After the wedding - பாசமெனும் தீ…..

after-the-wedding
 
மும்பைப் பெருநகரின் நெடிந்துயர்ந்த கட்டடங்களின் நிழலில், இடிந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு இடையில் தொலைந்து போன தங்கள் வாழ்கையைத் தேடும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் அநாதை இல்லம் ஒன்றை நடத்திவருபவன் ஜேகப். ஜேகப்பின் அர்ப்பணிப்பும், உதவும் மனப்பான்மையும் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு சிறியது அவன் நடத்திவரும் அநாதை இல்லத்திற்கு கிடைக்கும் நன்கொடை. சிறுவர்களுக்கு அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கங்களானாலும், அடுத்த மாதத்திற்கான உணவானாலும், எப்போதுமே எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. சூறைக் காற்றில் அலைக்கழிக்கப்படும் சிறு இறகென அவர்களது வாழ்க்கை எப்போதும் தடுமாற்றத்தில் இருந்தாலும், குழந்தைகளுக்கேயுன்டான மகிழ்ச்சியும், ஜேகப் மீதான நம்பிக்கையுமே அவர்களது தடம் புரண்ட வாழ்கையில் தெரியும் சிற்றொளி.
வருமானமின்மையின் காரணமாக அநாதை இல்லத்தை இழுத்து மூடும் நிலை அருகாமையில் தெரிந்தாலும் சளைக்காது போராடும் ஜேகப்பிற்கு உரிய நேரத்தில் உதவி செய்ய முன்வருகிறது ஒரு டேனிஷ் நிறுவனம். ஜேகப் நடத்தும் இல்லத்திற்கு பணவுதவி செய்ய முன்வரும் அந்த நிறுவனம், தங்களது நிறுவனத்தின் நிர்வாகி யோர்கன் ஹான்சன் ஜேகப்பை நேரில் சந்திக்கப் பிரியப்படுகிறார் என்றும், பணத்தைப் பெற்றுக்கொள்ள ஜேகப் தன் பிறந்த நாடான டென்மார்க்கிற்கு நேரில் வரவேண்டும் என்றும், யோர்கனை சந்திக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கிறது. பணக்காரர்களின் மீது மாறாத கசப்பைக் கொண்டிருக்கும் ஜேகப்பிற்கு இது கோபத்தையே ஏற்படுத்துகிறது. மறுக்க நினைக்கும் முன்கோபக்காரன் ஜேகப்பின் மனதை சிறுவர்களின் நிலை குறித்து நினைவுபடுத்தி மாற்றுகிறாள் அவனுடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் மிசஸ்.ஷா .
after the weddingசிறுவர்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டும் ஜேகப்பிற்கு மிகப் பிடித்தமான ஒருவனும் அங்கே உண்டு. ஜேகப்பால் எடுத்து வளர்க்கப்பட்ட பிரமோத்திற்கும் ஜேகப்புக்குமான உறவு, ஜேகப்பின் சமூகநலனால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட உறவல்ல. எட்டு நாட்களில் வரவிருக்கும் தன் பிறந்தநாளில் ஜேகப் தன்னுடன் இருக்க மாட்டான் என்று ஏங்கும் மனம் பிரமோத்திற்கும், அவனுடைய பிறந்தநாளுக்கு முன்னரே வந்துவிடுவதாக உறுதிமொழி அளிக்கும் அன்பு ஜேகப்பிற்கும் உண்டு.
டென்மார்க்கில் யோர்கனை சந்தித்து அவனுக்கு தன்னுடைய இல்லத்தின் தேவைகளையும் சாதனைகளையும் பற்றி விளக்கும் ஜேகப், யோர்கனுக்கு இது பற்றிய மேலோட்டமான ஆர்வமே இருப்பதைக் காண்கிறான். தன்னுடைய நிறுவனம் ஏன் பணவுதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது எனும் அவனது கேள்விக்கும் மேம்போக்கான பதிலே கிடைக்கிறது. மேலும், தன்னால் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிறுவனத்திற்கு வருடத்திற்கு மில்லியன் டாலர் தரப்படும் என்றாலும், ஜேகப்பின் நிறுவனத்தை தான் இன்னும் பரிசீலனையில் தான் வைத்திருப்பதாக யோர்கன் சொல்வதைக் கேட்கும் ஜேகப் தனது கோபத்தை அடக்கப் பிரயத்தனப்படும் நேரத்தில் யோர்கனிடம் இருந்து விசித்திரமானதொரு அழைப்பு விடுக்கப்படுகிறது. இரண்டொரு நாளில் நடக்கவிருக்கும் தனது மகளது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு