Green Mile-மரணத்தின் பாதையில்.....
1996 ஆம் வருடம் ஸ்டீபன் கிங் எழுதிய novel தான் இந்த கிரீன் மைல்.actual ஆ,இது எழுதப் பட்ட போது,novella ஆக எழுதப்பட்டது.பாகம் பாகமா தொடர்கதை மாதிரி எழுதப்படுற கதை தான் novella. மொத்தம் ஆறு பாகங்கள்.வெளியிடப்பட்டப்போ பெரிய சக்ஸஸ்.பின்ன இது எல்லாத்தையும் தொகுத்து ஒரே நாவலா வெளியிட்டாங்க.அதுவும் மிகப்பெரிய சக்ஸஸ். கிங் எழுதின ஆகச் சிறந்த புக்ஸ்ல இதுவும் ஒண்ணு. (ஏற்கனவே அவர் எழுதின Misery புக் பத்தி எழுதி இருக்கேன். ) அதெல்லாம் சரி,அது என்ன கிரீன் மைல்? மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் மரணத்தை நோக்கி எடுத்து வைக்கும் கடைசி அடிகள் தான் The last mile.அவங்க வாழ்க்கைப் பயணத்தின் இறுதி அடிகள் அது தான். Cold mountain சிறைச்சாலைல, இந்த குறுகிய,மரணத்தை எதிர்நோக்கும் பாதையோட flooring கிரீன் கலர்.அது தான்,கிரீன் மைல்.அதுல கடந்து போற சில மனிதர்களை பற்றிய ஒரு கதை தான் இது.முக்கியமா,Jonh Coffey. Cold mountain சிறைச்சாலைல,எல்லா ஜெயில் மாதிரியுமே,மரண தண்டனைக் கைதிகளுக்குன்னு தனி பில்டிங் உண்டு.அவங்கள கண்காணிக்கவும்,கவனிக்கவும்,உதவி செய்யவும் எப்பயுமே காவலர்கள் இருப்பாங்க. ஒவ்...