Pet sematary - புதை நிலம்….


pet_sematary_book_cover
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் திருப்பங்கள் எத்தகைய பாதைகளில் நம்மை கொண்டு சேர்க்கும் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒன்று.சிகாகோ பெருநகரத்தில் இருந்து அமைதியையும்,இயற்கையின் அரவணைப்பையும் வேண்டி சிறு நகரமான லுட்லோவிற்கு வந்து குடியேறும் டாக்டர் லூயிஸ் க்ரீட், தந்தைப் பாசம் அறியாத தனக்கு எப்படி தந்தையை போன்ற ஒருவரின் (ஜட் கிரண்டெல் ) பாச அரவணைப்பு கிடைக்கும் என்று எதிர்பாதிருக்கவில்லையோ,அதைப்போலவே நடக்கப் போகும் விபரீதங்களையும் அறிந்திருக்கவில்லை.

லூயிஸின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருக்கும் ஜட், ‘தூண்டபட்டோ, தூண்டப்படாமலோ’ அவனுக்கு நிகழவிருக்கும் விபரீதங்களுக்கும் காரணமாய் அமைகிறார்.ஒரு நாள்,லூயிஸ் மற்றும் அவனது குடும்பத்தை அவர்களது வீட்டின் அருகே உள்ள மலையொன்றுக்கு அழைத்துச் செல்லும் ஜட்,அங்கே சிறுவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை புதைக்கும் புதை நிலமொன்றை காட்டுகிறார்.பல தலைமுறைகளாக அந்த சிறுநகரத்தின் குழந்தைகள் தங்கள் பாசமிகுந்த செல்லப் பிராணிகளை புதைக்க உபயோகப்படுத்தும் அந்த நிலம்,வெறும் சடலங்களை மட்டுமில்லாது வேறு சில மர்மமான விசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஜட்டின் இந்த செய்கை லூயிஸின் மனைவி ரேச்செலுக்கு ஆத்திரமூட்டுகிறது.தனது சிறு வயதில் நிகழ்ந்த ஒரு வேதனையான,திகில் தரும் சம்பவத்தின் காரணமாக மரணத்தையும் அது சம்பந்தப்பட்ட எதையும் வெறுக்கும், பயப்படும் குணம் கொண்ட அவளுக்கு இது பயத்தையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் இல்லை தான்.

ஆனாலும்,இந்த சிறு சம்பவம் பின்னாட்களின் சந்தோசத்திலும்,அமைதியிலும், ஜட் தம்பதியரின் பாச அரவணைப்பிலும் மறக்கப்பட்டே விடுகிறது. இது இவ்வாறு இருக்க,ஒரு நாள் லூயிஸின் மகள் பாசத்தோடு வளர்க்கும் பூனை இறந்து போகிறது.அந்த பூனையினை உயிரைப் போல நேசிக்கும் தனது மகள்,இந்த செய்தியை கேட்டால்,அது அவளை எந்த முறையில் பாதிக்குமோ என்று எண்ணி வருந்தும் லூயிசை ஜட் அழைத்து சென்று அந்த பூனையை பெட் செமடரிக்கு சற்றே அப்பால் இருக்கும் ஒரு நிலத்தில் புதைக்க வைக்கிறார்.

அடுத்த நாள், எதுவுமே நடவாதது போல, பூனை திரும்பி வருகிறது.ஆனால், அது தனது முந்தைய குணங்களில் எதையும் கொண்டிருக்கவில்லை. அதன் மீது வீசும் துர்வாசனையோ, அதனுடைய கண்களில் தெரியும் ஏதோவொரு சொல்ல முடியாத ஒளியோ அல்லது அதன் நடவடிக்கைகளில் தெரியும் மாற்றமோ லூயிஸிற்கு அது ஏதோ ஒரு வகையில் மரணத்தையே நினைவுபடுத்துகிறது.மீண்டு வந்திருந்தாலும், அப்பூனை ஒரு நடமாடும் பிணமே என்று உணர்ந்து கொள்கிறான் லூயிஸ். தான் செய்த தவறை உணரும் அவன்,அந்த பூனையை கொல்லவும் துணிகிறான்.ஆனால்,தனது தவறின் அடையாளமாக அதனை உயிருடனே விட்டு வைப்பது என்று முடிவெடுக்கிறான் லூயிஸ்.

