Green Mile-மரணத்தின் பாதையில்.....


Greenmilepart1
1996 ஆம் வருடம் ஸ்டீபன் கிங் எழுதிய novel தான் இந்த கிரீன் மைல்.actual ஆ,இது எழுதப் பட்ட போது,novella ஆக எழுதப்பட்டது.பாகம் பாகமா தொடர்கதை மாதிரி எழுதப்படுற கதை தான் novella. மொத்தம் ஆறு பாகங்கள்.வெளியிடப்பட்டப்போ பெரிய சக்ஸஸ்.பின்ன இது எல்லாத்தையும் தொகுத்து ஒரே நாவலா வெளியிட்டாங்க.அதுவும் மிகப்பெரிய சக்ஸஸ். கிங் எழுதின ஆகச் சிறந்த புக்ஸ்ல இதுவும் ஒண்ணு.
(ஏற்கனவே அவர் எழுதின Misery புக் பத்தி எழுதி இருக்கேன். )
அதெல்லாம் சரி,அது என்ன கிரீன் மைல்?
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் மரணத்தை நோக்கி எடுத்து வைக்கும் கடைசி அடிகள் தான் The last mile.அவங்க வாழ்க்கைப் பயணத்தின் இறுதி அடிகள் அது தான்.
Cold mountain சிறைச்சாலைல, இந்த குறுகிய,மரணத்தை எதிர்நோக்கும் பாதையோட flooring கிரீன் கலர்.அது தான்,கிரீன் மைல்.அதுல கடந்து போற சில மனிதர்களை பற்றிய ஒரு கதை தான் இது.முக்கியமா,Jonh Coffey.
Cold mountain சிறைச்சாலைல,எல்லா ஜெயில் மாதிரியுமே,மரண தண்டனைக் கைதிகளுக்குன்னு தனி பில்டிங் உண்டு.அவங்கள கண்காணிக்கவும்,கவனிக்கவும்,உதவி செய்யவும் எப்பயுமே காவலர்கள் இருப்பாங்க.
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி ரூம்.
மற்ற கைதிகளுக்கு மாதிரி,எந்த வேலையும் கிடையாது.
வேளா வேளைக்கு சாப்பாடு.
உடம்பு சரி இல்லன்னா உடனே கவனிக்க டாக்டர் குழு பக்கத்துலயே.
பொழுது போக,சிறை லைப்ரரி புக்ஸ்.
ஆகமொத்தத்துல,குடுத்து வச்சவனுங்க.சீக்கிரம் சாகப் போறானுங்கன்ற விசயத்த தவிர்த்து.
இந்த இடத்த நிர்வாகிக்கிற தலைமைக் காவலாளி பேரு,Paul Edgecombe. கண்டிப்பும்,கருணையும் நிறைஞ்ச மனுஷன்.இவருக்கு உதவியா இவருக்கு கீழ வேலைபார்க்கும் நண்பர்கள் Brutus,Dean,Harry.
எங்கெல்லாம் நல்லவங்க இருப்பாங்களோ,அங்க எல்லாம் கெட்டவங்களும் இருப்பாங்க.அதுக்கேத்த மாதிரி,கைதிகள சரியா நடத்தாத,மேலிடத்து தொடர்புகள் கொண்ட, கொடூர மனம் கொண்ட காவலன் Percy Wetmore. அவன்கிட்ட மாட்டிகிட்டு நடுங்குற கைதி Delacroix,அவனோட எலி.....
இந்த சூழல்ல,கதை நகருது.ஆனா,கதை இது இல்ல.ஒரு shoe காக கொலை செய்யுற ஆட்கள் இருக்கும் இந்த சிறைக்கு கொண்டு வரப்படுறான் ஆறே முக்கால் அடி உயரம் கொண்ட,african american  John Coffey.உருவத்துல ராட்சதன்னாலும்,மனசால குழந்தை.அமைதியே உருவமான குழந்தை மனசுக்காரன்.அதிகம் பேசாத,இரவில் இருட்டைக் கண்டு பயப்படுகிற,சிறை வாழ்கையின் முக்கால்வாசி நேரத்தை அழுதே கழிக்கிற ஒரு வித்தியாசமான மனிதன்.
