Red Dragon- உள்ளே உறங்கும் மிருகம்….


Red Dragon cover
அந்திம மாலையில் தன் குடும்பத்தாரோடு குதூகலமாக இருந்த வில் கிரஹாமின் மகிழ்ச்சி, தன் முன்னாள் மேலதிகாரியைக் கண்டதும் மேற்கேயுள்ள சூரியனைப் போலவே சரியத் தொடங்கியது. முன்னாள் FBI தடயவியல் அதிகாரியான வில், சீரியல் கில்லர்கள் பலரை கண்டுபிடிப்பதில் மிகவும் உதவியாய் இருந்தவன். சீரியல் கில்லர்களின் மன ஓட்டத்தை அனுமானித்து அறிந்து கொண்டு, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலமாக அவர்களை இனம்காணும் வல்லமை அவனுக்கு உண்டு. தனது முன்னாள் மேலதிகாரி ஜாக் கிரஃபோர்டின் வருகைக்கான காரணம் அவனுக்கு தெரிந்தே இருந்தது.
சமீப காலத்தில் இரண்டு குடும்பங்களை அவர்களது வீட்டிலேயே வைத்துக் கொன்ற ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடித்திட உதவி கேட்டே ஜாக் வந்திருக்கிறார் என்பது அவன் யூகித்ததே. முன்னர் ஒரு கொலையாளி ஏற்படுத்திய காயத்தின் காரணமாகவும், எப்போதும் மனநலம் பிறழ்ந்த கொலையாளிகளை வேட்டையாடித் திரிவதால் ஏற்பட்ட மன அழற்சியினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் வில் மறுபடியும் இன்னொரு கொலையாளியை தேடிச் செல்ல விருப்பப்படவில்லை. ஆனால் அடுத்த கொலை இன்னும் மூன்றே வாரத்தில் நடக்க இருப்பதை எடுத்துக் கூறும் ஜாக், அதற்குள் அந்தக் கொலையாளியை பிடிக்க வில்லின் உதவி அவசியம் தேவை என்று கூறுகிறார். முதலில் தயங்கினாலும் பின்னர் சம்மதிக்கிறார் வில்.
கொலையுற்ற குடும்பங்களின் வீடுகளைச் சென்று சோதிக்கும் வில்லுக்கு உதவிகரமான தடயங்கள் எதுவும் சிக்காது போகிறது. ஆனால் வீடெங்கும் சிதறிக் கிடக்கும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒரு வகையில் அவனது எண்ணவோட்டத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. ஒவ்வொரு அறையிலும் உடைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியைக் கொண்டு கொலையாளி உடல்ரீதியான குறையைக் கொண்டிருப்பவனாக இருக்கலாம் அல்லது தான் குறையுடையவன் என்று எண்ணுபவனாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறார் வில்.
அதிகமான தகவல்கள் இல்லாத காரணத்தாலும், சிறிதொரு நாட்களில் நடக்கவிருக்கும் கொலைகளை தடுக்கவேண்டிய அவசியத்தாலும், ஒரு கொலையாளியின் எண்ணவோட்டத்தை பற்றி மற்றொரு சீரியல் கில்லரின் பார்வையின் மூலம் அறிந்துகொள்ளவும், வில் தன்னால் கைது செய்யப்பட்டு மனநல காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹன்னிபல் லெக்டரை சந்திக்கிறார். ஆனால் ஹன்னிபலின் நோக்கமோ, க்ராஹமிற்கு உதவுவதல்ல. 
த்ரில்லர் நாவல்களில் வாசகர்களை திகில்படுத்தி கடைசிவரை அவர்களது கவனத்தை சிதறவிடாமல் இருக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அருமையான கதையுடன் கூடிய புத்திசாலித்தனமான கதைசொல்லல் மூலம் மெல்ல மெல்ல திகிலை கூட்டுதல். மற்றது வெறுமனே கோரக் காட்சிகளைக் கொண்டு திகிலைத் திணித்தல். ரெட் டிராகன் முதல் வகையை சேர்ந்தது. மேலும்,அற்புதமாக படைக்கப்பட்ட பாத்திரங்கள் இக்கதைக்கு மேலும் வலு சேர்க்கின்றன. குறிப்பாக, வில்லின் மனப் போராட்டமும், கொலைகாரனது ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியும் அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
வழக்கமான திகில் கதைகளைப் போல இதில் கொலைகாரன் யார் என்பதை கடைசி வரை மர்மமாய் வைத்துவிட்டு பின்னர் தெரியவைப்பது போல அல்லாமல், முதலிலேயே தெரியப்படுத்தினாலும், அதுவும் கதைக்கு உதவவே செய்கிறது. கொலைகாரனது எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளவும், அவனது நம்பிக்கைகளையும் விகாரங்களையும் உணர்த்து கொள்ளவும் அது மிகவும் உதவியாக அமைந்து கதைக்கு மேலும் ஒரு ஆழமான களத்தைக் கொடுக்கிறது. கொலைகளைப் பற்றிய விவரணையால் கொலைகாரனது மன விகாரத்தை முதலில் தெளிவாக மனதில் பதியவைத்துவிட்டு, பின்னர் அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட சம்பவங்களை விளக்கி, அவன் மீதே பரிதாபமும் ஏற்படுத்த வைக்கும் திறமை ஹாரிஸின் எழுத்திற்கு இருக்கிறது. அருமையான கதை, அற்புதமான கதாபாத்திர உருவாக்கம், திகில் குறையாத கதை சொல்லல் என ரெட் டிராகன், திகில் கதை விரும்பிகள் கட்டாயம் படிக்க வேண்டியதொரு நாவல்.

