Killing joke(r).... (18+)
நண்பர்களே!இந்தப் பதிவு,batman trilogy post இல் இரண்டாவது.இதுவும் எனது அடுத்த பதிவும் எனது கனவு பதிவுகள் என்றே சொல்லலாம்.இந்தப் பதிவு பல வகைகளில் முக்கியமானது.
முதலாவதாக இது காமிக்ஸ் பற்றியது.
இரண்டாவது,இது batman காமிக்ஸ் கதைகளில் சிறந்தது.
மூன்றாவதாக,ஜோக்கரின் கேரக்டர் மற்றும் அவனுக்கும் பேட்மேன்க்கும் உள்ள உறவை இதை விட தெளிவாக ஒரு கதை உணர்த்த முடியாது.ஜோக்கர் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக்கதை பற்றி தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.
நாலாவது,இதனை எழுதியது ஆலன் மூர்.
ஐந்தாவது,இது ஒரு மொக்க ரீசன். :) அதை விட்டுதள்ளுங்க.
டிஸ்கி:
பதிவு மகா பெருசு.அதான் இன்னிக்கு போடுறேன்.லீவு நாளுல உக்காந்து படிச்சுபுட்டு உங்க எண்ணங்களை கண்டிப்பா சொல்லுங்க.
அப்புறம் முதல்லேயே சொல்றேன்.இது எழுதப்பட்டதுக்கு நான் எவ்வளவு பொறுப்போ,அவ்வளவு பொறுப்பு கனவுகளின் காதலருக்கும் உண்டு.சோ,கொடுக்குற அடிய அவருக்கும் சேத்தே கொடுங்க… :)
பதிவ படிக்கிறதோட நிக்காம புக்கயும் படிங்க.அதுல உள்ளதுல பாதிய கூட நானு சொல்லல.
*************************************************************************
Killing joke is not just yet another super hero story.It is about a psychological war.ஆனா எதுக்காக?யாருக்கு இடையில? வாங்க பார்ப்போம்.முதலில் கதையில் ஆரம்பிப்போம்.அப்புறம்,மற்ற சில்லறை விசயங்களைப் பார்ப்போம்.
கதை ஆரம்பிப்பது ஒரு மழை இரவில்.ஒரு மழைக்கால இரவில் பேட்மேன் கொடிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டு இருக்கும் arkham asylum இற்கு வருகிறார்.அங்கே அடைக்கபட்டு இருக்கும் பல குற்றவாளிகளைத் தாண்டி,சிறிதும் லட்சியம் செய்யாமல்,பேட்மேன் ஒரு குற்றவாளி இருக்கும் இடத்திற்கு விரைகிறான்.பெயரே தெரியாத அந்தக் குற்றவாளி அழைக்கப்படுவது ஜோக்கர் என.
உள்ளே தனித்தனியாக இருக்கும் ஜோக்கரிடம் சென்று பேச ஆரம்பிக்கிறான் பேட்மேன்.” சிறிது காலமாக தனக்கு தன்னைப் பற்றியும்,ஜோக்கரைப் பற்றியுமான நினைப்பே ஓடுவதாகவும்,தங்களின் முடிவு என்னவாக இருக்கும் எனவும் வியப்பதாகக் கூறுகிறான்.
தங்களில் ஒருவர் மற்றொருவரால் கொல்லப்படப் போவது தான் இறுதியில் நடக்கும் என்பதை சொல்லும் பேட்மேன்,அது சீக்கிரம் நடந்தாலும்,சிறிது கழித்து நடந்தாலும்,கடைசி முடிவு அது தான் என்றும் கூறுகிறான்.அதனைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் இருவருமே உள்ளதாக கூறும் அவன்,ஜோக்கரை கொல்ல தனக்கு விருப்பம் இல்லை” என்று கூறுகிறான்.ஆனால்,ஜோக்கரிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.அவனின் கையைப் பிடித்த பின் கவனிக்கும் பேட்மேன்,தன் கை உறையில் ஒட்டி இருக்கும் சாயத்தைப் பார்க்கிறான்.அமர்ந்து இருப்பவன் போலி என்று உணர்கிறான்.வெறி கொண்டு அந்த போலியிடம் நிஜ ஜோக்கர் எங்கே என அவன் விசாரிக்கும் அதே நேரம்,ஜோக்கர் ஒரு பழைய,ஒதுக்குப்புறமான சர்கசை விலை பேசிக்கொண்டு இருக்கிறான்.
‘விலை அதிகமோ?’ என்று கேட்கும் சொந்தக்காரனிடம்,’பணம் ஒரு பொருட்டல்ல…..குறிப்பாக,இந்நாட்களில்…’ என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போது,அவன் மனம் அவனும் அவனது கர்ப்பிணி மனைவியும் பட்டினியில் உழன்ற நாட்களை நோக்கிப் பயணிக்கிறது.
பார்த்த வேலையை விட்டு விட்டு,ஒரு தேர்ந்த நகைச்சுவைக் கலைஞன் ஆக வேண்டுமென்ற ஆசையால்,இப்போது வறுமையில் உழலும் ஒரு மனிதனுக்கும்,அவனை உயிராய் மதிக்கும் ஒரு பெண்ணையும் நாம் காண்கிறோம்.அவள் சொன்ன ஒரு சிறு வார்த்தையை தவறாக அர்த்தம் செய்து கொள்ளும் அவன்,கையாலாகாத தன் நிலையை எண்ணி,அவளிடம் சண்டை போடுகிறான்,பின்னர் அவள் மடியிலேயே தலை வைத்து அழுகிறான்.
தன்னுடைய அருமை மனைவியை ஒரு நல்ல இடத்தில் குடி வைக்காமல்,நாற்றம் அடிக்கும் ஒரு இடத்தில் குடிவைத்து இருக்கும் தன் கையாலாகாத தன்மையை நினைத்து நோகிறான்.ஒரு நகைச்சுவைக் கலைஞன் தன் மனைவியை ஒரு நல்ல இடத்தில் வைக்க சம்பாதிக்க முடியாத பணத்தை,தெருவோரம் நிற்கும் ஒரு விலைமாது ஒரே இரவில் சம்பாதிப்பதை பற்றிச் சொல்லி சமூகத்தை எள்ளி நகையாடுகிறான்.அவனை சமாதானம் செய்யும் அவனது மனைவி,அவன் என்றும் தன் அன்பிற்கு பாத்திரமானவன் என்று சொல்லுகிறாள்.
ஜோக்கரின் மனம் நிகழ்காலத்திற்கு வருகிறது.அங்கே தன்னிடம் நைச்சியமாகப் பேசி அந்த இடத்தை விற்க முயலும் இட சொந்தக்காரனை தன்னுடைய விசேஷ முள்ளினால் கொல்லும் ஜோக்கர்,இந்த இடத்தை ஏற்கனவே தன் ஆட்கள் அவனுடைய partner இடம் இருந்து மிரட்டி கையெழுத்து பெற்று விட்டதாக சொல்கிறான்.(இந்த விசேஷ முள்ளானது,ஜோக்கரின் விசேஷ விஷம் கொண்டது.பட்ட மாத்திரத்தில் கொல்லும் இது,சாகும் முன் அந்த நபரை ஆக்கிடும் நிலை இதுவே…..)
இதற்கிடையில் ஜோக்கரை தேடி நகரம் முழுதும் அலைகிறான் பேட்மேன்.தன்னுடைய சமயல்காரனும்,தன்னை வளர்த்தவனுமான அல்பிரெட்டிடம் பேசும் போது,ஜோக்கரை கண்டுபிடிக்கவும்,அவனது அடுத்த நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ளவும் தான் செய்த முயற்சிகள் தோற்றதை சொல்லுகிறான்.இத்தனை வருடங்களில் தன்னைப் பற்றி அவனுக்கோ,அவனைப் பற்றி தனக்கோ ஏதும் தெரியாது இருக்கும் போது,தங்களுக்குள் எப்படி இவ்வளவு வன்மம் இருக்க முடியும் என ஆச்சர்யப்படுகிறான்.
