Body of Lies - நம்பிக்கையின் மறுபக்கம்...


body-of-lies
Ridley Scott இயக்கத்தில் 2008 இல் வெளிவந்த இந்தப்படம், ஒரு மதத் தீவிரவாதியினை பிடிக்க முயலும் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பற்றியது.
ரோஜெர் பெர்ரிஸ்(Roger Ferris) ஈராக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடும் ஒரு CIA அதிகாரி.அவனுடைய முக்கிய குறி, அல் சலீம்(Al-Saleem) எனப்படும் ஒரு மதத் தீவிரவாதி. ஒரு நாள், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அல் சலீம் பற்றிய ரகசியங்களை பகிரத் தயாராயிருக்கும் நசிர் என்னும் தீவிரவாதியை சந்திக்கும் ரோஜெர் அவன் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஜோர்டானில் இருக்கும் ஒரு ரகசியமான தீவிரவாத முகாமை கண்டுபிடிக்கிறான்.
Body-of-Lies_Mark-Strong_ ஜோர்டான் உளவுத்துறை தலைவர் ஹானி சலாமை (Hani Salaam) சந்திக்கும் ரோஜெர், அவனது உதவியோடு ஜோர்டானில் இருக்கும் சலீமின் ரகசிய முகாமை கண்காணிக்கவும், பின்னர் சலீமை பிடிக்கவும் திட்டமிடுகிறான். ஆனால், ரோஜெரின் மேலதிகாரி எட் ஹாஃப்மனுக்கு அது போதுமானதாயில்லை. ரோஜெருக்கு தெரியாமலேயே அவனுடன் பணிபுரியும் வேறொரு அதிகாரியின் துணைகொண்டு வேறொரு யுக்தியை கையாண்டு அம்முகாமுக்குள் ஒரு உளவாளியை அனுப்ப திட்டமிடுகிறான். ஆனால்,திட்டம் தோல்வியடைவது மட்டுமில்லாது தீவிரவாதிகளுக்கு தாங்கள் கண்காணிக்கப்படுவது தெரிந்துபோகக் கூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதனை ஹானியின் உதவியோடு தடுக்கும் ரோஜெர், இம்மாதிரியான காரியங்களை தனக்குத் தெரியாமல் எட் செய்வது குறித்து அவனுடன் சண்டை போடுகிறான். ஒரு நாள் மருத்துவமனை செல்லும் ரோஜெர் அங்கே ஆயிஷா (Golshifteh Farahani) என்னும் நர்சை கண்டு அவள் மேல் காதல் கொள்கிறான்.
இதற்கிடையே, கண்காணிப்பின் போது எடுக்கப் படும் புகைப்படங்களின் மூலம் தீவிரவாத முகாமில் இருக்கும் ஒருவனை(கராமி) அடையாளம் காணும் ஹானி, அவனை தனக்காக உளவு பார்க்க சம்மதிக்க Body Of Liesவைக்கிறான். இதனை அறிந்து கொள்ளும் எட், கராமியின் மூலம் அடுத்த வெடிகுண்டு தாக்குதல் எங்கே இருக்குமென அறிந்துகொள்ள ஆசைப்படுகிறான். இது கராமியின் உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று மறுக்கும் ஹானி, கராமியை ஏதேனும் பெரிய விஷயத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி மறுத்துவிடுகிறான்.
ஆனால் எட் இதை ஏற்காமல், (மறுபடியும்) ரோஜெருக்கு தெரியாமல், கராமியை கடத்த ஏற்பாடு செய்கிறான். திட்டம் மறுபடியும் தோற்கிறது. கராமி மற்ற தீவிரவாதிகளை உசார்படுத்த அவர்கள் தப்பிச் செல்லுகிறார்கள். எட்டின் இந்த முட்டாள்தனமான காரியத்தால் சலாமியை பிடிக்க முடியாது போனது குறித்து கோபப்படும் ஹானி, எட்டுடன் சேர்ந்து சதி செய்ததாக கூறி ரோஜெரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுகிறான்.
இதன் பிறகு,வாஷிங்டன் வந்து சேரும் ரோஜெர், சலாமியை பிடிக்க எட்டுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுக்கிறான். திட்டம் வெற்றி பெற்றதா, சலாமியை பிடிக்க முடிந்ததா,ஹானி ஒத்துழைத்தானா, கராமி என்னவானான் என்பது குறித்து பிந்தைய படம் பேசுகிறது.
