Banlieue 13


அப்புங்களா ….
உங்களுக்கு ஒரு நல்ல விஷயம்,அதே நேரம் ஒரு கெட்ட விஷயம்…….
நல்ல விஷயம் என்னன்னா,  இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் பத்தி அதிகம் எழுதலாம்னு இருக்கேன்.
கெட்ட விஷயம் என்னன்னா,என் விமர்சனக் கொடுமைய நீங்க தாங்கணும்….. :)
சரி,மேட்டருக்கு வருவோம்.

சும்மா சும்மா artistic படங்களைப் பத்தியே பதிவு எழுதி எனக்கும் போர் அடிச்சு போச்சு.அதான் இந்த முறை,ஒரு நல்ல action படத்த பத்தி பாக்கப் போறோம்.


Banlieue 13 (District 13), 2004 இல் வெளி வந்த ஒரு பிரெஞ்சு படம்.சொல்லிக்கிற அளவுக்கு பெரிய கதை எல்லாம் கிடையாது.ஆனா அருமையான action படம்.


ஒரு கெட்டவன்,
அவன எதிர்க்குற ஒரு நல்லவன்,
பிரச்னையில மாட்டிக்கிற அவனோட தங்கை,
இவங்களுக்கு உதவியா,அவனுக்குன்னே இருக்குற ஒரு காரணத்துக்காக வர்ற இன்னொரு ஹீரோ…..
இது தாங்க படம்.

2010,பாரிஸ்…..
பாரிஸில் பல புறநகர் பகுதிகள் இருந்தாலும்,Banlieue 13 கொஞ்சம் முக்கியமான இடம்.
எவ்ளோ முக்கியம்னா, அந்த இடத்த சுத்தி மதில் சுவர் கட்டி,உள்ள இருக்குறவங்கள வெளிய வர விடாம வெளியில காவல் போட்டு காக்குற அளவுக்கு ரொம்ப முக்கியமான இடம்….

உள்ளுக்க நடக்குற குற்றங்கள்,கொலைகள்,கஞ்சா,ஹெராயின்,gang war….
இத எல்லாம் தடுக்க முடியாத அரசு,அந்த இடத்த சுத்தி பெரிய சுவர் கட்டி,அந்த ஏரியாவ பாரிஸின் மற்ற இடங்கள்ல இருந்து பிரிச்சு வச்சுருது.இங்க அந்த இடம் பல பாகங்களா பிரிஞ்சு இருக்கு.ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு தலைவன்.

அப்பேற்பட்ட கிரிமினல் தலைவர்கள்ல ஒருத்தன் தான் Taha Bemamud (Bibi Naceri).இவன் பண்ணாத குற்றமே கிடையாது.இவனோட முக்கியாமான குற்றங்கள்ல ஒண்ணு,drugs….

snapshot20100607121339

எப்படி இந்த இடத்துல கெட்டவங்க ஆட்சி பண்றாங்களோ,அது போல சில நல்லவர்களும் இருக்காங்க.மற்றவங்கள காப்பாத்தவும்,இந்த கெட்டவங்கள அழிக்கவும்,அவங்களுக்கு  எதிரா போர் புரியுற நல்லவன் தான் Leïto (David Belle).(ஒரு ஹீரோ வேற என்னதான் பண்ண முடியும் சொல்லுங்க….)

snapshot20100607130945 snapshot20100607130904

Leito வுக்கு,போதைப் பொருள்னாலே சுத்தமா பிடிக்காது.டாஹா அதுல தான் specialist.இது போதாது பத்திக்க? இவங்க ரெண்டு பேருக்கும் எப்பயும் தீராத போர் தான்.

ஒரு முறை,டாஹா கிட்ட இருந்து மில்லியன் மதிப்பு உள்ள போதைப் பொருள எடுத்து அழிச்சுடுவான் லெய்டோ.இதனால டாஹா கடுப்பாகி,லெய்டோவோட தங்கச்சியான Lola (Dany verissimo) வ பிடிச்சு வச்சுகிட்டு அவள வச்சு லெய்டோ வ பிடிச்சு,ஜெயிலுக்கு அனுப்பிடுவான்.இது போதாதுன்னு அவன் தங்கச்சிய போதைக்கு அடிமை ஆக்கி தன்னோட அடிமை மாதிரி வச்சுருப்பான்.