சிறிது காலத்தில், தனது குடும்பத்தையே உலுக்கும் ஒரு சம்பவத்தின் மூலம்,அதே தவறை திரும்ப செய்யும் கட்டாயத்திற்கு உந்தப்படுகிறான் லூயிஸ்.அடுத்து நடப்பது என்ன என்பதை திகிலோடு சொல்லி இருக்கிறார் ஸ்டீபன் கிங்.

திகில் கதையானாலும் இதில் கோலோச்சுவது தந்தைப் பாசமும்,இழப்பின் வலியுமே!முக்கால் பாகத்திற்கு ஒரு சஸ்பென்ஸ் கதை போன்றே செல்லும் இக்கதை,பின்பகுதியில் திகிலை அள்ளித் தருகிறது. முன்பகுதியில் நிகழும் psychological study, பின்பாதியின் திகிலை வளர்க்க உதவவே செய்கிறது.

“The mistake is being not able to forget.Not uncommon…”
தனக்கு உயிரான ஒன்றை இழக்கும் மனிதன்,அதனை திரும்பப் பெற வாய்ப்பு கிடைக்கப் பெருவானாயின்,அதற்காக எப்பேர்பட்ட செயலிலும் இறங்கத் துணிவான்.இழப்பு ஏற்படுத்தும் வலி அத்தகையது.ஆனால்,அவன் நினைவு கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது.

“Sometimes dead is better…”
இக்கதை கிங்கின் பெஸ்ட் கதைகளில் ஒன்று.அதற்கு பல காரணங்கள் உண்டு.அருமையான எழுத்து, psychological study, இழப்பின் வலியை எடுத்துரைக்கும் பாங்கு, கடைசி சில பக்கங்களின் திகில்,அதனை நோக்கி நகர்த்தி செல்லும் மெதுவான சஸ்பென்ஸ் கலந்த கதையோட்டம் என்று பல இருந்தாலும், இழப்பு மனிதனை என்னவெல்லாம் செய்யத் தூண்டும் என்று அசர வைக்குமாறு எடுத்துரைப்பதே முக்கிய காரணமாய் அமைகிறது.இருந்தாலும் ,அதையும் மிஞ்சுகிறது இக்கதையின் கிளைமாக்ஸ்.இக்கதைக்கு இதை விட சிறந்த முடிவு இருக்கவே முடியாது.கடைசி பக்கங்களின் திகில் அந்த கடைசி வரிகளில் மீண்டு வருவது தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம்.


Pet Sematary - பிராணிகளை புதைப்பதால் மட்டுமல்லாது, தன்னை கடந்து செல்லும் மனிதர்களின் சந்தோசத்தையும்,வாழ்கையையும் விழுங்குவதால் புதை நிலமே!

Comments

  1. அச்சச்சோ தலைப்பே பதிவை பற்றி பத்த வைக்கிறதே :)

    ReplyDelete
  2. நண்பரே,

    கிங்கின் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது. நீங்கள் கூறியிருப்பதுபோல் கடைசி பக்கம் அருமையானதே. இன்று அவர் இவ்வாறாக எழுதுவதை புதைத்துவிட்டார் என்பது கவலைக்குரியது. சிறப்பான ஆனால் சுருக்கமான பதிவு.

    ReplyDelete
  3. கிங்கின் பழைய கதைகளைப் போல பிந்தைய கதைகள் இல்லையென்பது என்பது கவலைக்குரிய உண்மை. அழுத்தம் குறைந்து பக்கங்கள் அதிகரித்தது முக்கிய காரணம்.

