கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….

                             Kadal-pura[4]


                                                         தழுவி நழுவும் கடல் அலையோ
                                                         தூரத் தெரியும் கல் மலையோ?
 
 
அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷயமுனையின் கரைகளை வேண்டியே நெருங்கும் கப்பலை கவனித்துக் கொண்டிருந்தான். வந்தால் விளையப் போகும் நிகழ்வுகளை விளக்கும் எண்ணத்திலோ என்னவோ செங்கதிர்களை அந்தக் கப்பலின் மீது நின்று கொண்டிருந்த உருவத்தின் மீதும் பாய்ச்சினான். தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனது விழிகள் கரையை விழுங்கி விடும் கழுகுப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன. தூரத் தெரியும் தூங்கும் எரிமலையான பகிட் பாரிசானின் உக்கிரமோ, விலகி ஓட நினைப்பன போல பறந்து செல்லும் பறவைகளோ அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை. அப்பிராந்தியத்திலேயே பயங்கரமான இடம் என அக்ஷயமுனை பெயர் பெற்றிருந்ததென்றால் அதற்கு காரணம் இருக்கவே செய்தது. நிலைமை எப்போதும் வெடிக்கத் தயாராயிருக்கும் பகிட் பாரிசனுக்கு ஒப்பானதே என்பது மட்டுமல்லாது, நர மாமிசம் தின்னும் பூர்வ குடிகளையும், கொள்ளையர்களையும் ஒருங்கே கொண்ட இடமாகவும் அது அமைந்திருந்தது என்பதை இளையபல்லவன் அறிந்தே இருந்தான். இவற்றுக்கெல்லாம் மேலாக, வஞ்சகமே உருவான கோட்டைத் தலைவனின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த அந்நகரத்தில் அடிக்கடி நிகழும் கொலைகளைப் பற்றிய தகவல்களும் பலரின் வாயிலாக அவனது காதுகளை எட்டியே இருந்தன.
கடும் உஷ்ணம் நிறைந்த அக்ஷயமுனையின் கரைகளை அலைகள் கூட தொட்டுத் தொட்டு உடனே விலகிக் கொண்டிருந்தன. தமிழகத்தில் இருந்து வரும் அனைத்துக் கப்பல்களும் நேர்வழியில் வராமல், அக்ஷயமுனயைத் தவிர்த்து சுற்றிப் போவதற்கான காரணம் கரையிலேயே தென்பட்டது என்றால் அது மிகையல்ல. உடனே கப்பல்களை கிளப்பிக் களவுக்கு செல்லும் வகையில் கரையிலேயே தங்கள் கூடாரங்களை அமைத்திருந்த கடற்கொள்ளையர்கள், தங்களைத் தேடி வரும் கப்பலை சற்றே வியப்போடு பார்த்தார்கள். அவர்களுடைய வியப்பு விரைவில் பயத்திற்கு இடம் கொடுத்தது. கப்பலில் இருந்து ஊதப்பட்ட சங்கொலியைக் கேட்டதும் அவர்கள் பயம் கொண்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஈவிரக்கமற்ற பயங்கரமான கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் வருகையை விவரிக்க ஊதப்படும் அந்த ஒலி தங்கள் வாழ்வில் விழப் போகும் பெரும் இடி என அறிந்திருந்த அந்நகரத்து மக்கள் உடனே தத்தம் வீடுகளை நோக்கி பயத்துடன் விரைந்தனர். அவர்களது இதயத் துடிப்போடு போட்டி போடும் வகையில் நகரத்தில் வாயில்கள் படாரென அறைந்து சாத்தப்பட்டன. பாலூர்ப் பெருந்துறையில் சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்த வீரச் செயல்களின் முக்கியக் காரணியான இளையபல்லவன் மட்டும் உதட்டில் தவழும் இளநகையோடு கரையில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வந்தான்.
