The Narcissism Epidemic….
சில மாதங்களுக்கு முன்னர் “Reflections” ஃபேஸ்புக் க்ரூப்பில் ஒரு நீயா நானா வீடியோ பற்றிய விவாதம் நடந்தது. அந்த வீடியோ “நீங்கள் எப்படியெல்லாம் propose செய்யப்பட விரும்புகிறீர்கள்” என்று இளம் பெண்களிடம் கேட்டு அதற்கான அவர்களின் பதில் பற்றியது. அதற்கு வந்த பதில்கள் விசித்திரமானதாக மட்டுமல்லாமல் கவலைக்குரியதாகவும் இருந்தது. பெரும்பாலான பெண்களின் பதில், “சென்னையின் மொட்டை வெயிலில் கோட் சூட் போட்டுக் கொண்டு, ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டில் வைத்து, ஆயிரம் பேருக்கு மத்தியில், பேக்கிரௌண்ட் மியூசிக்குடன், ரோஸ் சாக்கலேட் உடன், முட்டி போட்டு, ப்ரோபோசல் ரிங் கொடுத்து, காதலிப்பாயா என்று கேட்காமல் என்னை கல்யாணம் செய்து கொள்வாயா” என்று கேட்க வேண்டும் என்பதாக இருந்தது. வெட்டியாக இருக்கும் போதெல்லாம் யூட்யூபில் ப்ரோபோசல் வீடியோஸ் பார்த்து கெட்டுப் போன கும்பல் இது என்று எளிதில் புறந்தள்ளி விட முடியாத அளவுக்கு இருத்தது மிச்சப் பெண்களின் பதில். இந்த அளவுக்கு ரெஸ்டாரன்ட் செட்டிங் கேட்காத பிற பெண்கள் கூட இரண்டு விசயங்களில் ரொம்பவே தெளிவாக இருந்தார்கள். “ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் வைத்து” மற்றும் “நான், நான், நான், நான் மட்டுமே!”
மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் “எங்களை மகாராணி போல நடத்து” என்பதாக இருந்தது இவர்கள் பதில். வெஸ்டர்ன் கலாசாரத்தின் ஆதிக்கமும் அதைப் பற்றிய அரைகுறைப் புரிதலுமே இதற்கெல்லாம் காரணம் என்ற எண்ணம் முதலில் தோன்றினாலும், இதற்கான காரணம் அது மட்டுமே அல்ல. விவாதத்தில் பற்பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. “யூட்யூப் பார்த்து நாசமா போன கும்பல்” என்பதில் ஆரம்பித்து, “மட்டமான சினிமா பார்த்து கெட்டுப் போன கும்பல்” என்பதில் இருந்து, “வெஸ்டர்ன் கலாசாரம், சாப்ட்வேர் கல்ச்சர்” என்பது வரை நிறையக் காரணங்கள். ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியமாக முன்வைக்கப்பட்ட காரணங்கள் “பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லை”, “over-indulgence”, “entitlement”, “maturity இன்மை”, “கண்டிப்பின்மை மற்றும் over-protection” என்பதாக இருந்தது. As it turns out, this is a classic narcissistic behavior.
Narcissism எனும் சுயமோகத்திற்கு இவர்களுடைய அத்தனை எதிர்பார்புகளுமே தெளிவான அடையாளங்கள் என்கிறது Jean Twenge, Keith Campbell எழுதிய “The Narcissism epidemic” புத்தகம். காதல் என்றால் என் மீது பாச மழை பொழிவது, கல்யாணம் அதன் நீட்சி என்று இவர்கள் கேட்கக் காரணங்கள் என்ன? இதற்கு மோசமான வளர்ப்பு மட்டுமே காரணமாக இருந்து விட முடியுமா என்ன? இல்லை, ஆனால் இது மோசமான, கண்டிப்பில்லாத வளர்ப்பில் ஆரம்பிக்கிறது என்கிறது இந்தப் புத்தகம்.
