The Yellow Sea– Rabies runs deep…..
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களின் கொடுமையில் இருந்து தப்பும் ஆசையில் பற்பல கொரியர்கள் கொரியாவில் இருந்து வெளியேறி சீனா, கொரியா, ரஷ்யாவுக்கு இடையில் இருக்கும் பிராந்தியம் ஒன்றில் (Yanbian autonomous province) குடியேறினார்கள். கொரியா இரண்டாகப் பிரிந்த பின்பு இங்குள்ளவர்களுக்கு வருமானத்திற்கான பிரதான வாய்ப்புகள் இரண்டு தான். மூன்று நாடுகளின் எல்லையை ஒட்டி இருப்பதால் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அல்லது சவுத் கொரியாவில் அடிமாடுகளைப் போல வேலை செய்வது. வறுமை வழிந்தோடும் யான்ஜி நகரத்தில் டாக்சி ஓட்டுனராக இருக்கும் குனாம், வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் கடன் வாங்கி தன் மனைவியை சவுத் கொரியாவிற்கு வேலை செய்ய அனுப்பிகிறான். ஆனால் அவளிடம் இருந்து எந்த விதமான தகவலும் வராமலேயே போகிறது. அவனைச் சுற்றி இருக்கும் அனைவருமே குனாமின் மனைவி கொரியாவில் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் அதனால் தான் அவள் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறாள் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். நாள்பட நாள்பட குனாமும் அதையே உண்மையாக ஏற்றுக்கொள்கிறான். கடுமையான கடன் தொல்லையில்...