Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....

green_zone_xlg
இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேட நியமிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ராணுவ குழு ஒன்றின் தலைவன் ராய் மில்லர்.தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை நம்பி,தனது உயிரையும் தனது குழு ஆட்களது உயிரையும் பணயம் வைத்து,ஆயுதங்களை தேடும் வீரன்.தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் எந்த ஒரு ஆயுதமும் கிடைக்காமல் போக,தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை சந்தேகப்படுகிறான்.
ஆனால்,மேலிடத்தில் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவன் கேள்வி எழுப்பும் போது, எப்போதும் ஒலிக்கும் அதிகாரத்தின் ஆணவக்குரல் அவனை அடக்க முயல்கிறது.கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு,அவனுக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்வது மட்டுமே அவனது பணி என்றும்,அதன் ஸ்திரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி அவனது வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது.
உடனிருக்கும் வீரர்களின் மனோநிலையும்,கொடுத்த வேலையை செய்துவிட்டு சீக்கிரம் உயிரோடு ஊர் போய் சேர வேண்டும் என்பதாக இருக்கும்போது,பல உயிர்களை பணயம் வைத்து,பற்பல சேதங்களுக்கும் அடிகோலிய ஆதார தகவலான பேரழிவு ஆயுதங்களின் இருப்பு குறித்த உண்மையை கண்டறிய வேட்கை கொண்டு அலைகிறான்.
இந்நிலையில் இவனது மனக்குமுறல்களை நேரில் காணும் CIA ஏஜென்ட் மார்டின் பிரவுன் அவனை சந்தித்து அவன் தேடுவதற்காக தரப்பட்டு இருக்கும் அடுத்த இடத்திலும் எதுவும் கிடையாது என்றும்,ஆயுதங்கள குறித்த தேடலில் எதுவுமே கிடைக்காமல் போவதன் பின்னர் ஏதோ மர்மம் இருக்கிறது என்றும் கூறி,ஏதாவது தெரிய வந்தால் தன்னை தொடர்பு கொள்ளக் கூறுகிறார்.
ஒரு நாள்,தனக்குக் கிடைத்த உருப்படாத,பொய் நிறைந்த தகவலை ஆராயும் பணியில் மில்லர்  ஓரிடத்தில் இருக்கும் போது,அங்கே வரும் ப்ரெட்டி என அழைத்துக்கொள்ளும் ஒரு ஈராக்கியன் அங்கே வந்து,சிறிது தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் சதாமின் ஆதரவாளர்கள் சிலர் சந்தித்ததை கண்டதாக கூறுகிறான்.வீரர்கள் பலர் இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று பயந்தாலும்,உண்மையை அறிய விரும்பும் வேட்கை,மில்லரை அந்த வீட்டை சென்று தாக்கவும்,அங்கே சிலரை பிடிக்கவும் உந்துகிறது.மேலும்,தப்பியோடிய சிலரில், அதிமுக்கியமான ஜெனரல் அல் ராவியும் ஒருவன் என தெரிய வருகிறது.அவனை பிடித்தால்,பேரழிவு ஆயுதங்களை பற்றிய உண்மை தெரிய வரும் என்று மில்லர்,அவனை தேட விழைகிறான்.
ஆனால்,அவன் கைப்பற்றிய ஆட்களை அவனிடம் இருந்து பறித்து செல்கிறது ஒரு Special Forces குழு.உண்மையை மறைக்க ஏதோ சதி நடக்கிறது என சந்தேகப்படும் மில்லர்,தனக்கு உதவக்கூடிய பிரவுனை சந்திக்க செல்கிறான்.அல் ராவியை பிடித்து, அவனிடம் இருந்து உண்மையை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்றும், அவனது உதவியுடன் ஒரு ஈராக் அரசு; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஈராக் அரசு அமைய வேண்டும் என்றும், அதற்கு மில்லர் ராவியை பிடித்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறான்.
இதற்கிடையே, அல் ராவியின் எண்ணமும் அவ்வாறே இருக்கிறது.அமெரிக்க அரசு தன்னுடன் பேச விளையும் பட்சத்தில்,சமாதானம் பேசுவது என்றும்,இல்லையெனில் மொத்த ராணுவத்தையும் சேர்த்து போராடுவது என்பது அவனது எண்ணம்.