அகூதாவின் உதவியோடு பாலூரில் இருந்து தப்பிய கருணாகரன், தமிழகத்திற்குத் திரும்பாமல் ஒரு வருட காலத்திற்கு அவனிடமே கடற்போர் பயிற்சி எடுத்ததற்கும், பெரும் கடற்போர்களை சந்தித்ததற்கும், யாரும் வரத் தயங்கும் அக்ஷயமுனைக்கு வலிய வந்ததற்கும் உறுதியான காரணம் ஒன்று இருக்கவே செய்தது. தனது மன வானில் சிறகடித்துப் பறக்கும் காஞ்சனைப் புறாவை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசியாக்கும் எண்ணம் மட்டுமல்லாது, தமிழரை இன்னல்படுத்தும் கலிங்கத்தின் வலுவான கடற்படை பலத்தை உடைக்கவும், வலுவான கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் ஆசையால் கருணாகரன் ஆபத்தில் வலியப்போய் விழுகிறான் என்பது பிறருக்குத் தெரியாதது வியப்பில்லை என்றாலும், அவனது நண்பன் அமீருக்குக் கூட தெரியாமல் இருந்தது ஆச்சர்யமே. கருணாகரனுக்கருகிலேயே எப்போதும் நின்றாலும் அவனது உள்ளக்கிடக்கையை அறியாத அமீர் அவனிடம் தனது அதிருப்தியையும், எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தையும் விளக்க வாயெடுத்தான். சங்கொலியைக் கேட்டு ஓடும் மக்கள் வந்திருப்பது அகூதா அல்ல என்பதை அறிந்து கொள்வார்களேயானால் ஏற்படக்கூடிய விபரீதத்தை குறித்து எடுத்துக் கூற முற்பட்ட அவனை இளைய பல்லவனது உறுதியான கை தடுத்தது. அதனினும் உறுதியான பார்வை அந்நகரத்துக் கோட்டையின் மேல் நிலைத்ததைக் கண்ட அமீர், கருணாகரன் காண முற்பட்ட கனவு அபாயமானது என்பதை உடனே உணர்ந்து கொண்டான்.
திகில் வயப்பட்டிருந்த அமீரை மேலும் திகிலுக்குள்ளாக்கும் நோக்கத்தோடோ என்னவோ, கரைக்குச் செல்ல சிறு படகொன்றை தயார் செய்யுமாறு ஆணையிட்ட பல்லவன் குரல், தன்னுடன் யாரும் வரத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டவும் செய்தது. சற்று நேரத்தில் படோபடமாக அறையிலிருந்து வெளியே வந்த அவனைக் கண்ட அமீரின் கிலி உச்சத்திற்குச சென்றது. கோட்டையை அடைய கருணாகரன் கொள்ளையர் கூட்டத்தைத் தாண்டியே செல்ல வேண்டும் என்பதை அறிந்திருந்த அமீர், அவ்வாறு செல்லும் போது கருணாகரனது உடமைகள் மட்டுமல்லாது, உயிரும் நொடிப் பொழுதில் பறிக்கப்படும் என்பதையும் உணர்ந்தே இருந்தான். உணர்ந்திருந்ததாலேயே “துணிவுக்கும் ஒரு எல்லை வேண்டும்” என்று மனதில் எண்ணமிட்டான். ஆனால் இளையபல்லவனது துணிவு அமீரின் வரையறையையும் மிஞ்சியது என்பதை மட்டும் அந்நேரத்தில் அவன் உணர்ந்தானில்லை.
கடற்கரையை சிறிது நேரத்தில் அடைந்த இளையபல்லவனை நோக்கி வெறியுடன் வந்தது கொள்ளையர் கூட்டம். கப்பலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அமீர் கொலைவெறியோடு வந்த கொள்ளையர் கூட்டம் சிறிது நேரத்திலேயே குதூகலத்தோடு இளையபல்லவன் பின்னால் சென்றதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். ஆச்சர்யம் அடைந்தது அமீர் மட்டுமல்ல, கோட்டைத் தலைவனும் தான். கொடூரத்துக்கும் வஞ்சகதிற்கும் பெயர் போன பலவர்மன், கொள்ளையரை நோக்கி வலியச் சென்ற முட்டாளைக் கொல்லும் அவசியம் தனக்கில்லை என்றே எண்ணிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே கொள்ளையர் கூட்டம் புடைசூழ வந்த உருவத்தைக் கண்ட பலவர்மனது மனதில் கிலி சற்றே எழுந்தது. சிறிது நேரத்தில் பலவர்மனைச் சந்தித்த கருணாகரனை வஞ்சகம் நிறைந்த இரு விழிகளும், விஷமம் நிறைந்த இரு விழிகளும் வரவேற்றன.
