உளியடி .....
என் ப்ளாக் வெறும் entertainment க்கு மட்டும் இருக்கனும்னும், அரசியல் வரவே கூடாதுன்னும் இருந்தேன். ஆனா,இதப் பாத்த பின்ன எழுதாம இருக்க முடியல.
இன்றைய தினமணியில் “தொடரும் பாசிச நெடும்பயணம்...” என்ற பழ.நெடுமாறனின் கட்டுரை பார்த்தேன்.அதில் அவர் சொல்லிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால்,here goes....
25-4-10 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதலைமைச்சர் கருணாநிதிக்கு “மனித உரிமை பாதுகாப்புக் குழு” என்ற அமைப்பை சேர்ந்த ஐந்தாறு பேர் கருப்புக்கொடி காட்டியதால் தி.மு.க வினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த வழக்கறிஞர்களை போலீசாரை விட்டே அப்புறப்படுத்தி இருக்கலாம்.ஆனால்,போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்க, தி.மு.க வினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள்.
நாற்காலிகள் வீசப்பட்டு,மீடியாகாரர்களின் கேமரா உடைக்கப்பட்டும் இருக்கிறது.அவர்களும் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை காவல்துறையினரைக் கொண்டே வெளியேற்றி இருக்கலாமே என்று கேட்ட போது,
“உயர் நீதி மன்ற வளாகத்திற்குள் காவல்காரர்கள் வரக் கூடாதே” என்று பதில் அளித்து இருக்கிறார் முதல்வர்.
“நான்கைந்து பேர் முதல்வருக்கு திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள்.அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா, திமுக வினருக்கு உணர்ச்சி கிடையாதா,மானமுள்ளவன் இல்லையா,இரண்டு தட்டு தட்ட மாட்டானா” என்று தலைமை நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞகர்களை தாக்கியதை நியாயப்படுத்தும் வகையில் சட்ட அமைச்சர் பேசுகிறார்.
என்ன இழவுயா நடக்குது தமிழ்நாட்டுல?
ஒரு மனுஷன் கருப்புக்கொடி காட்டுனது குற்றமா?இவனுங்களுக்கு எதிரா ஒருத்தனும் நடக்க கூடதா?இங்க நடக்குறது ஜன நாயகமா,இல்ல வேற எதுவுமா?
கருணாநிதியின் விளக்கத்தைப் பாருங்க (சாரி,ஒரு ஆளுக்கான மரியாதை வயசுல கிடையாது.செயல்லன்னு நெனக்குறவன் நான்) .
“உயர் நீதி மன்ற வளாகத்திற்குள் காவல்காரர்கள் வரக் கூடாதே”.
அப்புறம்?காவல்காரர்கள் வரக்கூடாது ஆனா அடியாளுங்க வரலாம்.அப்டியா?
ஆனா,இத எல்லாம் விட ஒரு final stroke இருக்குது பாருங்க.
நம்ம சட்ட அமைச்சர் பேசுனத பாருங்க.....
“நான்கைந்து பேர் முதல்வருக்கு திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள்.அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா, திமுக வினருக்கு உணர்ச்சி கிடையாதா,மானமுள்ளவன் இல்லையா,இரண்டு தட்டு தட்ட மாட்டானா ?”
தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு விளங்கிரும்யா.
போங்கையா நீங்களும்,உங்க ____ உம்.....
//கருணாநிதியின் விளக்கத்தைப் பாருங்க (சாரி,ஒரு ஆளுக்கான மரியாதை வயசுல கிடையாது.செயல்லன்னு நெனக்குறவன் நான்)//
ReplyDeleteஇதுல என்ன மரியாதை கெட்டுப்போச்சு? கருணாநிதின்னு பேர சொல்லிக் கூப்புடத்தானே அந்தப் பேரே . . அப்புறம் என்ன. .
ஆல்ஸோ, தமிழ்நாட்டப் பத்தி நீங்க போட்ட இந்தப் பதிவு செம லேட்டு பாஸ். . தமிழ்நாட்டுல மன்னராட்சி நடந்துக்கினு இருக்குன்னு குஞ்சு குளுவானுக்குக் கூடத் தெரியுமே . . மன்னராட்சில இந்த மாதிரி சம்பவங்கள் சகஜம் தானே . .