ஆறு மாசம் கழிச்சு,டாஹா ஒரு neutron bomb அ கடத்திருவான்.இத மறுபடியும் கைப்பற்றிக்கிட்டு வர வேண்டிய வேலைய,போலீஸ் கேப்டன் Damien Tomaso (Cyril Raffaelli) கிட்ட ஒப்படைப்பாங்க.இதுல பிரச்சனை என்னன்னா,அந்த பாம்,activate ஆகி இன்னும் 24 மணி நேரத்துல வெடிச்சுரும்.இந்த உண்மை டாஹாவுக்கும் தெரியும்.அவன் அதை பாரிஸ்க்கு நேரா aim பண்ணி வச்சுக்கிட்டு, பணம் கொடுக்கலைன்னா அழிச்சுருவேன்னு மிரட்டிகிட்டு இருப்பான்.அதே நேரம்,டமியனுக்கு b13 பத்தி ஒண்ணுமே தெரியாது.அங்கன போகவும்,அவனுக்கு உதவவும் அவனுக்கு நம்பிக்கையான ஆள் தேவை.அதுக்கு சரியானவன் லெய்டோ..

snapshot20100607125226

ஆனா,டமியன் போலீஸ் னு தெரிஞ்சா லெய்டோ உதவ மாட்டான்.B13 அ விட்டுட்டு போனாதால,போலீஸ் மேல அவனுக்கு தீராத வெறுப்பு.போதாகுறைக்கு அவன் ஜெயில்ல வேற இருப்பான்.இது போக ஒரு முக்கிய காரணமும் இருக்கு.ஆனா,அதை படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.

அவன சம்மதிக்க வைக்க முடிஞ்சதா,leito தங்கச்சிய எப்புடி காப்பாத்தினான்,அந்த பாம் என்ன ஆகுது,b13 க்கு என்ன ஆகுதுங்கறத நீங்க படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க.

கதை வழக்கமான கதை தான் என்றாலும்,திரைக் கதை படத்த பிடிச்சு நிறுத்துது.பர பர வேகம்….
அதை விட கை கொடுக்குற விஷயம், parkour….
அப்டின்னா?அது ஒரு சண்டைக் கலை.இந்த படத்தோட ஹீரோக்கள்ல ஒருத்தரான  டேவிட் பெல்லே அறிமுகம் பண்ணினது.ஒரு இடத்துல இருக்குற பொருட்களையும்,தன்னோட கைகளையும் தவிர்த்து வேற எதையும் உபயோகப் படுத்தாம அங்க இருக்குற தடைகள தாண்டியோ,ஏறியோ,குதிச்சோ போவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.கட்டிடத்துக்கு கட்டிடம் தாவுறது,தடைகள தாண்டி குதிக்கிறது,கம்பில ஏறுறதுனு, இந்த கலை ஐரோப்பால பிரபலம்.

கதையில நான் சொன்ன மாதிரி முக்கியமான விசயங்கள் ரெண்டு….
David Belle.
Cyril Raffaelli.
ஒருத்தர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்.இன்னொருத்தர் martial artist….
சொல்லணுமா,படம் ஆரம்பிச்சு முடியுற வரை வேகம்,வேகம்,வேகம்…..போதாகுறைக்கு பொறி பறக்குற action சீன்ஸ்…. 
டேவிட்,சிரில் ரெண்டு பேருக்குமேயான அறிமுக action சீன்ஸ் ரொம்ப பிரபலம்.அதிலயும் டேவிட்க்கு வச்ச அறிமுக சீன்,உலக பிரபலம்.நீங்களே பாருங்க….



மனுஷன் பின்னி இருப்பாரு.Parkour  கலைய கண்டு பிடிச்சவரு இவரு தான்.கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுறது,கதவுக்கு மேல இருக்குற,அரை அடி கூட இல்லாத கேப் ல பூந்து போறது,கயித்த புடிச்சுகிட்டு கட்டத்துல குறுக்கு வாக்குல ஓடுறது னு இவர் பண்ணின எதுவுமே rope work ,கிராபிக்ஸ் இல்லாம பண்ணி இருக்காங்க.