ஜேகப்பை வற்புறுத்துகிறான் யோர்கன்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் ஜேகப் தன்னிடம் பலவருடங்களுக்கு முன்னர் சண்டை போட்டுப் பிரிந்த தனது முன்னாள் காதலியை ஹெலனைக் காண்கிறான். இப்போது அவள் யோர்கனின் மனைவி என்பதையும் அறிந்து கொள்கிறான். மேலும், மணமகளது உரையின் போது அனா, தான் யோர்கனுக்கு பிறந்தவளல்ல என்றாலும் தன்னை சொந்த மகளைப் போலவே இத்தனை வருடமும் நடத்திய யோர்கனைத் தான் தன் தந்தையாக மதிப்பதாகச் சொல்ல, ஜேகப் உடனே வெளியேறுகிறான்.
அந்நியப்பட்டுப் போன தன் நாட்டில்  தனக்குத் தெரியாமலேயே தன் மகள் இத்தனை வருடமும் வளர்ந்திருப்பதை உணரும் ஜேகப், ஹெலனை சந்திக்கச் செல்கிறான். தனது மகள் அனாவிடம் தான் தான் அவளது உண்மையான தந்தை என்று சொல்ல வேண்டுமென்று சண்டையும் போடுகிறான். அனாவிற்கு உண்மை தெரிய வந்ததா? அவள் யாரைத் தன் தந்தையாக ஏற்றுக் கொள்வாள்? ஜேகப் ஹெலனை இருபது வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தது தற்செயலானது தானா? சொந்த மகள் கிடைக்கப்பெற்றபின் பிரமோத்தின் நிலை என்ன? என்பதை படத்தின் மிச்சப் பகுதி உணர்ச்சிப் பிரவாகத்தோடு கொண்டு வருகிறது.
இளவயதில் பல தவறுகளைச் செய்து, சிற்றின்பத்தின் பிடியில் தனது உயரிய கொள்கைகளைத் தொலைத்து, வெறுப்பிலும்,ஆத்திரத்திலும் முன்கோபம் கொண்ட மனிதனாக மாறிய ஒரு மனிதனின் கதாப்பாத்திரம் Mads Mikkelsonக்கு(ஜேகப்). நன்கொடைக்காக ஒரு பணக்காரனின் கையக் குலுக்க டென்மார்க் வரை போக வேண்டுமா என்று வெறுப்புடன் சண்டை போடும் போதும், யோர்கனுடனான தனது முதல் சந்திப்பில் வெறுப்பையும் கோபத்தையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளும் போதும், தனது after the wedding 4மகள் தனக்குத் தெரியாமல் இத்தனை வருடம் வேறொருவனிற்கு மகளாய் வளர்ந்திருக்கிறாள் என்று அறியவரும் போது ஏமாற்றம்,கோபம்,சோகம் இவை அனைத்தையும் தனது கண்ணிலேயே கொண்டு வரும் போதும் பின்னுகிறார் என்றாலும், உண்மை தெரியவந்த பின் தன்னை சந்திக்க வரும் மகளுடன் சங்கோஜத்தோடும், அந்நியத்தன்மையோடும், ஏக்கம் கலந்த பாசத்தோடும் பேசும் கட்டத்தில் ஜேகப்பாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக தயங்கித் தயங்கி தன் தொலைபேசி எண்ணைத் தரலாமா என்று கேட்கும் மகளிடம் குரல் தழுதழுக்க,கண்கள் அலைபாய பேப்பரையும் பென்சிலையும் நீட்டும் கட்டத்தில் முனகோபக்காரனுள் ஒளிந்திருக்கும் ஏக்கம் நிறைந்தவொரு மனிதனை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இரண்டாம் சந்திப்பில் தனது சிறுவயது புகைப்படங்களை மகள் காட்டுகையில் அதில் இருக்கும் யோர்கனைக் காணும் போதெல்லாம் ஏக்கமும் ஏமாற்றமும் கலந்த வெறுப்புடன் பார்க்கும் கட்டத்தில் அவரது கண்களே ஆயிரம் கதை சொல்கிறது. After the Wedding 8
அனாவாக Stine Fischer Christensen. சாதாரண பணக்கார மகளாக அறிமுகமாகும் அனாவின் பாத்திரம் போகப் போக கதையின் முக்கியப் புள்ளிகளில் ஒன்றாக மாறுகிறது. ஜேகப் தனது தந்தை எனத் தெரிந்த பின் ”நான் உயிரோடு இருந்ததே இதுவரை உங்களுக்குத் தெரியாதா?” என்று ஏக்கத்தோடு கேட்கும் போதும், பக்கத்து வீட்டுக்காரனிடம் உரையாடுவதைப் போல சொந்தத் தந்தையிடம் பேச வேண்டிய சங்கோஜத்தையும் அருமையாக படம் முழுவதும் கொண்டு வந்திருக்கிறார்.
