Wasabi & Punisher Max





நண்பர்களே!ரஜினி சார் தந்த ‘ஒப்புதல்’ வாக்குமூலத்தால உங்க எல்லோருக்குமே Wasabi படத்த பத்தி தெரிஞ்சு இருக்கும்னு நம்பறேன்.Wasabi, 2001 இல் வெளி வந்த பிரெஞ்சு படம்.


கதை என்னன்னா, ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்(Hubert Fiorentini).பயங்கர அடிதடி டைப்.அடிச்சு முடிச்சுட்டு தான் யார் நீன்னு கேக்க கூடிய ஆசாமி.கிரிமினல்சுக்கு சிம்மசொப்பனம்.Arrest பண்ண போனப்ப ஊடால வந்த ஒரே காரணத்துக்காக கமிசனர் பையனையே போட்டு பொரட்டி எடுக்குற ரப் அண்ட் டப் ஆசாமி.ஆனா,கல்லுக்குள் ஈரம் மாதிரி,19 வருசத்துக்கு முன்னாடி தன்ன விட்டு பிரிஞ்சு போன தன்னோட ஜப்பான்கார மனைவிய நெனச்சு இன்னமும் வாழுற நல்லவனும் கூட.


ஒரு நாள்,இவருக்கு ஜப்பான்ல இருந்து இவரோட மனைவி இறந்துட்டதாகவும்,அடுத்த நாள் எரியூட்டப் படப்போவதாகவும் தகவல் வருது.போற இடமெல்லாம் அடிதடி,துப்பாக்கிச்சூடுன்னு இவரு பண்ற தொல்ல தாங்காம,இவர என்ன பன்றதுன்னும் தெரியாம முழிச்சு கிட்டு இருந்த போலீஸ் துறை,இது தான்டா சாக்குன்னு இவருக்கு கட்டாய விடுமுறை கொடுத்து ஜப்பானுக்கு அனுப்புறாங்க.


ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்கற மாதிரி,போன உடனே ஏர்போர்ட்ல ஒரு போலீஸ்காரனையே மரியாதை இல்லாம பேசுனான்கிற காரணத்துக்காக பின்னி எடுக்கிறார் நம்ம தல.இவர ஏர்போர்ட்ல இருந்து மீட்டுக்கிட்டு வர்றதுக்கே இவரோட நண்பரும்,முன்னாடி இவரோட ஜப்பான்ல கமாண்டோவா வேல பாத்த Momoங்கர ஆள அனுப்ப வேண்டியதா போயிடுது.பயபுள்ள கைங்கர்யம் அப்டி.


அதுக்கு பின்ன,இவருக்கு போன் பண்ண லாயர பாக்க போறாங்க.அங்க போன பின்னாடிதான் Hubert தனக்கு ஒரு பொண்ணு(yumi) இருக்காங்கிற உண்மையவே தெரிஞ்சுகுறார்.அவரோட wife Miko இவர அந்த பொண்ணு வயசுக்கு வர்ற வரைக்கும் பத்திரமா பாத்துக்க சொல்லி எழுதுன கடைசி கடிதமும் சிக்குது.அந்தப் பொண்ணு freak out டைப்.நான் செத்தாலும் பார்ட்டியில இருக்குறப்ப தான் சாகனும்கறது தான் அவ ஆசையே.இது போதாதுன்னு என் அப்பன் கெடச்சான்னா அவன நானே போட்டு தள்ளிடுவேன்னு வேற சொல்லிட்டு திரியுறா.தற்சமயத்துக்கு உன் அம்மாவோட நண்பன் நான்னு சொல்லிட்டு அறிமுகம் ஆறாரு.


தற்செயலா அவரோட wife accountல எவ்ளோ பணம் இருக்குன்னு பாக்க போறப்ப, 200 மில்லியன் டாலர் இருக்குன்றதயும், தன்னோட பொண்ணக்கூட துணைக்கு வச்சுக்காம Miko ஒரு ரகசிய வாழ்கை வாழ்ந்து இருக்காங்கறதும், இந்த பணத்த பத்தி அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாதுங்கறதையும் தெரிஞ்சுக்குறார் ஹுபர்ட்.


