Posts

Showing posts from 2010

XIII - தேடலே வாழ்கையாய்….

Image
மனிதனின் வாழ்க்கையில் விரவி இருப்பது தேடலே! ஆனால் தேடலே வாழ்கையாய் இருந்தால்...? வாழ்கையை தொலைத்தவன் கடந்த காலத்தின் சுக நினைவுகளில் தஞ்சம் அடைந்து இன்புறலாம்!ஆனால் கடந்த காலத்தையே தொலைத்தவனது கதி? புரட்டி எடுக்கும் கடலில் பற்றிக் கொள்ளக் கிடைத்த பலகையை தவற விட்டவனது மன நிலை எப்படி இருக்கும்? சுடும் பாலைவனத்திலுள்ள ஒரே சோலைவனத்தின் பாதையை தொலைத்தவனது நிலைக்கும்,நினைவை தொலைத்தவனது நிலைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கண்ணைப் பறிக்கும் ஓவியத்தோடு,ஆரம்பக்கட்டமே நம்மைக் கவர்கிறது.ஒதுக்குப்புறமான ஒரு கடற்கரையில்,ஆர்ப்பரிக்கும் கடலுக்கும்,துள்ளிப் பறக்கும் பறவைகளுக்கும் நேர் மாறாக அமைதியாய் உள்ள ஒரு வீட்டின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை அவரது நாய் வற்புறுத்தி இழுத்துச் செல்கிறது.அந்த நாய் வழிநடத்தி செல்ல, தொடர்வது முதியவர் அபே மட்டுமல்ல, காலனும்! சலனமே உருவாய் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் அருகிலேயே சலனமே இல்லாமல் கிடக்கிறது ஒரு உடல்.மனைவியின் உதவியோடு,அவனை வீட்டிற்கு தூக்கிச் செல்லும் முதியவர் அபே, அவனுக்கு சிகிச்சை செய்ய முன்னாள் டாக்டரும் இ

Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....

Image
இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேட நியமிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ராணுவ குழு ஒன்றின் தலைவன் ராய் மில்லர்.தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை நம்பி,தனது உயிரையும் தனது குழு ஆட்களது உயிரையும் பணயம் வைத்து,ஆயுதங்களை தேடும் வீரன்.தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் எந்த ஒரு ஆயுதமும் கிடைக்காமல் போக,தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை சந்தேகப்படுகிறான். ஆனால்,மேலிடத்தில் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவன் கேள்வி எழுப்பும் போது, எப்போதும் ஒலிக்கும் அதிகாரத்தின் ஆணவக்குரல் அவனை அடக்க முயல்கிறது.கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு,அவனுக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்வது மட்டுமே அவனது பணி என்றும்,அதன் ஸ்திரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி அவனது வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது. உடனிருக்கும் வீரர்களின் மனோநிலையும்,கொடுத்த வேலையை செய்துவிட்டு சீக்கிரம் உயிரோடு ஊர் போய் சேர வேண்டும் என்பதாக இருக்கும்போது,பல உயிர்களை பணயம் வைத்து,பற்பல சேதங்களுக்கும் அடிகோலிய ஆதார தகவலான பேரழிவு ஆயுதங்களின் இருப்பு குறித்த உண்மையை கண்டறிய வேட்கை கொண்டு அலைகிறான். இந்நிலையில் இவனது மனக்குமுறல்களை நேரில் காணும் CIA ஏஜெ

Ice station – அதிரடி ஸ்டேஷன்…

Image
2000த்துல Matthew Reilly எழுதின புக் இந்த Ice station.கதை என்னன்னா,அண்டார்டிகாவின் அமெரிக்க ஆராய்ச்சி மையத்துல(Ice station) இருக்குற ஒரு விஞ்ஞானி,ஒரு அதிசயமான விசயத்தை கண்டுபிடிக்குறாரு.அதாகப்பட்டது,அடியிலேயே இருக்கிற பனிக் கடல்ல, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் அடில இருக்குற ஒரு பெரிய குகைல, விமானம் மாதிரியான ஒரு கலம் இருக்கிறதை கண்டுபிடிக்குறார். அந்த கலத்தை சுத்தி இருக்கிற பனிக்கு மட்டுமே வயசு,400 மில்லியன் ஆண்டுகள்! இதை உடனே ரேடியோல transmit பண்ண,விறைக்க வைக்கிற குளிர்லையும் பரபரனு பத்திக்குது அண்டார்டிகா.அமெரிக்கா உடனே பன்னிரண்டு பேர் கொண்ட ஒரு அதிரடி டீம (Marines) அனுப்புது , இடத்தை பாதுகாப்பா வச்சுக்கவும்,வேற யாரும் அந்த கலத்தை கடத்திட்டு போயிடாம இருக்கவும். இந்த டீமோட தலைவன் ஷேன் ஷோபீல்ட்க்கு(ஹீரோனு சொல்லவும் செய்யனுமா? J ) சனியன் overtimeல ரிவிட் அடிக்குது.அந்த மையத்தை கைபற்ற வரும் எதிரி மற்றும் தோழமை நாடுகளின் வீரர்கள்,அந்த ஸ்டேஷன்லேயே இருக்கிற உள் சண்டைகள்,கொலைகள்,கடல்ல இருக்கிற சுறா மீன்கள்,தன்னுடைய டீம்லேயே இருக்கிற புல்லுருவிகள்னு எங்க திரும்பினாலும் அபாயம்.

