Triple Treat.........

-->
ஹாய் பிரண்ட்ஸ்.....
இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சப்போ தோணினது தான் இந்த triple treat.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி,சினிமா பத்தி எழுதுற அளவு,புக்ஸ் மற்றும் காமிக்ஸ் பற்றி நான் எழுதலைன்னு ஒரு வருத்தம் இருக்கவே செய்தது.அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ தான் இந்த ஐடியா....
இனிமே இதே மாதிரி பண்ணலாமான்னு நீங்களே சொல்லுங்க....




Treat 1: Comics

12 Reasons why I love her அப்டின்னு ஒரு காமிக்ஸ் . 12 chapters . ஒவ்வொண்ணும் ஒரு தனிக் கதை மாதிரி இருக்குறது சிறப்பு. Gwen,Evan அப்டிங்க்கிற ரெண்டு காதலர்களுக்கு நடுவுல நடக்குற முதல் சந்திப்பு,சண்டை,ஊடல்,எதிர்பார்ப்புகள்,விஷமம்,பிரிவு னு அவங்களோட வாழ்கையில நடக்குற 12 தருணங்களை சேர்த்து ஒரு கதையாக்கி கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் இது. காதலிக்குற ஒவ்வொருவரும் சொல்லுவாங்க ஒவ்வொரு நொடியோட எதிர்பார்ப்புகளையும்,அழகையும்......
காதலின் அலங்கோலத்தை குறிக்கவோ என்னவோ,இந்த chapters எல்லாமே வரிசைப் பிரகாரம் இல்லாம சிதறி இருக்கு.ஆனாலும்,அதுவும் ஒரு அழகு தான்ங்க,காதலை மாதிரியே....
இத எழுதி இருப்பவர் Jamie S.Rich.
வரைஞ்சவங்க Joelle Jones.
முதல் chapter க்கு முன்னாடி ஒரு சின்ன முன்னுரை மாதிரி கொடுத்து இருக்காங்க.ஒரு காபி ஷாப்ல இவன் ஜன்னலோரம் உட்கார்ந்து இருக்கும்போது தூரத்தில க்வன் வருவா...
இவங்க முதல் சந்திப்பு இது தானோ அப்டின்னு நாம நெனக்குறப்போ,க்வன் பின்ன வந்து ஒருத்தன் பேச ஆரம்பிப்பான்.கொஞ்ச நேரத்துல க்வன் சிரிச்சுகிட்டே ஜன்னல் பக்கம் கைய காட்ட,அவன் இஞ்சி தின்ன எதுவோ மாதிரி கிளம்புவான். உள்ள நுழையுறப்போ க்வன் சிரிச்சுகிட்டே கேப்பா,
“பார்த்தியா ?” அப்டின்னு.....
அதுக்கு இவன் நமுட்டு சிரிப்போட “ஆமாம்...ஒரு நொடி உன் தொல்ல என்ன விட்டுடுமோன்னு சந்தோசப்பட்டேன்” அப்டிம்பான்
“நீ .ஆசைப்பட வேண்டியது தான்” இது க்வன்.
இப்டி குறும்பா ஆரம்பிக்கிற கதை.அடுத்தடுத்த பகுதிகள்ல சண்டை,அன்யோன்யமான நொடிகள்,சிறு சிறு ஊடல்கள்,கனவுகள்,ஒருதருக்காக ஒருத்தர் சண்டை போடறதுன்னு.......
ஒரு romantic comics இவ்ளோ அருமையா இருக்க முடியுமான்னு என்ன ஆச்சரியப்பட வச்சது. முதல் chapter ல நடக்குற சண்டைல ஆரம்பிச்சு, கடைசி சாப்டர்ல கடைசி பக்கத்துல ரெண்டு பெரும் கை கோர்த்துகிட்டு போகுற வரை, (கவனிக்க:கதை jumbled... ஸோ,கதை முடிவு இது இல்ல ) ஏதோ இந்த ரெண்டு காதலர்களோட வாழ்கையில நாம திருட்டுதனமா எட்டிப் பார்க்குறோமோனு ஒரு பீலிங்க ஏற்படுத்துற அளவுக்கு கதை.... கதைன்னே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு.... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு நடந்தத தான் எழுதினேன்னு கதாசிரியர் சொன்னா சத்தியமா நம்பலாம்..... ஒரு முறை படிச்சு தான் பாருங்களேன்.காதல் இவ்ளோ அழகானு நீங்களும் மயங்க ஆரம்பிச்சுடுவீங்க.....
12 Reasons why I love her – There are more than enough reasons to love this comics....


