Posts

Killing joke(r).... (18+)

Image
நண்பர்களே!இந்தப் பதிவு,batman trilogy post இல் இரண்டாவது.இதுவும் எனது அடுத்த பதிவும் எனது கனவு பதிவுகள் என்றே சொல்லலாம்.இந்தப் பதிவு பல வகைகளில் முக்கியமானது. முதலாவதாக இது காமிக்ஸ் பற்றியது. இரண்டாவது,இது batman காமிக்ஸ் கதைகளில் சிறந்தது. மூன்றாவதாக,ஜோக்கரின் கேரக்டர் மற்றும் அவனுக்கும் பேட்மேன்க்கும் உள்ள உறவை இதை விட தெளிவாக ஒரு கதை உணர்த்த முடியாது.ஜோக்கர் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக்கதை பற்றி தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். நாலாவது,இதனை எழுதியது ஆலன் மூர். ஐந்தாவது,இது ஒரு மொக்க ரீசன். :) அதை விட்டுதள்ளுங்க. டிஸ்கி: பதிவு மகா பெருசு.அதான் இன்னிக்கு போடுறேன்.லீவு நாளுல உக்காந்து படிச்சுபுட்டு உங்க எண்ணங்களை கண்டிப்பா சொல்லுங்க. அப்புறம் முதல்லேயே சொல்றேன்.இது எழுதப்பட்டதுக்கு நான் எவ்வளவு பொறுப்போ,அவ்வளவு பொறுப்பு கனவுகளின் காதலருக்கும் உண்டு.சோ,கொடுக்குற அடிய அவருக்கும் சேத்தே கொடுங்க… :) பதிவ படிக்கிறதோட நிக்காம புக்கயும் படிங்க.அதுல உள்ளதுல பாதிய கூட நானு சொல்லல. ************************************************************************* Killing joke...

Batman Begins – The Revelation…

Image
Friends, this post marks the start of the trilogy post on Batman. The journey begins….   பேட்மேன் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்களே.அட்லீஸ்ட் ஒரு முறையாவது இந்தப் பெயரையாவது நீங்கள் கேட்டு இருக்கக் கூடும்.என்னுடைய Favorite characters இல் பேட்மேன்க்கு மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. 2005 இல் வெளிவந்த Batman Begins, பேட்மேன் உருவான கதையை அலசுகிறது. ஒரு சிறு விபத்தினால் வௌவால்கள் நிறைந்த ஒரு குகைக்குள் விழும் சிறுவன் Bruce  Wayne க்கு, வௌவால்களின் மேல் அன்றில் இருந்தே பயம் உண்டாகிறது.ஒரு நாள்,பெற்றோரோடு நாடகத்திற்கு செல்லும் அவன்,அங்கே வௌவால்களைப் போல வேடமேற்ற சிலரைக் கண்டு பயந்து உடனே வெளியேற வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.இதனை ஏற்று வெளியே வரும் அவனின் பெற்றோர்கள்,வழிப்பறி ஒன்றில் சிக்க நேரிடுகிறது.அந்தத் திருடனின் பயத்திற்கு பலி ஆகிறார்கள் ப்ரூஸ்ஸின் பெற்றோர்கள்.கண் முன்னேயே தன்னுடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டதை காணும் அவன்,தன்னால் தான் அவர்கள் சாக நேரிட்டது என்று எண்ணி வெதும்புகிறான்.அவனுடைய குழந்தைப் பருவமும்,குதூகலமும் அவனுடைய பெற்றோரோடே மடிகின்றது....

Prey – The Hunted and the Hunter….

Image
Michael Crichton. Sci-fi நாவல்கள் படிக்கும் வாசகர்கள் நிச்சயமாக கடந்து செல்லும் ஒரு பெயர்.இவர் பெயர் உலகம் முழுக்க பிரபலம். இவர் யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம்.உங்களில் Spielberg இயக்கிய Jurassic Park பார்க்காதவரோ அல்லது கேள்விப்படாதவரோ இல்லை என்றே கூறலாம்.அந்த படத்தை நாவலாக எழுதியவர் தான் இந்த Crichton. இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்.இவர் எழுதியது ஏறக்குறைய அனைத்துமே technical thrillers.இவரது formula ஒன்றே. “நல்ல முயற்சிக்காக செய்யப்படும் ஒரு ஆராய்ச்சி,எப்படி கெட்டவர்களின் தலையீடால் அல்லது அஜாக்கிரதையால் பேரழிவு ஏற்படுத்துகிறது “ என்பதே அது.Jurassic Park கதை கூட இவ்வகையிலானதே.ஆனால்,அவ்வப்போது வேறு பல அருமையான கதைக்கலன்களையும் உபயோகப்படுத்தி இருக்கார். படிப்பினால் டாக்டர் ஆன இவர்,தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எழுத்தாளர் ஆனார்.Crichton எழுதிய பல புத்தகங்கள் trend setters.பல படங்கள்,டிவி சீரியல்கள் எல்லாம் இவர் எழுத்தில் வெளி வந்து இருக்கிறது. Andromeda Strai...

Green Mile-மரணத்தின் பாதையில்.....