ஆனால்,அவன் மேல் சூட்டப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு ரொம்ப கோரமானது.இந்த அமைதியான மனுஷன் இத செய்து இருப்பானானு சந்தேகப்பட வைக்குற மாதிரியான குற்றம்.அது என்னன்னா, ஒன்பது வயதே ஆன ரெட்டையர் சிறுமிகளை கொன்னது,கற்பழிச்சதுக்கு அப்புறம். ஜான் பிடிக்கப்பட்டது சம்பவ இடத்துல.
ஆனா பால்லுக்கு இந்த குற்றத்த ஜான் செய்து இருக்க முடியாதுன்னு ஒரு எண்ணம்.அதுக்கு காரணம்,ஜான்னோட கேரக்டர் மட்டும் இல்ல.பலருக்கும் தெரியாத ஜான்னோட அபூர்வ சக்தியும்.....
இந்த கதைய பத்தி நிறைய எழுதணும்னு இதோ இப்ப கூட தோணுது.ஆனா, வாழ்கையின் எந்த பாதை மாதிரியுமே,கிரீன் மைல் ஒரு அனுபவம்.சோகம்,வலி,நம்பிக்கை,அதிசயம்,ஞாயமின்மை எல்லாம் கலந்த ஒரு பாதை.அதை நாமளா பயணித்துப் பார்க்கணும்.
எப்பேர்ப்பட்ட குற்றம் செய்தவன் கூட,தான் மரணத்தை நோக்கி போறோம்னு தெரிஞ்ச உடனே வெறும் கூடு மாதிரி ஆயிடுவான்.அப்படி கூடுகள் நடந்து செல்லும் பாதை தான் இந்த கிரீன் மைல்.
ஆனா சோகம் மட்டுமே உடைய பாதை கிடையாது இது.நான் படித்த மிகச்சிறந்த புக்ஸ்ல இதுவும் ஒண்ணு.
கிங்கோட மிகப் பெரிய திறமை,கேரக்டர் development.ஒவ்வொரு கேரக்டரும் மனசுல ஆழ பதிஞ்சுரும்.அது அமைதியான ஜான் ஆகட்டும்,நேர்மையான பால் ஆகட்டும்,கொடூர பெர்சி ஆகட்டும்,கோழை delacriox ஆகட்டும்,அவனோட எலியாவே ஆகட்டும்......(இந்த எலி,ஒரு முக்கியமான கேரக்டர்.இது மூலமா கிங் மனிதர்களின் சில குணங்களை குறிப்பிட்டு இருக்காரு.)
கண்டிப்பா படிக்க வேண்டிய கதைகள்ல ஒண்ணு இது.வழக்கமான கிங் கதைகள் gore ஆ தான் இருக்கும்.ஆனா,இது அப்படி இல்லை.இப்பேர்ப்பட்ட அருமையான கதைகள எழுத முடியுற அளவுக்கு திறமை உள்ள மனுஷன் ஏன் gore கதைகள் எழுதினாரோ?புரியாத புதிர்.
அப்புறம்,இந்த புக் படமாவும் வந்து படமும் பெரிய ஹிட்.பல அவார்ட்கள வாங்குச்சு.ஆனா,எனக்கு ஒரு பழக்கம்,எப்பயுமே ஒரு கதை படமாவும்,புக்காவும் இருந்தா நான் எப்பயுமே புக்க தான் முதல்ல படிப்பேன்.ஏன்னா,ஒரு புக் கொடுக்குற அந்த closeness,under the skin view கண்டிப்பா ஒரு படம் கொடுக்காது அப்டிங்கறது ஏன் எண்ணம்.ஸோ,இதை அனுபவிக்கணும்னு நீங்க நினைசீங்கன்னா,தயவு செஞ்சு புக்க முதல்ல படிங்க.அதுக்கு பின்ன படத்த பாருங்க.ஒரு நல்ல புக்குக்கு செலவு பண்றதுல தப்பே இல்லை.இல்ல,உங்க ஊர்ல இருக்குற ஏதாவது second hand books கிடைக்குற கடைல இருந்து வாங்கி படிங்க(இது தான் maximum நான் பண்றது.நான் வாங்குற புக்ஸ் எண்ணிக்கைக்கு இது தான் பெஸ்ட்.)
இது நீங்க பயணித்து பார்க்க வேண்டிய பாதை.

