Prey – The Hunted and the Hunter….


michael_crichton Michael Crichton.
Sci-fi நாவல்கள் படிக்கும் வாசகர்கள் நிச்சயமாக கடந்து செல்லும் ஒரு பெயர்.இவர் பெயர் உலகம் முழுக்க பிரபலம். இவர் யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம்.உங்களில் Spielberg இயக்கிய Jurassic Park பார்க்காதவரோ அல்லது கேள்விப்படாதவரோ இல்லை என்றே கூறலாம்.அந்த படத்தை நாவலாக எழுதியவர் தான் இந்த Crichton.

இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்.இவர் எழுதியது ஏறக்குறைய அனைத்துமே technical thrillers.இவரது formula ஒன்றே. “நல்ல முயற்சிக்காக செய்யப்படும் ஒரு ஆராய்ச்சி,எப்படி கெட்டவர்களின் தலையீடால் அல்லது அஜாக்கிரதையால் பேரழிவு ஏற்படுத்துகிறது “ என்பதே அது.Jurassic Park கதை கூட இவ்வகையிலானதே.ஆனால்,அவ்வப்போது வேறு பல அருமையான கதைக்கலன்களையும் உபயோகப்படுத்தி இருக்கார்.

படிப்பினால் டாக்டர் ஆன இவர்,தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எழுத்தாளர் ஆனார்.Crichton எழுதிய பல புத்தகங்கள் trend setters.பல படங்கள்,டிவி சீரியல்கள் எல்லாம் இவர் எழுத்தில் வெளி வந்து இருக்கிறது.michael-crichton-2

Andromeda Strain – Technological thriller. இவருடைய முதல் மிகப் பெரிய ஹிட்.
பூமியை சுற்றி வர அனுப்பப்படும் ஒரு satellite,திரும்பி வரும் போது,பூமியில் இல்லாத ஒரு வைரசோடு திரும்பி வருகிறது.இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் உறைந்து இறந்து போகிறார்கள்.எப்படி இதைத் தடுத்தார்கள்? என்பதே கதை.கவனிக்கவும்,இது எழுதப்பட்டது 1969 இல்.அதாவது சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைத்த வருடம்.இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமா?

அதற்குப் பிறகு, The Terminal Man,The Great Train Robbery,Eaters of the Dead,Sphere,Timeline,Rising Sun,Congo,Disclosure,Jurassic Park,Lost World,Prey,Airframe என்று இவர் எழுதிய ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் trend setters.

நான் ஏற்கனவே எழுதிய Disclosure பற்றிய விமர்சனம் இங்கே.

இவருக்கு எப்பயுமே ஒரு குணம்.ஒரு ஸ்டைல்ல ஒரு முறை தான் எழுதுவாரு.Lost World மட்டும் ஒரு விதிவிலக்கு.வைரஸ மையமா கொண்ட Andromeda Strain, Mind Control பற்றியான Terminal Man எழுதின இதே மனுஷன் தான் சரித்திர சம்பவமான Eaters of the dead பத்தியும் எழுதினார்.பின்ன,வரலாற்றில் இடம் பெற்ற ஒரு மிகப் பெரிய ரயில் கொள்ளயை பற்றி The Great Train Robbery எழுதினார்.விஷயம் என்னன்னா,இவரு எழுதுறது முக்காவாசி techno thriller ஆக இருந்தாலும்,ஹிட்michael-crichton-dinosaur ஆச்சுங்றதுக்காக இவர் ஒரு முறை எடுத்தாண்ட கதைக் கலனை இன்னொரு முறை உபயகோப்படுத்த மாட்டார்.ஏற்கனவே சொன்ன மாதிரி,Lost World ஒரு விதிவிலக்கு.அதுவும் பல வாசகர்களின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது.மிகச் சிக்கலான விசயங்களைக் கூட மிகச் சுலபமாக விவரிக்கும் இவருடைய பாங்கு,இவருடைய தனித் திறன்.உதாரணம்,Jurassic Park ல சொல்லப்படுற Chaos Theory.அவ்வளவு சிக்கலான ஒரு விசயத்த பாமரனுக்கும் புரியுற மாதிரி விளக்கி இருப்பார்னு சொல்லுறாங்க(நானு இன்னும் Jurassic Park படிக்கலை.இவர் புக் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா படிச்சுகிட்டு இருக்கேன்.அதை கடைசியா படிக்கலாம்னு இருக்கேன்.போஸ்ட் உண்டு. :) ).இவரோட ரசிகர்களில் நானும் ஒருவன். 

prey1jpg சரி,இப்ப எதுக்கு இவ்வளவு நேரம் இவரைப் பற்றி பார்த்தோம்?இந்த முறை நாம பார்க்கப் போறது இவர் 2002 இல் எழுதிய Prey அப்டிங்குற கதைய.Jurassic Park இல் ராட்சத dinosaur களை வைத்து மிரட்டிய அதே மனுஷன்,இந்தக் கதையில nano robots வச்சு மிரட்டி இருக்கார்.கதைய பார்க்குறதுக்கு முந்தி Nano Technology பத்தி கொஞ்சம் பார்த்துடலாம்.

