My Love (2007) - காதல் படுத்தும் பாடு…


2007 இல் வெளிவந்த கொரியன் படமான இந்த My Love, நான்கு காதல்களையும் ,ஒரு destiny day யையும் பற்றியது.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.03.41_[2010.08.22_18.34.25] கைகூடாத காதலினால் தவிக்கும் சே ஜின் (Se Jin),தனது வீட்டு ஜன்னலில் தனது காதலி ஜூ வோன் (Joo Won) பதித்து விட்டுச் சென்ற ஓவிய முத்திரையைக் கண்டவாறே,தனது மனதில் அவள் பதித்துவிட்டுச் சென்ற ஞாபக முத்திரைகளைக் கிளருகிறான்.அழித்துவிடக் கூடாது என்று உறுதிவாங்கப்பட்ட ஓவியத்தின் முன் நின்று,தன்னால் அழித்துவிடவே முடியாத அவளுடைய நினைவுகளை அசை போடுகிறான்.
“காதலும் காற்று போன்றதே.எந்நேரம் எப்படி வீசும் என்று இரண்டிற்கும் தெரியாது “ என்ற கவித்துவமான வசனத்தோடு ஆரம்பிக்கிறது இந்தப் படம்.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.03.03_[2010.08.22_18.13.12] இப்போது ஒரு ரயிலில் ஓட்டுனராகப் பணிபுரியும் ஜின்,சில வருடங்களுக்கு முன்,அதே ரயிலில் தனது காதலியை சந்தித்து இருக்கிறான்.அவர்கள் சந்தித்த ரயில்நிலயங்களை எல்லாம் கடந்து செல்லும் அவனால்,அவர்களது சந்திப்புகளைக் கடந்து செல்ல இயலவில்லை.
அயல்நாடு சென்றாலும்,தனது இதயத்தின் ஒரு பாதியை சியோல் நகரில் தொலைத்துச் சென்றவன் ஜின் மன் (Jin-man).அயல்நாடு செல்லும் போது,தனது காதலி கதறிக்கொண்டே “நீ செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால்,எனது நெஞ்சத்தின் இப்போதைய நிலை போல அல்லாது,பிறர் நெஞ்சங்களை இதப்படுத்து.” என்று சொன்னதற்காகவே “Free hugs” தந்து பிறரின் நெஞ்சங்களில் அன்பை விதைப்பவன் அவன்.
அவனுடைய காதலி,அவர்கள் பிரியும் போது,ஆறு வருடங்களில் நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணத்தின் போது,மறுபடி தாங்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற கூறிவிட்டுப் பிரிகிறாள்.அதனை எதிர்பார்த்து மறுபடியும் கொரியாவின் சியோல் நகரம் வரும் அவன் புதியதொரு பிரச்சனையை சந்திக்கிறான்.
தனது முந்தைய செல்பேசி எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டு,அது இப்போது வேறு ஒருவரின் பயன்பாட்டில் உள்ளது என அறியும் அவன்,தனது காதலிக்குத் தெரிந்த ஒரே எண்ணான அதை திரும்பப் பெற விழைகிறான்.
ஆனால் செல்பேசி நிறுவனத்தினர் கைவிரிக்கவே,அந்த எண்ணை தற்போது உபயோகித்துக் கொண்டு இருக்கும் சூ ஜியோங்(Soo Jyeong) ஐ சந்திக்கச் செல்கிறான்.
முழு சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒரு பெரிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து,அதனை தான் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் நடந்த நினைக்கும் அவளும்,காதலின் பிடியில் ஆழ்ந்து உழல்பவளே!
தன்னுடன் வேலை பார்க்கும் கிம் என்பவனைக் காதலிக்கிறாள் ஜியோங்.ஏற்கனவே My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_00.47.38_[2010.08.22_18.11.00]காதல் மணம் புரிந்து,மனைவியை இழந்து தவிக்கும் கிம் ,அவளை ஏற்கத் தயாராயில்லை.இறந்து போன தனது மனைவியின் நினைவில் ஆழ்ந்து,ஜுங்கின் காதலையும் இறக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடுகிறான் கிம்.ஜுங்கை ஏற்கத் துணியாத அவன்,அவளை தன்னிடம் இருந்து தூரப்படுத்தவே விழைகிறான்.
தூரத்தில் இருந்து அவதிப்படும் ஜுங்,தூரத்தில் இருந்து வந்திருக்கும் ஜின்னுக்கு உதவ விளைகிறாள்.
காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் சோ ஹியோன் (So Hyeon) ,உடன் பயிலும் ஜி வூ (Ji Woo) வை விரும்புகிறாள்.கொரியக் கலாச்சாரத்தில் கலந்து இருக்கும்,விழாக்களில் டிரிங்க்ஸ் சாப்பிடும் பழக்கம்,மது அருந்தத் தெரியாத ஹியோனிற்கு ஒரு தொல்லையாகவே இருந்து இருக்கிறது.இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு,இதனைக் கற்றுக்கொள்ளவும் ,வூவுடன் நெருக்கமாகவும் அவனை நெருங்கி My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.12.25_[2010.08.22_18.13.46]அவனது உதவியைக் கோருகிறாள் ஹியோன்.
நாளடைவில் அவனுடன் நெருக்கமாகும் அவள்,அவனுக்கு நல்லதொரு தோழியும் ஆகிறாள்.வூ தனது முன்னாள் காதலியின் நினைவில் தவிப்பதைக் காணும் அவள்,அருகில் இருந்தும் எட்ட இயலாத வானவில்லைப் போன்ற தன் காதலை எண்ணி மருகுகிறாள்.
இந்த நால்வரின் கதைகளையும்,அந்த முழு சூரிய கிரகண நாளை நோக்கிப் பயணிக்கும் இவர்களது காதல்களையும் பற்றிய அழகிய தொகுப்பே இந்தக் கதை.
எப்போதும் கனவு உலகில் வாழ்ந்த தனது முன்னாள் காதலியை உணரும் பொருட்டே தாங்கள் பயணம் செய்த ரயிலில் ஓட்டுனராக பணிபுரியும் சே ஜின்,அருகே இருந்தாலும் எட்டாத தூரத்தில் இருக்கும் காதலைக் கண்டு மருகும் ஜியோங் மற்றும் ஹியோன் ,தொலை தூரத்தில் இருந்து வந்து தொலைந்த காதலை தேட விளையும் ஜின் என இவர்களை எல்லாம் துன்புறுத்தும் காதல்,இவர்களை அந்த குறிப்பிட்ட நாளை நோக்கி தேடல்,சந்தோசம்,வருத்தம்,சுகநினைவு,எதிர்பார்ப்பு என்ற கலவையான உணர்ச்சிகளின் துணையோடு நடை போட வைக்கிறது.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_00.51.56_[2010.08.22_18.11.46] கிம் தன்னை மறுத்து வெளியே அனுப்பிய பின்,அவனது வீட்டில் இருந்து அழுதுகொண்டே வரும் ஜியோங், “வானம் இன்று அருமையாக இருக்கிறது” என்று கூறிக்கொண்டு,தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயல்வதும்,இயலாமல் போனதும் “I need a drink” என்று சொல்லி அடுத்த காரணத்தை தேடுவதும் நெஞ்சைப் பிழியும் காட்சி.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.21.56_[2010.08.22_18.14.26]
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.21.59_[2010.08.22_18.14.29]