கிரீன் மைல்- Beautiful in a strange and sorrow filled way…..

Comments

  1. Greenmile is definitely one of the very best works of Mr King.

    THE Best? May be we are looking at redemption.

    The movie on this was also a classic.

    ReplyDelete
  2. Yes Mr.Viswa. The book is one of his very best.The movie, I suppose like the book is a classic too.But,to me,a book weighs more than a film. :)

    And,congrats on being first. :)

    ReplyDelete
  3. @@@பட்டாபட்டி--//ரைட்..படிச்சிருவோம்...//

    எனக்கெல்லாம் ஓசியில புக் யாரும் குடுக்கிறதில்ல என்ன செய்ய . ஆட்டய போடலாமுன்னு பத்தா புக் இங்கிலிபீஸ்ல இருக்காம் . நமக்குதான் இத்தாலி பாஷைய தவிர ஒன்னும் தெரியதே...க்க்கி..க்கி..

    ReplyDelete
  4. வாத்தியாரே கதை நல்லா இருக்கு . பேசாம தொடரா எழுதிடேன்.

    ReplyDelete
  5. தொடர் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு நம்ம பட்டாவை போட்டுடலாம். முரண்டு பிடிச்சா முத்துவை போட்டுடலாம்.ஹி..ஹி..

    ReplyDelete
  6. //Greenmile is definitely one of the very best works of Mr King.

    THE Best? May be we are looking at redemption.

    The movie on this was also a classic.//

    விஸ்வாவின் கருத்தைக் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன். இந்த இரண்டு படங்கள் கிளாஸிக்குகளாக ஆனதற்கு, இன்னொரு மனிதனும் காரணம். அவன் தான் ‘ஃப்ரான்க் டேரபாண்ட்’ - இப்படங்களின் இயக்குநன். ஸ்டீவன் கிங்கின் வெறிபிடித்த ரசிகனான இவன் இப்படங்களை இயக்கிய விதம் பற்றி அவன் எழுதியிருக்கும் முன்னுரையில் (ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைக்கதைப் புத்தகத்தில்) மிக விரிவாகக் காணலாம். எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு இயக்குநன் இவன். ஹாலிவுட்டின் அண்டர்டாக்குகளில் ஒருவன்.

    ReplyDelete
  7. ////ஆனா,எனக்கு ஒரு பழக்கம்,எப்பயுமே ஒரு கதை படமாவும்,புக்காவும் இருந்தா நான் எப்பயுமே புக்க தான் முதல்ல படிப்பேன்.ஏன்னா,ஒரு புக் கொடுக்குற அந்த closeness,under the skin view கண்டிப்பா ஒரு படம் கொடுக்காது அப்டிங்கறது ஏன் எண்ணம்./////


    ..... very true. :-)

    ReplyDelete
  8. // ஆனா,எனக்கு ஒரு பழக்கம்,எப்பயுமே ஒரு கதை படமாவும்,புக்காவும் இருந்தா நான் எப்பயுமே புக்க தான் முதல்ல படிப்பேன் //

    ஹி... ஹி... எனக்கும் எப்பவுமே ஒரு பழக்கம் இருக்குது... நான் கொஞ்சம் சோம்பேறி... எதுக்கு நாள்கணக்கா புக் வச்சு படிச்சுகிட்டு... (எனக்கு டிக்‌ஷனரி வேற வேணும்) அதுனால ரெண்டு மணி நேரத்துல படமாவே பாத்துடுவேன்...

    நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  9. நல்ல அறிமுகம் இலுமி...

    இதைத்தான் கிரீன் மைல் சினிமாவா எடுத்தானுங்களா...அந்த படமும் ஒரு அற்புதம்.கமல்ஹாசன் இதை இவ்வளவு நாள் எப்படி விட்டுவச்சார்னு தெரியலை.

    ReplyDelete
  10. ஆமா இலுமி.."Carandiru" பார்த்திருக்கியா?

    ReplyDelete
  11. // நமக்குதான் இத்தாலி பாஷைய தவிர ஒன்னும் தெரியதே...க்க்கி..க்கி..//

    உம்ம ஆதங்கம் புரியுது ஓய்.அடுத்து இத்தாலியன் மொழிக்கு ஒரு மாநாடு arrange பண்ண சொல்லலாம்.மேடைல ஒரு சீட்டும்,ஜால்ரா அடிக்க நாளு பேரும் இருந்தா தலைவன் நானூறு கோடி இல்ல,நாலாயிரம் கோடியா இருந்தாலும் செய்வான்.ஆமா,மயிரா போச்சு.ஊரான் காசுதான.

    அப்புறம்,முடிஞ்சா இந்த புக்க படிச்சு பாரும் ஓய்.

    //இந்த இரண்டு படங்கள் கிளாஸிக்குகளாக ஆனதற்கு, இன்னொரு மனிதனும் காரணம். அவன் தான் ‘ஃப்ரான்க் டேரபாண்ட்’ - இப்படங்களின் இயக்குநன். //

    கரெக்ட் தான்.shawsank பத்தி மட்டுமே எனக்கு தெரியும்.இந்த படத்த இன்னும் பார்க்கலை. :)
    பார்க்கலாம்,பார்க்காமலும் போகலாம்.

    அப்புறம்,சித்ரா மேடம்,

    உண்மை அது தான. :)

    ஜெய் தல,முடிஞ்சா படிச்சு பாருங்க.இதுக்கு dictionary தேவைப்படாது.