ஒரு பக்கம் பாத்தா அப்பன கொல்லனும்னு அலையுற பொண்ணு,இன்னொரு பக்கம் அடிதடிக்கு ஏங்கிகிட்டு கூடவே சுத்துற Momo,இன்னொரு பக்கம் அந்த பணத்த எப்படியாவது பறிச்சுடணும்னு இவரு பொண்ணையே சுத்தி சுத்தி வர்ற ஒரு வில்லன் கோஷ்டின்னு திரும்பின பக்கமெல்லாம் சனியன் சட விருச்சு ஆடுது நம்ம ஹுபெர்டுக்கு.இதுக்கெல்லாம் நடுவுல Miko சாதரணமா சாகலங்கரதையும் தெரிஞ்சுக்குறார் ஹுபர்ட்.


ஏன் Miko தனி வாழ்கை வாழ்ந்தா?அவ்ளோ பணம் எங்க இருந்து வந்தது?ஏன் அந்த gang அவன் பொண்ணு பின்னாடி சுத்துதுன்னு ஹுபர்ட் கண்டு பிடிக்கிறது தான் மிச்ச கத.
என்னதான் பர பர வேகம் இருந்தாலும் படம் action comedy டைப்.நிமிஷத்துக்கு நிமிஷம் காமெடி வச்சு படத்தோட மூவிங்க மேலும் ஸ்பீட் ஆக்கி இருக்காங்க.


Hubert Fiorentini ஆக Jean Reno.எனக்கு பிடிச்ச actorsல ஒருத்தர்.Leon the Professional படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.சீரியஸா reaction கொடுத்துகிட்டு,சீரியஸ் டயலாக்க பேசிக்கிட்டு,காமெடி பண்ணி சிரிப்பு வர வக்குறது ரொம்ப கஷ்டம்.(ஏய்!யாருப்பா அது.இந்நேரத்துல ஜே.கே.ரித்தீஷ நெனவு படுத்துறது?நல்லா பாருப்பா.reactionன்னு ஒரு விஷயம் சேத்து இருக்குது பாரு.)அந்த ஏர்போர்ட் சீனும்,கிளப் சீனும் ஒரு உதாரணம்.படத்துல பூரா இவர் ராஜ்ஜியம் தான்.காமெடி,action,சோகம்னு எல்லாத்துலயும் தூள் கிளப்புறார்.ஸ்டைலிஷா,முரட்டுத்தனமா,பாசமுள்ள அப்பாவான்னு எல்லாத்துலயும் தூள் கிளப்புராறு.


கடைசியில கிளைமாக்ஸூக்கு முன்னாடி,கோல்ப் மைதானத்துல வர்ற அந்த fight அதிரடி.அதுல ரெனோ ரெண்டு கோல்ப் பால வச்சு ரெண்டு பேர ஒரே ஸ்ட்ரோக்ல அடிப்பாரு பாருங்க....திருஷ்டி சுத்தியே போடலாம்.அதுலயும் அவர் ரெண்டு கைலயும் கோல்ப் ஸ்டிக்க சுத்திகிட்டே எல்லோரையும் அடிப்பாரு பாருங்க,அந்தரு.....


எனக்கு பிடிச்ச இன்னொரு சீன் என்னன்னா யுமி,மோமோ,ஹுபர்ட் எல்லோரும் சேந்து ஒரு நைட் கிளப்புக்கு போவாங்க.அங்க யுமியோட friend ஒருத்தன் ஹுபர்ட்ட பாத்து என்கூட ஷூட்டிங் கேம்ல போட்டி போடா வரியான்னு கேட்டு லந்து பண்ணுவான்.அப்ப அந்த பக்கம் வில்லன் கேங் வர,ஷூட் பண்ண ஆரம்பிப்பாரு ஹுபர்ட்.அப்போ,அந்த துப்பாக்கியோட நீளத்தையும்(கோல்ட் 45), ஹுபர்ட் எல்லோரையும் கொன்னுட்டு அத ஸ்டைலா ஒரு சுத்து சுத்திட்டு உள்ள பாக்கெட்ல வைக்குற லாவகத்தையும் பாத்துட்டு பையன் அங்கேயே கழிஞ்சுடுவான்.அந்த ஏர்போர்ட் சீனும் நல்லா இருந்தது.