snapshot20100607125031 snapshot20100607125113

அதுக்காக சிரில் சாதாரணம் இல்ல.அடிதடி மன்னன்.Martial artist,parkour follower,stuntman னு பல முகம் கொண்டவர் தான் இவரு.இவரு இன்ட்ரோ சீன்ல இருந்து முக்கியமான சில காட்சிகள,போக்கிரிலையும்,வேட்டையாடு விளையாடு லயும் காப்பி அடிச்சுருக்காங்க…


ஒரு ஹீரோவுக்கு இன்ட்ரோ சீன் எப்புடி வைக்கணும்னு இந்த படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க கோலிவுட் புண்ணியவான்களே…மரண மாஸ்னா அது இந்த இன்ட்ரோக்கள் தான்.சும்மா நூறு பேர அடிக்குறதும்,மிதிக்குறதும்,ஒரு கிலோ மீட்டர் தாவுறதும்,திருந்தவே மாட்டானுங்க போல….
படத்துல action தவிர்த்து சொல்ல வேண்டிய விஷயங்கள்,பர பர திரைக்கதையும்,சுண்டி இழுக்குற  மியூசிக்கும்,தொட்டு ஒத்திகுற மாதிரியான camera filming.
படத்துல நான் ரசிச்ச சீன்கள்….
ரெண்டு ஹீரோக்களுக்குமான இன்ட்ரோ,
கடைசி பைட்,
லோலாவ லெய்டோ காப்பாதிட்டு வர்றப்போ,அவ கிட்ட வம்பு இழுத்த ஒருத்தனுக்கு அவ தர்ற தண்டனை…..



படத்தோட trailer இதோ



Banlieue 13 – சரியான Action Entertainer….

Comments

  1. தானைத் தலைவி dani verissimo நடிச்ச படங்களுக்கான லிங்க் கொடுத்த கனவுகளின் காதலர் வாழ்க... :)

    யாரும் அவர லிங்க் கேட்டு தொல்ல பண்ணாதீங்கப்பா!

    அப்புறம்,லக்கி லிமட் நண்பரே,சந்தோசமா? :)

    ReplyDelete
  2. Me the First.

    விரைவில் திரும்பி வருகிறேன்.

    முழு நீள கமென்ட்டுடன்.

    ReplyDelete
  3. அந்த சேஸ் சீன் மட்டும் பார்த்துருக்கேங்க... சூப்பரா இருக்கும்... சொல்லிட்டீங்க இல்ல.. படத்தையும் பார்த்துடறேன்...

    விஸ்வா... இங்க இலுமிதான் த ஃபர்ஸ்ட்.. :)

    ReplyDelete
  4. //விரைவில் திரும்பி வருகிறேன். //

    வாங்க....

    //அந்த சேஸ் சீன் மட்டும் பார்த்துருக்கேங்க... //

    ஆமா தல,நீங்க மட்டும் இல்ல.பலரும் அந்த சீன் மட்டும் பாத்து இருப்பாங்க.ஆனா,என்ன படம்னு தெரியாது.பயங்கர famous ஆன வீடியோ கிளிப் அது.ஓர்குட் ல பயங்கர பாமெஸ்.ஓர்குட் பூரா ஒரு சுத்து சுத்துச்சு.அத தெரிஞ்சிக்க தான் அந்த வீடியோ லிங்க்கும் கொடுத்தேன்.

    ReplyDelete
  5. இந்த படத்தோட action sequences a எத்தன படத்துல காப்பி அடிச்சிட்டாங்க இல்ல :)

    ReplyDelete
  6. ஆமா நண்பா.தெரிஞ்சது மட்டும் தான் நான் சொல்லி இருக்கேன்.இன்னும் எத்தனையோ?

    ReplyDelete
  7. parkour நான் முதன்முதலில் பார்த்தது ‘கஸீனோ ரொயால்’ படத்தில் தான் . . அச்சமயம், அப்படத்தில் இந்த ஸ்டண்ட்டைச் செய்த செபாஸ்டியன் ஃபோகேன் தான் இந்தக் கலையின் ஃபௌண்டர் என்று விளம்பரமும் செய்யப்பட்டது. . . அப்புறம் தான் அது ஃபோகேன் மற்றும் டெவிட் பெல்லே இருவரின் கூட்டு முயற்சி என்று ரிஸர்ச் செய்து தெரிந்துகொண்டேன் . . ;-)

    நீங்க செபாஸ்டியன் ஃபோகேன் பெயரையே டோட்டலா குறிப்பிடவே இல்லையே . .