ஆனால்,பச்சை வளையம் எனப்படும் Green Zone இல் இருக்கும் கிளார்க் பவுண்ட்ஸ்டோன் என்னும் பெண்டகன் சிறப்பு தகவல் அதிகாரி (Pentagon Special Intelligence Unit) அதை விரும்பவில்லை.அமெரிக்க படைக்கு உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை கொடுப்பது இவனே!இவனது விருப்பம், ஒரு முக்கிய உண்மையை வெளியிடக்கூடிய அல் ராவியை எப்படியேனும் கொல்லவேண்டும் என்பதே!அதனை நடத்த Special Forces அணியை உபயோகித்து,அவர்களை அல் ராவியை கண்டுபிடித்து கொல்ல அவன்  ஆணையிட,ஆரம்பமாகிறது பரபர ஆட்டம். இரு அணிகளும், அல் ராவியை தேடி அலைய பரபரப்பு பற்றிக் கொள்கிறது.குறிப்பாக, கடைசி சில நிமிடங்களில் தெரியும் அனல், பார்வையாளனது துடிப்பை எகிற வைப்பதாக இருக்கிறது.மேட் டேமன் வழக்கம் போல பின்னி இருக்கிறார்.
ஆனால்,இது சாதாரண ஆக்சன் படம் மட்டுமல்ல. பரபரப்புக்கு ஊடே, பென்டகன் அதிகாரிகளின் நரித்தனம்,உண்மையை வெளிபடுத்த வேண்டிய பத்திரிக்கையாளர்கள் புகழுக்கும், முதலில் தகவல் கொடுத்தார் என்ற பெயருக்காகவும் அலைவது,போர்க் கைதிகள் நடத்தப்படும் விதம்,பெண்டகனுக்கும் CIA அதிகாரிக்குமான யுத்தம்,அமெரிக்க அரசின் ஆதிக்க வெறி,இதற்கு நேர்மாறாக ராணுவ வீரர்களின் பதட்டம்,பயம்,வீடு திரும்ப வேண்டுமென்ற ஆசை,போருக்கு பின்னான ஈராக்கின் பரிதாப நிலை,மக்களின் தண்ணீர் பிரச்சனை என்ற பல விசயங்களை தெள்ளென காட்டுகிறது.ஒரு இயக்குனராக Paul Greengrass இன் வெற்றி,இத்தகைய ஒரு பரபர கதையைக் கொடுத்தது மட்டுமல்லாது,அதில் அவர் கலந்திருக்கும் human element உம் தான்.படத்தின் ஒரே குறை,கேமரா அசைவுகள்.ஒரிஜினாலிட்டி தருகிறேன் பேர்வழி என்று கேமராவை அசைத்து அசைத்து படம் எடுப்பது இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது.ஆனால்,பரபர ஆக்சன் காட்சிகளுக்கும்,விறுவிறுப்பான எடிட்டிங்கிற்கும் இடையில் சிக்கி இந்த குறை காணாமலே போவது உண்மை.
green_zone_50109_medium1-300x267 இப்படத்தில் என்னை மிகக் கவர்ந்தது இதில் வரும் ஈராக்கிய ப்ரெட்டி கதாப்பாத்திரம்.தகவல் கொடுத்து உதவ வந்து,மொழிபெயர்ப்பாளனாகி, உண்மை குறித்தான தேடலில் கடைசி வரை மில்லருக்கு உதவும்,தானும் உண்மையை தேடும்,ஒரு கதாபாத்திரம்.இக்கதாப்பாத்திரம், ஒட்டுமொத்த ஈராக்கிய மக்களின் மொத்த உருவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதிலும்,இந்த பாத்திரத்தின் வசனங்கள் கத்திக் கூர்மை.
நிகழும் சண்டையை கண்டு பயந்து ஓடும் பிரெட்டியை விரட்டி பிடிக்கும் போது அவனை மில்லர் சந்தேகப்பட்ட,அப்போது “இன்னும் என்ன செய்ய வேண்டும்?நீங்கள் என்னை நம்ப இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்று கொதிப்பதும்,
நீ செய்த உதவிக்கு சன்மானம் பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறேன் என்று மில்லர் சொல்லும் போது, “இதை பணத்திற்காக செய்தேன் என்று நினைத்தாயா? தண்ணி இல்லாது,மின்சாரம் இல்லாது மக்கள் இருக்கும் நிலையில் நான் இதை பணத்திற்காக செய்தேன் என்று நினைத்தாயா? இதை எனது நாட்டிக்காக,எனக்காக செய்தேன்.Whatever you want to do it here, I want it more than you want it.” என்று பொருமவதாகட்டும்,
கடைசி கட்டத்தில் “இங்கே என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நீங்கள் அல்ல (It is not for you (America) to decide what happens here.) “ என்று சீறுவதும் என்று அமெரிக்க அரசின் சட்டையை பிடித்து இந்த பாத்திரம் கேட்கும் கேள்விகள், பதில் சொல்ல முடியாதவை.இந்த பாத்திரத்தில்  பெரும்பாலான இராக்கிய மக்களின் உணர்வுகளை வாழ்ந்து காட்டியருக்கும் நடிகர் Khalid Abdalla வு ஒரு ஜே!
தன்னுடைய அதிகார வெறிக்கும், எரிபொருள் தாகத்திற்க்கும் பிற நாடுகளின் மேல் படை எடுத்த அமெரிக்காவிற்கு ஈராக் நாட்டு மக்கள் தண்ணீர் தாகத்தில் தவிப்பது தெரிந்திருக்க நியாயமில்லை தான்.68 சதவிகித மக்கள் குடிக்கத் தகுந்த தண்ணீரை பெற முடியாது இருந்தார்கள் என்று இணையம் சொல்கிறது.இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதாக அறிவித்து இருந்தாலும்,ஈராக்கிய மக்களும்,அமெரிக்க மக்களும் இந்தப் போரை மறக்க மாட்டார்கள்.
Green Zone[2010]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.18.05_[2010.11.21_23.48.36]Green Zone[2010]DvDrip[Eng]-FXG.avi_snapshot_01.44.56_[2010.11.21_23.51.03]



