Massimo Carlotto–The Dark Horse of Mediterranean Noir….

 
hasta-nunca-mi-amor-de-massimo-carlotto
நுவார் கதைகளை பற்றி பலர் அறிந்திருக்கலாம். Dashiel Hammett, Raymond Chandler, Michael Cain, James Ellroy என்று பல எழுத்தாளர்கள் முத்திரை பதித்த களம் அது. சமீப காலத்தில் அதற்கு இணையாக (அல்லது வன்முறையில் அதற்கும் மேலான) ஒரு புதிய களமாக Mediterranean Noir உருப்பெற்று வருகிறது. கொலை, கொள்ளை, வஞ்சகம், ஊழல், வன்முறை, சமூகத்தின் மீதான கோபம், cynicism இவற்றின் பண்புகள்.
இவ்வகையான கதை ஆசிரியர்களில் பிரபலமான ஒருவர் மாசிமோ கார்லோட்டோ. அமெரிக்க நுவார் கதைகள், கிரைம் கதைகள் போல் இல்லாது வன்முறை இவருடைய கதையில் ஒரு சராசரி அங்கம். அதற்கான ஞாயப்படுத்துதல்களோ, காரண காரியமோ, சரித்திரமோ இவருடைய கதையில் இருக்காது. பொளேர் என்று கன்னத்தில் அறைந்து விட்டு 'த்தா என்ன பாக்குற' என்பதே இவருடைய எழுத்து நடை. அமெரிக்க கதைகளை போல 'அவன் சின்ன பையனா இருக்கயில.....' என்பது மாதிரியான எந்தக் கருமமும் இவர் கதைகளில் இருக்காது. இவர் கதைகளில் ஹீரோக்கள் கிடையாது. நல்லவர்கள் அறவே கிடையாது. கதாநாயகர்கள் மேல் இரக்கமோ, பரிதாபமோ, நட்புணர்ச்சியோ சுத்தமாக ஏற்படாது. இவர்களுடைய வாழ்க்கையில் வன்முறை ஒரு சராசரியான விஷயம். அதற்கு காரணம் கிடையாது, விளைவுகள் கிடையாது. It just is. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதை, வன்முறை, அடிதடி எல்லாம் சர்வ சாதாரணம். எந்த அளவுக்கு என்றால் கதையில் வரும் Bondage கட்டத்திற்கு Grace Slick பாட்டை பேக்கிரௌண்டாக வைக்கும் அளவுக்கு. அதிலும் "பெல்லக்ரிணி (Pellegrini)" என்ற ஹீரோ(வில்லன்) கதை என்றால் இதெல்லாம் ஒரு படி தூக்கலாகவே இருக்கும்.
கார்லோட்டோவின் கதைகளில் இத்தாலிய சமூகம், இத்தாலிய மாபியாவின் இன்றைய நிலை, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள், ஊழல், நீதித்துறையின் நீதியற்ற தன்மை போன்றவையே அதிகமாக காணப்படும். வன்முறை ஒரு பக்கத்துக்கு ஒரு முறை வரும். சும்மா வார்ன் பண்ண காலை உடைத்தேன் என்றெல்லாம் சர்வ சாதாரணமாக கதாநாயகர்கள் கதைப்பார்கள். செய்யாத குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு, தப்பித்து ஓடி, பிடிபட்டு, சித்திரவதை அனுபவித்து, பல வருடங்கள் ஜெயிலில் இருந்து, கோர்ட் கேசில் போராடி, வெளிவந்து எழுத்தாளர் ஆனவர் கர்லோட்டோ. சிறையில் கேட்ட கதைகள், பார்த்த விஷயங்கள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இவருடைய கதைகள் முழுக்கவும் இருக்கும் என்பதால் இதில் எந்தவிதமான பூச்சூற்றல்களோ, தத்துவங்களோ இருக்காது. இவருடைய கதைகள் எதுவும் இருநூறு பக்கத்திற்கு மேலாக இருந்து நான் பார்த்ததில்லை. ஒரு வார்த்தை கூட வீணடிக்கபட்டிருக்காது. கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் போன்ற moral justifications எல்லாம் அறவே இருக்காது. ஆனால் விறுவிறுப்பு இருக்கும். Grittiness இருக்கும். நுவார் ரசிகர்களும், வன்முறை விரும்பிகளும், எதற்கும் எளிதில் அசராதவர்களும் நிச்சயமாக படிக்க வேண்டிய எழுத்தாளர்.
 
An interview of Massimo Carlotto.
http://www.theguardian.com/.../jan/30/crimebooks.features
 
That song.
https://www.youtube.com/watch?v=rnyMaD9oT7k
 
His Bibliography.
http://www.europaeditions.com/search-result.php?search-action=books&IdAutore=4










Comments

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........