சரி,Nano னா என்ன?ஒரு Nanometer னா one billionth, or 10−9, of a meter.நாம இப்ப யூஸ் பண்ணிக்கிட்டு இருக்குறது Micro metre scale(10−6 m).நானோ வோட கான்செப்ட் என்னன்னா,நானோ ஸ்கேல்ல நானோ ரோபோட்ஸ உருவாக்கி அதை வைத்து ஒரு பொருளை,atom லெவெல்ல இருந்து உருவாக்கிறது.அதாவது இந்த நானோ ரோபோட், ஒவ்வொரு atom ஆ சேர்த்து சேர்த்து,நீங்க விரும்புற பொருளை உருவாக்கணும்.அது தான் கான்செப்ட்.

அதாவது ஒரு இரும்பை எடுத்து,அதை கடைந்து அதில் இருந்து ஒரு ஆணியை உருவாக்குவது இப்ப நாம செய்யுறது.ஆனா,நானோ ரோபோட் இருந்தா,அந்த இரும்பைக் கடையும் போது மிச்சமான துகள்களை வைத்து,அந்த துகள்களை சேர்த்து சேர்த்து,ஒரு ஆணியை உருவாக்கலாம்.யோசிச்சுப் பாருங்க.prey

இது மட்டும் நடந்துருச்சுன்னா,இன்னைக்கு நீங்க உபயோகப்படுத்துற ஒவ்வொரு பொருளும்,நூறு அல்லது ஆயிரம் மடங்கு சிறுசு ஆயிடும்.இப்ப நீங்க யூஸ் பண்ற கம்ப்யூட்டர் செல் போன் அளவுக்கு சுருங்கிடும்.இல்ல,அதை விடக் கூட சுருங்கலாம்.
சரி,இப்ப கதைய பார்ப்போம்.(படங்களில் கருப்பாக தெரிவது ரோபோ குழு.)

Xymos என்று அழைக்கப்படும் ஒரு nanorobotics கம்பெனி,நெவேடா பாலைவனத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஒரு உற்பத்தி நிலையத்தில் நானோ ரோபோக்களை தயாரிப்பதில் வெற்றி அடைகிறது.பொதுவாக இந்த நானோ ரோபோக்களை தயாரிக்க நினைத்தால்,அதற்கு ஒரு மிக முக்கியமான பிரச்சனை இருக்கிறது.இத்தகைய மிகச் சிறிய ரோபோக்களை உருவாக்க,அதே அளவில் உள்ள,nano assemblers எனப்படும்,ரோபோக்களை உருவாக்கும் கருவிகளை உருவாக்க வேண்டும்.இது முட்டை முதலா,கோழி முதலா மாதிரியான பிரச்சனை.

ஆனால்,இதற்கு xymos ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறார்கள்.அதாவது,இந்த ரோபோக்களை உருவாக்க genetically engineered பாக்டீரியாவாய் உபயோகப் படுத்துகிறார்கள்.ஆக,இந்த நானோ ரோபோட்,மூன்று முக்கிய தொழில்நுட்பங்களின் சங்கமத்தில் உருவாகிறது.
Genetical Engeneering,
Nano Technology,
Computer Programming.

இந்த ரோபோக்களுக்கு தனியான அறிவு கிடையாது.இவை ஒரு குழுவைப் போல் தான் செயல் ஆற்றும்.ஒரு தேனிக்கூட்டத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.அவற்றிற்கு தனியாக எந்த ஒரு பெரிய புத்திசாலித்தனம் கிடையாது.ஆனால்,குழுவாக செயல்படும் போது வேலைகளை பகிர்ந்து கொண்டு,பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.அது போல தான் இந்த ரோபோக்களும்.இந்த ரோபோக்களின் வேலை,ஒரு கேமராவாய் போல செயல்படுவது.காற்று கூட புக முடியாத இடத்தில் கூட இவை நுழைந்து,படம் பிடிக்க முடியும்.ஒரு பென்சில் முனைஅளவே உள்ள ஒரு ரோபோ குழுவே இதற்கு போதுமானது.

யோசித்து பாருங்கள்,satellite monitoring ஐ விட மிக உயர்ந்த தொழிநுட்பம்.இவற்றின் பங்களிப்பு அளப்பரியது.முக்கியமாக ஆர்மியில்.எதிரிகளின் பதுங்கு தளத்தை அறிந்து கொள்ள எளிதாக உபயோகப்படுத்தலாம்.எல்லாம் சின்னச் சின்ன ரோபோக்கள் என்பதால் அந்த குழுவை சுட்டாலும்,குண்டு அந்த நானோ குழுவை சிதைக்க முடியாது.(Crichton உடைய கற்பனைத் திறன் புரிகிறதா இப்போது?)மேலும்,இவற்றை ஒரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி,அவற்றை வைத்து முன் எப்போதும் இல்லாத அளவு துல்லியமாக அனைத்தையும் பார்க்கலாம்.