இதற்கிடையில் கோதம் நகரின் போலீஸ் கமிசனர் கோர்டன் தன்னுடய வீட்டில்,தன் மகளுடன் ஜோக்கரைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொரு முறை ஜோக்கர் தப்பிக்கும் போதும்,இந்த முறை ஏதேனும் அதீதமாக செய்து விடக் கூடாதே என ஏங்கிக் கழிக்க வேண்டியதை எண்ணி கோப்படுகிறார்.அப்போது,வீட்டு அழைப்புமணி அடிக்கிறது.தன்னுடைய தோழியாக இருக்கும் என்று கதவைத் திறக்கும் பார்பராவிற்க்கு பரிசாக கிடைப்பதோ ஒரு குண்டு.
கீழே விழும் அவள் முதுகு மோசமாக அடிபடுகிறது.கோர்டனை அடித்துக் கடத்துகிறான் ஜோக்கர்.அவளுடைய தந்தை அவளை மறக்காமல் இருக்க சில புகைப்படங்கள் எடுக்கப் போவதாக சொல்லும் ஜோக்கரிடம்,பார்பரா எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறாய் என கேட்க “ஒரு சித்தாந்தத்தை நிலை நிறுத்த" என்கிறான் ஜோகர்.
கதை கடந்த காலத்திற்கு செல்கிறது.பணத்தேவையும்,desperation உம் உள்ள ஜோக்கர்,பணம் சம்பாதிக்க வேறு வழியில்லாமல் திருடர்களின் உதவியை நாடுகிறான்.அவன் ஏற்கனவே வேலை பார்த்த ஒரு கெமிகல் கம்பனியை தாண்டி இருக்கிறது திருடர்கள் கொள்ளையடிக்க நினைத்திருக்கும் இடம்.அதனை அடைய அந்த கெமிக்கல் கம்பனியை தாண்டிப் போக வேண்டும்.அதற்கு அங்கே முன்பே வேலை பார்த்த ஜோக்கரின் உதவியை நாடுகிறார்கள்.
அவனை யாரும் அடையாளம் காணாமல் இருக்க அவன் Red hood என்று அழைக்கப்படும் ஒரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் சொல்லாதது என்னவெனில்,அது ஒரு மிகப்பெரிய திருடர் கூட்டத்தலைவனது முகமூடி.அவன் தயங்க,இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அவனது மனைவியை அவன் சந்தோசமாக வைத்துக்கொள்ளலாம் என்றும்,பிறக்கப் போகும் அவனது குழந்தைக்கு இப்பணம் பெரிதும் உதவும் என்றும் ஆசை காட்டி சமாதானம் செய்கிறார்கள்.
நிகழ்காலத்தில் பார்பரா இருக்கும் ஹாஸ்பிடல் செல்லும் பேட்மேன்,அவளது முதுகெலும்பு, அவள் விழுந்ததாலும்,குண்டு ஊடுருவிச் சென்றதாலும் பெருத்த சேதம் அடைந்து இருப்பதை அறிகிறான்.மேலும்,அவளால் இனி நடக்கவே முடியாது என்றும் அறிந்து கொள்கிறான்.மேலும்,பார்பரா கண்டுபிடிக்கப் பட்ட போது நிர்வாணமாக இருந்தாள் எனவும்,அங்கே காமெராவை மூடும் மூடி ஒன்றும் கண்டுபிடிக்கப் பட்டதாக அறிந்து கொள்கிறான்.
பார்பரா கமிசனர் மகள் மட்டுமல்ல.குற்றவாளிகளை வேட்டை ஆடும் பேட்மேனிற்கு Batgirl ஆக தோள் கொடுப்பவளும் கூட.தனிமையில் அவனிடம் தன் தந்தையை எண்ணிக் கதறும் அவள்,அவரை உடனே கண்டுபிடிக்குமாறு ப்ரூசிடம் வேண்டுகிறாள்.ஆனால்,அவள் கேட்கும் கேள்விக்கு அவனிடம் விடை இல்லை.
கண் விழிக்கும் கோர்டன்,தன்னை சூழ்ந்து இருக்கும்,தேவதை வேடம் பூண்ட,குட்டிச்சாத்தான் போன்ற குள்ளர்களைப் பார்கிறார்.அவரை நிர்வாணப்படுத்தி,கழுத்தைப் பிணைத்து இழுத்து செல்லும் அவர்கள்,அவனை ஜோக்கர் முன்னிலையில் தள்ளுகிறார்கள்.அப்போது ஜோக்கர் தன்னுடைய குறிக்கோளை வெளியிடுகிறான்.அது கோர்டனை பைத்தியம் ஆக்குவது.
அதுவரை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்து இருந்த கோர்டனின் மனம் ஜோக்கரை கண்டதும் நடந்ததை நினைவு கொள்கிறது.மகளுக்காக துடிக்கிறது.ஒரு roller coaster இல் கட்டப் படும் அவரை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது ஒரு கதவு.
ஜோக்கரின் மனக் கதவு விரிகிறது.கடந்த காலத்தில் ஒரு பாரில்,தான் திருடர்களோடு சந்தித்த பொழுதை காட்டுகிறது.அந்நேரத்தில் அங்கே நுழையும் போலீஸ்,அவனைத் தேடி வருகிறது.திருடர்கள் நடுங்க,அவன் பதற அவனை நெருங்கும் காவலர்கள்,அவனைத் தனியே அழைத்துச் செல்கிறார்கள்.நடுங்கும் அவனிடம் கோரமான உண்மை ஒன்றை சொல்லி அவன் நாடி நரம்புகளையும் ஓடுங்க வைக்கிறார்கள். அவன் மனைவி கரண்ட் ஷாக் அடித்து இறந்துவிட்டாள்.
ஜீவன் ஒடுங்கிப் போகும் ஜோக்கர்,அந்தத் திருடர்களிடம் செல்கிறான்.தன் மனைவி இறந்துவிட்டதாகவும்,அவளே சென்ற பின்னர் பணம் தனக்கு கொடுக்கப் போவது ஏதும் இல்லை என்றும் சொல்லி,கொள்ளைக்கு வர மறுக்கிறான்.இந்தக் கொள்ளையின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அவளது இறுதிச் சடங்கயாவது விமரிசையாக செய்யலாம் என்று கூறும் அவர்கள்,மறுத்தால் அவன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள்.விதியை எண்ணி நோகிறான் ஜோக்கர்.சமூகத்தை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்த நினைத்த அவனே,சமூகத்தின் கோரப் பிடியில் சிக்கி,விதியின் சூழ்ச்சியால்,நகைக்கப்படும் பொருளாக மாறிவிட்டதை எண்ணி மருகுகிறான்.
நிகழ்காலத்தில்,ஜோக்கரின் கெக்களிப்பு,roller coaster இல் தலைபுதைத்துக் கிடக்கும் கோர்டனை விழிக்க வைக்கிறது.அவன் சொல்லுவதும்,செய்ய முயல்வதும் ஒன்றே.அவனுடைய சித்தாந்தமும் அதுவே…
The thing that separates the sane from the psychotic is,
ONE BAD DAY.
