Girl with the dragon tattoo - சலாண்டர் எங்கள் செல்லக் கண்மணி…..
போதிய ஆதாரமின்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்படும் மிக்கேல் ப்லாம்கிவிஸ்ட் பல காலமாக தான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயருடன் தன்னுடைய சேமிப்புப் பணத்தையும் பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறான். தன்னுடைய தோழி எரிகாவுடன் நடத்தி வரும் “மில்லேனியம்” பத்திரிகையின் நம்பகத்தன்மையும், நற்பெயரும், விற்பனையும் தன்னால் பாதிக்கப்படும் என்பதையும் உணர்த்து தன்னுடைய எடிட்டர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறான். மூன்று மாத சிறை, அபராதம், வேலையின்மை என செய்வதறியாது திணறும் மிக்கேலுக்கு மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரனான ஹென்றிக் வாக்னருடைய வக்கீலிடம் இருந்து வாக்னரை வந்து நேரில் சந்திக்கமாறு அழைப்பு வருகிறது. வாக்னரை நேரில் சந்திக்கும் மிக்கேலிடம் தன்னுடைய குடும்ப சரித்திரத்தைப் பற்றி எழுதுவதான போர்வையில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன்னுடைய சகோரதனின் மகளான ஹாரியட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைக்கிறார். ஹாரியட்டை தன் குடும்பத்தில் ஒருவர் தான் கொன்றிருக்க முடியும் என உறுதியாக நம்பும்