பூட்டிய ரயிலினுள் தூங்கிக் கொண்டிருக்கும் ஜூ வை நோக்கி நகரும் கரும்புகையோடு சேர்ந்தே நகரும் மரணமும்,My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.44.36_[2010.08.22_18.15.20]
எப்போதும் கற்பனையில் மூழ்கி இருக்கும் காதலியைக் குறைசொல்லும் சே ஜின்,பின்னர் கற்பனையிலேயே அவளோடு வாழ்வதும்,

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.41.01_[2010.08.22_18.15.01] தன் காதலைத் தேடி ரணப்பட்ட மனதோடு சுற்றும் ஜின்,பிறர் நெஞ்சங்களை இதப்படுத்த முயல்வதும்,கடைசிக் காட்சியில் ,அந்தத் திருவிழாவில் காதலின் வலியோடு பிறருக்கு அன்பின் இதத்தை அளிப்பதும் நெஞ்சை நெகிழ்த்தும்.
காதல் என்பது என்ன?எதனால் இது வருகிறது?கோடானு கோடி மக்கள் இருக்கும் இந்த பூமியிலே குறிப்பாக ஒருவருக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் அளவுக்கு மாயம் செய்யும் அதன் மந்திரம் தான் என்ன?காதலர்களின் நெஞ்சில் மென்சோகத்தையும்,மெல்லிய சந்தோஷ ரேகயயையும் படரச் செய்யும் காதலின் கரங்கள் எப்பேர்ப்பட்டவை ?
ஜியோங்கிடம் பேசும் போது ஜின் சொல்லுவான், “வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவை நிலை மாறிக் கொண்டே இருக்கும்.ஆனால் துருவ நட்சத்திரம்(North star) அவ்வாறானது அல்ல.அது எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்கும்.
நாம் கொடுத்து வைத்தவர்கள்.நம் உயிருக்குயிரான நபர்கள் நமது நெஞ்சில் அந்த துருவனைப் போல நிலை கொண்டு இருக்கிறார்கள்” என்று.
அவன் சொல்ல வந்தது, ‘எப்போதும் மாறிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில்,மாறாத அன்பை அனுபவிக்கப் பெற்றவர்கள் காதலர்கள்’ என்பதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.காதலின் கரங்கள் அத்தகையதே...
My Love – காதலர்களுக்கு மட்டுமல்லாது,அன்பைத் துதிப்பவர்களுக்கும்...