தனக்கு வேண்டியதைப் பெறும் வகையில் பிறரை செயல்படச் செய்யும் பணக்கார மனிதனாக Rolf Lassgard(Jorgen). பணக்காரத் after the wedding jorgenதிமிருடன் யோர்கன் செய்வதாய்த் தோன்றும் செயல்களில் நிறைந்திருப்பது தன் குடும்பத்திற்கான கவலையே. எதிர்காலத்தில் தன் குடும்பம் நலமாக இருப்பதற்காக ஜேகபின் விருப்பு வெறுப்புகளைக் கண்டுகொள்ளாது, தனது மனைவியின் சங்கட நிலையைப் பற்றி அக்கறைப்படாது தனக்கு மிகப் பழக்கமான பொம்மலாட்டத்தை அரங்கேற்ற யோர்கன் முடிவெடுக்கக் காரணம் ஏக்கமும், பாசமுமே. கடைசிவரையிலும் தனக்கு வேண்டியவண்ணம் பிறரை சதுரங்கக் காய்களைப் போல உபயோகப்படுத்தும் யோர்கன் தனக்கு வேண்டியது கிடைத்தபின், லட்சியத்தின் போர்வையில் அதுவரை மறைந்திருந்த பயம் வெளிப்படும் கட்டம் அருமையானது. பறிக்கப்பட்ட பொருளை நினைத்து அழும் குழந்தையெனக் கதறியழும் யோர்கனை அந்தக் கட்டத்தில் பார்க்கும் எவருக்கும் அவன் மேலிருந்த பார்வை முற்றிலும் மாறியே போகும்.
சோகம் கலந்த அருமையான கதையும், அற்புதமான நடிகர்களும் இக்கதையின் மிகப்பெரிய பலமென்றாலும் இக்கதையின் உயிர்நாடி நம்பத் தகுந்த பாத்திரங்களின் வசம் இருக்கிறது. கவனித்துப் பார்த்தால், இந்தப்படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் தவறுகள் இல்லாமலில்லை. தனது முன்கோபத்தால் அனாதைக் குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய பணத்தை வேண்டாமென மறுக்கும் ஜேகப், தனது இலக்கை நோக்கி பிறரை நடை போடவைக்கும் யோர்கன், சிறுபிள்ளைத்தனமான கோபத்துடனும், பழிவாங்குவதான எண்ணத்துடனும் கடந்த காலத்தை முற்றாக புதைக்க ஆசைப்பட்டு தந்தையையும் மகளையும் பிரிக்கும் ஹெலன் என கதாப்பாத்திரங்கள் அனைத்துமே நம்பக் கூடியவகையில் அமைக்கப்பட்டிருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று. உணர்ச்சிகரமான காட்சிகளில் கண்களும், கைகளும், உடல் மொழியும் உணர்ச்சிகளைக் உணர்த்தும் வகையில் காட்டப்படுகிறது. கதாப்பாத்திரங்கள் அனைத்தும் அதிகப்பட்சafter the wedding 5 நேர்மையோடும் அவற்றின் இயல்புகளோடும் காட்டப்படுவதும் படத்தின் மிகப் பெரிய பலமே. வாழ்க்கையைப் போலவே, ஒரு மனிதனைப் பற்றி முதலில் நம் மனதில் ஏற்படும் கருத்து போகப் போக படத்திலும் மாற்றம் பெறுகிறது. கடைசியில், கதாப்பாத்திரங்கள் அனைத்தும் வேறு விதமான பார்வையில் தெரிவதும், அவற்றின் மீது ஈடுபாடும், அன்னியோன்யமும் ஏற்படுவது ஒரு இயக்குனராக Susanne Bier க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
படத்தில் பொங்கிப் பிரவகிக்கும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டியோ என்னவோ படத்தில் இசை அடக்கமாகவே காணப்படுகிறது. ஆர்ப்பாட்டமேயில்லாது அமைதியாய் அமைக்கப்பட்டிருக்கும் இசை படத்தின் சோகத்திற்கு மேலும் ஒரு கனமான உணர்வையே ஏற்படுத்துகிறது. குறிப்பாக,தந்தையை அனா சந்தித்துப் பேசும் கட்டத்தில் ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் இசை, நிலைமையின் கொடுமையை சோகத்தோடு எடுத்துவர பெரிதும் உதவுகிறது. படத்தில் எத்தனையோ அருமையான காட்சிகள் இருந்தாலும், இதுவே அருமையான காட்சி என்பது எனது கருத்து.
படத்தின் கடைசிக் கட்டத்தில் இந்தியா வரும் ஜேகப் பிரமோத்திடம் பேசும் கட்டம் ஒன்று வரும். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான சினிமாத்தனமான முடிவு இல்லாமல், வாழ்கையின் நிதர்சனமே இங்கும் ஓங்கி  நிற்கிறது. தன் வளர்ப்புமகனை கண்டவாறே ஜேகப் சிரிக்கும் இயலாமை கலந்த சிரிப்புக்கான அர்த்தங்கள் தான் எத்தனை? பாசமெனும் தீயில் தீயாத மனமும் உண்டோ?
after the wedding c
Rating: 5/5.