    ரெட்ட, carandiru நான் இன்னும் பார்க்கலை.ஆனா,நிறைய கேள்விப்பட்டு இருக்கேன்.சீக்கிரம் பார்க்குறேன்.
    அப்புறம்,புக்ஸ் ஆர்வமா படிக்குற நீரு ட்ரை பண்ண வேண்டிய கதை இது.sorrow கலந்த ஒரு பீல் குட் கதை. sounds catchy,right? :)

    ReplyDelete
  12. கரண்டிரு - இதுக்குத்தான் நம்ம சைட்டோட பளைய ஆர்க்கைவ்ஸ் எல்லாம் பாக்கணுங்குறது.. அதுல கீது இதோட விமர்சனம்.. ;-) பார்க்கவும் ;-)

    ReplyDelete
  13. காவல் காரன்னு கூட ஒரு பட, வரப்போகுதாம் தல

    ReplyDelete
  14. //உங்க ஊர்ல இருக்குற ஏதாவது second hand books கிடைக்குற கடைல இருந்து வாங்கி படிங்க//

    எங்க ஊர்ல எல்லா செகண்ட்ஸ் புக்குமே இரட்டைவிலைதான்

    ReplyDelete
  15. அண்ணாத்த கருந்தேள்,

    பார்த்துடலாம். :)

    //எங்க ஊர்ல எல்லா செகண்ட்ஸ் புக்குமே இரட்டைவிலைதான்//

    ஹீ ஹீ,அப்ப பர்ஸ்ட் ஹாண்ட் வாங்கி படிங்க. :)
    ஆமா,நீங்க எந்த ஊரு?

    //காவல் காரன்னு கூட ஒரு பட, வரப்போகுதாம் தல//

    அட,அது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுங்க. :P

    ReplyDelete
  16. ////ஆனா,எனக்கு ஒரு பழக்கம்,எப்பயுமே ஒரு கதை படமாவும்,புக்காவும் இருந்தா நான் எப்பயுமே புக்க தான் முதல்ல படிப்பேன் ////

    எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.

    ப்லாக்ல எழுதற வரைக்கும், அந்த படத்தோட டைரக்டர், ஆக்டர் எல்லாம் யாருன்னு தெரியாட்டா கூட...,

    .... இந்தப் படத்தோட நாவலை பல வருசம் முன்னாடியே படிச்சா மாதிரியும், டிவில ஃப்ரீயா போட்டப் படத்தை தியேட்டர்ல மொத நாள் பார்த்தா மாதிரியும் கதையை கொடுப்பேன்.

    =========

    யப்பா.. மெயில்லதான் அப்படின்னா.. பதிவு முழுக்கவும் ஒரே தத்துவம்.

    =======

    அப்புறம் கருப்பர்களை பத்தி நீங்க எழுதியிருக்கும் வார்த்தை.. ரொம்ப தப்பு. எவனாவது படிச்சா தொங்க விட்டுடுவானுங்க ஜாக்கிரதை.

    ReplyDelete
  17. // ஹி... ஹி... எனக்கும் எப்பவுமே ஒரு பழக்கம் இருக்குது... நான் கொஞ்சம் சோம்பேறி... எதுக்கு நாள்கணக்கா புக் வச்சு படிச்சுகிட்டு... (எனக்கு டிக்‌ஷனரி வேற வேணும்) அதுனால ரெண்டு மணி நேரத்துல படமாவே பாத்துடுவேன்... //


    இங்கே ஜெய்யோட கருத்தை நான் வழிமொழிகிறேன்.

    இந்த படத்தை ஸ்டார் மூவீஸ்ல் பார்த்த மாதிரி இருக்கு ஆனா முழுசா இல்ல

    மறுபடி பாத்துடுவோம் சரி படிக்க ட்ரை பண்ணுவோம்

    Thanks illumi

    ReplyDelete
  18. //யப்பா.. மெயில்லதான் அப்படின்னா.. பதிவு முழுக்கவும் ஒரே தத்துவம். //

    ஹீ ஹீ,ஆமா தல.நான் போற போக்க பார்த்தா எனக்கே திகிலா இருக்கு.இப்ப தான் முத அறிகுறி வருது.முதல்ல தத்துவம், அடுத்ததா கவிதை எழுதி,மொக்க போட்டு,சொம்பு தூக்கி பிரபல பதிவர் ஆவேன் போல.... :P

    அப்புறம், நீங்க சொன்னது சரி. நான் நீக்ரோ னு போட்டு இருக்க கூடாது.ஆனா,அந்த வார்த்தையுமே கதைல ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
    இருந்தாலும்,அதை African American னு மாத்திட்டேன். and I'm sorry.தவறை சுட்டிக்காட்டுனதுக்கு
    தேங்க்ஸ் டு யூ... :)

    அப்புறம் சிபி அண்ணாத்த,படத்த முதல்ல பார்க்காதீங்க.புக் படிச்சிட்டு அப்புறம் தாராளமா பார்க்கலாம். :)
    அப்ப தான் அந்த எபக்ட் இன்னும் டீப்பா இருக்கும்.