Comments

  1. ஆரம்பிசுட்டான்யா கொரிய பிரஜை…

    ஏலேய்,உன்னை அமாவாசை நிலா வெளிச்சத்துல(??) போட்டுத் தள்ளணும்லே…

    அது ஏன் உங்களுக்கு கொரியப் படம்னா மட்டும் சிலிர்த்துக்குது?

    கொரிய படத்துக்கு உசுரக் கொடுத்து எழுதுமே இந்த நாதாரி….

    இப்படியும்,இன்னும் பலவாறும் என்னைப் புகழப்போகும்(!!) நண்பர்களே!கொரியப் படத்துக்கு மட்டும் எப்படி இப்படி எழுத வருதுன்னு உங்களுக்கு மட்டும் இல்ல,சத்தியமா எனக்கும் புரியல.ஒருவேளை,இனிமையான காதலின் மென்மையை மேன்மையாக சொல்வதால் இருக்குமோ என்னவோ?(சத்தியமா இதுவும் நினைச்சு எழுதல.தானா வருது. ;) ).

    கொரியா படங்களைப் பற்றி எழுதும் போது,எனது விரல்களில் எதுவோ குடிகொண்டு விடுகிறது.ஒரு வேளை,கொரியப் படங்களில் இருக்கும் அழகியலோ என்னவோ? :)

    சரி,வழக்கம் போல கும்மிட்டுப் போங்க…. :)

    ReplyDelete
  2. உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  3. உங்கள் பதிவு (படிக்காமலேயே) படம் பார்க்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  4. கொரியப் பிரஜை said...

    மிஸ்த்திரஸ்ஸி மிக்காவ்.. ஹீத்ர வால்சீக்..
    வோலயூ ஆத்தாத்ரஷ்.. கீல மாவூயிர்ஷ் !

    ReplyDelete
  5. ரஷ்யப் பிரஜை said...

    //மிஸ்த்திரஸ்ஸி மிக்காவ்.. ஹீத்ர வால்சீக்..
    வோலயூ ஆத்தாத்ரஷ்.. கீல மாவூயிர்ஷ் !//

    இது அப்பட்டமான ரஷ்ய மொழி.. கொரியப் பிரஜை ரஷ்ய மொழியைக் காப்பி அடித்து, கொரிய மொழி என்று சொல்கிறார்.. என்ன கொடுமை இது

    ReplyDelete
  6. //காதலும் காற்று போன்றதே.எந்நேரம் எப்படி வீசும் என்று இரண்டிற்கும் தெரியாது//

    எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், “காதல் ஒரு கழட்டிப்போட்ட செருப்பு.. அத யாரு வேணாலும் போட்டுக்கலாம்” - நன்றி.. வித்தகக் கவிஞர் விவேக் ;-)

    ReplyDelete
  7. இதை எழுதியது, கனவுகளின் காதலர் தானே.. உண்மையைச் சொல்லிவிடுங்கள் ;-). ஹாஹ்ஹா... விமர்சனம் அருமை.. மிக மிக ரசித்தேன்..

    நீங்கள் எழுதியுள்ள நேர்த்தியைப் பார்த்தால், உங்களின் பழைய காதல் ஒன்று வந்து உங்கள் மனதை வருடிவிட்டுச் சென்றது, புரிகிறது ;-)

    ReplyDelete
  8. //உங்கள் பதிவு (படிக்காமலேயே) படம் பார்க்கத் தூண்டுகிறது//

    சரி விடுங்க.படிச்சா அதெல்லாம் தோணாது. ;)

    //இது அப்பட்டமான ரஷ்ய மொழி.. கொரியப் பிரஜை ரஷ்ய மொழியைக் காப்பி அடித்து, கொரிய மொழி என்று சொல்கிறார்.. என்ன கொடுமை இது//

    இது முழுக்க ரஷ்ய மொழி அல்ல.அங்கங்கே பல விசயங்களை மாற்றி உள்ளோம்.