The Chimpanzee complex -கனவுகள்,ஏக்கங்கள்,இழப்புகள்…

Image
நெடுநாட்கள் கழித்து ஒரு காமிக்ஸ் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே!அடுத்ததும் காமிக்ஸ் பதிவே என்ற நற்செய்தியோடு(?!) பதிவிற்குள் செல்வோம். ======================================================================   2035.... இந்தியப் பெருங்கடலில் அமைதியாய் தன் வழியே சென்று கொண்டிருக்கும் ஒரு யு.எஸ் போர்க் கப்பலுக்கு வருகிறது ஒரு செய்தி.அவர்களின் பாதைக்கு அருகே விண்ணில் இருந்து விழ இருக்கும் ஏதோ ஒரு மர்மப் பொருளை தேடிச் சென்று அது என்னவென்று காணும் பணி தான் அது. தேடிச் செல்வது ஒரு ஏவுகனையாக இருக்கக் கூடாது என்று மனதில் பிரார்த்தனை செய்தவாறே  நெஞ்சில் கிலியுடன் செல்கிறார்கள் கப்பல் மாலுமிகள். சுற்றிலும் சலனமே இல்லாத கடல் சூழ்ந்து இருக்க, சலனமான மனதோடு முகம் தெரியாத ஆபத்தை நோக்கி செல்கிறார்கள் அவர்கள். ஆனால்,அவர்கள் பயந்தது போல அது ஒரு ஏவுகணை அல்ல.வீரர்களின் தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.ஆனால்,அவர்கள் கண்டெடுத்த கலம்,உலகத்திற்கும்,அதன் மக்களுக்கும்,அவர்களுக்கு தெரிந்ததாய் இருக்கும் அறிவிற்கும் பெரும் சவாலையும்,விடை காண முடியாத ஒரு

Godfather – Powerplays….

Image
  தன்னுடைய மகளை மரண காயப்படுத்தியது மட்டுமல்லாது,அவளது முகத்தையும் சிதைத்த இரு இளைஞர்கள் ,அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகள் என்பதற்காகவே சிறிய தண்டனையோடு விடுவிக்கப்பட்டு, தன்னை ஆணவத்தோடு நோக்கி புன்னகைத்துவிட்டுச் செல்லும் போது, ”இங்கே நமக்கு நியாயம் கிடைக்காது.நியாயம் வேண்டுமானால் நாம் டானிடம் தான் செல்ல வேண்டும்.” என்கிறார் அமெரிகோ (Amerigo Bonasera). பன்னிரண்டு வயதே ஆன விடோவிடம்(Vito), “நீ ஒரு நாட்டையே ஆட்டிப் படைக்கும் சக்தி கொண்ட மனிதனாவாய்.” என்று எவராவது சொல்லி இருந்தால்,கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான்.சிசிலியில்,தனது தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சிறுவனிடம் இத்தகைய பெரிய வார்த்தைகளை சொன்னால் நம்ப மாட்டான் தான்.ஆனால்,வாழ்க்கை விசித்திரமானது அல்லவா? உள்ளூர் மாபியாவுடனான சண்டையில் தனது தந்தை கொல்லப்பட்டதும்,தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதும் சேர்ந்து அவனை அமெரிக்கா நோக்கித் துரத்துகின்றன.அமெரிக்கா ஒரு எளிய விவசாயியின் மகனை முகம்மலர வரவேற்கவில்லை.மாறாக,அமெரிக்காவில் ஒண்டி இருக்கும் இத்தாலியர்களே அவனுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.சட்டத்திற்கு பணிந்தே நட

Invictus -ஆட்கொள்ளப்பட்ட தேசத்தின் ஆட்கொள்ளப்படாத ஆன்மா…

Image
  2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை. 1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான். எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.உள்நாட்டு யுத்தம் நடக்கக் கூடிய நிலையில் உள்ள நாட்டை கஷ்டப்பட்டு மீட்டு, ஆப்ரிக்க மக்களுக்கும் வோட்டுரிமை பெற்றுத் தருகிறார் மண்டேலா.மேலும்,நிகழும் தேர்தலில் ஜெயிக்கிறார் மண்டேலா. நிறவெறி பிடித்த வெள்ளையனின் கூற்றுக்கு மாறாக,காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கிறது மண்டேலா ஆட்சியில்.ஆப்ரிக்க மக்களின் பிரத

Dress to kill - "CAKE OR DEATH?!"