    ReplyDelete
  19. இல்லு இன்னைக்கு தான் பதிவு முழுவதையும் படிச்சேன் , இந்த மாதிரி சின்னதா அழகா எழுது , படிக்கவே இன்ட்ரஸ்ட் ஆ இருக்கு ,
    ஓகே அந்த புக் கிடைச்சா கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்

    ReplyDelete
  20. //எப்பேர்ப்பட்ட குற்றம் செய்தவன் கூட,தான் மரணத்தை நோக்கி போறோம்னு தெரிஞ்ச உடனே வெறும் கூடு மாதிரி ஆயிடுவான்.அப்படி கூடுகள் நடந்து செல்லும் பாதை தான் இந்த கிரீன் மைல்.//

    நண்பரே, ஆகா அருமையான வரிகள். சிறப்பான கற்பனை. நிச்சயமாக மாநாட்டிற்கு உங்களிற்கு ஒரு சீட் தர வேண்டுமென வேண்டுகிறேன் :))

    கிங்கை நான் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் படிப்பதை நிறுத்திவிட்டேன் ஆனால் திரைப்படத்தைப் பார்த்தேன். படம் பிடித்திருந்தது.

    புத்தகம் தரும் உணர்வுகள் எம் தோலின்கீழ் இறங்கி உள்ளம் நோக்கி பயணிப்பவை. அப்பாதைக்கு என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் நண்பரே. சிறப்பான பதிவு.

    ReplyDelete
  21. //இந்த மாதிரி சின்னதா அழகா எழுது , படிக்கவே இன்ட்ரஸ்ட் ஆ இருக்கு ,
    ஓகே அந்த புக் கிடைச்சா கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்//

    கண்டிப்பா வாங்கி படிங்க மங்கு.படிக்க வேண்டிய புக்.அப்புறம் சுருக்கமா எழுதினா சில நேரம் சொல்ல விரும்புவதை சொல்ல முடியாது போகலாம்.அது என் கையில இல்லை. :)

    ReplyDelete
  22. //நிச்சயமாக மாநாட்டிற்கு உங்களிற்கு ஒரு சீட் தர வேண்டுமென வேண்டுகிறேன் :))//

    ஏன் இந்த கொலை வெறி?எதுனா இருந்தாலும் நாமளே பேசி தீர்த்துக்கலாம்.இப்டி ரத்தம் கக்கி சாக வைக்க எல்லாம் வழி பார்க்க கூடாது.

    //கிங்கை நான் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் படிப்பதை நிறுத்திவிட்டேன் ஆனால் திரைப்படத்தைப் பார்த்தேன். படம் பிடித்திருந்தது.//

    படத்த விட கண்டிப்பா புக் அருமையா இருக்கும். கிங் எழுதினதுல கொஞ்சம் தான் சேற்றில் கிடக்கும் வைரம்.பலது சேறுதான். :)
    ஆனா,இந்த வைரங்கள் இருக்கே,அப்பா!!!

    இந்த மனுஷன் இந்த மாதிரி எழுதாம த்ரில்லர்ங்கற பேர்ல atrocity பண்ணிகிட்டு திரியுராறு.

    //புத்தகம் தரும் உணர்வுகள் எம் தோலின்கீழ் இறங்கி உள்ளம் நோக்கி பயணிப்பவை. அப்பாதைக்கு என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் நண்பரே.//

    பரவசப் பாதை? :)

    ReplyDelete
  23. //எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.

    ப்லாக்ல எழுதற வரைக்கும், அந்த படத்தோட டைரக்டர், ஆக்டர் எல்லாம் யாருன்னு தெரியாட்டா கூட...,

    .... இந்தப் படத்தோட நாவலை பல வருசம் முன்னாடியே படிச்சா மாதிரியும், டிவில ஃப்ரீயா போட்டப் படத்தை தியேட்டர்ல மொத நாள் பார்த்தா மாதிரியும் கதையை கொடுப்பேன்//

    அட !! நானும் இப்புடியே தான் ! ;-) பாலாவை வழிமொழிகிறேன் ;-)

    ReplyDelete
  24. அட,விடுங்க தல! சில நேரங்களில் சில கேப்மாரித்தனங்கள்! :)

