MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......
--> வணக்கம் நண்பர்களே.இந்த ப்ளாக் ஆரம்பிச்சதே நல்ல காமிக்ஸ்,புத்தகங்கள்,படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் தான்.படங்கள் பத்தியும் காமிக்ஸ் பத்தியும் எழுதுன அளவுக்கு நான் புக்ஸ் பத்தி எழுதல...... So,here I am...... இந்த முறை த்ரில்லர் எழுத்தாளர் Stephen King எழுதிய Misery பத்தி பார்க்கலாம்.எனக்கு action,adventure genre நாவல்கள் தான் அதிகம் பிடிக்கும்.த்ரில்லர் டைப் நாவல்கள் அதிகம் படிச்சதில்ல.அதனாலேயே இவர் எழுதுன நாவல்கள நான் படிச்சது இல்ல. ஒருமுறை இவரோட முதல் புக்கான Carrie படிக்க நேர்ந்தது.கதை கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால,இவரோட பேமஸ் புக்கான இத படிக்கலாம்னு நெனச்சேன்.அதுசரி,Carrie என்ன கதையா? சின்ன வயசுல இருந்து எப்பயுமே கிண்டல் அடிக்கப்பட்டு,நண்பர்களே இல்லாம,கூட படிக்குறவங்களால அருவருப்போட வெறுத்து ஒதுக்கப்படற ஒரு பொண்ணு தான் Carrie.ஆனா,எந்தப் பொருளையும் மனசால நெனச்சே நகர்த்தக் கூடிய Telekinetic பவர் அந்தப் பொண்ணுக்கு இருக்கு. ஸ்கூல்ல மட்டுமில்லாம வீட்டுலயும் பிரச்சனைகள் நிறைஞ்சவ