    //வால்சீக்..மாவூயிர்ஷ்//

    இதில், 'வால்''sick' என்று இருந்ததை வால்சீக் என்றும், 'மயிரு'இஷ் என்று இருந்ததை மாவோயிஸ்ட் ச்சே,மாவூயிர்ஷ் என்றும் மாற்றி உள்ளோம்.அதனால்,ஒரிஜினலுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. ;)

    ReplyDelete
  9. //“காதல் ஒரு கழட்டிப்போட்ட செருப்பு.. அத யாரு வேணாலும் போட்டுக்கலாம்”//

    இதை விட பக்கா டயலாக் இருக்கு மச்சி!

    காதல்னா என்னடா?

    ரூம் போடறது. ;)

    ReplyDelete
  10. //இதை எழுதியது, கனவுகளின் காதலர் தானே.. உண்மையைச் சொல்லிவிடுங்கள் ;-)//

    ஆஹா,கண்டுபிடிசுருவானுகளோ! ;)


    //நீங்கள் எழுதியுள்ள நேர்த்தியைப் பார்த்தால், உங்களின் பழைய காதல் ஒன்று வந்து உங்கள் மனதை வருடிவிட்டுச் சென்றது, புரிகிறது ;-)//

    அப்டி எதுனா இழவு இருந்து இருந்தா இவ்ளோ நல்லா வந்து இருக்குமா என்ன? ஒண்ணும் தெரியாததால தான் ஒரு ஆர்வக்கோளாறுல நல்லா வந்து இருக்கு. லவ் பண்ணி இருந்தா புலம்பல் தான் வந்திருக்கும். ;)

    ஆஹா,நாம ஜாலியா சுத்துறது இவனுக கண்ணை உறுத்த ஆரம்பிச்சுடுச்சே! :)

    ReplyDelete
  11. //இதில், 'வால்''sick' என்று இருந்ததை வால்சீக் என்றும், 'மயிரு'இஷ் என்று இருந்ததை மாவோயிஸ்ட் ச்சே,மாவூயிர்ஷ் என்றும் மாற்றி உள்ளோம்.அதனால்,ஒரிஜினலுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. ;)//

    ரஷ்யப்பிரஜை said... அய்யய்யோ ஈயடிச்சாங்காப்பி அடிக்குறானுங்கப்பா !! ஒண்ணு ரெண்டு வார்த்தைய மட்டும் மாத்துனா அது ஒரிஜினலா இருக்காதா? ஆ.. plagiarism !

    ReplyDelete
  12. ராஜஸ்தான் பிரஜை said...

    //அய்யய்யோ ஈயடிச்சாங்காப்பி அடிக்குறானுங்கப்பா !! ஒண்ணு ரெண்டு வார்த்தைய மட்டும் மாத்துனா அது ஒரிஜினலா இருக்காதா? ஆ.. plagiarism !//

    ஆதாம் ஏவாள் இருவர் தான்.. ஆனா நாமெல்லாம் அதன் காப்பிகள் தானே? உங்களுக்குப் புடிச்ச பாட்டை நீங்க பாடிப்பாக்குறது இல்லையா? ஒரே உப்புமாவைத்தானே உலகம் பூராவும் கிண்டுறானுங்க? ஸோ, இது காப்பி இல்லை... உங்களைச் சுத்தி பாருங்க.. எத்தனை பிரஜைகள் காப்பி அடிக்குறாங்கன்னு... மொதல்ல அவங்களை நிறுத்தச்சொல்லுங்க ரஷ்யப் பிரஜை அவர்களே .. அப்புறமும், நாங்க இப்புடித்தான் சொல்லுவோமே தவிர, காப்பியை நிறுத்தோம் ! ;-)

    ReplyDelete
  13. //ஒண்ணு ரெண்டு வார்த்தைய மட்டும் மாத்துனா அது ஒரிஜினலா இருக்காதா? //

    ஆமா பின்ன? ஒரிஜினல்க்கும் இதுக்கும் 'ஒண்ணு ரெண்டு' வார்த்தையாவது வித்தியாசம் இல்ல? இது நாங்களா யோசிச்சு இல்ல பண்ணினோம்?அதனால இது ஒரிஜினல் கிடையாது..

    ச்சே,உளறுறேன்..