Comments

  1. Well guys, this is my 50th post, nearly 3 years after my first blog post. Much has changed since then. I look back now at the reason I started this blog and I cannot help but laugh at myself.
    The intended post was either The Hobbit or the LOTR, but I am more than glad to have written about this wonderful movie. This is a post on a movie after a very long time. The last movie post was about "The Butterfly Effect" last April, more than an year ago. See you around.

    ReplyDelete
    Replies
    1. Congrats on your 50th post! :) Your blog looks cool with the new template! Keep rocking...

      Delete
    2. New template? What are you talking? This is the one I've been using for a very long time.

      Delete
    3. And the only template I see here is your comment.

      Delete
    4. //This is the one I've been using for a very long time//
      Sorry about that, my bad. I don't know why felt that way...

      //And the only template I see here is your comment//
      :) good one... though written so, it was not meant to be a template

      Delete
  2. சில பதிவுகள் வார்த்தைகளில் இருந்து வருபவை, சில உணர்வுகளில் இருந்து வருபவை, உணர்வுகள் உள்ளே இருந்து சொற்களாக வந்து விழுந்து முழுமை பெறுவது ஒரு சுகானுபவம் அல்லவா. எல்லார்க்கும் அது கிடைத்திடும் பாக்கியம் அல்ல. உமக்கு அது இது போல அடிக்கடி கிடைக்க வேண்டும்.

    வருபவர்களை எல்லாம் கண்டபடி வெட்டுவது, போதாது என்று வலிய தேடிப்போய் வம்பிழுத்து வெட்டுவது, பின் சீ யூ அரவுண்டு என கமெண்டு போடுவது, அரசியல் பதிவில் நீங்கள் குதிக்க வேண்டிய தருணமிது நண்பரே...:)

    51 வது பதிவாக என் பெயர் லார்கோ வை இட்டு எம்மை குஷியாக்கிட வேண்டுகிறேன்....:))

    ReplyDelete
    Replies
    1. உணர்வுகளில் இருந்து வரும் பதிவுகளை மட்டுமே எழுத வேண்டும் என்பதே எனது ஆசையும். பதிவுகள் குறையக் காரணமும் அதுவே என்பது உமக்கு நன்றாகவே தெரியும். உமக்கு தெரிந்த வேறொரு அதிமுக்கியக் காரணமும் இருக்கிறது. சோம்பேறித்தனம். :)

      Delete
    2. //வருபவர்களை எல்லாம் கண்டபடி வெட்டுவது, போதாது என்று வலிய தேடிப்போய் வம்பிழுத்து வெட்டுவது, பின் சீ யூ அரவுண்டு என கமெண்டு போடுவது, அரசியல் பதிவில் நீங்கள் குதிக்க வேண்டிய தருணமிது நண்பரே.//

      ஹிஹி, எவனும் சிக்க மாட்டேங்கறான். அதான் சுத்தி சுத்தி வந்து வெட்டுவேன்னு சொல்லாம சொல்லியிருக்கேன் ஆமா. :)
      அப்புறம், என் பெயர் லார்கோ அடுத்த பதிவா? அந்த கருமத்தை அங்க இங்க பார்த்தே எனக்கு மூணு நாளுக்கு முக்காம போச்சு மச்சி. முழுசா வேற படிக்கனுமா என்ன? :P

      Delete
  3. பதிவு அருமை. படத்தின் கதை நன்றாக உள்ளது.