பலவர்மனது மகளைக் கண்டு, அவளது மயக்கும் மோகன அழகைக் கண்டு எதற்கும் அசையாத பல்லவனது நெஞ்சம் அசைந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப, அவனது விழிகளும் சஞ்சலத்தால் அசைந்தன. சற்று நேரத்தில் அவனுக்கு கிடைத்தது ஓரழைப்பு. அந்த ஒய்யார மோகினியாலேயே அந்த அழைப்பும் விடுக்கப்பட்டது. அன்றிரவு நடக்கவிருக்கும் விழாவில் கலந்து கொள்ள வருமாறு கோரிய அவளது சொற்களில் எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதே அளவு குரூரம் பலவர்மனது கண்களில் அந்நேரத்தில் பரவியது. பலவர்மன் அவ்விழாவில் எதிர்பார்த்தது ஒரு கொலை. விழுந்தது ஒரு கொலை தான். ஆனால் அதன் மூலம் விளைந்தது வேறு நிலை. புதிய பல பொறுப்புகளோடு, புரியாத பல ஆபத்துக்களையும் சம்பாதித்துத் தந்தது அந்தக் கொலை.
கடற்தளம் அமைக்க வந்த இளையபல்லவனது கருத்தைக் குலைக்கும் வண்ணம் எழுந்த ஆபத்து தான் என்ன? மயங்க வைக்கும் மோகனாங்கியின் அருகாமையைக் கூட மறக்க வைக்கும் வகையில், இளையபல்லவன் உள்ளம் கலங்க எழுந்த அந்த ஆபத்தை அவனால் சமாளிக்க முடிந்ததா? கருணாகரனால் அபாயம் நிறைந்த அக்ஷயமுனையில் நிலைக்க முடிந்ததா? தன் மதியை மயக்கிய மோகன விழியாளை அவனால் கைப்பற்றத் தான் முடிந்ததா?
முதல் பாகத்தில் சோழ கலிங்கப் பகையை விறுவிறுப்பாகச சொன்ன சாண்டில்யன், இரண்டாம் பாகத்தில் கலிங்கத்தின் கடற்பலத்தை ஒழிக்க கருணாகரன் தளம் அமைக்க முயல்வதைக் கூறுகிறார். முதல் பாகத்தின் விறுவிறுப்புக்கு மாறாக சற்றே மெதுவாகப் போகும் இப்பாகத்தில் பற்பல திருப்பங்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை கதையை பெருமளவு நகர்த்தாததால் கதை சற்றே இழுவையாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆசையின் காரணமாக கடல் புறா சற்றே நீட்டப்பட்டது என்று சாண்டில்யன் முகவுரையில் எதைச் சொல்லி இருப்பார் என்பது தெளிவு (மூன்றாம் பாகத்தின் ஆரம்பமும் இரண்டாம் பாகத்தினை சற்றே ஒத்திருக்கும் என்பது வேறு விஷயம்). ஆனாலும், கடல் புறாவின் ஓட்டத்தோடு பின்னிப் பிணைந்து இருப்பதால் இப்பாகம் முக்கியமானதொன்றே. மேலும், பழங்காலத்துக் கப்பல்களைப் பற்றிய தகவல்கள் பல இதில் உண்டு. குறிப்பாக, பண்டைய காலத்துக் கப்பல்களின் வகைகள், அவற்றின் சிறப்புகள், அவற்றின் உபயோகம் போன்றவை பற்றிய தகவல்களும் இப்பாகத்தில் உண்டு. ஆனால் கடல் புறா கதையின் தனிச்சிறப்பான கடல் போர் பற்றிய விவரணைகள் இந்தப் பாகத்தில் இல்லாது போனது ஒரு குறையே. முதல் பாகத்தின் சோழ கலிங்க சிக்கல்கள், பாலூரை விட்டுத் தப்பத் திட்டமிடும் கட்டங்கள், மூன்றாம் பாகத்தின் கடற்போர் விவரணைகள் ஆகியன வழங்கும் விறுவிறுப்புக்கு இணை இந்தப் பாகத்தில் எங்கும் கிடையாது. கரையில் இழுத்த கருணாகரனது கப்பல் போலவே கதையும் நகராது பலமிழந்து கிடப்பது இப்பாகத்தின் மிகப்பெரிய பலவீனம். மூன்றாம் பாகம் குறித்த அடுத்த பதிவில் கடாரம் கொண்ட கதையையும், கடல் போர்களையும், கடல் புறாவின் கதையோட்டம், கதாப்பாத்திரங்கள், அவற்றின் மாற்றங்கள் ஆகியன அனைத்தையும் பார்க்கலாம்.
 
பின் குறிப்பு: கடற்கரையில் கால்களில் அலை மோத, விரல்கள் பின்னிப் பிணைய அமர்ந்திருக்கும் வேளையில் கருணாகரனிடம் மஞ்சளழகி, “ இதோ என்னை வந்து தொட்டுவிட்டுப் போகும் கடல் அலை போலத் தான் நீங்களும். தொட்டு விலகுவீர்களோ அல்லது மலை போல நிலைப்பீர்களோ?” என்று சொல்லுவதாய் ஒரு காட்சி உண்டு. அதுவே இப்பதிவின் தலைப்பாக உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.












Comments

  1. விழுந்தது ஒரு கொலை . ஆனால் அதன் மூலம் விளைந்தது வேறு நிலை.//

    இதுவும் கதையில் இருந்தே எடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொள்கிறேன். :)

    ReplyDelete
  2. சாண்டில்யனை நெருங்கி வரும் நடையில் சுவையாக எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் பாதிப்பு பதிவின் சொற்களில் விளையாடியிருக்கிறது...மூன்றாம் பாகத்தில் கதையை நன்றாக நகர்த்தியிருப்பார் சாண்டில்யன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மொக்க பாகத்துக்கு எக்ஸ்ட்ரா பிட்டு போட நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் ஓய் தெரியும். :)
      மூன்றாம் பாகத்தில் கடல் போர் குறித்து நிறைய தகவல்கள் உண்டு என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

      Delete
  3. தலைப்புக்கள் வைப்பதில் இப்போதெல்லாம் நீங்கள் ஹைட்பார்க்கில் குப்பை போட்ட கோமானையே வென்று வருகிறீர்கள் இதற்கான காரணங்கள் என்ன என்று விளக்குவீர்களா.

    ReplyDelete
    Replies
    1. ஹைடு பார்க்கா? சைடு பார்க்கா? இல்ல ஜுராசிக் பார்க்கான்னு எல்லாம் கிண்டல் செய்யும் கமெண்ட்டுகள் கட்டம் கட்டித் தூக்கப்படும் என்று அறிவித்துக் கொள்கிறோம்.

      Delete
    2. ஒரு பார்க்கில் என்ன என்ன செய்யலாம் என்பதை அறியும்போது அங்கு இலையுதிர்காலத்தை பார்த்துக் கொண்டிருந்த புல்லிற்கே புல்லரித்து போய்விடும் அல்லவா.....ஹூராசிக் பார்க் படலம் மினி லிஸ்டில் இல்லை.

      Delete
    3. ஹைடு பார்க் கோமகனையும் என்னையும் ஒப்பிடுவது மாபெரும் தவறு ஆமா.அவரோட 'கலா' ரசனை என்ன? நான் எங்க? சிவகாசி சொம்பு வாழ்க.

      Delete
    4. ஒரு தேசத்துக்கே பிச்சை போட்டவர்யா அவரு.. :P

      Delete
    5. ரசிகர்களை சொம்புகள் என அழைக்கும் நாசநெஞ்சங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை ஹாட் கேபிளில் எழுதுவீர்களா!

      Delete
  4. அட அதை நீங்கள் காப்பி அடிக்காமல் எழுதியது என நினைத்து கருத்திட இருந்தேன் நல்லவேளை.....

    ReplyDelete
  5. கடல்புறா மூன்று பாகங்களிற்கும் ஒரே அட்டைப்படத்தை வழங்கிய வானதி பதிப்பகத்தார் திறமையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அதில இருக்கிறது காஞ்சனாவா இல்ல மஞ்சள் அழகியான்னே தெரியாத அளவுக்கு வண்ணக் கலவை வேற. :)

      Delete
    2. மார்புகளின் அளவீடுகளை எடைதூக்கிப் பார்க்கையில் இது காஞ்சனா தேவியாகவே இருக்கவேண்டும் என நெஞ்சிற்குள் வெள்ளைப் புறா பாடுகிறது.

      Delete
    3. ஹாஹாஹா...
      செம்பருத்தி போன்ற இதழ்களை வைத்துப் பார்த்தால் எனக்கு வேறு மாதிரி அல்லவா தோன்றுகிறது? :)

      Delete
    4. இதழ்கள் நன்கு கனிந்த, கிளிகள் கவ்வி சுவைக்கும் பதத்தில் இருக்கும் தேன் ஊறிய கொவ்வைகளை பாதியாக பிரித்து வைத்தது போலல்லவா இருக்கிறது, இது காஞ்சனாதான்.

