சொன்னேன்.... கேட்டியா!!!???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......