தற்கால தனிக்குடித்தனப் பெற்றோர்களுக்கு உலகமே அவர்கள் குழந்தை தான். உலகத்தை எடுத்து என் உள்ளங்கையில் வை என்று கேட்டாலும் பட்டினி கிடந்தாவது அதை செயல்படுத்தும் பெற்றோர்களே இந்தத் தலைமுறையில் அதிகம். அதிலும் இந்த சுயமோகம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் சொல்லவே வேண்டாம். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதில் ஆரம்பித்து, நினைத்தை எல்லாம் நடத்திக் கொடுப்பதில் இருந்து, பணக் கஷ்டமே தெரியாமல் இழைத்து இழைத்து வளர்ப்பது இப்போது அதிகரித்து வரும் ஒரு விஷயம். கலர் கலராக டிரெஸ் வாங்கிக் கொடுப்பது, கேட்ட இடத்திற்கெல்லாம் கூட்டிப் போவது, கேட்டதெல்லாம் சமைத்துக் கொடுப்பது என பொத்திப் பொத்தி வளர்ப்பதற்கான காரணம் “எனக்குத் தான் கிடைக்கல, என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே” என்பதாகவே இருக்கிறது. பாசமும் தியாக மனப்பான்மையும் கூடிய நியாயமான ஆசை தான். ஆனால் இது எந்த அளவுக்கு பிள்ளைகளை பாதிக்கும் என்றும் தெரிந்திருக்க வேண்டாமா? வளரும் போது எதுவுமே மறுக்கப்படாமல் வளரும் குழந்தை வாலிப வயதில் அத்தனையும் தனக்கு கிடைக்கவேண்டும் என்றே எதிர்பார்கிறது. வலி தெரியாமல் தான் வளரக் காரணம் வலியோடு வாழ தன் பெற்றோர்கள் பழகிக் கொண்டதால் தான் என்பது பற்றி அதற்கென்ன தெரியும்.
ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்கள் இதை இன்னும் மோசமாக்குகின்றன. தெரிந்தவனோ தெரியாதவனோ ஆயிரம் பிரென்ட் உள்ளவன் அரை பிரபலம் என்பதில் ஆரம்பிக்கும் சுயமோகம், நாய்குட்டி போட்டோ போட்டாலே “ சோ ஸ்வீட்" என்று வழியும் பேர்வகழிகளின் கவனத்தால் மேலும் வலுப்பெறுகிறது. பெண்களுக்கு சூப்பர் மாடல் ரோல் என்பது போல ஆண்களுக்கு சமூகப் போராளி அல்லது எழுத்தாளர் ரோல். நாளொரு போட்டோ, நொடிக்கொரு கமென்ட் என்று போகப் போக “ஐ, நம்மகிட்ட ஏதோ இருக்குது" என்ற மிதப்பு வலுப்பெறுகிறது. ஆளுக்கொரு வீடு இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் ஒரு ப்ளாக், ஒரு பேஸ்புக் ப்ரோபைல், ஒரு ட்விட்டர் அக்கவுன்ட், இதிலெல்லாம் சில followers இருக்கவே இருக்கிறது. பல் தேய்ததில் இருந்து பிரியாணிக்கு பக்கோடா நல்லாயிருக்கும் என்பது வரை சமூகம், அரசியல் என்று எது பற்றியும் கருத்து சொல்லித் தீர்க்கலாம் என்றவுடன் பெற்றோர்களிடம் கூட சொல்லத் தயங்கும் விசயங்களை ஊர் பார்க்க ஒளிபரப்பும் குணம் தானாகவே வந்து சேருகிறது.
சமூகமும் தன் பங்கை செவ்வனே செய்யாமல் இல்லை. பெண்கள் எங்கே போனாலும் லேடிஸ் ஃபர்ஸ்ட் என்பதில் இருந்து, “அய்யயோ" என்று குரல் கொடுத்தவுடனேயே என்ன ஏதென்று கேட்காமல் அடிக்க ஆரம்பிப்பது வரை பாதுகாத்துத் தள்ளுகிறது. பின்னே ஏன் வராது சுயமோகம்?