இந்த ரோபோக்களுக்கு தனியாக பவர் தேவையில்லை.Solar cells மூலமாக,தங்களுக்கு வேண்டிய மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் நிறைந்தவை இவை.இவற்றை கட்டுப்படுத்த ரேடியோ அலைவரிசை போதும்.இரவில் மட்டும் இவற்றால் இயங்க முடியாது என்பதை தவிர்த்து,வேறு பிரச்சனை இல்லை.

இவ்வளவு தனித்துவம் வாய்ந்த ரோபோக்களால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இந்த ரோபோக்களில் ஒரு குழு மட்டும்,ரேடியோ அலைவரிசையின் கட்டுப்பாட்டை மீறி,பாலைவனத்திற்கு தப்பி விடுகிறது.அவை தன்னாலேயே செயல்பட ஆரம்பிக்கிறது.குழு அறிவு கொண்ட அவற்றின் குறிக்கோள்,மறுபடியும் அந்த உற்பத்தி நிலையத்திற்குள் செல்ல நினைப்பதே.ஆனால்,அவற்றை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளே விடுவது பேரழிவைத் தரும்.

Xymos கம்பெனி இந்த பிரச்சனைக்கு காரணம்,computer programing ஆகத்தான் இருக்க வேண்டும் ன்று கருதி,அதை எழுதிய குழுவின் தலைவரான Jack Forman ஐ வரவழைக்கிறது.இவருடைய மனைவி Julia,Xymos இல் Vice President ஆக இருப்பது மேலும் உதவும் என்று முடிவெடுக்கப்படுகிறது.

ஆனால்,ஜாக் நெவேடா வந்த பின்னர் தான் தெரிகிறது,இந்த ரோபோக்களால் தனியாக இயங்க மட்டும் அல்ல,தாங்களாகவே நானோ ரோபோக்களை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும் என்பது.அதற்க்கு அவை உபயோகப்படுத்துவது எல்லா mammals இடமும் இருக்கும் ஒரு சில enzyme களை.

இந்த enzyme களை,அவை அந்த உயிரினங்களை கொன்ற பின்னர் அவற்றின் உடலில் இருந்து எடுக்கின்றன.நாட்கள் செல்லச் செல்ல,இவற்றின் கொலை வெறி அதிகம் ஆகிறது.அதைப் போலவே அவற்றின் எண்ணிக்கையும்...

உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை,மனிதனும் ஒரு mammal என்று.சிறிது காலத்தில் இவை சிறு பிராணிகளை விட்டுவிடுகிறது.அவை வேறு ஒரு பெரிய பிராணியை வேட்டையாட ஆரம்பிக்கிறது.இங்கே வேட்டைக்காரன் – அந்த ரோபோக்கள்.

வேட்டையாடப்படுவது – மனிதன்....

ஜாக்கால் இதை சரி செய்ய முடிந்ததா?இவற்றின் கோரத் தாண்டவத்திற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை என்ன?அறிந்து கொள்ள நாவலை படியுங்கள்.

Crichton எழுதிய நாவல்களில் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.ஆனால்,இதில் விறுவிறுப்பு மிக மிக அதிகம்.ஜாக் நெவடாவில் வந்து இறங்கும் போது சூடு பிடிக்கும் கதை,அந்த சூடு குறையாமலே கடைசி வரை செல்கிறது.இந்த நாவலை ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது உங்களுக்கு.

அதிலும்,இந்த ரோபோக்கள் கொன்ற ஒரு முயலை forensic ஆராய்ச்சி செய்ய வெளியே வரும் ஜாக் குழுவை ரோபோக்கள் வேட்டையாடும் பகுதி பரபரப்பின் உச்சம்.அவர்கள் அங்கே நிற்கும் கார்களில் சென்று ஒளிந்து கொண்டு,முழுக்க பூட்டிக் கொண்டு பதறுவதும்,நானோ ரோபோக்கள் சிறு சிறு இடைவெளிகளின் மூலம் உள்ளே நுழைந்து,ஒன்று சேர்ந்து அவர்களை கொல்லப் பார்ப்பதும்,திகிலின் உச்சம்.

இவற்றை அழிக்க ஜாக் மற்றும் சிலர் இவை இரவில் தங்கும் ஒரு மறைவிடத்துக்கு செல்லும் போதும் ஏற்படும் சண்டையும் பரபரப்பானதே...
இந்தக் கதையை படமாக எடுக்க நினைத்தால் எந்த ஒரு மாற்றமும் பண்ணாமல் அப்படியே படமாக எடுத்து விடலாம்.விறுவிறுப்புக்கு பஞ்சமே கிடையாது.ஆனால்,இது படமாக வருமா என்பது தெரியவில்லை.ஏனென்றால் இது கொஞ்சம் complicated ஆன கதை.இதை Crichton தெளிவாக சொல்லிய அளவுக்கு வேறு யாரும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே!அதிலும் இவர் உயிரோடு இருந்திருந்தாலாவது Spielberg இவர் துணை கொண்டு எடுத்து இருக்கலாம்(Jurassic Park மாதிரி).ஆனால்,இவர் சில மாதங்களுக்கு முன்னரே இறந்தார்.ஆகையால்,படம் வருவது சந்தேகமே.