Link  for download ---  http://rapidshare.com/files/183535684/12_Reasons_Why_I_Love_Her.cbr
Treat 2: Novel

ஆசைக்கு மூணுல ஒண்ணு இங்கிலீஷ்.ஹீ ஹீ ஹீ....
Guys,let’s see about the novel “Killing Floor” by Lee Child....
The two noteworthy things about this novel is the story (which is good but not awesome) and the hero characterisation (which,is awesome). .
Ok,let’s see the story first of all....
Jack Reacher is a drifter.A man without a job ,he likes to travel a lot,explore the country and he likes to stay at the road,always travelling.One day,driven by a whim,he decides to stop by an unknown town on his way through to the coastal areas.He knew that town by a small note from his brother. What he did not know is that,he is getting into serious trouble.
Half an hour in the town,while he is dining,four police men arrive with shotguns in their hands and apprenhend Jack.He finds out that he is being arrested for a brutal murder.
Reacher just knows that he didn’t do anything.As time goes,he finds himself tangled in big trouble along with a rich banker,a gorgeous cop and a tough detective.
What is the real eason for Reacher to come to that town?Why does he love travelling so much?Who is he?Caught at the wrong place at the wrong time,where will the happenings gonna lead him to?
Now,about the characterisation of the hero. A hardcore,tough to break hero who maintains a cool head even at the face of crisis.Let me tell you an example...
“You killed five guys Reacher.That’s a hell of a thing.How do you feel about it?”
I shrugged.”How do you feel when you put cockroach powder down?”
The starting is just explosive.The novel starts with the arrest of the hero.The first chapter ends with a promising start ....
“I was under arrest.In a town where I’d never been before.Apparently for murder.I knew two things.
They couln’t prove something had happened if it hadn’t happened.
I didn’t kill anybody. NOT IN THEIR TOWN,AND NOT FOR A LONG TIME ANYWAY.
Now guys,do you get the picture? Jack Reacher is a hardcore toughnut.A no nonsense guy who does not bother himself playing fair,he grabs the oppurtunity when he gets one and does not mind playing dirty. A great change compared with the usual ‘All heart’ american heroes I must say. He is exactly the kind of the man who you would like to have by you side in face of trouble.
Though the hero is pretty awesome,the story is good.Not bad,not awesome...just good.The first one third is steaming,while the second third slightly drags...The third half resumes its pace and overall it’s a good story.The story is narrated in first person’s view and it has it’s advantages and disadvantages.It gets pacy at places and drags at some places where explanations are involved.The writing is ok.Moreover,it is to be noted that this is the first story by the author.Considering that, this story is pretty good.
My rating: 6.5 /10.
Punchline: Reacher will reach into you.




Treat 3: Music




நீங்க Usher ஓட Yeah பாட்டு கேட்டு இருக்கிங்களா?இல்லையா,சரி இப்போ கேளுங்க....




அதிரடிக்கிற இசையும்,அம்சமான டான்சும்,இசைக்கு ஏத்த மாதிரியான background லைடிங்கும்(குறிப்பா,இசைக்கு ஏத்த மாதிரி சேர்ந்து துடிக்கும்  லைடிங்)..... இந்த பாட்டுல இசைக்கு இருக்குற பங்கு அந்த லைடிங்கும் இருக்கு.......
முக்கியமா,அசால்டான டான்ஸ் மூவ்ஸ் ...
என்ன இல்ல இந்த பாட்டுல.....
முத முறை கேட்ட பின்ன ரெண்டாவது முறையும் உங்கள கேட்கத் தூண்டும் பாட்டுல ஒண்ணா இது கண்டிப்பா இருக்கும்.....
கேட்டுப் பாருங்க.....
டிஸ்கி:இத சாக்கா வச்சு எப்படி நைசா இங்கிலிஸ்ல எழுதுனோம் பாத்தீங்கள்ள.... எத்தன தடவ சொல்லி இருக்கேன்.வேதாளம் முருங்க மரம் ஏறத்தான் செய்யும்னு... ;)
உங்க வரவுக்கு நன்றி.உங்க எண்ணங்களை கமென்ட்டில் சொல்லுங்க....