அப்படியும் வராமல் இருந்தால் இருக்கவே இருக்கிறது டிவி, பத்திரிகைகள் மற்றும் இன்னபிற மீடியா. மீடியாவில் வரும் விளம்பரங்கள் என்ன சொல்லுகிறதோ இல்லையோ வாழ்க்கையில் ஜெயிக்க, தன்னம்பிக்கை வளர சென்ட், மேக்கப் போட்டு உடலை பராமரித்தால் போதும் என்று தெளிவாகச் சொல்லுகிறது. இதெல்லாம் வேலைக்காகவில்லை என்றால் சினிமா நடிக நடிகைகளை முன்னிறுத்தி அவர்களைப் போல வாழுங்கள் என்று உசுப்பி விடுகிறது. தமிழ் சீரியல்கள் செய்யும் சீரிய வேலைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இது மட்டுமல்லாமல் உங்களுக்கு ஆமாம் போடாதவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருக்கக் கூடாது என்று தற்கால பத்திரிகைகள் சொல்லாமல் சொல்ல ஆரம்பித்து இருக்கின்றன. கேட்டால் சுய முன்னேற்றமாம்.
பெண்களுக்கு சுயமோகத்தை வளர்க்க வழி வகுக்கும் அதே மீடியா ஆண்களுக்கு வேறு விதமான சேதி சொல்லுகிறது. அவர்களுக்கான சேதி இம்மாதிரியான பெண்களை கவர்வது எப்படி என்பதாக இருக்கிறது. இந்த பைக் ஓட்டினால் உன் ஆண்மையை பார்த்து எல்லோரும் பொறாமைபடுவார்கள் , இந்த சென்ட் போட்டால் அவள் விழுவாள், இந்த கோட் சூட் போட்டால் இவள் விழுவாள், இந்த ஜட்டி போட்டால் எவள் எவளோ விழுவாள் என்பது வரை வந்து விட்டது நிலைமை. Vanity ஐ கவர materialism. நல்ல கான்செப்ட்.
பொருட்களை வாங்கினால் தான் சந்தோசம் என்று ஒரு சாராருக்கும், பொருட்களை வாங்கிக் கொடுத்து சந்தோசப்படுத்தினால் தான் உனக்கு சந்தோசம் என்று இன்னொரு சாராருக்கும் விளம்பரப்படுத்துவதில் கடைசியில் லாபம் என்னவோ விற்பனையாளர்களுக்கு தான்.
சரி, இது சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சி என்ன தான் சொல்கிறது? இத்தகைய மனப்பான்மை கடந்த தலைமுறையை விட இந்தக் காலத்து தலைமுறையிடம் தான் அதிகமாக இருக்கிறது. இது போதாது என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் narcissism கூடிக் கொண்டே செல்கிறது என்றும், 1970 களில் அமெரிக்காவில் பதினாறில் ஒருவருக்கு என்று இருந்த இந்த சுயமோகம், 2003 இல் நாலு பெயரில் ஒருவருக்கு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறது. சரி, இது இந்த அளவுக்கு எப்படி வளர்ந்தது? அதற்கு முக்கியக்க் காரணம் அமெரிக்காவில் 1970களில் நடந்த Self Esteem Movement என்கிறது இப்புத்தகம். இதன் மிகமுக்கிய கொள்கை: “Every child is special.” 1960களில் அமெரிக்காவில் நடந்த ஹிப்பி மூவ்மென்ட் பற்றி தெரிந்திருக்கலாம். கஞ்சா புகைப்பது, casual sex, கும்பலாக ஒற்றுமையுடன் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழ்வது போன்றவற்றை தூக்கிப் பிடித்த கலாச்சாரம் அது. அதன் முடிவில் அதுவரை தங்கள் சுயநலத்தில் ஆர்வமாயிருந்தவர்கள் பெற்றோர் ஆன பின் தங்கள் பிள்ளைகளை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்தார்கள். தலைமுறைகள் செல்லச் செல்ல, இன்டர்நெட் பேஸ்புக் போன்ற வசதிகள் பெருக, மீடியாவில் ஹாலிவுட் நடிக நடிகைகளின் கொடிபிடிக்கும் கலாச்சாரம் 90களில் அதிகரிக்க, இன்று இந்த நிலைமையில் அமெரிக்கா நிற்கிறது.
நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்க ப்ரீகேஜி குழந்தை ஒன்று “I am special/ I am special/ Look at me” என்று anthem பாடிக்கொண்டிருக்கும் (நிஜமாவே). நெற்றி சுருக்கங்களைப் போக்க botox போடுவது, பல் வெண்மை வர அடிக்கடி டென்டிஸ்ட்டிடம் போவது, மார்பகம் எடுப்பாக தெரிய பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவது என்பது மட்டுமல்லாமல் 2005இல் 79 சதவிகித அமெரிக்கர்கள் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இதில் பலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த/ செய்யப் போகிறவர்கள். பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பேன்க் வட்டி கிடையாது, வரிவிலக்கு உண்டு என்ற நிலை ஏற்கனவே அங்கே வந்துவிட்டது. இதன் பலனாக, தற்போது டாக்டருக்கு படிக்கும் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது டென்டிஸ்ட்ரி. போகிற போக்கில் சில வருடங்களில் எமெர்ஜென்சி சிகிச்சை செய்ய ஆள் இருக்காது என்கிறது இப்புத்தகம்.
ஆனால் பிரச்சனை இது மட்டுமல்ல. Hook up culture பற்றியும் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். அதாவது வெஸ்டர்ன் கல்ச்சர்ரின் படி, முதலில் டேட்டிங், அப்புறம் செக்ஸ், அப்புறம் மூவிங் இன்/ லிவிங் டூகெதர், அப்புறம் சில வருடங்கள் கழித்து ப்ரோபோசல், அப்புறம் கல்யாணம் (ப்ரோபோசல் வீடியோ பார்த்து ஆர்பாட்டம் பண்ணும் பெண்கள் இதையெல்லாம் கவனிக்கவும்). ஆனால் இப்போது எனக்கு நான் மட்டும் தான் முக்கியம் என்ற நிலை வந்துவிட்ட பிறகு, இப்போதைய ட்ரெண்ட், casual sex மட்டுமே. பிடிச்ச வரை செக்ஸ், பிடிக்கலன்னா பிரிஞ்சுறலாம் என்ற வகையில் கமிட்மென்ட்டே இல்லாத கல்ச்சர் தான் hook up culture. இது வேகமாக அதிகரித்து வருகிறது என்பது அமெரிக்க ந்யூஸ் சேனல்களில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். ஏன் வராது? தன்னை மட்டுமே காதலிக்கும் போது அடுத்தவரைக் காதலிக்க நேரம் இருக்குமா என்ன?
பேமிலி லைஃப் இப்படியென்றால் வொர்க் கல்ச்சர் இன்னொரு ரகம். கஷ்டப்படாமலேயே அத்தனையும் கிடைத்த பின்னர் வாழ்க்கையில முன்னேற கஷ்டப்பட வேண்டும் என்றால் இனிக்கவா செய்யும்? இது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்ட் வாங்கி (பேன்க்) காசு செலவு பண்ணி, பிறரை விட ஆடம்பரமாக வாழ்வதாக காட்டிக்கொண்டு பின்னர் வட்டி கட்ட முடியாமல் நாசமாய்ப் போவதும் அதிகரித்து வருகிறதாம்.
2008 இல் அமெரிக்காவில் நடந்த economic meltdown ரொம்பவே பிரசித்தம். இதற்கு முக்கியக் காரணம் mortgage எனப்படும் வீட்டுவசதி வட்டி. அதாவது வீட்டு விலையில் ஒரு பங்கை நீங்கள் பேன்க்கில் கட்டினால், மிச்சத்தை பேன்க் கட்டும். அந்தப் பணத்தை நீங்கள் பத்து வருடதிற்கோ இருபது வருடதிற்கோ வட்டியோடு கட்டி அடைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். முந்தய காலகட்டத்தில் எல்லாம் வீடு வாங்க வேண்டுமென்றால் ஒன்று காசு சேர்த்து விட்டு பின்னர் வாங்குவது ஒரு ஆப்சன். அல்லது அதிகமான வட்டியுடன் வருக்கணக்கில் கட்ட வேண்டும். ஆனால் 2000 க்கு பின்னர், பேன்க் வட்டியை குறைக்க, மக்கள் மானாவாரியாக வீடு வாங்கித் தள்ளினார்கள். அதில் பெரும்பாலோனோர் தகுதிக்கு மீறி வாங்கினார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? கொஞ்ச காலத்திலேயே காசு கட்ட முடியாமல் போக, வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. ஆனால் அத்தனை வீட்டை உடனே விற்பது நடக்கிற காரியமா? மக்கள் வீட்டை இழந்து பெனால்டி கட்டிய பின்னரும் பேன்க்கிற்கு மோசமான லாஸ். Bankruptcy பதிவு செய்து இந்த வங்கிகள் போய் அமெரிக்க அரசாங்கத்திடம் கையேந்தி நிற்க, அரசாங்கம் இவர்களுக்கு கடன் தந்து காப்பாற்றியது. ஆனால் அந்தக் கடனுக்கான பின்விளைவுகள் கடைசியில் விடிந்தது அமெரிக்க மக்களின் தலையின் மீது தான். இன்னும் கட்டுகிகிறார்கள்/ கட்டுவார்கள் அதற்கான வரியை. பல வீடுகள் இன்னும் சீந்துவார் இல்லாமல் கிடக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் narcissism தான் என்பது இப்புத்தகத்தின் கருத்து. பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மக்கள் ஒருபுறம் என்றால், பணம் வசூலித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை கொண்ட வங்கியாட்கள் இன்னொரு புறம். இவர்கள் இருவருமே தகுதி தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு நாசாய்ப் போனவர்கள். இதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தமா? நாம் கர்ம சிரத்தையாக அமெரிக்க கலாசாரத்தை கேள்வியே இல்லாமல் காப்பி அடித்தால் சீக்கிரமே நாமாக நாசமாப் போய்விட மாட்டோமா என்ன?