Prey – அருமையான ஒரு sci fi thriller படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

Comments

  1. நண்பர்களே!இந்தப் பதிவு கொஞ்சம் பெருசா போய்டுச்சு.அடுத்த பதிவில் இருந்து Batman trilogy பதிவு ஸ்டார்ட் ஆகுது.

    Batman Begins,
    Killing Joke,
    Dark Knight.

    னு ஒவ்வொண்ணா பார்ப்போம். :)

    ReplyDelete
  2. அப்புறம்,அடுத்த பதிவுல இருந்து படம் பத்தி அதிகம் பார்க்கலாம்னு இருக்கேன்.சோ,சித்திரவதை ஸ்டார்ட்ஸ்.. :)

    ReplyDelete
  3. பதிவு பெருசா இருந்தாலும், ரொம்ப ஆர்வமா ஒரே முச்சுல படிச்சேன், அந்தக் கதையப் பத்தி பதிவே ரொம்ப சுவராஸ்யமா இருக்கு, அப்படின்னா கதை எப்படின்னு நெனச்சுப் பாக்கவேமுடியல! உடனே உடைய கதைகள வாங்க முயற்சிக்கிறேன் (எங்கே கிடைக்கும்னு ஏதாவது ஐடியா இருக்கா? குறிப்பா சென்னைல)

    ReplyDelete
  4. அருவா டெஸ்டிங்.. ஒன்னு..ரென்னு.. மூனு.. ரெடியா.. ஆ ஒன்னு டூ த்ரீயு...

    ReplyDelete
  5. Michael Crichton-ஐ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி இலுமி! (ஜுராசிக் பார்க் படம் ஒரு நாவலை வைத்து எடுக்கப்பட்டது என்று தெரியும் ஆனால், இப்பிடி ஒரு எழுத்தாளரைத் தெரியாமல் போய் விட்டது)

    ReplyDelete
  6. //இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது// ஆமா.. மம்மி திட்டும்.
    இவரைவிட யாரும் எளிதாக எழுத முடியாது நண்பரே. குழந்தைக்கு சொல்வது மாதிரி எழுதியிருப்பார் :)

    ReplyDelete
  7. ராமசாமி அவர்களே,

    மூர் மார்க்கெட்டில் தான் நானே வாங்கினேன்.அங்கே நிச்சயம் கிடைக்கும். :)

    ReplyDelete
  8. //அந்த படத்தை நாவலாக எழுதியவர் தான் இந்த Crichton.// அந்த நாவலைப் படமாக எடுத்தவர்தான் ச்ச்பீல்பர்க்கு.. குழப்பாம விடமாட்டீரா :)

    ReplyDelete
  9. // ILLUMINATI said...
    ராமசாமி அவர்களே,

    மூர் மார்க்கெட்டில் தான் நானே வாங்கினேன்.அங்கே நிச்சயம் கிடைக்கும். :)//

    ஓக்கே, எப்படியும் இரண்டு நாவலாவது வாங்கிடனும்! தேங்க்ஸ் இலுமி!

    ReplyDelete
  10. //கதைக்கலன்களையும்// இலுமினாட்டி, உண்மைய சொல்லும், வேணுமின்னேதான் இப்டி எழுதுறீரா..:)

    ReplyDelete
  11. //அந்த நாவலைப் படமாக எடுத்தவர்தான் ச்ச்பீல்பர்க்கு.. குழப்பாம விடமாட்டீரா//

    கரெக்ட்டு.Spielberg தான் copy அடிச்ச பீசு. :)

    ReplyDelete
  12. //படிப்பினால் டாக்டர் ஆன/ விட மாட்டீரே... ஆரம்பிச்சிட்டீரே :)

    ReplyDelete
  13. நீங்க ஏற்கனவே கிரீன் மைல் வாங்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க இல்ல?

    அத்தோட இது எல்லாத்தையும் சேத்து வாங்குங்க.

    Prey,
    Misery(stephen king),
    Sphere,
    Airframe,
    Jurassic park,
    Lost world,
    Timeline.

    ReplyDelete
  14. //நான் ஏற்கனவே எழுதிய Disclosure பற்றிய விமர்சனம் இங்கே// என்ன ஒரு மார்க்கட்டிங் :)

    ReplyDelete
  15. //பல வாசகர்களின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது.// இப்பாகமானது துட்டு பார்ப்பதற்காகவே எழுதப்பட்டது..மேலும் திரைப்படமாக உருவாகியும் துட்டு பார்க்க உதவியது..