வெளியே மக்கள் தண்ணீருக்காக போராட, கிரீன் ஜோன் வளையத்தில் பென்டகன் அதிகாரிகள் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் காட்சி வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி.கடைசியில் காட்டப்படும் எண்ணைக் கிணறுகள் காட்சியும் அவ்வாறே முகத்தில் அறைகிறது!
படத்தின் கடைசியில் “நீ என்ன செய்திருக்கிறாய் என்று உனக்கு தெரியுமா? அடுத்த முறை நம் உதவி தேவை என்றால் மக்கள் நம்மை நம்புவார்கள் என்று நினைக்கிறாயா? “ என்ற மில்லரின் கேள்விக்கு, கிளார்க் சொல்லும் பதில் “We are not turning back. We Won! “
ஆட்சியின் முகம் மாறினாலும்,மாறாதவை அதிகாரத்தின் கைகள்!
Rating : 8.5 /10.
**********************************************************************
பின்குறிப்பு:
கொஞ்ச நாளாவே லேசான பிஸி காரணமா,அவ்ளோவா எழுத முடியல.இந்தப் படமும்,வழக்கம் போல,வந்தப்ப விட்டுட்டு,பின்னாடி டிவிடில பார்த்தது தான். :)
சோம்பேறித்தனத்தின் காரணமா,இதுவே ஒரு பழக்கமா ஆகிப்போச்சு!இதை எழுத ஆரம்பிச்ச பின்ன தான் தெரிஞ்சது,படங்கள் பத்தி எழுதி எம்புட்டு காலம் ஆச்சுன்னு!இனி அடிக்கடி படங்கள் பத்தி எழுதி உயிரை எடுக்கலாம்னு ஒரு எண்ணம். :)
புரட்சி தீ போஸ்ட் பத்தி..
XIII இன் முதல் பாகம்,புரட்சி தீ ஆகியவற்றின் போஸ்ட்களை சீக்கிரம் போடுறேன்.sorry for the delay guys!I hope it will be worth the wait. :)

Comments

  1. Good Review.. I already downloaded it.. buy yet to watch it.. Hope will do it today... Thanks...

    ReplyDelete
  2. Do so Mr.Ramasamy.I hope you'll like it.The camera movements(shakes) will be annoying at the start though. :)

    ReplyDelete
  3. @இலுமி


    //கொஞ்ச நாளாவே லேசான பிஸி காரணமா,அவ்ளோவா எழுத முடியல.//

    மச்சி அது எப்படி கொஞ்சம்கூட கூச்சபடாம இந்த வரியை எழுதி இருக்க?? உன் ப்ளாக் வருவதே நாலு கொலைகார பசங்க அதுவும் உன்னை கலாய்க்க.... :))))

    சரி சரி விடு. வெளியூர் கூட இருக்க யாருக்குதான் மான ரோஷம் இருக்கு...