எப்பேர்ப்பட்ட மனிதனும் தடம் புரள ஒருமோசமான நாளே போதுமானது என்று சொல்லும் அவன்,கோர்டனின் புத்தியை பேதலிக்கச் செய்ய,பார்பராவின் நிர்வாணமான,குண்டடி பட்ட உடலின் போட்டோக்களை அவளது தந்தையான கோர்டனுக்கே காண்பிக்கிறான்.விக்கித்துத் துடிக்கிறான் கோர்டன்.இங்கே கோர்டனை பைத்தியமாக்க ஜோக்கர் முயன்று கொண்டு இருக்கும் போது,பேட்மேன் ஜோக்கரை தேடி நகரம் முழுதும் அலைகிறான்.ஆனால்,தகவல்கள் கிடைப்பதாயில்லை.அந்நேரத்தில் பேட்மேனை வந்து அடைகிறது ஜோக்கரின் அழைப்பிதழ்.தன் சர்கசை காண வருமாறு சொல்லி….
ஜோக்கர் கோர்டனிடம் பேசிமுடித்த பின்,தேங்கி இருக்கும் மழைத்தண்ணீரில் தன் கடந்த காலத்தைக் காண்கிறான்.ஒரு மழை இரவில்,தான் பயமுறுத்தப்பட்டு,திருடர்களுக்குத் துணையாக சென்ற நாளைக் காண்கிறான்.அவன் தலையில் வைக்கப்படும் red hood mask ஐ பயத்துடனும்,தயக்கத்துடனும் அணியும் அவன்,அவர்களுக்கு வழிகாட்டி முன் செல்கிறான்.ஆனால்,கொடிய விதி அங்கும் விளையாடுகிறது.காவலனின் கண்களில் படும் அவர்கள்,துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகிறார்கள்.மிஞ்சிப் பிழைக்கும் ஒரே ஆளான ஜோக்கரை துரத்துகிறான் அங்கே வந்த பேட்மேன்.அவனிடம் இருந்து தப்பிக்க,அமிலம் நிறைந்த ரசாயனக் குடுவைக்குள் விழுகிறான் ஜோக்கர்.அந்த ரசாயனம் அவன் முடியின் நிறத்தையும்,தோலின் நிறத்தையும் மாற்றியது போல,அவனுக்கு அன்றைய ஒரு நாளில் நேர்ந்த விஷயங்கள் அவனது மூளையை மாற்ற,பைத்தியமாகிறான் ஜோக்கர்.
காட்சி மாறுகிறது.கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் கோர்டன் தலை குனித்து உக்கார்ந்து இருக்க,அவனை சுற்றி நின்று சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஜோக்கரின் சகாக்கள்.ஜோக்கர் தன் சித்தாந்தத்தை கூறி,உலகிலேயே அற்பமான பிறவி “சாதாரண மனிதன்" தான் என்று கூறுகிறான்.அப்பேர்ப்பட்ட சாதாரண மனிதனாக இல்லாது,தன்னைப் போல அசாதாரணமாக மாறுமாறு கோர்டனை கேட்டுக்கொண்டு இருக்கிறான் ஜோக்கர்.அந்நேரத்தில் அங்கே வருகிறான் பேட்மேன்.ஜோக்கரால் காயப்படும் பேட்மேன் கோர்டனை விடுவித்து விட்டு,ஜோக்கரை தேடித் போகிறான்.
உள்ளே நுழையப்போகும் பேட்மேனிடம் கோர்டன்,அவனை உயிரோடு பிடித்து சட்டத்தின் பிடியில் நிறுத்த வேண்டும் என்று உறுதி வாங்குகிறான்.ஜோக்கர் தன்னை பைத்திமாக்க முயன்றாலும்,தாம் அவனுக்கு நியாயத்தின் வழியைக் காட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்.
உள்ளே நுழையும் பேட்மேனை வரவேற்கிறது ஜோக்கரின் குரல்.தன்னை இனி அவன் பிடித்தாலும் அதனால் யாதொரு பயனும் இல்லை என்று சொல்லும் ஜோக்கர்,தான் தன்னுடைய சிந்தாந்தத்தை நிலைநிறுத்தி விட்டதாக கூறுகிறான்.கோர்டனை பைத்தியமாக்கி விட்டதாகவும்,தனக்கும் பிறருக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது என் தான் நிரூபித்தாக கூறுகிறான்.
தான் இருக்கும் நிலைக்கும்,நாகரீக உலகிற்கும் இருக்கும் தூரம்,ஒரே ஒரு மோசமான நாளே என்கிறான்.மேலும்,பேட்மேனுக்கும் அப்பேர்ப்பட்ட ஒரு நாள் ஏற்பட்டு இருக்க வேண்டுமெனக் கூறும் அவன்,இல்லாவிடில்,’ஒரு பறக்கும் எலியைப் போல வேடமணிந்து நடமாடும் எண்ணம் அவனுக்கு உதித்து இருக்காது' என்றும் ஏளனம் செய்கிறான்.அவனைப் பொறுத்த வரையில் அவனும்,பேட்மானும் ஒன்றே….
இந்த உலகமே பித்துப் பிடித்து திரியும் போது தன்னை மட்டும் பைத்தியம் என்று சொல்வதை எண்ணி சிரிக்கும் அவன், இரண்டாம் உலகப் போருக்கு காரணம்,ஜெர்மனி எத்தனை தந்திக் கம்பங்களை, தன்னை முற்சண்டையில் ஜெயித்த நாடுகளுக்கு கொடுக்க வேண்டுமேன்பதாலேயே எனக்கூறி, இந்த உலகமும்,வாழ்க்கையும் ஒரு பெரிய ஜோக் எனக் கூறி,இதில் மதிக்கத் தக்கதோ,உயர்வானதோ,போராடக்கூடியதோ எதுவும் இல்லை என்கிறான்.
தொடரும் சண்டையில்,ஜோக்கரைப் பிடிக்கும் பேட்மேன்,தாம் இருவரும் மற்றொருவரைக் கொள்ளாமல் இருக்க வழி,ஜோக்கரை தெளியச் செய்வதே எனவும்,அதற்க்கு தான் உதவுவதாகவும் சொல்கிறான்.அதற்கு பதிலாய்,இந்த சூழ்நிலை தனக்கு ஒரு ஜோக்கை நினைவுபடுத்துவதாகக் கூறி, ஒரு ஜோக் சொல்கிறான் ஜோகர்.அது தான் இந்த அற்புதக் கதையின் உயிர் நாடி.
அது இங்கே….
*********************************************************************
வெல்,கதைப் பாகம் முடிஞ்சது.இப்ப நாம கதையில் ஊடுருவி நிற்கும் விசயங்களை அலசுவோம்.
இந்தக் கதையின் அடி நாதம் என்னவென்றால்,உலகமே பைத்தியங்கள் நிறைந்தது தான் என் நம்பும் ஜோக்கர்,ஒரு சாதா மனிதனுக்கும்,பைத்தியதுக்கும் உள்ள வித்தியாசம்,தூரம் ஒரே ஒரு மோசமான நாளே என்று நம்புகிறான்.
Just one bad day….
எப்பேர்ப்பட்ட நிதான புத்தி உள்ள புத்திசாலியும்,ஒரு மோசமான நாளில்,ஒரு மிக மோசமான விஷயத்தை எதிர்கொள்ள நேரும் போது புத்தி பேதலிக்கிறான் என்பது அவன் வாதம்.இதனை நிரூபிக்க முயல்கிறான் அவன்.இதற்கு அவன் தேர்ந்து எடுப்பது,பேட்மேனின் உற்ற நண்பன் கோர்டனை.தனக்கு ஏற்பட்டதைப் போல அவருக்கும் ஒரு மிக மோசமான நிகழ்வுகள் கொண்ட ஒரு நாளை உருவாக்குகிறான்.ஆனால்,தான் ஜோக்கேரைப் போல அல்ல என்று நிரூபிக்கிறான் கோர்டன்.
இதைப் பற்றி மேலும் நீங்கள் அறிய,நானும் எனது நண்பருமான கனவுகளின் காதலரும் மெயில் வழி பேசியதைப் பாருங்கள்.இது காதலர்…..