    அப்புறம்,for the record,இந்த புக்க நானு போன வாரம் தான் படிச்சேன்னு சொல்லிக்கிறேன்.இந்த நோவலுமே,படத்த டவுன்லோட் பண்ண போது நோன்டிணப்ப கிடைச்சது.
    நமக்கு தான் புக் னா உயிராச்சே.
    அதான் படத்த நட்டாத்துல விட்டுட்டு,புக்க தேடி நாயா அலைஞ்சு,மூர் மார்க்கெட்ல பிடிச்சேன். :)

    ஆனா,நோவல் படிக்கிரவனுங்களுக்கு சென்னையில சொர்க்கம்னா அது மூர் மார்க்கெட் தான். :)

    இனிமே படத்த பார்க்கணும்.அது எத்தன மாசம் கழிச்சு நடக்குமோ? :)

    ReplyDelete
  25. நண்பா,
    ஸ்டீவன் கிங் மகத்தான எழுத்தாளர்,ஐயமே இல்லை,நாவல் நல்ல தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கும்,படம் அருமையாயிருக்கும்,டாம் ஹேங்க்ஸ் ரசிகர்களுக்கு மறக்கவே முடியாது.
    எலி கூட மனதில் நிற்கும்,அப்படி ஒரு பாத்திர படைப்பு,நண்பர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.
    மேலும் எழுதுங்கள்.

    ReplyDelete
  26. ஆமா தல.ஸ்டீபன் கிங் கிட்ட திறமை இருக்கு.ஆனா அதை அவர் எப்பயாவது மட்டுமே யூஸ் பண்றது தான் கடுப்பு.

    படம் நல்லா இருக்கும்ங்கறது தெரிஞ்சது தான் தல.ஆனா,முன்னமே சொன்ன மாதிரி எனக்கு எப்பயும் புக் தான் முதல்ல வரும்.:)
    படத்த டவுன்லோட் பண்ணி வச்சு இருக்கேன். சீக்கிரம் பார்க்கிறேன்.

    அப்புறம்,அந்த எலி நாவல்ல பெரிய,முக்கியமான பாத்திரம்.ஜான் coffey எவ்ளோ முக்கிய கேரக்டரோ அவ்ளோ முக்கிய கேரக்டர் அந்த எலியும்.

    ReplyDelete
  27. அப்புறம், கிங் அமானுஷ்யம் பத்தி எழுதாதப்ப ரொம்ப சிறப்பா எழுராருனு எனக்கு ஒரு எண்ணம்.நீங்க என்ன நினைக்குறீங்க?

    ReplyDelete
  28. ரைட்டு எனக்கு புக்கை வாங்கினாலும் ஒன்னும் புரியாது பேசாமல் நீ தமிழில் எழுதி அனுப்பு

    ReplyDelete
  29. ஜெய்லானி said...

    தொடர் ஸ்பான்ஷர்ஷிப்புக்கு நம்ம பட்டாவை போட்டுடலாம். முரண்டு பிடிச்சா முத்துவை போட்டுடலாம்.ஹி..ஹி../////////


    எல்லாம் ஒரு முடிவோட தான் அலையறானுங்க

    ReplyDelete
  30. மங்குனி அமைச்சர் said...

    இல்லு இன்னைக்கு தான் பதிவு முழுவதையும் படிச்சேன் , இந்த மாதிரி சின்னதா அழகா எழுது , படிக்கவே இன்ட்ரஸ்ட் ஆ இருக்கு ,
    ஓகே அந்த புக் கிடைச்சா கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்///////


    மங்கு ரிஸ்க் வேண்டாம் வெருசா படம் பார்கிறதுக்கு எதுக்கு இந்த வீண் பில்டப்

    ReplyDelete
  31. முத்து, புக்க எழுதி அனுப்புறது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?நீரு வேணுமின்னா படத்த பாரும்.அது பேரும் கிரீன் மைல் தான்.

    ReplyDelete
  32. ILLUMINATI said...

    முத்து, புக்க எழுதி அனுப்புறது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?நீரு வேணுமின்னா படத்த பாரும்.அது பேரும் கிரீன் மைல் தான்./////////

    அப்போ பிரெஞ்சு லிங்க் குடு

    ReplyDelete
  33. யோவ் நொன்ன,நீரு என்ன சும்மா சும்மா பிரெஞ்சு லிங்க் கேட்டு சாவடிகிரீறு?இது பிரெஞ்ச்ல கிடையாதுயா.பிரெஞ்சு subtitle ஓட இருக்கலாம்.எதுக்கும் தேடி பாரும்.ஆமா,போன படத்துக்கே இன்னும் லிங்க் கண்டுபிடிக்கல போல...