    ReplyDelete
  16. //அதை விடக் கூட சுருங்கலாம்// பெருசாக்க ஏதேனும் உதவுமா அய்யா :)

    ReplyDelete
  17. //இவரைவிட யாரும் எளிதாக எழுத முடியாது நண்பரே. குழந்தைக்கு சொல்வது மாதிரி எழுதியிருப்பார் :)//

    உண்மை தான்.ஆனால் இவர் சொல்ல வரும் தொழில்நுட்ப விசயங்களை பற்றி கேட்கும் போது தலை சுற்றுமே ஓய்...

    ReplyDelete
  18. //(படங்களில் கருப்பாக தெரிவது ரோபோ குழு.)// அப்ப மஞ்சளா, வெள்ளையா தெரியறது எல்லாம் இன்னாப்பா :))

    ஆகா.. கத்தியை தீட்டற சத்தம் இங்கின வரை கேக்குதே :))

    ReplyDelete
  19. //என்ன ஒரு மார்க்கட்டிங் :)//

    ஹீ ஹீ,இல்லன்னா ஒரு பய படிக்க மாட்டான் ஓய். :)

    ReplyDelete
  20. //இப்பாகமானது துட்டு பார்ப்பதற்காகவே எழுதப்பட்டது..மேலும் திரைப்படமாக உருவாகியும் துட்டு பார்க்க உதவியது..//

    அய்யா,எல்லா படைப்புமே துட்டு பார்க்க தான். :)
    ஆனா,இன்னி வரைக்கும் எனக்கு புரியாத விஷயம்,lost world படத்துல புக் பேர தவிர்த்து எந்த ஒரு ஒற்றுமையும் கிடையாதே.spielberg ஏன் பூராத்தையும் மாத்தினாரு?

    ReplyDelete
  21. //ஒரு கேமராவாய் போல செயல்படுவது.காற்று கூட புக முடியாத இடத்தில் கூட// என்ன இது என் ஆச்சிரமத்தைக் குறி வைப்பதாகவல்லவா தெரிகிறது :)

    ReplyDelete
  22. //பெருசாக்க ஏதேனும் உதவுமா அய்யா :)//

    இதை நீரு டேனி கிட்ட தெரிஞ்சுக்கோரும் அய்யா.. :)

    ReplyDelete
  23. //Solar cells மூலமாக// கதையில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று என் நினைவில் தோன்றுகிறது :)

    ReplyDelete
  24. சாணிக்குள் இருந்து செல்போன் ரிங்குவது லாஸ்ட் வர்ல்டு நாவலில் இல்லையா நண்பரே..

    ReplyDelete
  25. //வேட்டைக்காரன்// மன்னிச்சு விடும் அய்யா..:)

    ReplyDelete
  26. //மன்னிச்சு விடும் அய்யா..:)//

    அது.அந்த பயம் இருக்கணும்.ஒழுங்கா இல்லன்னா அடுத்து விஜய் படம் விமர்சனம் போடுவேன் ஓய்.ஜாக்கிரதை.

    ReplyDelete
  27. நண்பரே,

    விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீண்ட பதிவு அல்ல :)) இதில் நீதி என்னவென்றால் நனோவோடு வெளையாடாதே நாசமாப் போயிடுவே என்பதாகும் :))இவ்வகையான விஞ்சான நீதிக் கதைகளை பதிவாக இட்டு எம் அறிவுக் கண்களை திறந்து விட்ட இலுமியே. உம் உடலிற்குள் நனோ ரோபோக்கள் புகுந்து விளையாடட்டும். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  28. //என்ன இது என் ஆச்சிரமத்தைக் குறி வைப்பதாகவல்லவா தெரிகிறது :)//

    மொசைப் பிடிக்குற நாய மூஞ்சப் பார்த்தாலே தெரியாது?நீரு கெட்ட கேட்டுக்கு உமக்கு கேமரா எல்லாம் ரெடி பண்ணனுமாக்கும்?

    ReplyDelete
  29. ரொம்ப இண்ட்டஸ்டிங்கா எழுதி இருக்கீங்க... நான் இன்னும் இவரோட நாவல் எதுவும் படிச்சதில்லை.. படிக்கணும்... அடுத்து, பேட்மேனா.. கலக்குங்க...

    ReplyDelete
  30. இந்த போஸ்டுகார்ட்டு பதிவு வரவே ஒரு மாசம் ஆகிடுச்சு, அதுக்குள்ளே கமிங்கு சூனு மார்கட்டிங்கு வேறயா... பேட்மேனு பிகினி, கில்லிங் சோக்கு.. துக்குமய்யா போஸ்டர்கள... பிலிமு காட்டுறதில ஒரு லிமிட் இருக்கய்யா..:)

    ReplyDelete
  31. // ஜெய் said...
    ரொம்ப இண்ட்டஸ்டிங்கா எழுதி இருக்கீங்க... நான் இன்னும் இவரோட நாவல் எதுவும் படிச்சதில்லை.. படிக்கணும்...
    //
    repeataaaaaaaiiiii

    ReplyDelete
  32. கில்லிங்கு சோக்கு எப்ப பேட்மேனு திரியாலாஜியில சேர்ந்திச்சு. நிறுத்தும் அய்யா.. என்ன அருவாள தூக்க வெச்சிடாதேயும்.. என் அருவாள்லே நனோ டெக்குனாலாஜி மிக்ஸாகி இருக்கு சாக்கிரத..:)

    ReplyDelete
  33. //இதை நீரு டேனி கிட்ட தெரிஞ்சுக்கோரும் அய்யா.. :)// அது ரொம்ப பெரிசா ஆகிருமே :))

    ReplyDelete
  34. //இங்கே வேட்டைக்காரன் – அந்த ரோபோக்கள்.