    ReplyDelete
  4. //வழக்கம் போல,வந்தப்ப விட்டுட்டு,பின்னாடி டிவிடில பார்த்தது தான். :)//

    காசு கொடுத்து பாக்க துப்பு இல்லாம. பேச்ச பாரு.... :))

    ReplyDelete
  5. //மச்சி அது எப்படி கொஞ்சம்கூட கூச்சபடாம இந்த வரியை எழுதி இருக்க?? உன் ப்ளாக் வருவதே நாலு கொலைகார பசங்க அதுவும் உன்னை கலாய்க்க....//

    அடடே,என்ன ஒரு கண்டுபிடிப்பு! :)

    //காசு கொடுத்து பாக்க துப்பு இல்லாம. பேச்ச பாரு....//

    டிவிடில பார்த்தேன்னு சொன்னா,காசு கொடுக்காம பார்த்ததா அர்த்தமா?மறுபடியும் உன் அறிவுத் திறமை புல்லரிக்க வைக்குதுயா!உன் மண்டையில எரியுற ஞான அக்கினியால தான் உன் மண்டை உன் profile photo ல இருக்கிற மாதிரி ஆயிடுச்சோ? ;)

    ReplyDelete
  6. நல்ல ஒரு விமர்சனம்..

    நம்ம விருதகிரி பட விமர்சனத்தையும் போடுங்களேன்.. மறக்காம வந்து படிக்கிறேன்..

    ReplyDelete
  7. எனக்கென்னவோ கேமெரா படத்திற்கு ஒரு authenticityய தர்றது மாதிரி தெரிஞ்சது...

    ReplyDelete
  8. நாந்தான் கொஞ்ச நாள் எழுதல...சரி மத்தவங்களாவது நிறைய எழுதி இருப்பாங்கன்னு பார்த்தா...ரொம்ப கம்மியான பதிவுகளைதான் மிஸ் பண்ணியிருக்கேன் போல...

    ReplyDelete
  9. மண்டையில எரியுற ஞான அக்கினியால தான் உன் மண்டை உன் profile photo ல இருக்கிற மாதிரி ஆயிடுச்சோ? ;)
    //


    பதிவிலேயே எனக்கு புரிஞ்ச வரி இதுதான்.. ஹி..ஹி

    ReplyDelete
  10. //பதிவிலேயே எனக்கு புரிஞ்ச வரி இதுதான்.. ஹி..ஹி//

    அது பதிவிலேயே கிடையாதுயா தமாசு! ;)

    ReplyDelete
  11. லேட்டா வந்தாலும் வ குவார்ட்டர் கட்டிங் போன்ற லேட்டஸ்ட் படத்துக்கு பதிவு போடாத குற்றத்திற்க்காக விருதகிரி படத்தை தினமும் பார்க்கும் ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது

    ReplyDelete
  12. ஓகே பாத்துடுவோம்..

    //Whatever you want to do it here, I want it more than you want it//

    வெள்ளைக்காரன் கில்லாடி.. எப்படி திட்டிக்கிற மாதிரி அவனுங்களையே புகழ்ந்துக்கரானுங்க பாருங்க :)

    ReplyDelete
  13. //ஆட்சியின் முகம் மாறினாலும்,மாறாதவை அதிகாரத்தின் கைகள்// கசப்பான உண்மை!

    வழக்கம்போல் படத்தின் விமர்சனம் சிறப்பாக உள்ளது!