என்ன பாஸ் . . இதையல்லாம் பார்த்து பயந்தா தொழில் பண்ன முடியுமா? (நன்றி - வின்னர் சிங்கமுத்து)
தமிழ்நாட்டை நிதி குடும்பத்துக்கும்,
ReplyDeleteஇந்தியாவை ..இத்தாலிக்கும் பட்டயம் எழுதிக்கொடுத்தாச்சு..
விடு.. இலுமி.. போறப்ப எல்லா சொத்தையும் எடுத்துட்டு போகட்டும்..
மெலும் மக்கள்.. கைய நீட்டி காசு
வாங்கியாச்சி.. அப்புறம் என்ன ம#$% பேசப்போறாங்க?..
திமுக வினருக்கு உணர்ச்சி கிடையாதா,மானமுள்ளவன் இல்லையா,இரண்டு தட்டு தட்ட மாட்டானா”
ReplyDelete//
அதேதான்.. தமிழனுக்கு மானம் இல்லையா..ரோசம் இல்லையா?..
ரெண்டு.. இல்ல..இல்ல... நாலு தட்டு தட்டமாட்டானா?...
ஆடும் வரை ஆட்டம்..
ReplyDeleteஆயிரத்தில் நாட்டம்..
கூடிவரும் கூட்டம்..
கொள்ளிவரை வருமா?...
வருமா?..
வருமா?..
வருமா?..
தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை பார்த்து நேரத்தை விரயம் செய்வதில் இருந்து நான் எஸ்கேப் ஆகி நிரம்ப நாட்களாகிறது.
ReplyDeleteசிறிப்பு நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இந்த கூத்தையும் பார்த்தோ படித்தோ விட்டு சிரிப்புடன், அடுத்த ஜோலி கழுதையா பார்ப்பது பழகி போச்சுப்பா...
//ஆல்ஸோ, தமிழ்நாட்டப் பத்தி நீங்க போட்ட இந்தப் பதிவு செம லேட்டு பாஸ். . //
ReplyDeleteஆமா, 30 years too late....
ஆரம்பம் தான் நம்ம கையில இல்ல.முடிவாவது இருக்கட்டும்.....
//மெலும் மக்கள்.. கைய நீட்டி காசு
வாங்கியாச்சி.. அப்புறம் என்ன ம#$% பேசப்போறாங்க?..//
அப்டி கேளு பட்டு.விட்டா நம்ம ஆளுங்க 1,2 க்கு கூட காசு கேப்பானுங்க....
//தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை பார்த்து நேரத்தை விரயம் செய்வதில் இருந்து நான் எஸ்கேப் ஆகி நிரம்ப நாட்களாகிறது.
//
சனியன்,இந்த இழவு எனக்கு எதுக்குன்னு தான் நானும் இருந்தேன் தல.ஆனா,நம்ம 'மாண்புமிகு' முதல்வரும்,சட்ட அமைச்சரும் பேசி இருக்குற பேச்ச படிச்ச பின்ன வந்த ஆத்திரம் தான் இந்த போஸ்ட்க்கு காரணம்...
சனியன்,இந்த இழவு எனக்கு எதுக்குன்னு தான் நானும் இருந்தேன் தல.ஆனா,நம்ம 'மாண்புமிகு' முதல்வரும்,சட்ட அமைச்சரும் பேசி இருக்குற பேச்ச படிச்ச பின்ன வந்த ஆத்திரம் தான் இந்த போஸ்ட்க்கு காரணம்...
ReplyDelete//
அது..அது.. அந்த கோபம் இருக்கனுமையா...
இல்ல.. கல்லுக்கும் ... நமக்கும் என்ன வித்தியாசம்?...
//அது..அது.. அந்த கோபம் இருக்கனுமையா...
ReplyDeleteஇல்ல.. கல்லுக்கும் ... நமக்கும் என்ன வித்தியாசம்?...//
இங்க கொஞ்சம் அதிகமாவே இருக்கும் பட்டு.ஏன்னா,கழகத்து அரிசிய நான் சாப்டறது இல்ல...நான் சாப்டறது ஸ்பெஷல். உப்பு போட்ட அரிசி...
இலுமி...
ReplyDeleteஅடுத்த தேர்தல் வாக்குறுதியா ரேஷன்ல ஒரு ரூபாய்க்கு மானம்,ரோஷம் குடுத்தாலும் குடுப்பானுங்க...!
ஆனா ரெட்டை,அதுவும் புழுத்துப் போனதா தான் இருக்கும்....
ReplyDeleteதலைப்பை பார்த்துட்டு,நம்ம இலுமி உளியின் ஓசைக்கு விமர்சனம் போட்டுடாருன்னு நினைச்சேன்
ReplyDeleteபட்டாபட்டி.. said...