படம் இதே பெயரைக் கொண்ட ஒரு நாவலின் படமாக்கமே என்றாலும், நாவலில் முக்கிய பங்கு வகித்த ரொமான்ஸ் இதில் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதை மறுக்கவும் முடியாது. ரோஜெர்,ஆயிஷாவிற்கு இடையில் மலரும் காதல் Golshifte farahani (7)திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு இஸ்லாமியப் பெண்ணை ரோஜெர் காதலிப்பது கிளைமாக்ஸிற்காக திணிக்கப்பட்டதாக தெரிவது ஆச்சர்யமில்லையே. கவனிக்க: நாவலில் முக்கோணக் காதல் எனவும், மூவருமே அமெரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆயிஷாவாக நடித்த Golshifteh Farahani நல்ல நடிகையே என்றாலும், அவருக்கு ஒதுக்கப்படும் நேரம் மிகக்குறைவே. 
இப்படத்தில் நல்ல கதையும்,திரைக்கதையும் இருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது அருமையான நடிகர்கள் தான். மேலும், இப்படம் ஒரு கேரக்டர் ஸ்டடி போல அமைந்திருப்பது நடிப்புத் திறமையைக் காட்டும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. ரோஜெர், எட், ஹானி மூவருமே உளவு வேலை பார்பவர்கள் தான் என்றாலும் எந்த வகையிலும் ஒத்த குணமுடையவர்கள் அல்ல.
ரோஜெர்- The man who finds himself always side-stepped by his superior Ed. கஷ்டப்பட்டு திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வெற்றியடையப் போகும்போதெல்லாம் எட் போட்ட வேறேதோ ஒரு திட்டம் தன்னுடையதற்கு முட்டுக்கட்டையாவதைக் கண்டு கோபப்படும்,சண்டையிடும், அதற்க்கு மேல் ஏதும் செய்ய முடியாமல் அதை தாங்கிக்கொள்ளும் ஒரு டிபிகல் உளவதிகாரி. களத்தில் கஷ்டப்பட்டு உழைத்து, அதை எட்டின் அவசரக் குடுக்கைத்தனம் கெடுக்கும் போது கோபப்படுவதாகட்டும், பின்னர் ஹானியிடம் எட்டின் திட்டத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடுத்துக்கூறி அவனது நம்பிக்கையை திரும்பப்பெற முயலும்போதாகட்டும், ஆயிஷாவை காதலிக்கும்போதாகட்டும் லியோனார்டோ டி காப்ரியோ திறமையான நடிப்பை வழங்குகிறார்.crowe-dicaprio-745583
அவசரக்குடுக்கை மேலதிகாரியாக ரஸ்ஸல் க்ரோவ். டி காப்ரியோ அளவிற்கு திரையில் வரவில்லையானாலும், டிகாப்ரியோவின் வெறுப்பை மட்டுமல்லாது பார்வையாளனது வெறுப்பை சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்.எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி கதாப்பாத்திரத்தோடு பொருந்திப் போன நடிப்பு.
body-of-lies-7 Body of Lies
ஜோர்டான் உளவுத்துறை தலைவர் ஹானி சலாமாக மார்க் ஸ்ட்ராங். பெயருக்கேற்றார் போன்றே ஸ்ட்ராங்கான நடிப்பு. சிறிது நேரமே வந்தாலும், டிகாப்ரியோவின் நடிப்பையும் தூக்கி சாப்பிடுகிறார். ஒரு உளவுத்துறை தலைவருக்குண்டான கம்பீரம், திறமை, குள்ளநரித்தனம், திமிர் என் அனைத்தையும் வெகு எளிதில் கண்முன் நிறுத்துகிறார். இவரது ஆரம்ப காட்சியில் ஆரம்பிக்கும் கம்பீரமான நடிப்பு கடைசி காட்சியின் கேலி வரையிலும் நிறைந்து நிற்கிறது. ரோஜெர் பொய் சொன்னான் என்ற கோபத்தில் உதவ மறுக்கும்போது, ரோஜெரை முதன் முதல் சந்திக்கும் போதும், தீவிரவாதி ஒருவனை கடத்தி அவனை கொல்லப்போவதாய் காட்டிக்கொண்டு, தனது சாமர்தியத்தாலும், குள்ளநரித்தனத்தாலும் அவனை மாற்றி தன்பக்கம் திருப்பும்போதும் இவரது பண்பட்ட நடிப்பு ஜொலிக்கிறது.Screen presence எளிதாக வந்துவிடுவதில்லை.ஆனால்,இவருக்கு வருகிறது. மேலும், சில ஷார்ப்பான வசனங்கள் இந்த கதாப்பாத்திரத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறது.
Roger: I thought you didn’t believe in toture Hani Pasha.
Hani: This is Punishment, my dear. It’s a very different thing.

