Godfather – Powerplays….
தன்னுடைய மகளை மரண காயப்படுத்தியது மட்டுமல்லாது,அவளது முகத்தையும் சிதைத்த இரு இளைஞர்கள் ,அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகள் என்பதற்காகவே சிறிய தண்டனையோடு விடுவிக்கப்பட்டு, தன்னை ஆணவத்தோடு நோக்கி புன்னகைத்துவிட்டுச் செல்லும் போது, ”இங்கே நமக்கு நியாயம் கிடைக்காது.நியாயம் வேண்டுமானால் நாம் டானிடம் தான் செல்ல வேண்டும்.” என்கிறார் அமெரிகோ (Amerigo Bonasera). பன்னிரண்டு வயதே ஆன விடோவிடம்(Vito), “நீ ஒரு நாட்டையே ஆட்டிப் படைக்கும் சக்தி கொண்ட மனிதனாவாய்.” என்று எவராவது சொல்லி இருந்தால்,கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான்.சிசிலியில்,தனது தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சிறுவனிடம் இத்தகைய பெரிய வார்த்தைகளை சொன்னால் நம்ப மாட்டான் தான்.ஆனால்,வாழ்க்கை விசித்திரமானது அல்லவா? உள்ளூர் மாபியாவுடனான சண்டையில் தனது தந்தை கொல்லப்பட்டதும்,தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதும் சேர்ந்து அவனை அமெரிக்கா நோக்கித் துரத்துகின்றன.அமெரிக்கா ஒரு எளிய விவசாயியின் மகனை முகம்மலர வரவேற்கவில்லை.மாறாக,அமெரிக்காவில் ஒண்டி இருக்கும் இத்தாலியர்களே அவனுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.சட்டத்திற்கு பணிந்த...