குத்தணும் போல இருக்குமே.உங்க கிட்ட குத்து வாங்க என்னால ஆகாது.அதுக்கு தான இத வச்சுருக்கேன்.குத்துங்க,தாராளமா குத்துங்க...  :)

Comments

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    புதுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்! அவ்வப்போது இது போல் தொடருங்கள்!

    திரை விமர்சனங்களையும், உங்கள் அரசியல் கருத்துக்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாமே?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி டாக்டர் செவன்...
    அப்புறம் அரசியல் எழுத நெறைய பேரு இருக்காங்க பாஸ்.எனக்கு entertainment blogger ஆ இருக்குறதுல தான் சந்தோசம்.

    ReplyDelete
  3. ம்ம்ம் செம ட்ரீட் தான் இந்த மூனும்
    உஷர் இசை சூப்பர்
    அடிக்கடி ட்ரீட் கொடுங்க

    அப்படியே நம்மளயும் கொஞ்சம் பாருங்க
    www.jillthanni.blogspot.com

    ஒரு விளம்பரம் தான்

    ReplyDelete
  4. //உஷர் இசை சூப்பர்
    அடிக்கடி ட்ரீட் கொடுங்க//

    செய்துடலாம். :)
    usher எனக்கு பிடிச்ச பாட்டுகல்ல ஒண்ணு...பகிரணும்னு தோணுச்சு.அதான்...

    ReplyDelete
  5. // ஏதோ இந்த ரெண்டு காதலர்களோட வாழ்கையில நாம திருட்டுதனமா எட்டிப் பார்க்குறோமோனு ஒரு பீலிங்க ஏற்படுத்துற அளவுக்கு கதை... //

    நல்லா அனுபவிச்சு படிச்சு எழுதியிருக்கீங்க..

    // He is exactly the kind of the man who you would like to have by you side in face of trouble. //

    இதுவும் அப்படித்தான்.. இந்த அளவுக்கு கேரக்டர் explain பண்ணனும்னா, ரொம்பவே அனுபவிச்சு படிச்சு இருக்கணும்.. இன்னும் உங்களுக்கு அதிகமா பிடிச்ச கதைகளை எழுதுங்க..

    ReplyDelete
  6. O Yeah! Triple Treat is good. O Yeah!

    ReplyDelete
  7. நன்றி திரு.பிரசன்னா....

    ReplyDelete
  8. //நல்லா அனுபவிச்சு படிச்சு எழுதியிருக்கீங்க..//

    இருக்காதா பின்ன?காமிக்ஸ்னா எனக்கு உசுரு பாஸ்... :)

    //O Yeah! Triple Treat is good. O Yeah!//

    நன்றி சித்ரா அவர்களே...

    ReplyDelete
  9. நல்ல முயற்சி . . . வாழ்த்துகள் . . இதைப்போல் அடிக்கடி எழுதுங்கள் . . (வழக்கப்படி விஸ்வா தான் ஃபர்ஸ்ட்டு வருவார் என்று நினைத்தால், பயங்கரவாதி வந்திருக்கிறாரே . . :-) நல்லது) . .

    ReplyDelete
  10. Interesting post.

    I like Usher too!

    ReplyDelete
  11. எதாவது ஆள் கிடைத்தால் 12 வழியையும் முயற்சி செய்து பார்க்கலாம் ம்ம் ......................
    நன்றி

    ReplyDelete
  12. நல்லா இருக்கு. நம்ம கோவில்பட்டி பேர காப்பாத்துங்க.

    ReplyDelete
  13. நண்பரே,
    காமிக்ஸ் கதையை ரொம்ப ரசிச்சு உங்க வாழ்க்கைல நடக்குறத போல் feel பண்ணிருபீங்க போல....

    டவுன்லோட் லிங்குக்கு நன்றி நண்பரே.நானும் படிக்கிறேன்.


    ஆங்கில நாவல் படிக்குமளவுக்கு நமக்கு புலமை இல்லை

    வீடியோ அருமை பாஸ்

    ReplyDelete
  14. ஜாலியான பதிவு நண்பரே,

    \\எதாவது ஆள் கிடைத்தால் 12 வழியையும் முயற்சி செய்து பார்க்கலாம் \\

    அதே தான் இங்கேயும்..