Hani to Ed: You Americans, you are incapable of secrecy because you are a democracy. Real intelligence operations, they remain secret forever.

இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால், அது உளவுத்தொழிலின் அசிங்கங்களையும், துரோகங்களையும் வெளிப்படையாகச் சொன்னதேயாகும். மூன்று முக்கிய உளவுத்துறை நிபுணர்கள் இணைந்து ஒரு பணியில் ஈடுபடும்போதும் கூட பொய்யும், நம்பிக்கைதுரோகமும், அவசரக் குடுக்கைத்தனமும், தன் லாபத்திற்காக அடுத்தவரை உபயோகிப்பதுமே மிஞ்சுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் உளவுத் தொழிலின் மறுப்பக்கம் இருப்பது பொய்யும், சுயலாபமுமே!
Rating: 7.5/10.

Note: பல நாட்கள் கழித்து ஒரு போஸ்ட்,அதிலும் (மாதங்களுக்கு பிறகு) ஒரு சினிமா போஸ்ட். Well,It’s good to be back. :)

Comments

  1. ஹிஹி,இவ்ளோ நாள் லீவ் விட்ட மாதிரி இல்லாம,இனிமேல் தொல்லை வழக்கம் போல இருக்கும் என்று தெரிவித்துகொள்கிறேன். :)

    ReplyDelete
  2. ILLUMINATI said...

    ஹிஹி,இவ்ளோ நாள் லீவ் விட்ட மாதிரி இல்லாம,இனிமேல் தொல்லை வழக்கம் போல இருக்கும் என்று தெரிவித்துகொள்கிறேன். :)
    //

    ஓ.. ஒரு வேளை ஜென்ம சனியோ?.. ஹி..ஹி

    ReplyDelete
  3. //ஓ.. ஒரு வேளை ஜென்ம சனியோ?.. ஹி..ஹி//

    நீ சொன்னா கரெக்ட் தான் மச்சி.. :P
    ஏலேய்,யாருல அது பட்டுவ நக்கல் பண்றது?பிச்சுடுவேன்.

    ReplyDelete
  4. Nice movie..... good review... and nice quotes u have mentioned.....
    keep rocking with more pics like this..

    ReplyDelete
  5. நண்பரே,

    மார்க் ஸ்ட்ராங் நல்ல நடிகர், சிறிய வேடமென்றாலும் சிறப்பிப்பார். சமீப காலமாக அவர் வேடங்கள் சிறப்பானவையாக இல்லை, இந்நிலைமை மாறும் என்றே எண்ணுகிறேன். வந்து பதிவையும் போட்டு விட்டு தொல்லை தொடரும் என்று பஞ்ச் வேறா. நாங்கள் சுறாவை பார்த்து நல்ல படம் என்று மகிழ்ந்தவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

    ஊதுபத்திக் குப்ப காலின் ஃபர்த் ரசிகர் மன்றம். செயலாளர், காலின் காத்தவராயன்

    ReplyDelete
  6. இன்றுதான் இப்படத்தை பார்க்கும்படி என் நண்பர் ஆனந்தன் வற்ப்புறுத்தினார்.வந்து பார்த்தால் உங்கள் பதிவு.உடனே பார்த்து விடுகிறேன்... சாமி....