    இதுக்கும் ஒரிஜினல்க்கும் சம்பந்தம் கிடையாது. ;)

    //ஆ.. plagiarism ! //

    அது என்னங்க? இன்னொரு படமா? :)

    ReplyDelete
  14. //ஆதாம் ஏவாள் இருவர் தான்.. ஆனா நாமெல்லாம் அதன் காப்பிகள் தானே? //

    இதை இப்படியும் சொல்லலாம்.ஏவாளே ஆதாமின் காபி தானே!அவனில் இருந்து உருவானவள் தானே! அப்ப எல்லாமே காபி தானே!எப்படி யோசிச்சோம் பாருங்க.. ;)

    // ஒரே உப்புமாவைத்தானே உலகம் பூராவும் கிண்டுறானுங்க?//

    ஆமா,சீனாலயும் சைக்கிள் திருடு போவுது.இந்தியாலயும் சைக்கிள் திருடு போவுது. ;)

    //மொதல்ல அவங்களை நிறுத்தச்சொல்லுங்க ரஷ்யப் பிரஜை அவர்களே .. அப்புறமும், நாங்க இப்புடித்தான் சொல்லுவோமே தவிர, காப்பியை நிறுத்தோம் ! ;-)//

    டோய்ங்க்ட டோய்ங்க்ட டொய்ங்..

    ReplyDelete
  15. அண்டார்ட்டிக் பிரஜை said...

    பூஸ்கர் என்பது ஆர்ட்டிக் பிரதேசத்தில் வழங்கப்படும் அல்வா.. அது அண்டார்ட்டிக்குக்கு ஒத்துவராது.. இருப்பினும், எனது பதிவுகளைத் தொடர்ந்து ஆர்ட்டிக் மக்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு பேதி வரவழைத்து, அதன்பின் இந்த பூஸ்கர் விருது வாங்குவேன்..

    என்னாது ரஹ்மான் ஆல்ரெடி ரெண்டு பூஸ்கர் வாங்கிபுட்டாரா? அப்ப ரைட்டு... பூஸ்கர் விருது ஒழிக.. இதெல்லாம் மனுஷன் வாங்குற விருதே இல்லை.. சுண்டெலிக்கு கொடுப்பது.. ;-) எனவே, எனக்கு பூஸ்கர் அறவே வேண்டாம் (என்னமோ இவனுங்க பூஸ்கரை நாளைக்கே எனக்கு அள்ளிக் கொடுத்துடுற மாதிரி)

    ReplyDelete
  16. //இனிமையான காதலின் மென்மையை மேன்மையாக சொல்வதால் இருக்குமோ என்னவோ//

    மச்சி படிச்சி படிச்சி சொல்றேன் இந்த காதல் எழவு நமக்கு வேணாம்... இப்படி எல்லாம் நீயும் பேசி தாலி அறுக்காத.... வெளியூரு ஒரு மானஸ்தான் செத்து கிடக்கறத பாத்துமா நீ திருந்தல??

    (இரு ஆணி புடிங்கிட்டு வறேன்...)

    ReplyDelete
  17. ஆர்ட்டிக் பிரஜை said...

    இன்னாது?

    பூஸ்கர் ஒழிகவா? மவனே இருடி... இப்பவே ஒன்னோட படங்களையெல்லாம் பார்த்து, காப்பியடிச்ச படங்க மேல கேஸ் போடுறேன்... அப்ப தெரியும்டி உன்னோட வண்டவாளம் ;-)..

    ReplyDelete
  18. அமெரிக்க,பிரிடைன் நம்மிடம் இருந்து சுட்டதைப் போல,அவர்களிடம் இருந்து சுட்டு நம் பொருளாதாரத்தை வளர்க்கும் மா மா மேதை(மாமா இல்லைங்க,மா மா.. ;) ) வாழ்க! அவர்தம் புகழ் வாழ்க! குடி வாழ்க! சொம்பு வாழ்க!

    ReplyDelete
  19. //பூஸ்கர் விருது ஒழிக.. இதெல்லாம் மனுஷன் வாங்குற விருதே இல்லை.. சுண்டெலிக்கு கொடுப்பது.. ;-) எனவே, எனக்கு பூஸ்கர் அறவே வேண்டாம் //

    பூஸ்கர் விருது வேண்டாம் என்று சொன்ன 'பூஸ்கர் நாயகன்' வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  20. //மச்சி படிச்சி படிச்சி சொல்றேன் இந்த காதல் எழவு நமக்கு வேணாம்... இப்படி எல்லாம் நீயும் பேசி தாலி அறுக்காத.... வெளியூரு ஒரு மானஸ்தான் செத்து கிடக்கறத பாத்துமா நீ திருந்தல??//