    ReplyDelete
  15. நண்பரே,

    இளமையான பதிவு. காதல் காமிக்ஸ்,துள்ளல் இசை இவற்றுடன் ஒரு மர்ம நாவல் குறித்த அறிமுகம் என சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  16. //இதைப்போல் அடிக்கடி எழுதுங்கள் . .//

    செய்துடலாம்.... :)

    //வழக்கப்படி விஸ்வா தான் ஃபர்ஸ்ட்டு வருவார் என்று நினைத்தால், பயங்கரவாதி வந்திருக்கிறாரே . .//

    ஆமா.... :)
    அவர ஆளையே காணோமே?பயணத்திலே பிஸியோ?

    //Interesting post.//

    நன்றி திரு.ஜோ....

    //Cibi said...
    SIV said...//

    ஆஹா,நம்மள மாதிரி ரெண்டு பீசு சிக்கி இருக்கு.பேசாம சங்கம் அமச்சுரலாமா?

    //நம்ம கோவில்பட்டி பேர காப்பாத்துங்க.//

    இன்னுமா பாஸ் என்ன நம்பிகிட்டு இருக்கீங்க?

    //காமிக்ஸ் கதையை ரொம்ப ரசிச்சு உங்க வாழ்க்கைல நடக்குறத போல் feel பண்ணிருபீங்க போல....//

    எல்லா காமிக்ஸுக்கும் அப்படி தான் தல.....
    இது இன்னும் நல்லா இருந்தது.....

    //டவுன்லோட் லிங்குக்கு நன்றி நண்பரே.நானும் படிக்கிறேன்.//

    கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க...

    //இளமையான பதிவு.//

    காதலரே,ஒரு சின்ன request.இந்த காமிக்ஸ நீங்க படிச்சு ஒரு விமர்சனம் போடணும்.இன்னும் நெறைய பேருக்கு போய் சேரும்.செய்யுங்க ப்ளீஸ்.....

    ReplyDelete
  17. திரு. ஜோ?!?

    ஜோ-ன்னு கூப்பிடுங்க, போதும்!

    ReplyDelete
  18. //வழக்கப்படி விஸ்வா தான் ஃபர்ஸ்ட்டு வருவார் என்று நினைத்தால், பயங்கரவாதி வந்திருக்கிறாரே . //

    அண்ணன் ஊரில் இல்லாத காரணம் + டாடா போட்டான் போட்டு தாக்குது. முடியல............

    ReplyDelete
  19. தல,

    //அவர ஆளையே காணோமே?பயணத்திலே பிஸியோ?//
    சண்டே மீ த ரிடர்ன். அப்போ பாருங்க, கச்சேரி ஆரம்பம்.

    ReplyDelete
  20. தல,

    //திரை விமர்சனங்களையும், உங்கள் அரசியல் கருத்துக்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாமே?//

    ஏற்கனவே காமிக்ஸ் பதிவர் ஒருவர் தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்து விட்டார். நீங்களுமா? வேண்டாம். விட்டு விடுங்கள்.

    ReplyDelete
  21. நண்பரே,

    தலைப்பை சரியாக படிக்காமல் நானும்கூட இந்த பதிவு 10 Things I Hate About Her என்ற படத்தை பற்றியோ என்று நினைத்து விட்டேன். இருந்தாலும் கூட சிறப்பான ஒரு பதிவு. ஹாட் ட்ரிக் சிறப்பாக இருந்தது. நாட் ஒன்லி ஹாட் ட்ரிக், பட் ஆல்சோ எ விக்கெட் மெய்டன். எப்புடி?

    ReplyDelete
  22. நீங்க மட்டும் ஒரு டேன்ஸ் டிவிடி லிங்க் கொடுப்பீங்க, அத நாங்களும் பாக்கணும். என்ன கொடுமை சார் இது?

    எங்க தெலுகு சிங்கம், ஹைதராபாத் அண்ணன் , பாலைய்யா அவர்களின் இன்ட்ரோ ஸீன் ஒன்று இங்கே சென்று பாருங்கள், மிரண்டு விடுவீர்கள். அதற்க்கு பிறகு டேன்ஸ் லிங்க் எதையுமே பதிவில் கொடுக்க மாட்டீர்கள். எப்புடி? சுறா எல்லாம் அண்ணன் முன்னாடி சமாதானப் புறா.