    மற்றபடி, நல்ல பதிவு. .

    ReplyDelete
  8. இது விக்கி ல இருந்து எடுத்தது.

    /David Belle (born 29 April 1973) is a man largely credited as the founder of parkour.

    http://en.wikipedia.org/wiki/David_Belle/

    /Sébastien Foucan (born 24 May 1974; Paris, France) is a French actor of Guadeloupean descent. Along with David Belle he is considered one of the founders of parkour. /

    http://en.wikipedia.org/wiki/S%C3%A9bastien_Foucan

    parkour கூட்டு முயற்சி தான்னாலும்,அதுல பெரும் பங்கு வகிச்சது டேவிட பெல்லே தான்.

    ReplyDelete
  9. இலுமி...B13 படத்துல வர்ற பில்டிங் ஜம்பிங்க வச்சு நம்ம ஊர்ல ஒரு விளம்பரம் எடுத்தானுங்க...அக்ஷய் குமார் கூட கடைசில கட்டை விரலை காட்டி நிப்பார்...ஞாபகம் இருக்கா?
    நல்ல அறிமுகம்யா...!

    ReplyDelete
  10. தெரியாது ரெட்ட...
    இப்ப நீரு சொல்லி தான் தெரியும்.you tube ல பார்த்துடலாம்.என்ன விளம்பரம் அது?

    ReplyDelete
  11. ;-) ரைட்டு . . .எனிவே, ஃபோகேன் பேரு மிஸ்ஸானதுனாலதான் அப்புடி கேட்டேன் . . அதுக்கு, ஆதாரபூர்வமா விகில இருந்து எடுத்து எழுதணும்னு அவசியம் இல்ல ;-)

    //parkour கூட்டு முயற்சி தான்னாலும்,அதுல பெரும் பங்கு வகிச்சது டேவிட பெல்லே தான்//

    ஃபோகேனும் அதுல ஒரு பங்கு வகிச்சதுதான் என்னோட கருத்து. . அதைத்தான் நானும் சொல்லி இருக்கேன் ;-)

    ஸோ, ஃப்ரீயா உடுங்க ;-)

    ReplyDelete
  12. இத்தோட.. ரெண்டாவது பார்ட்டை பாருங்க தல. மொத பார்ட்டை விட நல்லாகீது.

    [அப்பால... யாருக்குமே கமெண்ட் போடக்கூடாதுன்னு முடிவு பண்ணி, அதையும் இன்னைக்கு மாத்திகிட்டு போடும் முதல் கமெண்ட்.

    அதனால.. இதை வரலாற்றில் எய்தி வைக்கவும். எழவு என்னை உருப்படியா ஒரு முடிவு எடுக்கவுடமாட்டேங்கறாங்கப்பா]

    ReplyDelete
  13. நண்பரே,

    உங்கள் புண்ணியத்தால் திரு நிறைச் செல்வி Dani Verissimo திறம்பட நடித்த அற்புதமான படைப்பொன்றை காணும் பாக்யம் பெற்றேன்.

    விறுவிறுப்பாக பதிவை எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும் Daniன் ஒரு போட்டோவைக் கூட பதிவில் காணவில்லை. கொரிய நடிகைகள் மட்டும்தான் உங்கள் பதிவுகளில் இடம் பெறுவார்களா?!

    சித்தரவதை தொடரட்டும் :)

    ReplyDelete
  14. அடடா ரொம்ப நாள் கழிச்சு, நண்பர்கள் பதிவிடும் படத்தை நானும் பார்த்திருக்கேனுங்குற திருப்தி இப்போ தான் கிடைச்சது..... சில வாரங்கள் முன்னாடி நல்ல ஆக்ஷன் படம் ஏதாவது பார்க்கலாமேனு தேடுனபோ கிடச்ச படம் இது... அந்த அபார்ட்மென்ட் பில்டிங்கனு சேஸிங் ஸீன் அருமையான கோர்வை... இப்படியும் சாகசம் செய்ய முடியுமா என்று ஆச்சர்யபட வைக்கிறானுங்க பயபுல்லங்க....