Image
Recently, I stumbled across a great video of a stand-up comedian called Eddie Izzard. Intrigued, I hunted for the whole video of the show and saw it .Well folks, that extra ordinary stand up show is the Dress to kill by Eddie Izzard. Now, who is a stand-up comedian? Just imagine a stage, where you are gonna have to go and talk humorously for ,say, some 10 minutes to some hundreds of people. Would not that be difficult? Well, here a stand-up comedian is one, who goes to that stage and performs a succession of humorous stories and jokes , monologues, humorous one liners etc., for more than an hour. Truth be told, songs, music, magic tricks… anything goes, but remember you have to make them laugh for the whole time.That is the golden rule and a very difficult one at that. When you talk about an actor and a stand up comedian , there really could be no comparison as the actor has everything borrowed, starting from his dialog to the shoes and clothes he is gonna wear. But not a comedi

She’s Out Of My League - பொருந்தாக் காதல்…

Image
எப்போதாவது ஒரு படத்தை எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து,அது எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்திருக்கிறதா?அப்பேர்ப்பட்ட படம் தான் இந்த She’s Out of My League.... கதை என்னன்னா,well, the title says it all ! அதாவது,ஒரு சுமாரான இளைஞன்,ஒரு மிக அழகான பெண்... இந்த இருவருக்கும் இடையில தற்செயலா ஏற்படும் காதல்,மோதல்,பிரிவு,ஒன்று சேருதல்... அவ்ளோ தான்.அட,அமெரிக்க காதல் படங்கள்ல வேற என்ன பெருசா எதிர்பார்க்க முடியும்? ;) கிர்க் (Kirk Kettner) Pittsburg இல் வாழும், அங்கே உள்ள ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி ஆபீசராக பணிபுரியும்,inferiority complex கொண்ட, மகா ஈகோ பிடித்த self centred ஆன தன்னுடைய முன்னாள் காதலியை திரும்ப பெற துடிக்கும் (அவ்ளோ பிடிக்கும்னு இல்ல,அவனுக்கு வேற எதுவும் மடியாததால..),ஒரு மிகச் சுமாரான இளைஞன்.அவனது நண்பர்களின் கணக்குப்படி அவனுக்கு ஒரு 5 மார்க் தரலாம். ஒருநாள் தற்செயலா மோலி(Molly McCleish) அப்டிங்கற ஒரு பொண்ணை ஏர்போர்ட்ல   சந்திக்கிறான்.அவளோட ஐ போன ஏர்போர்ட் செக்யூரிட்டி ஏரியால மறந்து வச்சுட்டுப் போய்ட,அந்த ஐ போனை எடுத்துக் கொண்டு போய் அவகிட

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

Image
2007 இல் வெளிவந்த கொரியன் படமான இந்த My Love, நான்கு காதல்களையும் ,ஒரு destiny day யையும் பற்றியது. கைகூடாத காதலினால் தவிக்கும் சே ஜின் (Se Jin),தனது வீட்டு ஜன்னலில் தனது காதலி ஜூ வோன் (Joo Won) பதித்து விட்டுச் சென்ற ஓவிய முத்திரையைக் கண்டவாறே,தனது மனதில் அவள் பதித்துவிட்டுச் சென்ற ஞாபக முத்திரைகளைக் கிளருகிறான்.அழித்துவிடக் கூடாது என்று உறுதிவாங்கப்பட்ட ஓவியத்தின் முன் நின்று,தன்னால் அழித்துவிடவே முடியாத அவளுடைய நினைவுகளை அசை போடுகிறான். “காதலும் காற்று போன்றதே.எந்நேரம் எப்படி வீசும் என்று இரண்டிற்கும் தெரியாது “ என்ற கவித்துவமான வசனத்தோடு ஆரம்பிக்கிறது இந்தப் படம். இப்போது ஒரு ரயிலில் ஓட்டுனராகப் பணிபுரியும் ஜின்,சில வருடங்களுக்கு முன்,அதே ரயிலில் தனது காதலியை சந்தித்து இருக்கிறான்.அவர்கள் சந்தித்த ரயில்நிலயங்களை எல்லாம் கடந்து செல்லும் அவனால்,அவர்களது சந்திப்புகளைக் கடந்து செல்ல இயலவில்லை. அயல்நாடு சென்றாலும்,தனது இதயத்தின் ஒரு பாதியை சியோல் நகரில் தொலைத்துச் சென்றவன் ஜின் மன் (Jin-man).அயல்நாடு செல்லும் போது,தனது காதலி கதறிக்கொண்டே “நீ செல்ல வேண்டும் என்பதில் உறுத

மல்லோரியும் , மதராசப்பட்டினமும் ....

Image
--> Guys,I have an announcement to make. Most of you might not know that I started writing this blog in English at first. Then, upon several advices and warnings ( :) ) , I started to write in Tamil. But, after that,from time to time there comes occasionally the urge to write again in English. So,now I have decided to write in both. The posts on movies will be done in Tamil,as usual.But, the posts on comics and novels (Mind you,they are about English books,so why should not I write about them in English?) will be done in English henceforth. So, English posts will be quite less. So instead of whining over it,just try and get on with it. Let this be a learning ground and a fun ride for us both...  As this is the first time, I have written in English as well as in Tamil. Mallory.....    They came to London in search of a man. A man who is very smart, dangerous, cold, evasive and who is also a traitor..... They were originally a French revo