    //This is a post on a movie after a very long time. The last movie post was about "The Butterfly Effect" last April, more than an year ago.// இப்படி நீண்ட இடைவெளி விட்டா எப்படி. அடுத்து எந்த படத்த பார்க்கிறதுன்னு நான் தேர்ந்தெடுக்க வேண்டாமா? KK அண்ணா, கருந்தேள் அண்ணா மற்றும் உங்க பதிவுகள்ல வரும் ஆங்கிலப்பட விமர்சனத்த படித்து விட்டு பிடித்திருந்தால் டவுன்லோட் செய்வது என் வழக்கமாகிவிட்டது. (Specially i like the movie Invictus. I have seen the movie because of your review. Now Invictus is one of my favorite)

    //வருபவர்களை எல்லாம் கண்டபடி வெட்டுவது, போதாது என்று வலிய தேடிப்போய் வம்பிழுத்து வெட்டுவது, பின் சீ யூ அரவுண்டு என கமெண்டு போடுவது,// ஷங்கர் அண்ணா இலுமி இயல்பே இதுதானே. ரொம்ப "கெட்டபய":)

    //ஹிஹி, எவனும் சிக்க மாட்டேங்கறான்.// ஆமாம் கொஞ்ச காலமா சில பேர் கண்ணிலேயே படமாட்டேன் என்று பதுங்கி விட்டார்கள். இவர்கள் இல்லாததால் நமக்கு Facebookla கலாய்க்குறதுக்கு மேட்டரே கிடைக்காம போரடிக்குது :(

    ReplyDelete
  4. பாசமெனும் தீயில் தீயாத மனமும் உண்டோ?

    அந்த டைரக்டர்ட்ட இந்த வரியை படிச்சு காட்டணும்!

    ReplyDelete
    Replies
    1. சத்யமா புர்யலே.. ஆனாலும் என்னவோ நடந்திருக்கு மச்சி..!!!

      சரி விடு.. கடைசியா சிநேகாவுக்கு கல்யாணம் முடிஞ்சதானு சொல்லாம சஸ்பென்சா விட்டுட்டீங்களே.. ஏன்?...

      Delete
    2. போயா யோவ், நீ குனியாம கூழாங்கல்ல எண்ணுறது எப்படினு முதல்ல கத்துகிட்டு வா.அப்பால இதெல்லாம் சொல்லித் தர்றேன். :)

      Delete
  5. நண்பா... உன் கதை விவரிப்பில் படத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறாய்.. கட்டாயம் பார்க்கத் தூண்டும் காந்த எழுத்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை.. இது படம்னு நீங்களாவது சொன்னீங்க.. நானும் ஏதோ காமிக்ஸ் பத்தி எழுதியிருக்காருனு நினச்சேன்.. டேங்ஸ் சார்..:-))))))


      @இலுமி..
      அடுத்த பதிவுகளில் இருந்து.. எங்களுக்காக.. சுருக்கமா ஒரு முன்னுரை எழுதி .. இதை பதிவுக்கு முன்னாடி போடு சார்....கண்ண கட்டுது....:-)))

      Delete
    2. முன்னுரைய தனியா ஒரு பதிவா போட்டுறாத வோய்

      Delete
  6. இந்தப் படத்தின் விமர்சனமம் நன்றாக இருந்தது நண்பரே.

    ReplyDelete
  7. Good blog to read mate..! Thanks for making my Saturday bit interesting.I read most of your articles..Quality work..!! Keep it up..!!

    ReplyDelete
    Replies
    1. எவன்ல அது வெளி பேர்ல வந்து பூச்சி காட்டுறது?

      இது நிஜ வெளின்னா....

      என்ன எழவு மச்சி இது? புதுசா படிக்கிறவன் மாதிரி பினாத்திகிட்டு இருக்க? பொண்டாட்டி ஊர்ல இல்லையா? சனிக்கிழமை காலைலேயே சரக்கடிச்சியா? :)

      Delete
  8. dont miss this movie fa meg pa for faen

    http://www.bonjourtristesse.net/2011/12/turn-me-on-goddammit-2011.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........