    ReplyDelete
  34. அப்புறம்,இது சும்மா,என் ஆசைக்காக எழுதினது. :)

    Green mile ...is the name of the path the condemned trod to their death.Paul Edgecombe has seen so many prisoners,but none like John Coffey. The guy is monstrous big,towering at a height of 6'8'' but with a heart of child. He is afraid of dark at night,weeps mostly in his cell,has a great super natural power,caring and seems extremely calm. Except the fact that the guy is been proven guilty for the crime of killing twin sisters of age 9,after raping them , that is.
    Now why did he do it? Or to put it more eloquently,did he really do it?
    written by Stephen king,it is truly a classic.

    ReplyDelete
  35. இலுமி, நாவலை இது வரை படிச்சதில்ல... படம் பார்த்ததோடு சரி... உங்கள் வார்த்தைகளில் அந்த படத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது போல இருந்தது...

    நாவலையும் படிக்க முயல்கிறேன்.

    புது லேஅவுட் கனகச்சிதம்... ஜமாய்ங்க.

    ReplyDelete
  36. ரபிக் நண்பரே!படத்தை விட நிச்சயம் நாவல் நன்றாகவே இருக்கும்.இதை ஸ்டீபன் கிங் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்.
    கண்டிப்பா படிங்க.படிக்க வேண்டிய கதை இது.

    அப்புறம்,லே அவுட்... :)

    ReplyDelete
  37. நண்பரே,

    வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

    http://007intamil.blogspot.com/2010/06/x.html

    Super new layout.

    ReplyDelete
  38. நானும் படமா தான் பார்த்தேன்.. கருந்தேள் அண்ணாச்சி சொன்ன மாதிரி ரொம்ப நல்லா எடுத்து இருப்பார் டிரக்டர் (ஆமா ஏன் அவன் இவன்னு சொன்னார் :))...

    புத்தகம் 'கெடச்சா' படிச்சிருவோம்.. அப்புறம், இந்த மாதிரி நீங்க படிச்சதில் சிறந்த புத்தகங்களை பற்றி நிறைய எழுதவும்..

    I still liked Shawshank more (among the movies)..

    ReplyDelete
  39. //நானும் படமா தான் பார்த்தேன்.. கருந்தேள் அண்ணாச்சி சொன்ன மாதிரி ரொம்ப நல்லா எடுத்து இருப்பார் டிரக்டர்//

    ஆமா,நானும் அப்படி தான் கேள்விப்பட்டேன்.இன்னும் பார்க்கலை.

    //(ஆமா ஏன் அவன் இவன்னு சொன்னார் :))... //

    ஒரு பரவச நிலைல சொல்லீட்டார்.:)

    //புத்தகம் 'கெடச்சா' படிச்சிருவோம்.. //


    அப்படி எல்லாம் தப்பிக்க முடியாது தம்பி.மூர் மார்கெட் பக்கம் போனா தாராளமா கிடைக்கும்.போய் வாங்கும். :)

    //அப்புறம், இந்த மாதிரி நீங்க படிச்சதில் சிறந்த புத்தகங்களை பற்றி நிறைய எழுதவும்..//

    sure,அடுத்தும் புக் தான். :)

    //I still liked Shawshank more (among the movies)..//

    me too... :)
    ஆனா,novella இன்னும் நல்லா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன்.இன்னும் கிடைக்கல.புக் கிடைச்சா படிச்சிட்டு எப்புடி இருக்கு னு சொல்றேன். :)

    ReplyDelete
  40. யப்பா.. நமக்கு இங்க்லீஷ் நா கொஞ்சம் அலர்ஜி.. இருந்தாலும் நீங்க சொன்னதுக்கு அப்புறம் கண்டிப்பா இத படிக்கணும்...

    ReplyDelete
  41. படிச்சு பாருங்க சாமு.படிக்க வேண்டிய புத்தகம் தான்.

    அப்புறம்,வெங்கட் அவர்களே,வாழ்த்துக்கள்.அப்புறம்,உலக சினிமா,உள்ளூர் சினிமா னு எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.
    சினிமால ரெண்டே ரெண்டு டைப் சினிமா தான்.நல்ல படம்,மொக்க படம். :)

    ReplyDelete
  42. படிக்கலாம்னு பக்கத்து லெண்டிங் லைப்ரரியிலெ கேட்டேன், இல்லைனுட்டாங்க. எங்கவது கெடச்சா படிக்கிறேன்.