    ReplyDelete
  7. உங்களை போலவே பலரும் நல்ல படம் என சொன்னதால் பாக்க நினைத்து, மூன்று தடவை முயன்று முதல் இருபது நிமிடங்களிலேயே போரடித்து விட்டு விட்டேன்.

    போக போக நன்றாக இருக்கும் போலவே... பார்க்க வேண்டும்.

    The Next Three Days - மனைவிக்காக....

    ReplyDelete
  8. /* ஹிஹி,இவ்ளோ நாள் லீவ் விட்ட மாதிரி இல்லாம,இனிமேல் தொல்லை வழக்கம் போல இருக்கும் என்று தெரிவித்துகொள்கிறேன். :) */

    அந்த புரட்சி தீயை கொஞ்சம் எரிய விடுங்க பாஸ்

    ReplyDelete
  9. ரொம்ப நாளா கம்ப்யூடர்லேயே வெச்சுகிட்டு , பாக்காமலே பாக்கனும்னு இருக்கேன்..பாப்போம்.. எப்ப பாப்பமுன்னு..

    அய்யயோ.. டங்கு இப்படி ரோல் ஆவுதே...

    ReplyDelete
  10. @taaru:

    ரைட் மச்சி...

    @கனவுகளின் காதலன்:

    //சமீப காலமாக அவர் வேடங்கள் சிறப்பானவையாக இல்லை//

    உண்மை தான். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்தில் கூட சொல்லிக் கொள்ளும்படியாக பெரிதான கதாப்பாத்திரம் இல்லை.மொக்கை வில்லன் கேரக்டர் தான்.

    @உலக சினிமா ரசிகன்:

    விதி வலியது நண்பரே... :)

    @லிமட்:

    முதல் இருபது நிமிடம் நாயகன் உளவறிந்து செல்வதை காட்ட எண்ணி வைத்திருப்பார்கள் போல. ஆனாலும்,அது அப்படி ஒரு மோசமில்லை. அது கதாநாயகனின் கேரக்டரை மேலும் புரிந்து கொள்ள உதவியது என்றே எனது எண்ணம். படம் பாருங்க.போக போக படம் வேகமெடுக்கும்.
    புரட்சி தீ தான? சீக்கிரம் (ஹிஹி) போட்டுடுவோம். :)

    @சாமு...

    படம் பாரு மச்சி.நல்ல படம்,உனக்கு பிடிக்கும்.

    //அய்யயோ.. டங்கு இப்படி ரோல் ஆவுதே...//

    அங்க போயி என்னய்யா செஞ்ச? ;)

    ReplyDelete
  11. கண்டிப்பா இந்த வாரத்துக்குள்ள பாத்துடுவேன்.. தான்க்சுபா..

    ReplyDelete
  12. வொய்... மோர் பதிவு??? யு வான் அஸ் டெட்?

    நோ மோர் பதிவு. போய் படிக்கிற வேலையை பார்த்து எங்க ஊருக்கு வர்ற வழியை பாருங்க. :)

    ReplyDelete
  13. இந்தப் படம், எனக்கு ரொம்பப் புடிச்ச் ரிட்லி இஸ்காட்டு படத்துல ஒண்ணு.. ஆனா இந்தக் கருத்தை, மேலே பின்னூடம் போட்டிருக்கும் திருவாளர் சுண்டெலி வன்மையாக மறுப்பார்ன்னு நினைக்கிறேண். ஏன்னா, இந்தப் படத்துக்கு விமர்சனம் போடும்போது அவரு இது மொக்கைன்னு சொல்லிருந்தாரு :-) . . எனிவே, சுடெலியோட ஊருக்கு எப்ப போகப்போறீங்க ? போயி, எதாவது பொண்ணு கிண்ணு செட் பண்ற வழியப்பாருங்கப்பு :-)

    ReplyDelete
  14. சுண்டெலி சார்,சுண்டெலி சார்...