    ReplyDelete
  4. இலுமி,
    கதையை முழுவதுமாக கூறியிருந்தால் சுவராசியமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  5. ஆமாம் இலுமி , கதாநாயகர் என்ன தவறு செய்தார் எனக்கு புரியவில்லை

    ReplyDelete
  6. அட,நாவல் படிச்சு பாருங்க தல. :)

    ReplyDelete
  7. இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்குது. முதல் பாகத்தின் வெற்றியால இரண்டாம் பாகமும் எடுத்திருந்தாங்க. திரைப்பட அளவுல முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா முதல் பாகத்தின் திகில் ரெண்டாம் பாகத்தில் இல்லை.

    ReplyDelete
  8. இருங்க படிச்சிட்டு வர்றேன்..

    ReplyDelete
  9. நண்பர் சென்ஷி,

    படம் வந்தது உண்மை தான்.ஆனால்,ஒரு புத்தகம் தரும் உணர்வை ஒரு படம் தராது என்பது எனது கருத்து.முடிந்தால்,புத்தகத்தை படித்து பாருங்கள்.

    ReplyDelete
  10. யோவ் .....ரோஸு உனக்கு மட்டும் இந்த மாதிரி புக் எல்லாம் எங்க இருந்து கிடைக்குது ???

    ReplyDelete
  11. படித்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன்..
    :-)

    ReplyDelete
  12. சாரி பா... கதையைப் படித்து விட்டு வந்து விமர்சனம் படிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன்.. நான் கொஞ்சம் மக்குப் பையன்..

    ReplyDelete
  13. welcome back நண்பா .... இப்பொழுதுதான் நீங்கள் இதற்க்கு முன் எழுதிய காமிக்ஸ்களையே படிக்க ஆரம்பித்துள்ளேன் .. இதையும் கூடிய விரைவில் படித்து விடுகிறேன் ...

    ReplyDelete
  14. இது இங்கிலீஷ் நாவலா? இதுவரை இங்கிலீஷில் நாவல் படிக்க முயன்றதில்லை ... படிச்சிதான் பாப்போமே.. உங்கள் விமர்சனம் அருமை

    ReplyDelete
  15. HBO வந்த புதிதில், இந்தப் படத்தைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். படத்தையும் பார்த்ததில்லை; நாவலையும் படித்ததில்லை. எதையாவது ஒன்றைச் செய்யப் பார்க்கிறேன் :-)

    ReplyDelete
  16. நண்பர் ராஜா,படித்துப் பாருங்கள்.அருமையான புத்தகம் இது.

    தேளு, புக் படிக்கிறது பெஸ்ட். :)

    @மங்குனி

    அது ஒண்ணுமில்லையா 'வெளி'..
    போற போக்குல உருவுறது தான். ;)

    @பட்டு

    எத்த மச்சி? கிரீன் மைல் புக்கயா? :)

    ReplyDelete
  17. // தனக்கு உயிரான ஒன்றை இழக்கும் மனிதன்,அதனை திரும்பப் பெற வாய்ப்பு கிடைக்கப் பெருவானாயின்,அதற்காக எப்பேர்பட்ட செயலிலும் இறங்கத் துணிவான்.இழப்பு ஏற்படுத்தும் வலி அத்தகையது. //

    மிக சரியாக சொன்னீர்கள் :))
    .

    ReplyDelete
  18. // Pet Sematary - பிராணிகளை புதைப்பதால் மட்டுமல்லாது, தன்னை கடந்து செல்லும் மனிதர்களின் சந்தோசத்தையும்,வாழ்கையையும் விழுங்குவதால் புதை நிலமே! //

    வாவ் சூப்பர் :))
    .

    ReplyDelete
  19. //மிக சரியாக சொன்னீர்கள்//

    சிபி அவர்களே,
    கதையே அது தான். :)
    இழப்பு,அது ஏற்படுத்தும் வலி,மனிதன் செல்லத் துணியும் தூரம் இது தான் கதையே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........