    நம்ம ஊருல இத இமிடேட் பண்றேன்னு பண்ணுகுற ரவுசுல, இந்த ஒரிஜினல்களை பார்க்குற போது தான் நிம்மதி கிடைக்குது.

    ReplyDelete
  15. அப்புறம்.. ஃபாலோ பண்ணுன அத்தனை பேரையும் பொறுமையா நிறுத்தினேன். இப்ப மொதல்ல இருந்து.

    நீங்கதான் அதிலும் ஃபர்ஸ்ட்!

    வரலாறு.. வரலாறு..!!

    ReplyDelete
  16. //நீங்கதான் அதிலும் ஃபர்ஸ்ட்!

    வரலாறு.. வரலாறு..!!//

    தன்யனானேன்.... :)


    //இத்தோட.. ரெண்டாவது பார்ட்டை பாருங்க தல. மொத பார்ட்டை விட நல்லாகீது.//

    ஆமா தல,அதுவும் நல்லா தான் இருந்தது.ஆனா,எனக்கு இது தான் ரொம்ப பிடிச்சு இருந்தது.ஆனா ரெண்டுலயும் கலக்குற விஷயங்கள்,fight and music.... :)

    ReplyDelete
  17. கனவுகளின் காதலரே!

    நமக்குள்ள என்ன டீலிங் னு யாருக்கும் தெர்ல.அதனால நீரு காமெடி பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கீறு!!
    என்ன மாதிரியான படத்த காட்டி நல்ல பையன் இலுமி ய நீரு கெடுக்க பாத்தீருன்னு தெரிய வந்தது,அவ்ளோ தான் நீரு...பயபுள்ளைக குமுறிடுவானுங்க.பாத்து ஜாக்கிரதையா இருக்கவும்!! :)

    அப்புறம் quick post ரபிக் அண்ணாத்த....

    நீரு பாத்த படமா இது?சாதன தான் சாமி!!! :)

    அப்புறம் tony jaa படங்கள் பாருங்க..இது எல்லாம் ஜுஜுபி யா தெரியும்... :)

    ReplyDelete
  18. //உங்கள் புண்ணியத்தால் திரு நிறைச் செல்வி Dani Verissimo திறம்பட நடித்த அற்புதமான படைப்பொன்றை காணும் பாக்யம் பெற்றேன்.//

    அடப் பாவி மனுஷா....
    பாத்தீரா என்ன?வயசானாலும் உமக்கு குசும்பு போகல அய்யா!! ;)

    ReplyDelete
  19. இரு படம் பார்த்துட்டு வந்து கமெண்ட் போடுறேன்

    ReplyDelete
  20. //இரு படம் பார்த்துட்டு வந்து கமெண்ட் போடுறேன்//

    யோவ் நொன்ன,அப்ப என் போஸ்ட் எல்லாத்துக்கும் நீ கமெண்ட் போடணும்னா எல்லாத்தையும் பாத்துட்டு தான் போடுவீயாக்கும்.விளங்கிரும்...

    ReplyDelete
  21. //விஸ்வா... இங்க இலுமிதான் த ஃபர்ஸ்ட்.. //

    அதெப்படி? இது போங்கு ஆட்டம், நான் வரல.

    ReplyDelete
  22. // அப்புங்களா ….
    உங்களுக்கு ஒரு நல்ல விஷயம்,அதே நேரம் ஒரு கெட்ட விஷயம்…….
    நல்ல விஷயம் என்னன்னா, இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் பத்தி அதிகம் எழுதலாம்னு இருக்கேன்.
    கெட்ட விஷயம் என்னன்னா,என் விமர்சனக் கொடுமைய நீங்க தாங்கணும்….. :) //

    உங்க கிட்ட பிடிச்சதே இந்த ஒரு நல்ல விசயந்தான் செய்யப்போறத முன் கூட்டியே சொல்லுறது தான்

    Thanks a lot gentleman

    ReplyDelete
  23. பாஸ் இத இதத் தான் எதிர்பார்த்தேன்.போட்டாசுல டவுன்லோட்.