    தயவு செய்து விடியோவை முழுவதும் பாருங்கள்=http://www.youtube.com/watch?v=itA_8wmUh-k

    ReplyDelete
  23. பொறுமை, ஏனென்றால் விடியோவின் இரண்டாவது நிமிடத்தில் தான் அண்ணன் பாலைய்யா வருவர்.

    BTW, Me the 25th.

    ReplyDelete
  24. விஸ்வா அவர்களே,
    பாலய்யாவின் கொடுமை எனக்கு ஏற்கனவே பழகியது தான்.நீங்க கொடுத்த விட ஸ்ட்ராங் லிங்க் ஒண்ணு என்கிட்டே இருக்கு.பார்க்குறிங்களா?

    http://www.youtube.com/watch?v=m_tpbN4GgWY&feature=related

    ReplyDelete
  25. அருமை நண்பரே,
    இந்த விடியோ லிங்க் மிகவும் பழையது. என்னை போன்ற பாலையா ரசிகர்களுக்கு இதுதான் தினமும் பார்க்கும் முதல் விடியோ. ஒரு தனி மனிதனின் தன்னம்பிக்கைக்கு முன் எந்த ஒரு எந்திரமும் போட்டியிட முடியாது என்ற முற்போக்கு சிந்தனையை தூண்டும் ஒரு பின் நவீனத்துவ விடியோ அது. இதில் உள்ள நுண் அரசியலை பற்றி விரிவாக நீங்க ஏன் ஒரு பதிவிடக்கூடாது?

    கடைசியாக வந்த படம் என்பதால் அந்த லின்க்கை அளித்தேன். புதிய படமாகிய சிம்மா இன்னமும் இங்கே வரவில்லை. வெயிட்டிங்.

    ReplyDelete
  26. நீ பன்ற ஒரு பிரச்சனைக்கே பதில் சொல்ல தெரியாது , இதுல மூணு வேறையா ?

    ReplyDelete
  27. // ஆஹா,நம்மள மாதிரி ரெண்டு பீசு சிக்கி இருக்கு.பேசாம சங்கம் அமச்சுரலாமா? //

    நா ரெடி அட நீங்க ரெடியா .............

    ReplyDelete
  28. உங்க அளவுக்கு நம்மளுக்கு இங்கிலிபீசு வராது சாமி... ஆனா நல்லா இருக்கு..

    எனக்கும் ஒரு காதலி கிடைத்தால் இதே மாறி உருகலாம்..

    சாமத்துல சுத்துனா காதலி எங்க கிடைப்பா... காத்து கருப்பு தான் கிடைக்கும்..

    ReplyDelete
  29. என்ன இலுமி.. அந்த யூ டியூப்ல போயி தெலுங்கு படம் பார்த்தேன்..கேப்டனை விட, பயங்கரமாயிருக்கு..

    ( அதுவும், ரயிலை திருப்பி அனுப்பறது..!!!)

    ReplyDelete
  30. //நா ரெடி அட நீங்க ரெடியா .............//

    அட,நான் எப்பயுமே ரெடிங்க...

    //எனக்கும் ஒரு காதலி கிடைத்தால் இதே மாறி உருகலாம்..//

    அப்பு,சொரி வந்தா சொரிய சொரிய சொகமா தான் இருக்கும்.ஆனா,சொறிஞ்சு முடிச்சு பாத்தா ரத்தக் களறியா இருக்கும்.இது நான் சொன்னதில்ல...

    //சாமத்துல சுத்துனா காதலி எங்க கிடைப்பா... காத்து கருப்பு தான் கிடைக்கும்..//

    இதோ,சங்கம் ரெடி ஆகுது பாஸ்.வந்து சேந்துடுங்க....

    //கேப்டனை விட, பயங்கரமாயிருக்கு..

    ( அதுவும், ரயிலை திருப்பி அனுப்பறது..!!!)//

    ஹா ஹா...
    கேப்டன விட கொடும தான் பட்டு.ஆனா,இவருக்கு போட்டியா தமிழ்ல இளைய நடிகர் ஒருத்தர் இருக்காரு.அதனால.... :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........