    ஹாஹா,யோவ் எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்யா.சும்மா படத்த பார்த்தமா,போஸ்ட் போட்டமா னு போய்டுவேன். வெளியூர் மாதிரி தெருத்தெருவா போய் இளிச்சுகிட்டே செருப்படி வாங்குற அளவுக்கு எனக்கு 'லக்' இல்ல.. ;)

    ReplyDelete
  21. // ஆரம்பிசுட்டான்யா கொரிய பிரஜை…

    ஏலேய்,உன்னை அமாவாசை நிலா வெளிச்சத்துல(??) போட்டுத் தள்ளணும்லே…

    அது ஏன் உங்களுக்கு கொரியப் படம்னா மட்டும் சிலிர்த்துக்குது? //

    எங்களுக்கு கருத்து சொல்ல சுதந்திரம் கொடுக்காம தானே எல்லா கருத்துக்களையும் சொல்லிவிட்ட
    அண்ணன் இலுமி அவர்களை அவர்களை ................................
    என்ன சொல்லுறதுன்னு தெரியல

    சரி இவ்வளவு உசுர கொடுத்து எளுதியிருக்காரு அதனால
    இந்த படத்த பாத்துடுவோம்
    .

    ReplyDelete
  22. //ஆறு வருடங்களில் நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணத்தின் போது,மறுபடி தாங்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற கூறிவிட்டுப் பிரிகிறாள்.அதனை எதிர்பார்த்து மறுபடியும் கொரியாவின் சியோல் நகரம் வரும் அவன் புதியதொரு பிரச்சனையை சந்திக்கிறான்//

    இந்த ஆறு வருடத்தில் அவர் கரைக்ட் செய்த பிகருகளின் என்னிக்கை காட்டப்பட்டதா?

    ReplyDelete
  23. //தனது முந்தைய செல்பேசி எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டு,அது இப்போது வேறு ஒருவரின் பயன்பாட்டில் உள்ளது என அறியும் அவன்//

    செல்பேசி மட்டும்தானா?

    ReplyDelete
  24. //தூரத்தில் இருந்து அவதிப்படும் ஜுங்,தூரத்தில் இருந்து வந்திருக்கும் ஜின்னுக்கு உதவ விளைகிறாள்.//

    பேசாம இவங்க இரண்டுபேரும் லவ்வி இருக்களாம் இல்லை??

    (சபாஷ்டா டெரர்... உனக்கு டைரக்டர் டச் நல்லா வருது...)

    ReplyDelete
  25. நண்பரே,

    உங்கள் பதிவே படத்தைப் பார்த்த உணர்வுகளை அளித்த படியால் இனி படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

    உங்களிற்கும், கொரியாவிற்கும், காதலிற்கும் அப்படி என்ன பூர்வஜென்ம பந்தம். சும்மா பிச்சி பிச்சி உதறிவிட்டீர் ஆமா. இதை எந்தப் பெண் படித்தாலும் உமக்கு மெயில் வரப்போவது உறுதி. எனவே இதயத்தை ஃப்ரீயாக வைத்திருக்கவும்.

    காதலையும் உம்மையும் கொரியாவையும் பிரிக்கவே முடியாது... உம்ம காதலியால் கூட :)

    ReplyDelete
  26. @@@கனவுகளின் காதலன் said...
    உங்களிற்கும், கொரியாவிற்கும், காதலிற்கும் அப்படி என்ன பூர்வஜென்ம பந்தம். சும்மா பிச்சி பிச்சி உதறிவிட்டீர் ஆமா. இதை எந்தப் பெண் படித்தாலும் உமக்கு மெயில் வரப்போவது உறுதி. எனவே இதயத்தை ஃப்ரீயாக வைத்திருக்கவும்.

    காதலையும் உம்மையும் கொரியாவையும் பிரிக்கவே முடியாது... உம்ம காதலியால் கூட :)////////


    டாய் இலுமி... இது நீதான..! :)

    ReplyDelete
  27. //ஒருவேளை,இனிமையான காதலின் மென்மையை மேன்மையாக சொல்வதால் இருக்குமோ என்னவோ?

    கலக்கல் நண்பா ... my sassy girl, my little brideஇந்த ரெண்டு படமும் பாத்திட்டு நான் கொரிய படங்களின் வெறித்தனமான ரசிகனாகி விட்டேன் ...

    ஆந்திராவையே தாண்டாத நம்ம மக்களுக்கு அண்டார்டிக்கா ஆர்டிக்கவாவது காமிக்கட்டும் விடுங்க தல...