தெறிக்கும் குச்சிகள்:
த கில்லிங் ஜோக் படித்தேன். அருமையான கதை. ஜோக்கர் ஒரு விடயத்தை நிரூபிக்க விரும்புகிறான். எந்த ஒரு நிதானமான, நல்ல மனநிலையில் உள்ள மனிதனும் மோசமான சூழ்நிலைகளின் அழுத்தத்தால் காய்ந்த ஒரு குச்சி போல் தெறித்து தன்னைப்போலவே வெறி கொண்டவனாக ஆகி விட முடியும் என்பதை அவன் வவ்வாலிற்கு நிரூபிக்க விழைகிறான்.
அவன் வாழ்க்கையில் அவன் கண்ட அனுபவங்கள் எவ்வாறு அவனை தெறிக்கப் பண்ணி ஒரு வெறியனாக மாற்றிவிட்டது என்பதை அலன்மூர் அழகாக கூறிச்செல்கிறார். தன் பக்கத்தை ஜோக்கர் நிரூபிப்பதற்கு அவன் கமிஷனர் கோர்டானை பயன்படுத்திக் கொள்கிறான். அவன் பெற்ற அனுபவங்களை விட கோர்டானிற்கு அவன் தரும் அனுபவங்கள் வாசகனிற்கு கொடுமையானவையாக தெரிகின்றன. ஆனால் கோர்டான் தான் உறுதியான ஒருவன் என்பதை கதையில் நிரூபிக்கிறார். ஆனால் ஆலன்மூர் சொல்ல வந்தது இதுவல்ல!!
வவ்வால் தன் முடிவு ஜோக்கரின் முடிவோடு இணையும் என்கிறார். இருவரும் மரணத்தில் முடிவோம் என்கிறார். இதனை தவிர்ப்போம் என வேண்டுகிறார். ஜோக்கர் அதற்கு ஒரு கதையை சொல்கிறான்.பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் செல்லும் இருவரின் கதை. ஜோக்கரைப் பொறுத்த வரையில் வவ்வால் ஒரு வெறியனே. தன்னைப் போலவே வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் வவ்வாலும் தெறித்திருக்க வேண்டும் என உறுதியாக அவன் நம்புகிறான். இல்லையேல் வவ்வால் ஏன் இவ்வாறு வேடம் புனைந்து வெறியனாக அலைகிறான் என்று அவன் ஒரு கேள்வியை எழுப்புகிறான்.
ஜோக்கர் தான் ஒரு வெறியன் என்பதை ஒத்துக் கொள்கிறான், ஆனால் வவ்வால் கூட ஒரு வெறியன் என்பதை வவ்வால் ஒத்துக் கொள்ள மறுப்பதை சுட்டிக் காட்டுகிறான். பைத்தியக்கார உலகில், அந்த இரு பைத்தியக்காரர்களும் தப்பிச் செல்ல விரும்புகிறார்கள். வவ்வால் அதற்கு தான் உதவியாக இருப்பேன் என ஜோக்கரிடம் கூறுகிறான். ஜோக்கரோ சமூகத்திலும் சரி, சட்டத்திலும் சரி எவர் மேலும் தான் நம்பிக்கை வைக்க முடியாதவனாக உள்ள நிலையை அழகாக எடுத்துக் கூறுகிறான். அவன் இருக்கும் நிலையை விட இன்னும் கீழே விழுவதில் அவனிற்கு பயமும், சமூகத்தின் மேல் உள்ள அவநம்பிக்கையையும் முகத்தில் அறைந்தால் போல் வவ்வாலிற்கு கூறுகிறான் ஜோக்கர். தங்கள் இருவரினதும் ஓட்டம் முடிவது மரணமாக இருந்தால் கூட ஜோக்கர் அதனை வரவேற்கிறான். உதவிக் கரங்களை விட.
சற்று தீவிரமாக சென்றால் டெரிக் பேர்ட்,
ஜோக்கர் காட்ட விரும்பிய சரியான உதாரணம். எம்மில் கூட தெறிக்க கூடிய குச்சி இருக்கிறது. சில வேளைகளில் நாம் ஈர்க்குச்சிகளாக தெறிக்கிறோம். வெறிக்கும், நல்ல மனநிலைக்கும் இடையில் உள்ள தூரம் மிகவும் மெல்லியது நண்பரே. அலன் மூர் பின்னியிருக்கிறார்.
கதையின் மிக முக்கிய பாத்திரம் ஜோக்கரும், மனித மனமுமே. ஏனையோர் எல்லாரும் இதற்கு அடுத்த பட்சமே.ஆரம்பத்தில் மழைத் தண்ணீரின் மீது வவ்வாலின் கார் ஹெட்லைட்களின் பிரகாசத்துடன் ஆரம்பமாகும் கதை, முடிவில் பொலிஸ் கார்களின் ஹெட்லைட் பிரகாசத்தில் நிறைவு பெறுவது அழகு. மனம் எனும் குட்டையில் விழும் மழைத்துளிகளாக வன்மம் எம்மை தெறிக்கும் குச்சிகளாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. தெறிக்கும் நேரமும், அதன் அளவும் தெறித்த பின்பாகவே தெரியும்.
இது நான்…
அடிச்சு பின்னீடீங்க ...... :)
ஆனா கடைசி சில frame கள நீங்க கவனிச்சீங்களானு தெர்ல....
அதுல ஜோகர் சொல்லுவான்.....
"அந்த பைத்தியம் சொன்னது: நான் பாதி வழியில் இருக்கும் போது நீ வெளிச்சத்த நிருத்தீட்டீன்னா ? "
அவன் சொல்றது பூரா லைட் பத்தியே இருக்கும்....
லைட் னா நம்பிக்கை னு எடுத்துக்கலாம்......
இப்ப,அந்த கடைசி frame அ கவனிங்க.....(see the last picture…)
ஒரு சின்ன ஒளிக் கீற்று...
அதுவும் அவங்க கால்களுக்கு நடுவில...... :)
அவங்கள பிரிச்சு கிட்டு.....
இத என்ன தவிர யாரும் கவனிச்ச மாதிரி தெரியல..... நெட் ல கூட....
ஒரு வேலை நான் தான் ரொம்ப யோசிக்கிறனோ என்னவோ? :P
இங்க காட்ட படுற தரையில் விழும் மழைத்துளிகள், உறுதியான மனதில் ஏற்படும் சலனங்களே ....
இதுல இன்னொரு விஷயம்.......
ஜோக்கர் delusional........
அதுனால,ஜோக்கர் சொன்ன கதை உண்மையா பொய்யானு நமக்கு சரியா தெரியாது.....
இங்க அது தான் ஜோக்..... :)
ஜோக்கர் செய்யுற எல்லாக் காரியத்துக்கு பின்னாடியும், எந்தக் காரணமும் இல்லாமலே கூட இருக்கலாம்....
டார்க் க்நைட் படத்துல கவனிசீங்கன்னா ஜோகர் தன் வாய் கிழிஞ்சது எப்டின்னு ஒவ்வொருத்தனுக்கும் ஒரு கதை சொல்லுவான்.....
அதுக்கு கரு,இதுல இருந்து எடுத்ததே.... :)
என்னோட favorite batman கதை இது......
பேட்மேன psychological ஆ அணுகின கதை .......
ஜோகரின் பார்வைப் படி உலகில் அநேகர் பைத்தியங்களே .......
கஷ்டப்படுரதுக்கு பைதியமாகுறது மேல்...அவனுக்கு........
ஆனா கடைசி சில frame கள நீங்க கவனிச்சீங்களானு தெர்ல....
அதுல ஜோகர் சொல்லுவான்.....
"அந்த பைத்தியம் சொன்னது: நான் பாதி வழியில் இருக்கும் போது நீ வெளிச்சத்த நிருத்தீட்டீன்னா ? "
அவன் சொல்றது பூரா லைட் பத்தியே இருக்கும்....