ReplyDeleteஅதேதான்.. தமிழனுக்கு மானம் இல்லையா..ரோசம் இல்லையா?..
ரெண்டு.. இல்ல..இல்ல... நாலு தட்டு தட்டமாட்டானா?...//////
அந்த நாளுக்கு இன்னும் எவ்வளவு நாள் காத்து கொண்டு இருக்க வேண்டுமோ
ஓட்டு போட காசு வாங்கும் போது!! இந்த அடிக்கும் சேத்துதான் தம்பி குடுத்தது.. .காசு வாங்கும் போது இனித்தது இப்ப அடிக்கும் போது கசக்குதா >>>>>>>>.
ReplyDelete//அடுத்த தேர்தல் வாக்குறுதியா ரேஷன்ல ஒரு ரூபாய்க்கு மானம்,ரோஷம் குடுத்தாலும் குடுப்பானுங்க...!//
ReplyDeleteஅதுக்கு குடும்ப அட்டை வேனுமா..??
அதுக்கும் க்கியூல நிக்கனுமா..?
எடை சரியா இருக்குமா..?
சுத்தமா இருக்குன்னு நம்பலாமா..?
//வருமா?..
ReplyDeleteவருமா?..
வருமா?..//
வரும்...ஆட்சி மாறும் போது..
வரும்... ராத்திரியில பிடிச்சி போகும் போது..
வரும்... பெயிலில் ,ஜாமினில் எடுக்க
//அதேதான்.. தமிழனுக்கு மானம் இல்லையா..ரோசம் இல்லையா?..
ReplyDeleteரெண்டு.. இல்ல..இல்ல... நாலு தட்டு தட்டமாட்டானா?...//
அதெல்லாம் தாராளமா தட்டுவான் பட்டு.என்ன கொஞ்சம் செலவு ஆகும் அவ்ளோதான்.இப்ப ஒரு ஓட்டுக்கு இவ்ளோனு per basis ல வாங்குற மாதிரி,ஒரு அடிக்கு இவ்ளோனு வாங்குவானுங்க....
//ஓட்டு போட காசு வாங்கும் போது!! இந்த அடிக்கும் சேத்துதான் தம்பி குடுத்தது.. .காசு வாங்கும் போது இனித்தது இப்ப அடிக்கும் போது கசக்குதா//
ReplyDeleteஅப்டி கேளு ஜெய்லானி....ஆனா,எவ்ளோ கேட்டாலும் இவனுங்களுக்கு உரைக்கும்னு நெனக்குற?சத்தியமா கெடையாது.அடுத்து எவண்டா காசு கொடுப்பான்னு தொங்கப் போட்டுக்கிட்டு கிளம்பிடுவானுங்க...
எனக்கும் இதே ஆதங்கம் இருக்கிறது.. தமிழகத்தையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன செய்வது...
ReplyDelete“நான்கைந்து பேர் முதல்வருக்கு திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள்.அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா, திமுக வினருக்கு உணர்ச்சி கிடையாதா,மானமுள்ளவன் இல்லையா,இரண்டு தட்டு தட்ட மாட்டானா ?”
ReplyDelete......மக்கள் நலன் கருதும் மந்திரி.... ??!!!
//தமிழகத்தையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன செய்வது...//
ReplyDeleteஇவரு சொன்ன ரோசம் நமக்கு கொஞ்சமாவது இருந்தா இந்த ஈன ஆட்சிய அடுத்த முறை வரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிக்கங்க பாஸ்.ஊரை பங்குபோட்டுகிரதயும்,இலவசம் தர்ரதையும் விட்டா இவனுங்க என்ன பண்ணி இருக்கானுங்க?தமிழ்நாட்டுக்கு அரசியலில் மாற்றம் வேணும்.ஆனா,இப்ப இருக்குறவங்க எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்ட தான்.தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் எப்பவோ?
// மக்கள் நலன் கருதும் மந்திரி.... ??!!! //
ReplyDeleteதலைவன் எவ்வழி,தொண்டன் அவ்வழி...இதுல நீங்க ஆச்சர்யப்பட என்னங்க இருக்கு?ஆனா,இவரு சட்டம் ஒழுங்க எப்படி நிலை நிறுத்துவாருன்னு நெனச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது....
நண்பர்களே, இங்கயும் போங்க...
ReplyDeletehttp://saamakodangi.blogspot.com/2010/05/blog-post.html