71 Into the fire –ரத்தமும் சத்தமும்....
1950.... ரத்தமும் சத்தமும் நிறைந்த போர்க்களம். பயம், கோபம், வெறி, பற்று, கையாலாகத்தனம், வீரம்,மனிதம், நம்பிக்கை எனப் பற்பல உணர்ச்சிகளும் மடியும் இடம். வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமான போரில் வட கொரியா அசுர பலத்தோடு முன்னேறிக் கொண்டிருக்க, ஆட்பலமோ ஆதரவோ இல்லாமல் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக பின்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் தொடங்குகிறது கதை. போர்க்களத்தில் இருந்து பின்னேறி வரும் கமாண்டர் கங் சக்-தே (Kang Suk-Dae), ஆட்பற்றாக்குறையாலும், மேலதிகாரிகளின் உத்தரவாலும் முக்கியக் கேந்திரமான போஹாங் பள்ளிக்கூடத்தை போர் அனுபவமோ, ஆயுதப் பழக்கமோ இல்லாத மாணவ சிப்பாய்களின் பாதுகாப்பில் விட்டு முக்கியப் போர் நடக்கவிருக்கும் நாக்டோங் நதிப்பகுதிக்கு விரைகிறார். போஹாங் பள்ளியில் நிறுவப்படும் 71 மாணவர்களில் போரை நேரில் கண்டவர்கள் மொத்தம் மூன்று பேரே. அவர்களில் ஒருவனான ஒஹ் ஜங் ப்யோம் (Oh Jung Beom) தளத்தலைவனாக கங்கால் நியமிக்கப்படுகிறான். அவனுக்கு கொடுக்கப்படும் பணியானது போஹாங் தளத்தை பாதுகாத்து முடிந்த அளவுக்கு நாக்டோக் நதியை நோக்கிய எதிரிக...