    வேட்டையாடப்படுவது – மனிதன்....

    //

    என்ன ஒரு உள் குத்து

    ReplyDelete
  35. //இந்த ரோபோக்களால் தனியாக இயங்க மட்டும் அல்ல,தாங்களாகவே நானோ ரோபோக்களை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும் என்பது.அதற்க்கு அவை உபயோகப்படுத்துவது எல்லா mammals இடமும் இருக்கும் ஒரு சில enzyme களை.//



    மனுஷன் நச்சுனு நின்னுட்டாருல்ல..,

    ReplyDelete
  36. ச்சே... காதலன் முந்திகிட்டாரே!! :)

    ===========

    ///இவர் யார் என்று கேட்பவர்களுக்கு//

    என்ன இப்டி கேட்டுட்டீங்க? மைக்கெல் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டாக்கும். ஆனா அவரோட லாஸ்ட் நேம் வேற.

    இலுமி.., நான் ஜெஃப்ரி, ஷிட்னி தவிர வேற 1-2 படிச்சிருக்கேன். ஜெஃப்ரில கூட எல்லாம் படிச்சதில்லை.

    இந்த மாதிரி பரபர புக்கா ஒரு 4-5 சொல்லுங்க.

    அப்புறம். இந்த செக்ஸ் & லூசியா மேட்டரை டீல்ல வுடுங்க.

    நான் சைலண்டா இருக்கும் போதே இந்த மாதிரி உலகப் படமெல்லாம்.. எதுக்காகப் பார்க்கறேன்னு உங்களுக்கு தெரிய வேணாமா?

    அதுவும் இந்தப் படத்தை பார்த்த ரீஸனே.. தலைப்புதான். :)

    ReplyDelete
  37. அது இல்லாம... ஸ்பானிஷ் படங்கள் எல்லாம் என் ‘தோழி’ இல்லாம ரெண்டாவது தடவ பார்க்க பிடிக்கலை.

    ஸொ.. ஒன்லி இங்லிபீஜு.

    ReplyDelete
  38. வேட்டைக்காரனெல்லாம் ஓல்டு மாமெ!

    சுறா-ன்னு வந்திகீது!!

    நெக்ஸ்ட் ரிலீஸ் கமிங் சூன்.

    ReplyDelete
  39. நன்றி ஜெய்,ஜெய்சங்கர்..

    //கில்லிங்கு சோக்கு எப்ப பேட்மேனு திரியாலாஜியில சேர்ந்திச்சு.//

    காதலரே! நானு சொன்னது trilogy பதிவு! படம் இல்ல. :)

    //என்ன ஒரு உள் குத்து//

    ஹிஹி,நெனைச்சு செய்யல,அதுவா அமைஞ்சு போச்சு னு சொன்னா நம்பவா போறீங்க? :)

    அப்புறம்,crichton பெரிய எழுத்தாளர் தல.இதுல கூட நெறைய ட்விஸ்ட் இருக்கு.நானு தான் எல்லாத்தையும் சொல்லல.

    ReplyDelete
  40. //இலுமி.., நான் ஜெஃப்ரி, ஷிட்னி தவிர வேற 1-2 படிச்சிருக்கேன். ஜெஃப்ரில கூட எல்லாம் படிச்சதில்லை.//

    தல,ஜெஃப்ரி எழுதினதுல எனக்கு பிடிச்ச ஒரே கதை, Not a penny more,not a penny less.

    வேற எதுவும் பிடிக்கலை.சிட்னி என்னைப் பொறுத்த வரை 'அநியாய' பாமெஸ் ஆன எழுத்தாளர்.

    //இந்த மாதிரி பரபர புக்கா ஒரு 4-5 சொல்லுங்க.//

    தெரிஞ்ச வரை சொல்றேன்.
    இது,angels and demons,da vinci code,jurassic park,lost world,tell me your dreams,sands of time,if tomorrow comes,sphere,airframe,disclosure,Misery,Ice station,all the books of mathew reilly...

    reilly writes highly paced action books,but you have to suspend logic. :)

    And for a feel good book, green mile.

    //அதுவும் இந்தப் படத்தை பார்த்த ரீஸனே.. தலைப்புதான். :)//

    ஆஹா,நீரும் என்ன மாதிரி தானா? :)

    //நெக்ஸ்ட் ரிலீஸ் கமிங் சூன்.//

    அது தான வயித்த கலக்குது.