    ReplyDelete
  24. பேரும் புரியாது... பேச்சும் புரியாது எனக்கு நீ மட்டும் எப்புடியா புரிஞ்சு பாக்குற?

    dani verissimo படம் இங்கு போடாததை கண்டிக்கிறேன். :-)

    ReplyDelete
  25. //உங்க கிட்ட பிடிச்சதே இந்த ஒரு நல்ல விசயந்தான் செய்யப்போறத முன் கூட்டியே சொல்லுறது தான்

    Thanks a lot gentleman//

    மொக்க போட்டாலும் அதுல ஒரு நியாயம் இருக்கணும் தல.இது தான் நம்ம பாலிசி... :)

    ReplyDelete
  26. //பாஸ் இத இதத் தான் எதிர்பார்த்தேன்.போட்டாசுல டவுன்லோட்.//

    இவ்ளோ பாஸ்டாவா? :)

    ReplyDelete
  27. ரோசு,
    ஓம் subtitle நமக... :)

    அப்புறம்,நாங்க இங்கன தானைத் தலைவி டேனி 'நடிச்ச' படம் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்.நீரு என்ன சின்னப் புள்ளதனமா போட்டோ கேட்டுகிட்டு ராஸ்கல்!! :)

    ReplyDelete
  28. இல்லு உங்க கலையு\லக விமரிசனம் சூப்பர்

    ReplyDelete
  29. ILLUMINATI said...
    யோவ் நொன்ன,அப்ப என் போஸ்ட் எல்லாத்துக்கும் நீ கமெண்ட் போடணும்னா எல்லாத்தையும் பாத்துட்டு தான் போடுவீயாக்கும்.விளங்கிரும்...////////


    இப்போவே சலிச்சுகிட்டா எப்படி டௌன்லோட் பண்ணி பார்க்க வேண்டாமா அதுவும் பிரெஞ்சு வெர்சன் வேண்டும்

    ReplyDelete
  30. வாழ்க்கையில முதல்முறையா, நான் பார்த்த் படத்தை பற்றி எழுதியிருக்கே இலுமி..
    நல்ல விறுவிற்ப்பான படம்...
    நான் DVD வெச்சுருக்கேன்...

    ReplyDelete
  31. //ILLUMINATI said...
    யோவ் நொன்ன,அப்ப என் போஸ்ட் எல்லாத்துக்கும் நீ கமெண்ட் போடணும்னா எல்லாத்தையும் பாத்துட்டு தான் போடுவீயாக்கும்.விளங்கிரும்...////////


    நல்ல வேளை நா தப்பிச்சேன் .இது மாதிரி போடப்போனன் . அப்ப முத்துதான் இன்னைக்கு பலி ஆடு,,ஹி...ஹி....

    ReplyDelete
  32. நல்லாருக்கு , இரு அந்த படம் பாக்க ட்ரை பண்றேன்

    ReplyDelete
  33. @பட்டு,

    அடடா,நீரு பாத்த படமா இது?இரு ஓய்!அடுத்த முறை கொரிய படம் எதுனாச்சும் எடுத்து பதிவு போடறேன்.உமக்கு உம்ம வாய் தான் ஓய் எமன்... :)

    @ஜெய்,

    வாங்க ஜெயில் ஆணி,ச்சே ஜெய்லானி...
    தானாக வந்து தலையைக் கொடுத்த அப்பாவி ஆடு யாரு... :)

    @மங்கு,

    யோவ்,பழக்க தோசத்துல பக்கத்து வீட்டுல நுழைஞ்சு ஓசி டிவி ல பார்க்கலாம்னு நுழைஞ்சுடாத.இது டவுன்லோட் பண்ணி பார்க்கணும்.புரியுதா? :)

    ReplyDelete
  34. @ஜெய்சங்கர்:

    இது ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கு.இருந்தாலும்,தேங்க்ஸ்ங்க.

    ReplyDelete
  35. யாராவது பிரெஞ்சு வெர்சன் டௌன்லோட் லிங்க் குடுங்கப்பா

    ReplyDelete
  36. @muthu,

    யோவ் லூசு,இந்த படம் இருக்குறதே பிரெஞ்சு ல மட்டும் தான்யா.நீரு அப்பாவி ஆடுன்னு அடிக்கடி நிரூபிக்குரீறு.

    ReplyDelete
  37. //யோவ் லூசு,இந்த படம் இருக்குறதே பிரெஞ்சு ல மட்டும் தான்யா.நீரு அப்பாவி ஆடுன்னு அடிக்கடி நிரூபிக்குரீறு.//

    அப்ப ரஷ்யன் வெர்சன் தேடனும்...