    ReplyDelete
  14. @இலுமி

    //டிவிடில பார்த்தேன்னு சொன்னா,காசு கொடுக்காம பார்த்ததா அர்த்தமா?//

    அட பாவி!! உங்க பக்கத்து வீட்டுல டி.வி. பாக்ககூட காசு வாங்கராங்களா?? என்னா ஒரு கலாச்சார சீரழிவு...:))

    ReplyDelete
  15. நண்பரே,

    நல்ல ஆக்‌ஷன் படம், கூடவே அமெரிக்க யுத்த அரசியல் குறித்த பார்வையும் கல்ந்திருக்கும். சிறப்பான பதிவு. என்னைக் கேட்டால் கமெரா பின்னியிருக்கும் என்பேன் :)

    ReplyDelete
  16. வாவ் சூப்பர் கமெண்டரி கண்டிப்பாக பாத்துடுவோம்
    அதிலும் குறிப்பாக " வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி "
    அதுக்கு வலிக்காதான்னா :))

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  17. // புரட்சி தீ போஸ்ட் பத்தி.. //

    கண்டிப்பாக அதப்பத்தி நான் ஒண்ணுமே கேக்கலீங்கன்னா ;-)
    .

    ReplyDelete
  18. விருத்தகிரி படம் பத்தி கேக்குறவனுகளுக்கு..

    யோவ்,உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?

    http://koodal.com/cinema/gallery/movies/viruthagiri/viruthagiri_4_119201081741123.jpg

    இந்த போடோவ பாருங்க.கதாநாயகி அவ தாத்தாவோட நிக்கிற மாதிரி இருக்குது.இந்த இழவ போடோவா பார்க்குறப்பயே கண்ணக் கட்டுது!இந்த அழகில நானு முழுப் படத்த வேற பார்க்கணுமா?ஏன்யா ?ஏன் இந்தக் கொலை வெறி? :)

    ReplyDelete
  19. // நல்ல ஒரு விமர்சனம்..//

    நன்றி சாமு...

    //எனக்கென்னவோ கேமெரா படத்திற்கு ஒரு authenticityய தர்றது மாதிரி தெரிஞ்சது...//

    எனக்கு அப்படி தெர்ல . ஒரு "reality" காக காமெராவ ஆட்டுறது, இதயம் படபடக்குன்னு அடிச்சிக்குதுன்னு காட்ட பின்னணில மியூசிக்கு பதிலா லப்டப் சவுண்ட் வைக்குறது எல்லாம் எனக்கு பிடிக்கல. செயற்கையா தெரியுது.

    @உலக சினிமா ரசிகன்:

    அண்ணே, அது என்ன வ, விருத்தகிரி?
    சூர மொக்கப் படமா சொல்றீங்க? எதுனா காண்டு இருந்தா சொல்லிடுங்க . இந்த மாதிரி கொலை முயற்சி உங்களுக்கும் நல்லதில்ல,எனக்கும் நல்லதில்ல. :)

    //வெள்ளைக்காரன் கில்லாடி.. எப்படி திட்டிக்கிற மாதிரி அவனுங்களையே புகழ்ந்துக்கரானுங்க பாருங்க :)//

    ஹாஹா,ஆனா இதுல வெள்ளைக்காரன் டவுசர கழட்டி இருக்கானுக.அதிலும், பெண்டகன் ஆளுகள நாறடிச்சு இருக்கானுங்க.பாரும்,உமக்கு பிடிக்கும்.

    //கசப்பான உண்மை! //

    ஆமா எஸ்கே. என்னதான் ஆட்சியாளர்கள் மாறினாலும், மாறாத விஷயம் இது! வெளில என்னதான் நல்லவன் மாதிரியும், மாற்றத்தை கொண்டு வருபவன் போலயும் காட்டிகிட்டாலும், கடைசில இந்த மாதிரி விஷயங்கள்ல எல்லோரும் ஒண்ணா ஆயிடுறாங்க.
    பொதுமக்களின் பெயரில் நடக்கும் ஜனநாயகத்தின் பெரிய கொடுமை எது தெரியுமா?

    பொதுமக்களின் கருத்தையே மதிக்காமல், நாட்டின் நலனுக்காக என்று சொல்லி சர்வாதிகாரமா நடப்பது.எந்த நாடும் விதிவிலக்கு இல்ல.