லைட் னா நம்பிக்கை னு எடுத்துக்கலாம்......
இப்ப,அந்த கடைசி frame அ கவனிங்க.....(see the last picture…)
ஒரு சின்ன ஒளிக் கீற்று...
அதுவும் அவங்க கால்களுக்கு நடுவில...... :)
அவங்கள பிரிச்சு கிட்டு.....
இத என்ன தவிர யாரும் கவனிச்ச மாதிரி தெரியல..... நெட் ல கூட....
ஒரு வேலை நான் தான் ரொம்ப யோசிக்கிறனோ என்னவோ? :P
இங்க காட்ட படுற தரையில் விழும் மழைத்துளிகள், உறுதியான மனதில் ஏற்படும் சலனங்களே ....
இதுல இன்னொரு விஷயம்.......
ஜோக்கர் delusional........
அதுனால,ஜோக்கர் சொன்ன கதை உண்மையா பொய்யானு நமக்கு சரியா தெரியாது.....
இங்க அது தான் ஜோக்..... :)
ஜோக்கர் செய்யுற எல்லாக் காரியத்துக்கு பின்னாடியும், எந்தக் காரணமும் இல்லாமலே கூட இருக்கலாம்....
டார்க் க்நைட் படத்துல கவனிசீங்கன்னா ஜோகர் தன் வாய் கிழிஞ்சது எப்டின்னு ஒவ்வொருத்தனுக்கும் ஒரு கதை சொல்லுவான்.....
அதுக்கு கரு,இதுல இருந்து எடுத்ததே.... :)
என்னோட favorite batman கதை இது......
பேட்மேன psychological ஆ அணுகின கதை .......
ஜோகரின் பார்வைப் படி உலகில் அநேகர் பைத்தியங்களே .......
கஷ்டப்படுரதுக்கு பைதியமாகுறது மேல்...அவனுக்கு........
அதே மாதிரி கடைசில வவ்வு சிரிக்க காரணம்,
ஜோக்கர் சொல்றதோட உண்மைய நினைச்சு தான்.....
பேட்மேன் கதைகள்ல மட்டுமில்லாம,alan moore ஓட பெஸ்ட் இதுன்னு என்னோட கருத்து..... :)
இதோட சேந்து நிக்கிறது v for vendetta...... :)
ஆனா,கடுகு சிறுத்தாலும் காரம்........ :)
ஜோக்கர் சொல்றதோட உண்மைய நினைச்சு தான்.....
பேட்மேன் கதைகள்ல மட்டுமில்லாம,alan moore ஓட பெஸ்ட் இதுன்னு என்னோட கருத்து..... :)
இதோட சேந்து நிக்கிறது v for vendetta...... :)
ஆனா,கடுகு சிறுத்தாலும் காரம்........ :)
அதே மாதிரி,அந்த ஒளி கீற்ற சேர விடாம தடுக்குற அந்த தரை....
இங்க மறுபடியும் மனம்...... :)
இங்க மறுபடியும் மனம்...... :)
மேலும் விவாதிப்போம்.....
இது அவர்…
நண்பரே,
அபாராமன அவதானிப்பு. அந்த ஒளிக்கற்றையை நம்பிக்கை என்பது சிறப்பான கூற்று. ஆனால் தரை சமூகமாக இருக்கலாம் அல்லவா. நீரை மனதெனவும், அதில் மழைத்துளி ஏற்படுத்தும் வட்டங்களை சலனங்கள், எண்ணங்கள் எனவும் கொண்டால், சமூகம் என்பது இவை எல்லாவற்றின் மீதும் தன் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் ஒன்று என்று கூறலாம் அல்லவா. நீங்கள் கூறியது போலவே படத்தை நன்கு பார்த்தும் என்னால் அதன் அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லைதான்.
வவ்வு சிரிப்பதன் காரணம் நீங்கள் கூறியபடியே இருக்கலாம். அதேபோல் வவ்வு ஜோக்கருடன் காலம் முழுதும் ஓட வேண்டியதை எண்ணியும் இருக்கலாம். வவ்வு கூட பித்தனாக இருக்கலாம் இல்லையா :)
ஜோக்கர் சொன்ன கதை பிறழ்வாக இருக்கலாம், ஆனால் அதனை வைத்துதான் அவன் தன் பக்க நியாயத்தை நிரூபிக்க வருகிறான் இல்லையா. சொல்லப் போனால் குற்றங்கள் எல்லாம் ஒரு வகையில் பிறழ்வாகத்தானே சமுகத்தால் பார்க்கப்படுகின்றன. பிறழ்வுகள் தானே சட்டத்துடன் மோதிப்பார்க்கின்றன
விவாதத்தை தொடருவோம், வெட்டி ரத்தக் களரி வரை விவாதம் தொடரும். சிறுகதை ஆனாலும் ஆலன் சோடை போகவில்லை.
இது நான்…
நீங்க சொல்றபடி பார்த்தா மழை தான் சமூகம்.....
கடின மனதை தொடர்ந்து தாக்கி சலனத்தை ஏற்படுத்துகிறது இல்லையா...... :)
கடின மனதை தொடர்ந்து தாக்கி சலனத்தை ஏற்படுத்துகிறது இல்லையா...... :)
*******************************************************************
அவ்வளவு தான் நண்பர்களே! :)
மேலும் விவாதிக்க சிறு விஷயங்கள் உள்ளன.
ஆரம்பத்தில்,பேட்மேனின் மாஸ் அங்கே சிறுசிறு விசயங்களில் காட்டப்படுகிறது. கவனிக்க,மிரட்சியோடு பார்க்கும் போலீஸ்.பயந்தவாறே வழி சொல்லும் பெண்,அவனுக்குப் பின்னால் பவ்யமாக தொடரும் கோர்டன்….
ஆனால்,ஜோகரின் ஆரம்ப தோற்றம் இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது….
பார்க்க,மஞ்சள் வெளிச்சத்தில் இருக்கும் ஜோக்கர்.
மேலும்,கதை நிகழ்காலத்தில் இருந்து கடந்தகாலம் செல்லும் போது,நிகழ்காலத்தின் கடைசி frame மற்றும்,கடந்த காலத்தின் first frame உம் similiar ஆக இருக்கும்.சூழ்நிலைகளின் ஒற்றுமையை காட்டவே இந்த யுக்தி.
மேலும்,நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து இதை பழைய version வைத்துப் படிக்கவும்.deluxe version, recolouring செய்கிறேன் என்ற பெயரில் கேடுக்கபட்டு இருக்கிறது.பழைய version இல்,பிரதானமாக யூஸ் செய்யப்பட்டது கண்ணை அடிக்கும் கலர்கள் தான்.உதாரணம்,மஞ்சள்,ரெட்…
ஆனால்,இதற்கு ஒரு காரணம் உள்ளது.கொஞ்சம் அழுக்கான,அதே நேரம் bright ஆன விஷயங்கள்,நபர்களைக் காட்ட மஞ்சள் உபயோகப்பட்டது. பார்க்க ஜோக்கர்.
ரெட்,மோசமான விசயங்களைக் காட்ட உபயோகப்பட்டது.
மேலும்,இந்த பதிப்பை நான் வெறுக்கக் காரணம்,முக்கியமாக ரெண்டு….
மேலே உள்ள,அந்த ஜோக்கேரின் படத்தை பாருங்க.இப்ப இதை..
கம்பீரம் இல்லாமல்,சோகையாய்,சொங்கித்தனமாக உள்ளது.
மேலும்,இன்னொரு முக்கிய காரணம்,கதையில் என்னைப் பொறுத்த வரை முக்கியமான அந்த கடைசி ஒளிக் கீற்று….