    ReplyDelete
  43. ஜெய்,படிச்சு பார்க்கணும் னு நெனைச்சு நீங்க கேட்டதே எனக்கு சந்தோசம்.
    அப்புறம்,புக் வேணுமின்னா,மூர் மார்கெட் ல ட்ரை பண்ணி பாருங்க.அங்க நிச்சயம் கிடைக்கும்.இல்ல,வேற பெரிய லைப்ரரில கேட்டுப் பாருங்க. :)

    ReplyDelete
  44. இலுமி, புதுசா பதிவு போட்ருக்கெ படிக்கவும்.
    http://pattikattaan.blogspot.com/

    ReplyDelete
  45. பொறுமையா படிச்சிட்டு வாரேன்!

    ReplyDelete
  46. எனக்கு இந்த நாவல்கள் படிக்கிற பழக்கமே இல்லாமப் போச்சு (கற்பனைகளைப் படிப்பதை விட நிஜங்களைப் படித்து தெரிந்து கொள்ளவே விருப்பம்!) எப்பவோ ஷிட்னி ஷெல்டனின் Sky is Falling படித்தேன், நன்றாகத்தான் இருந்தது. Green Mile ஐப்பற்றி நிறைய பேர் நல்லாருக்குன்னு சொல்றாங்க, படிக்க முயற்சி பண்றேன்!

    ReplyDelete
  47. //எனக்கு இந்த நாவல்கள் படிக்கிற பழக்கமே இல்லாமப் போச்சு //

    நாவல்கள் சில நேரங்களில் உலக இலக்கியங்களை மிஞ்சும்.அதுல ஒண்ணு தான் இது.

    //எப்பவோ ஷிட்னி ஷெல்டனின் Sky is Falling படித்தேன், நன்றாகத்தான் இருந்தது.//


    சிட்னி ஷெல்டன் நாவல்களில் அது சுமார் ரகமே.Tell me your dreams படிச்சுப் பாருங்க.

    //Green Mile ஐப்பற்றி நிறைய பேர் நல்லாருக்குன்னு சொல்றாங்க, படிக்க முயற்சி பண்றேன்!//

    கண்டிப்பா படிங்க.படிக்க வேண்டிய புத்தகம்.

    ReplyDelete
  48. Good work dude...! :)

    Whats the meaning for Illuminaatti..?

    ReplyDelete
  49. யோவ் வெளி,அவனவன் சாகப் போற நேரத்துல சங்கரா சங்கரானு சொல்லுவான்.
    நீரு illuminati னா என்னன்னு கேக்குரீறு.புரியும்னு நினைக்குறேன். :P

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. முத்து said...

    ILLUMINATI said...

    யோவ் வெளி,அவனவன் சாகப் போற நேரத்துல சங்கரா சங்கரானு சொல்லுவான்.
    நீரு illuminati னா என்னன்னு கேக்குரீறு.புரியும்னு நினைக்குறேன். :ப/////////////////


    ஏன் புரியாம!அது சரி illuminati னா என்ன? ஏதோ கம்மு ..........


    சரி சரி என் கடைக்கும் வந்து போறது

    ReplyDelete
  52. ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

    அன்புடன் .> ஜெய்லானி <
    ################

    ReplyDelete
  53. நண்பா,
    அருமையான பகிர்வு,பேட்மேனுக்கும் ஆவலாய் வெயிட்டிங்,நீங்க மேலும் என்ன படிச்சு எழுதபோறீங்கன்னு சொல்லிடுங்க,!!!

    ReplyDelete
  54. மூர் மார்கெட்டில் மூழ்கி முத்தெடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  55. படம் விமர்சனமா!!அருமையா எழுதுங்க,ஆங்கிலமா எழுதாம எல்லாம் ப்ரவலா எழுதுங்க நண்பா

    ReplyDelete
  56. //நீங்க மேலும் என்ன படிச்சு எழுதபோறீங்கன்னு சொல்லிடுங்க!!!//

    தல,நானு எப்ப என்ன எழுதுவேன்னு எனக்கே தெரியாது.அப்பப்ப என்ன பிடிக்குதோ அதுதான் போஸ்ட்.
    அடுத்து batman தான்.கலக்கிடுவோம். :)

    புக் படிக்குற பழக்கம் சின்ன வயசுலேயே ஏற்பட்டுப் போச்சு நண்பா!I'm an avid reader னு சொல்லிகிறதுல எனக்கு பெருமை தான்.

    அப்புறம்,நானு கொஞ்சம் மாறிப் போய் கொரியன் படத்த பத்தி எழுதினாலே சண்டைக்கு வந்துடுவானுங்க நம்ம பயலுக!அதுவும் போக நானு நெறைய உலகப் படம் எல்லாம் பார்க்கலை தல. :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........