very interesting article... i will try to rad that book.
ReplyDeleteDo so. Also check this book out.
Delete"The Mirror Effect: How Celebrity Narcissism Is Seducing America"
good read :-)
ReplyDeleteUpdate: To know more about societal roles of men and women, have a look at the discussion currently going on in Reflections group.
ReplyDeleteLink:
https://www.facebook.com/groups/113739122115070/permalink/407007279454918/
// Narcissism எனும் சுயமோகத்திற்கு இவர்களுடைய அத்தனை எதிர்பார்புகளுமே தெளிவான அடையாளங்கள் என்கிறது Jean Twenge, Keith Campbell எழுதிய “The Narcissism epidemic” புத்தகம். காதல் என்றால் என் மீது பாச மழை பொழிவது, கல்யாணம் அதன் நீட்சி என்று இவர்கள் கேட்கக் காரணங்கள் என்ன? //
ReplyDeleteஇது டிஸ்கஷனில் வந்ததா எனத்தெரியவில்லை, நம்மூரைப் பொருத்தவரரையில் இளம்பெண்களின் Silly எதிர்பார்ப்புகளுக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை.They can't live simple and can't improve themselves, so they need blind appreciation and benefits. When some loafer boys unexpectedly go behind them, they just assume they are best among male... and these girls get chance to speak on media! :D
ஹாஹா... இது பற்றி புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது.
DeleteIn fact, நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி ஒரு கிளாசிக். இந்த செல்ப் எஸ்டீம் மூவ்மேன்டிற்கு அடி நாதமே உங்களை நீங்கள் விரும்பினாலே போதும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பது இல்லாமல் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பதாக இருந்தது.
ஆனால் ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், high self esteem உள்ள மக்கள் பிறரைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதாம். Doesn't that make sense more? They already think they are special. Which is why they have high self esteem/ are narcissistic. Why would they give a fuck about what others think?
This is like saying a rich man hoards money because deep down he hates it. Of course not, he likes it. He is obsessed with it.
An addendum to that: Guess who else has high self esteem. Sociopaths.
DeleteSurely they don't have low self-esteem or self-worth. They just plain don't care.
George Carlin did a wonderful piece on this. I forgot to add that to the post. Here it is now.
http://www.youtube.com/watch?v=h6wOt2iXdc4
// http://www.youtube.com/watch?v=h6wOt2iXdc4
Delete"In today's America, no child ever loses.. there are no losers anymore.."
"You know what they tell a kid who lost these days? "
"You were the last winner"
//
ha ha ha!
Ha ha... He had me at "Isn't this some sort of sophisticated child abuse?"
DeleteHe was a thinker. And he was brutally honest with his views.
You should watch all of his stand ups. You can start with these.
http://www.youtube.com/watch?v=rsL6mKxtOlQ
http://www.youtube.com/watch?v=Uo-QIY7ys-k
http://www.youtube.com/watch?v=AtK_YsVInw8
// He had me at "Isn't this some sort of sophisticated child abuse?" //
DeleteYes, sadly these trends started growing in India and entire Asian region too. Can do more damages on countries where basic needs such as 'protein', human rights are still lacking than the countries where these delusional ideas initiated.