    ReplyDelete
  28. நல்ல பகிர்வு.சில காட்சிகள் ‘Windstruck'ஓட ஒத்து வரும் போல.ஆனா நீங்களும் அவிங்களா(கொரியப் படத்த இமை கொட்டாம பாக்குறவிங்க:) நானும் தேளும் தான் அப்பிடின்னு நெனைச்சேன்.சங்கத்துல சேர்ந்துட்டீங்க.
    டைம் இருந்தா ‘Windstruck' பாருங்க.அப்பிடியே ‘So Close'ம். நன்றி.

    ReplyDelete
  29. @ illuminati

    அந்த காப்பி,கமல் இன்னபிற விசயங்கள விட்டு வெளில வாங்க பாஸ்.ஒலகம் ரொம்ப பெருசு :)

    ReplyDelete
  30. ஹீரோயின் போட்டோ பெருசா போட்டா
    என்ன கொறஞ்சா போயிருவீங்க்?

    ReplyDelete
  31. ஒன்னு பொம்மை படம் பாக்கறான்..இல்லை கொரியால மென்மையா காதலை சொல்றாங்க...ன்னு ரீல் விடறான்...மவனே எவனும் கொரியா பக்கம் போனதில்லைன்னு டகால்டி வேலை பண்ணிட்டு திரியறயா...!

    பலூன் மாமா ஃபார்முக்கு வரட்டும்...அப்புறம் இருக்குடே உனக்கு கச்சேரி!

    ReplyDelete
  32. //என்ன சொல்லுறதுன்னு தெரியல//

    ஹாஹா...

    //பேசாம இவங்க இரண்டுபேரும் லவ்வி இருக்களாம் இல்லை??

    (சபாஷ்டா டெரர்... உனக்கு டைரக்டர் டச் நல்லா வருது...)//

    நீ நிறைய பிட்டு படம் பாக்குற தம்பி.. :)

    //உங்கள் பதிவே படத்தைப் பார்த்த உணர்வுகளை அளித்த படியால் இனி படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.//

    இது அடாசு தல.படம் பாருங்க.

    //இதை எந்தப் பெண் படித்தாலும் உமக்கு மெயில் வரப்போவது உறுதி. //

    அதான் யாரும் படிக்குறது இல்லையே!அந்த தைரியத்துல தான நான் சந்தோசமா இருக்கேன்? ;)

    //காதலையும் உம்மையும் கொரியாவையும் பிரிக்கவே முடியாது... உம்ம காதலியால் கூட :)//

    பயப்படாதீங்க,அப்படி யாரும் கிடையாது. ;)


    //டாய் இலுமி... இது நீதான..! :)//

    டேய் வெண்ண, மெயில்,காதல் னு வர்றப்பயே தெரிய வேணாம் உனக்கு இது இலுமி கிடையாதுனு?
    அதுசரி, விஜய் பத்தி தான் எழுதின போஸ்ட்ல தானே அனானியா வந்து விஜய் வாழ்கனு சொல்லிட்டு சுத்துற வெளியூர்காரனா நானு? ;)

    //my sassy girl, my little brideஇந்த ரெண்டு படமும் பாத்திட்டு நான் கொரிய படங்களின் வெறித்தனமான ரசிகனாகி விட்டேன் ...//

    இன்னும் பல ரத்தினங்கள இருக்கு நண்பா! ஒவ்வொண்ணா என் ப்ளாக் ல பாப்போம்.. :)

    //ஆந்திராவையே தாண்டாத நம்ம மக்களுக்கு அண்டார்டிக்கா ஆர்டிக்கவாவது காமிக்கட்டும் விடுங்க தல...//

    அதை ஆர்டிக்,அண்டார்டிக் னு சொல்லி காமிச்சா தப்பு இல்ல. இது என் வீட்டுப் பின்புறம்.இது எப்படி எல்லா வீட்டையும் விட அழகா இருக்கு பாரு னு கூசாம சொல்லுறதனால தான் நான் எதிர்க்கிறேன்.

    @ மரா:

    windstruck பார்த்தாச்சு தல...அது என்னைப் பொறுத்த வரை சுமார் படமே! இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. நீங்க என்னுடைய பழைய போஸ்ட் எல்லாம் படிச்சது இல்ல போல. எனக்கு கொரிய படங்கள் ரொம்ப பிடிக்கும் தல.

    அப்புறம்,கமல எல்லாம் நான் தாண்டி எப்பவோ போயாச்சு.நீங்க எல்லோரும் தான் வொர்த் இல்லாத ஒரு மனுஷன தூக்கி பிடிச்சுகிட்டு நிக்குறீங்க.