    ReplyDelete
  38. //அப்ப ரஷ்யன் வெர்சன் தேடனும்...//

    யோவ்,நீரும் முத்து கூட கூட்டா? உமக்கு ஏன் ஜெயில் ஆணி னு பேர் வந்துச்சுன்னு இப்ப தான்யா புரியுது.இது கூட எல்லாம் சேந்தா அப்புடிதான்.

    ReplyDelete
  39. ILLUMINATI said...

    @muthu,

    யோவ் லூசு,இந்த படம் இருக்குறதே பிரெஞ்சு ல மட்டும் தான்யா.நீரு அப்பாவி ஆடுன்னு அடிக்கடி நிரூபிக்குரீறு.///////////////


    அப்போ அந்த லிங்க் கொடு

    ReplyDelete
  40. வெயிட்டிங் பார் ஆர்யா 1.

    ReplyDelete
  41. //அப்போ அந்த லிங்க் கொடு//

    எனக்கு மெயில் பண்ணுயா.தர்றேன்.

    //வெயிட்டிங் பார் ஆர்யா 1.//

    ஹிஹி..
    தல,நான் எவ்ளோ சோம்பேறின்னு நீங்க இன்னுமா தெரிஞ்சுக்கல?
    இன்னும் கொஞ்ச நாள்(ஒரே ஒரு வாரம்!) வெயிட் செய்யண்டி.
    லேட்டுகா இஸ்தாணு.. :)

    ReplyDelete
  42. ஆஹா ... நான் ரொம்ப லேட்... ஆனாலும் நல்ல ஒரு டவுன்லோட் செய்யும் வாய்ப்பைக் கொடுத்துள்ளீர்கள்.. இது போன்று நிறைய எழுதுங்கள் இல்லுமி.. அடிக்கடி எழுதுங்கள்.. நிறைய படங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.. நன்றி...

    ReplyDelete
  43. உங்களுக்கு ஒரு நல்ல விஷயம்,அதே நேரம் ஒரு கெட்ட விஷயம்…….
    நல்ல விஷயம் என்னன்னா, இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் பத்தி அதிகம் எழுதலாம்னு இருக்கேன்.
    கெட்ட விஷயம் என்னன்னா,என் விமர்சனக் கொடுமைய நீங்க தாங்கணும்….. :)
    சரி,மேட்டருக்கு வருவோம்.///

    இல்லு உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    ReplyDelete
  44. //இது போன்று நிறைய எழுதுங்கள் இல்லுமி.. அடிக்கடி எழுதுங்கள்.. நிறைய படங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.. நன்றி...//

    ஆஹா!இந்தப் பீசு நம்மள வச்சு காமெடி பண்ணுதா இல்ல சீரியஸா பேசுதான்னு கூட தெரியலையே!
    ஹிஹி,எதுவா இருந்தாலும்..
    நான் சோம்பேறி சாமு.ஒரு மாசத்துக்கு ஒரு போஸ்ட் போட்டா போதாதான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். :)

    ReplyDelete
  45. //இல்லு உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு//

    யோவ் மொக்க பீசு!அதுக்காக உம்ம மாதிரி வர்ற போற எல்லோரையும் முன்னறிவிப்பே இல்லாம மொக்க போட சொல்லுதீரா?
    ஆங்,செல்லாது செல்லாது. :)
    (யோவ்,ஏற்கனவே நாரத்தனமா வைய்வானுங்கய்யா!சொல்லாம மொக்க போட்டா கும்மிடுவானுங்க.உமக்கு அதுல நிறைய அனுபவம் இருக்கலாம்.ஆனா என்ன மாதிரி நல்ல பையனுக்கு? ;) )

    ReplyDelete
  46. ஒரு நல்ல விஷயம்,அதே நேரம் ஒரு கெட்ட விஷயம்…….


    நல்ல விஷயம் என்னன்னா,உன்னை நான் நொங்குரதுன்னு முடிவு பண்ணிட்டேன்

    கெட்ட விஷயம் அதை நீ தாங்கி கொள்ளனும்

    ReplyDelete
  47. இந்த படம் இன்றே கடைசி

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. இன்னுமா வேற படம் போடாமல் இருக்க இரு உனக்கு சுறா dvd அனுப்பிவைக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........