    ReplyDelete
  41. //இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்//

    அப்ப கண்டிப்பா எனக்கு புரியார்து 4000 சந்தேகம் கேப்பேன், அதை புரிய வைக்க 5000 பதிவு போடவேண்டி வரும்

    ReplyDelete
  42. நல்ல விளக்கமான விமர்சணம்..!! அருமை பாஸ்..!!

    ReplyDelete
  43. ///
    angels and demons,
    da vinci code,
    jurassic park,
    lost world,
    ///

    இதை படமா பார்த்தாச்சா (லாஸ்ட் வேர்ல்ட் மட்டும் கதை மாத்தியிருக்காங்கன்னு சொல்லியிருக்கீங்க).

    ///
    sands of time,
    if tomorrow comes,
    ///

    இதை படிச்சாச்சி.

    //
    tell me your dreams,
    sphere,
    airframe,
    disclosure,
    Misery,
    Ice station,//

    இதை ட்ரை பண்ணிப் பார்க்கறேன்.

    எனக்கும் not a penny ரொம்ப இஸ்டம். நீங்க Shall we tell the President, Kane & Able, The Prodigal Daughter எல்லாம் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

    (ஹி.. ஹி.. நான் அது மட்டும்தான் படிச்சிருக்கேன்).

    ReplyDelete
  44. தல,சொன்னாக் கேளுங்க.

    புக்க compare பண்ணினால் angels and demons,da vinci code,jurassic park,lost world படங்கள் எல்லாம் தூசு.
    அதுலயும் angels and demons லயும் கதை கொஞ்சம் வேற.படத்துல மாத்திட்டானுங்க.புக் சும்மா பர பர னு இருக்கும்.படத்த விட...

    அப்புறம்,tell me your dreams படிக்கயலையா? முதல்ல அதை செய்ங்க.ஷெல்டன் எழுதினதுல என்னோட favorite அது.

    Michael crichton - இது அவரோட பெஸ்ட் லிஸ்ட்...

    Jurassic Park
    Lost world
    Prey
    Sphere
    Disclosure
    Airframe

    Stephen King:
    Misery
    Green Mile

    Matthew Reilly- Ice station படிச்சு பாருங்க.பிடிச்சா அவரோட எல்லா புக்கும் பிடிக்கும்.முன்னயே சொன்ன மாதிரி பர பர கதை,நொடிக்கு நொடி action இருக்கும்.ஆனா சில இடங்கள்ல லாஜிக் இருக்காது.

    அப்புறம், Cyclops,Sahara,Raise the Titanic by Clive Cussler படிக்கலாம்.

    //Shall we tell the President, Kane & Able, The Prodigal Daughter எல்லாம் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.//

    நானு படிச்சது Kane & Able,Fourth Estate,11th commandment,False Impression அப்புறம் சில...

    நீங்க படிச்ச மிச்ச ரெண்டு படிக்கல.மேட்டர் என்னன்னா,ஜெப் புக்ஸ் எல்லாம் கொஞ்சம் படிச்ச உடனே அலுத்துப் போச்சு. :)

    எனக்கு நல்ல கதை வேணும்,இல்லை பாஸ்ட் pace வேணும்.அது ஜெப் கிட்ட கிடையாது. :)
    அதான் தூக்கி போட்டுட்டேன்.

    ReplyDelete
  45. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    // ILLUMINATI said...
    ராமசாமி அவர்களே,

    மூர் மார்க்கெட்டில் தான் நானே வாங்கினேன்.அங்கே நிச்சயம் கிடைக்கும். :)//

    ஓக்கே, எப்படியும் இரண்டு நாவலாவது வாங்கிடனும்! தேங்க்ஸ் இலுமி!///

    யோவ் பன்னி , அதென்ன 2 புக், சும்மா நெறய வாங்கி சென்னைல என் வூட்ல வச்சிட்டு போ, நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.:)

    ReplyDelete
  46. இலுமி, உன்னுடைய விமர்சனத்தை படித்தால், இந்த புக் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. என்னுடைய படிக்க வேண்டிய லிஸ்ல் இப்போது இதுவும்:)

    ReplyDelete
  47. படிச்சு பாருங்க ஜெய்...
    கண்டிப்பா பிடிக்கும்.