    //ஒன்னு பொம்மை படம் பாக்கறான்..இல்லை கொரியால மென்மையா காதலை சொல்றாங்க...ன்னு ரீல் விடறான்...மவனே எவனும் கொரியா பக்கம் போனதில்லைன்னு டகால்டி வேலை பண்ணிட்டு திரியறயா...!
    //

    அது உன் தலை விதி மாமு! நீ கேட்டுத்தான் ஆவணும்! ;)

    //பலூன் மாமா ஃபார்முக்கு வரட்டும்...அப்புறம் இருக்குடே உனக்கு கச்சேரி!//

    ஏலேய், முதல்ல அந்தப் பயலையும், அந்த அடி வாங்கிகிட்டே சுத்துற பயலையும் சீக்கிரம் ஆட்டைக்கு வரச் சொல்லுலே...
    அப்புறம் வச்சுக்கலாம் கச்சேரிய.. :)

    ReplyDelete
  33. இந்த மாதிரி பதிவு படிக்கும்போது கிட்டதட்ட ஒரு சிறுகதை படிச்ச அனுபவம் கிடைக்குது. வாழ்த்துக்கள்.

    ஒரு கோரிக்கை:
    திரில்லர், ஹாரர் வகை கொரிய படங்கள் பற்றி எழுதவும்.

    ReplyDelete
  34. எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தப் படத்தப் பாத்துடுவேன்.. ஏற்கனவே இவர் கொடுத்த லிஸ்டில் இருக்கும் படங்கள் தான் புல்லா டவுன்லோடு ஆகுது.. 512 ஸ்பீடு நெட்டுல இவ்வளவு வேகம் தான் கிடைக்கும்..

    ReplyDelete
  35. //இந்த மாதிரி பதிவு படிக்கும்போது கிட்டதட்ட ஒரு சிறுகதை படிச்ச அனுபவம் கிடைக்குது. வாழ்த்துக்கள்.

    ஒரு கோரிக்கை:
    திரில்லர், ஹாரர் வகை கொரிய படங்கள் பற்றி எழுதவும்.//


    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.....

    ReplyDelete
  36. @ "எஸ்.கே said...ஒரு கோரிக்கை:
    திரில்லர், ஹாரர் வகை கொரிய படங்கள் பற்றி எழுதவும்."

    - இதனை நான் வழி மொழிகின்றேன்,

    கொரிய படங்களை காப்பி அடித்து போஸ்ட் போடும் இலுமியினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    இப்படிக்கு க.கொ.ப.செ.

    ReplyDelete
  37. திருக்குறல் படிக்கிறீங்க போல..

    நடக்கட்டும்..நடக்கட்டும்..

    ReplyDelete
  38. //இந்த மாதிரி பதிவு படிக்கும்போது கிட்டதட்ட ஒரு சிறுகதை படிச்ச அனுபவம் கிடைக்குது. வாழ்த்துக்கள். //

    நன்றி.

    //திரில்லர், ஹாரர் வகை கொரிய படங்கள் பற்றி எழுதவும். //

    எனக்கு ஹாரர் படங்கள் அவ்வளவு பிடிக்காது என்பதால் அதிகம் பார்ப்பது இல்லை.கொரியாப் படங்களில் நான் நிறைய த்ரில்லேர் பார்த்ததில்லை.ஆனால் எழுத நினைத்து ஒரு படத்தை வைத்திருக்கிறேன்.அது ஓல்ட் பாய்....

    @பிரகாஷ்:
    ஹஹா...

    @கினு:
    நல்லா கிளப்புராணுக புரளிய. :)

    @பட்டு:

    அய்! பலூன் மாமா.. ;)

    ReplyDelete
  39. //இந்த மாதிரி பதிவு படிக்கும்போது கிட்டதட்ட ஒரு சிறுகதை படிச்ச அனுபவம் கிடைக்குது. வாழ்த்துக்கள். //

    நன்றி.

    //திரில்லர், ஹாரர் வகை கொரிய படங்கள் பற்றி எழுதவும். //

    **********************************************************************

    மகா ஜனங்களே...இதுக்கு பேரு தான் ஆப்பை எடுத்து தனக்குத் தானே சொருகிக்கறது!

    ReplyDelete
  40. //திரில்லர், ஹாரர் வகை கொரிய படங்கள் பற்றி எழுதவும்.

    **********************************************************************

    மகா ஜனங்களே...இதுக்கு பேரு தான் ஆப்பை எடுத்து தனக்குத் தானே சொருகிக்கறது! //

    ஹாஹா.. :)
    உனக்குத் தெரியுது,ஆனா ... ;)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

La Belle – துன்பம் தரும் அழகு........