Image
1996 ஆம் வருடம் ஸ்டீபன் கிங் எழுதிய novel தான் இந்த கிரீன் மைல்.actual ஆ,இது எழுதப் பட்ட போது,novella ஆக எழுதப்பட்டது.பாகம் பாகமா தொடர்கதை மாதிரி எழுதப்படுற கதை தான் novella. மொத்தம் ஆறு பாகங்கள்.வெளியிடப்பட்டப்போ பெரிய சக்ஸஸ்.பின்ன இது எல்லாத்தையும் தொகுத்து ஒரே நாவலா வெளியிட்டாங்க.அதுவும் மிகப்பெரிய சக்ஸஸ். கிங் எழுதின ஆகச் சிறந்த புக்ஸ்ல இதுவும் ஒண்ணு. (ஏற்கனவே அவர் எழுதின Misery புக் பத்தி எழுதி இருக்கேன். ) அதெல்லாம் சரி,அது என்ன கிரீன் மைல்? மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் மரணத்தை நோக்கி எடுத்து வைக்கும் கடைசி அடிகள் தான் The last mile.அவங்க வாழ்க்கைப் பயணத்தின் இறுதி அடிகள் அது தான். Cold mountain சிறைச்சாலைல, இந்த குறுகிய,மரணத்தை எதிர்நோக்கும் பாதையோட flooring கிரீன் கலர்.அது தான்,கிரீன் மைல்.அதுல கடந்து போற சில மனிதர்களை பற்றிய ஒரு கதை தான் இது.முக்கியமா,Jonh Coffey. Cold mountain சிறைச்சாலைல,எல்லா ஜெயில் மாதிரியுமே,மரண தண்டனைக் கைதிகளுக்குன்னு தனி பில்டிங் உண்டு.அவங்கள கண்காணிக்கவும்,கவனிக்கவும்,உதவி செய்யவும் எப்பயுமே காவலர்கள் இருப்பாங்க. ஒவ்...

Banlieue 13

Image
அப்புங்களா …. உங்களுக்கு ஒரு நல்ல விஷயம்,அதே நேரம் ஒரு கெட்ட விஷயம்……. நல்ல விஷயம் என்னன்னா,  இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் பத்தி அதிகம் எழுதலாம்னு இருக்கேன். கெட்ட விஷயம் என்னன்னா,என் விமர்சனக் கொடுமைய நீங்க தாங்கணும்….. :) சரி,மேட்டருக்கு வருவோம். சும்மா சும்மா artistic படங்களைப் பத்தியே பதிவு எழுதி எனக்கும் போர் அடிச்சு போச்சு.அதான் இந்த முறை,ஒரு நல்ல action படத்த பத்தி பாக்கப் போறோம். Banlieue 13 (District 13), 2004 இல் வெளி வந்த ஒரு பிரெஞ்சு படம்.சொல்லிக்கிற அளவுக்கு பெரிய கதை எல்லாம் கிடையாது.ஆனா அருமையான action படம். ஒரு கெட்டவன், அவன எதிர்க்குற ஒரு நல்லவன், பிரச்னையில மாட்டிக்கிற அவனோட தங்கை, இவங்களுக்கு உதவியா,அவனுக்குன்னே இருக்குற ஒரு காரணத்துக்காக வர்ற இன்னொரு ஹீரோ….. இது தாங்க படம். 2010,பாரிஸ்….. பாரிஸில் பல புறநகர் பகுதிகள் இருந்தாலும்,Banlieue 13 கொஞ்சம் முக்கியமான இடம். எவ்ளோ முக்கியம்னா, அந்த இடத்த சுத்தி மதில் சுவர் கட்டி,உள்ள இருக்குறவங்கள வெளிய வர விடாம வெளியில காவல் போட்டு காக்குற அளவுக்கு ரொம்ப முக்கியமான இடம்…. உள்ளுக்...

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

Image
--> எச்சரிக்கை: ஒன்று:இந்தப்பதிவு மிகவும் பெரிது.ஆனால்,ஒரு நல்ல கதையை வாசகர்கள் அறிய வேண்டும் என்ற எண்ணத்திலே வேண்டுமென்றே செய்யப்பட்டது அது.அதிகமான ஸ்கேன்களும் அதற்காகவே.... ரெண்டு:இந்த மாதிரியான கொடுமைகள் இனி அவ்வப்போது தொடரும். :) நான் பல பேரை சந்தித்து இருக்கிறேன்.அவர்கள் மறக்காமல் கேட்கும் ஒரு கேள்வி: ‘ இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா என்ன ? ’ பொதுவாக காமிக்ஸ் என்றாலே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது நம்மவர்களிடம்.வேறு என்ன, comics குழந்தைக்களுக்கானது என்பதே அது.சரி,காமிக்ஸ் என்றால் என்ன? அம்புலிமாமா,வாரமலர் போன்றவற்றில் வருவதே காமிக்ஸ் என்று நீங்கள் நினைத்தால்..... Sorry guys,you are wrong..... You are wrong big time..... இத்தாலியில் Tex என்று ஒரு காமிக்ஸ் புக் வருகிறது. அந்த புக் ஒரு இத்தாலியன் வீட்டில் இல்லன்னா அவன இத்தாலியனா  மதிக்க மாட்டாங்கன்னு என் நண்பர் சொல்லக் கேட்டப்போ ஆச்சரியமா இருந்தது....அதோட circulation மட்டும் லட்சங்களில ..... எனக்கு தெரிஞ்ச காமிக்ஸ் பத்தி,அதுவும் எனக்கு பிடிச்ச காமிக்ஸ் பத்தி இனிமே அடிக்கடி பார்க்கலாம். ...