    மோர் பதிவு மீன்ஸ் பதிவு ஒன்ஸ் இன் அ மன்த் ஆர் இயர். :)

    லீவெல்லாம் போட்டாச்சு.படிக்கவும் ஆரம்பிச்சாச்சு.அடுத்த வருஷம் அங்க தான். :)

    பி.கு: நீரு சொன்ன பின்ன தான் தோணுது,உம்ம கொன்னா என்ன?அப்படிக்கா யூ டர்ன் எடுத்துட்டு போய் என்னோட My love இல்ல XIII பதிவுகள படிங்கோ.சுனாமில தப்பிச்சவன் கூட (ஆலிவுட்டுல) இருப்பான்.ஆனா இதுல தப்பிக்க வாய்ப்பே இல்ல.கன்பர்ம் சங்கு தான்.வரமாட்டேன்னு சொல்லிப்புட்டு வந்து விளையாட்டு காட்டுற பீசுகள போட்டுத் தள்ள சிறந்த வழியும் இது தான். :)

    ReplyDelete
  15. @கருந்தேள்

    ஓஹோ,இதெல்லாம் பண்ணுச்சா இந்த சுண்டெலி பீசு? :)
    இன்னும் ஆறேழு மாசத்துல அங்கன போகுறப்ப இந்த பீச அங்க வச்சு கவனிச்சுக்கலாம்.

    //போயி, எதாவது பொண்ணு கிண்ணு செட் பண்ற வழியப்பாருங்கப்பு :-) //

    ராசா,நீரு என் செல்லம்யா.. :)

    ReplyDelete
  16. Good but waiting for Comics Post on Lucky Luke ........

    ReplyDelete
  17. வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

    ReplyDelete
  18. நாள் பூரா சாப்ட்வேர் கம்பநீல குசு விடு வேண்டியது.நைட்டானா ஹால்ப் உட்டுகிட்டு ஆளாளுக்கு உலக சினிமான்னு சாகடிக்கிரீங்கலேடா!பொட்டசிங்க அதுக்கு மேல சாப்ட்வேர் கம்பநீல குசுவுட்டுட்டு நைட்டு வே பே கூட "ஜிங் சக்க" பண்ணி ப்ரோமோஷன் வாங்கிடுல்றாளுவ.பொட்டசிஎல்லாம் வூட்ல கெடக்கணும்.

    ReplyDelete
  19. அனானி:
    அப்ப ஏன் வெளிய வந்த? போய் வீட்ல கிட போ. ;)

    ReplyDelete
  20. // நாவலில் முக்கிய பங்கு வகித்த ரொமான்ஸ் இதில் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதை மறுக்கவும் முடியாது. //

    அடடா அப்ப இதுக்காக படத்த பாக்க முடியாது போல இருக்கே ;-)
    .

    ReplyDelete
  21. // ஹிஹி,இவ்ளோ நாள் லீவ் விட்ட மாதிரி இல்லாம,இனிமேல் தொல்லை வழக்கம் போல இருக்கும் என்று தெரிவித்துகொள்கிறேன். :) //

    இருக்கற மாதிரி தெரியலியே ;-)
    .

    ReplyDelete
  22. // நாங்கள் சுறாவை பார்த்து நல்ல படம் என்று மகிழ்ந்தவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

    ஊதுபத்திக் குப்ப காலின் ஃபர்த் ரசிகர் மன்றம். செயலாளர், காலின் காத்தவராயன் //

    அட்ரா சக்க
    அட்ரா சக்க
    அட்ரா......... சக்க .....!
    .

    ReplyDelete
  23. // அந்த புரட்சி தீயை கொஞ்சம் எரிய விடுங்க பாஸ்//

    Me also repeettu....
    .

    ReplyDelete
  24. //இருக்கற மாதிரி தெரியலியே ;-)//

    கொஞ்ச நேரம் இருமய்யா. ;)

    ReplyDelete
  25. அப்பாடா மி த 25 வது :))
    .

    ReplyDelete
  26. // //போயி, எதாவது பொண்ணு கிண்ணு செட் பண்ற வழியப்பாருங்கப்பு :-) //

    ராசா,நீரு என் செல்லம்யா.. :) //

    பாஸ் பாஸ் போறப்ப நம்மளையும் மறக்காம கூப்புடுங்க பாஸு :))
    .

    ReplyDelete
  27. //பாஸ் பாஸ் போறப்ப நம்மளையும் மறக்காம கூப்புடுங்க பாஸு :)) //

    ஏன் மாமா,உனக்கு எதுனா நல்ல பிகர தெரியும்? ;)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........