மோமோவாக Michel Muller.காமெடியில பின்னி இருக்காரு.இவரோட பேஸ் ரியாக்க்ஷன் சூப்பர்.யுமி ஆக Ryoko Hirosue.So cute.இவங்க நடிப்பும் நிறைவாகவே இருந்தது.படத்தோட மியூசிக் பத்தி சொல்லியே ஆகணும்.ஒரே வார்த்த தான்.கலக்கல்.குறிப்பா அந்த ஸ்டைலிஷா வர்ற ‘tan ta dan tan tan dan’ bit ரொம்பவே நல்லா இருந்தது.படம் போற வேகத்துக்கு, உங்களுக்கு படத்துல action கம்மியா இருந்த மாதிரி ஒரு பிரம வர தான் செய்யும்.பட்,அது உண்மை இல்ல நண்பர்களே!படம் பட்டாசு மாதிரி சர சரன்னு போகும்.
பாக்க வேண்டிய படம்.

Wasabi- காரம் அதிகம்.




Punisher max







Punisher(Frank castle) ஒரு முன்னாள் போலீஸ் மற்றும் ராணுவ கமாண்டோ.ஒரு நாள்,தன் குடும்பத்தோடு பார்க்குக்கு போகும் போது,அங்கே ஒருவனை ஒரு மாபியா கேங் கொல்லுவதை, தெரியாமல் பார்த்து விடுகின்றனர்.தவறான இடத்தில்,தவறான நேரத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக,அவன் குடும்பம் மொத்தமும் கொல்லப்படுகிறது.Frank மட்டும் எப்படியோ காயத்தோடு தப்பி விடுகிறார்.அதற்கு பின்னர்,குடும்பத்தின் பிரிவில் வாடும் பிரான்க்,இந்த நிலை எந்த ஒரு அப்பாவிக்கும் வர விடக்கூடாது என்று கிளர்ந்து எழுந்து, தப்பு பண்ணுபவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வெறியுடனும் புறப்படுகிறார்.ஆனால்,பிரான்க்கின் வழி நியாயத்தின் வழி அல்ல.பழி வாங்கும் வழி.வெறித்தனத்தின் வழி.அவருக்கு சட்டத்தை நிலை நிறுத்துவதன் நம்பிக்கை போய்,கிரிமினல்களை எல்லாம் கொல்கிறார்.அவர்களிடம் இருந்து தனக்கு வேண்டிய பணத்தை கொள்ளை அடிக்கிறார்.பிரான்க் ஒரு கூட்டத்தை தாக்க முடிவு செய்தால் அதை மிலிடரி ஆபரேஷன் போலவே செயல்படுத்துவார்.(எக்ஸ் கமாண்டோ இல்லையா?).முதலில்,தகவல்களை சேகரிப்பார்.பின்னர்,சரியான தருணத்தில் அந்த கும்பலின் முக்கிய ஆட்களை கொல்வார்.பின்னர்,கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையும் போட்டு தள்ளி விடுவார்.ஒரு முறை செங்கிஸ்கான் சொன்னானாம்,”தலை வேறு உடல் வேறு என்று கிடப்பவனே வெற்றி கொள்ளப்பட்ட எதிரி” என்று.Punisherஉம் அப்படி தான்.


ஆனால்,இவ்வளவுக்கும் பிரான்க் psycho கிடையாது.தான் செய்வது என்ன என்று தெரிந்து கொண்டு அதில் வெறியுடன் செயல்படும் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு கொலைகாரன்.எப்பேர்பட்ட தொல்லை வந்தாலும்,உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் கூட,அப்பாவிகளையும் போலீசையும் பிரான்க் காயப்படுத்துவது கூட இல்லை.