    ReplyDelete
  48. // அதாவது ஒரு இரும்பை எடுத்து,அதை கடைந்து அதில் இருந்து ஒரு ஆணியை உருவாக்குவது இப்ப நாம செய்யுறது.ஆனா,நானோ ரோபோட் இருந்தா,அந்த இரும்பைக் கடையும் போது மிச்சமான துகள்களை வைத்து,அந்த துகள்களை சேர்த்து சேர்த்து,ஒரு ஆணியை உருவாக்கலாம்.யோசிச்சுப் பாருங்க. //

    நல்லா யோசிச்சுப் பாத்து தான் கேட்கிறோம் அதை வைச்சு கொரிய நாட்டு அழகி கிம் அல்லது குந்தவியை உருவாக்க முடியுமா ?? ::))

    ReplyDelete
  49. // ஒரு இரும்பை எடுத்து,அதை கடைந்து அதில் இருந்து ஒரு ஆணியை உருவாக்குவது இப்ப நாம செய்யுறது.ஆனா,நானோ ரோபோட் இருந்தா,அந்த இரும்பைக் கடையும் போது மிச்சமான துகள்களை வைத்து,அந்த துகள்களை சேர்த்து சேர்த்து,ஒரு ஆணியை உருவாக்கலாம்.யோசிச்சுப் பாருங்க //

    நல்லா யோசிச்சுப் பாத்து தான் கேட்கிறோம் இத வச்சு கொரிய நாட்டு அழகி கிம் அல்லது குந்தவியை உருவாக்க முடியுமா !!!!! ::)

    ReplyDelete
  50. நீர் சொன்ன, பழைய புக்கே..இன்னும் படித்துக்கொண்டு இருக்கேன்..

    அத முடிச்சுட்டு..இத படிச்சு...உஷ்..
    கண்ணக்கட்டுதே...ஹா.ஹா

    ReplyDelete
  51. சிபி,
    வெறும் சிலைய வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?

    ReplyDelete
  52. பட்டு,நீரு கிரீன் மைல் படிக்குறேன்னு சொன்னதே எனக்கு சந்தோசம்யா..
    இந்த புக்கும் கிடைச்சா படியும்.
    அது மனதை உலுக்கும் கதைன்னா,இது பட் பட்னு இதயத்தை துடிக்க வைக்கும் கதை.

    ReplyDelete
  53. இந்த Crichton.
    இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்////

    சோ அப்போ என்னை படிக்க வேண்டாமுன்னு சொல்லுற ,அறிவு அதுவே பெரிய விஷயம்,இதில் வேறு தனி அறிவு எங்க போறது ,படமும் வர சான்ஸ் இல்லை என்கிறாய் அப்படியே வந்தாலும் பிரெஞ்சில் ரிலிஸ் செய்யணும் ,கிழிஞ்சது

    ReplyDelete
  54. ஆமா,கிரீன் மைல் எப்புடி இருக்குது?

    அப்புறம்,நானு கமெண்ட் ல சொல்லி இருக்குற புக்குங்கள கூட ட்ரை பண்ணிப் பாருங்க முடிஞ்சா.அது எல்லாமே சிறந்த புக்ஸ் தான்.

    ReplyDelete
  55. முத்து,இந்த புக் பிரெஞ்சுல இருக்க சான்ஸ் இருக்கு.மிகப் பெரிய ஹிட்டான புக் இது.தேடித் பாருங்க.

    ReplyDelete
  56. ILLUMINATI said...

    முத்து,இந்த புக் பிரெஞ்சுல இருக்க சான்ஸ் இருக்கு.மிகப் பெரிய ஹிட்டான புக் இது.தேடித் பாருங்க.//////////

    இப்போ சொன்னியே இது நியாயம் ட்ரை பண்ணி பார்கிறேன்

    ReplyDelete
  57. //Michael Crichton-ஐ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி இலுமி!

    repeettu

    ReplyDelete
  58. // வெறும் சிலைய வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க? //

    என்ன பாஸ் இப்புடி பொசுக்குன்னு கமெண்ட் போட்டுட்டீங்க

    நான் ஏன்னென்னமோ கனவு கண்டுகிட்டு இருந்தேன் ஹ்ம்ம் :)

    ReplyDelete
  59. தல,

    இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

    வெங்கட்,
    வெடிகுண்டு வெங்கட்.
    அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

    ReplyDelete
  60. இப்படியாய்யா விளம்பரம் செயவீறு? நான் வாங்கப்போகும் அடுத்த புத்தகம் இது தான் :)

    ReplyDelete
  61. உங்கள் பிளாக், காமிக்ஸ் மற்றும் நாவல்கள் மற்றும் நல்ல படங்களுக்கான களஞ்சியமாக மாறி கொண்டு வருகிறது.. நான் பார்க்கும் நண்பர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம இருக்கிறதென்றால், அவர்களுக்கு நான் உங்களின் ப்ளாகை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்..

    நன்றி..

    ReplyDelete
  62. @ பிரசன்னா,

    உள்ளத சொன்னேன் பாஸ்.நான் மொக்கை போட்டதுக்கு அப்புறமும் அது நல்லாத் தெரியுதுன்னா அது எவ்ளோ நல்ல புக்கா இருக்கணும்? :)
    கண்டிப்பா படிங்க.

    @சாமு,
    அவ்வளவுக்கு நானு வொர்த் இல்ல நண்பா! ஏதோ மொக்க போட்டுகினு இருக்கேன்.ஆனா நல்ல படங்கள்,புக்ஸ்,காமிக்ஸ் பத்தி நீங்க இங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம்.
    இந்த ப்ளாக் ஆரம்பிச்சதே அதுக்கு தான...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......