திராபையாக,இருந்தும் இல்லாமலும்,தெரிந்தும் தெரியாமலும் தெரிகிறது கதையின் உயிர் நாடி…..
*******************************************************************
Killing joke – the best batman story ever told….
psychology கதை,அபாரமான சித்திரம்,கண்ணைப் பறிக்கும் வர்ணக் கலவை,சாட்டையடி முடிவு……
கடுகு சிறுத்தாலும் காரம்…… :)
(அய்யயோ,அடிக்காதீங்க,நானு போஸ்ட சொல்லல.கதைய சொன்னேன்…..)
download link:
ReplyDeletehttp://rapidshare.com/files/314495994/Batman_-_The_Killing_Joke.cbr
for more details...
http://en.wikipedia.org/wiki/Batman:_The_Killing_Joke
///.லீவு நாளுல உக்காந்து படிச்சுபுட்டு உங்க எண்ணங்களை கண்டிப்பா சொல்லுங்க//
ReplyDeleteஉத்தரவுங்க.
இல்லு ,
ReplyDeleteநீ பெரிய ஆளுயா !!! இப்பதான் பார்கிறேன் ....,
மச்சி இப்போ எனக்கு காலாண்டு / அரையாண்டு விடுப்பு இல்லை... அது இருந்தாத்தான் இதை படிக்க முடியும். :-)
ReplyDeleteஉனக்கு ரொம்பத்தான் பொறுமை ராசா...
படிக்கிறேன்... படிக்கிறேன்...
@பாலா,
ReplyDeleteஹிஹி...வேற வலி இல்ல தல.பதிவு படா பெருசு.அதான்.
பிரிச்சுப் போட்டு இருக்கலாம்.ஆனா,continuity போய்டும்.எனக்கு பிடிக்கல.ரெண்டு வாரம் கழிச்சு போஸ்ட் போட்டதுக்கு இது சரியா போச்சு.. :)
@நரி..
அப்படி எல்லாம் இல்ல நண்பா.நானு சாதாரண ஆளு தான்.
@ரோசு:
என் பொறுமைய நீ தான் மெச்சனும்.. :)
அடப்பாவி இரக்கமே இல்லாத இல்லு , எவ்ளோ பெரிய பதிவு , இரு படிச்சிட்டு வர்றேன்
ReplyDeleteஇல்லு நல்ல ரசனையோட அழகா எழுதி இருக்க
ReplyDeleteஹ்ம்ம் ஸ்க்ரோல் பண்ணி கமெண்ட் ஏரியா வரதுக்குள்ள 7 கமெண்ட்ஸ்
ReplyDeleteபடிச்சிட்டு வர்றேன் :)
.
ஆரம்பமே ஒரு எச்சரிக்கை 18+
ReplyDeleteஅப்புடீன்னு போட்டிருக்கு நாங்க எல்லாம் அதுக்கும் கீழயாச்சே ஹி ஹி ஹி ..
என்ன செய்யுறது தல ஒரு வழி சொல்லுங்களேன் :)
.
என்ன சொல்றதுன்னே தெரியலைய்யா....
ReplyDeleteகாமிக்ஸ் புக்கை பார்த்தா உனக்கு நரம்பு முறுக்கேறிடுது! எங்களுக்குக் கண்ணீர் தாரை தாரையா ஊத்துது.
Nice intro buddy!
என்ன சொல்றதுன்னே தெரியலைய்யா....
ReplyDeleteகாமிக்ஸ் புக்கை பார்த்தா உனக்கு நரம்பு முறுக்கேறிடுது! எங்களுக்குக் கண்ணீர் தாரை தாரையா ஊத்துது.
Nice introduction buddy!
யம்மாடி அனுமார் வால் போல போய் கிட்டே இருக்கு பதிவு... தோராயமா ஒவ்வொரு பத்தியிலும் பார்த்து புட்டு வந்தேன்... முக்கியமா கனவுகளின் காதலருக்கும் உமக்கும் நடந்த விவாதங்கள் கதையின் ஆழத்தை தோண்டி எடுத்திருக்கீங்க போல...ஹ
ReplyDeleteசரி பொறுமையா படிச்சுபுட்டு, மீண்டும் வரேன். :)
பதிவு ஆஹா ஓகோ பேஸ் பேஸ்,
ReplyDeleteஇங்லீஷ் கதை புக் பாறி இவ்வளவு எழுதிருக்கான், சனி, ஞாயிரு லீவு இதுலயே போயிரும் போலயே...
நொன்ன பட்டா, இவனையெல்லாம், ஏதும் வந்து திட்டாதே, நாங்க என்னமோ ரெண்டு வரி கூட எழுதிட்டா குதி குதினு குதி....
பதிவு ஆஹா ஓகோ பேஸ் பேஸ்,
ReplyDeleteஇங்லீஷ் கதை புக் பாறி இவ்வளவு எழுதிருக்கான், சனி, ஞாயிரு லீவு இதுலயே போயிரும் போலயே...
நொன்ன பட்டா, இவனையெல்லாம், ஏதும் வந்து திட்டாதே, நாங்க என்னமோ ரெண்டு வரி கூட எழுதிட்டா குதி குதினு குதி....
இலுமி, பதிவு போடுற அவசரத்துல, இன்ட்லி பட்டைய நோண்டிபுட்டீரா... ஓட்டே போட முடியல.... ஏற்கனவே பகிர்ந்தாச்சு போயிட்டு வாங்கன்னு இன்ட்லியில செவிலிலேயே சாத்தி அனுப்பிச்சுபுடுறான்.
ReplyDeleteஎன்னன்னு தெர்ல ரபிக்....
ReplyDeleteரெண்டு வாரம் கழிச்சு போஸ்ட் போட்டதுக்கு இது சரியா போச்சு.. :)
ReplyDeleteலேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்து கலக்கிட்டீங்க
நீங்க சொன்ன மாதிரி இது காமிக்ஸ் அதிலும் இது batman காமிக்ஸ் கதைகளில் சிறந்தது.
கண்டிப்பா கலக்கிட்டீங்க :))
.
ithula poi try panni paarunga..
ReplyDeletehttp://ta.indli.com/padaippugal/killing-joker---18
மங்குனி அமைசர் said...
ReplyDeleteஇல்லு நல்ல ரசனையோட அழகா எழுதி இருக்க
//
கில்லாடி மாப்ளே நீ.. 10 நிமிசத்தில படிச்சுட்டு...அழகா இருக்குனு உண்மைய சொன்ன பாரு...
இரு.. ரெமிய கூட்டிக்கிட்டு, சண்டைக்கு வரேன்
பிரண்ட்ஸ் ... என்ன பிரச்சனையோ தெர்ல,இன்டலி வோட்டு போட விடாம இம்சை பண்ணுது.சனியன் ஒழியுது.நீங்க எல்லோரும் இந்த நல்ல கதைய பரப்புங்க. :)
ReplyDeleteஅம்புட்டுத்தான்...
எல்லோரும் facebook la பகிருங்க.... :)
இலுமு ஓட்டு போட முடியல .ராங் ரெஃப்ர் பன்னுது.. சரியானதும் பன்ரேன். ஓக்கே..
ReplyDeleteயோவ் எப்படியா இவ்வளாவையிம் டைப் பண்ணினே ரொம்ப பொருமைசாலியா நீ...
ReplyDeleteகீப் இட்......
@@@Jey--//
ReplyDeleteநொன்ன பட்டா, இவனையெல்லாம், ஏதும் வந்து திட்டாதே, நாங்க என்னமோ ரெண்டு வரி கூட எழுதிட்டா குதி குதினு குதி..//
ஜே..நீ ஏதாவது குண்டக்க மண்டக்க ஐடியா குடுத்தியா பாருயா என் ரெண்டுநாள் லீவும் இதிலேயே போய்டும் போல இருக்கு..அவ்வ்வ்வ்வ் அவ்வோ பெரிய பதிவு...