ஆனால்,punisher series அவ்வளவு பிரமாதமாக எப்போதும் இருந்தது கிடையாது.அதாவது,Punisher Max(for maximum violence,I suppose) வரும் வரை.இதற்கு முன்னர் வந்த versionsக்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.ஆனால்,அந்த சின்ன வித்தியாசம் தான் இந்த seriesஐ interesting ஆக ஆக்கியுள்ளது.ஒன்றுமில்லை,இதற்கு முன்னர் வந்த punisher series அனைத்தும் சூப்பர் ஹீரோ வோர்ல்டில் நடப்பதாக வரும்.ஆனால்,இந்த series எந்தப் புண்ணாக்கு சூப்பர் ஹீரோவும் தலைநுழைக்காத நிகழ்காலத்தில்,நம் உலகத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டது.மேலும்,இதற்கு முன்னாள் இருந்ததை விட பிராங்கை மிக மிக முரட்டுத்தனமாகவும்,cold blooded ஆகவும் காட்டி இருக்காங்க.உதாரணத்திற்கு,drug டீளிங்கிக்கு ஹெல்ப் பண்ணினான்க்ர காரணத்திற்காக,தன் உயிரைக் காப்பாத்திய பின்னரும் தன்னோட friendஐயே போட்டு தள்ளுவாரு பிரான்க்.


இந்த series பிரான்கின் குடும்பம் கொலை செய்யப்பட்டு 30 வருடங்களுக்கு பின் நடப்பதாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த series எவ்வளவுக்கு எவ்வளவு விறுவிறுப்பாக செல்லுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு violent.போதாகுறைக்கு கெட்ட வார்த்தைகள் வேறு.(அமெரிக்கன் கமிக்ஸ்களில் இந்த இம்சை உண்டு).ஆனாலும்,அந்த tough anti-hero இமேஜ் நன்றாக செட் ஆகுமாறு கதைகளை அமைத்து இருக்கிறார்கள்.எல்லாம் scriprtwriter garth Ennis தயவு.இந்த series மொத்தம் இது வரை 75 புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால்,60 ஆவது புத்தகத்திற்கு பின்னர்,என்னிஸ் இதை விட்டு போய் விட்டார்.அதன் பின்னர் கதை நொண்டி அடிக்க ஆரம்பித்தது.

-->
This is the most gruesome, violent, graphic comics I’ve ever read.Wanna see how violent?Here’s just a sample.
http://img149.imageshack.us/img149/4026/punisherh.jpg



இந்த storyarchஐ நான் யாருக்கும் recommend செய்ய மாட்டேன்.மிக மிக violent ஆன ஒரு கதை தொகுப்பு இது.தமிழில் “வெறி நாய் வேட்டை” என்று ஒரு காமிக்ஸ் வந்தது நினைவு இருக்கும்.அந்த கதை தொடர் இந்தக் கதைத்தொடரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான்.இந்த புத்தகம் “Parental advisory Explicit content” என்ற லேபல் ஒட்டி தான் விற்கவே அனுமதிக்கப்பட்டது.மேலும்,punisher “most grim,violent and compelling hero of characters” என்று புகழப்பட்டு,19th greatest comic book character என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதற்கான லின்க்ஸ்,torrents எல்லாம் நெட்டில் மலிந்து கிடக்கிறது.யாருக்காவது படிக்க வேண்டும் என்று தோன்றினால்,தேடித் பாருங்கள்.To download torrent,go to piratebay.org and type punisher max.





மேலே சொன்னது உங்களுக்கு பிடித்திருந்து,இது பலருக்கு போய் சேர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,ஒரு நொடி எனக்காக செலவழித்து வோட்டு போட்டு விட்டுச் செல்லுங்கள்.தங்கள் வரவுக்கு நன்றி.

Comments

  1. நீங்களும் உலகப் படங்களை அறிமுகப் படுத்துகிறீர்களா? வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த பய நல்லாதானையா எழுதறான்...அப்பறம் என் எல்லாரும் அப்டி சொன்னாங்க.. :)

    ReplyDelete
  3. waSABI--ஜக்குபாய் தானே.

    ReplyDelete
  4. நண்பரே,
    மீ த பர்ஸ்ட்.

    அருமையான படம். இந்த படத்தை ஏற்கனவே தமிழிலும் ஹிந்தியுலும் எடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. #வெளியூர்க்காரன் :

    எப்டி சொன்னாங்க வெளி?

    #jaisankar jaganathan:

    ஜக்குபாய் தாங்க.

    #SUREஷ் (பழனியிலிருந்து)

    நன்றி நண்பரே.

    //அருமையான படம். இந்த படத்தை ஏற்கனவே தமிழிலும் ஹிந்தியுலும் எடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.//

    என்ன ஹிந்தியிலுமா?

    ReplyDelete
  6. ரொம்ப லேட்டான விமர்சனமோ?

    ReplyDelete
  7. அட,இங்கிலீஷ் படத்துக்கு எப்போ விமர்சனம் எழுதுனா என்ன தல?தமிழுக்கு தான் சுட சுட எழுதணும்.

    ReplyDelete
  8. நண்பரே,

    காமிக்ஸ், சினிமா என இரடை விருந்து சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  9. சூப்பர்.............அட்டகாசம்............

    ReplyDelete
  10. இலுமி பயலே.. நல்லா எழுதறலே நீயி... சும்மா சோக்கா இன்ட்ரோ குடுத்தய்யா!
    அப்புறம் என் அமைச்சரவைல இருந்துகிட்டு ஓட்டெல்லாம் கேக்காதய்யா.. நாம சர்வாதிகாரிங்க...தளபதியைப் பாரு...எழுதறதுக்கு இப்போ கைவசம் மேட்டர் இல்லைன்னு எப்டி பப்ளிக்கா பெருமையா பேசுது பாரு... நாங்கெல்லாம் வெள்ளைக்காரன்கிட்டயே சுதந்திரம் வேண்டாம் லெமன் ஜூஸ் குடுத்தாப் போதும்னு சொன்ன வீரனுங்கலே...!

    ReplyDelete
  11. @அப்புறம் என் அமைச்சரவைல இருந்துகிட்டு ஓட்டெல்லாம் கேக்காதய்யா.. நாம சர்வாதிகாரிங்க...////
    ஹா ஹா எலேய் பயலே...நானும் சொல்லனும்னு நெனைச்சென்லே...தான் எழுத்து மேலே நம்பிக்கை இல்லாத பயலுகதான் எல்லார்கிட்டயும் போய் வோட்டு போட சொல்லி கெஞ்சுவான்..வெளியூர்க்காரன் சொல்லுதேன்...உன் எழுத்து நல்லாருக்குலே...வோட்டெல்லாம் கேக்காத..சினிமான்ன இலுமினாட்டின்னு ப்ளாக் உலகத்துல வர்ற மாதிரி உன்ன நாங்க பெரிய ஆளா ஆக்கறோம்...ரெட்டை அராசாங்கத்த நம்பு ஓய்...!!!.கிரிப்பா இரு மச்சி ...

    ReplyDelete
  12. //சும்மா சோக்கா இன்ட்ரோ குடுத்தய்யா! //

    mannar entha intro pathi pesureeru? antha rajini matterra? :)

    ReplyDelete
  13. வெளங்கிடும்... Punisher max க்கு
    நீ குடுத்த இண்ட்ரோவ சொன்னேன்... மணிக்கொருமுறை என் அமைச்சருங்க எல்லாம் என்னோட அமைச்சர்னு புரூவ் பண்ணிக்கிட்டே இருங்க!

    ReplyDelete
  14. அது!! இப்பதான் படிச்சேன் . . அட்டகாசம் !! இதே மேரி, அடிக்கடி எழுதுனா ரொம்ப நல்லா இருக்கும் . . மனமார்ந்த வாழ்த்துகள் !!

    ReplyDelete
  15. இலுமி..
    சூப்பரா எழுதியிருக்க அப்பு...
    பேசாம தமிழயே எழுதுமையா...( அதுதான் நல்லா வருதில்ல.. அப்புறம் என்ன?)

    ReplyDelete
  16. நல்ல விமர்சனக் கட்டுரை. நேரம் கிடைத்தால் தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.

    பி.கு: புதிய இடுகைகளைக் குறித்து மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் (Buzz) அனுப்பவும். மற்றவர்களின் இடுகைகளில் அதனைப் பற்றிய கருத்துகளை மட்டும் கூறுவது நல்லது.

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம்.. வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  18. ஓட்டு போட்டாச்சு மாப்ளே..

    //திரும்பின பக்கமெல்லாம் சனியன் சட விருச்சு ஆடுது நம்ம ஹுபெர்டுக்கு//

    ரிப்பீட்டே..

    இதே மாறி எழுதுங்க தலைவா....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........