      Delete
  6. நான் கடல்புறா படித்ததால்தான் வைத்தியர் ஆனேன், கடல்புறா போலவே என் துறைசார் நூல்களும் தலையணை போல் இருக்கும் கடல்புறா படித்த வேகத்தில் அவற்றையும் படித்து முடித்தேன்...இன்று என்னால் பரலோகப்பதவி அடைந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் தலையணை அளவிற்கு வந்திருக்கிறது....கடல்புறா தந்த சிங்கமே நீர் வாழ்க....தொடரட்டும் உம் பணி.

    ReplyDelete
    Replies
    1. இன்று முதல் நீ அன்போடு "சிவகாசி சிங்கம்" என்று அன்போடும் காவாளித்தனத்தோடும் அழைக்கப்படுவாய்.
      பின் குறிப்பு: இது ஒரு ஆட்டைய போட்ட டைட்டில் என்பது ஊருக்கே தெரியும்.

      Delete
    2. ஊருக்கு தெரிந்தாலும் அது நமக்கு தெரியாதுபோல் இருப்பதுதான் நல்ல நடிகனின் நற்பண்பு...

      Delete
  7. கொலை பண்ணுங்க வேணாங்கலை...அதையும் பாகம் பாகமா பண்ணனுமா...? இது வரை கொலை மட்டுமே செய்த இலுமி மூன்றாம் பாகத்தில் எல்லோரையும் படுகொலை பண்ணப்போவது தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. கொலையும் ஒரு கலை. :P

      Delete
  8. இனி வரப்போகும் மூன்றாம் பாகத்தின் விமர்சனத்தையும் படித்து உயிரை விடாதவர்களுக்கு கரண்ட் கட்டே கிடையாது.

    இப்படிக்கு

    கடல் அலையோ கல் மலையோ...கேஸ் விலையோ பால் விலையோ பரங்கி மலையோ... யாராவது என்னை கைத்தாங்கலா கூட்டிட்டு போங்கையா...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா. முக்காடோ, வெறும் கூடோ, சுடுகாடோ...
      நேரா சொர்க்கம் தான். :P

      Delete
  9. By the way, its a tribute to chandilyan

    ReplyDelete
    Replies
    1. அட்டுக் காப்பி அடிச்சதுக்கு எல்லாமாய்யா இந்த பில்ட் அப்பு. :)

      Delete
  10. சாண்டில்யனை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன்...

    " இலுமி உன்னை மாதிரி எழுதுவான்...

    நீ இலுமி மாதிரி எழுத முடியுமா...? "

    ReplyDelete
    Replies
    1. யோவ், செத்தவனக் கேட்டு என்னையா பிரயோஜனம்? இத சொத்தைப் பசங்ககிட்ட கேளு. அதான் மச்சி, பிரபல பதிவர்கள். ;)

      Delete
  11. என்னயா நடக்குது இங்கே.... ஒரு நைட்டு வெளியே போயிட்டு வரதுக்குள்ள இத்தனை அக்கபோரா.... இருயா உங்களுக்கெல்லாம் டெக்ஸ் வில்லர் பதில் சொல்வாரு... இல்லை ராஜாவி பதில் சொல்வார்... அதுவும் இல்லேன்னா, ஸ்ட்ரெயிட்டா சிவகாசி பாடிகாட் முனீஸ்வரனே பதில் பதிவு போடுவாரு... இப்பவே வத்தி வைக்கிறேன்.. விட மாட்டேன்....

    மிஸ்டர் சொம்பு
    தலைவர், சிவகாசி சொம்பு கழகம்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கிட்ட இந்த முறையாவது அழுவாச்சி எல்லாம் பண்ணி, பேசினத அழிச்சு அசிங்கப்படாம சூதானமா நடந்துக்க சொல்லும். :)

      Delete
  12. இதோ என்னை வந்து தொட்டுவிட்டுப் போகும் கடல் அலை போலத் தான் நீங்களும்.
    //

    ஆலாக்கு எண்ணெய் எடுத்து ,அரக்க தலையில் தேச்சா.. சூடு தணியுமாம் மச்சி...

    ReplyDelete
    Replies
    1. சூடு ஓகே மச்சி. பித்தம் சரியாக என்ன மச்சி பண்ணனும்? பட்டாபட்டி போட்டுக்கிட்டு பீடிய வாயில வச்சுக்கிட்டு, குத்த வச்சு கூழாங்கல்ல எண்ணினா சரியாகலாம்னு ஒருத்தன் சொல்றான். ஆனா எனக்கென்னவோ நம்பிக்கை இல்ல. ;)

      Delete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…