பதிவுல இன்டலி button பக்கம் இருக்கிற facebook like button அ அழுத்து... :)அங்க ஷேர் ஆகும்...
ReplyDelete@மங்குனி:
ReplyDeleteஆட்டு கிட்ட என்னய்யா இரக்கம் வேண்டி இருக்கு? :)
//காமிக்ஸ் புக்கை பார்த்தா உனக்கு நரம்பு முறுக்கேறிடுது! எங்களுக்குக் கண்ணீர் தாரை தாரையா ஊத்துது.//
புக்க படிச்சுப் பாரு மச்சி.
//முக்கியமா கனவுகளின் காதலருக்கும் உமக்கும் நடந்த விவாதங்கள் கதையின் ஆழத்தை தோண்டி எடுத்திருக்கீங்க போல..//
ஆமாங்கோவ் ... :)
//சரி பொறுமையா படிச்சுபுட்டு, மீண்டும் வரேன். :) //
வரும்,ஆனா வராது.. :P
நன்றி ஜெய்,சிபி...
@பட்டு..
யோவ்,நீ வர்றது இருக்கட்டும்.வர்றப்ப ஆட்ட கூட்டிட்டு வாய்யா...
//ஜே..நீ ஏதாவது குண்டக்க மண்டக்க ஐடியா குடுத்தியா பாருயா என் ரெண்டுநாள் லீவும் இதிலேயே போய்டும் போல இருக்கு..அவ்வ்வ்வ்வ் அவ்வோ பெரிய பதிவு... //
ஹிஹி...
இந்தக் கதை, தமிழில் படித்த னினைவு வந்தது. கொஞ்ச நாள் முன்னர் தான் இக்கதையை முழுக்க மறுபடி படித்தேன்.. கடந்த சில வாரங்களாகவே பேட்மேனில் மூழ்கியிருக்கிறேன்..
ReplyDeleteபேட்மேனையும் ஜோக்கரையும் படிக்கையில், ஜோக்கர் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் நினைவு வரும்..
நீயும் என்னைப்போல் தான்.. ஒரு ஃப்ரீக்.. நீ இல்லையெனில், எனக்கு எப்படிப் பொழுது போகும்? என்று பேட்மேனிடம் கேட்பான்..
பேமேனை உள்ளபடி புரிந்து வைத்திருக்கும் ஒரே ஆள் ஜோக்கர் தான் என்பது எனது கருத்து.
உலகின் நடுங்க வைக்கும் வில்லன்களில் முதலிடம் ஜோக்கருக்கே. எந்த காமிக்ஸை எடுத்துக் கொண்டாலும் சரி.
அருமையான பதிவு. தொடருங்கள்.. அடி பின்னணும் ;-)
Batman: Then why do you want to kill me?
ReplyDeleteThe Joker: [laughs] I don't want to kill you! What would I do without you? Go back to ripping off mob dealers? No, no, NO! No. You... you... complete me.
//பேமேனை உள்ளபடி புரிந்து வைத்திருக்கும் ஒரே ஆள் ஜோக்கர் தான் என்பது எனது கருத்து.//
ReplyDeleteஉண்மை.
//உலகின் நடுங்க வைக்கும் வில்லன்களில் முதலிடம் ஜோக்கருக்கே. எந்த காமிக்ஸை எடுத்துக் கொண்டாலும் சரி.//
ஆனா,அதை சரியாக கையாண்டவர்கள் மிகச் சிலரே...
//அருமையான பதிவு. தொடருங்கள்.. அடி பின்னணும் ;-)//
ஹிஹி...
இந்த மாசம் லீவ் அப்ளை பண்ணியிருக்கேன்.. கிடைச்சவுடனே படிசிடுறேன்...
ReplyDeleteநல்ல கதைகள் .. ரசனையுடன் எழுதியிருகீங்க..
ReplyDeleteஇந்த கதையை படிக்க ஆகும் நேரத்தை விட உங்கள் பதிவு படிக்க அதிக நேரம் ஆகிறது. ஆனாலும் பதிவு நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteதமிழில் சிரிக்கும் மரணம் என்ற பெயரில் வெளிவந்த இந்த அற்புத கதை. அதன் ஒவ்வொரு வசனமும் ஞாபகத்தில் உள்ளது.
நன்றி வெறும்பய,சிவ்..
ReplyDelete//இந்த கதையை படிக்க ஆகும் நேரத்தை விட உங்கள் பதிவு படிக்க அதிக நேரம் ஆகிறது. //
ஹிஹி...
நண்பரே,
ReplyDeleteஇந்தப் பதிவில் பாதி என்னுடையதாக இருப்பதால் ராயல்டியில் பாதியை உடனடியாக அனுப்பி வைக்கவும் :))
நண்பர் குளோபல் ஹீரோ ரஃபிக், ஒரு நாள் என்னிடம் நீங்கள் கில்லிங் ஜோக் படித்தீர்களா என்று கேட்டார் நான் இல்லையென்று கூறியதும் அது ஆலன்மூரின் கதை படியுங்கள் என்று கூறினார். நீங்கள் அதனைப் பதிவாக்க விரும்புகிறீர்கள் என்று கூறியபோது அப்புத்தகத்தை படித்தேன். பின் நடந்ததை நீங்கள் பதிவில் பகிர்ந்து விட்டீர்கள்.
நீங்கள் கூறியிருப்பதுபடியே புத்தகம் தரும் உணர்வுகளை முழுமையாக பதிவில் வழங்க முடியாது என்பது உண்மையே இருப்பினும் அந்தக் கூற்றையும் தாண்டி கதைசொல்லலில் அசத்தியிருக்கிறீர்கள். கொரிய செக்ஸ் படங்களை தவிர்த்தும் உங்களால் அருமையான பதிவுகளை தர முடியும் என்பதற்கு இது சான்று.
ஜோக்கரை மனநிலை பிறழ்ந்த ஒருவனாக பார்க்க நான் தயங்குகிறேன். சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அவன் சிரிப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.
காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்ல, நல்ல கதைகளை விரும்புவர்களும் படிக்கவேண்டிய புத்தகங்களில் இது ஒன்று.
இலுமினாட்டி, உம்மை சுற்றி ஒரு மஞ்சள் ஒளி விழுகிறது ஓய் :))
நண்பர் சிவ் அவர்களே,
ReplyDeleteதமிழில் இதை அறிமுகப்படுத்திய விஜயனுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் .
ஆனால் அதே நேரம்,ஒரு உண்மையையும் இங்கே சொல்கிறேன்.தமிழில் வந்தது எனக்குப் பிடிக்கவில்லை.
முதல் காரணம்,கருப்பு வெள்ளை..
கதையின் ஜீவனில் பாதி இதன் வர்ணம்..குறிப்பாக அந்தக் கடைசி frame!
மேலும்,வசனங்களின் தாக்கம் தமிழில் குறைவே....
ஆங்கிலத்தில் அசத்தல்...
//நீங்கள் கூறியிருப்பதுபடியே புத்தகம் தரும் உணர்வுகளை முழுமையாக பதிவில் வழங்க முடியாது என்பது உண்மையே இருப்பினும் அந்தக் கூற்றையும் தாண்டி கதைசொல்லலில் அசத்தியிருக்கிறீர்கள். கொரிய செக்ஸ் படங்களை தவிர்த்தும் உங்களால் அருமையான பதிவுகளை தர முடியும் என்பதற்கு இது சான்று.//
ReplyDeleteநீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க தல.இந்தக் கதைய இத விட நல்லா சொல்ல முடியும்.
அப்புறம்,கொரியா படங்கள் செக்ஸ் படங்களா?