    // என்னா ஒரு கலாச்சார சீரழிவு...:))//

    கத்திப் பேசாதையா யோவ்! அப்புறம் கலாச்சார கண்மணிகள், சீயிங் டுகெதர் னு சண்டைக்கு வந்துடுவாணுக.. ;)
    தக்காளி, விட்டா அடுத்தவன் ஒண்ணுக்கு போறத கூட குறைசொல்ல வருவானுக.

    // அமெரிக்க யுத்த அரசியல் குறித்த பார்வையும் கல்ந்திருக்கும்.//

    ஆமா. அப்புறம்,கேமரா...
    கிர்ர்.. :)

    சிபி நண்பரே,போஸ்ட் போடுறேன் சீக்கிரம். :)

    ReplyDelete
  20. தல ஒரு தொடர்பதிவிர்க்கு அழைப்பு விடுத்துள்ளேன் ... நேரம் கிடைக்கும்போது எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்

    http://apkraja.blogspot.com/2010/11/blog-post_3840.html

    ReplyDelete
  21. யோவ்..மனசாட்சியைத் தொட்டு சொல்லு...காமிரா அசையறது தான் குறையா இருக்கா...? மொத்தப் படமுமே மொக்கைதான்...! எதிர்பார்க்கக்கூடிய ட்விஸ்டுகள் என படம் ரொம்ப சுமார் தான்...! அல் அராவி வீட்டை விட்டு தப்பிச்சுப் போகும் காட்சி மட்டும் அற்புதம்! 6 மாசம் கழிச்சுப் பார்த்தா அப்படிதான்லே...வெளக்கெண்ணெய் கூட தக தகன்னு மின்னும்! மகா ஜனங்களே இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்!

    ReplyDelete
  22. //எதிர்பார்க்கக்கூடிய ட்விஸ்டுகள் என படம் ரொம்ப சுமார் தான்...! //

    மச்சி!ஏற்கனவே தெரிஞ்ச முடிவ வச்சுக்கிட்டு,வேற எப்படி தான் கிளைமாக்ஸ் வைக்க முடியும்?கிளைமாக்ஸ் ஈஸியா யூகிச்சுடலாம்.ஆனா,அதை நோக்கி கொண்டு போன வேகம் தான் எனக்கு பிடிச்சது.

    ReplyDelete
  23. கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பித்து, இறுதியில் விஜயகாந்த் படம் போல் முடித்திருப்பார்கள். இது ஒன்றும் ஈராக் போரை பற்றி நம் மணிரத்னம் எடுப்பது போல் மிக மேம்போக்கான படம்...

    ReplyDelete
  24. // இது ஒன்றும் ஈராக் போரை பற்றி நம் மணிரத்னம் எடுப்பது போல் மிக மேம்போக்கான படம்... //

    மேம்போக்கான படம் என்பது மிக உண்மை.அதே நேரம், படம் குறித்த உங்கள் கருத்து(விசயகாந்து..) குறித்து, படம் அம்புட்டு கேவலமா முடியலங்கறது என் கருத்து.முன்னயே சொன்ன மாதிரி,ஏற்கனவே தெரிஞ்ச முடிவ வச்சுக்கிட்டு,வேற எப்படி தான் கிளைமாக்ஸ் வைக்க முடியும்? :)

    ReplyDelete
  25. The last scene in Green Zone, if observed carefully, speculates upon the intent of Iraq war itself. I support the Afghan campaign against Taliban but undecided on Iraq.

    ReplyDelete
  26. சுய‌லாப‌ம், த‌ன்ன‌ல‌ம், தற்பெருமை கொண்ட‌வ‌னை அழிக்கும் என்பார்க‌ள், ஆனால் இந்த‌ அமெரிக்க‌ வ‌ந்தேரிக‌ள் ம‌ட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளையே அழித்துக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌ண்ணீரும், எண்ணையுமாய், ஆண்டானும் அடிமையும் காலம் கால‌மாய் ஒன்றோடு ஒன்று க‌ல‌க்காம‌ல் ஆனால் ஒன்றோடு ஒன்றாய். ப‌ட‌த்தைப் பார்க்கும் ஆவ‌லை உண்டாக்கி விட்ட‌து உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம்.

    ReplyDelete
  27. "Green Zone" is based on the book "Imperial Life in the Emerald City" by Rajiv Chandrasekharan.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........