Comments

  1. Saw the movies "Red Dragon" and "Manhunter" based on the novel. Neither of it came close to the novel though Manhunter was a tad better than Red dragon.

    ReplyDelete
  2. மாதங்கள் பல கடந்த போதிலும் காலம் கடக்கவில்லை என உணர்த்த வந்த பதிவர் இலுமி வாழ்க....

    ReplyDelete
  3. ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகளில் இப்பதிவை இட்டு தன் ஜனநாயகக் கடமையை சீராக ஆற்றியிருக்கும் பதிவர் இலுமி வாழ்க...

    ReplyDelete
  4. காலம் போன காலத்திலும் வந்து கமெண்ட் போடும் காதலர் வாழ்க.. ;)

    ReplyDelete
  5. உள்ளே உறங்கும் மிருகம்... தலைப்பே கொல்லுதே....

    ReplyDelete
  6. அந்திம மாலை.... முதல் சொற்களிலேயே சாகடித்து விட்டீர்கள்...

    ReplyDelete
  7. தமிழ் பதிவு அருமை, சூப்பர், சான்ஸே இல்லை, எப்படி இப்படி எழுதுகிறீர்கள், அடிக்கடி இப்படியே தொடர்ந்து இடைவிடாது இடைவெளி விழாது எழுதுங்கள்...

    ReplyDelete
  8. ரெட் ட்ராகன் நல்ல கதை. ஹாரிஸின் நாவல்களில் ஏதேனும் ஒன்றை நான் திரும்ப படிக்க முனைந்தால் ரெட் ட்ராகன் மட்டுமே என் தெரிவாக இருக்கும்.

    ReplyDelete
  9. யவன ராணி... நல்ல வாசிப்பா....முடியலயே...

    ReplyDelete
  10. //தலைப்பே கொல்லுதே....//

    தலைப்பு மட்டுமா கொல்லும்? :)

    ReplyDelete
  11. தலைப்பில உசிரு போனப்புறமா படிக்கிற உசிருக கதிய என்னான்னு சொல்லுறது.. அய்யகோ எங்கள காப்பாத்த யாருமே இல்லியா... அய்யா வேலாயுதம் நீ எங்கின அய்யா இருக்க...

    ReplyDelete
  12. Silence of the lambs ஐ விட ரெட் டிராகன் நல்ல நாவல் என்றாலும் படத்தின் வெற்றி முன்னதை மிகப் பிரபலமாக்கி விட்டது என்பது நீர் அறிந்தது தானே.

    ReplyDelete
  13. //யவன ராணி... நல்ல வாசிப்பா....முடியலயே...//

    அங்கனயே தான் கடல் புறாவும் இருக்குது. கவனியும். :)

    ReplyDelete
  14. //அய்யா வேலாயுதம் நீ எங்கின அய்யா இருக்க...//

    ரிலீஸ் ஆவறதுக்கு முந்தியே நாயடி வாங்கிகிட்டு. :)

    ReplyDelete
  15. எங்கிள யாராவது அடிச்சா வேலாயுதம் காப்பாத்துவார் ஆனா இப்ப வேலாயுதத்திற்கே அடிக்கிறாங்களே... மங்காத்தா கண்ண தொறம்மா...

    ReplyDelete
  16. //மங்காத்தா கண்ண தொறம்மா...//

    நீர் அதுவரை சேத்தன் பகத் எழுதின நாவல் revolution 2020 படியும். ;)

    ReplyDelete
  17. அதப் படிச்சா அப்புறமா கண்ண தொறக்கவே முடியாதே...

    ReplyDelete
  18. @Illuminaatti ///திகில் கதை விரும்பிகள் கட்டாயம் படிக்க வேண்டியதொரு நாவல்.///

    தோடா..அப்பாடக்கர் சொல்லிட்டாரு...! எல்லாரும் போய் படிங்க..! :)

    ReplyDelete
  19. ஆமா, முக்காடு போட்ட மூதறிஞர் சொல்லிட்டாரு. போடா டேய். :)

    ReplyDelete
  20. enakku oru doupt silence of the lamb mattrum red drgon.irandu orey kadhaia allathu.avai irandile ull vithiasagalai sollung nanba.

    ReplyDelete
  21. Silence of the lambs, Red dragon rendume vera vera kathai. Aana athe psycho killer theme. Vithiyasam na nigalvugalum, paathirangalum than vithiyasam.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........