ஹிஹி,உம்ம வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் ஓய். ;)
பயபுள்ளைக ஒண்ணும் காட்ட மாட்டுராணுவ னு நானே வெதும்பிப் போய் இருக்கேன். :)
//ஜோக்கரை மனநிலை பிறழ்ந்த ஒருவனாக பார்க்க நான் தயங்குகிறேன். சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அவன் சிரிப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.//
தல,ஒரு வகையில பார்த்தா நாம எல்லோருமே ஒரு வகையிலே மன நிலை பிறழ்ந்தவர்களே!நம் முட்டாள்தனங்களை பார்த்தே அவன் நகைக்கிறான் என்பது என் எண்ணம்.
//காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்ல, நல்ல கதைகளை விரும்புவர்களும் படிக்கவேண்டிய புத்தகங்களில் இது ஒன்று.//
ஆனா படிக்க மாட்டானுங்க.தமிழ் ரசனை!! :)
நண்பா பேட்மேன் திரைப்படத்தை பார்க்க்கும் ஆவல் மேலிடவைக்கிறது,உங்கள் கட்டுரை
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteபுதிய ஆடம்பரப் பதிப்பில் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளபடியே சித்திரங்கள் அவற்றின் உணர்வுகளை தொலைத்து நிற்கின்றன என்பது தெளிவு.
//இதுவும் எனது அடுத்த பதிவும் எனது கனவு பதிவுகள் என்றே சொல்லலாம்.///
ReplyDeleteஓ அடுத்த பதிவு படிக்கிறதுக்கு ரென்ண்டுநாள் ஒதுக்கனுமா?
///பதிவ படிக்கிறதோட நிக்காம புக்கயும் படிங்க.அதுல உள்ளதுல பாதிய கூட நானு சொல்லல///
புக்கோட பாதிக்கே இவ்வளவா???, சரி முடிவோடதான் இருக்கே....
=============================
மேல இருக்க்ரது சும்மா உல்லுலாய்க்கு, இலுமி நீரு மத்த பிளாக்ள வந்து பின்னூட்டங்கள்ல மொக்கைய போட்டு கொன்னாலும், நல்ல சினிமாவுக்கும் சரி, இதுமாதிரியான நாவல் + காமிக்ஸ் க்கும் சரி நல்லா விமர்சனம் பண்ரயா.
பதிவு நீளமாயிருக்குண்ணு மலைச்சி போயி நேத்து படிக்கலை, இன்னிக்கு காலையில உக்காந்து, படிச்சி தொலைவோன்னுதான் ஆரம்பிச்சேன், ஆனா முடிக்குறவரையிலும் சுவாரஸ்யமா போச்சி, 3 மணினேரம் ஆயிருக்கு, அலுப்பு தட்டலை, ஒவ்வொரு கேரக்டர்+அவங்களோட டயலாக்ஸோட அழுத்தம், அதற்குண்டான விளக்கங்கள்னு பின்னிட்டே.
புக்கை ஒருவாட்டி படிச்சிட்டு வந்து திரும்பவும் இத படிக்கிறேன்....
ஒரு நாவல் எழுதும் ஒய், வருசம் ஆனாலும் பரவாயில்லை, நல்ல தேர்ந்த எழுத்தாளர் களோட ஒப்பிடுர அளவுக்கு நல்லா எழுத வருது உமக்கு...( நம்ம பின்னூட்டம் இப்ப நீளமாயிருச்சோ!!!!...)
//நண்பா பேட்மேன் திரைப்படத்தை பார்க்க்கும் ஆவல் மேலிடவைக்கிறது,உங்கள் கட்டுரை//
ReplyDeleteஇதைப் படித்து விட்டு படத்தைப் பாருங்கள்.ஜோக்கர் வித்தியாசமாக தெரிவான்.
//புதிய ஆடம்பரப் பதிப்பில் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளபடியே சித்திரங்கள் அவற்றின் உணர்வுகளை தொலைத்து நிற்கின்றன என்பது தெளிவு.//
ஆமா தல.இதைப் பார்த்து பழைய பதிப்பு எனக்கு மேலும் பிடித்தது தான் நடந்த ஒரே நல்ல விஷயம். :)
//நல்ல சினிமாவுக்கும் சரி, இதுமாதிரியான நாவல் + காமிக்ஸ் க்கும் சரி நல்லா விமர்சனம் பண்ரயா.//
நன்றி தல.
//ஆனா முடிக்குறவரையிலும் சுவாரஸ்யமா போச்சி, 3 மணினேரம் ஆயிருக்கு, அலுப்பு தட்டலை, ஒவ்வொரு கேரக்டர்+அவங்களோட டயலாக்ஸோட அழுத்தம், அதற்குண்டான விளக்கங்கள்னு பின்னிட்டே.//
புக் இன்னும் அருமையா இருக்கும்.படிச்சு பாருங்க.
//.லீவு நாளுல உக்காந்து படிச்சுபுட்டு உங்க எண்ணங்களை கண்டிப்பா சொல்லுங்க///
ReplyDeleteஎன்னா வில்லத்தனம்...
எனக்குத் தெரிஞ்சு பதிவுலகிலேயே வெச்சு மிக நீளமான பதிவு இதுதான்..
வேற யாருக்காவது இத விடப் பெரிய பதிவு தெரிஞ்சா சொல்லுங்க...
அப்படி இருந்துச்சுன்னா உடனே இல்லுமி கிட்ட சொல்லி இன்னும் கொஞ்சம் நீளமா போடச் சொல்லலாம்..
அப்புறம் இல்லுமி.. உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்த நீங்கள் எடுக்கும் முனைப்பு மிகவும் வியப்பு... ரசித்து ரசித்து எழுதி இருக்கிறீர். வாழ்த்துக்கள்..
//எனக்குத் தெரிஞ்சு பதிவுலகிலேயே வெச்சு மிக நீளமான பதிவு இதுதான்..
ReplyDelete//
ஹிஹி... :)
//உடனே இல்லுமி கிட்ட சொல்லி இன்னும் கொஞ்சம் நீளமா போடச் சொல்லலாம்..//
எவ்வளவோ பண்றோம்,இதைப் பண்ண மாட்டமா? ;)
//உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்த நீங்கள் எடுக்கும் முனைப்பு மிகவும் வியப்பு... ரசித்து ரசித்து எழுதி இருக்கிறீர். வாழ்த்துக்கள்..//
நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்... :) அவ்ளோதான்.
"நீ சொன்ன விஷயத்த அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வெச்சுட்டு பக்கத்துலையே நீயும் உக்காந்துக்க...!!" அப்படிங்கற டயலாக் தான் ஞாபகம் வருது..
ReplyDeleteஎப்போதும் கமென்ட் பக்கத்துலையே உக்காந்திருப்பீக போல...?
பட்டுன்னு பதில் போட்டுடறீங்க..
நண்பர்களே,கடைசி இரண்டு பக்கங்கள்,அதாவது அந்த ஜோக் கொண்ட பக்கங்கள் சரியாக லோட் ஆகாததை இன்று தான் கவனித்தேன்.இதோ அதற்க்கு லிங்க்..
ReplyDeletehttp://1.bp.blogspot.com/_PklXU3O41CM/SVMgMNxHi4I/AAAAAAAAB3k/R6PkmR1qHSg/s1600-h/Batman+-+The+Killing+Joke+46.jpg
http://www.plundered.net/images/Batman%20-%20The%20Killing%20Joke%2047.jpg
@jey
ReplyDeleteஒரு நாவல் எழுதும் ஒய், வருசம் ஆனாலும் பரவாயில்லை,
//
ரொம்ப டேங்ஸ் jey..
அழகா ஒரு வருஷமுனு சொல்லி , ஆளத் துரத்த தூபம் போட்டாச்சு..
சரி..சரி.. நான் கண்ண மூடிக்கிறேன்..
ஏதோ பண்ணு...
ha haa haaaaa!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete